தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
பண்டை தமிழ் இலக்கியங்கள் நமது பண்பாட்டையும் வாழ்வுமுறையையும் காட்டும் கண்ணாடி என்பர். ஒருசமூகத்தின் அறிவு செழுமைக்கு அது ஓர் உரைகல்...... குறிஞ்சிப்பாட்டு தமிழர் கண்ட பூக்கள் பட்டியலை தருகிறது. அது போல் தமிழ் இலக்கியங்களில் தெரித்து கிடக்கிற நம்மவர் கண்ட பறவைகளின் பட்டியலின் ஒரு சிறு தொகுப்பு. இதில் இன்று புழக்கத்தில் உள்ள பெயர்கள் வேறுபட்டிருக்கலாம். விடுபட்டிருக்கவும் கூடும். 1.அகத்தாரா, 2.அன்றில் 3.அன்னம் 4.ஆந்தை 5.ஆரா 6.ஆலா 7.ஆனைக்கால்உள்ளான் 8.…
-
- 0 replies
- 544 views
-
-
-
[size=6]தமிழ் இலக்கியத்தின் ஆரோக்கியம் இன்றும் நாளையும்[/size] [size=4]வி. ஜீவகுமாரன்[/size] [size=2] [size=4]அனைத்துலக தமிழ் மகாநாட்டில் தமிழ் இலக்கியமும் சமூகமும் இன்றும் நாளையும் என்பது பற்றி கட்டுரை எழுதுவது என்பது பூதத்தை பிடித்து பானைக்குள் அடக்கும் முயற்சியாகும். இலக்கியத்தின் ஒவ்வோர் பிரிவு பற்றி எழுதுவதாயின் அவையே பெரிய கட்டுரைக் கோப்புகளாக அமைந்து விடும். எனவே இலங்கை மற்றும் இலங்கையர் புலம் பெய்ர்நது படைக்கும் இலக்கியத்தின் ஆரோக்கியம் இன்றும் நாளையும் எவ்வாறு இருக்கின்றது அல்லது இருக்கப் போகின்றது என்பதனை பின்ணினைப்புகளுடன் கூடிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையாக அன்றி நிஜ உலகின் தரிசனங்களை மட்டும் வைத்து அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.[/size][/size] …
-
- 1 reply
- 1.8k views
-
-
சங்க காலத்திற்குப் பின் தோன்றிய நூல்களில் மிகவும் சுவையான காவியம் சிலப்பதிகாரம். படிக்கப் படிக்கத் தெவிட்டாத நூல். இதனால் தான் 'சொற்றேரின் சாரதி'யாம் 'பாரதி' தன் கவிதையில் "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்" என்று புகழ்கிறார். இந்தச் சிலப்பதிகாரத்தில் ஏராளமான அரிய செய்திகள் உள்ளன. இதனைத் தமிழ் இலக்கியத்தின் 'என்சைக்ளோபீடியா' (கலைக் களஞ்சியம்) என்றால் மிகையல்ல. இதனை எழுதிய இளங்கோவடிகள் நமக்குப் பொற்கைப் பாண்டியனின் கதையை வழங்குகிறார். பாண்டிய மன்னன் ஒருவனுக்கு அறுவைச் சிகிச்சை நடந்து, செயற்கைக் கை பொருத்தப்பட்ட செய்தியை இதிலிருந்து ஊகிக்கலாம். அக்காலத் தமிழகத்தில் மருத்துவ விஞ்ஞானம் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. பொற்கைப் பாண்டியனின் (PANDYA…
-
- 0 replies
- 486 views
-
-
தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள் – மு. பாலமுருகன் இலக்கியம் காலத்திற்கு ஏற்பத் தன் பாடுபொருளையும், பரிணாமத்தையும் விரிவுபடுத்திக் கொண்டு வருகிறது. நாம் வாழும் உலகம் அறிவியல் உலகமாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய இலக்கியமும் அறிவியலைப் படைப்பிலக்கியத்தில் பயன்படுத்தி வருகிறது. நம் முன்னோர்கள் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்தே அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். மழையின் வருகையைப் பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும், விலங்கினங்களின் தன்மைகள் பற்றியும், அணுக்கள் பற்றியும் தம்முடைய படைப்புகளில் பழந்தமிழர் வெளியிட்டுள்ளனர். கடல் நீரானது ஆவியாகி மேலெழுந்து பின் குளிர்ந்த காற்றால் மீண்டும் மழையாக வருகின்றது. இதனைக் கதைவடிவில் முல்லைப் பாட்டில் சொல்லியுள்ளனர்.…
