செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
உலகின் அதி உயர குழந்தை : வயது இரண்டரை, உயரம் 4 அடி 5அங்குலம்! (படங்கள் இணைப்பு) உலகின் உயரமான குழந்தையாக இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த கரன் சிங் கருதப்படுகின்றார். இரண்டரை வயதான இக்குழந்தையின் தற்போதைய உயரம் 4 அடி 5 அங்குலங்கள். 7 அடி 2 அங்குலமான இவரது தாயார் ஆசியாவின் உயரமான பெண்மணியென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு கூடைப்பந்து வீராங்கனையாவர். இதே வயதையொத்த குழந்தைகளைவிட இவர் சுமார் 2 மடங்கு உயரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிறக்கும் போதே இக்குழந்தை 2 அடி உயரம் இருந்ததாகவும், தன்னை விட உயரமாக, தன் மகன் வளர்வான் எனவும் கரனின் தாயார் தெரிவித்துள்ளார். கர…
-
- 3 replies
- 651 views
-
-
உலகின் அதி குள்ள மனிதர் காலமானார்! உஅலகிலேயே அதிகம் குள்ளமான நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திரா உலகின் உயரத்தில் மிகவும் குள்ளமானவர் என ‘கின்னஸ்’ சாதனையில் இடம்பெற்றவரான நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திரா தாபா மகர் சுகவீனம் காரணமாக இன்று மரணமாநதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ககேந்திரா 67.08 செ.மீ. (2′ 2.41″) உயரமும், 6 கி.கி. எடையுமுள்ள இவர் சளி சுரம் காரணமாக, அவர் வாழ்ந்து வந்த பொக்காரா என்னுமிடத்தில், மருத்துவமனையில் காலமானார். இறக்கும்போது இவருக்கு 27 வயது. இவரது மரணம் குறித்து கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அனுதாபம் தெரிவித்துள்ளது. ககேந்திராவுக்குப் 18 வயது ஆகும்போது, 2010 ம் ஆண்டு,…
-
- 0 replies
- 733 views
-
-
வீரகேசரி இணையம் 11/3/2011 2:17:55 PM உலகின் அதி சக்தி வாய்ந்த நபர்களில் இரண்டாவது நபராக ரஷ்யப் பிரதமர் புடினைத் தெரிவு செய்துள்ளது போர்ப்ஸ் சஞ்சிகை. அமெரிக்க ஜனாதிபதி பராக ஒபாமா இப்பட்டியலில் முதலாவது இடத்தினைப் பெற்றுள்ளார். ஒவ்வொரு வருடமும் உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலை அச்சஞ்சிகை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் ரஷ்யப் பிரதமர் புடின் 2 ஆவது அதிசக்தி வாய்ந்த நபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புடின் தற்போது ரஷ்யாவின் பிரதமாரக மட்டுமே உள்ள நிலையில், அவர் இவ்விடத்தினை தக்கவைத்திருப்பதே அதற்கான காரணம் என்றும் கூறப்படுகி…
-
- 1 reply
- 979 views
-
-
உலகின் அதிக எடையுள்ள பெண் காலமானார்! உலகில் அதிக எடை உள்ள பெண், இமான் அஹமது அப்துல்லாடி. எகிப்து நாட்டைச் சேர்ந்த 37 வயதான இமான் இன்று அதிகாலை உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்தினார். எகிப்தில் இருந்து கிட்டத்தட்ட 500 கிலோ எடையோடு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்தார் இமான். அவருக்கு 'பேரியாட்ரிக் சர்ஜரி' (Bariatric Surgery) எனப்படும் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், கிட்டத்தட்ட 250 கிலோ வரை எடை குறைந்தார் இமான். ஆனால், எடை குறைப்புக்குப் பிறகு அவர் மிகவும் மோசமடைந்துவிட்டதாக தகவல் வெளியானது. பல்வேறு உடல்நலக் கோளாறு காரணமாக அபுதாபியில் இருக்கும் புர்ஜீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இமான் கால…
-
- 0 replies
- 693 views
-
-
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளதக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் தொடர்பாக 2014 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்டியலை ஐ.நா. வெளியிட்டது. ஜப்பானின் டோக்கியோ நகரம் முதலிடத்தில் உள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை அடிப்படையில் 23 மில்லியன் மக்கள் தொகையுடன் ஷாங்காய் 3 ஆவது இடத்திலும், மெக்சிகோ சிட்டி 4 ஆவது இடத்திலும், மும்பை 5 ஆவது இடத்திலும் உள்ளது. 1990 ஆம் ஆண்டில் இருந்து டெல்லியின் மக்கள் தொகை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. டோக்கியோவில் மக்கள் தொகை 38 மில்லியனாக இருக்கும் என்றும், இந்த மக்கள் தொகை குறைய வாய்…
-
- 3 replies
- 453 views
-
-
