Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து.... உலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சாவுக்கும் அஞ்சாத வீரத்திற்கும், ஈகத்திற்கும் இலட்சியப் பற்றிற்கும் எமது மாவீரருக்கு நிகர் எவருமேயில்லை என நான் பெருமிதத்துடன் கூறுவேன். இப்படியானதொரு மகிமையும், மேன்மையும் வாய்ந்த ஒரு மகத்தான வீரகாவியத்தை எமது மாவீரர்கள் படைத்துச் சென்றிருக்கிறார்கள். எமது போராட்டம் ஒரு உந்துசக்தியாக, ஒரு முன்னுதாரணமாக, ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது. முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் : http://veeravengaika...ninaivuvanakkam தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னு…

  2. இது 'தமிழ்த் தந்தி' நாளிதழில் ஊடகவியலாளர் மின்னல் ரங்கா அவர்களால் மே 2018 அன்று எழுதப்பட்ட கட்டுரையாகும். மூலம்: Tamilnet ----------------------------------- தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவ…

  3. புனித இலட்சியப் பிரவாகத்தில் பயணித்து, தமிழீழக்கனவுடன் வித்தாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரிசையில் துயில்கொள்ளும் ஒருவன் கப்டன் வாணன். தனது கண்முன்னால் தனக்கும் தனது சமூகத்திற்கும் நிகழ்ந்த அவலங்களின் சாட்சியாக, இந்த இழிநிலை வாழ்க்கை எமக்கு வேண்டாம், எமது சந்ததிக்கும் வேண்டாம் என்ற தெளிவில் பரிணமித்தவன். அந்த அவலங்களின் எதிர்வினையாக, விடுதலை ஒன்றுதான் தீர்வு என முடிவெடுத்துப் பயணித்த போராளி, அதற்காக தன்னை உரமாக்கிய அவனது இருபதாவது நினைவுநாள் இன்று. சுதந்திரப் போராட்டத்தின் பங்கெடுப்பு என்பது ஈர்ப்பு, கவர்ச்சியின் சமன்பாடல்ல. அது சமூகம் மீதான அக்கறையின் வெளிப்பாடாக, இனத்தின் மீதான அடக்குமுறைச் சம்பவங்களின் தொடர்வினையாக, பாதிப்பின் வெளிப்பாடாக உருவாகின்றது. அது வாழ்வி…

  4. Guest

    http://3.bp.blogspot.com/-h_zfONJ0RYI/Ts0X4q7f8TI/AAAAAAAAAIg/U_29UotCMP0/s640/Malaravan+2011.jpg போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா - கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 24ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று. கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள போராளி. விடுதலைப்போராட்டத்தில் அவரது ஆளுமையும் பங்களிப்பும் காத்திரத்தன்மையும் நீண்டகாலத்திற்கு …

    • 0 replies
    • 270 views
  5. ‘சமர்க்கள நாயகன்’ பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு May 21, 2025 தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடு…

    • 2 replies
    • 364 views
  6. ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஏழாம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார். தமிழீழ விடுத…

  7. கப்டன் ரஞ்சன் (லாலா) ” மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் வழங்கும் என நினைத்து எங்களைத் தவிர எல்லோரும் கெரில்லாப் போராட்டத்தை கிண்டல் செய்து வந்த காலத்தில் நேரடியாக பொதுமக்களைத் கலந்து கொள்ளும் இராணுவத்தாக்குதல் ஒன்றை நடைமுறையில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தியவன் ரஞ்சன். பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத் தாக்குதல் மூலம் “இதுவும் மக்கள் போராட்டம் தான் புரிந்து கொள்ளுங்கள் ! “ என பா…

  8. சரா …. சரா …. அவனது முகத்தைக் கடைசியாக ஒரு தரம் பார்க்க வேண்டும். எனக்கு இதயம் வெடித்து விடும்போல இருந்தது. எங்கள் போராளிகளின் உடல்கள் துப்பரவு செய்யும் இடம். ” சராவின் உடல் வந்துவிட்டதா ? ” என்னை மாதிரிப் பலர் கேட்டுக்கொண்டு நின்றார்கள். உள்ளே போனேன். வீரமரணமடைந்த எமது போராளிகள் , அங்கொன்றும் , இங்கொன்றுமாகக் கிடந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் முகங்களாக நான் தடவினேன். எனக்கு பழக்கமான சராவின் முகத்தைக் காணவே இல்லை. ஆனால் அந்தத் தோழர்களின் முகங்களும் எனக்குப் பல கதைகளைச் சொல்லின. பதினைந்து வயதிருக்கும். சற்று நிறமான , சுருள் சுருளான தலைமயிருடன் ஒரு போராளி முகம் வாடிக்கிடந்தான் அவனது உயிரை அழைத்துச் சென்ற விமானக் குண்டு வயிற்றை ஆழமாகச் சிதைத்துருந்தது. அவனைக் கண்ட…

