Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சீனாவை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியான லடாக்கில் பறக்கும் தட்டு போன்ற பொருள் மீண்டும் பறந்ததை பார்த்ததாக, இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து ராணுவத் தலைமையகத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். சீனாவின் எல்லையை ஒட்டிய உயர்ந்த மலைப் பிரதேசமான லடாக்கின் லகான் ஹேல் பகுதியில், கடந்த 4-ஆம் தேதி அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு போன்ற பொருள் பறந்ததை தாங்கள் பார்த்ததாகவும், அது சுமார் 4 மணி நேரம் பறந்ததாகவும் இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். ஆனால், பறந்த பொருள் விமானமா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இருப்பினும், இந்தச் சம்பவத்தை அடுத்து, சீனாவை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள…

  2. இந்தோனேசியாவிலிருந்து க.பொ.த உயர்தரத்துக்கு தோற்றும் இலங்கை மாணவன் நாடளாவிய ரீதியில் தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில், இலங்கை மாணவன் ஒருவனுக்கு வெளிநாட்டில் இருந்து பரீட்சை எழுதுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சென். பீற்றர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் அகலங்க பீரிஸ் என்ற நீச்சல் வீரரான குறித்த மாணவன், ஆசிய விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியா செல்லவுள்ள நிலையில், இம் முறை உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களுக்கு அவர் அங்கிருந்தே தோற்றவுள்ளார் என அறிய முடிகிறது. எதிர்வரும் 18 ஆம் திகதி தொ…

  3. கோழி திருடனுக்கு கோப்பி : தெற்கில் இடம்பெற்ற நகைப்புச் சம்பவம் வீடொன்றில் கோழி திருடச்சென்ற போது கால் தவறி கிணற்றில் விழுந்த நபர் திருடனென்பதை அறியாது காப்பாற்றிய சம்பவம் தென் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபர் கோழிகளை திருடி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர். இதனாலேயே அப்பகுதியில் அவர் கோழி திருடனென அனைவராலும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். குறித்த நபர் சில தினங்களாக திருடுவதை விட்டிருந்த நிலையில், ஒரு நாள் இரவு வேளையில் கோழியொன்றை திருடுவதற்காக வீடொன்றிற்குள் சென்றுள்ளார். இதன் போது அவ்வீட்டிலுள்ள நாய் குரைத்துள்ளதையடுத்து பயந்து போன குறித்த நபர் வேகமாக ஓட ஆரம்பித்துள்ளார். …

  4. மனிதர்களைவிட நாய்கள் நல்லவை’ என்கிறார் 23 வயது ஆண்ட்ரூ. வீடில்லாதவர். சாலைகளில் வசிப்பவர். இவருக்கு உற்றத் துணை இவரது செல்ல நாய் ஸ்மோக்கிதான். என்னுடைய வாழ்க்கையைத் தவிர என்னுடன் தொடர்ந்து வருவது இந்த நாய்தான்’ என்று நன்றியுடன் சொல்லுகிறார் ஆண்ட்ரூ. இவர் மட்டும் அல்ல ரொறான்ரோ வீதிகளில் வசிக்கும் பல வீடில்லா அனாதைகளின் உற்ற தோழனாக நாய்கள்தாம் இருக்கின்றன. நாய்கள் வளர்ப்பதனால் இவர்கள் முக்கியமான ஒரு பிரச்சனையைச் சந்திக்க நேரிடுகிறது. இவர்களை பல ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. அங்கெல்லாம் நாய்கள் வளர்க்க தடை இருக்கிறது. ‘நாய்கள் வளர்ப்பது இவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. மனிதர்களுடன் பழக முடியாத இவர்களூக்கு நாய்கள்தாம் வாழ்க்கையை நகற்ற உதவுகிறது’ என்கிறார…