டோக்கியோ: உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமை பெற்ற ஜப்பான் பாட்டி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 115. உலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த டினா மான்ஃப்ரெடினி 115 வயதான இவர் கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமைக்கு உரியவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த கோட்டோ ஒக்குபோ (115 வயது) என்பவர் கருதப்பட்டார். 24.12.1897-ல் பிறந்த இவர் கிழக்கு ஜப்பானில் உள்ள கவாசாக்கி நகரில் மகனுடன் வாழ்ந்து வந்தார். கடந்த 27 நாட்களாக கோட்டோ ஒக்குபோதான் உலகின் வயதான பெண்மணி என்ற பெருமையை பெற்றிருந்தார். இந்தநிலையில் சில நாட்களாக காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், கவாசா…
-
- 0 replies
- 488 views
-
-
உலகிலேயே உயரமான கட்டிடம் சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் செங்கடலின் ஓரத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் த கிங்டம் டவர் என்பதே. இந்தக் கட்டிடத்தில் வீடுகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டிடத்தின் உயரமே இதற்குப் பெருமை சேர்க்கிறது. இது போதாதென்று இதற்கு மற்றொரு பெருமையும் சேரப்போகிறது. உலகிலேயே உயர்ந்து நின்றால் போதுமா உயரத்தையும் விரைவாக எட்ட வேண்டும் என்ற ஆசை வருமல்லவா? அதுதான் அடுத்த பெருமை. இங்கு அமையவிருக்கும் லிஃப்ட் உலகின் மிக வேகமானது என்கிறார்கள். இது வினாடிக்கு 32 அடி 10 மீட்டர் - உயரம் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த லிஃப்ட் ஃபின்லாந்து நாட்டில் தயாராகிறது. மின் தூக்கிகள் தயாரிப்பில் …
-
- 0 replies
- 572 views
-
-
பிரேசிலைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர், உலகின் மிக இளம் கோடீஸ்வரராக ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் பெயரிடப்பட்டுள்ளார். 19 வயதான லிவியா வோய்க்ட் 2024 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் இதழின் பில்லியனர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் அவரது வருமானம் $1.1 பில்லியன் ஆகும். லத்தீன் அமெரிக்காவில் உள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் ஒரே பங்குதாரராக லிவியா வோய்க்ட் இந்த பில்லியனர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 25 பில்லியனர்களும் 33 வயதுக்குட்பட்டவர்கள் என்பது சிறப்பு. https://thinakkural.lk/article/298403
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
எனக்கு உயரமான படிகளில் இருந்து இறங்கும் போதே இலேசாக வயிற்றினுள் எதோ நெளிவது போல் இருக்கும்...இந்தாள் எப்படி இப்படி குதிக்குதோ தெரியாது
-
- 0 replies
- 748 views
-
-
உலகின் உயரமான உணவு விடுதி துபாய், உலகின் மிகப் பெரிய வணிக மையம். ஐரோப்பிய நாடுகளும்கூட வணிகத் தொடர்புகளுக்காக துபாயை நம்பியுள்ளன. துபாயின் மற்றுமோர் சிறப்பு வானுயர் கட்டிடங்கள். அந்தப் பட்டியலில் இணையவுள்ள இன்னுமோர் புதிய கட்டிடம் மேடன் டவர். துபாயில் 2009-ம் ஆண்டு கட்டப்பட்ட புர்ஜி கலிபா கட்டிடம் இதுவரை அந்நகருக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இதன் உயரம் 829.8 மீட்டர். உலகின் மிக உயரமான கட்டிடம் இது. மேடான் ஒன் என்னும் பெயரிடப்பட்ட இந்தத் திட்டம் 711 மீட்டர் உயரம் அளவு கட்டப்படவுள்ளது. இந்தக் கட்டிடத்துக்குள் 350 அறைகள் கொண்ட ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று உள்ளது. இது தவிர 900 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும் இந்தக் கட்டிடத்தி…
-
- 0 replies
- 233 views
-
-
http://www.youtube.com/watch?v=GgNCW_hJgro மேலேயுள்ள காணொளியில், அமீரகத்திலுள்ள துபாய் மால்(Dubai Mall) அண்மித்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான 'புர்ஜ் கலிஃபா' (Burj Khalifa) வின் உச்சிக்கு (உயரம் : 828 Metres) ஏறும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 'ஆலன் ராபர்ட்' உலகின் பல கட்டிடங்களில் எந்தவித உதவிப் பொருட்கள் இல்லாமல் ஏறி சாதனை படைத்தவர். துபாயின் இக்கட்டிடத்தில், இம்மாதம் 28ந் தேதி அரசின் பாதுகாப்பு அறிவுறுத்தலால் சில இடங்களில் கயிற்றின் உதவியுடன் மேலே எறி கட்டிடதின் உச்சியை எட்டினார்.
