செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7089 topics in this forum
-
[size=4]இங்கிலாந்து மக்கள் விரும்பி புகைக்கும் சிகரெட்களில் மனித மலம், இறந்த பூச்சிகள், புழுதி மண் போன்றவை கலக்கப்பட்டிருக்கும் பகீர் தகவல் சோதனையில் தெரியவந்துள்ளது. இதுபோல தரக்குறைவான, ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிக்கும் போலி சிகரெட்கள் சீனாவில் தயாராகி முறைகேடான வகையில் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதும் அம்பலமானது.[/size] [size=4]இங்கிலாந்தில் போலி சிகரெட் புழக்கம் பற்றி அறிய பர்மிங்காம் நகரில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த எம்.எஸ். இன்டலிஜென்ஸ் நிறுவனம் சமீபத்தில் சர்வே நடத்தியது. இதில் 30.9 சதவீத சிகரெட்கள் போலி மற்றும் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக எடுத்து வரப்படுகின்றன என தெரியவந்தது. கடந்த ஆண்டில் இது 14.1 சதவீதம் மட்டுமே இருந்தது. ஒரே ஆண்டில் இரட்டிப்பாக உ…
-
- 5 replies
- 786 views
-
-
அமெரிக்காவில் தனக்கு சொந்தமாக லம்போர்கினி கார் வாங்குவதற்காக வெறும் 3 டாலருடன் 5 வயது சிறுவன் நெடுஞ்சாலையில் கார் ஓட்டிச் சென்று போலீசாரை மிரள வைத்துள்ளான். பரபரப்பான உட்டா நெடுஞ்சாலையில், மெதுவாக சென்று கொண்டிருந்ததை காரை சந்தேகத்தின்பேரில் போலீஸ் ஒருவர் நிறுத்தி, அருகில் சென்று பார்த்தபோது காரை 5 வயது சிறுவன் ஓட்டி வந்ததையறிந்து அதிர்ச்சியடைந்தார். மேற்கொண்டு விசாரித்ததில், தனக்கு லம்போர்கினி கார் வாங்கி தரச் சொல்லி தன் தாயிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்துடன் தனது பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான். 3 டாலர்களுடன் கலிபோர்னியாவுக்கு சென்று லம்போர்கினி கார் வாங்க சிறுவன்…
-
- 5 replies
- 660 views
-
-
2013ம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தலமாக இலங்கை காணப்படுவதாகப் பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனம் தெரிவு செய்துள்ளது. இலங்கையில் இயற்கை அழகுகள் மிகுந்த இடங்கள், வரலாற்றுத் தலங்கள் மற்றும் விருந்தோம்பலுக்கு ஏற்ற விதமான இடங்கள் போன்றவற்றைக் கருத்திற்கொண்டே இலங்கைக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த முடிவு தமிழ் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இனப்படுகொலை நடந்த மண்ணை சிறந்த சுற்றுலாத் தலமாக ‘பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனம்’ எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கவும் ஏற்பாடு செய்துவர…
-
- 2 replies
- 393 views
-
-
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலிருந்து விலக ரணில் தீர்மானமா? August 9, 2020 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிர மசி ங்க கட்சியின் தலைமையிலிருந்து நீக்க முடிவு செய் துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் வலுவான தோல்வி மற்றும் கட்சியின் மூத்தவர்களால் மேற்கொள்ளும் அழுத்தம் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அண்மையில் கட்சி மூத்தவர்களுடனான சந்திப்பின் போது, ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவர் பத வியை இராஜினாமா செய்யத் தயாராக இருப் பதாக்கத் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை ரணில் தலைமைத்து வத்தில் இருக்க ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பி…
-
- 0 replies
- 341 views
-
-
