செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை..! ஒரு வயதுடைய குழந்தை ஒன்று ஜன்னல் வழியாக வெளியேற முயற்சிக்கிறது. அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் அதைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். நடந்தது என்ன? காண்பதற்கு காணொளியை அழுத்துங்கள். குறிப்பு: மன உறுதி குறைந்தவர்கள் தயவு செய்து காணொளியைப் பார்க்க வேண்டாம். Spoiler சுபம்
-
- 3 replies
- 545 views
-
-
பேத்திக்கு ‘பென்ஸ் கார்-ஐ’ பரிசளித்தார் அரசியல்வாதி தன்னுடைய பேத்தியின் முதலாவது பிறந்த தினத்துக்கு, சுமார் 40 மில்லியன் ரூபாய் (4 கோடி) பெறுமதியான பென்ஸ் காரொன்றை, முன்னாள் இராஜாங்க அமைச்சரொருவர் பரிசளித்துள்ளமை, சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக இருந்து, தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்த பிரியங்கர ஜயரத்னவே, தன்னுடைய பேத்தியான ஜவோனியாவுக்கு அந்தக் காரை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார். இந்த விவகாரம், சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் பெரும் பரப…
-
- 0 replies
- 545 views
-
-
வேலூர்: டீக்கடையில் திருடப் போன இடத்தில் அயர்ந்து தூங்கி விட்டான் ஒரு திருடன். காலையில் போலீஸார் அவனைத் தட்டி எழுப்பியபோது, அதுக்குள்ள விடிஞ்சுருச்சா என்று கேட்டபடி எழுந்தான் அந்தத் திருடன். வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் விவேக்பாபு. இவர் புதிய பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டுப் போய் விட்டார் பாபு. இந்த நிலையில் நள்ளிரவில் 2 திருடர்கள் அங்கு வந்துள்ளனர். ஒருவன் கடைக்கு அருகில் இருந்த துவாரம் வழியாக உடலை சுருக்கி, குறுக்கி உள்ளே போய் விட்டான். 2வது நபர் வெளியே காவலுக்கு இருந்தான். இந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த சிலர் ஏம்ப்பா இங்கே நிற்கிறே என்று வெளியில் இருந்த திருடனைக்கேட்டுள்ளனர்.…
-
- 4 replies
- 544 views
-
-
இந்தியாவில் உள்ள ஒரு அரசாங்க அதிகாரி ஒருவர் தனது தொலைந்து போன தொலைபேசியை மீட்டெடுப்பதற்காக நீர்த்தேக்கத்தின் பெருமளவு நீரை வெளியேற்ற உத்தரவிட்டமைக்காக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய சத்தீஸ்கர் மாநிலமான உள்ள கெர்கட்டா அணையில் உள்ள நீரே குறித்த அதிகாரியினால் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது. ராஜேஷ் விஸ்வாஸ் என்ற உணவு ஆய்வாளரான இந்த அரச அதிகாரி செல்பி எடுக்கும் போது, அவரது கைப்பேசியை குறித்த நீர்தேக்கத்தில் வீழ்ந்தது. இதனையடுத்து உள்ளூர் சுழியோடிகளை நாடிய போதும் அவர்களால் அந்த ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கைப்பேசியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து நீர் இறைக்கும் பாரிய இயந்திரங்களை வரவழைத்து, 3 நாட்களாக 21 இலட்சம் லிற்றர் லிற்றர் நீரை அவர் …
-
- 7 replies
- 544 views
- 1 follower
-
-
எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே இருந்து பல லட்சம் சம்பாதிக்கும் நபர் பட மூலாதாரம்,MORIMOTO_SHOJI/INSTAGRAM ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று கூறும் வடிவேலுவின் நகைச்சுவையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்... அதேபோல ஜப்பானில் ஒரு மனிதர் சும்மா இருக்கிறார். அதை சேவையாகவும் வழங்கி வருகிறார். "என்னடா இது?" என்று நீங்கள் புருவத்தை உயர்த்துவது புரிகிறது. சும்மா இருந்தே பல ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு ஜப்பானிய மனிதரைப் பற்றிய கதைதான் இது. “நீ மட்டும்தான் எதுவும் செய்யாமல் சும்மாவே இருக்கிறாய் என்று எல்லாரும் சொல்வார்கள். எனவே அதையே ஒரு சேவையாக வழங்க நான் முடிவ…