-
- 8 replies
- 778 views
-
-
உலகின் உயரமான மனிதன் - தினசரி வாழ்வில் சந்திக்கும் சிக்கல் கட்டுரை தகவல் எழுதியவர்,ஃபவர் நுன்னு பதவி,பிபிசி செய்திகள் பிட்ஜின் 24 நிமிடங்களுக்கு முன்னர் உலகின் உயரமான மனிதராக வடக்கு கானாவை சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் உயரத்தை அளக்க போதிய வசதிகள் இல்லாததால், அவரின் சாதனையை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. உள்ளூரில் இருக்கும் மருத்துவமனையில், இவரின் உயரத்தை துல்லியமாக அளக்க உதவும் கருவிகள் இல்லாத காணப்படுகிறது. "அளக்க டேப் இல்லை" வடக்கு கானாவில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு சமீபத்தில் வழ…
-
- 1 reply
- 230 views
- 1 follower
-
-
உலகின் உயர்ந்த மனிதரும், குட்டை மனிதரும் லண்டனில் சந்தித்துக் கொண்டனர் உலகின் மிக உயர்ந்த மனிதரும், மிகக் குட்டையான மனிதரும் முதற்தடவையாக சந்தித்துக் கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு லண்டனில் இடம்பெற்றுள்ளது. உலக கின்னஸ் சாதனை தினத்தை முன்னிட்டு லண்டனில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக உலகின் மிக உயர்ந்த மனிதரும், மிகக் குட்டையான மனிதரும் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளனர். இதற்கிடையிலேயே இருவரும் சந்தித்துள்ளனர். நேபாள நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய சந்திரா பஹாடுர் டாங்கி (Chandra Bahadur Dangi) உலகிலேயே மிகவும் குட்டையான நபராக கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியுள்ளார். இவரது உயரம் 54.6 சென்றி மீற்றராகும். இவரது எடை 15 கிலோ கிரா…
-
- 4 replies
- 775 views
-
-
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சில பகுதிகளை கைபற்றி அதை தனிநாடாக அறிவித்து உள்ளனர். தங்கள் பகுதியில் வாழும் குர்தீஸ் இன பெண்கள் மற்றும் சிறுவர்களை பிடித்து பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர். இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை ‘செக்ஸ்’அடிமைகளாக வைத்துள்ளனர். இவர்களை ஏலத்தில் விட்டு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். யாஷ்டி இன பெண்களை விலைபட்டியலிட்டு ஆடுமாடுகள் போல் விற்பனை செய்யும் கொடுமையும் நடைபெறுகிறது. வயது வாரியாக பிரித்து விலைபட்டியலிட்டு உள்ளனர். 40 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் 27 அமெரிக்க டாலர்30 முதல் 40 வயதுவரை உள்ள பெண்கள் 48 அமெரிக்க டாலர்30 முதல் 30 வயது வரை உள்ள பெணகள் 86 அமெரிக்க டாலர்10 முதல் 20 வயது வரை உள்ள பெண்கள் 130 அமெரிக்க டாலர்1 முதல் …
-
- 1 reply
- 547 views
-
-
உலகின் குண்டுமனிதர் மாரடைப்பால் மரணம் மெக்சிகோ : மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்டிரஸ் மொரினோ (38) உலகின் மிக குண்டான மனிதராக கருதப்பட்டார். இவரது எடை 450 கிலோ. தனது உடல் எடையை குறைக்க விரும்பிய மொரினோவுக்கு அக்டோபர் 28ம் தேதி எடை குறைப்பிற்கான அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதனையடுத்து 100 கிலோவாக மொரினோவின் உடல் எடை குறைந்தது. மெல்ல மெல்ல உடல்நிலை தேறி வந்த மொரினோவிற்கு நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், மொரினோ உயிரிழந்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1419322
-
- 1 reply
- 648 views
-
-
தென் சீன நகரான யுலினில் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பை தவிர்க்கும் வகையில் கோடை கால நாய் இறைச்சி உண்ணும் கொண்டாட்டங்கள் முன்கூட்டியே இடம்பெற்றன. வருடத்தின் நீண்ட நாளை குறிக்கும் மேற்படி கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமையே இடம்பெற வேண்டியிருந்த போதும் இந்த விழாவையொட்டி இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்கும் முகமாக முன்கூட்டியே அந்த விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவையொட்டி நாய்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுவதற்கு மிருக உரிமைகள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. http://virakesari.lk/articles/2014/06/20/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82…