  5. தலை வழுக்கைக்கு முடிவா? ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் ஒரு வித மரபணு சிகிச்சை மூலம் எலிகளில் மயிர் வளர்க்கப்பட்டுள்ளது. மனிதர்களிலும் சாத்தியமாகுமா? Researchers successfully grow hair on bald mouse: Humans next? Great news for bald men men and women: Scientists in Japan have successfully regrown hair on a bald mouse. Even though the technological advancement only happened on a rodent, this new development may mean that humans could look forward to a hair-filled future. Not only were Japanese scientists able to regrow hair in the study, which was published April 17 in Nature Communications, but they were able to manipulate the de…

    • 2 replies
    • 539 views
  6. பிரேஸிலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக கிண்ண கால்பந்து போட்டிகளை ரசிக்க ஆயிரக்க கணக்கான ஜேர்மனியின் கால்பந்து ரசிகர்கள் பேர்லின் அரங்கிற்கு சோபாக்களுடன் வருகை தருகின்றனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கால்பந்து போட்டியின் நேரலையினை உலக கிண்ண முதல் போட்டியில் இருந்து பேர்லின் அரங்கில் பெரிய திரையில் காண்பிக்கப்படுகிறது. இங்கு வரும் ரசிகர்கள் தமது வீட்டில் அமர்ந்து பார்ப்பது போன்று சோபாக்களுடன் வருகை தர அரங்க நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதனால் ஒவ்வொரு போட்டியையும் காண பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் சோபாக்களுடன் ஒன்று கூடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரேஸிலுக்கும் குரோசியாவுக்கு இடையிலான போட்டியினை காண இவ்வரங்கில் சுமார் 12 ஆயிரம் பேர் ஒன்ற…

    • 0 replies
    • 539 views
  7. சீனாவில் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க பெண்களுக்கு தடை - விளம்பரத்தில் ஆண்கள். சீனாவில் கொரோனா தொற்றுக்கு முன்பும் பின்பும் எல்லாமே சற்று மர்மமாகத்தான் உள்ளது. போலி பொருட்கள் தயாரிப்பு முதல் அதை ஏற்றுமதி செய்வது என பல சர்ச்சைக்குரிய செயல்கள் அங்கு மர்மமாகவே உள்ளது. சீனா பொருளாதாரத்திலும், தொழில்துறைகளிலும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கே சவால் விடும் அளவில் வளர்ந்துள்ளது. அது மட்டுமின்றி சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நாடு என்று கூட சொல்லலாம். இந்த வகையில் சமீபத்தில் சீனா தடை செய்த பெண் மாடலிங் விவகாரம் தற்போது உலகமே விவாதிக்கும் விஷயமாக மாறியுள்ளது. பெண் மாடலிங்களுக்குத் தடை! சீன அரசு பெண் மாடல் அழகிகள் உள்ளாடைகளை அணிந்து விளம்பரங்களில் நடி…

  8. நபரொருவர் மூகமூடி அணிந்துகொண்டு தனது மனைவியையே அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்று அண்மையில் சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் குஆன்ஷொஉ நகரைச் சேர்ந்த ஷியாஓ யென் என்ற 36 வயதான பெண்ணொருவர் சமயலறையில் வேலைசெய்துகொண்டிருந்த போது மூகமூடி அணிந்த திருடன் ஒருவர் வீட்டினுள் நுழைந்துள்ளான். அத்திருடன் பணம் கேட்டு அச்சுறுத்த 35 ரென்மின்பியை (சுமார் 600 ரூபா) கொடுத்துள்ளார் யென். பின்னர் மூகமூடியுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாது யென்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து யென் நடந்தவற்றை கணவனிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் இணைந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸாரின் விசாரணையின் போது யென்னின் கணவனில…

  9. MCC உடன்படிக்கையை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானம் – நிதி உதவிகளை இழக்கும் இலங்கை 19 Views MCC எனப்படும் மிலேனியம் கோப்பரேஷன் உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதற்கமைய 5 வருட காலத்திற்காக இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இரத்து செய்யப்படவுள்ளது. MCC பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமெரிக்காவின் வௌிநாட்டு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.ilakku.org/?p=37434

