செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7091 topics in this forum
-
13 இலக்கத்தை துரதிஷ்டவசமாக கருதும் மேற்குலக மக்கள் அதிலும் வெள்ளிக்கிழமை 13 ம் திகதி என்றால் அது மிகவும் வேண்டப்படாத நாளாக நினைக்கிறார்கள். ஜேசு கிறீஸ்த்து தனது 12 சீடர்களுடன் 13 வது ஆளாக வியாழக்கிழமை இரவு உணவருந்திய பின்னர் வெள்ளிக்கிழமை சிலுவையிலறையபட்ட வரலாற்றிருந்து இந்த இந்த எண்ணம் மக்கள் மத்தியில் நிலைத்துவிட்டது 13ஆம் திகதி வெள்ளிக்கிழமையான நேற்றைய தினத்தை துரதிஷ்டமான நாளாகவே ஐரோப்பிய மக்கள் கருதுகின்றனர். பலர் வாகனங்களை ஓட்டுவதற்கு கூட தவிர்த்து கொள்கின்றனர். நேற்றைய தினம் வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. பதிமூன்று என்ற எண் பலராலும் ஒரு துரதிஷ்டவசமான எண்ணாகவே எண்ணப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய கால மன்னராட்சிகளில், மேலை நாடுகளிலும் சரி, கீழை…
-
- 2 replies
- 805 views
-
-
விருதுநகர்: தனது கள்ளக் காதலியை அதிகாரிகளுக்கு விருந்து வைத்த விருதுநகர் டி.ஆர்.ஓ. அலுவலக டிரைவர் மனோகரன் அடித்துக் கொல்லப்படார். விருதுநகரில் உள்ள இந்திராநகர் ஏரியாவைச் சேர்ந்தவர் மனோகரன் (45) டி.ஆர்.ஓ. அலுவலகத்தில் கார் டிரைவராக பணியாற்றியவர். கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி அலுவலகம் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றவர், வீடு திரும்பவில்லை. கணவர் வீடு திரும்பாததால் கலங்கிப் போன மனோகரனின் மனைவி திருச்செல்வி, மறுநாள் போலீஸில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் மனோகரனுக்கு ஏகப்பட்ட பெண்களோடு தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. மனோகரனின் செல்போன் தொடர்புகளை துருவிய போலீஸாருக்கு, பாண்டிச்செல்வி என்ற பெண்மணி மீது சந்தேகம் வலுத்தது. தனது வீட்டருகே பெட்டிக்கடை நடத்தும் ஆறுமு…
-
- 0 replies
- 805 views
-
-
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் தாய்ப்பாலில் டீ போட்டு குடிக்கிறதாம் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் பாடகியுமான மைலீன் கலாஸ் குடும்பம்! இங்கிலாந்து நாட்டு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக, பாடகியாக வலம் வரும் மைலீன் கலாஸ் ஷாக்கான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். பாரம்பரியம் என்ற பெயரில் தமது தாய்பாலில்தான் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் டீ போட்டுக் கொடுக்கிறாராம்.. அதென்னங்க பாரம்பரியம் என்று கேட்டால் எங்கப்பா இப்படித்தான் செய்தார் என்கிறார் மைலீன் கலாஸ்... மைலீன் கலாஸின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. அவர் தமது மனைவியின் தாய்ப்பாலில்தான் டீ போட்டு குடித்து சந்தோஷப்பட்டாராம்.. அதைப் பார்த்து தாமும் அதையே பின்பற்றத் தொடங்கிவிட்டாராம். இதுல எவ்ளோ சந்தோசம் இருக்கிறது தெ…
-
- 5 replies
- 805 views
-
-
கமலா ஹாரீஸ் பற்றி கமென்ட்... மன்னிப்பு கேட்டார் ஒபாமா அட்டர்னி ஜெனரல் கமலா ஹரீஸ் பற்றி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாகப் பணிபுரிந்து வருபவர் இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ். வியாழன் அன்று, வாஷிங்டனில் அதிபர் ஒபாமாவுடன் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, ஒபாமா அவரது பணியாற்றும் திறமையையும், அழகையும் புகழ்ந்தார். சமூக வலைத்தளங்கள், இணையதளங்களிலும் உடனடியாக இது தொடர்பான செய்திகள் வெளியாகின. முக்கிய பொறுப்பில் இருப்பவரின் அழகை அதிபர் வெளிப்படையாக புகழ்ந்தது தவறான செயலாகும் என்ற கருத்து எழுந்தது. பொது மேடையில் பெண்களின் அழகை வர்ணிப்பது அதிபர்…
-
- 9 replies
- 805 views
-
-
JAKARTA, Sept 6 (Reuters) - Seven dogs starved of food and water for two weeks are suspected of eating their Indonesian owner after he returned to his hometown in Manado from a holiday, local media reported on Tuesday. A neighbourhood guard was curious when he saw luggage lined up at the front of Andre Lumboga's house, days after the 50-year old arrived back home. He approached the house, smelled something foul and called the police, according to a report. "His skull was found in the kitchen, and his body was found in the front of his house," Eriyana, a local police chief in Batam, an island off Sumatra, told VIVAnews website. Lumboga arrived home last Wedn…