69 மில்லியன் வருடங்கள் பழமையான டைனோசரின் எலும்புக்கூட்டை கண்டுபிடித்த 12வயது சிறுவன்! 69 மில்லியன் வருடங்கள் பழமையான டைனோசரின் எலும்புக்கூட்டை நாதன் ருஷ்கின் என்ற கனேடிய சிறுவன் கண்டுபிடித்துள்ளான். விலங்குகளின் புதைபடிமங்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட அந்த சிறுவன் இம்மாதிரியான புதை படிவங்கள் நிறைந்த கனடாவின் அல்பெர்டா பகுதியில் தனது தந்தையுடன் மலையேற்றத்திற்கு சென்றபோது, இந்த டைனோசரின் எலும்புக்கூட்டை கண்டுபிடித்தான். டைனோசர்கள் மீது ஆறு வயதிலிருந்து ஆர்வம் கொண்டுள்ள நாதன், கனடாவின் பாதுகாக்கப்பட்ட இடமான அல்பெர்டான் பேட்லாந்த்ஸுக்கு அடிக்கடி தனது தந்தையுடன் மலையேற்றம் செல்வதுண்டு. ஒரு வருடத்துக்கு முன்பு அவர்கள் அந்த இடத்திற்குச் சென்றபோது, சிறு சிறு ப…
-
- 0 replies
- 383 views
-
-
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த யுவதியின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடர்கள் யுவதியின் சாதுரியத்தால் கைத் தொலைபேசியைக் கைவிட்டு ஓடித்தப்பிய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குப்பிளான் தென்றுமயானத்திற்கு அருகில் இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது ; இப்பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மயூரி என்ற யுவதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவர் முன் வந்த கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த 25 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கலியை அறுக்க முற்பட்ட போது கைகலப்பு ஏற்பட்டது. ஆனாலும் கொள்ளையர்கள் சங்கிலியின் பெரும் பகுதியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். யுவதியின் துணிகரமான முயற்சியினால் கொள்ளையர்களில் ஒருவரது கைத்…
-
- 0 replies
- 421 views
-
-
இந்தோனேஷியாவின் டொமோஹோன் நகரிலுள்ள லோக்கோன் எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது. அதனால்,எரிமலையை சுற்றியுள்ள மக்கள் வெளியேறும்படி அந்நாட்டின் தேசிய மற்றும் உள்ளூர் பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது. ஆயிரத்து 689 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை முதல் சாம்பலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சுமார் 2 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு தீ பிழம்பை வெளியேற்றியது. எரிமலை சீற்றத்தால் சுற்றியுள்ள மூன்று கிராமங்களில் அதன் சாம்பல் படிந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் உடனடியாக வெளியேறும் படி எச்சரிக்கட்டுள்ளனர். எரிமலையின் நிலையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அருகிலுள்ள கிராமங்களின் பாதுகாப்பு பற்றி ஆராய்ந்த…
-
- 0 replies
- 372 views
-
-
கா.பொ.த.சாதாரண பரீட்சை எழுதும் ‘சுனாமி பேபி’ 22 Views கொரனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. இன்றைய தினம் மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியதை காணமுடிந்தது. உலகத்தினையே தன்பால் ஈர்த்த சுனாமி பேபி எனப்படும் சுனாமியின்போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாசும் இன்று கா.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றினார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் தற்போது வசித்துவரும் சுனாமி பேபி அபிலாஸ் இன்று செட்டிபாளையம் மகா வித்தியாலத்தில் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்ச…