-
- 0 replies
- 1.5k views
-
-
பழந்தமிழரின் வாழ்வில் அணுவில் தொடங்கி அண்டம்வரையிலும் அறிவியல் பரவிக் கிடக்கின்றது. இலக்கியம் என்பது வெறும் இரசனைக்குரிய ஒன்றாக மட்டும் இல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. அன்றைய தமிழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்களாக உருவாகி வருகின்றன. இன்று நம் வாழ்வின் அறிவியல் வளர்ச்சியின் ஆணிவேராக பழந்தமிழர் வாழ்க்கை அமைந்தது என்றால் மிகையில்லை. இதனைப் பல தமிழ் இலக்கியங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. இயற்கை அறிவியல் ஔவை திருக்குறளின் பெருமையை உரைக்கும்போது, அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தெறித்த குறள். என்கிறார். அணு என்பது கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய மூலக்கூறு என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. ஆயினும் பன்னூறு ஆண்டுகட்கு முன்பு…
-
- 6 replies
- 30.7k views
-
-
தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் நீர் மேலாண்மை... வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள்-16) என்கிறார் வள்ளுவர். அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார். "இடியுடைப் பெருமழை எய்தா ஏகப் பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்'' (வரி.26-28) இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்' என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்…
-
- 1 reply
- 2.6k views
-
-
தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள் - 1 புறநானூற்றுப் பாடல் ஒன்று. காலையில் பாலில் அரிசிப் பொரியைச் சேர்த்து உண்பதாகக் குறிப்பிடுகிறது. இன்று பிரிட்டனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் மக்கள் காலை உணவில் "கார்ன் ப்ளேக்ஸ்" (மக்காச் சோளம்), "ரைஸ் கிரிஸ்பிஸ்" (அரிசிப் பொறி) ஆகியவற்றைச் சாப்பிடுவதைக் காண்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் கண்டு பிடித்த காலைத் தானிய உணவு (breakfast cereal) உலகெங்கிலும் பரவியதெப்படி? இதுவும் ஆராய்ச்சிக்குரிய பொருள்! சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் ஒரு அதிசயச் செய்தி வருகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ இயற்றிய பாடலில், ஒரு மரத்தின் கீழ் பொய் சொல்பவன் நின்றால் அந்த ம…
-
- 1 reply
- 873 views
-
-
தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் வெங்கட் சாமிநாதன் 1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில, மாதிரிப்படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று Indian Horizons என்ற தலைப்பில் 500 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு ஜனவரி-ஜூன், 1999-ல் வெளியானது. இந்திய மொழிகள் அனைத்திலிருந்துமான (டோக்ரி, கஷ்மீரி, ஸ…
