செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
முக்கிய செய்திகள். · இந்திய நாட்டு ரூபாயின் மதிப்பு இன்னும் அடி பாதாளம் வரை செல்லும். இதை சரி செய்வதற்கு மானம் கெட்ட இந்திய நடுவண் அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இந்த பிரச்சனை 2009 தை மாதத்தில் தொடங்கியது, ஆனால் இதை, இந்திய நடுவண் அரசு 2009 வைகாசி தேர்தலை கருத்தில் கொண்டு மூடி மறைத்தது. அதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு கீழே..... எங்கே போனது 120 பில்லியன் அமெரிக்க டாலர்...? எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அன்னிய செலாவணி இருப்பு "141.5 பில்லியன் டாலர்" என்ற அளவிற்கு உபரியாக இருந்தது. 8 ஆண்டுகளுக்குள் "24 பில்லியன் டாலராக" அது குறைந்தது..... 120 பில்லியன் அமெரிக்க டாலரின் மொத்த மதிப்பு 80 லட்சம் கோடி(இந்திய மதிப்புக்கு ) ஏன் அருமை மக்களே நாம் ஒரு வீ…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 353 views
-
-
எஜமானின் நலன் விசாரிக்க யாழ். மருத்துவமனை விரைந்த அழையா விருந்தாளி 20 September 2025 மனிதர்களைக் கடந்து ஐந்தறிவு ஜீவன்களுக்கும் கருணை உண்டு என்பதை நிருபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று யாழ். மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் சென்று பார்வையிடுவது வழக்கமானதொன்றாகும். அந்த வரிசையில் தனது எஜமானை பார்க்க நாய் ஒன்று சென்றுள்ள சம்பவம் பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. யாழ். மருத்துவமனையின் 24 ஆம் இலக்க விடுதியில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் பதிவானதாக எமக்குக் கிடைத்த தகவல்களின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. மருத்துவமனைக்குள் எவ்வித குழப்பமும் விளைவிக்காமல் குறித்த ந…
-
- 0 replies
- 188 views
-
-
உறங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரின் தலைமயிர்கள் ரோபோ முறையிலான வாக்குவம் கிளீனரினால் உள்ளிழுக்கப்பட்ட சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது. செங்வோங் நகரைச் சேர்ந்த 52 வயதான இப்பெண் தனது வீட்டை சுத்திகரிப்பதற்காக ரோபோ வாக்குவம் கிளீனர் ஒன்றை வாங்கினார். அண்மையில் இப்பெண் தனது வீட்டின் தரையில் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரின் தலைமயிர் தரையில் விரிந்துகிடந்தது. அத்தலைமயிர்களை தூசிகள் என தவறாக கருதிய ரோபோ, அவற்றை தனக்குள் உள்ளிழுக்கத் தொடங்கியது. தனது தலைமயிர் இழுக்கப்படுவதை உணர்ந்து இப்பெண் திடுக்கிட்டு எழுந்தார். எனினும் தலைமயிரை ரோபோவிடமிருந்து விடுவித்துக்கொள்ள முடியாத நிலையில், தீயணைப்புப் படையினருக்கு அவர் தகவல் கொடுத்தார். பின்னர் தீயணைப்…
-
- 10 replies
- 638 views
-
-
ஒட்டகச்சிவிங்கி ( Credit: Hirola Conservation ) கடந்த 30 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 40 சதவிகித ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டைக்காரர்களாலும் கடத்தல்காரர்களாலும் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. உலகிலேயே அரிய வகை உயிரினமான வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள், கென்யா நாட்டில் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில், கென்யா வனவிலங்கு சரணாலயத்தில் வசித்து வந்த ஒரு தாய் ஒட்டகச்சிவிங்கியும் அதன் குட்டியும், நேற்று எலும்புக்கூடுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட இந்த ஒட்டகச்சிவிங்கிகள், இறந்து நான்கு மாத காலம் ஆகியிருக்கலாம் என அதிகாரிகள் கணித்திருக்கிறார்கள். …