-
- 0 replies
- 310 views
-
-
இன்று பத்திரிகையில் ஒரு வினோதச் செய்தி படித்தேன். 2009 ஆம் ஆண்டு நோர்வேயில் வசிக்கின்ற ஒரு மாணவன் 150 NKR செலுத்தி 5000 Bitcoin எனப்படும் இணையத்தள பணத்தை வாங்கினார். அதன் பின்னர் அதைபற்றி அவர் மறந்தே போய்விட்டார். பின்னர் 2013ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஊடகங்களில் இதுபற்றி செய்திகள் வாசித்தபோது தான் அவரிற்கு நினைவுககு வந்துள்ளது. அவரின் இணையத்தள கணக்கை பார்வையிட சென்றவர்க்கு ஒரு பேரதிச்சி. 2009ஆம் ஆண்டு 150 NKR முதலீடு செய்தவருக்கு 4 ஆண்டுகள் சென்ற பின்னர் கிடைத்திருக்கும் தொகை 5மில்லியன் NKR! அதனை வைத்து அவர் ஒரு வீடே வாங்கிவிட்டார். இன்று ஒரு Bitcoinசின் விலை 146 Euro!!! இவர் தான் அந்த அதிஸ்ரசாலி: உங்களில் யாருக்காவது இதில் முதலீடு செய்…
-
- 6 replies
- 1k views
-
-
நேர்த்திக்கடனில் நபரின் தலை துண்டிப்பு சித்தூர் நேர்த்திக் கடனில், ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த நபரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி அருகேயுள்ள வலசப்பள்ளியில் சங்கராந்தி விழாவின் ஒரு பகுதியாக ஊர் எல்லையில் உள்ள எல்லாம்மா கோவிலுக்கு நேர்த்திக்கடன் இருந்து ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம மக்கள் அனைவரும் எல்லம்மா கோவிலுக்கு இரவில் ஆடு, கோழிகளை பலிகொடுத்தனர். அப்போது வெட்டுவதற்கான ஆடு ஒன்றை 35 வயது இளைஞரான சுரேஷ் பிடித்துக் கொண்டிருந்தார். ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சலபதி என்பவர் நன்றாக மது அருந்தி முழு போ…
-
- 2 replies
- 518 views
-
-
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரியான மும்பர் அல் கடாபி சிறுமிகளை கற்பழித்து அவர்களை தனது செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்தார் என்று பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி. -4 தொலைக்காட்சி புதிய ஆவணபடத்தை வெளியிட்டுள்ளது. வடக்கு ஆப்ரிக்கா நாடான லிபியாவில் 42 ஆண்டுகளாக ஆட்சி செய்த சர்வாதிகாரி கடாபி கடந்த 2011ம் ஆண்டு கிளர்ச்சி படையினரால் கொல்லப்பட்டார். கடாபி ஆட்சியின்போது நூற்றுக்கணக்கான சிறுமிகளை கற்பழித்து அவர்களை தனது செக்ஸ்க்காக பயன்படுத்தி தொந்தரவு செய்துள்ளார் என்று புதிய தகவலை நியூ பி.பி.சி. 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. கடாபி இறந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. டெய்லி மெயில் தகவலின் படி, கடாபியின் உத்தரவின்படியே பள்ளி மற்றும் க…
-
- 3 replies
- 765 views
-
-
உக்ரைனில் இருந்து ‘சிம்பா’ சிங்கம் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டது கம் சினி செய்திகள் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரால் அந்நாட்டின் அனைத்து நகரங்களும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்க பாதை, பதுங்கு குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். போரால் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளை பராமரிக்க முடியாத காரணத்தால் அவைகள் தவித்து வருகின்றன. விலங்குகளுக்கு போதுமான உணவுகள் கிடைக்கவில்லை. தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஜிபோரிஜியாவில் மிருகக்காட்சி சாலையில் சிம்பா என்ற சிங்கம் பராமரிக்கப்பட்டது. போர் காரணமாக சி…
-
- 0 replies
- 309 views
-
-