-
- 2 replies
- 804 views
-
-
டொரண்டோ: கனடாவைச் சேர்ந்த ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொள்வதை நேரடியாக இணைய தளத்தில் ஒளிபரப்பினார். இதனை 200க்கும் மேற்பட்டோர் பார்த்து 'ரசித்ததாகவும்' கூறப்படுகிறது. கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (20). கல்லூரி மாணவரான இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அதை ஒரு இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாகவும் அறிவித்தார். அதன்படி தான் தற்கொலைக்கு முயற்சி செய்யும் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பினார். அதை ஒரு சிலர் மட்டுமே பார்க்கவில்லை. இவனுக்கு வேறு வேலை இல்லை என கூறி இணையதளத்தை ‘ஆப்' செய்தனர். ஆனால், பெரும்பாலானவர்கள் நேரில் பார்த்து ரசித்தனர். தொடக்கத்தில், மாணவர் ஸ்டீபன் சில மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் குடித்தார். பின்னர் வோட்கா மதுவை குடி…
-
- 2 replies
- 804 views
-
-
10 வயதான சிறுவனொருவன் தனது பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களின் காரை செலுத்திச் சென்ற வேளை பொலிஸார் சோதனையிட்டபோது தான் குள்ளமான ஒரு மனிதன் எனவும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வீட்டில் மறதியாக வைத்துவிட்டு வந்ததாகவும் கூறிய சம்பவம் நோர்வேயில் இடம்பெறுள்ளது. ஒஸ்லோவிலிருந்து 110 கிலோமீற்றர் தொலைவிலுள்ள டோக்கா நகரில் வகிக்கும் இச்சிறுவன் அண்மையில் ஒரு நாள் காலை 6 மணியளவில் வீட்டிலிருந்து காரை செலுத்திக்கொண்டு 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தனது தாத்தா பாட்டியின் வீட்டைநோக்கி புறப்பட்டான். காருக்குள் தனது 18 மாத வயதுடையு தங்கையையும் வைத்துக்கொண்டான். அவ்வேளையில் அச்சிறுவனின் பெற்றோர்வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனராம். இச்சிறுவன் 10 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை கடந்து சென்று…
-
- 1 reply
- 804 views
-
-
திங்கள் 03-09-2007 01:42 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] "புலிகளின் பொறுமைக்குப் பின்னால்..!" வழமை போலவே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயும் அதனை மீளுரைத்துள்ளார். கிழக்கிற்கு செல்வதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் அனுமதி தேவைப்பட்டது. இப்போது அது தேவையற்றதாகி விட்டது. அதுபோல் வடக்கில் வன்னியையும் விரைவில் கைப்பற்றி அங்கும் நாம் அங்கு சுதந்திரமாக சென்று வருவோம் என பெர்ணான்டோபுள்ளே கூறியிருக்கிறார். கோத்தபாய அநுராதபுரத்தில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்த இன்னொரு விடயத்தை நாம் அவதானிக்க வேண்டும். படையினரின் கவனத்தை திசைதிருப்பி நிலையற்ற தன்மையை எற்படுத்த விடுதலைப் புலிகள் முயற்சிப்பதாகவும், கிழக்கை மீண்டும் விடுதலைப் புலிகள் கைப்பற்ற இடமளிக்கப்போவதில்லை எனவும்…
-
- 0 replies
- 804 views
-
-
வாஷிங்டன் : எவ்வளவுதான் வேலைச் சுமை, கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் கடவுள் நம்பிக்கையும் இருந்தால் மன அழுத்தத்தில் இருந்து விரைவில் விடுபடலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மனஅழுத்தத்தில் இருந்து விடுபடும் வழிகள் பற்றி கனடாவின் டொரன் டோ நகரில் உள்ள ஸ்கார்பெரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். முதல் கட்டமாக இவர்களிடம் பல சோதனைகள் நடத்தப்பட்டன. ஆய்வு முடிவுகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த விவரம் வருமாறு: தவறு செய்தவர்கள், தவறு செய்யாதவர்கள் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஆய்வு நடந்தது. இரு தரப்பினரது மூளையின் செயல்பாடுகளும் ஆராயப்பட்டன. தவறு செய்யாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருந்தது. இதுவே …
-
- 0 replies
- 804 views
-
-