-
- 3 replies
- 544 views
- 1 follower
-
-
"மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..!": அனைவரினது மனதையும் நெகிழ வைத்த வித்தியாசமான திருமணம் இலங்கையில் பலரின் மனங்களை வியப்பில் ஆழ்த்திய திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆடம்பரம் இல்லாமல் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் பெற்றோரினால் கைவிடப்பட்ட பிள்ளைகளின் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டுள்ளது. மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு திருமணம் நடத்த திட்டமிட்டு, வெற்றிகரமாக முடித்துள்ளார். புகைப்பட கலைஞரான அருணசிறி என்ற இளைஞர் பயாஷானி என்ற பெண்ணுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இந்த திருமணம், இம்புலன்தன்ட முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்கு மேலும…
-
- 1 reply
- 544 views
-
-
இங்கிலாந்து இளவரசர் வில்லயம், தற்போது கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவி கேட்டின் முதல் பிரசவத்தை வீடியோ எடுக்க முடிவு செய்துள்ளார். இளவரசர் வில்லியம் அவரது முதல் குழந்தை இந்த உலகில் பிறக்கும் இனிய தருணத்தை வீடியோவில் பதித்து அதை பல்லாண்டுகளுக்கு பாதுகாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருக்கிறார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் கேட் மிடில்டன், பிரசவ வீடியோவால் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனை வரக்கூடும் என்னும் அச்சத்தில் வில்லியமின் இந்த வினோத ஆசைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/08/1130408054_1.htm
-
- 0 replies
- 544 views
-
-
கென்யாவின் அதிபராவதே தன வாழ்நாள் லட்சியம் எனக் கூறிக் கொண்டு உலா வரும் இவர், வேறு யாருமல்ல அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த சகோதரர் மாலிக் ஒபாமா. 12 முறை திருமணம் செய்து கொண்டவர். கடந்த வாரம் நடந்த கென்ய தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ள இவர் பிரித்தானிய பிரபல ஊடகமான டெய்லி மெயிலுக்கு பேட்டியளித்துள்ளார். தனது தம்பி அமெரிக்க அதிபரானது போல தானும் ஒரு நாள் கென்யாவின் அதிபராவது உறுதி என்கிறார் மாலிக். கடந்த வாரம் கென்யாவில் நடைபெற்ற தேர்தலில் சியாயா பகுதி ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டிருந்தார் மாலிக். இவரால் வெற்றி பெற முடியவில்லை. இதுகுறித்து ஊடகத்திடம் பேசும் போது , இதனை தோல்வியாக தான் நினைக்கவில்லை என்றும் இதுவே கென்யாவின் அதிபராவதற்கு தனக்கு படிக்கட்டாய் அமையப…
-
- 0 replies
- 544 views
-
-
99 'ஐபோன் 6' கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி இருதய வடிவான அலங்கார தோற்றத்தை உருவாக்கி அதன் நடுவில் நின்றவாறு தனது காதலியிடம் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. குவாங்ஸொயு மாகாணத்தை சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத கணினி பொறியியலாளரான காதலர் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட தீர்மானித்தார். இதன் பிரகாரம் அவர் 53000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தைச் செலவிட்டு 99 'ஐபோன் 6' கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்து தனது திருமண விருப்பத்தை காதலியிடம் வெளியிட்டார். இன்ப அதிர்ச்சிக்குள்ளான காதலி அவரது விருப்பத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார். http://www.virakesari.lk/articles/2014/…
-
- 1 reply
- 544 views
-
-