-
- 0 replies
- 362 views
-
-
பயணிகளின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க, சமோவா நாட்டு விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. விமானங்களில் முதல் வகுப்பு, "எகானமி' வகுப்பு, "பிசினஸ்' வகுப்புக்கு ஏற்ப கட்டணம் வேறுபடும். ஆனால், பசிபிக் கடலின் தென் பகுதியில் அமைந்துள்ள சமோவா நாட்டில், பருத்த உடலுடடைய பயணிகள், விமானங்களில் அதிகம் பயணிப்பதால், சாதாரண முறை கட்டணம் கட்டுபடியாக வில்லை. இதையடுத்து, பயணிகளின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க, அந்நாட்டு விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. குறுகிய தூரம் செல்லும் விமானங்களில், ஒரு கிலோவுக்கு, 55 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. நீண்ட தூரம் செல்லும் விமானங்களில், ஒரு கிலோவுக்கு, 225 ரூபாய் வீதம் கட்டணம் பெறப்படுகிறது.இந்த கட்டண முறையில், தில்லு முல்…
-
- 8 replies
- 511 views
-
-
23 மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று தென் ஆப்ரிக்கருக்கு நியூசிலாந்து அரசு இறுதி கெடு விதித்துள்ளது. தென் ஆப்ரிக்கரான ஆல்பர்ட் புடேன்ஹஸ், அவர் மனைவி மார்த்தி, ஆறாண்டு முன்பு வேலை நிமித்தமாக நியூசிலாந்து வந்தனர். கிரிஸ்ட்சர்ச் பகுதியில் அவர்கள் குடியேறி னர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஆல்பர்ட் உடல் எடை மிக அதிகமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அவரின் வேலை நிமித்த விசா புதுப்பிக்கும் போது, குடியேற்ற துறை எச்சரித்து வந்தது. கடந்தாண்டு அவர் எடை 120 கிலோவை தாண்டியது. நீங்கள் உடல் எடையை குறைக்காவிட்டால் அடுத்த ஆண்டு விசா புதுப்பிக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். உடல் எடைய…
-
- 1 reply
- 709 views
-
-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட லட்டு தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த ஸ்வீட் நிறுவனத்துக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட இனிப்பு சுவை உணவை தயாரித்ததற்காக அந்நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கின்னஸ் விருது பெற்றுள்ளது. ஆந்திராவின் தாபேஸ்வரம் நகரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வீட்ஸ் நிறுவனம் கடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒரு லட்டை தயாரித்தது. இந்நிலையில், அதிக எடை கொண்ட லட்டை தயாரித்ததற்காக அந்நிறுவனத்துக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருது சான்றிதழில், ''2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி எஸ்.வெங்கடேஸ்வர ராவ் என்பவருக்கு சொந்தமான ஆந்திராவின் தாபேஸ்…
-
- 1 reply
- 336 views
-
-
