Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும். அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு. இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (He…

  2. எதைப் பேசித் தமிழன் கெட்டான்..?! “தமிழன் பேசிப் பேசியே கெட்டான்” “பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்” “தமிழ்.. தமிழ்.. என்று பேசியே தமிழன் கெட்டான்” "தமிழன்.. தமிழன்.. என்று பேசியே தமிழன் கெட்டான்” இப்படியெல்லாம் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஏன் நீங்களும்தான் கேட்டிருப்பீர்கள். இதில் உண்மை இருக்கிறதா? இந்தக் குற்றச்சாட்டு சரிதானா? இப்படிக் கேட்பவர்களை நோக்கி சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். எதைப் பேசி தமிழன் கெட்டான்? தமிழ்மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ்மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா? தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ்ச் சமயம் பற்றி பேசிக் கெட்டானா?…

    • 5 replies
    • 1.1k views
  3. புதியதோர் உலகம் அப்பாத்துரை அபூபக்கர் அண்மையில் நோர்வேயில் இருந்து வந்திருந்த நண்பரொருவரை சந்தித்தேன். வடக்கில் நடந்த அரசியல் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்றில் அவரை சந்தித்தேன். யாரோ அறிமுகமான ஒருவருடன் வந்திருக்கிறார் என நினைக்கிறேன். அவரது நடையில் ஒருவிதமான மிதப்பை உணர்ந்தேன். ஒரு பழுத்த அரசியல் பிரமுகரைப்போல அல்லது மிகப்புகழ் வாய்ந்த போராளியையொத்த ஒரு தோரணை. கால்ப்பந்தென்றால், நான்றாக கால்ப்பந்து ஆடுபவர்களிற்கும், கிரிக்கெட் என்றால் நன்றாக கிரிக்கெட் ஆடுபவர்களிற்கும்தானே மரயாதை. அதுபோல, அரசியலரங்கிலும் முதல் மரியாதை பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கும், மிகத் தீவிரமான அர்ப்பணிப்பினால் பகழடைந்த போராளிகளிற்கும் ஒரு மரியாதை இருக்கத்தானே செய்யும். அவர்களும் மற்ற…

  4. -முனைவர் இராம. இராமமூர்த்தி முகப்புரை: உலகில் தோன்றிய பல்வேறு இனக்குழுக்களுள் முதன்முதலாக நாகரிகம் பெற்ற இனக் குழுக்கள் மிகச் சிலவே. அவ்வினக் குழுவினரை வரலாற்றாய்வாளர்கள் அவர்தம் மொழிப்பெயரான் சுட்டுவர். ஓரினத்தைக் குறிக்க மற்றெல்லாவற்றினும் மேம்பாடுடைய மொழியே முதன்மையானது. அத்தகைய மூத்த மொழிகளாக மட்டுமல்லாமல் செம்மொழிகளாகவும் விளங்கிய, சிறப்புடைய மொழிகளாகக் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், பாரசீகம், சமற்கிருதம், தமிழ், சீனம் என்பவனவற்றை மொழியியற் பேரறிஞர் ச. அகத்தியலிங்கம் சுட்டுவார். இதனை எண்ணுங்கால் தமிழர்கள் உலகின் மூத்த குடிகள் மட்டுமல்லர்; நாகரிகத்தால் மேம்பட்டவருமாவர். இதனைக், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி. (புறப். வெண்பா மாலை. கரந்: …

  5. என் இசையால் தலைவணங்கி தேடுகிறேன் ............

  6. 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 29 ஜனவரி - 1 பிப்ரவரி 2015 மலாயாப் பல்கலைக்கழகம் கோலாலம்பூர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1964-ஆம் ஆண்டு புது டெல்லி மாநகரில் நடைப்பெற்ற 26-வது அனைத்துலக தெற்கிழக்காசியப் பிராந்திய அறிஞர் குழாம் சந்திப்பின்போது, தமிழ் மொழியின்பாலும் அதன் வளர்ச்சியின்பாலும் அதிபற்றுமிக்க தலைச்சார் கல்விமான்களின் சிந்தனையில் உதித்த விளைபயனாகும். இவர்களது முயற்சியின் விளைவாக முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகரிலும், இரண்டாவது மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னை மாநகரிலும் நடைப்பெற்றன. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளிலும் இம்மாநாடு நடந்தேறியுள்ளது: பாரிஸ் (பிரான்சு)–1970, யாழ்ப்பாணம்(இலங்கை)–1974; மதுரை (தமிழ் நாடு, இந்த…

