Jump to content

தலைவரும் தமிழரும் என் குடும்பமும்............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலுக்குப்பின்னால்.........

 

வீட்டில்

மனைவியால்

மக்களால்

உறவுகளால் வைக்கப்படும்   கேள்வி

தலைவர் இருக்கிறாரா? இல்லையா?

உண்மையைச்சொல்லுங்கள்

 

இன்றும் கோடி  பெறும் கேள்வியிது

யாருக்கும் விடை  தெரியாத போது

சாதாரணமான  என்னால் எப்படி???

ஆனாலும் அவர்களுடன் இருந்தமையால்

என்னை  நோக்கி  இக்கேள்வி  வருவது

அவர்களுக்கு வேறு வழிகளில்  அதை தெரிந்து கொள்ளமுடியவில்லை எனலாம்...

 

சாதாரண  மக்களிலிருந்து

புலிகளின் பெரிய  தலைகள் கூட

இந்தக்கேள்வியை  என்னிடம் கேட்டிருக்கிறார்கள்

மக்களிடத்தில்

இருக்கிறார்

இல்லை..........  என்று சொல்வோர் உட்பட.

இதிலிருந்து 

அவர்கள் எவருக்கும் உண்மை தெரியவில்லை  என்று புரிந்து கொள்ளலாம்.

 

இருக்கிறார் என்போர்

அவர் ஒழிந்திருக்கிறார் வருவார்  என்கிறார்கள்

ஏன் ஒழிந்திருக்கிறார்  என்றால்  சில விடயங்களில் மாற்றம் வரணும் அதற்காக  என்கிறார்கள்

அப்படியென்றால் ஒழிந்திருப்பவரை  

ஒழிந்திருக்கிறார் என  காட்டிக்கொடுப்பது வேறு யாருமல்ல  நாமே தான்.

சரி  இல்லை  என்று சொல்வோர்  அவருக்கு அஞ்சலி  செய்யுங்கள் என்றால் 2 காலையும் பின்னிற்கு வைக்கிறார்கள்.  காரணம் கேட்டால் மக்கள் நம்பவில்லை.  எதிர்ப்பு வரும் என்கிறார்கள்.

அப்படியாயின் பெருமளவு சாதாரணமக்களுக்கு அவர் இருக்கிறார்.  

 

வீட்டில் 

கேள்வி  கேட்கப்படும் வேளைகளில்  அமைதியையும்

நழுவல் போக்கையுமே  கடைப்பிடிப்பது வழமை....

ஆனால் இது சரியில்லை  என்பதும் தொடரமுடியாது என்பதும் மனதுக்கு உறுத்தும் உண்மைநிலை..

 

அண்மையில்

லூர்து மாதா கோவிலுக்கு போயிருந்தேன்.

அங்கே  யேசு   சிலுவை சுமந்து மலை மீது சென்ற பாதையை

நானும் குடும்பமும்  பாதணியின்றி  ஏறி வழிபடுவது வழமை.

அதன்படி  சென்று  கொண்டிருந்தபோது

யேசு பற்றிய  வரலாற்றை  வாசித்தபடி தொடர்ந்தோம்.

இறுதியாக  யேசு சிலுவையில் அறையப்பட்டு

உயிர் துறந்து அயைில் கொண்டு போய் வைக்கப்படும் இடம் முடிந்து

அவர் 3ம் நாள் உயிருடன் வெளியேறிய  பாதையை  அடைந்தோம்.

அங்கு பலரும் பூச்செடிகளையும் மாலைகளையும் மெழுகுதிரிகளையும்

தமது தேவைகளைத்தெரிவித்து கடிதங்களையும் வைத்திருந்தனர்.

 

அந்த இடத்தில் எனது மனைவி  மக்கள் அனைவரையும் அழைத்த  நான் இவ்வாறு சொன்னேன்.

 

யேசு  சிலுவை  சுமந்து வலி  கண்ட இடங்கள்

அவர் இறந்து போன  இடம்  எதிலும் இல்லாத ஒன்று

இவ்விடத்தில் உள்ளது

அது பலரும் பூச்செடிகளையும் மாலைகளையும் மெழுகுதிரிகளையும்

தமது தேவைகளைத்தெரிவித்து கடிதங்களையும் இங்கு தான் வைத்திருந்தனர்

காரணம் என்ன?

எமக்காக  தன்னை  அர்ப்பணித்த

எல்லா வல்லமையும் இருந்தும்

அதைப்பாவியாது

தர்மம் வெல்லும் என வலியுறுத்துவதற்காக கைகட்டி  நின்ற அவர்

உயிருடன் தப்பியிருக்கணும்

அவர் உயிருடன் வாழணும் என்று எல்லோரும் விரும்புகிறார்

ஆசைப்படுகிறார்கள்.

