தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
695 topics in this forum
-
காதலின் எடையை அறிந்துகொள்ள... காதல் வாழ்வின் பொருளை உணரச் செய்கிறது! காதல் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத ஓடம் !! காதல் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை. பெரும்பாலும் காதலின் உயரத்தையும்,அகலத்தையும், ஆழத்தையும் திருமணத்துக்கு முந்தைய காலப்பகுதியிலேயே அதிகமாகப் பாடியுள்ளனர். காதலித்தல் என்பது திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கை என்றே பலரும் வாழ்ந்து வருகிறோம். இதனையே கவிஞர் கண்ணதாசனும்... காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும் வரை கல்யாணம் என்பது எதுவரை? கழுத்தினில் தாலி விழும் வரை பெண்ணுக்கு இளமை எது வரை? பிள்ளைகள் பிறந்து வரும் வரை கழுத்தினில் தாலி விழுந்த பின்னும் தன் மனைவியைக் காதலிப்பவர்கள் உலகில் எத்தனைபேர்? பெண…
-
- 6 replies
- 1.4k views
-
-
"புயல்காட்டுங் கூந்தல் சிறுபுறங்காட்டப் புனமயிலின் இயல்காட்டி இடைஒதுங்க வினங்காட்டு முழத்தியர்கள் முயல்காட்டு மதிதோற்கு முகங்காட்ட கண்மூரிக் கயல்காட்டுந் தடங்கள்பல கதிர் காட்டுந் தடம் பணைகள்" - தேவாரம் புயல்காட்டுங் கூந்தல் சிறுபுறங்காட்டப் - பிடரியில் படர்ந்து அலைந்து திரியும் கூந்தல் புயல் உருவாகும் முன் அலைந்து திரியும் மேகங்களைக் காட்ட புனமயிலின் இயல்காட்டி இடைஒதுங்க - அவள் நடக்கும்போது அசையும் இடையானது நிலத்தில் இருக்கும் மயில்களின் சாயலை ஒத்து அசைய வினங்காட்டு உழத்தியர்கள் முயல்காட்டு மதிதோற்கு முகங்காட்ட - கூட்டமாக அங்கு இருக்கும் உழத்தியர்களின் முகம் நிலவு போன்றதாயினும் நிலவில் உள்ள கறை இவள் முகத்தில் இல்லாமையால் அம்மதியானது…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழில் இருந்து கடன் வாங்கப்பட்ட ஆங்கில வார்த்தைகள்!
-
- 1 reply
- 1.4k views
-
-
மணிமேகலையின் காதலும் துறவும் மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். இப்பெயரைக் கொண்டு இவரது ஊர் சீத்தலை என்றும் இவர் மதுரையில் கூல வாணிகம் செய்து வந்தவர் என்றும் அறிகிறோம். பௌத்த மதப் பரப்பலுக்காக ஒரு தனிக் காவியமே படைத்த இச்சாத்தனார் ஒரு பௌத்த நெறியாளர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழின் முதல் காப்பியம் என்ற பெருமைக்குரிய சிலப்பதிகாரமும் சாத்தனாரின் மணிமேகலையும் கதைத் தொடர்ச்சியால் இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப் படுகின்றன. சிலப்பதிகாரத்தின் முப்பெரும் கதை மாந்தர்களாம் கண்ணகி, கோவலன், மாதவி மூவரில் கோவலன் மாதவி இருவருக்கும் பிறந்த ஒரே மகளே மணிமேகலை.