    • 0 replies
    • 776 views
  7. உலகம் முழுவதும் இன்று பேசப்படுகின்ற 6'000 மொழிகளில் அரைவாசிக்கு மேல் அழிந்து போகும் தருவாயில் உள்ளது என்று சென்ற ஆண்டு தாய்மொழி தினத்தில் யுனேஸ்கோ அமைப்பு அறிவித்திருந்தது. இதில் 2'500 மொழிகளிற்கு மேல் வெறும் 10'000ற்கும் குறைந்த மக்களால் மட்டுமே பேசப்படுகின்றது என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல். போர், இடப்பெயர்வு, வெளியேற்றப்படல் என்று பல தவிர்க்முடியாத காரணங்கள் இருந்தாலும் ஏனைய மொழிகளை, அழிப்பதில் முக்கியபங்கு வகிப்பது மொழிக்கலப்பு. மொழிகளின் அழிவில் முன்னிற்பது எந்த மொழியென்று ஆராய்ந்து பார்த்தால் அதில் ஆங்கிலமே முன்னிற்கின்றது. உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தில் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளை உள்ளூர் மொழிகளில் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்…

  8. சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும்! தமிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’! கலைவாணர் என்.எசு.கே முதல் சந்தானம் வரை தமிழ்த் திரைப்படங்களில் காலம் காலமாக அனைவராலும் நையாண்டிப் பொருளாக்கப்படுவதும் சென்னைத் தமிழ்தான். தனிப்பட்ட முறையில், தமிழர்கள் அனைவருக்குமே அடுத்தவர்களின் வட்டார வழக்கை நக்கலடிக்கும் வழக்கம் இருந்தாலும், பொதுவெளியில் அனைவராலும் கிண்டலுக்குள்ளாக்கப்படுவது சென்னைத் தமிழ்தான். பொதுவாக, வட்டார வழக்கு என்பதே மொழியின் அழிவுக்கான காரணிதான். தாய் வாழையைச் சுற்றி வளரும் கன்றுகளைப் போன்றவை அவை. ஏனெனில், வட்டார வழக்கு (Colloquial) புழக்கத்…

  9. முள்ளிவாய்க்காலுக்குப்பின்னால்......... வீட்டில் மனைவியால் மக்களால் உறவுகளால் வைக்கப்படும் கேள்வி தலைவர் இருக்கிறாரா? இல்லையா? உண்மையைச்சொல்லுங்கள் இன்றும் கோடி பெறும் கேள்வியிது யாருக்கும் விடை தெரியாத போது சாதாரணமான என்னால் எப்படி??? ஆனாலும் அவர்களுடன் இருந்தமையால் என்னை நோக்கி இக்கேள்வி வருவது அவர்களுக்கு வேறு வழிகளில் அதை தெரிந்து கொள்ளமுடியவில்லை எனலாம்... சாதாரண மக்களிலிருந்து புலிகளின் பெரிய தலைகள் கூட இந்தக்கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறார்கள் மக்களிடத்தில் இருக்கிறார் இல்லை.......... என்று சொல்வோர் உட்பட. இதிலிருந்து அவர்கள் எவருக்கும் உண்மை தெரியவில்லை என்று புரிந்து கொள்ளலாம். இருக்கிறார் என்போர் அவர் ஒழிந்திருக…

  10. பன்னிரெண்டாம் வகுப்புப் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த ஆண்டும் பெருமளவில் மாணவிகளே தேர்ச்சியுற்ற நிலையில், அடுத்த கட்டக் கல்வி குறித்து மாணவர்களும், பெற்றோர்களும் திட்டமிடத் தொடங்கிவிட்டனர். நாளேடுகளை அடைத்துக் கொண்டு வெளியாகும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி விளம்பரங்கள், அதற்கான தூண்டிலை வீசி நிற்கின்றன. இதே நேரத்தில் இன்னொரு செய்தியும் ஊடகங்களில் வலம் வந்தது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பொறியியல் இடங்கள் நிரம்பாமல் இருப்பதைத் தவிர்ப்பதற்காக பல தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள், புதிய மாணவர்களை ஈர்த்து வருவதற்காக அங்கு ஏற்கெனவே பயிலும் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பல சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது குறித்த செய்தி அது! ஏற்கெனவே…

