Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு... இங்கிலாந்து பிரதமரையே திணறடித்த 10 வயது இந்திய வம்சாவளி சிறுமி! லண்டன்: இங்கிலாந்து பிரதமர் கேமரூனை தேர்தல் பிரச்சாரத்தின் போது கேள்வி கேட்டு திணறடித்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர். இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 7-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக அந்நாட்டு பிரதமரான டேவிட் கேமரூன் மீண்டும் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சி, சுதந்திர கட்சி என அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு... இங்கிலாந்து பிரதமரையே திணறடித்த 10 வயது இந்திய வம்சாவளி சிறுமி! தேர்தலை முன்னிட்டு கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்…

  2. கட்டுறா தாலிய, இல்லே.. மவனே போட்டுறுவன்.. 25 வயது பெண், தன்னை காதலித்து, கழற்றி விட்டு, கொரியாவிற்கு வேலை காத்திருக்கு என்று சாட்டுக் கூறி தப்ப முயன்ற 23 வயது ஆணை கடத்திச் சென்றார். மூன்று ஆட்டோக்களில், பெண்ணுடனும், அவரது உறவான ஒரு இராணுவ வீரர் உட்பட்ட அறுவருடன் வந்திறங்கி, கொரிய மொழி வகுப்புக்கு இரு நண்பர்களுடன் நடந்து போய் கொண்டிருந்த போதே கடத்தப்பட்டார். கடும் கோபத்தில் இருந்த பெண், கத்திய கத்தில் பயந்து போய் தப்பி ஓட முனைந்த ஆண்பிள்ளையை, லபக் கென்று பருந்து காவிச் செல்வது போல் தூக்கி ஆட்டோவில் போட்டுக் கொண்டு பறந்தோடி விட்டார். பெண்..ச..சசா.. ஆண் எழுப்பிய அவலக்குரலால் கவலை கொண்ட நண்பர்கள் பொலீசை அழைக்க, நடவடிக்கை எடுத்த பொலீசார் ஆண்பிள்ளையை பத்திரம…

    • 0 replies
    • 535 views
  3. டைவர்ஸுக்கு பிறகு - எல்லாத்துலயும் பாதி கொடுத்த கணவன்! ஜெர்மனை சேர்ந்த ஒருவர், தனது விவாகரத்துக்கு பிறகு தனது மனைவிக்கு தனது சொத்துக்களில் சரி பாதியை வழங்கவேண்டும் என்று விவாகரத்து ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்ததால், தன்னிடம் உள்ள பொருட்களில் பாதியை அளிப்பதற்கு பதில் அனைத்து பொருட்களையும் பாதியாக கட் செய்து தனது மனைவிடம் கொடுத்துள்ளார். மேலும் அவர் பாதியாக அறுக்கும் வீடியோ ஒன்றை யூ-ட்யூபில் பதிவேற்றி, அந்த பதிவில், "உன்னோடு வாழ்ந்த 12 வருட வாழ்க்கைக்கு நன்றி. என்னிடம் உள்ள பொருட்களில் பாதியை உனக்கு அளித்துள்ளேன்!" என்று குறிபிட்டுள்ளார். மீதியை இபே ஆன்லைன் இணையதளத்தில் விற்கவும் செய்துள்ளார். பதிவு செய்த சிறிது நேரத்தில், அவரது பாதி காரை 50 டாலருக்கும் அதிகமான …

  4. திருட சென்ற இடத்தில் திருடனின் மனிதாபிமானம்..! திருடனால் காப்பாற்றப்பட்ட வயதான பெண்மணி, யாழ்.சாவகச்சோில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்.. யாழ்.சாவகச்சோியில் வீடு புகுந்து திருடுவதற்காக சென்றிருந்தபோது வீட்டின் உரிமையாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உடனடியாக சுடு தண்ணீர் வைத்து கொடுத்த திருடன் அவரை ஆறுதல் படுத்தியதன் பின் திருடி சென்ற சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சாவகச்சோி - கல்வயல் பெருங்குளம் வேதன பிள்ளையார் கோவில் மற்றும் நுணாவில் கந்தசுவாமி கோவில் பகுதிகளில் சுமார் 6 வீடுகளில் நேற்று இரவு தொடர் கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதில் நுணாவில் வேலங்கேணி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள வீடொன்றின் கதவுகளை உடைத்துக் கொண்டு திருடர்கள் உள்நுழைந்துள்ளனர். …

