மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
முல்லைக் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் காவியமான இரு கடற்கரும்புலிகள் உட்பட்ட மூன்று மாவீரர்களினதும், அக்கரைப்பற்றில் வீரச்சாவைத் தழுவிய லெப். ராகவன் என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 04.08.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றின்போது ஏற்பட்ட படகு விபத்தில் கடற்கரும்புலி கப்டன் ராகுலன் (ஏரத்பண்டா கிருஸ்ணகுமார் - பரந்தன், கிளிநொச்சி) கடற்கரும்புலி கப்டன் கரிகாலன் (பூலோகசிங்கம் புஸ்பகாந்தன் - முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு) மேஜர் சர்மா (ஆறுமுகம் சங்கரலிங்கம் - கல்லடி, மட்டக்களப்பு) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இதேநாள் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையின…
-
- 12 replies
- 1.5k views
- 1 follower
-
-
பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம் மெய்ப்பாதுகாவலனாக…. தனிப்பட்ட உதவியாளனாக.. கிலோ வண் முகாம் பொறுப்பாளனாக… அரசியல் துறைக்கு ஆயுத அறிக்கை பரிசோதனாக, பயிற்சியாளனாக, துப்பாக்கி சூட்டு பயிற்சியாளனாக.. வினியோக அணி பொறுப்பாளனாக.. முகாம்கள் கட்டுமான பணிப்பாளனாக… இறுதியாக படையணிப்பொறுப்பாளனாக….. ஆரம்பத்தில் இருந்தே.. அரசியல் துறைப்பொறுப்பாள்ர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவன். தமிழ்ச்செல்வண்ணரால் குந்தி இருந்து டொய்லட் போகமுடியாது.. (விழுப்புண் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் பின்னர்) ஆகவே கொமட் தேவை. ஆனால் வெளியே செல்லும் போது கொமட் இருக்காது அதனால் எப்போதும் ஓர் உள்ளூரில் வடிவமைக்கப்ப…
-
- 10 replies
- 1.5k views
-
-
லெப். கேணல் ராகவன் நவம்பர் 2, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள், வீரத் தளபதிகள்/0 கருத்து விடுதலையின் பாதையில் அழியாத தடம்: ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் ராகவன். 1999 நவம்பர் இரண்டாம் நாள். உலகின் செய்திக் கதவுகளெல்லாம் பொங்கிப் பிரவாகித்த “ஓயாத அலை” களின் வீச்சுக்கு வழிவிட்டன. உலக இராணுவச் சரித்திரத்தில் நிலைபெற்ற ஓயாத அலைகள் மூன்றின் முதலாம் நாள் தமிழீழத்தின் சிறந்த போர்த் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் ராகவனையும் தன்னுடன் அணைத்துக் கொண்டது. வெற்றிமுரசு கொட்டிச் சிங்களம் செய்த பெரும் போர் நடவடிக்கைகளின் போதெல்லாம் எதிர்த்து நின்று போரிட்ட புலிகளின் போர்த் தளபதி அவன். உலக வரலாற்று ஏடுகளிற் பெரும் சரித்திரப் ப…
-
- 3 replies
- 1.5k views
-
-
லெப். கேணல் நிரோஜன் கடலில் அவனது காவியம்: கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிரோஜன் கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் நெஞ்சில் அழியாத தடங்களாகப் பதிந்திருக்கின்றன. கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திறந்து பேசுமானால் இவனைப் பற்றி இவன் சாதனைகளைப் பற்றி இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் என்பது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கும். ஆனால்இ அவை இப்போது மௌனமாய் இருப்பதால் அந்தப் பணியை எனது எழுதுகோல் ஏற்…
-
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ். வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் 30.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அகிலா, லெப்.கேணல் உருத்திரா(உருத்திரன்) ஆகியோரின் 15ம் ஆண்டு வீரவணக்க நாளும், 30.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் அரவம் தீண்டியதனால் சாவடைந்த லெப்.கேணல் வரதா(ஆதி) அவர்களின் 4ம் ஆண்டு வீரவணக்க நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்து வீரச்சாவைத் தழுவிய இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம். http://meenakam.com/...ews/2011/10/30/ தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கும், மற்றும் இன்றையநாளில் வீரசாவினைத்தளுவிய ஏனைய வீரமறவ…