…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆகொள்ளை விரும்பேல்த்திச்சூடி நீதிகதைஆத்திச்சூடி நீதிகதைகள்க (பதவுரை) கொள்ளை-(பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுதற்கு, விரும்பேல்-ஆசைப்படாதே. (பொழிப்புரை) பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே கள்ளாமை - பிறர் பொருள் விரும்பாமை குறள்:281 எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. குறள் விளக்கம்: பிறரால் இகழப்படாமல் இருக்க ஒருவன் விரும்புவானாயின் பிறருடைய சிறிய பொருளாயினும், அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாதபடி, தன் நெஞ்சினைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். ஏலாதி மேற்கோள் குறுகான் சிறியாரைக் கொள்ளான்புலால்பொய் மறுகான் பிறர்பொருள் வெளவான் - இறுகானாய் ஈடற்ற வர்க்கீவான் ஆயின் நெறிந…
-
- 0 replies
- 1.4k views
-
-
தெறுவேயம் - Cannon- தெறு+வேய்+அம் = சுடும் குழாய் தெறு - சுடுகை வேய் - உட்டுளை கொண்டது (குழாய்) அம் - சொல்லாக்க ஈறு தீயிட்டி-firelance - தீயினைக் கொண்ட இட்டி(ஈட்டி) குறுதெறாடி - Musketoon எந்திரவில்- Crossbow- சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள சொல் மடக்கு - மடக்குதல்
-
- 0 replies
- 1.4k views
- 1 follower
-
-
நீலிக்கண்ணீரின் தொல்கதை: சில இலக்கியப் பதிவுகள். சுயாந்தன் September 20, 2018 நீலிக்கண்ணீர் என்ற தொல்லெச்சம் எப்படி நமது அன்றாட வாழ்வில் உரையாடுகிறது என்பதற்கு நீண்டகால ஆதாரப் பதிவுகள் உள்ளன. எப்படி நற்றிணையில் இருந்த முலை அறுத்தெறியும் காதை கண்ணகி காதைக்கு இளங்கோவுக்கு பாடுபொருளானதோ, அதுபோல தமிழ் வாழ்வியல் வரலாற்றில் நீலி என்ற பெண் பாத்திரம் போலியின் ரூபமானது.அதாவது காஞ்சிபுரத்து வணிகன் தனது முதல் மனைவியை வஞ்சகமாகக் கொலை செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்கிறான். அவன் வணிக நோக்கமாக பழையனூர் வழியாகப் பயணமாகிறான். அப்போது அவனது முதல் மனைவி பேயாக மாறி அவனைப் பழிவாங்கத் துடித்து மனைவி போல உருமாற்றம் கொள்கிறாள். ஒரு தீய்ந்த கட்டையைப் பிள்ளையாக்கி இடுப்பில் வைத்து…
-
- 0 replies
- 1.4k views
-
-
மிகத்தொன்மையான பாரம்பரியத்தைக்கொண்ட தமிழ் முன்னோர்கள் மருத்துவ பயன்பாடு மற்றும் நீண்ட ஆழமான சிந்தனையின் வெளிப்பாடாக பல ஆபரணங்களை தங்கத்தில் உருவாக்கி அவற்றை அணிவதற்கு எம்மை வழி நடத்தினார்கள் என்றால் அது மிகையாகாது. இதனால் தமிழர் சமுதாயம் தமது வளமான வாழ்விற்கு மேலும் வளம் சேர்க்கும் முகமாக தங்க ஆபரணங்களை அணிந்து மகிழ்ந்தது. மூக்குத்தி ஆபரணத்தைப் பெரும்பாலும் இந்துப் பெண்கள் மற்றும் இஸ்லாமியப் பெண்கள் ஆகியோர் அதிகமாக அணிந்தார்கள் என்பதை பழைய இலக்கியங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளமுடியும். மேலும் பழைய இலக்கியங்களில் இருந்து பெண்கள் மூக்கின் நடுவில் அணிந்த ஆபரணமாக 'முல்லாக்கு' எனப்படும் ஆபரணம் தொடர்பான செய்தியும் எமக்குக் கிடைக்கிறது. பொதுவாக அக்காலத்துப் பெ…
-
- 2 replies
- 1.4k views
-
-
