Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. யாழில் தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தாலி செய்தவர் தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருமணத்திற்கு தாலி செய்து தருவதற்காக குறித்த நபரிடம் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மணமகன் வீட்டார் வழங்கியுள்ளனர்.இவ்வாறு நகை செய்வதற்காக அவற்றின் பெறுமதி 12 இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. நகை மற்றும் பணத்தினை பெற்றுக்கொண்டவர் திருமணத்திற்கு முதல் நாள் தாலியை தருவதாக உறுதி அளித்துள்ளார். அதன் அடிப்படையில், திருமணத்திற்கு முதல் நாள் தாலியை வாங்க சென்ற போது , அவரது கடை மூடப்பட்டு இருந்ததுதிகைத்த மாப்பிளைவிட்டார் அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த போது , தொலைபேசியும் துண்டிக்கப்பட…

  2. இன்று நண்பர் ஒருவரிடமிருந்து குறுந்தகவலுடன் காணொளி இணைப்பும் இருந்தது. ஆரம்பத்தில் ஏமாற்று போல இருந்தாலும் போகபோக மிகவும் குழப்பமாக இருந்தது. உண்மையாக இருக்குமா?நம்பலாமா? பலரும் சொல்கிறார்களே என்று ஒரே குளப்பமாக இருக்கிறது. யாழில் இந்த வைத்தியர் என்று சொல்லப்படுபவர் இருப்பதால் @ஏராளன் தான் இதை உறுதிப்படுத்த வேண்டும்.

  3. யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்! அனுமதிக்கு மேலதிகமாக பலரும் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம்(திங்கட்கிழமை) தனிமைப்படுத்தப்பட்டனர். இன்றைய தினம் குருநகர் பகுதியில் யாழ்.பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் 15 பேருக்கும் அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை உறுதிப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தினர். நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்ட…

  4. பெங்களுரை சேர்த்த தமிழ் பெண் சிந்துஜா தனது பெற்றோருக்கு போட்டியாக மாப்பிள்ளை தேடி விளம்பரம் போட்டுள்ளார். சிந்துஜா: நான் ஒரு முட்டைபிரியர் ஆனல் சாப்பாட்டு ராமன் கிடையாது. பிடிச்ச விளையாட்டு பேட்மிண்டன் பொழுதுபோக்கு: பாட்டு பாடுவது டான்ஸ் ஆடுவது. கண்ணாடி போடுவேன். அதில் பார்த்தால் சுத்த கர்நாடகமாக தெரிவேன். காசு செலவழிக்கிற விஷயத்தில் ஊதாரியும் கிடையாது, கசவஞ்சியும் கிடையாது. மசாலா, நாடகம் சுத்தமா பிடிக்காது. வாசிப்பு பழக்கம் கிடையாது. நட்புடன் பழகுவேன் ஆனால் நண்பர்கள் இரண்டாம் பட்சம்தான். மென்மையான பெண் எல்லாம் கிடையாது. தலை முடி நீளமாக வளர்க்க மாட்டேன். மொத்தத்தில் கல்யாண வாழ்க்கைக்கு உகந்த சமாச்சாரம் இல்ல. அர்ப்பணிப்பான நீண்டகால வாழ்வுக்கு என் முழு உத்தரவாதம். எப்பட…

    • 8 replies
    • 872 views
  5. யாழில் நடமாடிய... போலி, பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு... விளக்கமறியல்! பொலிஸார் எனத் தெரிவித்து பயணத் தடை உத்தரவை மீறி வீதிகளில் நடமாடிய இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். அவர்களில் ஒருவர் பொலிஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்று மன்றில் அறிக்கையிடப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரில் பயணத் தடையை மீறி நடமாடிய ஒருவரை பொலிஸார் வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். அவர் தான் பொலிஸ் உத்தியோகத்தர் எனத் தெரிவித்ததுடன் பொலிஸ் அடையாள அட்டையின் நிழல் பிரதியையும் பொலிஸாருக்கு காண்பித்துள்ளார். வீதித் தடை கடமையிலிருந்த பொலிஸார் சந்தேகம் கொண்டு அவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போ…

