Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்சுக்கு பாதுகாப்பு அளிக்கும் படைப்பிரிவில் ஜான் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய 2 வயது மகன் பாட்ரிக் ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.இந்த கொடிய நோய் தாக்குதலால் சிறுவனுடைய தலைமுடி உதிர்ந்து வழுக்கையாகி விட்டது. இவனுக்கு தனது ஆறுதலை தெரிவிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் தனது தலை முடியை தியாகம் செய்து, மொட்டை போட்டுக்கொண்டார். அவரை போலவே பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் மொட்டையடித்துக் கொண்டார்கள். இந்த ரத்த புற்றுநோயானது 4 விதமான புற்று நோய்களில் ஒன்றாகும். புஷ்-லாரா தம்பதியரின் 2வது மகன் 4 வயது இருக்கும் போது இதே புற்றுநோய் தாக்…

  2. குளியாபிட்டி-போஹிங்கமுவ பகுதியிலுள்ள இந்து ஆலயமொன்றின் குருக்கள் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஆலயத்தின் குருக்கள் ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார். மகளின் காதல் தொடர்பை முறிப்பதற்காக போஹிங்கமுவ பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது 15 வயதான மகளுடன் கடந்த 26ஆம் திகதி ஆலயத்திற்கு சென்றுள்ளார். இதன்போது, ஆலயத்தின் குருக்களினால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபரான குறித்த குருக்கள், பிரதேசத்தை விட்டு தப்பிச…

  3. பயந்த பெண் நடுவர் ஓடினார்...! https://www.facebook.com/photo.php?v=251499421679095

  4. நம்ம ஊர் சாலைகளில் ஆடு, மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிவதும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று. . ஆனால் ஜெர்மனியில் போக்கு வரத்து விதிகளை யார்மீறினாலும் அவர்களுக்கு தண்டனை நிச்சயம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், போக்குவரத்து இடைஞ்சலாக இருந்த ஒரு ஆட்டை சிறையில் தள்ளி இருக்கின்றனர் அந்த ஊர் போலீசார். பிரெமன் எனும் நகரில் சாலை சந்திப்பின் நடுவே நின்று கொண்டிருந்த பில்லி என்னும் ஆடு போக்குவரத்து இடைஞ்சல் செய்ததுடன் அதை பிடிக்க முயன்ற போலீசாருக்கும், வாகன டிரைவர் களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடியது. ஒரு வழியாக அதை பிடித்த போலீசார் தற்போது அதை சிறையில் அடைத்துள்ளனர்.

  5. சிவகங்கையில் டாஸ்மாக் கடையை பாதுகாக்கும் நாய்க்கு பாசத்துடன் வளைகாப்பு நடத்திய மதுப்பிரியர்கள் சிவகங்கையில் டாஸ்மாக் கடையை பாதுகாத்து வந்த பெண் நாய் கருவுற்றதை தொடர்ந்து அதற்கு வளைகாப்பு நடத்தி நெகிழச் செய்து உள்ளனர் மதுப்பிரியர்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை அருகே மதகுபட்டி ஊராட்சியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதன் அருகில் தனியார் பார் ஒன்றும் உள்ளது. கடந்த ஆண்டு இந்த பாரில் ஆதரவற்ற பெண் நாய்க்குட்டி ஒன்று தஞ்சம் அடைந்தது. பாரில் குடிப்பிரியர்கள் தின்றுபோடும் மீதமுள்ள உணவு வகைகளை உண்டு வளர்ந்த நாய் பாருக்கு விசுவாசமாக காவல் காக்கும் பணியை தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டதும் கடை வாசல…