காயமடைந்த மான் குட்டியை பராமரித்து வரும் சிறுவன் கட்டுத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காலில் காயத்துக்குள்ளான மான்குட்டியொன்றை காட்டிலிருந்து மீட்டு வந்து அதற்கு உணவளித்துவரும் சிறுவனொருவர் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கல்கமுவ மடதொம்பே பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தருவன் என்ற அச்சிறுவனின் வயது 12 என தெரிவிக்கப்படுகின்றது. காட்டில் காயமடைந்துகிடந்த மானை அச்சிறுவன் தள்ளு வண்டியொன்றில் வைத்து தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளான். பின்னர் அதற்கு உணவளித்துள்ளமை மட்டுமன்றி மான் குட்டியின் காயத்துக்கு மருந்துமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மான்குட்டியை பாதுகாப்பத…
-
- 0 replies
- 544 views
-
-
(செய்தி தொகுப்பு – இளந்தி 26/02/2012) வடகிழக்கு மக்களின் நல்வாழ்வுக்காக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதாகக் கூறும் இலங்கை அரசு மக்களின் நிலத்தை வகை தொகையாய் அபகரிக்கிறது. இதற்கு முடிவே கிடையாதா என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர். கடற்படை கரையோர மக்களின் நிலங்களைப் பறிக்கும் போது தரைப்படை கிராமம், நகரம் என்ற வேறு பாடின்றி பாரிய நிலப்பரப்புக்களை தனக்காக எடுத்துக் கொள்கிறது. அரசு கூறும் இன நல்லிணக்கம் காற்றில் பறக்க விடப்படுகிறது. காங்கேசன்துறை, கீரிமலை, மாதகல், ஒட்டகப்புலம், துணுக்காய் ஆகிய பகுதிக் காணிகள் அரசுடமையாக அறிவிக்கப்பட்டுள்ளன. போர்க் காலத்தில் பல காணி நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயருடன் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டன. ஆனால் போர் முடிந்து இயல்பு ந…
-
- 0 replies
- 544 views
-
-
ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதற்கு முன்பாக, இப்படியான ஒரு நிலைமை ஏற்படும் என்பதனையும் அதனை தவிர்க்க சிறீலங்கா எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அமெரிக்கா சிறீலங்காவிற்கு பலமுறை தெளிவு படுத்தியிருந்தது. அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலர் கிலாரி கிளிண்டன் முதல் சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதர் வரை அமெரிக்காவின் பல உயர்மட்டத் தலைவர்கள் பல தடவைகள் சிறீலங்காவின் தலைவர்களை நேரில் சந்…
-
- 0 replies
- 544 views
-
-
ரஷ்யாவில் உள்ள ஒரு திடீர் காதலர் தன்னுடைய காதலியின் வருகைக்காக ஒரு மாதமாக ஒரே பஸ்நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கின்றார். ரஷ்யாவின் Irkutsk, என்ற நகரத்தை சேர்ந்த Besotted Vitaly என்ற 33 வயது நபர், பஸ்நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது ஒரு பெண்ணை கண்டார்.இரண்டு நிமிடங்களே பார்த்த Besotted Vitaly, அந்த பெண்ணின் காதல் பார்வையில் வீழ்ந்தார். அந்த நேரம் பார்த்து பேருந்து வந்துவிடவே, அடுத்த நாள் காலை 8 மணிக்கு இதே பேருந்து நிலையத்திற்கு வந்துவிடுமாறு அவரிடம் அந்த பெண் கூறிவிட்டு சென்றுவிட்டார். மறுநாள் மிகவும் பொறுப்பாக காலை 8 மணிக்கு வந்த Besotted Vitaly, தன்னுடைய திடீர்க்காதலியை காணாமல் திடுக்கிட்டார். அதுமுதல் வீட்டுக்கே போகாமல் கடந்த இரண்டு மாதங்களாக அதே பஸ…
-
- 2 replies
- 543 views
-
-
“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு! வாரிஸ் டைரி! உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ நிருபர். வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார். ‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன். ஒட்டகச்சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன். ம்ஹ்ம்… இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில்…
-
- 0 replies
- 543 views
-
-
