செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
பசியால்... பணத்தை தின்ற ஆடு, உ.பி.யில் அதிர்ச்சி! உ.பி.யில் பசி தாங்காத ஆடு ரூ.62 ஆயிரம் பணத்தை மென்று விழுங்கிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலம் சிலுவாபூரி கிராமத்தை சேர்ந்தவர் சர்வேஸ் குமார். இவர் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு செங்கல் வாங்க ரூ.66 ஆயிரம் பணத்தை ரூ.2 ஆயிரம் தாள்களாக பேன்ட்டில் வைத்து ஆடு கட்டப்பட்டிருந்த இடத்திற்கு அருகே வைத்து விட்டுச் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது, ஆடு எதையோ மென்று கொண்டிருந்ததை பார்த்த அவர், அருகில் சென்ற போது அதிர்ச்சி ஏற்பட்டது. அவரது பேன்ட்டில் வைக்கப்பட்டிருந்த பணத்தாள்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆடு சாப்பிட்டுள்ளது. பேன்டை எடுத்து பார்த்த போது, இரண்டு ரூ.4 ஆயிரம் ரூபாயை மட்ட…
-
- 7 replies
- 1.6k views
-
-
விமானத்தில் நிர்வாண பயணம் அலைமோதுகிறது கூட்டம் நிர்வாணத்தை விரும்புவோருக்காக, பிரத்யேகமாக இயக்கப்படும் விமானத்தில் டிக்கெட் எடுக்க, உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கடும் போட்டி நிலவுகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த ஒஸ்ஸிஉர்லாப் என்ற சுற்றுலா நிறுவனம், இந்த விமான பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஜெர்மன் நாட்டவர்கள், இயற்கையான பகுதிகளில் நிர்வாணமாக இருப்பதை விரும்புபவர்கள். இதற்கென்றே உள்ள நிர்வாண கடற்கரையில் இவர்கள் அவ்வப்போது திரள்வது வழக்கம். இவர்களுக்காக பிரத்யேகமான இடத்தை தேர்வு செய்துள்ளது ஒஸ்ஸிஉர்லாப் நிறுவனம். இந்த விமானங்களில், பயணிப்பவர்கள், நிர்வாணமாக செல்லலாம். ஆனால், விமான இருக்கைகளில் உட்கார்ந்து செல்லும் போது, அவர்களுக்கு அசவுகரியம் ஏற்படக்கூடாது என்பதற…
-
- 5 replies
- 1.6k views
-
-
படத்தின் காப்புரிமை Alamy Image caption அரிசி மற்றும் இறைச்சியை வைத்து சமைக்கப்படும் பாரம்பரிய அரேபிய உணவை அப்பெண் சமைத்துள்ளார். (சித்தரிக்கும் படம்.) ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலரைக் கொலை செய்து, அவரது உடலின் எச்சங்களைக் கறியாகச் சமைத்து, அதை அருகில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உணவாகப் பரிமாறியதாக அமீரக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தக் கொலை மூன்று மாதங்களுக்கு முன்னரே நடந்திருந்தாலும், 30 வயதைக் கடந்துள்ள அப்பெண்ணின் சமையலறையில் மனிதப் பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட ப…
-
- 6 replies
- 1.6k views
-
-
பிரிட்டனில் உள்ள சீன ஹோட்டலில் சாப்பிடுபவர்கள், சாப்பிட்ட தட்டில் உணவுகளை மீதம் வைத்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பிரிட்டனில் சவுத் ஷீல்ட்ஸ் பகுதியில் சீன ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் சாப்பிடுபவர்கள், சாப்பிட்ட தட்டில் உணவு பொருட்களை மீதம் வைத்தால், அவர்களுக்கு 20 பவுண்டு வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. முன்னதாக இந்த ஹோட்டல் சர்வர்கள், சாப்பிட வருபவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது, சாப்பாட்டை மிச்சம் வைத்தால் அபராதம் வசூலிக்கப்படும், என்ற அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இதை மீறி சாப்பிட்ட தட்டில் உணவை வீணாக்குபவர்களுக்கு, உணவு கட்டணத்துடன் அபராதமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. சாப்பாடு பிடிக்காமல் ம…
-
- 10 replies
- 1.6k views
-
-
மரத்தின் வயது 4,768! இதுதாங்க உலகில் மிகவும் வயதான மரம். மெதுசேலா (மெதுசேலா என்ற கதாபாத்திரம் பைபிளில் வருகிறது. அவர் 969 வருடங்கள் வாழ்ந்ததாகவும் பைபிள் குறிப்பிடுகிறது. ஆகையால் அதிக வருடங்கள் வாழும் எதுவும், யாரும் மெதுசேலா பெயரில் அழைக்கப்படுவது வழக்கமாயிற்று) என்றழைக்கப்படும் இது பிரிஸ்ட்லீகோன் இனத்தைச் சேர்ந்த பைன் மரம். இதன் வயது 4,768 வருடங்கள் என கின்னஸ் சாதனை ஏடு கூறுகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பழமையான காடாகக் கருதப்படும் தேசிய வனத்தில்தான் இவ்வகை பைன் மரங்கள் தனித்தனியாக வளர்ந்து நிற்கின்றன. வெள்ளை மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த பைன் மரக்காட்டில், கிட்டத்தட்ட 11 ஆயிரம் அடி உயரத்தில் மரங்கள் வளர்ந்துள்ளன. இவ…