  6. துணிந்து நில்.. தொடர்ந்தும் நில்..! கரீபியன் தீவுகளின் "மஹோ பீச்" (Maho Beach) பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? இத்தீவில் அமைந்துள்ள பிரின்ஸஸ் ஜூலியனா சர்வதேச விமான நிலயம், கடலுக்குக்கு மிக அண்மித்து மிகக்குறுகிய நிலப்பரப்பில் அமைந்துள்ளதால் இதன் விமான ஓடுபாதையின் நீளம் (2300மீ) கடற்கரையை தொட்டுக்கொண்டுள்ளது. அதனால் கடற்கரைக்கும், ஓடுபாதைக்கும் இடையே செல்லும் குறுகிய சாலையிலும், அதன் அண்மித்த கடல் மணற் பரப்பிலும் மக்கள் யாரும் நிற்க வேண்டாமென காவல் துறையால் எச்சரிக்கை செய்யப்பட்டும், விமானத்தை மிக அண்மித்து பார்க்கும் ஆர்வலர்கள், காமிரா சகிதம் தினமும் ஓடு பாதையின் வேலியை ஒட்டி நின்று விமானம் புறப்படுவதை ஆர்வத்துடன் பார்ப்பது வழக்கம். விமான இறக…

  7. எனது மந்திரத்தின் மூலம் செய்யும் தியாகத்தால் நல்வாழ்வு கிட்டி மிகக் கூடிய விரைவில் செல்வந்தராகி நீடித்த ஆயுளுடன் வாழ முடியும்", எனக் கூறி ஏமாற்றி தன்னுடன் அமைதி தியானத்தில் இருந்த 7 பெண்கள் மீது பாலியல் வல்லுறவை மேற்கொண்ட மந்திரவாதி ஒருவரை பிரதேச மக்களுடன் பொலிஸாரும் இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர். இச் சம்பவம் அம்பாறை இங்கினியா கல பொலிஸ் பிரிவிலுள்ள மொரகஹபல்லம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தென் மாகாணத்தின் வலஸ்முல்லையைச் சேர்ந்த 40 வயது நிறைந்த மந் திரவாதி ஒருவர் மொரகஹபல்லம் பகுதியில் உறவினர் வீடொன்றுக்கு வருகை தந்துள்ளார். இப்பிரதேச மக்களுக்கு நோய்நொடிகள் நீங்கி வாழவும் மிகக்கூ டிய விரைவில் சமூகத்தில் செல்வந்தராகவும் முடியுமென, தனது மந்திரச் செயற் பாட்டை வ…

  8. “பலத்த இசையால் பறிபோன உயிர்” மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியில் மணமகன் மாரடைப்பால் மரணம் இசை சத்தத்தைக் குறைக்க வேண்டும் என்று மணமகன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் யாரும் அவர் சொல்வதை கேட்கவில்லை. சீதாமர்ஹி பீகார் மாநிலம் இந்தர்வா கிராமத்தில் திருமண விழா நடந்து கொண்டிருந்தது. மணமகன் சுரேந்திர குமார் இவர் ரெயில்வேயின் குரூப் டி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மணமடையில் மணமகளுடன் அமர்ந்து இருந்தார். அங்கு கொண்டாட்டமான சூழல் நிலவி வந்த இளைஞர்கள் சத்தத்தைக அதிகமாக வைத்து இசையில் நடனமாடிக்கொண்டிருந்தனர் இசை சத்தத்தைக் குறைக்க வேண்டும் என்று மணமகன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்…

  9. அமெரிக்காவில் உள்ள பூனை ஒன்று மனிதனின் மரணத்தை கணித்து சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ரோட் தீவில் வசிக்கும் டேவிட் என்ற மருத்துவர், கடந்த 7 ஆண்டுகளாக பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் மரணத்தை முன்கூட்டியே அறிந்து சொல்லும் அபூர்வ சக்தியை கொண்டுள்ளதாக டாக்டர் டேவிட் கூறியுள்ளார். மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நோயாளிகளின் அறைகளுக்கு அந்த பூனை சுற்றுச் சுற்றிவிட்டு, நோயாளியின் அருகில் போய் நிற்கிறது. அந்த பூனை என்ற சில மணி நேரத்தில் அந்த நோயாளி மரணத்தைச் சந்தித்து விடுகின்றனர். மேலும் அந்த பூனையைப் பற்றி டேவிட், புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breif…

