தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
தமிழகம்-தமிழ்நாடு சர்ச்சை பற்றி குமரன் கிருஷ்ணன் தாய்மொழியும் தாய்மண்ணும் ஒவ்வொரு மனிதனுள்ளும் எத்தனை திட்பமான உணர்வுகளால் நெய்யப்பட்டுள்ளது என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை. அதன்படி தமிழ் என்ற சொல்லே நமக்குள் ஒரு தித்திப்பை உருவாக்குவதை நாம் உணர்ந்திருப்போம். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல் உலகின் ஏதோ ஒரு மூலையில் நம் செவியில் தமிழ் விழுந்தால் நம்முள் ஏற்படும் மாற்றங்கள் தாய்மொழியின் வீரியத்திற்கு ஒரு உதாரணம். மொழியையும் மண்ணையும் ஒரே சொல்லால் சுட்டுவது என்பது “கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா…” என்பது போன்ற இரட்டிப்பு மகிழ்வு தருவது. தமிழ் என்னும் சொல் அத்தகையதே. நம் முன்னோர்கள் தந்த இலக்கியங்களில் தமிழ் மொழியையும் அது பேசப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
காலஞ்சென்றவை: சமஸ்கிருதமும் லத்தீனும் தொலைக்காட்சியில் காட்டப்படும் வேற்றுமொழிப் படங்களை ஆங்கிலத் துணைத் தலைப்புகளின் உதவியுடன் பார்ப்பது எனக்கு விருப்பமான பொழுதுபோக்குகளில் ஒன்று. அப்படி ஒரு முறை புகழ்பெற்ற யூகோஸ்லாவிய இயக்குனர் எமிர் கூஸ்தூரீட்சா இயக்கியதென பின்னர் தெரிந்துக்கொண்ட "Black Cat, White Cat" http://www.youtube.com/watch?v=3WbX9Q5SjZg http://www.youtube.com/watch?v=2ndbCnNaIss&feature=related என்ற நகைச்சுவைப் படத்தை மிகவும் ஒன்றிப்போய் பார்த்துக் கொண்டிருந்தேன். கிழக்கு ஐரோப்பாவில் பரவலாக உள்ள ஜிப்ஸி எனப்படும் நாடோடி இனக்குழுக்களின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்ட இந்தப் படத்தைப் பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உருவான ஒரு ஐயம் நேர…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
நேற்றுப் பூத்த பூஞ்சோலை பூக்கள் பட்டுச் சேலை கட்டி காதல் வாசம் பரப்பினால் மயங்காத வண்டுகளும் உண்டோ !! மொட்டுக்கள் வாசம் பரப்புவதில்லை... மலர்கள் மட்டுமே மனம் பரப்புகின்றன. வாசம் வண்டுகளுக்கு வைக்கப்படும் ஓர் அழைப்பு!! தன்னுள் உள்ள மகரந்தம் பருகப்படும் என்று தெரிந்தே வட்டமிடும் வண்டுகளுக்கு அழைப்பு விடுக்கும் மலர்களைப் போல் இங்கே இவளும் காதலனை போற்றி துதிக்கிறாள். காதலன் மேல் கொண்ட அன்பினால் இவளுக்கு காதலனின் குதிரைக் குளம்படிகள் கூட சந்தனம் போல் தெரிகிறது... அந்த முத்தொள்ளாயிரப் பாடல் இதுதான் ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு ஏடுகோ டாக எழுதுகோ-நீடு புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி கனவட்டங் கால்குடைந்த நீறு ஆடி மகிழ்வேன் !! சூடிக் களிப்பேன் !! நீண்ட க…
-
- 5 replies
- 1.1k views
-
-
1980இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டில் எம்.ஜி.ஆர். அவர்களால் அறிவிக்கப்பட்டு 1981ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதி அண்ணா பிறந்த நாளில் தஞ்சையில் ஆரம்பிக்கப்பட்டது தமிழ் பல்கலைக்கழகம். இதற்கு தமிழக அரசால் 1000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதன்நோக்கம் தமிழ்மொழியின் வளர்ச்சி, பண்பாடுகளை பாதுகாத்து மக்களிடம் கொண்டு செல்வது, பிற மொழிகளில் சிறந்த நூல்களை தமிழில் கொண்டு வருவது, முக்கியமானது, அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்வது என்பதற்காக உலகம் முழுவதும் தமிழ் மக்களின் சார்பாக மொழிக்கென்று உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம்தான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம். கலைப்புலம், மொழிப்புலம், வளர் தமிழ் புலம், சுவடிப்புலம், அறிவியல் தமிழ்புலம…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஓரு படைப்பாளன், தன் சிந்தனையில் தோன்றும் காட்சிகளைப் படிப்பவர்களின் மனக்கண் முன்பே கொண்டுவரும் உத்திதான் வருணனை முறை. கற்பனையும் வருணனையும் இல்லாத எந்தவொரு படைப்பும் சிறந்த இலக்கியமாகாது. அந்த வகையில், சங்க இலக்கியங்களில் இவ்வருணனைகள் பொக்கிஷமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அவை வைரமாய் நம் கண்முன்னே மின்னிக் கொண்டிருக்கின்றன. இவ்வருணனையை, ஆள் வருணனை, இயற்கை வருணனை என்றும் இடம், காலம், நிகழ்ச்சி, கலை முதலிய பெயர்களிலும் வகைப்படுத்துவர். பாலைக்கலியில் உள்ள ஒரு பாடல், தலைவன் கூற்றின் மூலம் பாலை நிலத்தின் வெம்மை அழகாக வருணனை செய்யப்பட்டுள்ளது. ""அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழா அய் காடென்றார் அக்காட்டுள் துடியடிக் கயந்தலைக் கலக்கிய சின்னீரைப் பிடியூட்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
இருக்க வேண்டிய - கூடாத ஆமைகள் 'ஆமை புகுந்த வீடு உருப்படாது' என்பார்கள் முன்னோர். சீனர்களோ ஆமையை அதிர்ஷடத்திற்குரியது என்றுவளர்க்கிறார்கள். எந்த ஆமை கூடாதது? ஆமைகளில் இருவகை. அதில் எந்த ஆமை இருக்க வேண்டியது? 'கல்லாமை, இல்லாமை' கூடாது! அழுக்காறாமை, பொய்யாமை பிறனில் விழையாமை போன்ற ஆமைகள்இருக்க வேண்டியது! வள்ளுவர் மிக எரிச்சல் படும்போது 'பாவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார். 'வறுமை என்ற ஒரு பாவி'. 'அழுக்காறு என ஒரு பாவி' என்றார். அந்த பாவி நம் செல்வத்தை அழிக்கும்; நரகத்தில் நம்மைச் சேர்க்கும்! இந்த (ஆமை) பொறாமை எப்படியோ நம் மனதில் வந்து புகுந்து விடுகிறது. நம் வீட்டு மின்சாரம் தடைப்பட்டுஎதிர்வீட்டில் விளக்கு எரிந்தால் பொறாமை. நம் பிள்ளை தேர்வில் தோற்று எதிர் வீட்டுப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையின் இனவரலாறு இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கரும்,நாகரும்தான். அவர்கள் இந்து சமயத்தையே பின்பற்றிவந்துள்ளனர். புத்தபகவானின் இயற்பெயர் சித்தாத்தன் .அவரது தந்தையின் பெயர் சுத்தோதணன் .இவர் ஒரு இந்து சமயத்தவரும்,அரசரும் ஆவார். கி.மு 560 ஆவது ஆண்டில் நேபாளத்தில் பிறந்த சித்தாத்தன் தனது 29 ஆவது வயதில்துறவியாகி புத்த சமயத்தை உருவாக்கினார்.கி.முன் (247-207)தேவ நம்பிய தீசன் அனுராத புரத்தை தலை நகராய்க்கொண்டு ஆட்சிசெய்தான்.அப்பொழுதே பௌத்தம் முதன் முதலாய் இலங்கையிட்கு வந்தது . கி.பின் ஆறாம் நூற்றாண்டில் மகாவம்சம் என்ற நூல் தாதுசேனன் அரசனின் சகோதரனான மகாநாம தேரரால் பாளி மொழியில்தொகுக்கப்பட்டது.பௌத்தத்தில் இரு பிரிவுகளான மகாயானம்,தேரவாத…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொட்டாவி விட்ட காக்கை! அஃறிணை உயிரினங்களை அதிகமாக உற்றுநோக்குபவர்கள் கவிஞர்கள் தான் என்பது என் கருத்து. இதோ ஒரு கவிஞனின் ஒப்பீட்டைப் பாருங்களேன்.. அழகியதொரு கடற்கரைச் சோலை.. ஆங்கே வலிமையான காற்று வீசுகிறது.. அதனால்.. கண்டல் மரத்திலிருந்து பசுமையான காய்கள் நேராகக் கீழிருக்கும் நீர்நிலையில் வளர்ந்திருக்கும் ஆம்பல் மலர்களின் மீது வீழ்கின்றன... அதனால் ஆம்பலின் அரும்பு சாய்ந்து சிறிய வெண்ணிறக் காக்கை கொட்டாவி விட்டது போல வெண்ணிறமாய் மலர்ந்து நிற்கும். என்கிறார்.... இப்பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது. பாடல் இதுதான்.. கானற் கண்டல் கழன்று உகு பைங்காய் நீர் நிற இருங்கழி உட்பட வீழந்தென உறுகால் தூக்க தூங்கி ஆம்பல் சிறு வெண் காக்…
-
- 2 replies
- 1.1k views
-
-
