மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38 மாவீரர்களினதும், தென்மராட்சியில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் நிஸ்மியா மற்றும் லெப். டயஸ் ஆகியோரினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவோடு டாங்கிகளின் துணையுடன் நாகர்கோவில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து முன்னகர்ந்த சிறிலங்கா படையினரின் பாரிய படை நகர்விற்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் தீரமுடன் களமாடி படைநகர்வை முற்றாக முறியடித்தனர். முற்று முழுதாக பெண் போராளிகளே இந்த முன்னகர்வு முயற்சியை முறியடித்து சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய அழிவுகளை ஏற்படு…
-
- 13 replies
- 1.6k views
-
-
மேஜர் அல்பேட் டிசம்பர் 21, 2013 | விழுதின் வேர்கள். Edit Post நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து தளர்ந்து, எம் உள்ளம் சூனியமாகியதை நாம் எப்படி வெளிபடுத்த முடியும். 6 அடி 2 அங்குலமான உன் உயரமான (நீளமான) உடல் அசையாது கிடந்த நிலைகண்டு மக்கள் பதறியதை, உன் கிராமமே கலங்கியதைக் கண்டு உன்மரணம் தமிழ் மக்களை எந்த அளவுக்குப் பாதித்திருகின்றது என்பதை அறிந்து நாம் துடித்தோம். எம் முகாம்களில் ஒன்று இராணுவத்தினால் தாக்கப்படுகிறது என்பதை அறிந்து எம்மை விடுவிக்க விரைந்த நீ எம…
-
- 1 reply
- 1.6k views
-
-
2001ம் ஆண்டு கட்டு நாயக்கா விமானத் தளம் மீதான தாக்குதலில் வீரகாவியமான 14 மறைமுக கரும்புலிகளுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏/ சாள்ஸ் அண்ணாவின் வழி நடத்தலில் வெற்றி கொண்ட மிக பெரிய தாக்குதலில் வீர காவியமான 14 மறைமுக கரும்புலிகளுக்கு வீர வணக்கம் 😓 , ஆண்டு 18 கடந்தாலும் மறக்க முடியாத நாள் இந்த நாள் 😓/ கண் மணிகள் உறங்கினாலும் அவர்களின் தியாகம் ஒரு போதும் உறங்காது 🙏😓 / வீர வணக்கம் 🙏😓
-
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள். நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இரா…
-
- 15 replies
- 1.6k views
-
-
லெப். கேணல் விசு வாழ்வினைக் கரைத்து வீரம் விதைத்தவன்: புலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் விசு / அருமை கனகராசா குலேந்திரன் மல்லாகம், யாழ்ப்பாணம். 1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம்இ இந்தியப்படை வருகை என பல வரலாற்றுச் சம்பவங்களைக் கொண்ட ஆண்டு. இருப்பைப் பாதுகாத்தல், தலைமையைப் பாதுகாத்தல், கட்டமைப்பைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல் அதேநேரம் எதிரியுடன் சண்டையிடல். சுருங்கக் கூறின் ‘கண்ணையும் பாதுகாக்க வேண்டும், இமையையும் பாதுகாக்க வேண்டும்’ அதேநேரம் பார்க்கவும் வேண்டும். ‘கல்மடு’, ‘இராமநாதபுரம்’; கிளிநொச்சி மாவட்டத்தின் சிறு ஊர்கள் அவை. காட்டுப்புறங்களை ஒரு பகுதியாகவும், நீர்த்தேக்கங்கள், மக்கள் குடியி…
-
- 3 replies
- 1.6k views
-
-
1988ம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச ஆட்சியை கைப்பற்றியதும், அவருக்கு பக்கத்துணையாக இருந்த இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுருந்த லெப். ஜெனரல். ரஞ்சன் விஜையரட்னாவை பாதுகாப்பு அமைச்சராக நியமித்தார். அதற்கு முக்கிய காரணம் அந்த நேரத்தில் கொழும்பில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு JVP என்னும் கெரிலா அமைப்பு, சிங்கள இளைஞர்களைத் திரட்டி ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்தது. வடக்கில் தமிழர்களாலும், கிழக்கில் சிங்கள இளைஞர்களாலும், சிங்கள அரசு நெருக்கடியைச் சந்தித்திருந்தது. அந்த நேரத்தில் இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தமையால், புலிகளின் கவனம் அதிலேயே இருந்தது. அதனால் பிரேமதாசவின் கவனம் JVP இன் பக்கம் திரும்பியது. ஆட்சி அமைத்ததும் ரஞ்சன…
-
- 0 replies
- 1.6k views
-
-
புளியங்குளத்தில் சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் தாட்சாயினி, கப்டன் பாஞ்சாலி மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் மாதவன்(சுனித்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 03.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா வான்படை நடாத்திய குண்டு வீச்சின்போது லெப்.கேணல் தட்சாயினி (மனுவேற்பிள்ளை கிளறின்வுறோனா - புலோப்பளை, யாழ்ப்பாணம்) கப்டன் பாஞ்சாலி (சுபாம்பிள்ளை மேரிவென்சலற்றா - மண்டைதீவு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாள் கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிய…
-
- 14 replies
- 1.6k views
- 1 follower
-
-
அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு! AdminSeptember 12, 2021 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு, வீரவேங்கை இதயன், வீரவேங்கை பிரியவதனா, வீரவேங்கை புலியரசன், வீரவேங்கை புதியவன், வீரவேங்கை தீப்பொறி, வீரவேங்கை அன்பரசன்/லோறன்ஸ், வீரவேங்கை கவியரசி/ அமலா, வீரவேங்கை முகிலன், வீரவேங்கை நிறையிசை, வீரவேங்கை கரிகாலன், வீரவேங்கை சுதாகரி, வீரவேங்கை இசைவாணன், வீரவேங்கை பல்லவன் உட்பட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு யேர்மனி…
-
- 2 replies
- 1.6k views
-
-
தாயக விடுதலைக்காக 1987ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை தம்மை உவப்பீகை செய்த மாவீரர்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில் வீரச்சாவடைந்த 1185 மாவீரர்களில் ஒரு குறிப்பிட்டளவானோரின் ஒளிப்படங்களே இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய மாவீரர்களின் ஒளிப்படங்கள் படிப்படியாக இணைக்கப்படும். இணைக்கப்பட்டுள்ள விபரங்களில் தவறுகள் எதுமிருந்தால் தயவு செய்து எமக்கு அறியத் தரவும். மாவீரர்களின் விபரங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்.