-
- 3 replies
- 6.9k views
-
-
சிறந்த எழுத்துகள் பழந்தமிழில் மட்டும் இருந்தால், இன்றைய தமிழுக்குக் காலி பெருங்காய டப்பா என்ற பெயரே இருக்கும். ‘தமிழ் கூறு நல்லுலகு’ என்னும் தொடர் தமிழ் உலகத்தைக் குறிக்கிறது. தமிழ் உலகம் என்பது பூமியில் தமிழ் வழங்கும் பகுதி. இந்தப் பகுதி உலகம் முழுவதிலும் பரவியிருக்கிறது என்னும் பொருளில் ‘உலகளாவிய தமிழ்’ என்னும் தொடர் வழங்குகிறது. இதிலிருந்து பிறந்ததுதான் உலகத் தமிழ் என்று புதிதாக வழக்குக்கு வந்துள்ள தொகைச்சொல். தமிழ் உலகத்தை உலகத் தமிழ் என்று மாற்றிப் போட்ட சொல். தமிழர்கள் பிழைப்பைத் தேடி உலகம் முழுவதும் சென்று குடியேறியிருக்கிறார்கள் என்னும் நிதர்சனத்தைப் பிரகடனப்படுத்தும் சொல். தமிழர் வரலாற்றில் புலப் பெயர்வு புதிது அல்ல. ஆனால், பொருளாதாரத்தில் வளர்ந்துள்ள அம…
-
- 1 reply
- 1.8k views
-
-
முந்தையபகுதியின் சுழியத்திலிருந்து அடுத்த எண்களுக்கு போகமுதல் தமிழ் எண்களைப்பற்றி பார்த்துவிடுவோம். இதன் முன்னைய பதிவிற்கு இங்கே கிளிக்... தமிழ் எண்களானவை தமிழ் மொழியின் எண் குறிகளும், அவற்றின் பயன்பாடுகளும்,அளவை முறைகளுமான பரந்ததான ஒரு எண் வழக்காகும். தமிழ் எண்கள், தமிழுக்கு தனித்துவமானவை. பெரும்பாலும் தமிழ் எழுத்துக்களை ஒத்துள்ள தமிழ் எண் குறியீடுகள் தற்போது பயன்படுத்தப்படாமல், தமிழ் எழுத்துக்களோடு இந்தோ அராபிய எண் குறியீடுகளே பயன்படுகின்றன. தமிழ் எண்களின் சிறப்பான அம்சம் என்னவென்றால் அந்த எண் முறைகள் பயன்படுத்கப்பட்ட காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்க முடியாத பின்ன அளவுகளுக்கும்,பேரெண்களுக்குமேல்லாம் பெயர்கள் இருந்திருக்கின்றன. உதாரணமாக பலகாலமாக பயன்பட்ட…
-
- 2 replies
- 9.6k views
-
-
செயற்கை நுண்ணறிவில் தமிழ் மொழியின் பயன் சிறப்பாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றார்.
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 442 views
-
-
தமிழ் ஒர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. அதாவது தமிழில் எழுதுவதற்கும் உச்சரிப்பது அல்லது பலக்குவதற்கும் நேரடியான, வரையறை செய்யப்பட்ட, இயல்பான தொடர்பு இருக்கின்றது. ஆகையால் தமிழை ஒலிப்பியல் மொழி என்றும் வகைப்படுத்துவர். தமிழ் ஒலிப்புமுறை கட்டுரை தமிழ் மொழியில் இருக்கும் தனித்துவ ஒலி இயல்புகளை, வரையறைகளை விளக்குவதற்கும், தமிழைத் தெளிவாக உச்சரிப்பதில் இருக்கும் பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதற்கும், தமிழைப் பேசுவதில் இருக்கும் பன்முகத் தன்மையைப் பட்டியலிடுவதற்கும், பிறமொழி ஆள் இடப் பெயர்களைப் பலக்குவதில் இருக்கும் சிக்கல்களை விளக்குவதற்கும் ஒர் அறிமுகக் கட்டுரையாக இருக்கும். தமிழ்ச் சொற்களில் இன்ன எழுத்துக்கள் முதலில் வராதவை, இன்ன எழுத்துக்கள் இறுதியில் வராதவை, இன்ன இன்ன எழ…
-
- 0 replies
- 3.3k views
-
-