சிறிலங்கா அரசு கூறும் புலிகளின் உயிரிழப்புத் தொகை குடாநாட்டு மக்கள் தொகையின் 2 மடங்கு: "சண்டே ரைம்ஸ்" கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கங்களினால் கூறப்பட்டு வரும் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மொத்த மக்களும் இரு தடவைகளுக்கு மேல் உயிரிழந்திருக்க வேண்டும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தனது பத்தியில் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: போரில் "உண்மை தான்" முதலில் மரணத்தை தழுவுவது உண்டு. கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்ப…
-
- 1 reply
- 803 views
-
-
இலங்கையின் உள்விவகாரங்களில் தமிழகம் தலையீடு செய்யக் கூடாது எனதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன்தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை தமிழகத்திற்குகிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்ட பல தமிழகஅரசியல்வாதிகள் வாக்குகளை குவிக்கும் நோக்கில் இலங்கை விவகாரம் பற்றி பேசி வருவதாகக்குறிப்பிட்டுள்ளார். இந்த சூழ்ச்சித் திட்டங்களை அறியாத அப்பாவி பொதுமக்கள் இந்த அரசியல்வாதிகளின்கருத்துக்களை உண்மை என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களை பயன்படுத்தி தங்களது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்ளும் திட்டமானது துரதிஸ்டவசமானது என அவர் சுட்டிக்காட்டி…
-
- 1 reply
- 803 views
-
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மிக புதுமையான ஓட்டல் ஒன்று நாளை (11-ந்தேதி) திறக்கப்பட உள்ளது. செயற்கையாக தயாரிக்கப்படாமல் முற்றிலும் இயற்கை முறையில்தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன.தயாரித்து வழங்கப்படும் உணவு வகைகளில் தூய்மை கேடுகள் எதுவும் இருக்காது. அதில் ரசாயன பொருட்கள், செயற்கை தனமான வண்ணங்கள் கலக்கப்பட மாட்டாது. உணவு சாப்பிடும் இடத்தில் மின்சார வசதி, செல்போன் மற்றும் டெலிபோன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களோ கிடையாது. இவை அனைத்தையும் விட உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் உடைகள் எதுவும் அணியாமல் நிர்வாணமாக அமர்ந்து பொழுதை கழிக்கலாம். அல்லது பாதி உடை அணிந்து அரை நிர்வாணமாகவும் உணவு அருந்தலாம்.இங்கு ஒயின் மட்டுமே சப்ளை செய்யப்பட…
-
- 9 replies
- 803 views
-
-
அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கில் நாள்தோறும் நடக்கும் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் தொடர்கதையாய் இருக்க அதனால் ஆண்கள் கூட்டம் கூட்டமாய் செத்துமடிய, உயிருக்குப் போராடும் பிள்ளைகளைக் காக்க விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படும் ஈராக்கியப் பெண்களின் நிலை கல்நெஞ்சையும் உருக்கும் வகையில் இருக்கிறது. கடந்த வருடம் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஆயுதத் தாக்குதலில் தன் கணவரைப் பறிகொடுத்த ராணா ஜலீல் என்ற 38 வயது பெண், தன் குழந்தைகளைக் காப்பாற்ற தான் விபசாரியாக்கப்படுவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. நான்கு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண் தன் குடும்பத்தைக் காக்க ஒரு வேலை தேடி, கடந்த ஒருவருடமாக கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அமெரிக்கப் படையெடு…
-
- 0 replies
- 803 views
-
-
பெங்களூர்: தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது. மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் 6 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். நித்தியானந்தாவின் மதுரை ஆதீன மட வருகை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் மதுரை ஆதீனகர்த்தராக அவருக்கு முடி சூட்டப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் அருகே உள்ள பிடாதியில் உள்ள நித்தியானந்தாவி…
-
- 10 replies
- 802 views
-
-