-
- 8 replies
- 1.6k views
-
-
மனைவி, தங்கையுடன் அழகுசாதன தொழிற்சாலைக்கு சென்ற கிம் ஜாங் உன்! படத்தின் காப்புரிமைKCNA VIA AFP பியோங்கியாங்கில் உள்ள அழகுசாதனம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தனது தனது மனைவி ரி சொல்-ஜு மற்றும் சகோதரி கிம் யோ ஜாங்க் உடன் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சென்றார். விளம்பரம் புதியதாக மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்ற அந்த தொழிற்சாலைக்கு, கட்சியின் மூத்த உறுப்பினர்களும் சென்றனர். கிம் ஜாங் உன்னின் மனைவியும், சகோதரியும் அரிதாகவே பொதுவெளியில் காணப்படும் நிலையில், அந்நாட்டின் அரசு ஊடகம் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. வட கொரிய அரசில் வலிமைமிக்க பதவிக்கு கிம் யோ ஜாங்க் உயர்த்தப்பட்ட பிறகு, அவர் வெளியில் தோன்றியிருக்…
-
- 0 replies
- 1.6k views
-
-
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் நகைகளுடன் மாயமானார். அவரை வாலிபர் கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. கரிவலம்வந்தநல்லூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகையா. இவரது மகள் அய்யம்மாள். முறம்பு பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே மில்லில் வேலை பார்த்த அருவன்குளத்தை சேர்ந்த குருசாமி சிவகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் அய்யமாளுக்கு பெற்றொர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயித்தனர். இந்த நிலையில் கடந்த 25ம் தேதி அய்யம்மாள் திடீரென மாயமானார். இதுகுறித்து சண்முகையா கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார்…
-
- 4 replies
- 1.6k views
-
-
சிட்ரிக் அமிலத்தை கொண்டு கீரையை சுத்தப்படுத்தி அதனை விஞ்ஞானிகள் உண்பார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது. கீரையின் மிச்சம் உறைய வைக்கப்பட்டு பின்னர் பூமிக்கு கொண்டுவரப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடம் அமைத்து வருகின்றனர். அதில் பணிபுரிய பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர். விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுகிறது. ஒருவரது உணவுக்கு ரூ.6 லட்சம் வரை செலவாகிறது. எனவே, செலவை குறைக்கும் வகையிலும் புதிய முயற்சியாகவும், வீரர்களின் உணவுக்கு பூமியில் இருந்து 380 கி.மீ. தூரத்தில் உள்ள விண்வெளியில் பண்ணை அமைத்து அதில் கீரை வகைகளை பயிரிட நாசா மை…
-
- 1 reply
- 1.6k views
-
-
நேபாளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியான ஈஸ்வரி மாயா சினால், அநாட்டிலேயே மிகவும் ஒல்லியான மற்றும் குள்ளமான பெண் என்ற பெயரைப் பெற்றுள்ளார். அவரைப் பார்க்க தினசரி பெரும் கூட்டம் கூடுகிறதாம். நேபாள நாட்டின் டாங் மாவட்டத்தில் உள்ள சைலை கிராமத்தில் கடந்த 1991ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தவர் ஈஸ்வரி மாயா. இவருக்கு தற்போது 16 வயதாகிறது. இவரது உயரம் 28 இன்ச்சுகள்தான். எடையோ வெறும் 6 கிலோதான். நேபாளத்திலேயே இவர் தான் மிகவும் குள்ளமான மற்றும் ஒல்லியான பெண். இவர் குறித்த தகவல் நேபாளத்தில் வெகு வேகமாக பரவவே பிரபலமாகி விட்டார் ஈஸ்வரி. தற்போது மேற்கு நேபாளத்தில் உள்ள நேபாள்கஞ்ச் என்ற இடத்தில் தேசிய வர்த்த திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் ஈஸ்வரி ஒரு காட்சிப் பொருள் போல வை…
-
- 5 replies
- 1.6k views
-
-