-
- 10 replies
- 1.5k views
-
-
கட்டுநாயக்க சிறிலங்கா வான்படைத் தளத்தில் சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரழிவுகளை ஏற்படுத்தி வீரவரலாறு படைத்து காவியமான 14 நிழற்கரும்புலிகளின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 24.07.2001 அன்று அதிகாலை கட்டுநாயக்க வான்படைத் தளத்திற்குள் ஊடுருவிய கரும்புலிகளின் சிறப்பு தாக்குதல் அணி வான்படைத்தளத்திலும் அதனோடு இணைந்திருந்த பன்னாட்டு வானூர்தித் தளத்திலும் பல வானூர்திகளை அழித்து பலவற்றைச் சேதப்படுத்தியும் சிறிலங்கா அரசிற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது. கட்டுநாயக்க வான்படைத்தளத்தில் வைத்து தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வந்த கிபிர் மற்றும் மிக் - 27 குண்டு வீச்சு வானூர்திகள் உட்பட 8 வான்படை வான்கலங்கள் அழிக்கப்பட்டன் 12ற்கும் மேற்பட்ட வான்படை வான்கலங்கள் தேசமாக்கப…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலட்சிய உறுதியுடன் வாழ்ந்த லெப் .கேணல் நீலன் ஒரு கட்டுப்பாடான இயக்கத்துடன் முரண்படுவோர் எந்த நிலைக்குச் செல்வர். என்பதைக் கருணாவின் பிளவு நமக்கு வெளிப்படுத்தியது. அதன் மோசமான விளைவுகளில் ஒன்று லெப்.கேணல் நீலனின் படுகொலை. இயக்கத்தில் இணைந்து கொண்டோர் இலட்சியத்திற்கும், இயக்கத்திற்கும், அதன் தலைமைக்கும் விசுவாசமாக நடந்து கொள்வேன் என சத்தியப்பிரமாணம் செய்திருந்தனர். அதன்படி என்றுமே தலைமைக்கு விசுவாசமாக இருந்தார் நீலன். அதுவே அவரது இழப்புக்கும் காரணமாகியது. துரோகம் செய்யப் புறப்படுபவன் தனிப்பட்ட நட்பையும் பொருட்படுத்த மாட்டான் என்பதை நிரூபித்தார் கருணா ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நீலன். விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் புலிகளின் பிரதான தளங்களுள் …
-
- 0 replies
- 1.5k views
-
-
“4.30 மணிக்கு சுபன் எழும். அதுக்கு முன்னமே, சனம் வந்து அவனைப் பார்க்க நிற்கும். எழும்பினதிலிருந்து வந்தவங்களை சுபன் சந்தித்துக் கதைக்கும். சண்டைக்குப் போட்டுவந்து கலைச்சு இருக்கும்; அப்பாவும் யாரும் சந்திக்க வந்தா சந்திச்சு கதைக்கும். வெளியிலை வேலை செய்யேக்கை சரியாச் செய்வம்; இல்லாட்டி சனம் சுபநிட்ட சொல்லிடும். நாங்கள் ஏதும் சொல்லால் உங்களோட என்ன பேச்சு. நாங்க தளபதிக்கிட்ட சொல்லிக்கிறோம் என்று சனம் சொல்லும். சுபன் செத்ததை அவங்களாலை தாங்கிக்க முடியலை. மக்களின் சிக்கல்களைத் தீர்ப்பதில் சுபன் காட்டிய கரிசனையையும், அவனுக்கும் மக்களுக்கும் இருந்த நெருக்கத்தையும் பரஞ்சோதி சொல்லிக் கொண்டிருந்தான். “குடுபங்கள் பிரிஞ்ச சிக்கல் எண்டால் சுபன் நேரடியாகவே…
-
- 0 replies
- 1.5k views
-
-
13.12.1999 அன்று ஓயாத அலைகள் 3 தொடர் நடவடிக்கையின் போது யாழ். குடா நாட்டில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சிவமோகன் உட்பட்ட 14 வீரவேங்கைளின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் கட்டைக்காடு பகுதியில் நடைபெற்ற சமரில் லெப்.கேணல் சிவமோகன் (சதாசிவம் கிருபாகரன் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) கப்டன் ஈழத்தரசன் (முருகையா கேதீஸ்வரன் - பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி) லெப்டினன்ட் கவிகரன் (குணேஸ் ரவீந்திரன் - பெரியபோரதீவு, மட்டக்களப்பு) லெபடினன்ட் மலைமகன்/மலைமாறன் (அழகிப்போடி ஜெயா - நாவற்காடு, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அகிலநாதன் (வேல்முருகு சுபாநாயகன் - அம்பிலாந்துறை, மட்டக்களப்பு) ஆகிய போராளிளும். வெற்றிக்கேணிப் பகுதியில் நடைபெற்ற சமரில்…
-
- 9 replies
- 1.5k views
-
-
29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பௌத்திரன், மணலாற்றுப் பகுதியில் இதே நாள் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://meenakam.com/...ews/2011/10/29/ தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கும், மற்றும் இன்றையநாளில் வீரசாவினைத்தளுவிய ஏனைய வீரமறவர்களுக்கும் எனது வீரவணக்கம்.