நன்பர்களே இங்கு நாம் நிறையவே தமிழில் தான் எழுதுகிறோம். என்றாலும் கூடுதலான ஆங்கில (புதிய) சொற்களின் தமிழ்மொழிபெயர்ப்பு கடினமாக உள்ளது. ஆகவே நாம் எம்மால் முடிந்த அளவிற்க்கு ஆங்கில சொற்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை களத்தில் வைக்கலாமே.மற்றவர்களுக்கும் உதவியாகவிருக்கும். உதாரணத்திற்கு சில.. Automatic.....தானியங்கி Optional.......தேவைஏற்படின் Player...........சுழற்றி நன்றி. அன்புடன். …
-
- 13 replies
- 6.9k views
-
-
பல நாடுகள் என்பதா சரியான புணர்ச்சி. களத்தில் யாராவது உதவமுடியுமா? அல்லிகா :?:
-
- 25 replies
- 6.8k views
-
-
தமிழ் திதிகள் 1.ஒருமை :- பிரதமை 2.இருமை : துவிதியை 3.மும்மை : திருதியை 4.நான்மை : சதுர்த்தி 5.ஐம்மை : பஞ்சமி 6.அறுமை : சஷ்டி 7.எழுமை : சப்தமி 8.எண்மை : அஷ்டமி 9.தொண்மை : நவமி 10.பதின்மை : தசமி 11.பதிற்றொருமை : ஏகாதசி 12.பதிற்றிருமை : துவாதசி 13.பதின்மும்மை : திரயோதசி 14.பதினான்மை : சதுர்த்தசி 15.மறைமதி : அமாவாசை 16.நிறைமதி : பௌர்ணமி குறிப்பு: இவையாவும் தமிழுக்கேற்றவாறு வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாக நம் தமிழிலிருந்துதான் வடமொழிக்கு மொழிபெயர்த்து பயன்படுத்தியிருக்கிறார்கள். மாற்றிவிட்டு ஏதாவது ‘கப்சா கதை’ அடிப்பார்கள்.https://dhinasari.com/astrology/astrology-articles/3159-15-திதிகளின்-பெயர்கள்.html
-
- 0 replies
- 4.5k views
-
-
அருமையான தமிழ்இலக்கிய நூல்களையும் கவிதைகளையும் வாசித்து இன்புற்று உங்கள் தமிழ் ஆர்வம் மிக்க நண்பர்களுக்கு தெரிவிக்கவும். உங்கள் கருத்துகளை இணைக்கவும். http://noolaham.net/wiki/index.php/??????? மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை மேவும் என்றந்த பேதை உரைத்தான் ஆ அந்த வசை எனக்கெய்திடலாமோ? என்கடன் தமிழ்ப்பணி செய்து கிடப்பதே உங்கள் உடன் பிறப்பு அக்கினி புயல் சீமான்
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ் நூல்களுக்கு உயிர் கொடுக்கும் முதியவர் ..! கோவையில் தமிழ் மொழிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழ் நூல்களை ஒருங்கிணைக்கும் ஓய்வுப்பெற்ற அரசு அலுவலர் தமிழப்பன். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். சுப்ரமணியன் என்ற பெயரை "ஈழம் தமிழப்பன் " என்று மாற்றிக்கொண்ட இவர், தற்போது கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். பள்ளி படிப்பை முடித்தவுடன் சென்னையில் வருவாய் அலுவலராக பணியில் சேர்ந்தவர், தமிழ் மொழி மேல் கொண்ட ஈர்ப்பால் புத்தகங்களையும், நூல்களையும் படிக்க துவக்கியுள்ளார். தொடர்ந்து தமிழ்மொழியில், இளநிலை முதல் முனைவர் பட்டம் வரை பெற்றவர், புத்தகம் எழுத துவங்கியுதுடன், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமி…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
1. மதுரை சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்களை பற்றி சொல்லும் திருவிளையாடற் புராணத்தை வௌ;வேறு கால கட்டத்தில் இருவர் பாடியுள்ளனர். முதலில் பாடியவர் பெரும் பற்றப் புலியூர் நம்பி என்பவர் ஆவார். அடுத்து பரஞ்சோதியார் என்பவரும் பாடியுள்ளார். 2. 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமன்னர். இவர் சிதம்பரத்தில் பொன் வண்ணத்தந்தாதி எனும் நூலை பாடி, அரங்கேற்றியுள்ளார். மேலும் திருவாரூர் மும்முணிக்கோவை, ஆதியுலா (திருக்கயிலாய ஞான உலா) ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். 3. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 847 முதல் 872 வரை) சிறப்புகளை கூறும் நூல் நந்திக்கலம்பகம். எருகை முத்திரை சின்னமாக உடைய இந்த மன்னனிடம் …