-
- 0 replies
- 566 views
-
-
உலகின் சக்திவாய்ந்த கடவுச் சீட்டு உங்கள் கைகளில் இருக்கிறதா ? இக் கேள்வியினை உங்களிடம் யாரவது கேட்டால் ” இருந்தால் நான் ஏன் இஞ்ச இருக்குறன்” என்று செல்லமாய் நீங்கள் அலுத்துக்கொல்வது எமக்கு விளங்குகிறது … ஆனாலும் அவ் அதிர்ஷ்டசாலிகள் நாமில்லை என்பது தான் சற்று வருத்தமான செய்தி .சரி அப்படியானால் அவ் அதிர்ஷ்டக்கார நாட்டவர்கள் யார் என்று இயல்பாய் உங்கள் மனங்களில் ஓர் கேள்வி எழும் ஆம் அதற்கான சரியான விடை சுவீடன் நாட்டவர்கள் என்பதேயாகும். இதோ உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டினை கொண்டுள்ள ஏனைய நாடுகள் GoEuro எனும் இணையம் உலகின் 51 நாடுகளை இவ்வாறு வருசைப்படுதி இருக்கிறது குறித்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி எத்தனை நாடுகளிற்கு வீசா இன்றி பயணிக்கலாம் என்பதனை அளவுகோலாக வைத்து இந…
-
- 2 replies
- 371 views
-
-
உலகின் மிகவும் செலவுமிக்க நகரம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு? எங்கு வாழ்வது அதிக செலவு சாப்பிடக்கூடியது? நியூயோர்க்? மொஸ்கோ? டோக்கியோ? பாரிஸ்? நிச்சயமாக இல்லை. ஆப்பிரிக்க தேசமான அங்கோலாவின் தலைநகரம் லுவாண்டாவைச் சுட்டிக்காட்டுகின்றன புள்ளிவிவரங்கள். என்னடா விசேடம் என்று பார்த்தால் மொஸ்கோவில் நாலாயிரத்தி ஐந்நூறு டொலர் (மாதாந்திர வாடகைக்குக் கிடைக்கக்கூடிய ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்கு இங்கே பத்தாயிரம் டொலர் கொடுத்தாக வேண்டும். இந்தியாவில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் ஓரளவு டீசண்ட்டான ஓட்டல் அறை கிடைத்துவிடும். லுவாண்டாவில் அதற்கு ஆறாயிரத்தி முன்னூறு டொலர் கொடுத்தாக வேண்டும். ஒரு ஃபுல் மீல்ஸுக்கு 8 டொலர். சாப்பாடு, போக்குவரத்து, பொழுதுபோக்கு என்று …
-
- 8 replies
- 1.2k views
-
-
உலகின் பணக்கார செல்லப்பிராணியாக ஆறாம் குந்தர் என்ற வளர்ப்பு நாய் கருதப்படுகிறது. இந்த நாயானது, ஹாமா தீவுகளில் சொந்தமாக வீடு முதல் சொந்தமாக ஆடம்பரப் படகு என்று செல்வந்த மனிதர்களுக்கு இணையாக வாழந்து வருகிறது. குறிந்த செல்வந்த நாய், பாடகி மடோனா முன்னர் வாழ்ந்து வந்த வீட்டில் தற்போது வாழந்து வருகிறது. ஜெர்மன் ஷெபர்ட் வகையை சேர்ந்த இந்த நாயின் வீடானது, 65 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய ஒரு வீடாகும். இந்நிலையில், ஆறாம் குந்தரின் சொத்து மதிப்பு, 300 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது. அதேவேளை, குந்தனின் முன்னாள் உரிமையாளரான செல்வந்தரான Karlotta Leibenstein என்னும் ஜேர்மானிய சீமாட்டி, தான் மரணமடையும் நேரத்தில் தனக்கு குடும்பம் என்று எதுவு…
-
-
- 2 replies
- 514 views
- 1 follower
-
-
உலகின் பிரமாண்ட சுவரோவியம்! (வீடியோ) நார்வே நாட்டில் Nuart festival என்ற பெயரில் ஓவியக் கலைஞர்களுக்கான திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு ஓவியக் கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார். இதில் பிரெஞ்சு ஓவியர்களான எல்லா (Ella) மற்றும் பிட் (Pitr) இருவரும் சேர்ந்து வரைந்த 'Lilith and Olaf' என்ற ஓவியம் பலரையும் பிரமிக்க வைத்தது. இந்த ஓவியம் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், நார்வே தொழிற்சாலைக் கட்டடங்களுக்கு மேல் பரந்து விரிந்துள்ளது. அதன் வீடியோவை காண... http://www.vikatan.com/news/article.php?aid=52288
-
- 0 replies
- 475 views
-
-