4-12-05 12:47:51 அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 12 இறாத்தல் (5.44 கிலோகிராம்) எடையுள்ள சிங்கி இறால் ஒன்றை பிடித்துள்ளார். பொரெஸ்ட் கலண்ட்டே எனும் இந்த இளைஞர் கலிபோர்னியா மாநில கரையோரத்தில் இந்த சிங்கி இறாலை பிடித்தாக தெரிவித்துள்ளார். இந்த சிங்கி இறால் சுமார் 70 வருட வயதுடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உயிரியலாளரான பொரெஸ்ட் கலண்டே இது குறித்து கூறுகையில், கடந்த பல 10 வருடங்களாக இத்தகைய சிங்கி இறால்களை பிடித்துள்ளேன். ஆனால் இந்தளவு பெரிய சிங்கி இறாலை ஒருபோதும் கண்டதில்லை" எனத் தெரிவித்துள்ளார். இப் பாரிய சிங்கி இறாலை பிடித்தவுடன் அதை சமைத்து உண்பதா வேண்டாமா என யோசனை ஏற்பட்டது. இது குறித்து த…
-
- 8 replies
- 1.1k views
-
-
யாழில் தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தாலி செய்தவர் தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருமணத்திற்கு தாலி செய்து தருவதற்காக குறித்த நபரிடம் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மணமகன் வீட்டார் வழங்கியுள்ளனர்.இவ்வாறு நகை செய்வதற்காக அவற்றின் பெறுமதி 12 இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. நகை மற்றும் பணத்தினை பெற்றுக்கொண்டவர் திருமணத்திற்கு முதல் நாள் தாலியை தருவதாக உறுதி அளித்துள்ளார். அதன் அடிப்படையில், திருமணத்திற்கு முதல் நாள் தாலியை வாங்க சென்ற போது , அவரது கடை மூடப்பட்டு இருந்ததுதிகைத்த மாப்பிளைவிட்டார் அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த போது , தொலைபேசியும் துண்டிக்கப்பட…
-
- 6 replies
- 730 views
-
-
கிழக்கு சைபீரியாவில் வடக்கின் வெளிச்சம் என்னும் அழகிய காட்சி கண்ணைக் கவரும் அழகிய புகைப்படங்கள்.நார்த்தர்ன் லைட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ஒளி அமைப்பு, விண்வெளியிலிருந்து வெளிப்படும் சில உடைந்த வால் நட்சத்திரங்கள் மற்றும் விண் கற்களின் துகள்களால் ஏற்படும் வெளிச்சத்தால் உருவாகிறது. - See more at: http://www.canadamirror.com/canada/36829.html#sthash.bzTr27Nz.dpuf
-
- 1 reply
- 724 views
-
-
அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் 29 வயதான கேத்தி பீட்ஸ். இவர் ஸ்டார்கர்ட் என்றழைக்கப்படும் மரபணுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதால் இவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் கர்ப்பமான இவர் எல்லா பெண்களையும் போலவே தனக்கு பிறக்கப் போகும் குழந்தை எப்படி இருக்கும் என்ற கற்பனையில் மிதந்து வந்தார். ஆனால், பிரசவ தேதி நெருங்கும் போது பெரும் துயரம் அவரை ஆட்கொண்டது. காரணம் மற்ற பெண்களால், பிரசவம் முடிந்து தன் குழந்தையை பார்க்க முடியும், பார்வையற்ற தன்னால் தன் குழந்தையை எப்படிப் பார்க்க முடியும் என்று கேத்தி ஏங்கினார். இப்படி ஏங்கிய கேத்திக்கு சிறப்புக் கண்ணாடி மூலம் தன் குழந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக குழந்தையைப் …
-
- 0 replies
- 335 views
-
-
பார்வைக் குறைபாடுடைய பொலிஸாருக்கு நற்செய்தி! யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் பார்வை குறைபாடுடைய பொலிஸாருக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் காலை 9மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. லயன்ஸ் கிளப்பின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் 400 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கண்ணாடி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1356940