  10. Started by Ramanan005,

    [size=2] [/size][size=2] [size=3]நண்பர்களே.......[/size] [size=3]நமது மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.....[/size] [size=3]சமூக வலைத்தளங்களில் நாம் செலவிடும் நேரத்தில் 1மணி நேரம் விக்கீப்பீடியாவில் எழுதினால் போதும்....[/size] [size=3] வரும் தலைமுறையினர் நம் மொழி , இனம்,கலாச்சாரம் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்ள மிக நல்ல வாய்ப்பை விக்கீப்பிடியா கொடுத்துள்ளது[/size][/size]

  11. முதலாளி உங்களுக்கு என்னாச்சு.. ஆஸ்பத்திரி வாசலில் கவலையுடன் காத்து கிடந்த 4 நாய்கள்..... பிரசிலியா: தெருநாய்கள்தான்... ஆனால் எல்லோரையுமே கண்கலங்க வைத்துவிட்டன. பிரேசில் நாட்டில் நடந்த சம்பவம் இது. சீசர் என்ற நபர் தெருவில் போகும்போது அங்கிருக்கும் 4 நாய்களுக்கு சாப்பாடு தருவாராம். எப்பவும் இப்படி சாப்பாடு தருவது இல்லையாம். என்றைக்காவது அந்த வழியாக சென்றால், அதுவும் அந்த நேரத்தில் கையில் ஏதாவது சாப்பாடு இருந்தால் அந்த தெரு நாய்களுக்கு போடுவாராம். உடனே அந்த 4 நாய்களும் அதை சாப்பிட்டுவிட்டு வாலை ஆட்டுமாம். தாங்க முடியவில்லை.... இந்த நிலையில் சீசருக்கு ஒரு நாள் உடம்பு சரி இல்லாமல் போய்விட்டது. அதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீசர் இப்படி ஆஸ்பத்திரி…

  12. நீதிமன்றங்களையும், பொலிசாரையும் 19 வருடங்களாக ஏமாற்றி வந்த மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நபரை, பண்டாரவளைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். பண்டாரவளைப் பகுதியைச் சேர்ந்த கப்பில பண்டார தர்மசிரி என்ற 48 வயதுடைய நபரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், கடந்த 2002 ஆம் ஆண்டு, மே மாதம் 14 ஆம் திகதி இரவு தமது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தப்பிச்சென்றிருந்தார். இது குறித்த வழக்கு பதுளை மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து குறித்த நபரை சந்தேக நபராகக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட குறித்த கொலை வழக்கு 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அன்றைய தினம்…

  13. கிளிநொச்சியில் மருமகனை இரும்பினால் தாக்கிய மாமா கைது! கிளிநொச்சி, கல்மடு பகுதியில் ஏற்பட்ட கைக்கலப்பில் படுகாயமடைந்த ஒருவர், யாழ்., போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பெரியகுளம் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் ஐங்கரன் என்னும் 32 வயதுடைய இளைஞனே படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இரும்பினால் தாக்கப்பட்டதில் மருமகன் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க…

  14. விமானத்திற்குள் கூச்சலிட்ட தமிழ் யுவதி! விசாரணையில் அம்பலமான கட்டாய திருமண விவகாரம் யாழ்ப்பாணத்தில் உள்ள 27 வயதான பொறியியலாளர் ஒருவருக்கு ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த தமிழ் யுவதியை யுவதியின் விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணம் செய்து வைக்க இடம்பெற்ற முயற்சி அம்பலமாகியுள்ளது. குறித்த யுவதியை கட்டாயப்படுத்தி விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு அழைத்து செல்ல யுவதியின் பெற்றோரும் சகோதரர்களும் முற்பட்ட போது யுவதி விமானத்துக்குள் கத்திக் குளறியுள்ளார். உடனடியாக விமானத்தினுள் இருந்த விமானி இது தொடர்பாக பொலிசாருக்கு முறையிட்ட போது பொலிசார் யுவதியை மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக ஜேர்மன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். யுவ…