  11. ஒருவரை ஒரு அறையில் கட்டிவைத்து தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை விடாமல் தொடர்ந்து இரண்டு நாள் பார்க்கவைத்தால், அவர் OSD என்று அழைக்கப்படும் Obsessive-compulsive disorder என்கிற மனநோய்க்கு ஆளாகி விடுவார் போல தெரிகிறது. உள்ளங்கையிலிருந்து உள்ளாடைகள் வரை கிருமிகள் மனிதர்களை வேட்டையாடிக்கொண்டிருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை விளம்பரங்கள் விடாமல் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. இது தொடர்பாக கார்ப்பரேட் சித்தனின் அனுபவங்களை அறிந்து கொள்ள அவரை அணுகினேன். காலையில் எழுந்து பல்துலக்க போனால் விளம்பரத்திலிருந்து வெள்ளைக்கோட்டு அணிந்து குறுந்தாடி வைத்த செட் அப் மருத்துவர் “உங்கள் பல்லிடுக்கில் பதுங்கி இருக்கும் கிருமிகளை உங்கள் பற்பசை கொல்லுமா? எங்கள் பற்பசை உபயோகித்தால் பனிரெண்டு …

  12. புலம்பெயர்த் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்கும்போது பல சவால்களைச் சந்திப்பதாகவே உணர்கின்றேன். அவர்களுக்கு இலகுவான வகையில் சொற்களை அடையாளம் செய்யும் வகையில் எந்தவித வகையும் செய்வதாகத் தோன்றவில்லை. ஊரில் உள்ளது போல இலக்கணப் புத்தகங்களைக் கடினமாக்கியே வைத்துள்ளனர். ஏன் சாதாரணதரப் பரீட்சை எடுக்கும்வரையும் எனக்கும் தமிழ் இலக்கணம் என்பது மிகவும் வெறுப்புக்குரிய பாடமாகவே இருந்தது.... இத்தலைப்பின் நோக்கம். உங்களின் குழந்தைகள் எதைக் கற்கக் கடினப்படுகின்றார்கள் என்பதும், அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றி ஆராய்வதுமாகும்... --------------------------- எல்லாக் குழந்தைகளும் சொல்வது ல,ள,ழ அத்தோடு ர,த,ற உச்சரிப்பது,அடையாளம் செய்வது என்பது மிகப் பெரிய பிரச்சனை. ழ- நா…

  13. "நம் மொழி இருக்கும் வரை தான் நம் கலாசாரம் நம்மிடம் இருக்கும். கலாசாரம் நம்மிடம் இருக்கும் வரைதான் நம்மால்தான் நம் நிலத்தை பாதுகாக்கமுடியும்" என்று கூறினார் ஒரு மயோரி (நியுசிலாந்தின் பூர்வகுடி இனம்). ஒரு மொழிதான் ஒரு கலாசாரத்தின், ஒரு இனத்தின் அடையாளம். மொழியின் வளர்ச்சியே இனத்தின் வளர்ச்சியாக வரலாறு கூறுகிறது. ஆதலால்தான் ஆதியிலிருந்தே ஆக்கரமிப்பாளர்கள் எந்தவொரு நாட்டை கைப்பற்றியதும் முதலில் அதன் மொழியை குறிவைத்தார்கள். இவ்வுலக வரலாற்றில் இன்றுவரை பல மொழிகள் வழக்கொழிந்து போயுள்ளன. அதற்கு ஒரு காரணம் ஆக்கிரமிப்பாளரகளின் அசுரபலம் என்றாலும் இன்னொரு காரணம் சரியான எதிர்ப்பில்லாததுமாகும். அதைவிட கொடுமை நிறைய இனங்கள் தங்கள் மொழி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டதை கூட உணரா…