14 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் காதல் கவிதைகளையும் திரைப்பாடல்களையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், தமிழில் காதலைப் பேசும் பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றன. குறுந்தொகையில் காதலைப் பாடும் அழகிய பத்து பாடல்களை பொருளுடன் இங்கே படிக்கலாம். 1. யாயு ஞாயும் யாரா கியரோ எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயு மெவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்பு…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
வல்லிசிம்ஹன் ஒரு பிரபல நாளிதழில், ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை வாசகர்களை கண்டுபிடிக்க வைத்து, அதில் பொருத்தமான தமிழ்ச் சொல்லை நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியன் தேர்வு செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. இது வாரம்தோறும் ‘சொல் வேட்டை’ என்ற பெயரில் வெளிவந்தது. ஒரு வாரம் ‘போபியா’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் கேட்கப்பட்டது. அதற்கு ஒன்றல்ல இரண்டல்ல 47 தமிழ் வார்த்தைகளை ஒருவர் அனுப்பி இருந்தார். அவர் பெயர் தமிழ்ச்செல்வி. சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம்- பொன்னமராவதி அருகே உள்ள பொன்.புதுப் பட்டி கிராமம். சமீபத்தில் புதுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விழாவுக…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
அந்த நாட்களில் பாடசாலையில் ஆங்கில பாடத்தில் ஓர் பாடம் கற்றுக்கொடுத்தார்கள் ஞாபகம் வரும் என நினைக்கிறன்... ஒவ்வொரு நாட்டின் குடிமகனும் எவ்வாறு I'm Ann I'm from England I'm Saman I'm from Japan இப்படியெல்லாம் ஆங்கிலம் கற்று .... நாளை தமிழன் கற்பான் I'm Tamingkalam I'm from ... from .... from.....? http://soundcloud.com/esai1985/bsdp0274dne4
-
- 2 replies
- 1.1k views
-
-
-
காதலினால் தும்மல் செய்வீர் உலகத்தீரே ! பொதுவாக தும்மல் நுரையீரலில் நேர்ந்த சிறிய / பெரிய அசௌகரியத்துக்கான அடையாளமே. எனவே நான் தொடர்ச்சியாய் தும்மும் போது என் ஆச்சி ('பாட்டி'க்கான என் வட்டார வழக்கு; வட்டார வழக்கு அவரவர்க்குரிய பெருமையான அடையாளம்தானே!), அம்மா, அத்தை போன்ற மூத்தோர் நூறு, இருநூறு......என வாழ்த்துவர். அதற்குப் பொருள் 'குறையொன்றுமில்லை. நீ நூறு வருடங்கள் வாழ்வாய்! இருநூறு வருடங்கள் வாழ்வாய்!....' என்பதாம். எனது ஒவ்வாமை காரணமாய் நான் இவர்களிடம் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்கள் ஆயுள் பெற்றுள்ளேன் என்பது ஒரு புறம் இருக்கட்டும். தும்மல் தொடர்பாக வேறொரு நம்பிக்கையும் உண்டு. அது 'யாரோ உன்னை நினைக்கிறார்' என்பது. அது இலக்கிய மரபாகக் கூட தோன்றியிருக்கலாம். எவ்வாற…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெ...ழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல் சீ -----> இகழ்ச்சி, திரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியதாகும். பண்டைத் தமிழ் நூல்களான * அகத்தியம், * செயிற்றியம், * சயந்தம், * குணநூல் போன்ற நூல்களில் தமிழ்க் கூத்து வகைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இசையும், கூத்தும், பிரிக்க இயலாத வகையில் பின்னிப் பிணைந்தே மக்களை மகிழ்வித்து வருவதாகக் கூறலாம். இசை, ஆட்டம், தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்ததன் தொகுப்பே "கூத்து" எனலாம். பொதுவாக சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு கூத்தினை, வேந்தியல் (மன்னர்களுக்காக ஆடுவது), பொதுவியல் (பொது மக்களுக்காக ஆடுவது) என இருவகைப்படுத்தலாம். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை "அபிநயம்" பற்றி விளக்குகிறது. பெண்கள் ஐந்து வயதிலிருந்து பன்னிரெண்டு…