  5. விமானத்தில் பக்கத்து சீட் பெண் பயணிக்கு முத்தம்.. இந்தியருக்கு ஓராண்டு சிறை! விமானத்தில் பயணித்தபோது பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், இந்தியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது இங்கிலாந்து நீதிமன்றம். இந்தியாவை சேர்ந்தவர் 35 வயதான ஹர்தீப் சிங். இவர் கடந்த பிப்ரவரி மாதம், ஆறு மாத சுற்றுலா விசாவில் லண்டன் சென்றார். மும்பையில் இருந்து மான்சேஸ்டர் செல்லும் விமானத்தில் அவர் பயணித்தார்.அப்போது அவரது பக்கத்து இருக்கையில் பெண் பயணி ஒருவர் அமர்ந்திருந்தார். முதலில் அவரிடம் ஹர்தீப் சிங் பேச்சு கொடுத்துள்ளார். ஆனால் அவரது ஆங்கிலம் சுமாராக இருந்ததால், அந்த பெண் பயணி ஹர்தீப்பிடம் தொடர்ந்து பேசவில்லை. <><>சிறிது நேரம் கழித்து அந்த பெண் உள்பட விமா…

  6. Siri Raja சைப்பிரஸில் சட்டவிரோதமாக வாழ்ந்தமைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையரை விடுதலை செய்யும்படி கே.ஐ.எஸ்.ஏ எனும் புலம்யெர்ந்தோர் ஆதரவுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இவர், கடந்த 20 வருடங்களாக சைப்பிரஸில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வருவதுடன் அங்கு பணிபுரிந்தும் வருகின்றார். இவர் யூலை 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதற்காக மெனோயியா தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த தம்பதியினர் 1993 இலிருந்து சைப்பிரஸில் சட்டரீதியாக வாழ்ந்து வருவதுடன் வேலையும் செய்துவருகின்றனர் என்று கே.ஐ.எஸ்.ஏ எனும் புலம்யெர்ந்தோர் ஆதரவுக் குழு தெரிவித்துள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகளுக்கு ஆறு வயதாகும். இரண்ட…

  7. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் உள்ளன. இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண…

  8. https://www.youtube.com/watch?v=BfrroXbHBnM இந்த விஷப்பரீட்சையெல்லாம் தேவையா?

    • 3 replies
    • 535 views
  9. யாழில் நாய்களை விழுங்கிய முதலை மடக்கிப் பிடிப்பு! By DIGITAL DESK 2 15 DEC, 2022 | 03:29 PM இரண்டு நாய்களை உயிருடன் விழுங்கிய 8 அடி நீளமான முதலையை யாழ்ப்பாணம் சாவகச்சேரி மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். சாவகச்சேரி சிவன் கோவிலடியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றினுள் புதன்கிழமை (டிச.14) இரவு உட்புகுந்த சுமார் 8 அடி நீளமான முதலை, அங்கிருந்த இரண்டு நாய்களை விழுங்கி விட்டு அசையமுடியாத நிலையில் அங்கேயே உறங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/143197

  10. ஜப்பானில் மீண்டும் 9.0 புள்ளி ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால் 112 அடி உயரத்துக்கு (34 மீட்டர்) சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால் டோக்கியோ முதல் தென்மேற்கு பகுதியில் உள்ள குயுஷு தீவு வரை பாதிப்பு இருக்கும். பல நகரங்கள் மூழ்கிவிடும் என்று நிபுணர் குழு எச்சரித்துள்ளது. ஜப்பானில் கடந்த ஆண்டு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சுனாமி தாக்குதலில் பல நகரங்கள் சேதம் அடைந்தன. அப்போது 9.0 புள்ளி ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவானது. இதில் 20 ஆயிரம் பேர் பலியாயினர். புகுஷிமா நகரில் இருந்த அணு உலைகள் வெடித்து சிதறின. பயிர்கள், மனிதர்கள் கதிர்வீச்சில் பாதிக்கப்பட்டனர். ஓராண்டு முடிந்த நிலையில், பூகம்பம், சுனாமி பாதிப்பு குறித்து விரிவான ஆய்வு…

  11. கொழும்பு துறைமுக நகரத்தின் காலி முகத்திடலை ஒட்டிய செயற்கைக் கடற்கரை பகுதியில் முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. காணொளி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள், முதலை தண்ணீரில் இருந்து வெளியேறி, கரையில் குடியேறுவதை வெளிக்காட்டியுள்ளது. முன்னதாக வெள்ளத்தை, தெஹிவளை, கல்கிசை ஆகிய கடற்பரப்புகளில் மூன்று முதலைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கைக் கடற்கரையில் காணப்பட்ட முதலையானது, முன்னர் காணப்பட்ட முதலையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வெள்ளவத்தை மற்றும் தெஹிவளைக்கு இடையில் உள்ள நீர் ஓடை மூலம் ஊர்வனங்கள் கடல் பகுதிகளுக்குள் நுழைவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவதான…