  10. ரெண்டு பக்கமும் வழிச்சு.. நடுவுல கீரிப்பிள்ளை மாதிரி.. இதுதாங்க இப்போ டோணி ஹேர்ஸ்டைல்! மும்பை: ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பாரோ இல்லையோ, முதல்ல ஹேர்ஸ்டைலை மாற்றி விட்டார் கேப்டன் டோணி. ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க கிளம்பி விட்ட கேப்டன் டோணி புது விதமான ஹேர் ஸ்டைலுடன் காட்சி தருகிறார். டிசம்பர் 9ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. முதலில் டோணி முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக பில் ஹியூக்ஸ் என்ற ஆஸ்திரேலிய வீரர் பவுன்சர் பந்து பட்டு மரணமடைந்ததால் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 9ம் தேதிக்குத் தள்ளிப் போய் விட்டது. ரெண்டு பக்கமும் வழிச்சு.. நடுவுல கீரிப்பிள்ளை மாதிரி.. இதுதாங்க இப்போ டோணி ஹ…

  11. டோணியுடனான என் காதல் கறையை போன்றது: ராய் லக்ஷ்மி சென்னை: கிரிக்கெட் வீரர் டோணியுடனான காதல் உறவு கறை அல்லது வடுவை போன்றது என நடிகை ராய் லக்ஷ்மி தெரிவித்துள்ளார். நடிகை ராய் லக்ஷ்மி ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் டோணியை காதலித்தார். அதன் பிறகு அவரவர் பாதையை பார்த்து சென்றுவிட்டனர். மக்களும் அதை பற்றி மறந்தே போய்விட்டனர். இந்நிலையில் இது குறித்து ராய் லக்ஷ்மி தற்போது பேசியுள்ளார். அவர் கூறுகையில், டோணி, ராய் லக்ஷ்மியை பத்தி தான் ஊரே பேசுதாமே! டோணியுடனான என் உறவு கறை மற்றும் வடுவை போன்று மறைய பல காலம் ஆகும் போன்று. அது பற்றி தற்போது பேசும் அளவுக்கு மக்களுக்கு தெம்பும், பொறுமையும் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் டிவி சேனல்கள் டோணியின் காதலிகள் பற்றி பேசுக…

  12. சென்னை: சென்னை நங்கநல்லூரில் நடுரோட்டில் மாட்டுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதில் உயிருக்குப் போராடிய மாட்டுக்கு மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து மாட்டையும், கன்றுக் குட்டியையும் டாக்டர்கள் காப்பாற்றினர். நங்கநல்லூரில் கடந்த 29ஆம் தேதி இரவு 9 மணி... போக்குவரத்து நெரிசல் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. ம்மா.... யம்மா... .. என்றொரு அபயகுரல் மட்டும் நான்காவது மெயின் தெருவிலிருந்து வந்த வண்ணம் இருந்தது. இதை யாரும் கண்டுகொள்ளாமல் மக்கள் தங்களது வீடுகளுக்கு அவசரமாக சென்று கொண்டு இருந்தனர். நடுரோட்டில் மாடு ஒன்று, கன்றுவை ஈன்றெடுக்க முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தது. அந்த மாட்டின் அபயக்குரல்தான் அது. மனிதருக்கே உதவி செய்ய முன்வராதவர்கள் எப்படி இ…

  13. 7/13/2011 7:20:07 PM அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தாயொருவர் உலகிலேயே எடைகூடிய குழந்தையை பிரசவித்துள்ளார். இக்குழந்தையின் நிறை 7.3 கிலோகிராம்களாகும். ஜெனட்ஜொன்ஸன் மற்றும் மிட்செல் பிரவுன் தம்பதிகளுக்கே இக்குழந்தை பிறந்துள்ளது. சிசேரியன் மூலமே இக்குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையைக் கண்ட வைத்தியர்கள் தாம் கண்டவற்றிலேயே மிகப்பெரிய குழந்தை இதுவென தெரிவித்துள்ளனர். குழந்தையின் தாயாருக்கு பிரசவத்தின் போது நீரிழிவு நோய் ஏற்பட்டதாகவும் இதுவே குழந்தைகள் அதிக நிறையுடன் பிறப்பதற்கான காரணமெனவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். கின்னஸ் உலக சாதனையின் படி உலகிலேயே அதிக நிறைகொண்ட குழந்தை 1879 ஆம் ஆண்டு ஒய்யோ மாநிலத்தில் தாயொரு…