  6. யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் மனைவி மீது கணவன் கத்தியால் வெட்டிப்படுகாயப்படுத்திய சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. நெல்லியடி பொலிஸ் பிரிவில் தனது மனைவியை நடுவீதியில்விரட்டி விரட்டி வெட்டிய கொடூர கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மனைவியை நடுவீதியில் விழுத்தி சரமாரியாக வெட்ட ஆரம்பிக்க, வீதியில் சென்ற பொதுமக்கள் துரிதமாக செயற்பட்டதால் குடும்பப் பெண் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று (12) மதியம் இந்த கொடூர சம்பவம் நடந்தது. நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தொனி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. படுகாயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடூரன் தலைமறைவாகி விட்டான். 38 வயதான பாதிக்க…

    • 0 replies
    • 588 views
  7. யாழில் நட்சத்திர ஆமை மீட்பு July 19, 2022 யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நட்சத்திர ஆமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆமை அரிய இனம் என்றும் , அதனை பாதுகாப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் ஊர் வாசிகள் தெரிவித்தனர் https://globaltamilnews.net/2022/178601

  8. யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 …

  9. யாழில் நாய் இறைச்சி கொத்து. யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாட்டிறைச்சி கொத்து வாங்கிய நபர் ஒருவருக்கு கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி துண்டு காணப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இறைச்சி துண்டு , மாட்டிறைச்சி போல் அல்லாது வேறு இறைச்சி போன்று காணப்பட்டதால் , அது குறித்து உணவகத்தில் இருந்தவாறே அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு குறித்த நபர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார். இருந்த போதிலும் , பொது சுகாதார பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வராத க…

  10. யாழில் நாய்களை விழுங்கிய முதலை மடக்கிப் பிடிப்பு! By DIGITAL DESK 2 15 DEC, 2022 | 03:29 PM இரண்டு நாய்களை உயிருடன் விழுங்கிய 8 அடி நீளமான முதலையை யாழ்ப்பாணம் சாவகச்சேரி மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். சாவகச்சேரி சிவன் கோவிலடியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றினுள் புதன்கிழமை (டிச.14) இரவு உட்புகுந்த சுமார் 8 அடி நீளமான முதலை, அங்கிருந்த இரண்டு நாய்களை விழுங்கி விட்டு அசையமுடியாத நிலையில் அங்கேயே உறங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/143197

  11. எம்.றொசாந்த் மூன்று மாத நாய்க்குட்டியின் நகக் கீறல் காரணமாக, பண்டத்தரிப்பு, தம்பித்துரை வீதியைச் சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா (வயது 48) எனும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். மேற்படி குடும்பஸ்தரின் வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று மாத காலம் நிரம்பிய நாய்க்குட்டி ஒன்று அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகத்தால் கீறியுள்ளது. இவ்வாறு நகத்தால் கீறி, இரண்டு நாள்களின் பின்னர் அந்நாய்க்குட்டி உயிரிழந்துள்ளது. இந்நிலையில், நாய்க்குட்டி நகத்தால் கீறியதற்கு உரிய முறையில் சிகிச்சை பெறத் தவறியிருந்த குடும்பஸ்தர், நீர் வெறுப்பு நோய் அறிகுறிகளுடன் உடல் நலக் குறைவுக்கு உள்ளாகியுள்ளார். அதை அடுத்து அவரை, சங்கானை வைத்திய சாலையில் குடும்பத்தினர் அனுமதித்த ந…

  12. நிறைமாத பசுமாடு ஒன்றினை இனம் தெரியாத நபர்கள் கடத்தி கொலை செய்து இறைச்சி ஆக்கியுள்ளனர். வேலணை 7ஆம் வட்டார பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று வளர்த்து வந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான கறவை பசு மாட்டினை இனம் தெரியாதவர்கள் கடத்தி சென்று இறைச்சியாக்கியுள்ளனர். குறித்த பசுமாடு 20 நாள்களுக்குள் கன்று ஈனுவதற்கு இருந்தாக அதனை வளர்த்தவர்கள் தெரிவித்தனர். அத்துடன் அது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தீவக பகுதிகளில் இனம் தெரியாதவர்கள் வளர்ப்பு மாடுகளை கடத்தி இறைச்சியாக்கி யாழ்ப்பாணத்திற்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். அதனை கட்டுப்படுத்…

