செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
யாழ் பல்கலைக் கழக மாணவர்களை இலங்கை இராணுவம் கைதுசெய்தது, மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பாகவும். மேலும் பல மாணவர்களை இலங்கை இராணுவம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருவதைக் கண்டித்தும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இல்லத்துக்கு முன்னதாக தொடர்போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நடைபெறும் இப் போராட்டம் இன்று மாலை 6.00 மணி முதல் 8.00 மணிவரை நடைபெறும் எனவும், நாளை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 3 எழுத்துப் பெயரில் இயங்கி வரும் தமிழ் தொலைக்காட்சி ஒன்று, நேரங்களை மாற்றிச் சொல்லி மக்களை குழப்பி வருகிறது. எனவே போராட்டம் நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் நாம் இங்கே மிகத் தெளிவாக தந்துள்ளோ…
-
- 0 replies
- 376 views
-
-
தமிழீழ பெண்கள் எழுச்சி நாளையும் முதல் பெண் போராளி 2ம் லெப்ரினன்ற் மாலதியின் இருபத்தைந்தாவது நினைவு நாளையும் நினைவுறுத்தி எழுச்ச்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த 13ம் திகதி சனிக்கிழமை மாலை மேற்கு லண்டன் கொலின்டேல் பகுதியில் நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திகழ்ச்சி மாலை 7 மணிக்கு தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. உயிரோடை தமிழ் வானொலியின் அறிவிப்பாளரும்இ நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திருமதி. ரூபி குமார் தேசியக் கொடியினை ஏற்றி வைக்கஇ முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி தேசியச் செயற்பாட்டாளர் திரு. இராதாகிருஸ்ணன் ஆகியோர் மாலதியின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்த…
-
- 0 replies
- 561 views
-
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மிக புதுமையான ஓட்டல் ஒன்று நாளை (11-ந்தேதி) திறக்கப்பட உள்ளது. செயற்கையாக தயாரிக்கப்படாமல் முற்றிலும் இயற்கை முறையில்தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன.தயாரித்து வழங்கப்படும் உணவு வகைகளில் தூய்மை கேடுகள் எதுவும் இருக்காது. அதில் ரசாயன பொருட்கள், செயற்கை தனமான வண்ணங்கள் கலக்கப்பட மாட்டாது. உணவு சாப்பிடும் இடத்தில் மின்சார வசதி, செல்போன் மற்றும் டெலிபோன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களோ கிடையாது. இவை அனைத்தையும் விட உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் உடைகள் எதுவும் அணியாமல் நிர்வாணமாக அமர்ந்து பொழுதை கழிக்கலாம். அல்லது பாதி உடை அணிந்து அரை நிர்வாணமாகவும் உணவு அருந்தலாம்.இங்கு ஒயின் மட்டுமே சப்ளை செய்யப்பட…
-
- 9 replies
- 802 views
-
-
செவ்வாய் 28-08-2007 00:02 மணி தமிழீழம் [தாயகன்] லண்டனில் மூக்குடைந்த ஆனந்தசங்கரி - அமிர்தலிங்கத்தின் பிறந்தநாளில் குழப்பம் அமிர்தலிங்கத்தின் 80வது பிறந்தநாள் அவரது மனைவி மங்கயற்கரசி அமிர்தலிங்கம், மகன் பகீரதன் அமிர்தலிங்கம் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. லண்டன் வொறன் ஸ்றீர் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்திற்கு அலுகிலுள்ள “இந்தியன் வை.எம்.சி.ஏ” கட்டிடத்திலுள்ள மகாத்மா காந்தி மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்திலேயே குழப்பம் ஏற்பட்டிருந்தது. அமிர்தலிங்கம் குடும்பத்தினால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசாரத்திற்கு என அழைக்கப்பட்ட ஆனந்தசங்கரி, அமிர்தலிங்கத்தைப் பற்றிப் பேசாது, தன்னைப் பற்றிப் பேசியதே குழப்பம் ஏற்ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
