செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 30 வயது வரையிலானோருக்கு தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றபட்டுள்ளது. இன்னும் சிலர் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கின்ற நிலையும் காணப்படுகிறது. இந்நிலையில், ஒருவகையான தடுப்பூசியின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த வகையைச் சேர்ந்த தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட ஆண்கள் மட்டுமே தேவையென மணமகன் தேவையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. https://www.madawalaenews.com/…
-
- 1 reply
- 461 views
-
-
மும்பை: பிரபலமான பெண்மணிகள் தங்களின் குடும்ப வாழ்க்கையும், பணியையும் எப்படி பேலன்ஸ் செய்து வெற்றி பெறுகிறார்கள் என்பது பலரது கேள்வி. அரசியலாகட்டும், விளையாட்டு, கார்ப்பரேட் துறை, சினிமா என பல துறைகளிலும் இவ்வாறு வெற்றி பெற்ற பெண்மணிகள் பலர் இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள பிரபல பெண்மணிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனைவரையும் கவர்ந்த தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தையும், அரசியல் வாழ்க்கையும் அவர் சரிசமமாக பேலன்ஸ் செய்யும் பிரபல பெண்மணிகள் பற்றி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் 5100 பெண்களிடம் இது தொடர்பாக கருத்துக் கணிப்பு நடைபெற்றது. திருமணத் தகவல் இணையத்தளம் பிரபல பெண்மணிகள் பற்றி கேள்வி கேட்டது. அதில் சுவாரஸ்…
-
- 0 replies
- 310 views
-
-
ஒரே பிரசவத்தில் பிறந்த 9 குழந்தைகளின் நிலை இப்போது எப்படி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SALOUM ARBY படக்குறிப்பு, வரலாற்றிலேயே இவர்களை தவிர இன்னும் இரண்டு முறைதான் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தன. ஆனால், அவர்கள் உயிர் பிழைக்கவில்லை. 2021-ஆம் ஆண்டு மே -4ஆம் தேதியன்று, மொராக்கோவின் காசாப்ளாங்காவில் உள்ள ஐன் போர்ஜா மருத்துவமனையில் மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸேவுக்கு ஒன்பது குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தன. உலகளவில் உயிரோடு ஒரே பிரசவத்தில் அதிகபட்சமான குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை. உலகில் ஒரே பிரசவத்தில் அப்போது பிறந்த ஒன்பது குழந்தைகளுக்கும் இந்த ஆண்டு மே 4-ஆம்…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட `டிராபிக் ஜாம்’ உலக சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. இதைவிட வினோதமாக, நண்டு விளையாட்டால் மாதக் கணக்கில் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது தைவான் நாட்டில். அங்குள்ள கென்டிங் தேசிய பூங்கா அருகே ஒரு கடற்கரை உள்ளது. அதையொட்டி பிரதான கடற்கரை சாலையும் செல்கிறது. தற்போது நண்டுகளின் இனபெருக்க காலமாகும். அதனால் 40 வகையான நண்டு இனங்கள் தங்கள் இனபெருக்க வேலையில் இறங்கி உள்ளன. நண்டுகள் நடுரோட்டில் நின்றுகொண்டு `நண்டூறுது, நரியூறுது’ விளையாட்டில் ஈடுபடுகின்றன. கடற்கரையில் நண்டுகள் விளையாடினால் ரசிக்கும் மனிதர்கள், நடுரோட்டில் நண்டுகளை பார்த்ததும் எரிச்சலாகிவிடுகிறார்கள். ஒன்று, இரண்டல்ல சாலை முழுவதும் ஆயிரக்கணக்கான நண்டுகள் லீலை செய்கின்றன. குஞ்சுகளை அழைத்…
-
- 2 replies
- 675 views
-
-