எட்டு கோடி ரூபாய்க்கு சமோசா சாப்பிட்ட அமைச்சர்கள்..! - இந்தியாவில்தான் இது நடக்கும் உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் அகிலேஷ் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் மகன். அதற்கு முன் முதல்வராக கோலோச்சிய மாயாவதியை வீழ்த்தி 2012ல் உத்திரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர்களுக்கு உணவுப்பண்டங்கள் வாங்கிய வகையில் எட்டு கோடிக்கும் அதிகமாக தொகை செலவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார். உ.பி சட்டமன்றத்தில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளில் அமைச்சர்களுக்கு டீ, காபி, சமோசா, குலோப் ஜாமூன் வாங்கிய வகையில் மட்டும் 8 கோடியே 78 லட்சத்து 12 ஆயிரத்து 47…
-
- 0 replies
- 460 views
-
-
எட்டு வயது சிறுமியை மணம் முடித்த பிரிட்டன் சிறுவன் மறுநாளே மரணம் [29 - July - 2008] புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எட்டு வயதுச் சிறுவனின் ஆசையை நிறைவேற்ற வகுப்புத் தோழியை அச்சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பிரிட்டனில் நடைபெற்றுள்ளது. அதேநேரம், திருமணம் முடிந்த மறுநாள் அச்சிறுவன் மரணமடைந்துள்ளான். லண்டனை சேர்ந்தவர் லோரென் என்ற பெண். இவரது மகன் ரெச்சே பிளமிங். எட்டு வயது சிறுவனான இவனுக்கு, கடந்த 2004 இல் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்றபோது, புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. "பிளமிங், இன்னும் சில காலம் தான், உயிருடன் இருப்பான்' என டாக்டர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து, பிளமிங்கின் பெற்றோர், அவனது தேவைகளை அறிந்து நிறைவேற்றினர…
-
- 21 replies
- 3k views
-
-
பிரேசில் நாட்டில் குடியிருந்து வரும் உலகின் உயரம் குறுகிய ஜோடி தங்களின் நீண்ட 8 வருட காதலுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.Katyucia Hoshino மற்றும் Paulo Gabriel da Silva Barros ஆகிய இருவரும் எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள்.சமூகவலைதளம் ஒன்றில் எதிர்பாராத வகையில் சந்தித்துக்கொண்ட இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.முதலில் நட்பு பாராட்டவே மறுத்து ஒதுங்கி சென்றதாக கூறும் Katyucia பின்னர் Paaulo வின் குணம் தம்மை ஈர்த்ததாகவும், அதனையடுத்து 18 மாதங்களுக்கு பின்னர் தொடர்ந்து சமூகவலைதளம் வாயிலாக தங்கள் கருத்துகளை பகிர்ந்து வந்துள்ளனர். இதனிடையே 2 மாதம் தொடர்ந்து பேசி வந்த இருவருக்கும் நேரில் சந்திக்கும் ஆவல…
-
- 3 replies
- 366 views
-
-
எட்டுக்கால்களுடன் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி! வவுனியா – நெடுங்கேணி, நைனாமடுப் பகுதியில் எட்டுகால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. எனினும் குறித்த ஆட்டுக்குட்டி இறந்த நிலையிலேயே பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு எட்டுக்கால்களைக் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டி நேற்று இறந்து பிறந்துள்ளது. இதனைப் பார்வையிட சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கு அதிகமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/எட்டுக்கால்களுடன்-இறந்த/
-
- 0 replies
- 368 views
-
-