-
- 10 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
சாவகச்சேரிப் பகுதியை வல்வளைக்கும் நோக்குடன் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் காவியமான 55 மாவீரர்களினதும், மணலாறு மற்றும் பளைப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிய ஐந்து மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 17.09.2000 அன்று சாவகச்சேரிப் பகுதிளை வல்வளைக்கும் நோக்குடன் மூன்று முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய வல்வளைப்பு முயற்சிகெதிராக தீரமுடன் களமாடி 55 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு மேஜர் கயல்விழி (திருநாவுக்கரசு யோகேஸ்வரி _ கிளிநொச்சி) மேஜர் அற்புதம் (ஜேசுதாசன் சரோஜினி _ யாழ்ப்பாணம்) கப்டன் மிதுலன் (சிவபாதசுந்தரம் கோகுலன் _ திருகோணமலை) கப்டன் சுவர்ணா (தீப்பொழில்) (சிவராசா செல்வமதி _…
-
- 11 replies
- 1.5k views
-
-
சுகயீனமாக இருந்து வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் தங்கியிருந்த வேளை 1985இல் இந்தியாவில ஒரு பயிற்சிப் பாசறையில்… அம்மாவைப் பிரிந்து வந்த சில நாட்கள். கடல் பயணத்தால் உண்டான பதற்றம். பயிற்சி எடுப்பதற்காக நாம் அனுப்பப்பட்ட மலைப்பிரதேசம். இந்த மூன்றையுமே நான் இதற்கு முன்னர சந்தித்திருக்கவில்லை. இந்தத் தாக்கத்தின் விளைவாக எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. எமது பயிற்சிப் பாசறையில் அமைக்கப்பட்டடிருந்த கொட்டிலினுள் கம்பளிப் போர்வையால் போர்த்தபடி “அம்மா, அம்மா “ என முனகியவாறு படுத்திருந்தேன். மெவாக ஒரு கை என் போர்வையை விலக்கி, உடல் வெப்ப நிலையைப் பரிசோதிப்பதற்காக என் கழுத்தில் பதித்தது. கண்களை திறந்து பார்த்தேன். ஒர் அக்கா என் முன் நின்றார். “என்னம்மா செய்யுது என்ன, சாப்ப…
-
-
- 15 replies
- 1.5k views
-
-
பொட்டம்மான் வருவாரா? என்ற எனது கேள்வி பலருக்கும் அவர் வரவேண்டும், மீண்டும் இயக்கத்தை கட்டி வளர்க்க வேண்டும் என்ற எண்ணங்களையும் ஏற்படுத்தி இருக்கலாம். அவர் மீண்டும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் பல்லாயிரக் கணக்கானோரில் நானும் ஒருவன்! இந்த நேரத்தில் அவர் வந்துவிடக் கூடாது.இறந்தவராகவே இருக்கட்டும் என்று சிந்திப்பவர்களும் புலம்பெயர் தேசங்களில் இருக்கலாம். ஏனெனில் இயக்கத்தின் சொத்துக்கள் இன்னார் இன்னாரிடம் இருக்கின்றன என்ற விபரங்கள் அடங்கிய பெயர்ப் பட்டியலும் வெளிவருகின்றது. நிச்சியமாக இயக்கத்தின் சொத்துக்கள் பலரிடம் இருக்க வேண்டும்.அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை, "அம்மான் வந்தால் கொடுப்பம்".அவர் வந்து கணக்கு கேட்டால் நாங்கள் என்ன செய்வது என்றொரு புருடா, கதையை அவ…
-
- 0 replies
- 1.4k views
-
-
Posted by: on Sep 8, 2011 மாதம் ஒரு முறை நடக்கும் துளசிராம் இலக்கிய வட்டத்திற்குச் சென்ற போது நிலவனைச் சந்தித்திருக்கிறேன். அவனை நான் பெரிது படுத்தியதில்லை. சக போராளி என்ற மதிப்பை மாத்திரம் கொடுத்தேன். அதற்கு மேல் என்னத்தைச் செய்ய முடியும். அவனுடைய வரலாறு சில வருடங்களுக்குப் பிறகு கிடைக்கப் பெற்றேன். அதை முழுமையானது என்று சொல்ல முடியாது. துண்டுகளாகச் சில செய்திகள் வாய்வழியாக கிடைத்தன. அவற்றைப் பொருத்தி எழுதுகிறேன். வரலாறு என்று தலைப்பிட்டாலும் துணுக்குகள் என்றால் மிகப் பொருத்தம். துளசிராம் மட்டக்களப்புப் போராளி. இலட்சியத்திற்காக உயிரீகம் செய்த மாவீரன். எழுத்தில் வல்லவனான இந்த மாவீரன் நினைவாக இந்த இலக்கிய வட்டம் உருவாக்கப்பட்டது. அனேகமான ச…
-
- 1 reply
- 1.4k views