  14. பிரித்தானிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் புள்ளி விபரத் தகவலின் படி பிரித்தானியாவில் போதைப்பொருள் மற்றும் கொள்ளைகள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்திருப்பதுடன் இதர குற்றங்களும் கடந்த ஆண்டு போலவே குறைவில்லாமல் இருக்கிறது. பிரித்தானியாவில் 24 மணி நேரமும் மதுப்பானச்சாலைகளை திறக்கலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டபின் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஒரு தரப்பு குற்றம் சாட்டுகின்ற போதும் பிபிசி போன்ற அரச தரப்பு ஊடகங்கள் அவற்றை பூசிமெழுகிக் கொண்டு இருக்கின்றன..! பிரித்தானியா குழந்தைகள் வளர உகந்த இடமாக இல்லை என்று ஐநா அறிக்கை வெளியிட்டது.. அதன் பின்னர் ஐரோப்பாவிலேயே குடும்பப்பிரிவினைகளால் வீதிக்கு வரும் பிள்ளைகளால் வன்முறை அதிகரித்திருப்பது பிரித்தானியாவில் தான் அ…

  15. நீங்கள் ஐந்து வருடங்களுக்குள் இறந்து விடுவீர்களா என்பதை ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதற்காக சுவீடன் விஞ்ஞானிகள் உருவாக்கிய வலைதளத்தில் ஆண்களுக்கு 11 கேள்விகளும், பெண்களுக்கு 13 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் நீங்கள் 5 வருடங்களில் இறப்பதற்கான வாய்ப்புகள் தெளிவாக தெரிந்துவிடும். புகை பிடிக்கும் பழக்கம், உடல்நலக்கோளாறு குறித்த வரலாறு, நீங்கள் நடக்கும் வேகம், நீங்கள் எத்தனை கார்களை வைத்துள்ளீர்கள் போன்ற கேள்விகள் அதில் இடம் பெற்றுள்ளன. எனினும் இதில் கலந்து கொள்ள உங்களுக்கு 40 வயது நிரம்பியிருக்கவேண்டும். ஸ்காட்லாந்து நாட்டில் இரு மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்ட 35 ஆயிரம் நோயாளிகளிடம் இந்த வலை…

    • 0 replies
    • 442 views
  16. பதினைந்து வயதே ஆன மகளை மணந்து, அவளை கர்ப்பிணியாக்கி விட்டார் கிராதக தந்தை! இப்படியும் இந்த கலி காலத்தில் நடக்கும் என்பதற்கு சான்று தான் இந்த சம்பவம். சூகடவுள் சொன்னதால் என் மகளை என் மனைவியாக ஏற்றுக்கொண்டேன்' என்று சூகூலாக' சொல்கிறார் தந்தையும் புதுக்கணவனுமான இந்த கொடூரன்! அசாம் மாநிலம், ஜல்பைகுரியை சேர்ந்தவர் அபசுதீன் அலி; வயது 35. ஆறு மாதம் முன், சூஇரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இவர்' என்று, கிராமத்தில் மக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டனர். அப்போது, அவர் உண்மையை மறைத்துவிட்டார்.ஆனால், சமீபத்தில் உண்மை வெளிவந்துவிட்டது. அவரது மகளுக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால், கருவுற்றிருந்தார். அதை கவனித்த கிராமத்தினர் விசாரித்தபோது தான், தந்தையே, மகளை திருமணம் செய்து கொண்டுள்ள…

  17. 60 வயது 'மிஸ்டர் பீன்' கொண்டாடிய 25வது பிறந்தநாள்! கலகலப்பான தோற்றம், பார்த்தாலே சிரிப்பு வரும் சைகைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கவரும் கதாபாத்திரம் தான் மிஸ்டர் பீன். கடந்த வெள்ளிக்கிழமையோடு மிஸ்டர் பீன் கதாப்பாத்திரம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை வித்தியாசமான முறையில் கொண்டாடினார் 60வது வயதான ரோவன் அட்கின்சன். 1994ம் ஆண்டில் ரோவன் அட்கின்சன் (Rowan Atkinson) நடித்த மிஸ்டர் பீனின் பகுதியில் இருந்து வரும் ஒரு காட்சியை நேரடியாக செய்து காட்டி அசத்தினார்.அதில் தனது கார் முழுவதும் பரிசு பொருட்களால் நிறைந்து விட அதனை சமாளிக்க காரின் மீது ஒரு நாற்காலியை வைத்து அதில் அமர்ந்து காரை இயக்குவார் பீன்.அதேபோல் 25வது வருடத்தை லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனையை பிர…

