மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
[size=3][size=4]11.11.1996 அன்று யாழ். கரைநகர் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகின் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் மேஜர் பாரதி - கப்டன் இன்னிசை ஆகியோரின் நினைவு நாளும், யாழ். தச்சன்தோப்புப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான எதிர்பாராத மோதில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவநேசன், கப்டன் பருதியப்பன், கப்டன் தூயோன் ஆகிய மாவீரர்களின் நினைவு நாளும் இன்றாகும்.[/size] [/size] [size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாள…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
“ஓயாத அலைகள் - 3” நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் குமணன் உட்பட்ட 10 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 12.12.1999 அன்று ஒயாத அலைகள் - 3 நடவடிக்கையின்போது பூநகரி, இயக்கச்சி, வடமராட்சி ஒல்லன்காடு மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளில் 10 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். பூநகரிப் பகுதியில் வீரவேங்கை வர்ணன் (விக்கினேஸ்வரன் அஜந்தன் - யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு) என்ற போராளியும், இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்ற சமரில் லெப்டினன்ட் பாணன் (நாதன்) (சன்னாசி நாகராசா - வட்டக்கச்சி, கிளிநொச்சி) என்ற போராளியும், வடமராட்சி ஒல்லன்காடு பகுதியில் இடம்பெற்ற சமரில் லெப்.கேணல் குமணன் (சாள்ஸ்) (கந்தையா சிவனேஸ்வரநாதன் - கோவில்புளியங்குளம், வவுனியா) லெ…
-
- 6 replies
- 952 views
-
-
மேஜர் பசிலன் நவம்பர் 8, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள், வீரத் தளபதிகள்/0 கருத்து சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்ற தமிழ் மக்கள், தம் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மிதவாதிகளுக்கு வோட்டுக்களை அள்ளி வழங்கினார்கள். சிங்களப் பேரினவாத அரசு மாநில சயாட்சி, மாவட்டசபை, சமஸ்டி ஆட்சி என்று, உரிமைகளற்ற திட்டங்களைத் தீட்டி இதே மிதவாதிகள் மூலம் ஏமாற்றிய போதும் சாத்வீக முறையிலேயே தம் உரிமைகளைக் கேட்டு நம்பிக்கையுடன் போராடினார்கள் தமிழர்கள். ஆனால் இன ஒழிப்பின் உச்சத்தில், பாரம்பரியப் பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஆக்கப்படு…
-
- 2 replies
- 630 views
-
-
27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் 2 படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். லெப்.கேணல்கள் சித்தார்த்தன்(சித்தா), செல்வி(றியன்சி), ஞானி, ஈஸ்வரகாந்தன், காந்தசீலன், விசு, மைந்தன், மணிமேகலன் உட்பட 400 வரையான மாவீரர்கள் கிளிநொச்சி மண்ணை மீட்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கினர். தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை அடைவதற்காக தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்
-
- 19 replies
- 2.6k views
-
-
-
கனகமக்கா போராட்டத்தில் இந்த தாய் யார்... கனகமக்கா என்றால் அந்த ஊரில் யாருக்கும் தெரியும். அவ்வூரின் எல்லா நன்மை தீமைகளிலும் பங்கேற்கும் ஒரு தாயாகவே அவள் மாறிவிட்டாள். தன்னுடைய கணவனுக்கு சிங்கள இராணுவம் இழைத்த கொடுமைச் சாவை அவளின் மனம் மறக்க முடியாதிருந்தது. அன்றைய நிலையிலிருந்து தன்னை ஒரு போராளியாகவே மாற்றி விட்டாள் கனகமக்கா. காலம் உருண்டோடியது. இந்திய இராணுவம் தமிழீழம் எங்கும் ஊடுருவியது. கனகமக்கா தன் மகனுக்காகவே தான் இன்னும் உயிரோடிருப்பதாகக் கூறுவாள். அவனோ தன்னை இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். என்னதான் இருந்தாலும் கனகமக்கா தானும் ஒரு சாதாரண தாயாக இருந்துவிட விரும்பவில்லை. அவன் தன்னை இயக்கத்துடன் இணைத்துக்கொன்டத்தை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டாள். காடுக…
-
- 0 replies
- 431 views
-
-