  12. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் காரின் இலக்க தகட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அது போலியானது என தெரிய வந்துள்ளது. அத்துடன் காரில் இருந்த ஆவணங்களும் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. குற்றச்செயல்களுடன் தொடர்புடைய காராக இருக்காமல் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கார் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.v…

  13. அச்சுவேலியில் கத்தி முனையில் வழிப்பறி! பெண்ணொருவரின் தோடு கழராத போது... காதில் இருந்து பிடுங்கி எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அச்சுவேலி வைத்திய சாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விலாசம் கேட்பது போன்று பாசாங்கு செய்து , திடீரென கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். அதன் போது பெண்ணொருவரின் தோட்டினை கழட்டும் போது , அது கழராத போது, பெண்ணின் காதில் இருந்து தோடு பிடுங்கி எடுத்துள்ளனர். அதனால் அப்பெண்ணின் காதில் காயம் ஏற்பட்ட நிலையில் அச்சுவேலி வைத்திய சாலையில் சிகிச்…

  14. அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அதியு யர்மட்ட இராஜதந்திரியொருவர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா அமர்வில் பார்வையாளராகக் கலந்துகொள்ளவிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இம்முறை அமர்வின்போது இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை கொண்டுவருவதில் அமெரிக்கா வெகுவான அக்கறை காட்டிவருகின்ற நிலையில் மேற்படி தகவல் நேற்று வெளியாகியுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மார்ச் முதல் வாரத்தில் முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் அன்றையதினம் அமெரிக்காவின் அந்த உயர்மட்ட இராஜதந்திரி பார்வையாளராகக் கலந்துகொள்வாரென்றும் இலங்கைக்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவது அமெரிக்க பிரதிநிதியின் இந்த பிரசன்னம் உ…

  15. குஜராத் மாநிலத்தில் 3 குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தனது சிறுநீரகத்தை விற்கும்பரிதாப நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறார்.குஜராத் மாநிலம் உனாவ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நந்த்வனா (வயது 35). இவருடைய மனைவி பிரக்னா பென். இந்த தம்பதியருக்கு பாவிகா, அனிஷா என 2 மகள்களும், யோகிதா, ஹர்ஷ் என்னும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் பாவிகா தவிர மற்ற மூவருமே குண்டு குழந்தைகள். 4 வயதாகும் அனிஷா மெகா குண்டாக காட்சி அளிக்கிறார். இவருடைய எடை 56 கிலோ. யோகிதா(5) 37 கிலோ எடையும், கடைக்குட்டியான ஹர்ஷ்(3) 20 கிலோ எடையும் உள்ளனர்.கைக்குழந்தை பருவத்திலேயே 3 பேரும் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடத் தொடங்கியதன் விளைவு ஒரு வயதை கடப்ப…

  16. ''காதலுக்கு பச்சைக்கொடி காட்டு ராசா!'' - செல்போன் டவர் ஏறி போராடி தன் விருப்பத்தைச் சாதித்த பெண் Published : 06 Mar 2019 12:35 IST Updated : 06 Mar 2019 12:43 IST ஏஎன்ஐ வாரங்கல் பிரதிநிதித்துவப் படம் காதலை நிராகரித்ததற்காக 23 வயதுப் பெண் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் தெலங்கானாவில் நேற்று நடந்தது. இதுகுறித்து வாரங்கல் நகரத்தில் உள்ள காகதியா பல்கலைக்கழக காவல்நிலைய அதிகாரி ராகவேந்திர ராவ் தெரிவித்ததாவது: வாரங்கலில் நேற்று மாலை திடீரென ஒரு இளம் பெண் மல்லிகா (23), தன் காதலுக்கு நீதி கேட்டு செல்போன் கோபுரத்தில் ஏறி தனது போராட்டத்தை நடத்தினார். மல்லிகா, என். பாபு என்பவரை கடந்த ஒன்பது ஆண்டுகளாக…