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டதில் எண்ணெய் டேங்கர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்துள்ளன. விர்ஜினியா மாகாணத்தில் வடக்கு டக்கோடாவில் இருந்து யார்க் டவுனுக்கு டேங்கர் ரயில் ஒன்று எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த ரயில் அதீனா மற்றும் பூமர் நகரங்களுக்கு இடையே கனவா ஆற்றின் கரையோரம் சென்றபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த திடீர் விபத்தில், எண்ணெய் ஏற்றிச் சென்ற 13 டேங்கர்கள் கவிழ்ந்ததோடு, ஒரு டேங்கர் ஆற்றுக்குள் விழுந்துள்ளது. தடம் புரண்டு கவிழ்ந்த எண்ணெய் டேங்கர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்ததில், அவை வெடித்து சிதறி கரும் புகையுடன் எரிந்துள்ள…
-
- 0 replies
- 348 views
-
-
எண்ணெய் தாங்கியுடன் வரிசையில் நின்ற நபர் – வைரலாகும் ஒளிப்படங்கள்!! நாடாளாவிய ரீதியில் தற்போது பெற்றோலுக்கு மக்கள் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பெற்றோலுக்குக் காத்திருக்கின்றனர். அதனால் போத்தல்களில் பெற்றோல் நிரப்ப முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் நிரப்படுகின்றது. தெற்கில் ஒருவர் மோட்டார் சைக்கிளின் எண்ணெய்த் தாங்கியைக் கழற்றிக் கொண்டு எரிபொருள் நிலையத்துக்கு வந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. அந்தப் ஒளிப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவுகின்றன. http://newuthayan.com/story/44361.html
-
- 2 replies
- 492 views
-
-
எதியோப்பியாவில் வாகன போக்குவரத்து எப்படி இருக்கும்? https://www.facebook.com/video.php?v=10203666721061359
-
- 1 reply
- 368 views
-
-
எதிரிகளைக் கொன்று தலை துண்டிக்கப்பட்ட சடலங்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டேன் - மெக்ஸிகோ யுவதி தெரிவிப்பு மெக்ஸிகோ நாட்டின் கடத்தல் குழுவொன்றைச் சேர்ந்த யுவதி ஒருவர், பல நபர்களை தான் கொலை செய்ததுடன் தலை துண்டிக்கப்பட்ட சடலங்களுடன் பாலியல் உறவிலும் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். ஜூவானா எனும் இந்த யுவதி தற்போது கைது செய்யப்பட்டு, மெக்ஸிகோவின் பாஜா கலிபோர்னியா பிராந்தியத்திலுள்ள சிறைச்சாலையொன்றில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கான தண்டனைத் தொடர்பான தீர்ப்புக்காக காத்திருக்கும் ஜூவானாவை உள்ளூர் ஊடகமொன்று அண்மையில் செவ்வி கண்டது. இச்செவ்வியி…
-
- 0 replies
- 297 views
-
-
பூகம்பம், எரிமலை சீற்றம், சுனாமி, கடல் கொந்தளிப்பு என ஒவ்வொரு வருடமும் இயற்கை சீற்றங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கின்றது. நமது ஹாலிவுட் படங்களில் காண்பிப்பது போல, 21ஆம் நூற்றாண்டின் முதலில் இருந்தே உலகம் இதோ அழிந்துவிடும், அதோ அழிந்துவிடும் என்று பூச்சாண்டி காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலகம் அழிந்துவிடும் என விஞ்ஞானிகளை அஞ்ச வைக்கும் பேரழிவு நிகழ்வுகள்!!! ஆனால், இதை நாம் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. டைனோசர் எனும் மாபெரும் உயிரினம் அழிந்ததற்கு காரணமும் ஓர் தொடர் இயற்கை சீற்றம் தான். ஏன், மனித இனத்தின் தோற்றமான குமரிக் கண்டம் அழிந்ததற்கு காரணமும் ஓர் மாபெரும் கடல் கொந்தளிப்பு தான். ஓர் கண்டத்தையே உள்வாங்கும் அளவு ஏற்பட்டது அந்த இயற்கை சீற்றம். ஏலிய…
-
- 0 replies
- 1.6k views
-
-
எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் பதவியேற்பு! கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பதற்றம்! [ வியாழக்கிழமை, 03 செப்ரெம்பர் 2015, 06:09.35 PM GMT ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இன்று எதிர்கட்சி தலைவராக தெரிவாகியதன் பின்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செல் நம்பர் J பிரிவில் அடைக்கப்பட்ட கணிசமான தமிழ் அரசியல் கைதிகள் சித்திரவதைக்குட்பட்டுள்ளனர். அப் பகுதிக்கு இன்று மாலை 4:00 மணியளவில் குறித்த J பிரிவுக்கு சென்ற சிறைக் காவலர்கள் எதிர்க் கட்சி தலைவராக உங்கள் தலைவரா தெரிவாகியுள்ளார் எனக் கேட்டு தாக்கியதோடு, இது எங்களுடைய நாடு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது எனக் கேள்விகளைக் கேட்டவாறே அரசியல் கைதிகளை நிர்வாணப்படுத்தியதுடன் அடைமழைக்குள் அவர்களை தள்…
-
- 7 replies
- 433 views
-
-
எது உண்மையான மனித அவலம்? அணைக்கட்டை இடித்து செயற்கையாக வெள்ளத்தை ஏற்படுத்தி அதில் சிங்கள ராணுவவீரர்களை சிக்க வைத்து பெரும் தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்து உள்ளனர் தமிழ்ப் போராளிகள் என்று உறுதிப் படுத்தப் படாத செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இலங்கை ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் தமிழ்ப் போராளிகளின் இந்தச் செயல் இந்த ஆண்டின் மிகப் பெரிய மனித அவலம் என்றும் உலக நாடுகள், தமிழ்ப் போராளிகளின் இந்தப் படு பாதக செயலைக் கண்டிக்க வேண்டும் என்றும் கூக்குரல் இடப்பட்டு உள்ளது. அய்யா சிங்களர்களே எது மனித அவலம் , சின்னஞ் சிறு குழந்தைகள் கல்வி கற்கும் பள்ளிகளின் மீது வானில் பறந்த படி குண்டு வீசுவது பெரும் மனித அவலமா? நோயாளிகளும், காயமடைந்தவர்களும் சிகிச்சை …
-
- 0 replies
- 816 views
-
-
நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனை, மரணம் கொடுக்கக்காத்திருக்கும் போதும் எங்கள் உணர்வுகளை சாகடித்துவிட்டு நடக்கமுடியாது. யாரெல்லாம் எமக்கு மரணம் கொடுத்தார்களோ அவர்களெல்லாம் புனிதர்களாகி வந்தார்கள், நாங்கள் சிந்திய இரத்தம் உறையும் முன்னர் தாய் மண்ணை முத்தமிடுவதாய் கூறிக்கொண்டு எங்கள் இரத்தத்தை சுவை பார்த்தவர்கள் மீட்பர்களாய் மாறி எம்மோடு நின்றபோதும் நிச்சயமாக எங்கள் உணர்வுகளை சாகடித்து விட்டு எம்மால் நடக்கமுடியாது. பூவோடு, காயும் துப்பாக்கிச் சன்னங்களால் கிழிக்கப்பட்டு வீசப்பட்டன, அந்தக் காமுகனின் தாய் வயதுப் பெண்ணும் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாளே. எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் இப்போதும் உயிரோடு இருக்கின்றது. நாம் பிரிந்து வாழ தமிழீழம் கேட்ட…
-
- 0 replies
- 453 views
-
-
“நான் 12 வருடங்களாக ஒருவனால் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று ஞாயிற்றுக் கிழமை யேர்மனி வீஸ்பாடன் நகரப் பொலிஸாரின் அவசர இலக்கத்துக்கு ஒரு தொலைபேசி வந்தது.தொலைபேசியில் பேசியது ஒரு பெண். நீண்ட காலமாக ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருந்ததாக அவர் தந்த இடத்தின் முகவரி பிரான்ஸ் போர்பாக் (Forbach) என்ற நகரத்தில் இருந்தது. வீஸ்பாடன் பொலிஸாரின் தகவலைப் பெற்று, மறுநாள் திங்கட்கிழமை குறிப்பிட்ட வீட்டுக்கு பிரான்ஸ் பொலிஸார் சென்ற போது அவர்களை வீட்டுக்கு உள்ளே அனுமதிக்க அங்கிருந்த ஆண்(55) கடுமையாக மறுத்தான். ஆனாலும் பொலிஸார் வலுக்கட்டாயமாக வீட்டினுள் சென்று பார்த்த போது, கம்பிகளால் கட்டப் பட்டிருந்த தடுப்பு யன்னலையும், ஒரு வாங்கிலையும் கண்டார்கள். அங்கே ச…