லெப்ரினன்ட் புகழினி புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் "லொட லொட" என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு "தெண்டித் தெண்டி"சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் அணிவாள்.எந்த வேலையென்றாலும் நாளைக்குச் செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.எங்களின் நாவற்பழ நிறத்தழகி அவள்.தெற்றுப் பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்....பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அ…
-
- 3 replies
- 814 views
-
-
ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் டிசம்பர் 15, 2020/தேசக்காற்று/ஈகியர்/0 கருத்து யாழ். குடாநாட்டின் மீது சந்திரிகா தலைமையிலான சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பெரும் படையெடுப்பினால் பல இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டதனால் சிங்கள அரச படைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழீழ விடுத்தலுக்கு ஆதரவாக தமிழகம் திருச்சியில் 15.12.1995 அன்று தீக்குளித்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும். தமிழினத் தியாகி அப்துல் ரவூப்வுக்கு தலைசாய்த்து அஞ்சலிக்கின்றோம். நெஞ்சம் கனக்க, முகம் தெரியாத அந்த தியாகியின் உயிர்த்துடிப்பை எம்முள் நிறைத்துக்கொண்டோம். போராளிக்குரிய உறுதி. தியாகத்தி…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
27.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நிசாந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 9 replies
- 2.5k views
-
-
யாழ்ப்பாணம் அரியாலை ஆனந்தன் வடலி வீதியில் மயில்வாகனம் திலகவதி தம்பதிகளுக்கு 1975 ஆம் ஆண்டு யூன் மாதம் 29; அன்று ஆறாவது புதல்வனாக பிறந்தவன் தான் லெப் கேணல் சிந்து. இவனது இயற்பெயர் தயாளன். இவன் ஆரம்பக் கல்வியை அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலையில் பயின்று வந்தவன், இளமைக்காலத்தில் கல்வியில் கணிசமாகவும், விளையாட்டில் மிகச்சிறந்தும் விளங்கினான். இவன் பாடசாலை இல்ல விளையாட்டுகளிலும் சரி, கழக விளையாட்டுக்களிலும் சரி தனது தனித்திறமையை வெளிக்காட்டினான். தாச்சிப்போட்டி, கரப்பந்தாட்டம் போன்றவற்றில் தன் திறமையை பெரிதும் வெளிப்படுத்தினான். தயா இறங்கி தாச்சி மறித்தால் யாரும் கோடுதாண்டி போகமாட்டார்கள் என்பார்கள் அவனது நண்பர்களும் அயலவர்களும் அறிந்ததொன்று. எல்லோரது கரவொலியும் அவன…
-
- 13 replies
- 2.5k views
-
-
[size=4]மன்னார் அடம்பன் பகுதியில் காவியமான மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர் மற்றும் 2ம் லெப்டினன்ட் றோம் ஆகிய மாவீரர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 12.10.1986 அன்று மன்னார் அடம்பன் பகுதி மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகை முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர் (மருசலீன் பியூஸ்லஸ் - பனங்கட்டிக்கொட்டு - மன்னார்) 2ம் லெப்டினன்ட் றோம் (செல்வராசா செல்வநாதன் - அடம்பன் - மன்னார்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். லெப்.கேணல் விக்ரர் அவர்களின் வீரவரலாற்றின் சி…
-
-
- 14 replies
- 2.2k views
-
-
அம்மா….என்னை தேடவேண்டாம் நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன்.! - கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் Last updated Apr 11, 2020 கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்.! தென் தமிழீழத்திலிருந்து வேவுநடவடிக்கை ஒன்றை முடித்து 11.04.2000 அன்று தளம் திரும்பிக்கொண்டிருந்த போது திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் காவியமான கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழத்தின் போரியல் வரலாற்றில் பல கரும்புலி நடவடிக்கைசென்று மீண்ட வரலாறு இக் கரும்புலிக்கும் உண்டு. ஆண்குரல்:- “அம்மா…. எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக…. என்னால் செய்யக்கூடிய தியாகம் எது…
-
-
- 2 replies
- 636 views
-
-