அத்திலாந்திக் மாகடலை எல்லையாகக் கொண்ட ஐரோப்பிய நாடு போத்துக்கல் கி.பி 1143ல் நிறுவப்பட்டது. 15ம் நூற்றாண்டில் நீண்ட தூரக் கடற்பயணங்களை ஆரம்பித்த போத்துக்கல் மாலுமிகள் புதிய நிலப்பரப்புக்களின் கண்டுபிடிப்புக் காலத்தைத் (Age of discovery) தொடங்கினர். அமெரிக்கா, ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு போத்துக்கல் நாட்டுக் கப்பல்கள் சென்றன. போத்துக்கலுக்கும் பிறேசில், ஆபிரிக்கா, இந்தியா, சீனா, யப்பான். தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றிற்கும் இடையில் வர்த்தகக் கடற்பாதையை அமைத்தனர். போத்துக்கல் ஒரு பாரிய கடல் கடந்த சாம்ராச்சியத்தை உருவாக்கியது. 20ம் நூற்றாண்டு வரையில் போத்துக்கல் சாம்ராச்சியத்தின் சிறிய எச்சங்கள் இந்தியாவில் கோவா, இந்தோனேசியாவில் கிழக்கு திமோர், சீனாவில் மக்கங் மாத்தி…
-
- 4 replies
- 801 views
-
-
நெல்லை: நெல்லையைச் சேர்ந்த நான்கு மாணவிகள் மும்பையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் நான்கு பேரும் 3 மாணவர்களுடன் மும்பை போயுள்ளனர். இந்த மூன்று பேரும் காதலர்கள் என்று கூறப்படுகிறது. தங்களை ரவுடிக் கும்பல் பலாத்காரம் புரிந்ததாக மாணவிகள் கூறுவதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நான்கு மாணவிகளும் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ படித்து வருகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவிகள் நான்கு பேரும் தாங்கள் நெருக்கமாக பழகி வந்த 3 பேருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் 7 பேரும் மும்பை போயுள்ளனர். அங்குதான் பலாத்காரம் நடந்துள்ளது. தங்களது மகள்களைக் காணவில்லை என்று நெல்லை போ…
-
- 7 replies
- 801 views
-
-
மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். உலகில் கொரோனாவால் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. அங்கு சாலைகளில் நடமாட பலத்த கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. வளர்ப்பு பிராணிகள் இருந்தால் மட்டுமே அவற்றை காலையும் மாலையும் வாக்கிங் கூட்டிச் செல்ல வெளியே செல்லலாம் என அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த உத்தரவை சாமர்த்தியமாக மீறவே பலர் முயற்சி செய்து வருகின்றனர். நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளோடு வெளியே வந்தால் பரவாயில்லை. ஆனால் வெளியே வருவதற்காக மீன் பவுலில் ஒருவர் மீனை வாக்கிங் கூட்டிச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது. இதேபோல மற்றொருவர் பொம்மை நாயை எடுத்துச் சென்று காவ…
-
- 2 replies
- 801 views
-
-
வங்கி தவறுதலாக வைப்பிலிட்ட பணத்தை, செலவிட்ட தம்பதி மீது வழக்கு! அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள வங்கி ஒன்று, தங்களது வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் தவறுதலாக லட்சக்கணக்கான அமெரிக்க டொலர்கள் பணத்தை வைப்பிலிட்ட நிலையில், அதனை அவர்கள் முழுவதுமாக செலவு செய்துள்ளனர். ரொபர்ட் மற்றும் டிஃபானி வில்லியம்ஸ் ஜோடியின் வங்கி கணக்கில் 1,20,000 டொலர்கள் பணத்தை வங்கி தவறுதலாக வைப்பு செய்திருந்தது. அதில் அவர்கள் SUV கார், மற்றும் பிற பொருட்களை வாங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப்பணம் அவர்களுக்கு சொந்தம் இல்லை என்று தெரிந்தும், அவர்கள் அதனை செலவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்…
-
- 1 reply
- 800 views
-
-
ஆணுறை சந்தையில் புதிய அறிமுகம்; ஊறுகாய் நறுமண ஆணுறைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைMANFORCE CONDOMS இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கிட்டத்தட்ட முட்டாள்தனமாக பார்க்கப்படும் வகையில் ஊறுகாய் நறுமணம் கொண்ட ஆணுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேன்ஃபோர்ஸ் காண்டோம்ஸ் நிறுவனத்தின் இந்த சமீபத்திய உருவாக்கம் ஆணுறை சந்தையில் பரிச்சயமில்லாத பெருங்கூட்டத்தை ஆச்சரியப்…
-
- 3 replies
- 800 views
-
-
ஜேர்மனியில் சாலைகளை சுத்தம் செய்பவர்களுக்கு பீர் வழங்க அறக்கட்டளை நிறுவனம் ஒன்று தீர்மானம் செய்துள்ளது. ஜேர்மனியில் எசன்(Essen) என்ற அறக்கட்டளை நிறுவனத்தால் (Pick up Initiative) என்ற பெயருடன் சாலைகளை சுத்தம் செய்யும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு பீர் மட்டுமின்றி, உணவுடன் மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட உள்ளது. இந்த பணியில் முன்று முதல் ஆறு மணி நேரம் வேலை செய்வதற்கு வேலை இல்லாதவர்களும், ஆதரவற்றவர்களும் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது. மேலும் இதில் ஈடுபடுபவர்களுக்கு பீர் மட்டுமின்றி, கை செலவிற்காக ஒரு மணி நேரத்திற்கு 1.25 யூரோ கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அறக்கட்டளை நிறுவனம் கூறுகையில், இவ்வாறு பீர் கொடுத்தால் இ…