-
-
கடற்புலி லெப். கேணல் நிலவன் டிசம்பர் 26, 2020/தேசக்காற்று/அலைகடல் நாயகர்கள்/0 கருத்து என்றும் எம் இனத்திற்கு நிலவாய் இருப்பாய் நிலவா…. ‘மனிதர்களின் இருப்பை விட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது’ என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு சிகரம் வதை;தாற்போல் எமது விடுதலைப் போராட்டத்திலும் கடற்புலிகள் அணியில் அலையாக ஆர்ப்பரித்து ஒரு தசாப்தகாலச் சக்கரத்தை தரைச்சமர், கடற்சமர், கனரக ஆயுதச் சூட்டாளன், அரசியல், நிர்வாகம், வழங்கல், கட்டளை அதிகாரி, கட்டளைத் தளபதி எனச்சுழன்று பல பக்கங்களையும் தன்னகத்தே கொண்டு செயல்படுத்திய ஒரு மாவீரனாம் நிலவன். ஒரு வீரனின் செயற்பாடுகள், அர்ப்பணிப்புக்கள், சாதனைகள், தியாகங்கள…
-
-
- 1 reply
- 1.4k views
-
-
வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் சிவாஜி உட்பட்ட 25 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 17.08.1996 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பினூடாக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் லெப்.கேணல் சிவாஜி உட்பட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த 25 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு லெப்.கேணல் சிவாஜி (கிருஸ்ணன் சிறிக்குமார் - கொக்குவில், யாழ்ப்பாணம்) மேஜர் றோயல் (சோமசுந்தரம் சோபராசா - தென்னமரவடி, திருகோணமலை) மேஜர் அப்பன் (சின்னத்துரை ரவிக்குமார் - மட்டுவில், யாழ்ப்பாணம்) மேஜர் பொழி…
-
- 14 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும். ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும…
-
- 13 replies
- 1.4k views
-
-
தென்தமிழீழம் பெற்ற மாவீரன் தளபதி அன்ரனி ! வசிட்டர் வாயால் பிரமரிஷி என்பதுபோல கிட்டு வாயால் சிறந்த தளபதி அன்ரனி ! "உலகெங்கிலும் கிடைக்காத மலிவான கூலி - எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்" என அடையாளப் படுத்தப்பட்டவர்கள் தமிழர்கள். ஆனால் திருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் இவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள். இந்த ஆரம்பம் கல்முனை - துறைநீலாவணைப் பகுதியில் இடம்பெற்றது. பெரும் பாலானோருக்குத் தெரியாது. தம்மைத் தாக்க வந்த ஆயுத தாரிகளான சிங்களவர்களை ஓட ஓட விரட்டியவர்கள் கனகசூரியம் உள்ளடங்கிய குழுவினர். அம்பாறை பட்டிப்பளையில் அரசமரக் கிளையொன்றை நாட்டிய இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ் .சேனநாயக்கா, " இந்த மரக்கன்று பெரிய விருட்சமாகும் போது…
-
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
[size=1][size=3][size=4]கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் திருமலையில் காவியமான மேஜர் பாபு, 2ம் லெப்.நித்தியன் ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்[/size][/size] [size=3][size=4]09.10.2001 அன்று சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது[/size][/size] [size=3][size=4]கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் (பாலசுந்தரம் தயாபரன் – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)[/size][/size] [size=3][size=4]என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.[/size][/size] [size=3][size=4]இம் மாவீரரினதும் இதே நாள் திருகோணமலை வெல்வேரி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா வான்படை முகாம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவைத் தழுவிய[/size][/size] [size=3][size=4]மேஜர் பாபு (தெய்வேந்திரம் சிவகுமார் – பி…