புறா வளர்க்கும் இளைஞர்களிற்கிடையிலான உரசல், பெரியவர்களின் முட்டாள்த்தனமான நடவடிக்கையால் விபரீதத்தில் முடிந்துள்ளது. பெண்கள் என்ற பெயரில் பேயாட்டம் ஆடியவர்களால் ஒரு உயிர் பறிபோயுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். நாவாந்துறை, கண்ணாபுரம் பகுதியில் 20 வயதான புவனேந்திரராசா சுகந்தன் என்ற இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பேயாட்டம் ஆடி பெண்கள், அந்த இளைஞனை பிடித்து, முகத்தில் மிளகாய்த்தூள் தூவி, பச்சை மிளகாய் தடவி, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தமையினாலேயே இளைஞன் தற்கொலை செய்ததாக உறவினர்களால் குற்றம்சாட்டப்படுகிறது. பேயாட்டம் ஆடிய பெண்கள் மீது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலை…
-
- 4 replies
- 543 views
- 1 follower
-
-
போருக்குத் தயாராகுங்கள்... ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்த சீன அதிபர் கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து கடுமையான மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள ஒரு ராணுவ தளத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, மக்கள் இராணுவ விடுதலை (பி.எல்.ஏ) வீரர்களிடையே பேசிய அவர், போருக்குத் தயாராகும் ஆற்றலுடன் மனதை வைத்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 40 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் உரை நிகழ்த்துவதற்காக ஜின்பிங் குவாங்டாங்கிற்கு பயணம் செய்தார். குறிப்பாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) மத்திய குழுவின் பொதுச் செயலாளரும்,…
-
- 5 replies
- 543 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்தான் வெற்றி பெறுவார் என பிரபல தேர்தல் கணிப்பாளர் தெரிவித்துள்ளார். நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19ம் திகதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார். ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகிய நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என பிரபல …
-
-
- 6 replies
- 543 views
- 1 follower
-
-
பெப்ரவரி 9 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு , ஏப்ரல் 5 ஆம் திகதி பொது தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன. சம்பந்தன், ஹக்கீம் இருவரும் காலத்தை வீணடிக்காமல் அமைச்சர்கள் ஆகும் கனவில், "மரியாதையான" அழைப்பு வந்தால் மகிந்தவுடன் இணைய காத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
-
- 0 replies
- 543 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய முக்கிய கூட்டத்தின் போது உடலுறவில் ஈடுபட்ட ஜேர்மனியின் தூதுவர்கள் கடந்த 21ம் திகதி பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இரண்டு இராஜதந்திர அதிகாரிகள் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனிய இராஜதந்திர அதிகாரிகளே இவ்வாறு உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், உள்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் 28 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் உச்ச கட்ட நிலையில் தலைவர்கள் விவாதித்துக் கொண்டிருந்த போது இவர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் நடைபெற்ற கட்டிடத்திற்கு அடுத்ததாக இருந்த…
-
- 6 replies
- 543 views
-
-