லண்டனில் திருடப்பட்ட சொகுசு கார் கராச்சியில் சிக்கியது எப்படி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரான கராச்சிக்கு நீங்கள் சென்றால், அங்கே அனைத்து விதமான வண்டிகளும் சாலையில் ஓடுவதை பார்க்க முடியும். ஆனால், சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு வண்டியின் கதை தனித்துவமானது. அயல்நாட்டு உளவு நிறுவனம் ஒன்று சுங்கத்துறைக்கு கொடுத்த தகவலின்பேரில் அதிகாரிகள் கராச்சி நகரின் டி.ஹெச்.ஏ பகுதியில் ஒரு வண்டியை தேடிக் கொண்டிருந்தனர். சுங்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, லண்டனில் இருந்து திருடப்பட்ட வண்டி பாகிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டதாக ஒரு தகவல் க…
-
- 5 replies
- 505 views
- 1 follower
-
-
தென்னாப்பிரிக்காவின் தொலைதூர மாகாணத்தில் சுமார் 50 பபூன் குரங்குகள் கொண்ட குழு சிறுத்தையை துரத்தியடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சிறுத்தை, பபூன் குழுவில் உள்ள பபூன் ஒன்றை வேட்டையாட முயல்கிறது, மற்ற பபூன்கள் வந்து சிறுத்தையை தாக்கி அந்த பபூனை காப்பாற்றுகின்றன. தாக்கப்படும் சிறுத்தை இறுதியாக பபூன்களுக்கு பயந்து காட்டுக்குள் ஓடுகிறது. இச்சம்பவம் காரணமாக வீதியில் பயணித்த வாகனங்கள் நிறுத்தப்பட்டதுடன், அந்த வாகனங்களில் பயணித்தவர்களும் சம்பவத்தை பதிவு செய்துள்ளனர். இந்தச் வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு இதுவரை மூன்று இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். https://thinakkural.lk/article/268873
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் தாய் ஒருவர், இறந்த மகளின் கருவை தனது வயிற்றில் சுமக்க கடந்த 4 வருடமாக போராடி வருகிறார். 59 வயதாகும் அந்த பெண்ணின் மகள், கடந்த 45 வருடங்களுக்கு முன் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயினால், தன்னால் கருவுற முடியாது என்ற பயத்தில் அந்த பெண்மணி, 2008ம் ஆண்டு லண்டனில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையத்தில் தனது கருமுட்டையை சேமித்து வைத்தார். இந்நிலையில் நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால், அந்தப்பெண்மணி உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு முன்னால் தனது தாயிடம், என் கருமுட்டையை கொண்டு நீ ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். நான் பிறந்த உன்னுடைய கருப்பையிலேயே என்னுடைய குழந்தையும் வளர வேண்டும் என தனது இறுதி ஆசையை கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்தில் உள்ள சட்டங்கள் …
-
- 0 replies
- 345 views
-
-
யெனீவாவில் குழுமிய தமிழர்களின் ஒங்கிணைப்பையும் ஒன்றுபாட்டையும் வெளிப்படுத்திய செய்தியையே மொன்றியலின் நாளேடு மேற்கண்டவாறு தலைப்பிட்டுச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. ஷபல்லாயிரக்கணக்கான மக்கள் யெனீவாவில் ஒன்றுகூடி ஊர்வலம் நடத்தினர்.| எனும் பெருந்தலைப்பின் கீழ் ஓர் செய்தி நிறுவனத்தின் செய்தியை அவர்கள் வெளியிட்டுள்ளனர். பிரஞ்சு மொழியில் வெளிவரும் அந்தச் செய்தி ஏட்டின் ரொரன்ரோப்பிரிவு குடிவரவாளருக்கு எதிரான பழமைவாதப் போக்கையே கடைப்பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. செய்தி வருமாறு: காவல்துறையின் கணிப்பின் படி 9000 தமிழ் மக்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் ஐ.நாவிடம் தமிழர்களின் தனியான ஓர் அரசை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தினர். ஐ.நாவின் முன்றலில…
-
- 0 replies
- 982 views
-
-