  14. வேருக்கு நீர் வார்த்தவர்கள்: தமிழ்மொழியின் தொன்மையும் மாண்பும்! By வித்துவான் பாலூர் து.கண்ணப்ப முதலியார் தமிழ்மொழி தொன்மையானது என்பது வான்மீக ராமாயணமும், வியாசர் மகாபாரதமும் கூறுமாற்றால் அறியலாம். பாரதத்தில் பாண்டிய நாட்டைப் பற்றிய குறிப்பு வருகிறது. வானரங்களுக்குச் சுக்ரீவன், ""நீங்கள் மலைய மலையின் சிகரத்தில் அகத்தியரைக் காண்பீர்கள். அவர் ஆணை பெற்றுப் பாண்டியர்க்கு உரித்தான கபாடபுரத்தைக் காண்பீர்கள்'' என்று கூறிய குறிப்பு வான்மீக ராமாயணத்தில் வருதல் காண்க. பாண்டியர்களைப் பற்றிய குறிப்பு அந்நூலில் காணப்படுதலின், அவர்களின் மொழியாகிய தமிழின் பழமையும் இதன் வழி அறியவருகிறது. பாண்டியநாடு தமிழ் வளர்த்த நாடு என்பது, ""சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும…

    • 0 replies
    • 1.3k views
  15. இந்நாட்டு மக்கள் தனக்கு பெறுவெற்றியை ஈட்டித்தருவர் என்று கருதும் மன்னன் அவர்களுக்கு சோறு அளித்தல் பெருஞ்சோறு அல்லது பெருவிருந்து என வழங்கப்படும். போருக்குச் செல்லும் முன் வீரர்களுக்கு பெருஞ்சோறு அளித்தலும் நறவம் என்னும் கள் வழங்குதலும் பண்டைக்கால தமிழர் மரபாகும். சங்க கால சேர மன்னர்களில் ஒருவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தம்பியாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற அரசன் பெருஞ்சோறு அளித்ததை பாலைக்கௌதமனார் என்ற புலவர் பதிற்றுப்பத்தில் பாடியுள்ளார். வருநர் வரையார் வார வேண்டி விருந்துகண் மாறா(து) உணீஇய பாசவர் ஊனத்(து) அழித்த வால்நிணக் கொழும்குறை குய்யிடு தோறும் ஆனா(து) ஆர்ப்பக் கடல்ஒலி கொண்டு செழுநகர் நடுவண் அடுமை எழுந்த அடுநெய் ஆவுதி தன்னைத் தேடி வருபவர்கள் வரையற…

  16. கதவில்லா வீட்டில் வசித்துவரும் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு நேர்காணல்: மணி ஸ்ரீகாந்தன் "தருக்கர்கள் சிலரால் தமிழ் தாழ்வுற்று இருப்பினும் எதிர்காலத்திலே இளம் இளம் காளையர்கள் உயிராக பேணுபவர் வருவர் உன் உயர்வை உயர்த்துவர்" என்று தூக்கு கயிற்றை முத்தமிட்டு கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கில் தொங்கிய வரலாற்றை சினிமாவில் பார்த்தும், புத்தகங்களில் படித்தும் பிரமித்தோம்... தமிழகம் சென்றால் பாஞ்சாலம் குறிச்சிக்கு சென்று அந்த வீரம் விளைந்த மண்ணை மிதித்து தொட்டு கும்பிட எல்லோருக்கும் ஆசை இருக்கும். தமிழர் வரலாறுகளில் வீரம் மிகைப்படுத்தப்பட்டும் மகிமைப்படுத்தப்பட்டும் எழுதப்பட்டிருப்பதால் அதற்கு அப்படி ஒரு சிறப்பு! சிவகங்கை சீமையிலே களமாடிய வேலுநாச்சியாரையும் வெள்ளையனின் ஆயு…