-
- 0 replies
- 156 views
-
-
அண்டார்டிகாவில் ஓடும் ரத்த அருவி..தீராத மர்மம்! (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015, 10:24.11 மு.ப GMT ] பனிப்பாறைகளால் முற்றிலும் சூழப்பட்ட பூமியின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்ட்டிகாவில் ரத்த அருவி ஒன்று பல்லாண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. 1911ம் ஆண்டு அவுஸ்திரேலியாவை சேர்ந்த Griffith Taylor என்ற புவியியலாளர் பூமியின் தென் பகுதியில் அமைந்துள்ள அண்டார்ட்டிகாவில் ஒரு வினோத நிகழ்வினை கண்டு ஆச்சர்யமடைந்துள்ளார். அங்கு ஒரு குறிப்பிட்ட பனிப்பாறையில் இருந்து ரத்த சிவப்பு நிறத்தில் நீர் அருவியாக வெளியேறி கொண்டிருந்தது. தற்போது Taylor பனிப்பாறை என்றழைக்கப்படும் அந்த மிக உயர்ந்த பனிபாறையில் இருந்து ரத்தம் போன்ற நீர் பல ஆண்டுகளாக அருவி…
-
- 0 replies
- 1.5k views
-
-
கஞ்சாக்கடத்தல்காரர்கள் விடுதலை விவகாரம்; யார் அந்த கூட்டமைப்பு பிரமுகர்?… பின்னணியில் நடந்தது என்ன?- முழுமையான விபரங்கள்! January 6, 2019 கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் கைதானவர்களை விடுவிக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மிக முக்கியமான ஒருவர் உத்தரவிட்டார் என சண்டே ரைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவலை காலையில் தமிழ்பக்கத்தில் வெளியிட்டோம். இந்த விவகாரத்தின் பின்னணி என்னவென்று தமிழ்பக்கமும் ஆராய்ந்தது. இதன்போது மேலதிகமாக சில தகவல்களை பெற்றுக்கொண்டோம். அதை வாசகர்களிற்காக தருகிறோம். முதலில், பொலிசாருக்கு உத்தரவிட்ட கூட்டமைப்பின் பிரமுகர் யார் என்ற கேள்வி வாசகர்களிற்கு இருக்கும். அவரை நாமும் வெளிப்படையாக அடையாளப்படுத்தவில்லை. காரணம், இது தற்செயலாக நடந்த ஒ…
-
- 0 replies
- 746 views
-
-
காதலர்களை வாடகைக்கு வழங்கும் வர்த்தகம்: - ஜப்பானில் களைகட்டுகிறது! [Monday 2015-06-01 06:00] ஜப்பானில் பெண்களுக்கு காதலர்களை வாடகைக்கு வழங்கும் வர்த்தகம் களை கட்டியுள்ளது. அங்கு பல்வேறு நிறுவனங்கள் இத்தகைய சேவையை வழங்கி வருகின்றன. காதலர் இல்லாத பெண்கள், சமூக நிகழ்வுகளிலும் ஏனைய வைபவங்களிலும் தம்முடன் அழைத்துச்செல்வதற்கு இளைஞர்களை வாடகைக்கு பெறுகின்றனராம். அந்த இளைஞர்களின் அழகு, சேவைக்கு ஏற்ப அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பிரெஸ், ரெகுலர், ஸ்பெஷல் என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு ஒரு மணித்தியாலத்துக்கு முறையே சுமார் 5,000, 6,000, …
-
- 1 reply
- 394 views
-
-
திங்கள் 03-09-2007 01:42 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] "புலிகளின் பொறுமைக்குப் பின்னால்..!" வழமை போலவே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயும் அதனை மீளுரைத்துள்ளார். கிழக்கிற்கு செல்வதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் அனுமதி தேவைப்பட்டது. இப்போது அது தேவையற்றதாகி விட்டது. அதுபோல் வடக்கில் வன்னியையும் விரைவில் கைப்பற்றி அங்கும் நாம் அங்கு சுதந்திரமாக சென்று வருவோம் என பெர்ணான்டோபுள்ளே கூறியிருக்கிறார். கோத்தபாய அநுராதபுரத்தில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்த இன்னொரு விடயத்தை நாம் அவதானிக்க வேண்டும். படையினரின் கவனத்தை திசைதிருப்பி நிலையற்ற தன்மையை எற்படுத்த விடுதலைப் புலிகள் முயற்சிப்பதாகவும், கிழக்கை மீண்டும் விடுதலைப் புலிகள் கைப்பற்ற இடமளிக்கப்போவதில்லை எனவும்…