-
- 2 replies
- 1.1k views
-
-
நாம் சிறுவயதில் திருக்குறள் படிக்கும் போது அதில் ஓரிடத்தில் பொருட்பால் பற்றி படித்திருப்போம். அந்த பொருட்பாலில் உள்ள படைமாட்சி அதிகாரத்தில் உள்ள 767 ஆவது குறள் இவ்வாறாக வரும். "தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து." இதற்கு பரிமேலழகர் இவ்வாறாக ஓர் உரை எழுதியிருக்கின்றார்:- தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து - மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக் கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை - அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன் மேற்செல்வதே படையாவது. (படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன: உரம் முதல் …
-
- 2 replies
- 1.1k views
- 2 followers
-
-
தவறவிடாதீங்க.. பிறகு வருத்தப்படுவீங்க.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! சென்னை: தமிழ் நூல்களை மொழியாக்கம் செய்ய தமிழ்நாடு அரசால் மொழிபெயர்ப்பு மானியமாக 3 கோடி ரூபாய் Translation grant வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எழுத்தாளர்களுக்கு - பதிப்பாளர்களுக்கு - மொழிபெயர்ப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு என்றும் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; மொழிபெயர்ப்பு மானியம் தமிழ் மொழியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய …
-
- 0 replies
- 1.1k views
-
-
தற்கால தரைப்படையில் உள்ள ஒவ்வொரு பிரிவுகளுக்குமான தமிழ் சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...படித்து மகிழுங்கள்! இச்சொற்கள் எல்லாம் சங்க இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். பிரிவு :- Unit துணைப்பிரிவு - Sub-Unit சூட்டணி/ சூடு & தடூக அணி:- fireteam/ fire and maneuver team = 2–4 சதளம் :- squad /crew = 8–12 பகுதி/ சுற்றுக்காவல் :- section / patrol = 8–24 நாரி/ படையினர் :- platoon/ troop = 26–55 குவவு - staffel/ echelon = 50- 90 குழாம்/ சேணேவித் தொகுதி :- Company /Artillery battery = 80–250 சமரணி :- battalion /cohort = 300–1000 படையணி :- regiment/ group= 1,000– 3000 படைத்தொகுதி/அதிகம் :-…
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்று எனக்குத் திருக்குறளின் 'மின்னியல் வடிவம்' ஒன்று மின்னஞ்சலில் வந்தது! அதைக் கள உறவுகளுடன் பகிர விரும்புகின்றேன்! பின்வரும் இணைப்பைச் சொடுக்கி, இதனை ஒரு 'PDF' வடிவத்தில், உங்கள் கணனியில் சேமித்து வையுங்கள். உங்கள் வருங்காலச் சந்ததிக்காவது உதவும்! https://docs.google.com/a/punkayooran.com/file/d/0ByCu4KeqKCulRGFWeldTUlZaOEE/edit முழுப்பக்க வடிவத்தைத் தெரிவு செய்து பார்க்கவும்! களப் பெருசுகளுக்கு, வாசிக்க இலகுவாக இருக்கும்!
-
- 7 replies
- 1.1k views
-
-
முல்லை மகளே!! வாள் மங்கையே!! மழை மேகப்புறாக்கள் வானவெளியில் குப்பலாய் ஓன்று கூடின. மெல்ல மெல்ல வானம் வெண்மழை பொழிய ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஆவணித் திங்களின் கார்காலை அது. வைகறை எழுந்து நீராடிய ஆயர்பாடி மங்கையர், தம் இல்லத்துக் கொட்டிலில் மூங்கில்கழியோடு பிணைக்கப்பட்டிருந்த ஆநிரைகளுக்கு நறுமண தூபப்புகை காட்டினர். குளிருக்கு ஓடுங்கிய இளங்கன்றுகளுக்கு இதமாய் இருக்கட்டுமென்று பெரிய மண்சட்டிகளில் காய்ந்த வரட்டிகளோடு, உலர்ந்த சருகுகளைப் போட்டு எரியூட்டினர். ஆயர்குலச் சிறுவர்கள் தம்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து புல்லாங்குழலை எடுத்துக் காற்றை உள்ளிழுத்துப் பண் இசைக்கத் தொடங்கினர். காலையை வந்தனம் கூறி வரவேற்பதாய் இருந்தது அவர்கள் இசைத்த பூபாளம். சிறுமியர்கள் கொல்லையில் வளர்ந்து நில…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆனைக்கொரு கலாம் வந்தால் பூனைக்குமொரு காலம் உண்டு ... இதில் ஆனை பூனை என ஒரே சந்தத்தில் வருகிறது . எனக்கும் ஒரு காலம் வராமலா போகும் என கருத்துக் கொண்டது எண்ணியிருந்தேன். நேற்றைய ஒரு காணொளியில் .... ஆனை .....