இந்நாட்டின் போக்குவரத்துத் துறையில் அதிவேகப் பாதைகள் இணைந்த பின்னர் அத்துறை மிகவும் வளர்ச்சியடைந்துள்ளதை காணக் கூடியதாகவுள்ளது. கொழும்பு நகரை மையமாகக் கொண்டு தூண்களின் மேல் விரியும் பாதை தொகுதியொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் இலங்கையின் பிரதான நகரமான கொழும்பு நகரில் முன்னைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து முறைகள் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கொழும்பு நகரில் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதான போக்குவரத்து ஊடகம் குதிரை வண்டியாகும். அதன் பாவனை பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கும் பிரபுக்களுக்கும் உரிய ஒன்றாகவே காணப்பட்டது. இந்த வண்டிகளில் கட்டப்பட்ட குதிரைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு சமூக மட்டத்தினருக்கும் மாறுபட்டுக் க…
-
- 1 reply
- 542 views
-
-
-
- 0 replies
- 542 views
-
-
யாழில், கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து.. காயங்களை ஏற்படுத்திய பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து ஆபத்தான முறையில் தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட புறநகர் பகுதியில் இந்தச் சம்பவம் கடந்த நான்காம் திகதி இடம்பெற்றது. “சந்தேக நபரின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று வந்ததையடுத்து அதனை விரட்ட சந்தேக நபர் பெற்றோலை விசிறியுள்ளார் அது அங்கு ஏற்றப்பட்டிருந்த சாம்பிராணி குச்சியில் பட்டு தீ ஏற்பட்டுள்ளது. கணவன் மீது பெற்றோலை ஊற்றும் எண்ணம் சந்தேக நபரிடம் இல்லை” என்று ச…
-
- 15 replies
- 542 views
-
-
அந்தமானின் ரகசிய தீவிற்குள் நுழைந்த நபர்.. 5 நாள் கொடுமைப்படுத்தி கொன்ற சென்டினேலீஸ் ஆதிவாசிகள் ! சென்டினல்: அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்தமான் தீவுகளில் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மனிதர்களின் வருகையை விரும்பாத அங்கிருந்த ஆதிவாசிகள் அவரைக் கொலை செய்து இருக்கிறார்கள். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிறையக் குட்டி குட்டி தீவுகள் உள்ளது. அந்த வகையில் அங்கு இருக்கும் சென்டினல் தீவு மிகவும் பிரபலம். ஆனால் இது சுற்றுலா தலமாகப் பிரபலம் அடையவில்லை.அங்கு இருக்கும் சென்டினேலீஸ் ஆதிவாசி மக்களால் பிரபலம் அடைந்து இருக்கிறது. அங்கு இருக்கும் சென்டினேலீஸ் ஆதிவாசி மக்கள் வெளி உலகுடன் எந்த விதமான தொடர்பும் இல்லாமல் இத்தனை வருடங்களாக உயிர் வாழ…
-
- 0 replies
- 542 views
-
-
இளம் தாய் ஒருவர் தனது மகளை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சியொன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் தனது இளம் குழந்தையை கடுமையாக திட்டிக்கொண்டு குறித்த குழந்தை அணிந்திருந்த காற்சட்டையை கழற்றிவிட்டு பிரம்பால் தாக்குவதோடு கால்களால் உதைக்கின்றார். மேலும் கைகளால் சரமாரியாக கன்னத்தில் அறைவதோடு கால்களால் தலையில் எட்டி உதைத்தும் கையில் இருந்த தடியால் குழந்தையின் வாயினுள் குத்தியும் தண்டனை வழங்கியுள்ளார். இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்த பல மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித் துள்ளதோடு மனித உரிமை அமைப்புகளும் விமர்சித்துள்ளன. http://ww…
-
- 0 replies
- 542 views
-
-
திருக்கோவில் வீதியில் கண்டெடுத்த ஒரு இலட்சம் ரூபாவை பொலிஸாரை தேடிச் சென்று ஒப்படைத்த மாணவன் (திருக்கோவில்-எஸ்.கார்த்திகேசு) திருக்கோவில் பிரதேசத்தில் வீதியில் கண்டெடுத்த ஒரு இலட்சம் ரூபா பணத்தை பொலிஸாரை தேடிச் சென்று ஒரு மாணவன் ஒப்படைத்த சம்பவம் நேற்று திருக்கோவிலில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது வீதியில் காணப்பட்ட ஒரு இலட்சம் ரூபா கொண்ட பணப் பொதியை கண்டெடுத்து வீதிக் கடமையிலிருந்த பொலிஸாரை தேடிச் சென்று அந்த மாணவன் ஒப்படைத்துள்ளான். திருக்கோவில் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலையில் தரம் 8 பிரிவில் கல்வி கற…
-
- 5 replies
- 542 views
-