  18. புரட்சிகரமான தமிழ் உறவுகளே.இது தூங்குவதற்கான நேரமல்ல. ஒன்று திரண்டு உன் வரலாற்று கடமையை நிறைவேற்றும் நேரமிது. உனக்காக வீழ்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களது கனவுகளை நிறைவேற்றும் நேரமிது. உனது உடன் பிறந்த உனது உடம்பில் ஓடுகிற அதே தமிழ்ரத்தம் ஓடுகிற உனது சகோதரர்களை கூண்டோடு அழித்தவனை குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் நேரமிது. மறக்காகாதீர்கள். எம் அருமை உறவுகளே. வருகின்ற 05.03.2012 அன்று ஜெனீவா ஐநாப்பொதுமன்றத்தின் முன்றலிலே நெருப்புத்தமிழன் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலிலே நடைபெற இருக்கின்ற பேரணியில் உணர்வுள்ள அனைத்துத் தமிழனும் பங்குபற்றவேண்டும். ஏனென்றால் உலகத்தமிழர்களுக்கு இது மாபெரும் பேரணி மட்டுமல்ல. உலகத்தமிழனின் 60 ஆண்டுகாலப்போராட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லை …

  19. AI உடன் காதலில் விழுந்த சிறுவன் அதனுடன் வாழ உயிர்மாய்ப்பு ! Shana ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்றைய நவீன காலகட்டத்தில் பல நவீன தொழிநுட்ப கண்டுபிடிப்புக்களால் ஆதாயம் உள்ளபோதும், மனித உறவுகளை தூரத்தில் கொண்டு செல்வதுடன், இளையோரின் பல விபரீத முடிவுகளுக்கும் காரணமாகி விடுகின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர். சிலவேளைகளில் இந்த மோகத்தால் அவர்கள் விபரீத முடிவுகளுக்கும் சென்று விடுகின்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று புதின தொலைக…

      • Like
    • 1 reply
    • 1.1k views
  20. தாயார் போதையில் வாகனம் செலுத்துவதாக வேனின் பின் ஆசனத்திலிருந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்த 9 வயது சிறுவன் கனடாவைச் சேர்ந்த 9 வயதான சிறுவனொருவன், தனது தாயார் மதுபோதையில் வாகனம் செலுத்துவதாக பொலிஸாருக்கு அக்காரின் பின் ஆசனத்திலிருந்த நிலையில் தகவல் கொடுத்துள்ளான். கடந்த புதன்கிழமை இச்சம்பவம் நடைபெற்றதாக கனடாவின் யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சிறுவன் தனது தாயாருடன் வேன் ஒன்றில் பயணம் செய்தபோது, பின் ஆசனத்திலிருந்தவாறு தனது செல்லிடத் தொலைபேசி மூலம் 911 எனும் கனேடிய அவசரசேவை இலக்கத்தின் மூலம் பொலிஸாரை அழைத்தான். இச்சிறுவன் அச்சத்துடன் உரையாடியபோதிலும் தனது…

  21. உணவகத்தில் பிரித்தானிய அரச தம்பதியினருக்கு அனுமதி மறுப்பு! கனடாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரித்தானிய அரச குடும்பத்திற்கு உணவகம் ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பத்தை கனடா பிரதமரே வரவேற்றுள்ள நிலையில், உணவகம் ஒன்று அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. வன்கூவரிலுள்ள Deep Cove Chalet என்ற உணவகத்தைக் கண்ட ஹரியின் பாதுகாவலர்கள், அந்த உணவகம் ஹரி குடும்பம் உணவு உண்ண பாதுகாப்பானதாக இருக்கும் என எண்ணி அங்கு முன் பதிவு செய்வதற்காக சென்றுள்ளனர். குறித்த உணவகத்தை நடத்தி வரும் Pierre மற்றும் Bev Koffel ஆகியோர் ஹரி குடும்பத்தின் வேண்டுகோளை நிராகரித்துள்ளனர். தங்கள் உணவகம் அமைந்திருக்கும் Horth Hill என்னும்…