லண்டனுக்கு ஏற்றுமதி செய்ய கொண்டுவரப்பட்ட மீன்கள் பறிமுதல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி முனையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த ஒரு வகையான மீன்கள் சுங்க பல்லுயிர் பிரிவின் அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 60 கிலோகிராம் எடையுள்ள இந்த மீன் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, இலங்கை ஏயர்லைன்ஸின் யுஎல் -503 என்ற விமானத்தின் மூலம் இங்கிலாந்தின் லண்டனுக்கு நேற்று காலை ஏற்றுமதி செய்ய, கட்டுநாயக்க விமான நிலைய பொருட்கள் ஏற்றுமதி முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன்போதே சுங்க அதிகாரிகளினால் இந்த மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முறையான ஆய்வுகளுக்கு பின்னர் அது அழிக்கப்படவுள்ளது. வித்தியாச…
-
- 0 replies
- 266 views
-
-
லண்டன் - கொழும்பு விமானம் பெற்றோல் இல்லாமல் திருவனந்தபுரத்தில் இறக்கம் லண்டனில் இருந்து, கொழும்பு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானம் போதியளவு எரிபொருள் இல்லாமல் போனதால், அவசரமாக திருவனந்தபுரத்தில் தரை இறங்கி எரிபொருள் நிரப்பிக்கொண்டு கொழும்பு பறந்தது. இது குறித்து பயணிகள் விசனம் தெரிவித்த போது, குவைத் விமான நிலையத்தின் ரேடார் பழுதாகிய காரணத்தினால், அந்த நாட்டின் வான் பரப்பில் பறக்க அனுமதி கிடைக்காமல் நீண்ட தூரம் சுத்தி பறக்க வேண்டி இருந்ததால், எரிபொருள் முடிந்து விட்டதால், அவசரமாக திருவனந்தபுரத்தில் இறக்க வேண்டி இருந்ததாக சொல்லி உள்ளார்கள். நல்லா விடுறீங்கப்பு ரீலு என்கிறார்கள் பலர்.... குவைத் மீது பறக்க முடியாவிடில், அமெரிக்கா பக்கமாக சுத்தியா பறந்…
-
- 17 replies
- 931 views
-
-
இலண்டன் வெஸ்ற் ஹென்டன் (West Hendon) பகுதியில் உள்ள ஆஞ்சேனயர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் புகுந்த மலையாளச் சாமியார் ஒருவர் தன்னைத் தானே ஆஞ்சனேய சாமி என்று பிரகடனம் செய்து பக்தர்களையும், பூசகரையும் மிரட்டி அடாவடித்தனம் புரிந்தமை பக்தர்களால் காணொளி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரசேகரன் என்ற இயற்பெயரையுடைய இவர் கேரள வம்சாவழியைச் சேர்ந்தவராவர். ஆனாலும் ஆஞ்சனேயரின் அவதாரமாக தன்னைத் தானே சித்தரித்துக் கொள்ளும் இவர், ஹனுமந் சேவா துரந்தரர் சிறீமத் சந்திரசேகர ஆஞ்சனேய சுவாமிஜி என்று தனக்குத் தானே ஆன்மீகப் பெயர் சூட்டி கொழும்பு தெஹிவளையில் ஆஞ்சனேயர் கோயில் ஒன்றை நடத்தி வருகின்றார். கடந்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்ற காலப் ப…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
அமெரிக்காவின் பிரபல நடிகைகளில் ஒருவரான லிண்ட்ஸே லோஹன், லண்டனிலுள்ள ஆடையகமொன்றில் நிர்வாணமாக திரிந்து பரபரப்பை ஏற்படுத்தியதாக பிரித்தானிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 27 வயதான லிண்ட்ஸே லோஹன் ஒருகாலத்தில் புகழின் உச்சத்திலிருந்தபோதிலும் தற்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார். லண்டனில் சில தினங்களுக்குமுன் ஆடையகமொன்றுக்கு சென்ற லிண்ட்ஸே லோஹன், சில ஆடைகளை எடுத்துக்கொண்டு அவற்றை அணிந்து பார்ப்பதற்காக அறையொன்றுக்குள் சென்றார். சிறிது நேரத்தில் கதவை திறந்துகொண்டு வெளியே வந்த லிண்ட்ஸேவை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர், காரணம் அவரின் உடலில் எவ்வித ஆடையும் இருக்கவில்லை என மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது. லிண்ட்ஸே லோஹன் ஏன் அப்படி நிர்வாண கோ…