மூன்றாம் உலகப் போர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஆரம்பம் ; டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியை எதிர்வுகூறிய தீர்க்கதரிசி அதிரடி அறிவிப்பு அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்பார் என யாரும் எதிர்பார்த்திருக்காத காலகட்டத்தில் சரியாக எதிர்வுகூறியதோடு மட்டுமன்றி தன்னைத் தானே இறைவனின் தூதர் என பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த தீர்க்கதரிசியான ஹொராசியோ வில்லேகாஸ் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் காலத்தை தற்போது எதிர்வுகூறியுள்ளார். அவரது எதிர்வுகூறலின் பிரகாரம் உலக அணு ஆயுதப் போர் ஆரம்பமாக ஒரு சில வாரங்கள் மட்டுமே உள்ளன. டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகிய பின், சிரியா மீது தாக்குதலை நடத்துவார் என ஹொராசியாவால் ஏற்கனவே கூறப்பட்டிருந்த எ…
-
- 13 replies
- 1.6k views
-
-
பள்ளியில் 2 ம் வகுப்பு படிக்கும் 48 வயது பெண்! சீனாவை சேர்ந்தவர் ஷி சூ ஜின். அவர் தன் சொந்த ஊரில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவர் படிக்காதவர் என்பதால் வியாபாரம் செய்வதில் கஷ்டப்பட்டார். படிக்காததால் அவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பது என்று அவர் முடிவு எடுத்தார். அவர் பள்ளிக்கூடத்தில் சேர்வதற்காக அந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்றபோது, அவரை பார்த்து பள்ளிக்கூட நிர்வாக ஊழியர்கள் அவரை அதிசயமாக பார்த்தனர். அவரை வீட்டில் இருந்து படிக்கும்படியும், அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் எப்போதாவது ஒரு முறை அல்லது இரு முறை ஆசிரியரை அனுப்பி வைக்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.…
-
- 10 replies
- 1.6k views
-
-
மனைவி இறந்துவிட்டதாக கணவன் தற்கொலை [14 - September - 2008] குடும்பத்தகராறு காரணமாக மனைவியை அடித்து துன்புறுத்தியவர் மனைவி இறந்துவிட்டார் என எண்ணி தற்கெலை செய்துகொண்ட சம்பவம் பெரியநிலாவணை மருதமுனையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சுலைமான் லெப்பை அஜ்மீர் (வயது 32) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் மனைவியை அடித்து துன்புறுத்தியதும் மனைவி இறந்தவர்போல நிலத்தில் விழுந்து நடித்துள்ளார். இவர் அதனைப்பார்த்துவிட்டு மனைவி இறந்துவிட்டதால் தன்னை பொலிஸார் கைது செய்வார்கள் என்று எண்ணியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கல்முனைப்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். …
-
- 6 replies
- 1.6k views
-
-
கணவனை கொலை செய்துவிட்டு கள்ளக் காதலனான தனது வீட்டு டிரைவருடன் தப்பியோடிய பெண் காதனுடன் தற்கொலை செய்து கொண்டார். குற்றாலம் வைரம் நகரில் உள்ள லாட்ஜில் நேற்று காலை கணவன்-மனைவி என்ற பெயரில் ஒரு தம்பதி அறை எடுத்தது. அவர்கள் தங்கியிருந்த கதவு இரவு 11 மணி வரை திறக்கப்படாததால் ஜன்னல் கதவை விடுதி ஊழியர்கள் திறந்து பார்த்தனர். அப்போது அந்த ஆணும் பெண்ணும் மின் விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்டது திண்டிவனத்தைச் சேர்ந்த கள்ளக் காதல் ஜோடி தாமோதரன் (32), வைதேகி (35) என தெரியவந்தது. இந்த வைதேகி பெண் போலீஸாக இருந்தவர் என்பது …
-
- 3 replies
- 1.6k views
-
-
http://www.bbc.co.uk/sinhala/news/story/20...iran_bail.shtml
-
- 2 replies
- 1.6k views
-
-
டெல்லியில், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி தனது நண்பருடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதிலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த 6 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் பின்னர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். ஒரு குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டார். பஸ்சின் டிரைவர் முகேஷ் சிங் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்…
-
- 0 replies
- 1.6k views
-
-