    • 6 replies
    • 1k views
  9. "கடற்கரும்புலி கப்டன் வினோத்" மிழீழ முகநூல் தமிழர்களின் குரல் "கடற்கரும்புலி கப்டன் வினோத்" ============= 1988ம் ஆண்டுக் காலப்பகுதி…. வினோத்தின் வீட்டை இந்தியப் படைகள் அடிக்கடி சுற்றி வளைத்தனர். அவனைத் தேடி இந்திய சிப்பாய்கள் அங்கு பாய்வதும் வழமை யாகிவிட்டது. அந்த ஆபத்தான பொழுதுகளில் , வீட்டுக் கூரைக்குள் ஏற்றி பெற்றோரால் அவன் மறைத்துக் காக்கப்படுவான். மேலேயிருந்து – ” சயனைட் ” குப்பியைப் பற்களுக்கிடையில் செருகிக்கொண்டு எதனையும் எதிர்பார்த்து நொடிகளை எண்ணிக்கொண்டிருப்பான் வினோத். வினோத்தின் அக்கா சொல்கிறாள் …. ” அந்த நேரத்தில் சின்னச் சின்ன ‘ கானு ‘ களுக்குள்ள ( கொள்கலன் ) என்னவோ கொண்டு வந்து , வீட்டு மூலையளுக்குள்ள வைப்பான். ‘ என்னடா இது ‘ என்று கேட்டால் …

  10. "சங்ககால மாவீரர்கள், நடுகல் & அன்னி மிஞிலி" ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; அது இவ்வுலகத்து இயற்கை என்கின்றது புறநானூறு. இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது என்னும் உண்மையை, "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை" என புறநானுறு 70 கூறும். மேலும் சங்ககால வீரர்கள் என்றும் போர் வேட்கை உடையவர்களாய் இருந்தனர் என, "போரெனிற் புகலும் புனைகழல் மறவர்" என்று புறநானுறு 31 உணர்த்துகின்றது. போரிடுதலே புதல்வன் கடமை என்பதை, வாளைக் கையிலேந்திச் சென்று தடுத்தற்கரிய போரைச் ச…

  11. தியாகத்தின் சிகரம் திலீபனைப் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஆக்கம் (பருத்தியன்)! அதை தியாகசீலன் திலீபனின் நினைவுநாளில் இங்கு இணைத்து பகிர்கின்றேன்! இருபத்தியிரண்டு ஆண்டுகள் என்பது "இருபத்திநான்கு" என மாற்றப்பட்டுள்ளது.(நீல நிறத்தில் உள்ளவை) வேறெதுவும் மாற்றமில்லை. நன்றி பருத்தியன் தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்திநான்கு வருடங்களுக்கு முன்பு ...அன்று நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது. "இனவிடு…

    • 9 replies
    • 4.3k views
  12. Started by akootha,

    ''ஒரு பிச்சைக்காரனின் வயிறு, எளிய சுமை, வலிமை ஏறிய கால்கள்." ஒரு கெரில்லாப் போராளி கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். உலகின் தலை சிறந்த விடுதலை வீரன் சேகுவேராவின் இதயத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவை. இதை வாசிக்கும்போது என்னுள் ஓடோடி வந்தவர்களுள் நிலவனும் ஒருவன். இடுப்பில் ரவைதாங்கிக்குக் கீழே எப்போதும் கட்டப்பட்டிருக்கும் 'சறம்' ஒன்றை மட்டுமே நம்பி வன்னியின் கானகங்களுக்குள் மாதக்கணக்கில் அவன் திரிந்திருக்கிறான். விடுதலைப்போரைத் தொய்ந்துபோக விடாது மக்களைப் போராட்டத்தின்பால் அணி திரட்டிச் செல்லும் பணியில் வன்னியின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அவன் மிதி வண்டிப் பயணம் செய்திருக்கிறான். கஞ்சியும், கத்தரிக்காயும்தான் சாப்பாடாய் இருந்த காலத்தில் கண்டதில் எல்…