-
- 7 replies
- 799 views
-
-
சீனாவில் பரவும் புதிய வைரஸ் தொற்று- ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து சீனா முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே உருவான கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் தற்போது மற்றொரு வைரஸ் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோ சுகாதார ஆணையத்தின் தகவலின்படி புதிய வைரஸ் தொற்றால் சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து…
-
- 2 replies
- 799 views
-
-
உலகிலேயே மிகநீளமான மீசைக்காரர்! உலகத்திலேயே மிகப்பெரிய மீசையை கொண்ட நபர் யார் தெரியுமா? நம்மூர் நாட்டாமையகள் யாரும் கிடையாது. அஹமதாபாத்தை சேர்ந்த ஒருவரே அந்த பெருமைக்கு சொந்தக்காரர். ராம் சிங் சவுகான் என்பவர்தான் உலகில் மிக நீளமான மீசை கொண்ட மனிதராக விளங்குகிறார். 61 வயதான ராம் சிங் சவுகானின் மீசை 18 அடி நீளமானதாகும். உலகிலேயே மிக நீளமான மீசை இதுவென கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. http://pagetamil.com/?p=13196
-
- 7 replies
- 799 views
-
-
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன் மலை கோவில் உள்ளது. இந்தகோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்து மாங்கல்யம் கீழே விழுந்ததாக நேற்று இரவு பரபரப்பாக பேசப்பட்டது.இந்த சம்பவத்தினால் ஆண்களுக்கு ஆபத்து என்றும் எனவே பெண்கள் வீடுகள் முன்பு விளக்கு வைத்து வழிபட வேண்டும் என்று வேகமாக செய்தி பரவியது. ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு ஆண்கள் உள்ளார்களோ அந்த எண்ணிக்கையில் வீடுகள் முன்பு அகல் விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும் என்றும் இவ்வாறு விளக்கு வைத்து வழிபட்டால் ஆண்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் வதந்தி பரவியது. ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த வதந்தி பரவியது. ஈரோடு, கோபி, சத்தியங்கலம், பவானி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகள் ம…
-
- 1 reply
- 799 views
-
-
படக்குறிப்பு, கோவை தொழிலதிபர் ரஞ்சித்திடம் இருந்து பழனியாண்டி பணத்தை பெற்றுக் கொண்டார். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், இலங்கை 22 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் மலையகத்தில் 1970களில் தான் திருடிய தொகைக்கு ஈடாக, சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து பன்மடங்கு அதிக பணத்தை திரும்பக் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். யார் அவர்? என்ன நடந்தது? 50 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது? இலங்கையின் மஸ்கெலிய மாவட்டத்தில் அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றிய சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியினர் தங்களின் குடியிருப்பு பகுதியை காலி செய்துவ…
-
-
- 8 replies
- 799 views
- 1 follower
-
-
சில ஆண்டுகளுக்கு முன் உலகின் மிகப்பெரிய தனிநபர் பயன்பாட்டு விமானம் உருவாக்கப்பட்டு வருவது குறித்த தகவல்கள் மீடியாக்களில் பரபரப்பாக எழுதப்பட்டன. உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமைக்குரிய ஏர்பஸ் ஏ380 விமானத்தை பெரும் பணக்காரர் ஒருவருக்காக, ஆடம்பர வசதிகளுடன் மாற்றப்படுவதாக அந்த தகவல்கள் கூறின. அந்த விமானத்தில் இருந்த வசதிகள், யாருக்காக கட்டப்பட்டது உள்ளிட்ட பல சுவையானத் தகவல்களை ...... ஏர்பஸ் ஏ380 விமானம் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது. அந்த விமானத்தில் ஆடம்பர வசதிகளுக்காக கூடுதலாக 200 மில்லியன் டாலர் செலவிட முடிவு செய்யப்பட்டது.இந்த விமானத்தில் வெறும் எக்கானமி கிளாஸ் இருக்கைகளுடன் அமைத்தால் 853 பேர் பயணிக்க முடியும். ஆனால், இந்த விமானத்தை சவூதி இளவரசர் தனத…
-
- 2 replies
- 799 views
-