-
- 3 replies
- 519 views
-
-
பல்லா சதீஷ் பிபிசி தெலுங்கு செய்தியாளர் என் பெற்றோர் யார் என்று எனக்குத் தெரியாது. என் குழந்தை பருவத்தை பெரும்பாலும் வீதிகளில்தான் கழித்தேன். கொஞ்ச காலம் ஆதரவற்றோர் இல்லங்களிலும் இருந்தேன் என்கிறார் 'ஹுசேன் சாகர்' சிவா. அவருக்கு என்ன வயது இருக்கும் என்று அவரால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. காலப் போக்கில், இவர் ஒரு பெண்மணி மற்றும் அவரின் குழந்தைகளோடு வாழத் தொடங்குகிறார். அவர்களுக்கும் வீடு வாசல் என எதுவும் கிடையாது. அந்த பெண்மணியின் மகன்தான், சிவாவுக்கு நீச்சல் அடிக்க கற்றுக் கொடுக்கிறார். இன்று அந்த நீச்சல் திறனால், குட்டிப் பிரபலமாக, ஹுசேன் சாகர் பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார். …
-
- 1 reply
- 560 views
-
-
நான் நாசா விண்கலம் லேண்டிங் ஓடுபாதை அருகில் இந்த படத்தை பார்த்தேன் . டிசைன் ஒரு patern தெரிகிறது. எந்த ஒரு இந்த புகைப்படத்தை எந்த விளக்கமும் உள்ளதா? உங்களுக்கு Google Earth சென்று தட்டச்சு செய்தால் இது இந்த இடத்தில் நீங்கள் பார்க்க முடியும் ஒருங்கிணைக்க கூறுகள் உள்ளன 37 25 ' 19.1 "E 122 05 ' 06 " டபிள்யு
-
- 0 replies
- 353 views
-
-
எந்த ஜென்மத்திற்கும் இந்த மனைவி வேண்டாம்: நொந்த கணவர்கள் வெந்த மனதுடன் வேண்டுதல் மஹாராஷ்டிராவில் மனைவிகள் எல்லாம், 7 ஜென்மத்திற்கும் தற்போது உள்ள வாழ்க்கை துணையே கணவராக வர வேண்டுமென ஆல மரத்தைச் சுற்றி வந்து வழிபட்ட நிலையில், கணவர்கள் சிலர், இனி எந்த ஜென்மத்திற்கும் இதே வாழ்க்கை துணை வரக்கூடாது என பிரார்த்தனை செய்து அரச மரத்தை 108 முறை எதிர்திசையில் சுற்றி வழிபட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். கணவனின் வெற்றிக்கு தூண்டுதலாகவும், தோல்வியடையும்போது தோள்கொடுத்து அரவணைத்து தட்டிக்கொடுக்கும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமாக கருதலாம். ஆனால், சில கணவன்மார்கள் மனைவி வரமாக அமையாமல், பாரமாக இருப்பதாக நினைக்கின்றனர். க…
-
- 41 replies
- 2.2k views
-
-
பிறக்கும்போதே இதயகுறைபாடுகளுடன் பிறந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் ஒருவர், உயிருக்காக போராடி கொண்டிருக்கின்றான். அவன் கொண்டாடும் கடைசி கிறிஸ்துமஸ் இதுதான் என நினைத்து அவனது பெற்றோர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். பிரிட்டனில் உள்ள Chestnut Tree House என்ற இடத்தில் வாழும் Zoe Granger என்ற இரண்டு வயது குழந்தைக்கு பிறக்கும்போதே இதயத்தின் நான்கு அறைகளில் ஒன்று இல்லாமலேயே பிறந்துள்ளது. எனவே இரத்த சுத்திகரிப்பு பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. மூன்று அறுவை சிகிச்சை மற்றும் செயற்கை இதயம் போன்றவற்றின் காரணமாக இறப்பை தற்காலிகமாக மருத்துவர்கள் ஒத்திவைத்தனர். எந்த நேரமும் இதயம் செயலிழந்து போகலாம் என்ற அபாய கட்டத்தில் இருக்கும் சிறுவன் கொண்ட…
-
- 1 reply
- 499 views
-