-
- 8 replies
- 1.6k views
-
-
குமாரபுர தமிழினப்படுகொலை நினைவு நாள் (11.02.1996 – 11.02.2017) தமிழீழம் குமாரபுரம் திருகோணமலையின் கிழக்கே, மூதூர் கிளிவெட்டியின் அண்மைய தமிழ்க் கிராம்ம். மகாவலி கங்கையின் கரங்களால் நிதமும் குளிரூட்டப்படும் வரத்தைப்பெற்ற அழகிய பசுமை பூசிய கிராம்ம். எங்கும் அடர்ந்து செழித்த வேளாண் வயல்வெளிகள், பசுக்களும் ஏறுகளும் துள்ளி விளையாட எருமைகள் சகதி குளிர்க்க உழவன் உழவில் தலைநிமிர்ந்து தமிழன் வாழ்ந்த வளமிகு ஊராகும். செழிப்பான இக்கிராமம் கொடுமையான இனவழிப்பை எதிர்கொள்ள என்ன காரணங்கள் என பார்ப்போமானால் 1. இக்கிராமம் ஒரு திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றமாக உருவாக இருப்பதை அறிந்த அமர்ர் ஐயா தங்கத்துரை அவர்கள் இரவோடிரவாக தமிழ் மக்களை …
-
- 1 reply
- 1.6k views
-
-
-
- 11 replies
- 1.6k views
-
-
லெப். கேணல் ஜஸ்ரின் எல்லையில் நின்று எதிரியை விரட்டியவன்: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின். போர்முனைக்குச் சென்றவர்கள் வென்றதுண்டு வந்ததில்லை என்பார்கள். இதை ஜஸ்ரினும் படித்திருந்ததினாலோ என்னவோ இறுதியாக மணலாற்றுச் சண்டைக்குச் செல்வதற்கு முன்னர் தனது தாயை அவன் சந்தித்தபோது “அம்மா, நான் சண்டைக்குப் போறேன். ஆனால் நான் உயிரோடை திரும்பி வர மாட்டன்” என்று கூறிவிட்டுச் சென்றான். கண் தெரியாத அந்தத் தாயிடம் அதனைத் தெரிவித்துவிடவேண்டும் என்று அவனது உள்ளுணர்வு அவனைத் தூண்டியுள்ளது. தாக்கு மகனாகச் செய்ய வேண்டிய கடமையைவிட மண்ணின் மகனாக அவன் ஆற்றவேண்டிய கடமை அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது. 1984ம் ஆண்டு காலத்திலிர…
-
- 2 replies
- 1.6k views
-
-
மேஜர் செல்வராசா மாஸ்டர் மேஜர் செல்வராசா மாஸ்டர் / அன்பு செல்வராசா மாஸ்டர்… எமதியக்கத்திலுள்ள கூடுதலான போராளிகளுக்குப் பரிச்சயமான ஒருவர். காரணம் பல்லாயிரக்கணக்கான போராளிகள் அவராலேயே உருவாக்கப்பட்டனர். அவரிடம் நான் பயிற்சி பெறவில்லையே என்தொரு ஏக்கம் அவரிடம் பயிற்சி பெறாதோருக்கு இருந்ததுண்டு. அவரிடம் பயிற்சி பெறாது விட்டாலும் பரவாயில்லை. சில மாதங்கள் அவருடன் கூட இருந்தாலே போதும் என்று கருதும் போராளிகளும் உண்டு. அவர்களில் நானும் ஒருவன். 1987ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இந்தியப் படைகளுடன் சண்டை ஆரம்பமாகி சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் வன்னியிலுள்ள விசுவமடுக் காட்டுக்குள் இருந்த முகாம் ஒன்றுக்குள் அவருடன் இருந்தேன். 1987ம் ஆண்டுக்கு ம…
-
- 5 replies
- 1.6k views
-
-
லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் வீரவணக்க நாள் இம்ரான்-பாண்டியன் யாழ்ப்பாணம், கொக்குவில், பிரம்படி பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்) கொக்குவில் – யாழ் 23.03.1960 – 09.01.1988 (விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.) இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழ…
-
- 12 replies
- 1.6k views
-
-
வைத்திலிங்கம் சொர்ணலிங்கம் 26-09-2001 தியாகி திலீபனின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்தது. ஈழ விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் ப…
-
-
- 17 replies
- 1.6k views
-
-
தமிழீழம் மன்னாரை சேர்ந்த சகாயசீலி பேதிருப்பிள்ளை (1967 சனவரி 01 பிறந்தார் எமது சமூகத்தில் பெண் எப்படி இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை முறியடித்து. தேசிய விடுதலைப் போராட்டத்தில் இந்திய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள் நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு 1984 முதல் பெண்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டனர். விதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும்…
-
- 0 replies
- 1.6k views
-
-