-
- 5 replies
- 937 views
-
-
லண்டன் ஏர்போர்ட்டில் அதிகாரிகள் கெடுபிடி.. அமெரிக்க பெண்ணின், 15 லிட்டர் தாய்ப்பால் வீணானது. லண்டன்: லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் தான் தனது 8 மாத குழந்தைக்காக பாட்டில்களில் பிடித்து வைத்திருந்த 14.8 லிட்டர் தாய்ப்பாலை அதிகாரிகள் குப்பையில் போட்டது குறித்து அமெரிக்க பெண் ஒருவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெசிகா கோக்லீ மார்டினெஸ். அவர் வேலை விஷயமாக இங்கிலாந்து வந்துள்ளார். 2 குழந்தைகளின் தாயான அவர் தனது 8 மாத கைக்குழந்தையை அமெரிக்காவில் விட்டுவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது குழந்தைக்கு கொடுக்க நேரம் கிடைக்கும் போது எல்லாம் தாய்ப்பாலை பாட்டில்களில் நிரப்பியுள்ளார். இப்படி அவர் 14.8 லிட்டர் தாய…
-
- 14 replies
- 1.4k views
-
-
[size=5]லண்டன் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு இடமாற்றம்[/size] [size=3][size=4][/size][/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழா கடந்த 27ம் திகதி கோலாகலமாக நடந்தது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் என ஒலிம்பிக் மைதானம் களைகட்டியது.[/size][/size] [size=3][size=4]தொடக்கவிழா நிகழ்ச்சிகளை பிரபல ஹாலிவுட் இயக்குனர் டேனி பாய்ல் வடிவமைத்திருந்தார். உலக அளவில் ரசிகர்களை பிரமிக்க வைத்த தொடக்க விழாவுக்குப் பின்பு, தடகள போட்டிகளுக்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.[/size][/size] [size=3][size=4]இதன் ஒரு பகுதியாக ஒலிம்பிக் சுடர் விளக்கு மைதானத்தின் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதையொட்டி, சுடர் தற்காலிகமாக அணைக்கப்பட்டு கிரேன…
-
- 3 replies
- 652 views
-
-
லண்டன் கட்டடம் முழுக்க தீ பரவக் காரணம் என்ன? மிகப்பயங்கர தீ விபத்தின் பின்னணி.! 21 mins ago பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர், 74 பேர் படுகாயமடைந்தனர். காரணம் என்ன? ‘2 அல்லது 3-ஆவது மாடியில் பழுதான நிலையில் பயன்படுத்தப்பட்டு வந்த குளிர்சாதனப்பெட்டியில் ஏற்பட்ட தீ, குடியிருப்பு முழுவதும் பரவியிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சதிவேலை எதுவும் இருக்குமா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், இந்த கட்டடத்தை புனரமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. அப்போது, கட்டடத்தின் வெளிப்பகுதியில் மரம், அலுமினி…
-
- 0 replies
- 305 views
-
-
லண்டன் கோவில்களில் நகை திருட்டு ஒரு மத்திய வயதுள்ள ஜோடி 15ம் திகதி இரவு தென் லண்டன் ஸ்டோன்லி அம்மன் கோவிலிலும், நேற்று என்பீல்ட் நாகபூசணி அம்மன் கோவிலிலும் அம்மனுக்கு அணிவித்திருந்த நகைகளை திருடும் வீடியோ பதிவுகள் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பரவுகின்றது. அவர்கள் அல்பானியாவை சேர்ந்த வர்கள் என்று சொல்லப் படுகின்றது. பெண் கறுத்த உடையில் மொடாக்கு அணிந்துள்ளார். ஆணும் தலையில் தொப்பி அணிந்துள்ளார். வேறு நாட்டினர், உல்லாச பயணிகள் போல் வந்துள்ளார்கள். எனினும் இவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது என தெளிவாக தெரியும் போது, திறந்திருந்த கோவில்களில் யாருமே இல்லையா என்ற கேள்வி எழும் வகையில், வீடியோ எதிலும், அவர்களை தவிர வேறு யாருமே இல்லை. ஒரு வீடியோவில் பெண், மூலஸ்தான…
-
- 40 replies
- 5.5k views
-
-