-
- 12 replies
- 1.4k views
-
-
[size=3] [size=4]கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையில் காவியமான 293 மாவீரர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.[/size] [size=4]27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது “ஓயாத அலைகள் 2” படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது 2000 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன. கிளிநொச்சிப் பகுதி சிறிலங்கா படைகளின் வல்வளைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட “ஓயாத அலைகள் - 2” நடவடிக்கையின் வெற்றிக்காக 400 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். 27.09.1998 அன்று ஓயாத அலைகள் - 2 நடவடிக்கை…
-
- 11 replies
- 1.4k views
-
-
லெப். கேணல் ஈழப்பிரியன் டிசம்பர் 31, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள்/0 கருத்து பிரியா என் அன்பு நண்பனே…! உனக்கு…… என் வீரவணக்கங்கள்..! ஈழப்பிரியன், ஆரம்பத்தில் இருந்தே அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவன். மெய்ப்பாதுகாவலனாக, தனிப்பட்ட உதவியாளனாக, கிலோ வண் முகாம் பொறுப்பாளனாக, அரசியல் துறைக்கு ஆயுத அறிக்கை பரிசோதனாக, பயிற்சியாளனாக, துப்பாக்கி சூட்டு பயிற்சியாளனாக, வினியோக அணி பொறுப்பாளனாக, முகாம்கள் கட்டுமான பணிப்பாளனாக, இறுதியாக படையணிப்பொறுப்பாளனாக….. எவ்வளவு பணிகள்? எவ்வளவு பொறுப்புக்கள்.. சிறிய வயதிற்குள்.. மிகப்பெரிய பொறுப்புக்கள்… கிளிநொச்சி உருத்திரபுரம் தான்…
-
- 2 replies
- 1.4k views
-
-
கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் வரதன், மதன் கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் மேஜர் வரதன் / நிலவன், கப்டன் மதன். ‘மகனைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது! இப்ப எப்படி இருப்பானோ?’ அம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்துவங்கிய போது “புலிக்கு……” என்று புறப்பட்டுப் போனவன்தான். அதன் பிறகு அவர்கள் ஒருநாள்கூட காணவில்லை. இடையில் ஒரு நாள் சண்டை ஒன்றில் மைன்ஸ் வெடித்து பிள்ளைக்கு கால் போய் விட்டதாம் என்ற துயரச் செய்தி அம்மாவுக்கு எட்டியது. அம்மாவின் கண்களில் அருவி. வேதனையால் துடித்துக்கொண்டிருப்பானோ……? “அம்மா……!” என்று அழுவானோ……? அவள் மகனையே நினைத்துக்கொண்டிருப்பான். கொஞ்ச நாட்களா…
-
-
- 6 replies
- 1.4k views
-
-
கடற்கரும்புலி மேஜர் முத்துமணி வீரவணக்க நாள் இன்றாகும் 03.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://meenakam.com/...ews/2011/11/03 தமிழ் ஈழ விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரருக்கு வீரவணக்கம் மற்றும் இன் நாளில் வீரகாவியமான வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கம்.
-
- 12 replies
- 1.4k views
-
-
பிஸ்டல் காய் மேஜர் சுவர்ணன்.! Last updated May 28, 2020 29.05.2000 அன்று மன்னார் தீவு பகுதியில் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு தழுவிய மேஜர் சுவர்ணன் ஆகிய மாவீரரின் 20 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கநாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் இப்போது யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு – வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத்தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட ந…
-
- 5 replies
- 1.4k views
-