இது மக்களின் நம்பிக்கை

விருப்பம்

ஆசை.

ஆனால் அது உண்மையாக இருக்கணும் என்றில்லை

அதைப்பற்றி  மக்களுக்கு தேவையும்  இல்லை.

இது தான்  தலைவர் பற்றியும் தமிழரின் நிலை  

எனது நிலையும் என்று முடித்தேன்.

 

மகன் கேட்டான்

அப்படியாயின் தலைவர் ஏன் தோற்றார் என்று.

யேசுவே  இந்த உலகத்திடம் தோற்றுத்தானே போனார்

காட்டிக்கொடுக்கப்பட்டுத்தானே போனார்

இன்றைய  

பணம் மற்றும் வர்த்தக பொருளாதாரத்தை வைத்து  இயங்கும்

இன்றைய சுயநல உலகில்

தர்மத்தை  கடைப்பிடிப்பவன்

நீதிக்காக போராடுபவன்

அதிகார  பலமற்றவன்

எந்த கொடிய  அடக்குமுறையைப்பாவித்தும்

எததனை பேர் கூட்டுச்சேர்ந்து என்றாலும் வீழ்த்தப்படுவான் என்பதற்கு

தலைவரே   கடைசி  உதாரணம்  என்றேன்.

 

இனியாவது  என் வீட்டிலிருந்தாவது

தலைவரின் இருப்பு பற்றிய  கேள்விகள் எனை நோக்கி  வராமலிருக்குமா????

Link to comment
Share on other sites

"எமக்காக  தன்னை  அர்ப்பணித்த

எல்லா வல்லமையும் இருந்தும்

அதைப்பாவியாது

தர்மம் வெல்லும் என வலியுறுத்துவதற்காக கைகட்டி  நின்ற அவர்

உயிருடன் தப்பியிருக்கணும்

அவர் உயிருடன் வாழணும் என்று எல்லோரும் விரும்புகிறார்

ஆசைப்படுகிறார்கள்.

இது மக்களின் நம்பிக்கை

விருப்பம்

ஆசை."

 

இந்த 'நம்பிக்கை, விருப்பம், ஆசை' என்பவற்றை நாம் அதன் அடுத்த உயர்நிலைக்கு

எடுத்துச் செல்லவேண்டும்.அதற்கான வழிமுறை நமக்குத்தெரிந்திருந்தும் நாம் அதை

உரிய ஈடுபாட்டுடன் செய்வதாக இல்லை. அந்த வழிபாட்டை, வழிமுறையை நாம்

மேற்கொண்டால்,நாம் அதன் மயமானால், அதுவே ஆனால், நாம் விரைவாக

வென்றுவிடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு படத்தில், "கடவுள் இருந்தா நல்லாதான் இருக்கும்"னு ஒருத்தர் சொல்லியிருப்பார்..அந்த வாக்கியமே நினைவிற்கு வந்தது..!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

"எமக்காக  தன்னை  அர்ப்பணித்த

எல்லா வல்லமையும் இருந்தும்

அதைப்பாவியாது

தர்மம் வெல்லும் என வலியுறுத்துவதற்காக கைகட்டி  நின்ற அவர்

உயிருடன் தப்பியிருக்கணும்

அவர் உயிருடன் வாழணும் என்று எல்லோரும் விரும்புகிறார்

ஆசைப்படுகிறார்கள்.

இது மக்களின் நம்பிக்கை

விருப்பம்

ஆசை."

 

இந்த 'நம்பிக்கை, விருப்பம், ஆசை' என்பவற்றை நாம் அதன் அடுத்த உயர்நிலைக்கு

எடுத்துச் செல்லவேண்டும்.அதற்கான வழிமுறை நமக்குத்தெரிந்திருந்தும் நாம் அதை

உரிய ஈடுபாட்டுடன் செய்வதாக இல்லை. அந்த வழிபாட்டை, வழிமுறையை நாம்

மேற்கொண்டால்,நாம் அதன் மயமானால், அதுவே ஆனால், நாம் விரைவாக

வென்றுவிடுவோம்.

 

நான் தலைவரை

சாதாரண  மனிதரில்  இருந்து ஒரு படி  மேலே  வைத்துப்பார்ப்பவன்..

அது நிதர்சனமாகி  வருகிறது

 

நமக்கு ஒரு பிரச்சினை  வரும் போது

எம்மை  எம்மால் காத்துக்கொள்ளமுடியாதபோது

எம்மை மீறிய  சக்தியொன்றை  நாம் நினைக்கின்றோம்

அந்தவகையைச்சேர்ந்தவரே தலைவர்...

 

அண்மைய  உதாரணம் இசுலாமியர்கள் தலைவரை அழைத்திருக்கிறார்கள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.