இன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள்? மின்னம்பலம் -இலக்குவனார் திருவள்ளுவன் ஒரு சொல்லுக்கான பொருள் என்பது அதனை மற்றவர் புரிந்து கொள்வதன் அடிப்படையில்தான் அமைகிறது. இதனால், சொல்லின் பொருள் இடத்திற்கேற்ப மாறும் நிலையும் ஏற்படுகிறது. அதே நேரம், சொல் அல்லது சொல்லின் தொடரான சொற்றொடர் வெளிப்படையாக உணர்த்தும் பொருள் ஒன்றாக இருக்கும். பயன்படுத்தும் இடத்தில் உணர்த்தும் பொருள் வேறாக இருக்கும். இவ்வாறான தொடரை மரபுத் தொடர் என்கிறோம். சில நேரங்களில் சொலவடை, மொழி மரபு, வட்டார வழக்கு, இலக்கணத் தொடர் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். இவ்வாறு மரபுத் தொடர் பயன்படுத்தப்படும் பொழுது அச்சொல்லின் வெளிப்படையான பொருளுக்கு முதன்மை அளிக்காமல் சொல்ல வரும் உண்மைப் பொருளையே நா…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் இலக்கியத்தில் இயற்றப்பட்ட பேரிலக்கியங்களில் நந்திக் கலம்பகமும் ஒன்று. தொட்ட இடமெல்லாம் கவிச்சுவை சொட்டும் தேன்தமிழ் நூல். கலம்பகம் என்பது, பல பூக்களைக் கலந்து மாலை தொடுப்பது போல் பலவகையான செய்யுள் உறுப்புகளைக் கொண்டு அக, புறச் செய்திகளைக் கொண்டு திகழும் அரிய நூல். கலம்பக நூல்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தொடங்கி இதுவரை பல தோன்றியுள்ளன. நந்திக் கலம்பகம் ஏனைய கலம்பக இலக்கண வரம்பிற்கு உள்படாது, பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதாகும். அவ்வாறு மன்னனை வைத்துப் பாடப்பட்ட முதல் கலம்பகம் மட்டுமல்ல, கலம்பக நூல் வரிசையில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும் இந்த "நந்திக் கலம்பகம்'தான். இதற்குப் பிறகு மன்னர் மீது பாடப்பட்ட கலம்பக நூல் எதுவு…
-
- 0 replies
- 1.4k views
-
-
எதிரிகளை மிரள வைத்த ராஜேந்திர சோழனின் ஒட்ட தேச போர் எப்படி இருந்தது தெரியுமா?
-
- 0 replies
- 1.4k views
-
-
இலக்கங்கள் ஆச்சரியம் உலகம் முழுவதும் பயன்பாட்டிலுள்ள ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் எண்களும் அளவுகளும் குறிப்பிட்ட அளவுகளுக்கு மேல் பெயரில்லாத நிலையில்தான் இருக்கிறது. ஆனால் தமிழ் மொழியில் அதிக அளவாக எண்களும் அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஏறு முக இலக்கங்கள் ஒன்று -one 10 = பத்து -ten 100 = நூறு -hundred... மேலும் பார்க்க 1000 = ஆயிரம் -thousand 10000 = பத்தாயிரம் -ten thousand 100000 = நூறாயிரம் -hundred thousand 1000000 = பத்துநூறாயிரம் - one million 10000000 = கோடி -ten million 100000000 = அற்புதம் -hundred million 1000000000 = நிகர்புதம்…
-
- 5 replies
- 1.3k views
-
-