  13. யாழில் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதி! யாழ் சாவகச்சேரியில், ஞாயிறு ஆராதனைக்குச் செல்லவில்லை எனக் கூறி சிறுமி ஒருவர் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமி மீது தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1362036

  14. யாழில் பணம் கொடுத்த பெண்ணை கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்த கொடூரம் ShanaApril 8, 2022 யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் பணம் கொடுக்கலில் ஈடுபட்டு வருபவர் எனவும், குடும்பம் ஒன்றுக்கு கொடுத்த 3 இலட்ச ரூபாய் பணத்தை வாங்க சென்ற போதே காணாமல் போயிருந்தார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில், மணியந்தோட்டம் பகுதியில் குறித்த பெண்ணிடம் பணம் வாங்கிய குடும்பத்தினரை பொலி…

    • 4 replies
    • 494 views
  15. யாழில் பதற்றம்; இரத்த வெள்ளத்தில் இளைஞனின் சடலம் கண்டெடுப்பு யாழில் நேற்று இரவு கைகள் வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் இளைஞனின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான விடுதியின் அருகில் உள்ள காணிக்குள் இருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் தாவடி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 22 வயதான தர்மலிங்கம் பவிசன் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் இளைஞனின் சடலத்துக்கு அருகில் தேசிக்காய், பீடி , தீப்பெட்டி , பியர், ஊசி (சிரிஞ்) உள்ளிட்டவை இருந்துள்ளதால் ”போதையில் அவர் தனது கைகளை வெட்டி…

  16. யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான வேலுப்பிள்ளை யுகபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் இரவு மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதியில் பதில் நீதிவான் ஒருவருடைய கார் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சடுதியாக காரின் கதவு திறக்கப்பட்டுள்ளது. அந்நேரம் அந்த வீதியால் பயணித்த ஆசிரியர் காரின் கதவு மீது மோதி வீதியில் விழுந்துள்ளார். அதன்போது, பின்னால் வந்த பேருந்து முதியவர் மீது மோதியுள்ளது. குறித்த ஆசிரியர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகி…

    • 5 replies
    • 581 views
  17. யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர்,தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த மர்ம நபர்கள், அதிஸ்ட லாப சீட்டில் பெருமளவு பணம் கிடைத்துள்ளது. அதனை பெறுவதற்கு 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இலங்கை வங்கியில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய குறித்த பெண்ணும் தன்னுடைய தங்க நகைகளை அடகுவைத்து பணத்தை இலங்கை வங்கியில் வைப்பு செய்துள்ளார். பின்னர் தொலைபேசி இலக்கம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். …

  18. யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு! யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றையதினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளதுடன், அதனை வீட்டில் சாப்பிட முனைந்த போது, பாணினுள் இருந்து உடைந்த போத்தலின் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த கடை சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்றே பாண் விநியோகம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குறித்த வெதுப்பகத்திற்கு எ…

  19. யாழ்ப்பாணம் - மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் (14) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர்.இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலை வேளையில் கோயில் முன்றலில் குரங்குடன் வந்த நபரொருவர், சிறுவர்களுக்கு குரங்கு ஆட்டம் காட்டியுள்ளார். அதனைத்தொடர்ந்து மகுடி வாசித்துள்ளார். மகுடி சத்தம் கேட்ட பாம்பு கோயில் முன் பகுதிக்கு வந்துள்ளது. அதன்போதே குறித்த நபர் பெட்டிக்குள் பாம்பை அடைத்து கொண்டு சென்று…