ஆ + நெய் மற்றும் பூ + நெய் இங்கு ஆ நெய் என்பது ...பசு நெய் . நெய் சேர்த்த உணவுகள் ருசியானவை . இலகுவில் இளையோருக்கு சமிபாடடையும். பூனை என்பது தேன், தேன் சுவையானது . முதுமையில் மருந்து மாத்திரை தேனில் உரைத்து கொடுப்பார். நெய் ஆகாது . இலகுவில் செமிபாடடையது. எனவே பசு நெய்யையும் தேனையும் தான் பெரியவர்கள் கருதி இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள் என கொள்ளலாம். இளமை என்ற ஒரு காலம் வந்தால் முதுமைக்கும் ஒரு காலம் வர…
-
- 1 reply
- 1.1k views
- 2 followers
-
-
தத்துவமும் , தமிழரும் நான் யார்? உலகம் தோன்றியது எப்படி போன்ற கேள்விகள் நாகரீகமடைந்த மனிதனின் சிந்தனையில் தோன்றி போது, அவனுடைய பகுத்தறிவால் சிந்தித்த போது உருவானது தான் தத்துவம். அந்த தத்துவத்தை வணிக நோக்கிலும், அதிகார நோக்கிலும் உபயோகபடுத்த, அதன் மூலத்தை மறைத்து , தத்துவத்தின் சாராம்சத்தை அழித்து , அதனை சுற்றி மக்களிடம் வணிகப்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பு தான் மதங்கள். எனவேதான் உண்மையான ஆன்மீகவாதிகளான சித்தர்கள் மதங்களை எதிர்த்தனர். "மெய்பொருள் காண்பது அறிவு" என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்ட தமிழர்கள் பழங்காலத்தில் பல்வேறு தத்துவங்களை திறந்த மனதோடு ஆராய்ந்து, வாதிட்டு வந்ததை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் காண்கிறோம். ஒரு உதாரணம் மணிமேகலையில் வரும் …
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
(14-11-2012 அறிவன்கிழமை மாலை விழுபுரம் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற தேசிய நூலக விழாப் பாட்டரங்கில் கலந்து கொண்டு பாடியது) பெருஞ்சித்திரனார் பேசினால்…! அன்பார் பெரியீர்! அறிஞர்காள்! பாட்டரங்கில் பண்பார் பலபுலவர் பாடவந்த பாவலரே! இன்னன்புத் தாய்க்குலமே! எந்தமிழ நல்லிளைஞீர்! முன்வந்தே போட்டி முனைநிற்கும் மாணவர்காள்! வல்ல செயலாற்றும் வாசகர் வட்டத்தீர்! எல்லார்க்கும் என்றன் இனியவணக் கம்உரித்தே! இன்றைய நூலக இன்விழாப் பாட்டரங்கில் தன்னேரில் தூயதமிழ் வல்லரிமா வான பெருஞ்சித்தி ரப்பெரியார் பேசினால்... என்னும் அருந்தலைப் பொன்றை அளித்துப்பா டென்றனரே! யார்பெருஞ் சித்திரனார்? இங்கறியார்க் காகசில பேர்விளக்கும…
-
- 0 replies
- 1.1k views
-
-
மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது! மண்டுதல் - என்றால் கூடுவது, கூடுதல் என்று பொருள். அரசர், அவர் சார்ந்தோர், பொது மக்கள் ஆகியோர் கூடுவதற்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டது "மண்டபம்'. அது திருவோலக்க மண்டபம், மணி மண்டபம், பட்டி மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் எனப் பலவகைப்படும். இவற்றுள் தூண்களின் கீழ், பட்டிகைக்கல் (பட்டியக்கல்) வைத்துக் கட்டப்பட்ட மண்டபம் "பட்டி மண்டபம்' ஆகும். சிலப்பதிகாரம் -இந்திரவிழவூரெடுத்த காதையில், "மகதநன் னாட்டு வாளவாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் (அடி:101-102) என்று, போரில் வெற்றிபெற்ற கரிகாலனுக்கு மகதநாட்டு மன்னனின் "பட்டி மண்டபத்தை' அளித்த வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மன்றுதல் - என்றாலும் கூ…
-
- 0 replies
- 1.1k views
-