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் ஸ்டாபோர்ட் நகரின் மிகவும் போக்குவரத்து மிகுந்த சாலையின் மைய பகுதியில் திடீர் என விமானம் ஒன்று இறங்கி ஓடத்தொடங்கியது.இதை பார்த்த காரோட்ட்டிகள் அனைவரும் பயந்து அலறி தங்களது காரை ஓரமாக கொண்டு சென்றனர். இதை பார்த்த விமானி விமானத்தை சாலையின் மையத்தில் இருந்த புல்வெளிக்கு திருப்பினார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் விமானத்தின் இறக்கை சேதம் அடைந்து உள்ளது என உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இது குறித்தது ஸ்டாப்போர்ட் போலீஸ் கூறியதாவது:- சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானம் ரோட்டில் இறங்கியது தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.அதை கிழக்கு கடற்கரை ஸ்கை டைவிங் பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்து உள்ளனர்.திடீர் என என்ஜின் ச…
-
- 0 replies
- 325 views
-
-
வெளிநாட்டில் தமது பிள்ளைகளுடன் 70 வது பிறந்த தினத்தை கொண்டாடிய பின் இலங்கை திரும்பவிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாடு திரும்பாமல் கனடாவிற்கு அவசர பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தேர்தல் களம் மிகவும் சூடு பிடித்துள்ள நிலையில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாடு திரும்பியதும் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை விடுக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. எனினும் அவர், அவசரமாக கனடா சென்றதாகவும், அங்கு அவர் ஒருவார காலம் தங்கியிருக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்யும் திட்டங்களை கனடாவில…
-
- 0 replies
- 204 views
-
-
நாயுடன், மகனைக் கட்டிப் போட்ட பெற்றோர்! இடுக்கி: தங்களது 3வயது மகனை நாயுடன் சேர்த்து கட்டிப் போட்ட கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர். இடுக்கி மாவட்டம் மாவடி கிராமத்தைச் சேர்ந்த பென்னி, மஞ்சு ஆகியோர் கூலி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு 3 வயதில் அரோமால் என்கிற மகன் உள்ளான். தினசரி வேலைக்குப் போகும்போது அவர்கள் தங்களது மகனை, வீட்டில் உள்ள நாயுடன் சேர்த்து சங்கிலியால் கட்டிப் போட்டு விட்டு வேலைக்குப் போவது வழக்கமாம். அந்த 3 வயது சிறுவன், தினசரி நாயுடன் சேர்த்து வீட்டுக்குள் வளைய வருவானாம். அந்தத் தம்பதியின் உறவினர்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவர்களை கல்யாணம் ஒன்றுக்கு அழைப்பதற்காக வந்தவர்கள், வீட்டில் நாயுடன், சிறுவன் இருப்பதைப் பா…
-
- 5 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள பிரபல எம்பயர் ஸ்டேட் கட்டிடம் அழியும் நிலையில் உள்ள விலங்கினங்களை காப்பாற்றும் நோக்கத்தில் நேற்றிரவு வர்ணஜால ஒளி வெள்ளத்தில் மிதந்தது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் 102 மாடிகளை கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டிடம் உள்ளது. உச்சியில் உள்ள கூம்பு முனையுடன் சேர்த்து 443 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டிடத்தின் முன்னர் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு ஆயிரக்கணக்கான மக்கள் வானத்தை அன்னார்ந்து பார்த்தபடி நின்றிருந்தனர். திடீரென, அந்த கட்டிடத்தில் எரிந்து கொண்டிருந்த அத்தனை விளக்குகளும் அணைந்து அப்பகுதியில் நிசப்தம் நிலவியது. ‘ஒரு மெழுகுவர்த்தி’ என்ற தலைப்பில் பிரபல இசையமைப்பாளர்கள் ஜே.ரால்ப் மற்றும் சியா ஆகியோர் வனவிலங்களை பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் …
-
- 1 reply
- 567 views
-
-