லண்டன் சிறையில் படுக்கை வசதி இல்லையாம் - குண்டு வாலிபர் விடுதலையானாா்! [saturday, 2014-03-29 14:54:37] இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜுட் மெட்கால்ப் (23). இவர் ‘கிளின்பெல்டார்’ என்ற உடல் பருமன் நோயால் அவதிப்படுகிறார். இந்த நிலையில் இவர் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்றார். அப்போது பிடிபட்ட இவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும், 12 மாதம் சமூக சேவையும் செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அவர் லண்டனில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டார். மிக குண்டு மனிதரான அவர் 7 அடி 2 இஞ்ச் உயரம் இருக்கிறார். இதனால் அவருக்கு சிறையில் போதிய வசதி செய்த…
-
- 1 reply
- 447 views
-
-
லண்டன் தமிழரின் காசு…! கத்தை கத்தையாக அகப்பட்டது. April 12, 201510:22 am லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான பப்பில்(மதுபான விடுதியில்) , 3 லட்சம் பவுன்சுகள் காசு பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததை பொலிசார் கண்டு பிடித்துள்ளார்கள். லண்டனில் பிரபல வர்த்தகராக இருக்கும் இன் நபரின் பெயரில் சில ரவல் ஏஜன்சிகளும் உண்டு. மேலும் இவருக்கு சொந்தமாக ஒரு பப் கிங்ஸ்பெரியில் இருக்கிறது. குறித்த இந்த மதுபான விடுதியில் , பொலிசார் திடீரென சோதனை நடத்தில் 370,000 ஆயிரம் பவுன்சுகளை பறிமுதல் செய்துள்ளார்கள். பொலிசார் நீண்ட நாட்களாக அவதானித்து தான் , பின்னர் ஒரு நாள் இந்த வேட்டையில் இறங்கியுள்ளார்கள். ஹரோ பொலிசார் இதுதொடர்பான முழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இச்சம்பவம் கடந்த சில தினங்களுக…
-
- 45 replies
- 3.4k views
-
-
லண்டன் நீதிமன்றில் விநோத வழக்கு: மனைவியை நீதிமன்றுக்கு அழைத்தார் கணவன்! கடந்த எட்டு வருடங்களாக மகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் ஒருவரினால் தனது மனைவிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது லண்டன் உயர் நீதிமன்றத்தில் குடும்ப விவகார பிரிவில் இந்த விநோதமான வழக்கு நேற்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு தொடுநரினால் தன்னுடைய மகன் என்ற நம்பிக்கையில் கடந்த 8 வருடங்களாக பராமரிக்கப்பட்ட சிறுவன், தன்னுடைய மனைவிக்கும் பிறிதொரு ஆணுக்கும் இடையிலான உறவின் காரணமாக பிறந்தவர் என்ற உண்மை தெரியவந்ததை அடுத்தே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த உண்மை தெரியவந்தமையினால் தனக்கு ஏற்பட்ட மனவுளைச்சலுக்கும், செலவீனங்களுக்…
-
- 0 replies
- 355 views
-
-
லண்டன் பயங்கரவாத தாக்குதல் குறித்து சாட்சியமளித்த யுவதியிடம் அந்தரங்கப் பகுதி முடிகள் குறித்து கேள்வி எழுப்பிய பொலிஸார்: ஊடகவியல் மாணவி எதிர்கொண்ட அதிர்ச்சி அனுபவம் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகில் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது, மாணவ குழுவொன்றுடன் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்த கலப்பின யுவதியொருவரை விசாரித்த பொலிஸார் மிகவும் மோசமான கேள்விகளை கேட்ட விடயம் அம்பலமாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி கார் ஒன்றை மக்கள் மீது மோதி நடத்திய தாக்குதலில் பாதசாரிகள் நால்வர் உயிரிழந்ததனர். அத்துடன் தாக்குதல்தாரியின் கத்திக் குத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டார். அவ்வேளையில், ஷீபீல்ட் பல்கல…
-
- 5 replies
- 439 views
-
-