  13. "🕯️ நவம்பர் 27 தீபத் திருநாள்" “🕯️ நாம் ஏன் தீபம் ஏற்றுகிறோம்?“ ஒவ்வொரு நவம்பர் 27 ஆம் தேதியும் தமிழ் உலகம் நினைவுகூருகிறது போரை அல்ல, அரசியலை அல்ல — மக்களை, உயிர்களை, கனவுகளை! சம உரிமைகளுக்கான ..... கண்ணியத்திற்கான ..... தாயகத்திற்கான ..... குழந்தைகள் பயமின்றி வாழ்வதற்கான .... நவம்பர் 27 அழைப்பிற்கு செவிகொடுத்தது வெறுப்பின் தீயால் அல்ல நம்பிக்கையின் ஒளியால் — நாம் விளக்கை ஏற்றுகிறோம் — உலகம் தங்கள் ஒளியைத் தாங்கிக்கொள்ள மறுத்துவிட்டதால்! நீதி அவர்களைப் பேச மறுத்துவிட்டதால் - திரும்பி வராத மக்களின் பெயர்களைக் கிசுகிசுக்கிறோம்! நாம் துக்கப்படுகிறோம் — ஏனென்றால் நாம் மனிதர்கள் மேலும் அவர்களும் மனிதர்கள்! நாளையத் தலைமுறைக்கென்று கண்ணீரிலே விதைத்த மறக்க முடியாத கன…

  14. உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விததுச்சென்ர ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் தேதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி 7பக்கங்களுக்கு’உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்’ என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியளுக்காகா தீயில் வீரகாவியமான ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ஈகைப்பேரொளி முருகதாசன் உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள் என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறு…

    • 0 replies
    • 1.7k views
  15. [size=3][size=4]“ஓயாத அலைகள் - 4” படைநடவடிக்கையின்போது 02.10.2000ம் அன்று முகமாலை, எழுதுமட்டுவாள், இத்தாவில் மற்றும் கிளாலி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது[/size] [size=4]லெப்.கேணல் தில்லையழகன் (தில்லை) (கபிரியேல் அருந்தவராஜன் - முருங்கன், மன்னார்) கப்டன் ஆரதி (நாராயணன் ராணி - கந்தர்மடம், யாழ்ப்பாணம்) கப்டன் நேசமலர் (வெள்ளையன் கலா - கல்மடு, வவுனியா) கப்டன் பவநீதன் (செபஸ்ரியான் சந்தான்குரூஸ் - தாழ்வுபாடு, மன்னார்) வீரவேங்கை சிவா (புவனேந்திரன் சசிக்குமார் - உரும்பிராய், யாழ்ப்பாணம்) வீரவேங்கை மணிமாறன் (மரியநாயகம் மரியபிறவுன்சன் - மாந்தை, மன்னார்) வீரவேங்கை கருவேங்கை (விஜயன் சுரேந்திரன் - கச்சாய், யாழ்ப்பாணம்) வீரவேங்கை…

  16. கற்பிட்டிக் கடற்பரப்பில் காவியமான லெப்.கேணல் நளாயினி உட்பட்ட கடற்கரும்புலிகளினதும் யாழ்ப்பாணத்தில் காவியமான கப்டன் மயூரனினதும் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 19.09.1994 அன்று கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்க்கப்பலை மூழ்கடித்து கடற்புலிகளின் மகளீர் படையணி சிறப்புத் தளபதி கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி (ஆறுமுகசாமி பத்மாவதி - ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் மங்கை (கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி - முள்ளியான், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் வாமன் (தூயமணி) (கந்தசாமி ரவிநாயகம் - கோயில்போரதீவு, மட்டக்களப்பு) கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் (இசைவாணன்) (குகதாசன் பிரணவன் - நல்லூர…

  17. [size=4]ஜெயசிக்குறு படையினருக்கு எதிரான சமர்களில் காவியமான லெப்.கேணல் சந்திரகாந்தன் உட்பட்ட 74 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 13.10.1997 அன்று வவுனியா பெரியமடு பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது 60 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இவர்களின் களமுனைத் தளபதியான லெப்.கேணல் சந்திரகாந்தனும் அடங்குவார். ஜெயசிக்குறு படைகளிற்கு எதிரான பல்வேறு தாக்குதல்களில் திறம்படச் செயற்பட்டமைக்காக லெப்.கேணல் சந்திரகாந்தன் “ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நாயகன்” என விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னடம்பன் பகுதியில் நிலை கொண்டிருந்த ஜெயசிக்குறு படையினர் மீதான தாக்குதலில் 12 போராளிகளும், கரிப்பட்ட முற…