    • 0 replies
    • 1.6k views
  17. புத்தகத் திருவிழாவும் தமிழகப் பயணமும்! ( பகுதி - 1) ஜீவநதி சிற்றிதழின் சித்திரை மாத இதழில் வெளியான எனது கட்டுரை தமிழியல் வெளியீடான எனது ‘திரையும் அரங்கும் :கலைவெளியில் ஒரு பயணம்’ நூலின் தயாரிப்பு வேலைகள் முடியும் தறுவாயில் இருந்தன. ‘காலச்சுவடு’ பதிப்பகம் கணினியில் தட்டச்சு வேலைகளை முடித்து மின்னஞ்சலில் எனக்கு அனுப்ப,பிழைகளைத் திருத்தி காலச்சுவடிற்கும் தமிழியல் பொறுப்பாளரான - இலண்டனிலுள்ள பத்மநாப ஐயருக்கும், முன்னரே அனுப்பிவிட்டேன். நூலில் சேர்க்கவேண்டிய படங்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. பத்மநாப ஐயரும், அவுஸ்திரேலியாவிலுள்ள நண்பர் ரஞ்சகுமாரும் படங்களைச் சேகரித்தனர்; ரஞ்சகுமாரே 175 படங்களை இணைத்து, நூலின் வடிவமைப்பையும் செய்…

  18. மாவீரன் சங்கிலியன் சரித்திர தொடர் ( முன்னுரை ) ‘வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்’ என்பார்கள். என்னைப் பாதியாவது ஆக்கியுள்ளது எனலாம். நிறைய வாசிப்பேன், அதுவே என்னை எழுதவும் தூண்டியது. வலைப்பதிவில் எமது ஆத்ம திருப்திக்காக எதையும் எழுதலாம். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் அது சாத்தியப்படாது. அவற்றில் பிரசுரிக்கக் கூடிய தரத்தை குறித்த ஆக்கங்கள் ஓரளவாவது கொண்டிக்க வேண்டும். அந்தத் தரத்தை கொண்டதாக இது அமையும் என்று நான் கருதுகின்றேன். வாசிக்கும் போதும் அதிகமாக சரித்திர நாவல்களையே விரும்பிப் படிப்பேன். தென் இந்திய நாவலாசிரியர்களினது சரித்திர நாவல்களை வாசிக்கும் போது அது எத்தனை பக்கங்களைக் கொண்டிருந்தாலும் வாசிக்கும் போது சலிப்பே வராது. அந்தளவு அவர்கள் வரலாற்றை கற்பனையுடன் கலந்…

  19. ஒரு பெண்போராளி பற்றி பொய்யான செய்தியை பரப்பியிருக்கும் ஒரு ஊடக வன்முறையாளனான றாமின் குறித்த கட்டுரைக்கான எதிர்வினை இது. இவ் எதிர்வினையை யாழ் இணையம் நீக்காது என நம்புகிறேன். எங்களுக்காக வாழ்ந்த பல பெண்போராளிகளின் வாழ்வை அழித்து வரும் றாம் ஒரு மூத்த தளபதியை புலனாய்வாளர்களுடன் தொடர்புபடுத்தி மோசமாக எழுதி மிகவும் கேவலப்படுத்தியுள்ளார். சக பெண்ணை ஒரு போராளியை ஒருவன் கேவலப்படுத்தியதற்கு பலர் எதிர்ப்புக்குரலைக் காட்ட பயந்துள்ளார்கள். என்னால் அப்படி பார்த்து ஒளிந்திருக்க முடியவில்லை. அதனால் இவ் எதிர்வினையை எழுதியுள்ளேன். இன்னும் பல பெண் போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாமை மக்கள் முன் அடையாளம் காட்டவே இவ்வெதிர்வினையை எழுதியுள்ளேன் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். …

  20. தமிழ் மொழி அழியுமா தழைக்குமா - நம் முன்னே உள்ள சவால்கள். Tuesday, March 18, 2014 ஒரு மொழி அதன் தாயகத்தில் வாழ வழியற்றுப் போனால் வேறு எங்கும் நிலைத்திருக்க வாய்ப்பே இல்லை எனலாம். குறிப்பாக உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் அனைத்து மொழிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட நிலப்பிரதேசம் தாயகப் பகுதியாக இருக்கின்றது. அந்த மொழி தோன்றி, பரிணமித்து வளர்ச்சி பெற்ற இடமாக அது இருக்கின்றது. இது இயற்கையாக ஏற்பட்ட ஒன்றாகவும் இருக்கின்றது. அந்த குறிப்பிட்ட பகுதியில் இருந்து மக்கள் புலம்பெயரும் போது தமது தாய்மொழியையும் எடுத்துச் செல்கின்றனர். சில சந்தர்பங்களில் தாம் புலம்பெயரும் புதிய தேசத்தின் அரசியல், பொருளாதாரம் முதலிய காரணங்கள் ஏதுவாய் இருக்குமானால், அந்த மொழி புதிய த…