  22. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஜான்சன், தான் வளர்த்து வந்த ராட்வீலர் இனத்தைச் சேர்ந்த கிரிப்பின்ஸ் என்ற நாய்க்கு 2017 டிசம்பரில் ஒரு கட்டி இருப்பதைக் கவனித்தார். மருந்து, மாத்திரையால் சரியாகக்கூடிய சாதாரண கட்டிதான் அது என்று நினைத்தார். ஆனால் மருத்துவர்கள், அது சாதாரண கட்டி அல்ல, டிசெல் லிம்போமா (T cell lymphoma) என்ற புற்றுநோய்க் கட்டி என்றும், இன்னும் மூன்று மாத காலமே கிரிப்பின்ஸ் வாழும் என்றும் தெரிவித்தனர். கிரிப்பின்ஸுக்கு இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்க முடிவெடுத்தார் ஆடம். அப்படி அதை நீக்கிவிட்டு, அறுவை சிகிச்சையின்போது போட்ட தையலை பிரிக்கச் சென்றபோது, அங்கு மேலும் மூன்று கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டிகள் வேகமாக வளர்ந்திருந்தன. அவற்றைச் …

    • 1 reply
    • 485 views
  23. வவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம் – விலையுயர்ந்த நாய்கள் திருட்டு வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வாள்களுடன் சென்ற நபர்கள், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன், நாய்குட்டிகளையும் கடத்திச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிற்குள் சென்ற இனந்தொரியாதோர், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியதுடன், வீட்டின் கதவு மற்றும் யன்னல்களையும் உடைத்து, வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலையுயர்ந்த நாய்குட்டிகளையும் களவாடி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை முன…

  24. கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட அரியவகை வெள்ளை நாவல் இனம் கிளிநொச்சியில் அரியவகை வெள்ளை நாவல் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கண்டாவளை- உழவனூர் கிராமத்தில், தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்பட்டுள்ளது. உழவனூர் கிராமத்தில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம் என்பவரின் காணியில் குறித்த வெள்ளை இன நாவல் மரம் இனம் காணப்பட்டுள்ளது. குறித்த நாவல் மரத்தின் பழங்கள் வித்தியாசமாக இருப்பதனை அவதானித்த அவர், அதனை பிடுங்கி உண்டபோது அவை நன்கு பழுத்த நாவல் பழங்களாக காணப்பட்டுள்ளன. நாவல் மரம் அதன் தோற்றம் என்பன வழமையான நாவல் மரம் போன்றே காணப்படுகின்றது. காய்களும் வழமையான நாவல் காய்கள் போன்றே உள்ளன. ஆனால் பழம் மாத்திரம் வெள்ளை நிறமாக நெ…

  25. காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ராஜ்கோட்டி. மனைவி இல்லை ஒரே மகள். நிலம் புலம் வீடு வாசல் என்று பெரும் பணக்காரர் சொல்லிக் கொள்ள சொந்த பந்தம் என்று பெரிதாக யாரும் இல்லை. இருக்கும் சொந்தக்காரர்களும் வந்து கவனிப்பதில்லை. மகளை முடிந்த அளவு படிக்க வைத்தார். படிப்பு ஏறவில்லை என்றதும் நிலம், மாடுகளை கவனித்து கொண்டு கூடவே இருக்க சொல்லி விட்டார்..! அன்று இரவு மழை. நடுஇரவு திருடுவதற்காக வந்தான் ஜாபர். உள்ளே நுழைந்தவனுக்கு அதிர்ச்சி ராஜ்கோட்டி நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டிருக்க மகளும் வேறு அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். திருட வந்த ஜாபருக்கு அதிர்ச்சி. ஓடிப்போய் லைட்டை தேடி பிடித்து அவருக்கு தண்ணீர் கொடுத்து நெஞ்சை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான். யாரும் இல்லையா என்று கத்த சத்தம் …

    • 2 replies
    • 555 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.