-
- 0 replies
- 622 views
-
-
தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் விளையாடி விளையாடித் தமிழ் படிப்போம். தமிழ் மொழிக்கு இலக்கணம் இலக்கியம் என்று இரு கண்கள் உள்ளன. இலக்கியம் மக்களின் இன்ப துன்பங்கள் அடங்கிய வாழ்க்கையினை சொற்களின் மூலம் மக்கள் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்வதாகும். இலக்கணம் என்பது இலக்கியங்களைச் சீராக உருவாக்கவும் தமிழ்மொழியின் அடையாளம் பாதுகாக்கப்படவும் அதன் மரபு கெடாமல் எழுதி வ ரவும் கற்று வரவும் உதவி செய்து நிற்கின்ற விதிகளாகும். அதாவது இலக்கணம் என்பது தமிழ்மொழியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கருவி என்று கூடக் கூறலாம். பெருக்கெடுத்தோடும் ஆற்று வெள்ளம் திசை திரும்பாமல் பல திசைகளில் சிதறி ஓடாமல் ஒரே திசையில் ஓடுவதற்குத் துணையாக இருக்கும் ஆற்றின் கரையைப் போலவே தமிழ் ம…
-
- 224 replies
- 20.6k views
-
-
தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 3 வாக்கியங்கள் எழுதும் முறைகளுள் மிகவும் கவனித்தற்பாலன இடம்விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும் ஆகும். பொருள் உணர்வுக்கு ஏற்ப, வரிக்குவரி இடம்விட்டு எழுதுதல் வேண்டும். பத்திக்குப் பத்தி இடைவெளிவிட்டுத் தொடங்குதல் வேண்டும். சொற்களுக்கு இடையே இடம்விட்டு எழுதுதலையும் சேர்த்து எழுதுதலையும் பற்றி இப்பகுதியில் அறிந்து கொள்க. பாரதியார் என்று சேர்த்து எழுத வேண்டியதைப் பாரதி யார் என இடம்விட்டு எழுதின் ஏற்படும் பொருள் மாற்றத்தை நீங்கள் அறிவீர்கள்! “அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றாள்” என்னும் தொடருக்கும் “அவள், அக்காள்வீட்டிற்குச் சென்றாள்” என்னும் தொடருக்கும் (இடம் விட்டு எழுதுவதால் ஏற்பட்டுள்ள) பொருள் வேறுபாட்டை அறிந்து கொள்க. “மூல…
-
- 128 replies
- 75.4k views
-
-
தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 2 விளையாடி விளையாடித் தமிழ் படிப்போம் சொல்லதிகாரம் ஒரு எழுத்துத் தனித்தோ அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்தோ ஒரு முளுப்பொருளைத் தருமாயின் அதற்குச் சொல் அல்லது பதம் எனப்பெயர். அதாவது சொல் என்பதற்கு அவசியம் அதன் பொருள் என்னவென்பதே. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று தொல்காப்பியரும் எல்லாச் சொற்களும் பொருள் உள்ள கருத்துள்ள சொற்களே என்று இலக்கண விதிகளும் உண்டு. இதற்கு விதிவிலக்கான சொற்களை அதாவது பொருள் அற்ற சொற்களை அசைச் சொல் எனவும் அழைத்தனர்.விதிவிலக்கான சொற்கள் என்பதற்கு சில உதாரணம் மியா எல்லா என்ற சொற்களும் நாங்கள் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் ஹலோ என்ற சொல்லும் இன்னும் வேறுபலவும் இருக்கலாம் மியா என்ற சொ…
-
- 106 replies
- 36k views
-