  15. 11 NOV, 2023 | 01:09 PM ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் 14 மணி நேரத்தில் சுமார் 800 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மிகப்பெரிய நிலநடுக்கமாக கிரைண்டா விக்குக்கு வடக்கே 5.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கங்கள் காரணமாக உலக புகழ்பெற்ற சுற்றுலா தரமான புளூ லகூன் மூடப்பட்டுள்ளது. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு காரணமாக மக்கள் பாதுகாப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் உள்ள…

  16. விஞ்செல்சீ கடற்கரையில் பின்லாடன் முகம் கொண்ட அபூர்வச் சிப்பி! சசெக்ஸ் நகரத்தை அண்டிய விஞ்செல்சீ கடற்கரைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் உருவம் போன்ற கடற்சிப்பியை கண்டெடுத்த பெண் ஒருவர் அதனை ஆச்சரியத்துடன் சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து வருகிறார். அழகிய கடற்கரைகளைக் கொண்ட கிழக்கு சசெக்ஸ் நகரத்திற்கு அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், மேற்கு லண்டனின் பிரென்ற்ஃபேர்ட் (Brentford) நகரைச் சேர்ந்த டெப்ரா ஒலிவர் என்பவர், தனது 42 வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள விஞ்செல்சீ கடற்கரைக்கு தனது கணவருடன் சென்றிருந்தார். கடற்கரையில் கிடந்த சங்குகளையும், சிறு சிறு சிப்பிகளையும் வேடிக்கைபார்த்த வண்ணம் டெப்ரா ஒலிவர் உ…

    • 2 replies
    • 538 views
  17. காதலியுடன் செல்பி எடுக்க முற்பட்டவர் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழப்பு! நெலுவ, தூவிலி எல்லயில் தனது காதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் அங்குள்ள கல் ஒன்றின் மீது ஏறி ´செல்பி´ எடுக்க முற்பட்ட போது கால் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளவத்த பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ரத்னராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் காதலி கொழும்பில் பிரதான வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/காதலியுடன்-செல்பி-எடுக்க/

    • 2 replies
    • 538 views
  18. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் கதவு அசையாமல் இருப்பதற்காக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக முட்டுக்கொடுக்க பயன்படுத்தப்பட்ட கல் ஒரு விண்கல் என்று பேராசிரியர் ஒருவர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். மிச்சிகன் மத்தியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனா சிர்பெஸ்க்கு என்பவரிடம், தன்வசம் 30 ஆண்டுகளாக இருக்கும் கல்லின் தன்மையை ஆராயுமாறு கொண்டுவந்து கொடுத்துள்ளார் உள்ளூர்வாசி ஒருவர். சுமார் 10 கிலோ எடை உள்ள அந்தக் கல்தான் தன் வாழ்விலேயே ஆராய்ச்சிக்கு உட்படுத்திய மிகப்பெரிய விண்கல் என்று மோனா கூறியுள்ளார். 1930களில் மிச்சிகனில் உள்ள எட்மோர் எனும் இடத்தில் இருக்கும் விளை நிலத்தில் வந்து விழுந்த அந்தக் கல்லின் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர். …

  19. லண்டன்: மிகவும் சந்தோஷமாக வாழ தகுதியான நாடு என மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது. (ஓ.இ.சி.டி. )எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு , உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தொழில் ரீதியாக வளர்ச்சி, பொருளாதாரம் , மக்களின் வருவாய், சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நன்கு வளர்ச்சியடைந்ததும், அங்கு மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் எப்படி உள்ளன என்பது குறித்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் முதல் 10 நாடுகள் குறித்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. முதல் பத்து நாடுகளில் ஆஸி. முதலிடம் இது குறித்துஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொருளாதார ரீதியில் வளர்ச்சிஅடைந்த நாடுகளி…

    • 0 replies
    • 537 views
  20. முகநூல்: தனி மனிதன் உருவாக்கிய கருத்துக்களம்: 1,360 ஏக்கர் காடு! யார் இந்த மாமனிதர்? உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துக்கொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...! யார் இவர் ? அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்…