வலைத்தளங்களில் வைரலான ராஜீவ் காந்தி- சோனியா திருமண வீடியோ! புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரின் திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கருப்பு வெள்ளையில் பதிவு செய்யப்பட்ட இந்த அரிதான வீடியோ எதற்காக வெளியானது என்பது குறித்த காரணங்கள் தெரியவில்லை. முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் மூத்த மகனான ராஜீவ் காந்தி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் படித்தபோது இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவை சந்தித்தார். இருவரின் நட்பும் காதலாக மலர்ந்தது. இது அப்போது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் கடந்த 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி, இருவருக்கும் திருமணம் டெல்லியில் நம்பர் 1 சப்தர்ஜுங் சாலையில் உள…
-
- 0 replies
- 444 views
-
-
விமானத்தில் வழங்கப்படும் உணவு என்பது ஐந்து நட்சத்திர ஹொட்டலில் தரப்படும் உணவின் தரத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது நாங்கள் அறிந்ததுதான்.ஆனாலும் அதன் தரம் முக்கியமானது. பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு குறைந்த பட்சம் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது. Suyesha Savant தன் மகனுடன் டெல்லியிலிருந்து நியூயோர்க்கிற்கு எயர் இந்தியாவில் பறந்து கொண்டிருந்தாள். விமானத்தில் வழங்கப்பட்ட உணவை அவள் உட்கொள்ள ஆரம்பித்தாள். ஒம்லெட்டுக்கும் உருளைக்கிழங்கும் இடையில் இரண்டு அன்ரெனாக்களுடனும் இறக்கைகளுடனும் கருமையான உடல் கொண்ட கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது. …
-
-
- 8 replies
- 679 views
-
-
முஸ்லீம்கள் வடக்கில் மீளக் குடியேற தமிழ்த் தரப்பில் எந்தத் தடையும் இல்லை – தடை என்பது அபாண்டமான குற்றச்சாட்டு:-சீவீகே சிவஞானம் காணிகளை மட்டும் அல்ல சுடலைகளை கூட கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர் என அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி அலை நிகழ்ச்சியில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நடராஜா குருபரனால் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு காரசாரமான பதிலை அளித்த அவர் முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் குறித்து தெரிவித்த போது முஸ்லீம்கள் வடக்கில் மீளக் குடியேற தமிழ்த் தரப்பில் எந்தத் தடையும் இல்லை தடை என்பது அபாண்டமான குற்றச்சாட்டு என சீவீகே சிவஞானம் தெரிவித்துள்ளார். மிகுதியை ஒலிவடிவில் கேளுங்கள…
-
- 0 replies
- 346 views
-
-
ஒரேயொரு கிராமத்தில் 122 இரட்டையர்கள் 122 இரட்டையர்களை கொண்டுள்ள உக்ரேனிய கிராமமொன்று உலகில் அதிகளவு இரட்டையர்களைக் கொண்ட பிராந்தியமென்ற புதிய சாதனையை படைத்துள்ளது. தென் மேற்கு உக்ரேனின் ஸ்கர்பற்றியா ஒப்லாஸ்ட் பிராந்தியத்தில் 4,000 பேரை மட்டுமே சனத்தொகையாகக் கொண்ட வெலிகயா கொபன்யா என்ற மேற்படி கிராமம் ஏற்கனவே 61 இரட்டையர்களை உள்ளடக்கி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தது. தற்போது அந்தத் தொகை இரு மடங்காகி தன்னால் நிறைவேற்றப்பட்ட முந்திய சாதனையை அந்தக் கிராமம் முறியடித்துள்ளது. அந்தக் கிராமத்தில் அளவுக்கதிகமான இரட்டையர்கள் பிறப்பதற்கு அங்குள்ள நீரில் காணப்படும் விசேட மர…
-
- 0 replies
- 348 views
-
-
ஒஸ்ரியாவில் லின்ஸ் நகரில் உள்ள பல் பொருள் அங்காடியான HOFER க்கு வார இறுதியில் ஒரு பெண் பொருட்கள் வாங்கச் சென்றிருந்தாள். முள்ளங்கி வாங்குவதற்காக அவள் ஒரு கட்டு முள்ளங்கியை எடுத்த போது அதில் இருந்து ஒரு முள்ளங்கி தரையில் விழுந்து விட்டது. அவள் தனது கையில் இருந்த முள்ளங்கிக் கட்டை எடுத்த இடத்தில் திரும்ப வைத்துவிட்டு கீழே விழுந்த முள்ளங்கியை எடுத்துக் கொண்டாள் அத்துடன் புதிதாக இன்னுமொரு முள்ளங்கிக் கட்டையும் எடுத்துக் கொண்டாள். வாங்கிய பொருட்களுக்கு பணத்தைச் செலுத்திவிட்டுப் புறப்பட்டால், வாசலில் இடைமறித்துக் கொண்டு அங்காடியில் பணியில் இருந்த பெண் டிடெக்டிவ் நின்றாள். "நீங்கள் தரையில் விழுந்த முள்ளங்கியை எடுத்து முதலில் உங்கள் ஜக்கெற்றுக்குள் போட்டீர்கள். பின்னர் அதை எட…