லண்டன் பெண்னை ஏமாற்றி 35 லட்ச சீதனத்தடன் கலியாணம் கட்டிய இரவே ஓடிய மாப்பிளை - பேஸ்புக் காதல் 2011-02-04 01:06:28 பண்டத்தரிப்பு பிரான்பற்றில் லண்டனில் இருந்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து அன்று இரவே அவள் கொடுத்த சீதனத்துடன் ஓடிய மாப்பிளையை பெண்ணின் உறவினர்கள் தேடி வருகின்றனர். இங்கிருந்து லண்டனுக்கு மாணவ விசாவில் சென்ற பெண் அங்கு தொழில் அனுமதி பெற்று வேலை செய்து வந்துள்ளார். இந் நிலையில் மட்டக்களப்பினைச் சேர்ந்த ஆண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் தொடர்பேற்பட்டதாக தெரியவருகின்றது. இதனால் அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் அதன் பின் பெண் குறிப்பிட்ட ஆணை திருமனம் செய்வதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளார். குறிப்பிட்ட ஆண் தனக்கு பெண் சகோதரங்கள் உள்ளதாகவும் அதற்காக …
-
- 31 replies
- 2.2k views
-
-
லண்டனில் உள்ள சொகுசு ஹோட்டலில் 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்தபோது கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா சிக்கியுள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள எக்ஸ்செல்சியர் ஹோட்டலில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஹோட்டல் அறை ஒன்றில் கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இங்கிலாந்து பாதுகாப்பு படையான எம்ஐ6 மற்றும் ஸ்காட்லாந்து யார்டு போலீசாருடன் சேர்ந்து ஒரு குற்றவாளியை தேடி நடத்திய ரெய்டில் தான் இளவரசி சிக்கியுள்ளார். அவரது ஐடியை சரிபார்த்த போது அவர் கத்தார் இளவரசி என்பது தெரிய வந்துள்ளது என இங்கிலாந்தை சேர்ந்த பைனான்ஷியல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசியிடம் விசாரித்த பிறகு இங்கிலாந்து போலீசா…
-
- 15 replies
- 1.3k views
-
-
லண்டன்: மூக்குத்தி போட்டதால் விமான நிலைய வேலையை இழந்த இந்து பெண்!!செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 18, 2007 லண்டன்: மூக்குத்தி போட்டுக் கொண்டு வேலைக்கு வந்ததால், விமான நிலைய வேலையிலிருந்து இந்துப் பெண் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். வட மேற்கு லண்டனில் உள்ள ஸ்டேன்மோர் பகுதியில் வசித்து வருபவர் அம்ரித் லால்ஜி (43). இந்தப் பெண்மணி, லண்டன் ஹூத்ரூ விமான நிலையத்தில் உள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விஐபிக்கள் பிரிவின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இந்துப் பெண்கள் மூக்குத்தி அணிவது சாதாரணமான விஷயம். அதுபோலவே அம்ரித்தும் மூக்குத்தி அணிந்திருந்தார். ஆனால் மூக்குத்தியுடன் வேலைக்கு வரக் கூடாது என அவரை வேலையில் நியமித்த …
-
- 16 replies
- 3.2k views
-
-
[size=4]லண்டன்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் சரியில்லாத பொருளாதார சூழல் காரணமாக உலகெங்கும் தொழில்துறைகள் பாதிப்பை சந்திக்க ஆரம்பித்துள்ளன.[/size] [size=3][size=4]குறிப்பாக உற்பத்தித் துறை கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.[/size][/size] [size=3][size=4]ஐரோப்பாவில் இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் ஆரம்பித்த பொருளாதார சரிவும் கடன் பிரச்சனையும் ஐரோப்பிய மண்டலத்தில் உள்ள மற்ற 13 நாடுகளையும் தாக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட தங்களது இறக்குமதியைக் குறைக்க ஆரம்பித்துவிட்டன.[/size][/size] [size=3][size=4]இந்த இறக்குமதிக் குறைப்பால் மிகக் கடுமையான பாதிப்பை சீனாவும் இந்தியாவும் சந்தித்து…
-
- 5 replies
- 617 views
-
-