மேஜர் நாயகன் நிதர்சன களப் படப்பிடிப்பாளர் மேஜர் நாயகன். மேஜர் நாயகன், பேரம்பலம் யோகேஸ்வரன்; இவன் 1989 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து, பல களங்களில் பங்கெடுத்து 09.06.1992 அன்று முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் முன்னேறிய சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது தனது இடது காலை இழந்தவன். தன் பணியில் இடைவிடாது ஏதாவது போராட்டத்திற்குப் பயன் தரக்கூடியதாக செய்யவேண்டும் என்ற ஆர்வமுடையவன். இவன் தொழில்நுட்பத்துறையில் பெரிதும் நாட்டம் உடையவன். 1993ம் ஆண்டுக் காலப் பகுதியில் காணொளிப் பதிவு மற்றும் காணொளித் தொகுப்புப் பயிற்சிக்காக லெப்டினன்ட் கேணல் நவம் அறிவுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான், பயிற்சி முடிந்து 1994 காலப்பகுதியில் நிதர்சனப்பிரிவு …
-
- 2 replies
- 655 views
-
-
தமிழ் செல்வன் அண்ணாவுக்கும் அவருடன் வீரகாவியமான சக தோழர்களுக்கும் வீர வணக்கம் 🙏 தமிழினத்தின் அழகான சிரிப்பின் குரல் மெளவுனமாகி 12 ஆண்டுகள் ஆகி விட்டது 😓
-
-
- 4 replies
- 802 views
- 1 follower
-
-
இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்.ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த இசைப்பிரியாஇன்னொருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்த மன்னம்பெரி இருவரும் பயங்கரவாதிகள் என கூறப்பட்டு கொல்லப்பட்டனர். இருவரும் அரச படைகளால் பாலியல் வல்லறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். ஒருவர் 1971ல் வீட்டில் இருந்தபோது இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். இன்னொருவர் 2009ல் சரணடைந்த பின்பு அரச படையால் கொல்லப்பட்டார். நிராயுதபாணியாக இருந்தவர்களை அதுவும் பெண்களை கொல்வது தவறு இல்லையா என்று கேட்டபோது ஆம். அவர்கள் பயங்கரவாதிகள் எனவே அவர்களை கொல்வது நியாயமே என்றார்கள். சரி. அதற்காக பாலியல் வல்லுறவு செய்து கொல்வது எப்படி நியாயமாகும் என்று கேட்டால் அது சில கட்டுப்பாடற்ற படையினரின் செயல். அதை விசாரித…
-
- 0 replies
- 872 views
-
-
மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக…. அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர் பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர் உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே! எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர் இம்மியளவும் இதயம் பயமறியா வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து ஆரத்தழுவிய எம் அக்காமார் தங்கையர்கள் வாழ்ந்தார்கள் ஓர்கால் வரலாறெமக்குண்டு தாழ்ந்தாலும் அன்று தமிழீழத் தாய்மண்ணில் வெற்றிக் கொடிநாட்டி விரட்டிப் பகைதன்னை கொற்றவைகளாகக் குலங்காத்தார் எம் பெண்கள் என்று பெருமிதத்தோ டியம்புதற்…
-
- 2 replies
- 2.6k views
-
-
15.07.1983 அன்று யாழ். மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிய லெப். சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந் ஆகியோரின் 29ம் ஆண்டு நினைவு நாளும் 15.07.2001 அன்று மன்னாரில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் இன்பனின் 11ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். விடுதலைப் புலிகளின் தாக்குதல் தளபதியான லெப்.சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந் உட்பட மூன்று போராளிகள் 15.07.1983 அன்று யாழ். மீசாலைப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினரின் முற்றுகையில் சிக்கிக் கொண்டனர். இந்த முற்றுகையை முறியடித்து தப்பிச் செல்வதற்கு முயன்றவேளை சிறிலங்கா படையினரின் தாக்குதலில் தளபதி லெப். சீலன் விழுப்புண்ணடைந்தார். தன்னால் தப்பிச் செல்ல முடியாது…
-
- 9 replies
- 2k views
-
-
ஆனையிறவு படைத்தளம் மீதான ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது தடைமுகாம் மீதான இரண்டாவது தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் சரா உட்பட்ட 69 மாவீரர்களினதும் இதேநாளில் வாகரையில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை விவே என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது 11.07.1991 அன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வெற்றிக் கொள்ளப்படாதிருந்த தடைமுகாம் மீது 27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய தாக்குதல் தொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடாத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிறிலங்கா படையினர் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கையின்போது படைத்தளம் நோக்கி முன்னகர்ந்த போராளிகளிற்கு காப்பாக விடுதலை…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதல் ஒரு பார்வை 10.06.1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கைப் படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 25ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்…. கரும்புலி கப்டன் சாதுரியன் நடராசா அரசரட்ணம் மட்டக்களப்பு கரும்புலி மேஜர் யாழினி சிவசுப்ரமணியம் ராகினி யாழ்ப்பாணம் கரும்புலி மேஜர் நிதன் (பர்வதன்) மாணிக்கம் அருள்ராசா மட்டக்களப்பு தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர…
-
- 0 replies
- 593 views
-
-
நாச்சிக்குடாவிலிருந்து வந்துகொண்டிருந்த கடற்புலிகளுக்குச் சொந்தமான சண்டைப்படகொன்று கிளிநொச்சி இரணைதீவுக்கருகே வைத்து 08/02/1997 அன்று கடற்சமரொன்றிற்குப்பின் கடற்படையினரால் அழிக்கப்பட்டது (உதயன்: 11/02/1997). இத்தாக்குதலில் 14 போராளிகள் வீரச்சாவடைந்தனர். பெயர் விரிப்பு பின்வருமாறு: மேஜர் முத்துக்குமரன் (ஜாக்கர்) மேஜர் ரகுவரன் மேஜர் சிங்கன் மேஜர் ஜெயந்தன் கப்டன் மழவன் (விமல்) கப்டன் செம்முகிலன் கப்டன் தமிழரசன் (சிவா) கப்டன் சரித்திரன் (குமரன்) கப்டன் ஜீவாகரன் கப்டன் முகுந்தன் 2ம் லெப்டினன்ட் குலசிங்கம் (மலரவன்) 2ம் லெப்டினன்ட் தவக்குமார் வீரவேங்கை வேணுதாசன் (மதியழகன்) வீரவேங்கை புலித்…
-
- 0 replies
- 333 views
-
-
தமிழீழ தேசிய இன விடுதலை போராட்டத்தின் தேசிய தலைவரின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு. அதே போன்று தான் இந்த புகைப்படத்திற்கும் பெரிய வரலாறு உண்டு. இந்த புகைப்படமானது 1987 ஜனவரி 6 ஆம் தியதி தொண்டமானாறு கெருடாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பேஸ் ஒன் எனும் முகாமில் 1987 ஜனவரி அன்று இரவு எடுக்கப்பட்டது. இதற்கு முன்பாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தேசியத் தலைவர் தமிழகத்தில் இருந்து வந்த நிலையில், கடைசியாக இந்தியாவில் இருந்து 1987 ஜனவரி 5ஆம் தியதி அன்று தான் புறப்பட்டு மாதகல் வழியாக யாழ்ப்பாணம் வந்தது குறிப்பிடத்தக்கது. தாயகம் திரும்பிய அன்றைய மறு தினமே இந்த முகாமிற்கு தலைவர் வருகை தந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் தளபதி கிட்டு தலைமையில் யாழ்குடா நாடு அன…
-
- 0 replies
- 253 views
-
-
இம்மறவனைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது.. வேசுபுக்கில் மேய்ந்து கொண்டு போகும்போது இவந்தொடர்பாய் கிடைத்த வைரத்திற்குச் சமனான ஒரு தகவலை இங்கே பதிந்து செல்கிறேன். இவர் கரும்புலிகளைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படமான 'உயிரம்புகள்' இல் ஒரு கரும்புலியாய் வேடம் ஏற்று நடித்தவர் ஆவார்.. ஆனால், பின்னாளில் உண்மையிலேயே ஒரு மறைமுகக் கரும்புலியாகி காற்றோடு கலந்துவிட்டான். என்றென்றும் வாழ்வாய், தமிழர் மனங்களில்!
-
- 2 replies
- 875 views
-
-
விடுதலைக்கான தேடலாகவே மானிடவரலாறு நகர்ந்து கொண்டிருக்கிறது. நின்றும், நகர்ந்தும், அதிவேகமான பாய்ச்சலுடனும், தேங்கியும், பின்னகர்ந்தும் இந்த விடுதலைக்கான வரலாற்றுதேடல் இன்னும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஆனால் வரலாறே பிரமித்து நிற்பதாக சிலரின் வரலாறுகள் அமைந்து விடுகின்றன. அத்தனை அர்ப்பணமும், ஈகமும், தியாகமும் அவர்களின் வரலாறுமுழுதும் நிறைந்தே கிடக்கும். அப்படியான ஒரு வரலாற்றுக்கு உரியவனாகவே கப்டன் பண்டிதர் நிற்கிறான். தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் நிதி - ஆயுதங்களுக்கு பொறுப்பாளன், முதலாவது யாழ்மாவட்ட பொறுப்பாளன், மத்தியகுழு உறுப்பினன் என்று விடுதலைக்கான பல பாரிய பொறுப்புகளை தனது முதுகில் சுமந்திருந்த இந்த மாவீரன் தமிழீழமண்ணில் ஆகுதியாகி இருபத்திஏழு வருடங்க…
-
- 6 replies
- 1.2k views
-
-
https://m.facebook.com/story.php?story_fbid=2986697364765531&id=100002758898211
-
- 0 replies
- 446 views
-