பறையா என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை க.சுபகுணம் பிபிசி தமிழ் 6 ஜனவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 7 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES "என்னை பள்ளியிலுள்ள சக மாணவர்கள் ஒரு 'பறையன்' போல் நடத்துகிறார்கள்." இந்த வரியை பார்த்தவுடன் முகம் சுழிக்க வேண்டுமென உங்களுக்குத் தோன்றலாம். ஏனெனில் அந்த வார்த்தையின் வரலாற்றுப் பின்னணியை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அந்த வார்த்தை ஏற்படுத்தக்கூடிய காயம் அவர்களுக்குப் புரியும். ஆனால், ஆங்கில மொழியில் 'பறையா' மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் தான். …
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
வீரமும் ஈரமும் - சுப. சோமசுந்தரம் தமிழரின் சங்க கால வாழ்வியலில் காதலும் வீரமும் தலையாயவை என்பதை மன்பதை அறியும். காதல் ஒரு மென்மையான உணர்வு என்பது வையத்தார்க்கு யாரும் சொல்லாமலே தெரிவது. சிலரே அதனை முழுமையாய் உணர்வர் என்பது தனிக் கதை. அக்கதை "மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்" (குறள் 1289) எனும் வள்ளுவத்தால் உணரற்பாலது. தொடக்கம் முதலே மென்மையானதாய்க் காதலை வகைப்படுத்தலாம். கடமை, கொள்கை உறுதிப்பாடு போன்றவற்றால் வீரமானது முதலில் சற்றே கடுமையாய்த் தோன்றினாலும், தமிழர் தம் வாழ்வியல் நெறியில் அதுவும் மென்மையாய்…
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
[size=4]நற்றினையில் என் உள்ளம் கவர்ந்த ஓர் பாடல். பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவன் வருவதாகக் கூறிய பருவம் கடந்து மேலும் ஒரு மாதமாயிற்று. அப்பொழுதும் தலைவன் வரவில்லை. தலைவியின் துன்பம் பல்கிப் பெருகிற்று. தோழி தலைவியின் துன்பத்தை தணிக்க பலவாறு நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை கூறுகிறாள். அதனிலும் துன்பம் தணியாத தலைவி பின்வருமாறு கூறுகிறாள். என் தோள்களும் மெலிந்து அழிகின்றன. அவன் வருவதாக கூறிய நாட்களும் கடந்து விட்டது. நீண்ட பாலை வழியை நோக்கி நோக்கி என் கண்களும் ஒளியற்று காணும் தன்மையை இழந்தன. எனது அறிவும் மயங்கி என்னை கைவிட்டு பித்துபோல் வேறுபட்டது. நோயும் திரும்பி வருகின்றது. உயிரைப் பெயர்த்தற்குரிய மாலைப் பொழுதும் வந்து விட்டது நான் என்ன ஆவேனோ? இவ்வுலகத்தில்…
-
- 3 replies
- 1.3k views
-
-
கார் மயக்கம் -சுப.சோமசுந்தரம் களவியலிலும் கற்பியலிலும் பிரிவாற்றாமை எனும் நோய் தரும் வலி அக இலக்கியங்கள் முழுவதும் விரவிக் கிடப்பது. குறிப்பாக இலக்கியங்களில் அந்நோய் பெண்ணையே தாக்குவதாய் உணர்கிறோம். நிதர்சனமும் அவ்வாறே இருக்கலாம். அது ஆணாதிக்க சிந்தனையின் விளைவு என எளிதாய்ப் புறந்தள்ளுவதற்கில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் வேறுபாட்டைப் போல் உளவியல் வேறுபாடும் உண்டே! பொருளாதாரம், பாதுகாப்பு முதலியவை குறித்து ஆணுக்குப் பொறுப்புணர்வு அதிகமாகவும் பெண்ணுக்கு மென்மையான உள்ளுணர்வுகள் அதிகமாகவும் அமைந்தது இயற்கையே. எனவே நாட்டிற்கும் வீட்டிற்கும் தனது பொறுப்புணர்வு காரணமாக அவன் அவளை அ…
-
- 2 replies
- 1.3k views