  17. குளியலறையினுள் அமானுஷ்யம்..? பாராளுமன்ற உறுப்பினருக்கு நிகழ்ந்த திகில் சம்பவம்..! ஐக்கிய தேசியக் கட்சி குருநாகல் மாவட்ட பாராளுமன்ற நலீன் பண்டார விடுதி அறை குளியலறையினுள் விபத்துக்குள்ளாகி மர்மமான முறையில் காயமடைந்துள்ளார். நுவரெலியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில், அன்று விடுதி குளியலறைக்கு சென்றபோது தன்னை யாரோ தள்ளிவிட்டதாகவும் இதனால் தான் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அந்த சம்பவ நேரத்தில் அறை பூட்டியிருந்ததாகவும் தான் மாத்திரமே குறித்த அறையில் இரு…

  18. நண்பர்களுடன் பாரிய பட்டம் ஒன்றை ஏற்றிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் கயிற்றை நண்பர்கள் விடும் போது இளைஞன் பிடியை விடாததால் அவனை அலாக்காக பட்டம் தூக்கி மேலே கொண்டு சென்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞன் கீழே வீழந்து படுகாயமடைந்துள்ளான். https://vampan.net/wp-content/uploads/2021/12/269565160_242147331382458_1406662015373078646_n.mp4?_=1 https://vampan.net/34938/

    • 5 replies
    • 534 views
  19. ஜிம்பாவே நாட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் யானை ஒன்று மருத்துவ உதவிக்காக மனிதர்கள் இருக்கும் விடுதிக்கு சென்றுள்ளது. ஜிம்பாவே நாட்டின் மேற்கு மாகாணம் மலைப்பகுதியில் அமைந்துள்ள மஷோனாலேண்ட் சுற்றுலா பகுதியில் ஏராளமான ஓய்வு விடுதிகள் உள்ளன. இந்த மலைப்பகுதியில் உள்ள காட்டு யானை ஒன்று துப்பாகி குண்டு அடிப்பட்டு மலை மீதுள்ள ஓய்வு விடுதி ஒன்றுக்கு சென்று மருத்துவ உதவிக்காக கதவை தட்டியுள்ளது. வாடிக்கையாளர்கள் என ஒய்வு விடுதி ஊழியர்கள் கதவை திறந்து பார்த்த போது யானை பரிதாபமான நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளது. உடனே அந்த ஊழியர்கள் கால்நடை மருத்துவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஒய்வு விடுதியில் இருந்து 200 மைல் தொலைவில…

    • 2 replies
    • 533 views
  20. அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டிகள் அதிகம் இருக்கும் அண்டார்டிகாவில் உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் அண்டார்டிகாவின் பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை ரஷ்ய ...விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் அங்கு உறைந்து கிடக்கும் ஐஸ்கட்டியை டிரில்லிங் இயந்திரம் மூலம் சுமார் 3,768 மீற்றர் ஆழத்துக்கு துளையிட்டனர். அப்போது அதன் அடியில் ஏரி இருப்ப…

    • 2 replies
    • 533 views
  21. நெல்லை மாவட்டம் களக்காட்டில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆனதால் காதலியுடன் எடுத்த புகைப்படத்தை களக்காடு பஜார் முழுவதும் கவிதை வசனத்தோடு சுவரொட்டியாக ஒட்டிய காதலன். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களக்காடு நகராட்சி 2வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு 18 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். களக்காடு அருகே உள்ள மேலபத்தை பகுதியை சேர்ந்தவர் தானியேல் இவருடைய மகள் கிருபா. பல பேருக்கு காதலை சேர்த்து வைக்க லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்து வந்த விஜய்ரூபன் மேலபத…

  22. தமிழால் இணைவோம் அன்றே சொன்னார்... .................................. "நான் இந்தியா முழுவதும் பயனம் செய்தேன்.அங்கு ஒரு பிச்சைக்காரனையோ,திருடனையோ பார்க்க முடியவில்லை. செல்வ வளம் அங்கு கொட்டிக் கிடைக்கிறது.உயர்ந்த நீதி நெறிகள்,ஒழுக்கம் நிறைந்த மக்கள் காணப்படுகின்றனர். நாம் அந்த நாட்டை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என நினைக்கின்றேன். அவர்கள் ஆன்மீகம்,பண்பாடு என்ற பாரம்பரியம் உள்ளவர்கள். அந்த நாட்டின் இந்த முதுகெலும்பை உடைக்காமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே அவர்களது பழைய புராதனக் கல்வி முறையையும்,பண்பாட்டையும் அடியோடு அகற்ற வேண்டுமென்று நான் முன் மொழிகிறேன். அந்நிய மொழி என்று கருதாமல் நம்முடைய ஆங்கிலமே அவர்களது மொழியைவிட சிறந்தது என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.