உலகின் மிக நீளமான பிரமாண்ட பயணிகள் பொழுது போக்கு கப்பலை ரோயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கப்பலில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் இருக்கின்றன. 20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு பிரிவு சுற்றுலா செல்வோர் தங்க நவீன வசதிகளுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன. 6 நீர் வீழ்ச்சி, 7 நீச்சல் குளங்கள், ஒரு பனிக்கட்டி சறுக்கு மைதானம் இந்த கப்பலுக்குள் இருக்கிறது. 3 தியேட்டர்கள், 40 ஓட்டல்கள், பார்கள் இருக்கின்றன. இந்த பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு உதவி செய்ய 2,350 பணியாளர்கள் கப்பலில் இடம் பெற்றுள்ளனர். மொத்தத்தில் 10 ஆயிரம் பேருடன் இந்த பிரமாண…
-
- 0 replies
- 393 views
- 1 follower
-
-
உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்...ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிசம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வள…
-
- 3 replies
- 1k views
-
-
உலகின் மகிழ்ச்சி மிகுந்த மக்களில் இந்தியர்கள் முன்னிலை! - பானுமதி அருணாசலம் உலகில் மகிழ்ச்சியாக வாழும் மக்களில், இந்தியர்கள் முன்னிலை வகிப்பதாக கூறுகிறது, ஒரு புதிய ஆய்வு! சந்தோஷமாக வாழும் மக்கள் யார்? என்ற ரீதியில் உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் சர்வே ஒன்றை எடுத்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது, உலக ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ். கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து, உலகின் 24 நாடுகளைச் சேர்ந்த 18,000-க்கும் மேற்பட்டோரிடம் இந்தக் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சர்வே முடிவின்படி, 10-ல் 8 பேர் தாங்கள் 'மகிழ்ச்சியாக' இருக்கிறோம் என்று பதில் கூறியுள்ளனர். உலக மக்களில் 20% பேர் 'மிக்க மகிழ்ச்சியாக' இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். …
-
- 17 replies
- 1.1k views
-
-
உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல் 2025 ஆண்டுக்கான உலகின் மிக அழகான டாப் 10 பெண்கள் பட்டியலை IMDB தளம் வெளியிட்டுள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள நடிகைகள் யார் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உலகில் மிக அழகான பெண்களின் டாப் 10 பட்டியலில் ஹாலிவுட் நடிகை மார்கொட் ராபி முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க நடிகை ஷைலீன் உட்லி இரண்டாவது இடத்தையும், சீன நடிகை தில்ரபா தில்முரத் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். நான்காம் இடத்தில கொரிய நடிகை நான்சி மெக்டோனி உள்ளார். அழகான பெண்கள் வரிசையில் இந்திய நடிகை க்ரீத்தி சனோன் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். இந்திய சினிமாவிலிருந்து இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே நடிகை இவர்தான் என்பது குறிப்பிடத…
-
-
- 5 replies
- 383 views
-
-
உலகின் மிக அழகான பெண்ணாக ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா தேர்வு, Hollywood actress Sandra choice of the world's most beautiful woman The US-based celebrity 'People' magazine, 2015, the world's most beautiful woman in Hollywood actress Sandra puller, choosing releasing his picture on the cover. The 50-year-old actress won an Oscar. Sandra Bullock has been chosen as the world's most beautiful woman commented, '' which is the subject of ridicule. I did not tell anyone about it. My 5 year old son and I will be a mother to Beauty, '' he said that, '' the real beauty is silent. And in this city. I want to be like him, does not have to be a good person. But to be a good mother…
-
- 0 replies
- 517 views
-