லன்டனில் பிக் பென்னுக்கு அருகில் பஸ் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு 2016-02-09 08:18:18 லண்டன் நகரில் நேற்று முன்தினம் பஸ் ஒன்று வெடித்துச் சிதறிய காட்சி பலரை பெரும் பீதிக்குள்ளாக்கியது. பிரித்தானிய நாடாளுமன்றம் மற்றும் பிரபல பிக்பென் கடிகாரத்துக்கு அண்மையிலுள்ள லம்பெத் பாலத்தின் மீது ஞாயிறு காலை 10.30 மணியளவில் சென்றுகொண்டிருந்த இரட்டைத் தட்டு பஸ் ஒன்று வெடித்து தீப்பற்றியது. இக் காட்சியை கண்ட பலர் ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாமோ என அஞ்சினர். எனினும், அது திரை…
-
- 0 replies
- 430 views
-
-
லம்பேடுசா தீவு இத்தாலிக்குச் சொந்தமானது. ருனீசியாவில் இருந்து 200 கடல் மைல் தூரத்தில் மத்தியதரைக் கடலில் உள்ள பெலகி தீவுகளில் இதுவும் ஒன்று. வெறும் 20 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இத்தீவின் சனத்தொகை 7000க்கு சற்று அதிகம். ஆழம் இல்லாத கடல், பல வர்ணங்கள் கொண்ட கடல்வாழ் உயிரினங்கள், 27 பாகை செல்சியஸ் வெப்பநிலை என சுற்றுலாப் பயணிகளை கவரும் அழகான தீவான லம்பேடுசா, இப்பொழுது அகதிகளால் திண்டாடுகிறது. சென்ற கிழமை மட்டும் இந்தத் தீவுக்கு கடல் மார்க்கமாக வந்து சேர்ந்த அகதிகள் 7000க்கு மேல் என அறிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு படகு என்ற வீதம் ஏராளமான படகுகள் அணிவகுத்து வந்தன என ஊடகங்கள் சொல்கின்றன. லம்பேடுசா தீவின் மக்கள் தொகையை விட ஒரு கிழமை…
-
- 1 reply
- 321 views
-
-
அமெரிக்காவில் தனக்கு சொந்தமாக லம்போர்கினி கார் வாங்குவதற்காக வெறும் 3 டாலருடன் 5 வயது சிறுவன் நெடுஞ்சாலையில் கார் ஓட்டிச் சென்று போலீசாரை மிரள வைத்துள்ளான். பரபரப்பான உட்டா நெடுஞ்சாலையில், மெதுவாக சென்று கொண்டிருந்ததை காரை சந்தேகத்தின்பேரில் போலீஸ் ஒருவர் நிறுத்தி, அருகில் சென்று பார்த்தபோது காரை 5 வயது சிறுவன் ஓட்டி வந்ததையறிந்து அதிர்ச்சியடைந்தார். மேற்கொண்டு விசாரித்ததில், தனக்கு லம்போர்கினி கார் வாங்கி தரச் சொல்லி தன் தாயிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்துடன் தனது பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான். 3 டாலர்களுடன் கலிபோர்னியாவுக்கு சென்று லம்போர்கினி கார் வாங்க சிறுவன்…
-
- 5 replies
- 659 views
-
-
லாக்டௌன்: நினைப்பதும் Vs நடப்பதும் அவ்வப்போது விளையாட்டில் குழந்தைகளுடன் நாமும் சேர்ந்து கொண்டால் நமக்கு நேரம் போவதே தெரியாது. சுலபமாக நாள்களைக் கடத்தி விடலாம். பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! ஊரடங்கு காரணமாய் இன்று மனிதர்கள் வீடுகளுக்குள் சிறைபட்டுக் கிடக்கின்றனர். பொழுதைப்போக்குவது பலருக்குக் கடினமாகவும் சிலருக்கு மிக எளிதாகவும் மாறியுள்ளது. நம்முடைய அன்றாட நடவடிக்கைகளுள் பலவும் தலைகீழாக மாறிவிட்டன. ஆனால் இன்றைய சூழலிலும் நமக்குப் பல எதிர்பார்ப்புகள் …
-
- 0 replies
- 492 views
-
-
லாசப்பலில் சிங்களவர் மீது தாக்குதல் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> லாசப்பல் பகுதியில் சிங்களவர் மீது அடி உதை,வாள்வெட்டு 5பேருக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி. அவுஸ்ரேலியாவில் நடந்த வன்முறைக்கு பதிலடி என்று தெரிவிப்பு லாச்சப்பலில் சிங்களவர்கள் மீது கடுமையா... லாசப்பல் பகுதியில் சிங்களவர் மீது அடி உதை,வாள்வெட்டு 5பேருக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி. அவுஸ்ரேலியாவில் நடந்த வன்முறைக்கு பதிலடி என்று தெரிவிப்பு லாச்சப்பலில் சிங்களவர்கள் மீது கடுமையான தாக்குதல் மானத் தமிழர்களால் நடாத்தப்பட்டள்ளது. இதில் வெட்டு காயங்கள் மற்றும் தடியடி காயங்கள் ஏற்பட்டுள்ளத…
-
- 7 replies
- 1.5k views
-