-
- 0 replies
- 213 views
-
-
''5-5-5'' ...863 ஆண்டுக்கு பின் ஜூலையில் ஒரு அதிசயம்! நெல்லை: 863 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிறந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 5 ஞாயிறு, 5 திங்கள்கிழமை மற்றும் 5 செவ்வாய்க்கிழமைகள் வருகின்றன. உலகில் ஏராளமான அதிசயங்கள்..அதில் ஒன்றுதான் இந்த தேதி அதிசயம். இன்று பிறந்த ஜூலை மாதத்தில், 1,8,15,22,29 ஆகிய 5 தினங்கள் ஞாயிற்று கிழமையில் வருகின்றன. அதேபோல 2,9 16, 23, 30 ஆகிய தேதிகள் திங்கள்கிழமையிலும், 3,10,17,24,31 ஆகிய தேதிகள் செவ்வாய் கிழமையிலும் வருகின்றன. அதாவது இந்த மாதத்தில் மட்டும் ஐந்து ஞாயிறு, ஐந்து திங்கள் மற்றும் ஐந்து செவ்வாய்க்கிழமைகள் வருகின்றன. இதுபோன்று 863 ஆண்டுகளுக்கு ஒரு்முறை தான் இந்த நாட்கள் அமையும் என்றும் இம்மாதம் சிறப்பான மாதம் என்றும் ஜோதிடர்கள…
-
- 0 replies
- 567 views
-
-
தென்னாப்பிரிக்காவில் தாயில்லாத சிங்கக்குட்டியை பபூன் இன ஆண் குரங்கு ஒன்று தனது குழந்தையாக கருதி பராமரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. குருகர் தேசிய வனவிலங்கு பூங்காவில் தாயில்லாமல் சுற்றித் திரிந்த சிங்கக்குட்டியை பபூன் குரங்கு ஒன்று தூக்கிச் சென்று பராமரித்து வருகிறது. மரத்தில் ஏறி உச்சிக்கு செல்லும்போதும், மரம்விட்டு மரம் தாவும்போதும் சிங்கக்குட்டியை தன்னுடனேயே தூக்கிச் சென்று பத்திரமாக வைத்து கொள்கிறது. ஹர்ட் ஸ்கல்ட்ஸ் (Kurt Schultz) என்பவரால் கடந்த 1ம் தேதி இக்காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அக்காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. https://www.polimernews.com/dnews/99303/தாயில்லாத-சிங்கக்குட்டியைதனது-குழந்தையாக-பாவித…
-
- 0 replies
- 618 views
-
-
பயமுறுத்தும் கொரோனா.. டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு.. ஆஸ்திரேலியா செய்திதாள் நிறுவனம் செய்த காரியம் பிரபல ஆஸ்திரேலிய செய்தித்தாள் நிறுவனம் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வாடிக்கையாளர்களிடையே பீதி ஏற்பட்டதால், எங்கே கிடைக்காமல் போய்விடுமா என்ற அச்சத்தில் அனைவரும் கழிப்பறை காகிதத்தை தேடி அலைகிறார்கள். இதற்கு ஆஸ்திரேலியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மக்கள் கழிப்பறி காகிதத்தை பயன்படுத்த கூடுதல் பக்கங்களை தனது செய்திதாளில் இரண்டு பக்கங்களை ஒன்றும் இல்லாமல் அச்சிட்டுள்ளது. சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி விட்டது. சீனாவில் மட்டும் கொரோன வைரஸ் தாக்கி 3200 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாட…
-
- 2 replies
- 399 views
-
-
துபாய்: பெரும் பணத்தை வரதட்சணையாக கொடுத்து 15வயது சிறுமியை மணந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் 90 வயதான சவூதி அரேபியா நபர் ஒருவர். இந்த வயது முதிர்ந்த தாத்தாவுக்குக் கட்டி வைக்கப்பட்ட அந்த சிறுமி, 2 நாட்கள் பெட்ரூம் கதவை மூடிக் கொண்டு பயத்தில் வெளியே வராமலேயே இருந்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்து தப்பி தனது வீட்டுக்கு ஓடி விட்டார். சவூதி அரேபியாவில் இந்த திருமணம் பெரும் பரபரப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தனது திருமணம் சட்டப்பூர்வமானதே என்று அந்த 90 வயது சவூதி அரேபிய நபர் கூறுகிறார். மேலும், அந்தச் சிறுமியை மணப்பதற்காக 17,500 டாலர் பணத்தை சிறுமியின் பெற்றோரிடம் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த சிறுமி ஏமன் நாட்டைச் சேர்ந்த தந்தைக்க…