  21. வீட்டில் குழந்தையை பிரசவித்த தாய் - குழந்தை உயிரிழப்பு ; தாய், தந்தை கைது யாழில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வசித்து வந்த மாத்தளையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் பெற்றோர்களான தம்பதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் கடந்த 22 ஆம் திகதி வீட்டில் குழந்தை பிரசவித்துள்ளார். அதனை அடுத்து அவருக்கு அதிக இரத்த போக்கு ஏற்பட்டமையினால் , மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்து மேலதிக சிக…

  22. ரெட்புள் சாகச மோட்டார் சைக்கிள் ஓட்ட வீரரான கிறிஸ் பீஃவிஃவர் யாழ்ப்பாணத்தில் தனது சாகச நிகழ்வுகளை இன்று நிகழ்த்தினார். யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்துக்கு முன்னால் இன்று பிற்பகல் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வினைக் கண்டுகளிப்பதற்கென பெருந்திரளான மக்கள் அங்கு வருகை தந்தனர். மேலும் அவர்கள் கிறிஸ் பீஃவிஃவரின் மோட்டார் சைக்கிள் சாகசங்களுக்கு கைதட்டி உற்சாகமளித்தனர். கிறிஸ் பீஃவிஃவர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் தனது சாகச நிகழ்வுகளை முன்னெடுக்கின்றார். இதேவேளை இவரின் மேலும் இரண்டு சாகச நிகழ்வுகள் எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பு தாமரை தடாக மாவத்தை (கிறீன்பாத்) மற்றும் டபிள்யுடீசி (பிஓசி வீதி) இலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. …

  23. ஒரு கேள்வி கூட கேட்காத எம்.பி.க்கள்:சபாநாயகர் கண்டனம் இன்று பாராளுமன்றத்தின் கடைசித் தொடரின் இறுதி நாளாகும். இன்றுடன் பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவு பெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி.க்களாக இருந்தவர்கள் இன்றுடன் பிரியா விடை பெறுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் பல எம்.பி.க்கள் குறிப்பிடத்தக்க கேள்விகள் கேட்கவில்லை. சில எம்.பி.க்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்று சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளார். அவர் மேலும், ’’ஒரு கேள்வி கூட கேட்காத எம்.பி.க்களை மக்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு கொடுக்கப்படும் அரசு பணம் வீண் எனவும், அடுத்த தேர்தலில் அவர்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றும் சோம்நாத் சட்டர்ஜி கூறியுள்ளார். …

  24. சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு முன்பு இளம் தீவிரவாதி ஒருவர் பயத்தின் காரணமாக கதறி அழுத காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். அமைப்பு, அல்கொய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து பல தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் சிரியாவில் உள்ள இரண்டு கிராமங்களை குறிவைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள், தற்கொலைப்படை தாக்குதலை நடத்த திட்டமிட்டது. அதற்காக தங்கள் அமைப்பில் உள்ள உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜாஃபர் அல் தையர் என்ற இளைஞரை ஐ.எஸ். தேர்ந்தெடுத்தது. தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஜாஃபர் அல் தையருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரியாவிடை அளித்தனர். அந்த இளைஞரை கட்டிப்பிடித்து தாக்குதல் வெற்றி பெற…

  25. பேரனுக்கு பரிசாக சிறிய ரக முச்சக்கரவண்டியை உருவாக்கியுள்ளார் யாழ். உதயகுமார் பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசு வழங்கும் நோக்கில் சிறிய ரக முச்சக்கரவண்டியை சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளார் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த பொன்னையா உதயகுமார். 34 வருடங்களாக முச்சக்கரவண்டி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அத்துடன் தனது 3 பிள்ளைகளும் தன்னுடன் இணைந்து தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், 34 வருட அனுபவத்தை பயன்படுத்தி பேரனின் முதலாவது பிறந்ததினத்திற்கு பரிசாக இந்த முச்சக்கரவண்டியை தயாரித்துள்ளதாகவும் பொன்னையா உதயகுமார் தெரிவித்துள்ளார். பேரனின் பெயரையும் பிறந்த திகதியையும் வைத்து இலக்கத்தகடினை உருவாக்கியுள்ளதாகவும் தான் எதிர்ப்பார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.