  20. யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரத்திற்கு நாணயத்தாள்களினால் அலங்காரம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணமாலையிடப்பட்ட விக்ரகத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் பரவி வருகிறது. யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரத்திற்கு நாணயத்தாள்களினால் அலங்காரம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணமாலையிடப்பட்ட விக்ரகத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் பரவி வருகிறது. இலங்கையில் பயன்பாட்டில் உள்ள 20, 50, 100, 500, 1000, 5000 ரூபா நாணயத்தாள்களைப் பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எனினும் எந்தக் கோயிலில் இவ்வாறு அலங்காரம் செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் சரியாக வெளியாகவில்லை. நாணயத்தாள்களைச் …

  21. யாழில் புறா வளர்ப்பில் போட்டி- பெற்றோல் ஊற்றி கூட்டோடு கொழுத்தப்பட்ட 50 புறாக்கள் யாழ். கொட்டடி பகுதியில் புறா வளர்ப்பில் ஏற்பட்ட போட்டியினால் சுமார் 50 புறாக்களுடன் இருந்த புறா கூட்டுக்கு விசமிகள் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளன.யாழ் நகரில் பூட்டு திருத்தும் கடை ஒன்றினை நடத்திவரும் நபர் ஒருவருடைய வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில் புறா கூட்டுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்த விசமிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.இதனையடுத்து அயலவர்கள் கூடி தீணை கட்டுப்படுத்தினர் எனினும் 40 வரையான புறாக்கள் தீயில் எரிந்து இறந்த சில் எரிந்த காயங்களுடன் சில புறாக்கள் தப்பியுள்ளன. https://www.thaarakam.com/news/…

    • 5 replies
    • 618 views
  22. யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களைத் தீயிட்டுக் கொளுத்தியவர் கைது! யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களையும் மோட்டார் சைக்கிளொன்றையும் தீயிட்டுக் கொளுத்தியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நேற்றைய தினம் ஒரு தொகைப்பணத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று வட்டுக்கோட்டை பகுதியில் 5ஆயிரம் ரூபாய் தாள்கள் சிலவற்றை வீசியுள்ளார். பின்னர் தனது வீடு நோக்கி திரும்பியவர் வீட்டுக்கு அருகில் இருந்த மோட்டார் சைக்கிளொன்றையும் தன் கைவசம் இருந்த மிகுதி பணத்தினையும் வீதியில் போட்டு தீ வைத்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரை…

  23. யாழ்ப்பாணம் திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை மதுபோதையில் துவிச்சக்கர வண்டியில் யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரி வீதியூடாக சென்று கொண்டிருந்து வேளை அவரைத் துரத்திய நாயை தனது துவிச்சக்கர வண்டியை விட்டு இறங்கி நாயை கடித்துக் குதறியுள்ளார். இதனால் நாய்க்கு முகத்தில் காயமடைந்துள்ளது. அத்தோடு குறித்த இளைஞருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இரத்தப் போக்கு கரணமாக நாயைக் கடித்த இளைஞன் மயக்கமடைந்துள்ளார். அருகிலுள்ள வீட்டுக்காரரின் உதவியுடன் ஆட்டே ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின…

    • 9 replies
    • 623 views
  24. யாழ்.அச்சுவேலி பகுதியில், இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம். இதுக்கு எதிராக மனைவி மற்றும் மனைவியின் உறவினர்கள் “தடுத்து நிறுத்த” முயற்சி செய்த போதும், அச்சுவேலி பொலிஸாரின் துணையுடன் தப்பிச் சென்றுள்ளனர். தப்பி செல்வதற்கு பாதுகாப்பு வழங்கிய அச்சுவேலி பொலிஸாா் குறித்து பலரும் விசனம் தெரிவித்து உள்ளனர். தற்போது இரண்டு பிள்ளையும் தாயும், நடுத்தெருவில் நிற்பதாக தெரிவிக்கப் படுகிறது. இதன் விபரமான தகவல் இன்னமும் தெரிய வரவில்லை. http://www.jaffnaboys.com

    • 17 replies
    • 2.2k views
  25. யாழில் மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள் யாழ்ப்பாணம், அச்சுவேலி, வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத இருவர் மண்ணெண்ணெய் ஊற்றிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது அப்பகுதியிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த இருவரும் அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1341818

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.