  18. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சரித்திர சம்பவங்களின் பின்னணி மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வரலாற்றில் நின்று நிலைத்து விட்ட இந்த சம்பவங்கள் போராட்டத்தில் பங்கெடுத்த ஆளுமை மிக்க இளைஞர்கள் அந்த முக்கியமான கணங்களில், அந்தந்த இடத்தில் எடுத்த உடனடி முடிவுகள் தான் என்று பின்னர் அறிய வரும்போது மெய்சிலிர்க்கும். 12 ஒக்டோபர் 1986ல் அடம்பனில் இலங்கை ராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் விக்டர் வீரமரணம் அடைகிறார். அந்தச் சமரில் விடுதலைப் போராட்டத்தில் முதல் முறையாக விடுதலைப் புலிகள் இரண்டு சிங்கள ராணுவத்தினரை சிறைபிடிக்கிறார்கள். அத்தோடு சமரில் இறந்த ஒன்பது சிங்கள இராணுவத்தினரின் சடலங்…

  19. “ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் குமலவன் / லவன் ஆகிய கரும்புலி மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ”அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம்மாவையே கட்டிப்பிடித்துக் கொண்டு சிரிப்பான். அம்மாவிற்கு பிள்ளை தன்னைவிட்டுப் போய்விடான் என்ற நம்பிக்கை. சிரித்தாள். பாவம் – அன்று அவன் முகத்த…

  20. “ரணகோச” நடவடிக்கை சமரின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவில்.... 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் ஐயன், லெப்.கேணல் தணிகைச்செல்வி உட்பட ஏனைய 75 மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். லெப்.கேணல் ஐயன் (சூரியகாந்தி உதயசூரியன் – யாழ்ப்பாணம்) லெப்.கேணல் தணிகைச்செல்வி (சுப்பிரமணியம் சத்தியதேவி – யாழ்ப்பாணம்) மேஜர் தேன்மொழி (டிலானி) (தில்லைநாயகம் யூடிஸ்ராதிலகம் – யாழ்ப்பாணம்) மேஜர் யாழிசை (பரராஜசிங்கம் மங்கையற்கரசி – யாழ்ப்பாணம்) மேஜர் கலைமகள் (இராமலிங்கம் பிருந்தா – யாழ்ப…

  21. 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் “ரணகோச” நடவடிக்கை மூலம் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முற்றுகைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் ஐயன் மற்றும் லெப்.கேணல் தணிகைச்செல்வி உட்பட்ட 75 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தம்மைச் சுற்றிவளைத்து சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த பாரிய முற்றுகை நடவடிக்கையை எதிர்த்து தீரமுடன் களமாடிய விடுதலைப் புலிகளின் படையணிகள் பல மணிநேரச் சமரின் பின் படை முற்றுகையை முறியடித்தனர். இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பலநூறுபேர் படுகாயமடைந்தனர். சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு முயற்சிக்கு எதிராக தீரமுடன் களமாடி 75 போராளிகள் …

  22. விழியில் சொரியும் அருவிகள் எம்மை விட்டு பிரிந்தன குருவிகள் பகைவன் கப்பலை முடித்தனர் திருமலையில் வெடியாய வெடித்தனர் தம்பி கதிரவன் எங்கே ?…. தணிகைமாறனும் எங்கே ?… மதுசாவும் எங்கே ?… தங்கை சாந்தா நீ எங்கே ?… தாயின் மடியினில் அங்கே கடற்தாயின் மடியினில் … விழியில் சொரியும் அருவிகள் … ” உயிரிராயுதம் தன் உடன் பிறப்புக்கு வரைந்திட்ட ஓவியம் “ ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 04 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! வ…

  23. [size=4] நவ 2, 2012[/size] [size=4] தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன். தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும். தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்…

  24. தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பயிற்சியில் பயிற்சி வல்லுனராக விளங்கியவர் வசந்தன் மாஸ்ரர் . தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட வசந்தன் மாஸ்ரர் என்று அழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாக கொண்ட ஆறுமுகம் அன்பழகன் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் படைத்துறைபள்ளியின் ஆசானாக செயற்பட்டு பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணியின் செயற்பாட்டாளனாகவும் பாதுகப்பு அணியின் தற்காப்பு பயிற்சி ஆசானாகவும் விளங்கினார். தோழா ! … தோழா ! …. என் தோழா !…. பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடல் செயற்பாடுகளுடன் அருகில் இருந்து செயற்பட்ட வசந்தன் அவர்கள் தலைவர் அவர்களின் பல திட்டமிடல்களுக்கு வல்லுனனாக விளங்கினார். தமிழீழ விடுதலை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.