கேணல் ராயூ அண்ணாவுக்கு வீர வணக்கம் 🙏 / தமிழீழ போராட்டத்தில் கேணல் ராயூ அண்ணாவின் திறமை எம் போராட்டத்துக்கு மிகவும் பலம் சேர்த்தது , ஏழாலை எனும் அழகான ஊரில் பிறந்து வளந்து போராட்ட களம் நோக்கி சென்ற தளபதி எங்கள் ராயூ அண்ணா 🙏🤞/ தமிழீழ தேசிய தலைவரின் அன்பு தம்பி , தலைவர் அருகில் கூடவே இருந்து வளந்த திறமையான அறிவான தளபதி ராயூ அண்ணா 🙏 / எம் போராட்டத்துக்காக இரவு பகல் என்று பாராமல் அயராது பாடு பட்ட தளபதி ராயூ அண்ணா 🙏/ புற்றுநோய் வந்த போதும் உயிரை பற்றி யோசிக்காம போராட்டத்தை நேசித்த தளபதி ராயூ அண்ணா 😓 ராயூ அண்ணாவை நேரில் பார்க்கும் சர்ந்தப்பம் எனக்கு கிடைக்கல , ராயூ அண்ணா அருகில் நி…
-
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
-
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார். மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய விக்ரர் 12.10.1986 அன்று அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 28 ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும்,முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்க…
-
- 5 replies
- 1.5k views
-
-
‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்.”கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது.09.10.2007என் அன்பான மக்களுக்கு, சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள். இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன். தலைவர் இருக்கிற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்ப…
-
-
- 15 replies
- 1.5k views
-
-
08.12.1999 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக கடற்புலிகள் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை இடைமறித்து மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் கார்வண்ணன், மேஜர் யாழ்வேந்தன், மேஜர் இசைக்கோன் மற்றும் கப்டன் கானவன் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இக்கரும்புலி வீரர்களின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு கடுமையாக சேதமடைந்ததுடன் அதிலிருந்த கடற்படையினர் நால்வர் கொல்லப்பட்டும் மேலும் பலர் காயமடைந்திருந்தனர். விடுதலைப் போருக்கு வலுச்சேர்க்க கொண்டுவரப்பட்ட பொறுமதி வாய்ந்த போர்க் கருவிகள் மற்றும் வெட…
-
- 11 replies
- 1.5k views
-
-
எல்லோருக்கும் கடைசிப்பிள்ளை லெப். கேணல் ஈழப்பிரியன்.! Last updated Dec 31, 2019 பிரியா என் அன்பு நண்பனே…! உனக்கு…… என் வீரவணக்கங்கள்..! ஈழப்பிரியன், ஆரம்பத்தில் இருந்தே அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவன். மெய்ப்பாதுகாவலனாக, தனிப்பட்ட உதவியாளனாக, கிலோ வண் முகாம் பொறுப்பாளனாக, அரசியல் துறைக்கு ஆயுத அறிக்கை பரிசோதனாக, பயிற்சியாளனாக, துப்பாக்கி சூட்டு பயிற்சியாளனாக, வினியோக அணி பொறுப்பாளனாக, முகாம்கள் கட்டுமான பணிப்பாளனாக, இறுதியாக படையணிப்பொறுப்பாளனாக….. எவ்வளவு பணிகள்? எவ்வளவு பொறுப்புக்கள்.. சிறிய வயதிற்குள்.. மிகப்பெரிய பொறுப்புக்கள்… கிளிநொச்சி உருத்திரபுரம் தான் அவனது பெற…
-
- 3 replies
- 1.5k views
-
-
18.11.1997 அன்று வவுனியா மதியாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் யோகரஞ்சன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 14 replies
- 1.5k views
-
-
கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும்எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும். தொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசற…
-
- 6 replies
- 1.5k views
-
-
கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி கடலன்னையின் பெண் குழந்தை: முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி. உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது. “இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்” அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியான…
-
- 6 replies
- 1.5k views
-