- 2 followers
-
-
இந்த உலகம் இன்னும் இயங்கக் காரணம்? நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் இயற்கைக்கூறுகள் இந்த உலகம் இயங்க அடிப்படையானவையாகும் என்று பாடம் படித்தோம். இருந்தாலும், மக்காத குப்பைகளாலும் வேதியியல் உரங்களாலும் மண்ணை மலடாக்கினோம், காடுகளை அழித்தோம், விவசாய நிலங்களைப் பட்டாப்போட்டு விற்றோம், தொழிற்சாலைக் கழிவுகளால் நீர்நிலைகளை விசமாக்கினோம், நச்சுப் புகையால் காற்றை மாசாக்கினோம் இப்படிப் பல வழிகளில் இயற்கையை அழித்தோம் அதனால், ஆறுகளிலும், குளங்களிலும் தண்ணீர் இல்லை! மழையில்லை, வெயில் வாட்டி வதைக்கிறது! எப்போது மழைவரும்? எப்போது புயல்வரும்? எப்போது கடல்சீற்றம் வரும்? என்பது யாருக்கும் தெரியாது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இருந்தாலும் உலகம் இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக…
-
- 9 replies
- 1.3k views
-
-
டொமினிக் ஜீவா... 1927, ஜூன் 27ம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த இவருக்கு சாதி, குல பேதங்களின் பிரச்சினைகளால் தொடர்ந்து கல்வி கற்க முடியாமல் போய் விட்டது. இதனால் மனம் உடைத்த இவரது கல்வி இடை நடுவில் நின்று போய் விட்டது. கல்வி இடை நடுவுவில் நின்று போய் விடினும் அவரது மனதுக்குள் எழுந்த கோபத்தை பொடியேனும் வெளிப்படுத்துவதற்கும், அசாதாரணத்துக்கு எதிராய் போராடுவதற்கும் இவர் படைப்பிஇலக்கியத்தை ஆயுதமாகக்கொண்டார். ஈழத் தமிழரின் தேசிய இலக்கியம் டொமினிக் ஜீவா அவர்களின் மணி விழா நூல். http://noolaham.net/project/17/1638/1638.pdf
-
- 2 replies
- 1.3k views
-
-
குறளோடு கவிபாடு - "குறள்: 413" & "குறள்: 628" "குறள்: 413" "அறிவு பரந்து கிடக்கும் உலகில் அயராது அதைத் தேடி சுவைக்க அக்கம் பக்கம் யார் நின்றாலும் அச்சம் துறந்து கேள்வி கேட்டு அமுது ஞானத்தை செவி உண்ணட்டும்!" "குறைந்த உணவை நிறைவாக அருந்தி குற்றமில்லா உயர்ந்த அறிவு கொண்ட குறைகள் அற்ற ஆன்றோர் போல் குமிழி வாழ்வில் நிறைவு அடைய குன்றாய் நிலைக்க கேட்டு அறிவாய்!!" "குறள்: 628" "இன்பம் கண்டும் துள்ளிக் குதிக்காதவன் துன்பம் வருகினும் துவண்டு விடான்! வண்ணவண்ணக் கனவில் மகிழ்ந்து உறங்குபவன் சின்னசின்ன தோல்வியிலும் தன்னை இழப்பானே கூனிக்குறுகி மூலையில் ஒதுங்கி விடுவானே!" "எண்ணம் நல்லதாய் வாழ்வை நோக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
அஸ்வத்தாமன், என்றொரு யானை! ” அஸ்வத்தாமா…. அஸ்வத்த்….தாமா.. ” துரியனின் குரல் மெலிந்து மிகுந்த வேதனையுடன் வெளிப் பட்டது. பதினெட்டாம் நாள் போர் முடிந்தது. வீமனிடம் துரியன் தன் தொடை பிளந்து விழுந்து கிடக்கிறான். துரியோதனனின் வெற்றிப் பாதைகள் அனைத்தையும் மாயக் கண்ணனின் சூழ்ச்சிகள் தடுத்து நிறுத்திவிட்டன. யாவற்றையும் இழந்து இதோ துரியன் வீழ்ந்து கிடக்கிறான். அவன் கண்கள் அஸ்வத்தாமனை நோக்கி நிலைத்து நின்றது. அஸ்வத்தாமன் சமந்தப் பஞ்சகத்தின் அருகில் அமர்ந்திருந்தான். தன் மடியில் தலை தாழ்ந்து தவித்த துரியோதனனின் கண்கள் அவனைக் கொன்று தின்றன. மஹாரதன் நான், என் தந்தைக்கு அடுத்து சேனையின் அதிபதியாக ஆகவேண்டியவன். துரியோதனன் என்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லையே? …