-
- 7 replies
- 866 views
-
-
திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் அரசாங்கம் உறுதி வழங்கியது போன்று தமக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருமாறு கோரி திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம்(16) மேற்கொண்டனர். அரசாங்கம் நாட்டிலுள்ள ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ள நிலையில் புறகணிக்கப்பட்ட மேலும் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இணைத்துக்கொள்வதாக கூறியும் இதுவரை தமக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லையெனவும் துரித கதியில் வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரியே திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதில் ஐம்பதிற்கு…
-
- 0 replies
- 246 views
-
-
இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த எம்.எல்.ஏ : "சிடி'க்கள் வெளியானது. கர்நாடக மாநிலத்தில் உள்ளூர் கேபிள் டிவி ஒன்றில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ ஒருவர் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை ஒளிபரப்பதானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாரதிய ஜனதா தலைவர்கள் அதிர்ச்சியைடந்துள்ளனர். கர்நாடகா சட்டசபையில், பா.ஜ., அமைச்சர்கள், மொபைல் போனில் ஆபாச படம் பார்த்த சர்சை இன்னும் ஓயாத நிலையில், அம்மாநில உடுப்பி தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., ரகுபதி பட் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இவர், இளம் பெண் ஒருவருடன், உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள், உடுப்பி மாவட்டம் முழுவதும், உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. நேற்று காலை, தனியார் தொலைக்காட்சி ஒன்று, மாநிலம் முழுவதும், இந்த வீடிய…
-
- 1 reply
- 976 views
-
-
http://www.youtube.com/watch?v=b26Z1dEb5ZE இணையத்தில்... இந்தப் படத்தை பார்த்த போது... தென்னிந்தியா அல்லது நம்மூர் போன்ற இடத்தில் நடந்த சம்பவம் மாதிரி தெரிகின்றது. வானத்தில் இருந்து திடீரென விழுந்து, எரிந்த "சற்றலைற்றைப்" பற்றிய செய்தி என்றால்... பத்திரிகைள், தொலைக்காட்சியில்... செய்தி வந்திருக்க வேண்டும். எனது கண்ணில் எதுவும் படவில்லை. இதனைப் பற்றிய.. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
-
- 12 replies
- 751 views
-
-
முதலமைச்சரை முட்டியது குட்டியானை :அடுத்தடுத்து இரண்டு முறை முட்டியதால் நிலை குலைந்தார் ஜெயலலிதா ( படங்கள் ) முதல்வர் ஜெயலலிதா தற்போது கொடநாட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் முதுமலையில் யானைகள் காப்பகத்திற்கு சென்றார். அங்கே அவருக்கு 24 யானைகளை வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. வரவேற்பு கொடுத்த யானைகளுக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர் ஜெயலலிதா. காவேரி என்ற 2 வயது யானைக்கு பழம் கொடுத்து கொஞ்சிக்கொண்டிருந்தார் முதல்வர். அப்போது காவேரி யானை தும்பிக்கையால் முதல்வரை முட்டியது. மீண்டும் ஒரு முறை இவ்வாறு செய்தது காவேரி. இத னால் நிலை குலைந்துபோனார் முதல்வர். உடன் இருந்த அதிகாரிகள் முதல்வருக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொண்டனர்…
-
- 9 replies
- 1.1k views
-