-
- 0 replies
- 804 views
-
-
ஜெர்மனியில் விவாகரத்து அதிகரித்து வருகிறது. இதை குறைக்கும் நடவடிக்கைகள் பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை அந்த நாட்டு எம்.பி.க்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த கருத்துக் களில் சிலவற்றை பரிசீலித்து அரசு புதிய சட்டம் கொண்டு வர இருக்கிறது. கேபரிலிபால் என்ற எம்.பி. அரசுக்கு தெரிந்த யோசனை யில் திருமணங்கள் பதிவு செய்யப்படும் போது அவை 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்று கால நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்த கால கட்டத்துக்கு முன் விவாவகரத்துக்கு அனுமதி வழங்ககூடாது. 7 ஆண்டுகள் கடந்ததும் தம்பதிகள் திருமணத்தை மேலும் 7 ஆண்டுகளுக்கு நீடிக்க விரும்பினால் அதை நீடிக்கலாம். இதற்காக திருமண பதிவை புதுப்பித்து…
-
- 21 replies
- 3.4k views
-
-
ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! லண்டன்: ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ தேவாலயத்தை சுற்றிப்பார்த்த சீன சுற்றுலாப் பயணிகள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவில் தேவாலயக் கண்ணாடியில் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆவி உருவம் தெரிவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த சிலர் ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கிளாஸ்கோவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் தேவாலயத்தை வீடியோ எடுத்தனர். பின்னர் வீடியோவைப் போட்டுப் பார்த்தபோது அதில் தேவாலயக் கண்ணாடி ஒன்றில் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆவி உருவம் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். உடனே அந்த வீடியோவை ஆவிகள் குறித்து ஆய்வு செய்யும் எழுத்தா…
-
- 4 replies
- 2.9k views
-
-
பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன்னிற்கு ஆண் பாதுகாவலர்களை நியமித்தால் அவர்களுடன் இளவரசிக்கு ரகசிய தொடர்பு ஏற்படுவதை தவிர்க்கவே பெண் பாதுகாவலர்களை மட்டும் நியமித்துள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய அரச குடும்பத்திற்கு பாதுகாப்பு அளித்து வரும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் பிரிவை சேர்ந்த ஒரு அதிகாரி Express என்ற ஊடகத்திற்கு ரகசிய தகவல் ஒன்றை அளித்துள்ளார். அதில், இளவரசர் வில்லியமிற்கும் இளவரசி கேட் மிடில்டன்னிற்கும் திருமணம் நிச்சயம் ஆன நாள் முதல் இளவரசியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் வில்லியமின் தந்தையான இளவரசர் சார்லஸ் தான் முடிவெடுத்து வருகிறார். இருவருக்கும் 2010ம் ஆண்டு திருமணம் நிச்சயம் ஆன பின்னர், கேட் மிடில்டன்னின் தலைமை பாதுகாவலராக 43 வயதான Emma Pro…
-
- 2 replies
- 348 views
-
-
சிறைக்கூடத்தில் தேனிலவு சிறைக்கைதியொருவர் சிறைச்சாலையில் வைத்து ஆடம்பர திருமணம் செய்ததுடன் அந்த சிறைச்சாலை சிறைக்கூடத்திலேயே தேனிலவைக் கொண்டாடிய விசித்திர சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான தகவல்களை அந்நாட்டிலிருந்து வெளிவரும் சடா அல் பலாட் பத்திரிகை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கிழக்கு சவூதி அரேபியாவில் டம்மாம் நகரிலுள்ள சிறைச்சாலையில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பெயர் வெளியிடப்படாத நபரே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். …
-
- 1 reply
- 1.1k views
-