-
- 2 replies
- 1.3k views
-
-
கும்பழாவளையான் பாமாலை (கவிக்குமரன்) மயில்வாகனனார் தலைக்கொள்ள மற்றும் தேவர் அருகிüருக்க கருக்கொள் தேவரளவையிலே கலந்துநிற்கும் விநாயகனை உருவாய் நிற்க வைத்தோரே உங்கள் பெயர்தானோயாதே வருவாயில்லா அடியேனும் வழங்கு தமிழால் சொல்லுகின்ற திருவாய்க் கண்ட பாமாலை திகைப்பே யூட்டும் யாவர்க்கும் மலையாய் கொள்வீர் சொல்வதனை மாட்சி மிக்க பெரியோரே சிலையாய் இருக்கும் பெருமானும் சிலிர்த்துக் கனைத்துச் சிரியாரோ குடமுழுக்காடிய கோமகனை குனிந்து வளைந்து நீட்டிய கை வடந்தொட்டிழுத்து வாழாதோ வழங்கும் வரத்தை ஏற்காதோ பவனஞ்சுடர் கங்கை பாவெளியை யாட்டிடும் பரமசிஞான மகனே புவனங்க ளீரேழுமடக்கியே காத்திடும் புவனேஸ்வரி யீன்ற புவனே கவளமா முக…
-
- 1 reply
- 1.3k views
-
-
அதிகூடிய பல்லின மாணவரைக் கொண்ட கல்விச் சபைகளில் ஒன்றுமான ரொறன்ரோ கல்விச் சபையானது ஜனவரித் திங்களை தமிழ் மரபுத் திங்களாக பிரகடனம் செய்துள்ளது. இப்பிரகடனமானது ரொறன்ரோ கல்விச் சபையில் உள்ள பாடசாலைகளில் தமிழர் மரபு, பண்பாடு, மொழி, வரலாற்றைத் தமிழ் மாணவரோடு மட்டுமல்லாது வேற்றின மாணவருடனும் கொண்டாடும் வாய்ப்பை நல்கி உள்ளது. ரொறன்ரோ கல்விச் சபையானது ரொறன்ரோவின் பல்வேறு பாகங்களிலும் உள்ள 595 பாடசாலைகளில் கல்வி கற்கும் 246,000 மாணவர்களுக்கு தனது சேவைகளை வழங்குகிறது. இதில் 12,272 மாணவர்கள், அதாவது மொத்த மாணவர் தொகையில் ஏறத்தாழ 5.5% தமிழ் மாணவர்கள். தமிழ் மொழியானது ரொறன்ரோ கல்விச் சபையில் இரண்டாவது பெரும் மொழி குழுவாகவும், இரண்டாவது அதிகம் கற்பிக்கப்படும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.huffingtonpost.in/2015/02/17/tamil-hashtag--_n_6699550.html
-
- 9 replies
- 1.3k views
-
-
உலக மொழிகளில் தமிழ் மொழியின் தாக்கம்
-
- 0 replies
- 1.3k views
-
-
*தேன்* கொண்டு வந்தவரைப் பார்த்து, நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...* ஐயா நீங்கள் கூறியதை நினைத் *தேன்* ! கொல்லிமலைக்கு நடந் *தேன்*! பல இடங்களில் அலைந் *தேன்*! ஓரிடத்தில் பார்த் *தேன்*! உயரத்தில் பாறைத் *தேன்*! எப்படி எடுப்பதென்று மலைத் *தேன்*! கொம் பொன்று ஒடித் *தேன்*! ஒரு கொடியைப் பிடித் *தேன்* ! ஏறிச்சென்று கலைத் *தேன்*! பாத்திரத்தில் பிழிந் *தேன்*! வீட்டுக்கு வந் *தேன்*! கொண்டு வந்ததை வடித் *தேன்*! கண்டு நான் மகிழ்ந் *தேன்*! ஆசையால் சிறிது குடித் *தேன்* ! மீண்டும் சுவைத் *தேன்* ! உள்ளம் களித் *தேன்*! உடல் களைத் *தேன்* ! உடனே படுத் *தே…
-
- 0 replies
- 1.3k views
-