மாயன் காலண்டர் கடந்த 21-ந்தேதியுடன் முடிந்தது. எனவே அன்றுடன் உலகம் அழியும் என்ற பீதி சர்வதேச நாடுகளை ஆட்டிப் படைத்தது. இக்கருத்தை விஞ்ஞானிகள் மறுத்தாலும், விண்ணில் நிகழும் மாற்றங்களை கண்காணித்து கொண்டுதான் இருந்தனர். மாயன் காலண்டர் முடிந்த சில நிமிடங்களில் அதாவது 22-ந்தேதி அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் சூரிய சக்தி கண்காணிப்பு மைய விஞ்ஞானிகள் சூரியனை போட்டோ எடுத்தனர். அப்போது சூரியன் விட்டுவிட்டு கண் சிமிட்டியபடி ஒளிர்ந்தது. இதற்கு, மாயன் காலண்டரில் குறிப்பிட்டபடி உலகம் அழிவதற்கான அறிகுறி இல்லை. சூரியனில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகரிப்பே இதற்கு காரணம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாயன் காலண்டரின் கூற்றுப்படி பூமியை வேற்று கிரகம் தாக்குக…
-
- 4 replies
- 1.6k views
-
-
மணமகன் தேவை விளம்பரம் ; 10 ஆண்களை திருமணம் செய்த பெண் ; திருமணக்கோலத்தில் கைது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பணத்துக்காக பெண் ஒருவர் பத்து திருமணங்கள் செய்துள்ள சம்பவம், அவரது கணவர்களில் ஒருவரால் அம்பலமாகியுள்ளது. கேரள பத்திரிகையொன்றில் வெளியான மணமகள் தேவை விளம்பரத்தில் 'கணவனை இழந்த இளம் விதவைக்கு மணமகன் தேவை' என பெண்ணின் படமும் கையடக்கத்தொலைபேசி இலக்கமும் தரப்பட்டிருந்தது. அதை பார்த்த இளைஞர் ஒருவர் விளம்பரம் தந்திருந்த ஷாலினி என்ற பெண்மணியை தொடர்பு கொண்டுள்ளார். கணவனை இழந்த தான் பெங்களுருவில் மென்பொருள் பொறியியலாளர் என்றும் விரைவில் கேரள நீதிமன்றத்தில் வேலை கிடைக்கப் போவதாகவும்,ஷாலினி குறித்த இளைஞனிடம் கூறியுள்ளார். ஷாலினியின் …
-
- 11 replies
- 1.6k views
-
-
இயக்குநர் டி.ராஜேந்தர் மகன் குறளரசன் நேற்று இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார். டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ஆகியோர் முன்னிலையில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முன்னிலையில் , குறளரசன் இஸ்லாம் மதத்தை நேற்று தழுவினார். இத்தகவலை தமிழக தொலைக்காட்சி செய்திகளும் உறுதி செய்தன. இதுகுறித்து டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எந்த மதமும் சம்மதம் என்ற கொள்கையை பின்பற்றுவதால், குறளரசன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவரை இஸ்லாம் மதத்தை தழுவ தடை சொல்லவில்லை என்று தெரிவித்தார். https://www.madawalaenews.com/2019/02/kur.html நடிகர் சிலம்பரசனின் சகோதரர் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவினார். இதுதொடர்பாக அவரது தந்தை டி. ராஜேந்திரன் அ…
-
- 14 replies
- 1.6k views
-
-
இஸ்லாமியரின் குறிக்கோள் ஒன்று உண்டு அது உலகை ஆளுவது. அதற்கான காலம் கனிந்து வருவதுபோலவே தெரிகிறது மிகவும் இறுக்கமாக இருந்த டென்மார்க்கில் கூட அவர்களது ஆதிக்கம் அதிகரித்திருப்பதுடன் சனத்தொகையிலும் போட்டிபோடும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளனர் ஏன் நெதர்லாந்தில் கூட இதேநிலைதான் அதைவிட உலகில் பல நாடுகளில் அவர்களின் குடிப்பரம்பல் வெகுவேகமாக அதிகரிப்பதும் அந்தந்த நாட்டவர் நாட்டுப்பற்றுமற்று கேளிக்கைகளிலும் வேறு பொழுதுபோக்குகளிலும் காலத்தை கடத்துவதும் முக்கியமாக பிள்ளை பெறுவதைத்தவிர்த்து வருவதும் இவர்கள் பல மனைவி முறைமூலம் அதிகளவில் பிள்ளைகளைப்பெத்துக்கொள்வதுடன் அந்ததந்த நாட்டு சட்டப்படி பிள்ளைகளுக்கான கொடுப்பனவுகளைப்பெற்று பொருளாதார ரீதியிலும் தம்மை …
-
- 21 replies
- 1.6k views
-
-
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! சிறீலங்கா | ADMIN | NOVEMBER 9, 2012 AT 22:19 மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகக் கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வெளியில் பலமான குரல்களைக்கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தவர், தனது இரசிகர்கள்தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக அந்த இரவு வேளையிலும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.…
-
- 3 replies
- 1.6k views
-
-
தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு நடந்த கதி! தனது 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடமிருந்து பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரச அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெண்டிகே, குற்றவாளியின் வாக்களிக்கும் உரிமை உட்பட அவரது சிவில் உரிமைகளை இரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் ரூ. 20,000 அபராதம் விதித்தார். ஒரு அரசு அதிகாரியாக, குற்றவாளி தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டிய கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படக்கூடிய பெண்ணிடமிருந்து பாலியல் இலஞ்சம் கேட்பது முற்றிலும் ஏற்ற…
-
- 1 reply
- 1.6k views
- 1 follower
-
-
சமீபத்தில் தனது 25வது மனைவியுடன் 7 ஆண்டுகள் திருமண வாழ்வை வெற்றிகரமாக நிறைவு செயது.. திருமண நினைவு நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய போது... கிழக்கு நேபாளத்தைச் சேர்ந்த 49 வயதாகும் கூலித் தொழிலாளி ஒருவர் கடந்த 23 ஆண்டுகளில் மொத்தம் 25 திருமணங்கள் செய்துள்ளார். அதில் 24 தோல்வியடைந்த திருமணங்கள். இறுதியாக 25 வதாக கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்த தற்போது 23 வயதாகும் பெண் மட்டுமே அவருடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். ஏனையவர்கள் அவரை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். தற்போது தான் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சி காணப்படுவதாகவும் எனித் தான் திருமணம் செய்யப் போவதில்லை என்றும் கூறும் அவர் தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக உழைக்கப்போவதாகவும் கூறுகிறார். மனைவியில்லாத வீடு …
-
- 10 replies
- 1.6k views
-
-
காதலித்து நெருங்கி பழகிய சீமான் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார்: நடிகை புகாருக்கு சீமான் மறுப்பு Thursday, June 2, 2011, 9:28 சிறீலங்கா பிரண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமி, போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு பற்றி தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறுகையில், சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளதாகவும், இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவி…
-
- 12 replies
- 1.6k views
- 1 follower
-
-
திருமணத்திற்கு பிறகு கள்ள தொடர்பில் ஈடுப்பட்டு வரும் நாடுகளின் பட்டியல் வெளியீடு! [Saturday 2016-11-19 15:00] சர்வதேச அளவில் திருமணத்திற்கு பிறகு கணவன் மற்றும் மனைவிக்கு தெரியாமல் மற்றவர்களுடன் கள்ள தொடர்பில் ஈடுப்பட்டு வரும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.பிரித்தானிய நாட்டை சேர்ந்த Durex ஆணுறை தயாரிப்பு நிறுவனம் ‘உலகளவில் தன்னுடைய துணைக்கு தெரியாமல் அல்லது துணைக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவரிடம் கள்ள தொடர்பு வைத்துக்கொள்வதில் எந்த நாடு முன்னணியில் உள்ளது’ என ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில் 51 சதவிகித தம்பதிகள் திருமணத…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஒரு வயது குழந்தைக்கும் பெண் நாய்க்கும் கல்யாணம்! திங்கள்கிழமை, மார்ச் 24, 2008 புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் மூட நம்பிக்கையின் உச்சகட்டமாக, ஒரு வயது பையனுக்கும், 6 வயது பெண் நாய்க்கும் இடையே கல்யாணம் செய்து வைத்த கொடுமை நடந்துள்ளது. ஒரிஸ்ஸா மாநிலத்தின் பல மாவட்டங்கள் மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போனவை. பெரும்பாலான மலை வாழ் மக்கள் மூட நம்பிக்கைகளை மதிப்பவர்கள். இந்த நிலையில் தங்களது ஒரு வயது மகனுக்கு நோய், நொடி அண்டாமல் இருப்பதற்காக பெண் நாய்க் குட்டிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் ஒரு மலை வாழ் தம்பதியினர். மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போன ஜகத்சிங்பூர் மாவட்டத்தில்தான் இந்தக் கேவலம் நடந்துள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள…
-
- 4 replies
- 1.6k views
-