  21. [பேராசிரியர் முனைவர். மு. வாசுகி, துணைத் தலைவர், தத்துவத்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.] தமிழ்நாட்டில் தற்பொழுது பின்பற்றப்படும் இந்து, கிறித்துவம், இஸ்லாம், பவுத்தம், சமணம் ஆகிய அனைத்து சமயங்களும் தமிழ்நாட்டில் தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டவை அல்ல. அனைத்தும் பிறதேசங்களிலிருந்து வந்தவையே. அப்படியென்றால் இங்கு ஒரு வினா எழுகின்றது. “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி” என்று வரலாற்றில் பதியப்பெற்ற தமிழ் மக்களை ஒருங்கிணைக்க நல்வழிப்படுத்த இங்கு ஒரு சமயம் இயல்பாகத் தோன்றவில்லையா? தமிழ் இனத்திற்கென்று தமிழில் ஒரு சமயநூல் இல்லாமல் போய்விட்டதா? சமயம் என்பது ஆங்காங்கே அந்தந்த பிரதேசங்களில் மக்களை ஒருங்கிணைக்கவும் நல்வழிப்படுத்தவும் தோன்றிய ஒரு சம…

    • 2 replies
    • 2.7k views
  22. யாழ்ப்பாணத்தமிழ் பேசும் ஜேர்மனிய பெண்!!!

  23. மியான்மாரின் [பர்மா] 55 மில்லியன் மொத்த சனத்தொகையில் இரண்டு சதவீதத்தினர் இந்திய வம்சாவளி மக்களாவர். இவர்களில் பெரும்பான்மையினராக விளங்கும், கடந்த 200 ஆண்டுகளாக மியான்மாரில் வாழும் தமிழ் மக்கள் தமது அடையாளங்களை இழந்து வருகின்றனர். 1948ல் மியான்மார் சுதந்திரமடைந்ததன் பின்னர், இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட காணிச் சீர்திருத்தங்கள், பர்மிய மொழி கட்டாயமாக்கப்பட்டமை, பெரும்பான்மை பர்மிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டமை போன்றன சமூகக் கட்டமைப்பில் தமிழ் மக்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்படக் காரணமாகின. மியான்மாரில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீண்டும் தமது மொழி மற்றும் கலாசாரத்தை புத்துயிர் பெறவைப்பதற்காக புதிய பாடசாலைகளைத் திறந்துள்ளனர். தென்னிந்திய தமிழர்கள் 19ம் நூற்றாண்…

  24. தீபச்செல்வன் மீது எறியப்படும் துரோகக்கற்கள். எல்லோராலும் அறியப்படும் கவிஞர் ஊடகவியலாளர் தீபச்செல்வன் பல தடைகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தனது எழுத்துக்களால் உயர்ந்த இளைஞன். 2008 காலத்தில் வலைப்பூ வழியாகா உறவாகினார். இனக்கலவரம் மோசமடைந்த 83இல் பிறந்த தீபச்செல்வன் அப்போது யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் பல பணிகளில் இணைந்திருந்த துணிச்சல் மிக்கவன். 2009 இல் நேசக்கரத்தோடு இணைந்து 2009யுத்த முடிவிற்குப் பின்னர் பல பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வன்னியில் மீளக்குடியேறி மக்களுக்குமான உதவிகளை கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றிய நன்றிக்குரிய கவிஞன். தற்போது இந்தியாவில் தனது மேற்படிப்பைத் தொடரும் தீபச்செல்வன் மீது பொய்யான குற்றச்சாட்டுக…

    • 34 replies
    • 4.1k views
  25. 10 மார்ச் 2014 நடக்க இருக்கும் ஜெனிவா பேரணிய வலுப் படுத்துவோம் உறவுகளே https://www.dropbox.com/s/lpqmql2hf89a7m3/Geneva%20Advert%20Version%201.mp4 https://www.dropbox.com/s/729lrr3gci7f57n/Geneva%20Advert%20Version%202.mp4

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.