பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
தமிழன் கண்ட சித்திரக்கவி பாகம் 02 போன தொடரில் சித்திரக் கவியின் தோற்றத்தையும் அதன் பன்னிரெண்டு வகைகளையும் , அதில் நான்கு வகைகளை அதற்கான விதிமுறைகளையும் உதாரணங்களுடன் பார்த்தோம் . இந்தத் தொடரில் மிகுதி நான்கு வகைகளையும் பார்க்கலாம் . 05 நாக பந்தம்: இந்தக் கவிதை இரண்டு பாம்புகள் எப்படி மேல்நோக்கி பிணிப் பிணைந்து இருக்கின்றனவோ அப்படி அமைந்திருக்கும் இதன் விதிமுறையாக , இது வெண்பா யாப்பில் அமைக்கப் பெறவேண்டும்; அறம் உரைப்பதாக அமைய வேண்டும்; ஒரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும், மற்றொரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும் ஒன்றாக இருக்கும் அமைப்பில் பாடுவது இந்த நாக பந்தக் கவிதையாகும் . ஆகவே நாகபந்தம் என்பது இர…
-
- 3 replies
- 11.7k views
-
-
தமிழா உன்னைப்போல் ஒருவன் இல்லை !!! நீதான் டா உலகின் செல்லப் பிள்ளை !!! தமிழன் சொத்து பறை தெரியும் அது எத்தனை வகை தெரியுமா ? Join us - https://www.facebook.com/ThanmanamKalaikalam இதோ 32 வகைப் பறையின் பெயர்கள் நெஞ்சை நிமிர்த்தி பகிர்ந்துகொள் " டேய் நாங்க தமிழர்கள் டா !!!" அரிப்பறை - அரித்தெழும் ஓசையையுடைய பறை. அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே (சீவக சிந்தாமணி. 2688). ஆறெறிப் பறை - வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை. ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும் (சிலப்பதிகாரம். 12, 40). உவகைப்பறை - மகிழ்ச்சியைக்குறிக்கும் பறை. (திவாகர நிகண்டு) சாப்பறை - சாவில் அடிக்கப்படும் பறை. (திவாகர நிகண்டு) சாக்காட்டுப் பறை - இறுதிச் சடங்கின் போது இசைக்கும் ப…
-
- 5 replies
- 2.5k views
-
-
தமிழன் தொன்மை 100,000 ஆண்டுகள் - சாத்தூர் சேகரன் ! பல சுனாமிகள் தோன்றி குமரிக் கண்டத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து வந்தன. ஒவ்வொரு 10,000 ஆண்டுகளிலும் ஒரு பெரிய சுனாமி தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சில இலட்சம் மக்கள் மடிந்தனர். ஆனால், மிகச் சிறிதளவு நிலப்பகுதியே அழிந்தது.ஆனால் கடற்கோள் என்பது கி.மு.10,000 அளவில் தோன்றி கி.மு. 8,000 அளவு நீண்ட காலம் நடந்தது. இதனை மேலை நாட்டு ஆய்வாளர்கள் பெரும்பனிக்காலம் ( THE GREAT ICE-AGE ) என்கின்றனர்.இதன் காரணமாகவே குமரிக் கண்டம் முற்றிலுமாகவே அழிந்தது. முதல் பெருஞ்சுனாமி கி.மு. 60,000 ஆண்டுகளை ஒட்டி நிகழ்ந்ததாக ஆய்வறிஞர்கள் கூறினார்கள். இதற்கு அஞ்சியே குமரிக் கண்டத் தமிழர்கள் கட்டுமரங்களில் ஏறி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக…
-
- 0 replies
- 7.5k views
-
-
http://3.bp.blogspot.com/_2SMOVFpZr3M/SaAbqYhXDJI/AAAAAAAAAJc/-9UavYbCgj4/s1600/2009-01-29-1438-55.jpg மக்களைக் காத்தல் மன்னர்க்குக் கடன். உள்நாட்டுக் கலவரம் முதல் வெளிநாட்டு படையெடுப்பு வரை தம் குடிமக்கள் எதிலும் பாதிப்படையா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை நாடாள்வார் ஏற்க வேண்டும். மண், பெண், பொன் என எக்காரணத்தாலும் போர் எழலாம். அதனைத் தடுக்கவும் தொடுக்கவும் அரசுக்குப் படைபலம் வேண்டும். போரினால் உயிர், உடைமை இழப்பு மிகும்; அழிவும் மிகும். தமிழ்ச்சான்றோர் இவற்றை எல்லாம் எண்ணி வருந்தி, போர் இன்றியமையாதவிடத்தும், அது அறத்தின் அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும் எனச் சில நெறிமுறைகளை வகுத்தனர்.பகை நாட்டின் மீது படையெடுக்கும் முன், அந்நாட்டு அறவோரையும் தன்னாட்டு அறவோரையும் அல்…
-
- 2 replies
- 2.9k views
-
-
கார்ட்டூனிஸ்ட் பாலாவுடன் ஓர் அக்கப்போர் பேட்டி.
-
- 2 replies
- 483 views
- 1 follower
-
-
தமிழன் விடுதலை விரும்பி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் தமிழீழ இதயதெய்வத்திடம் இந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்ற தமிழ் மக்களின் இதயக்கனி ஒரு நீங்கா இடம் பிடித்தார். ஈழத்தமிழரின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து குடிகொண்டிருக்கும் பொன்மன்ச் செம்மலின் கருத்தாளம் மிக்க பாடல்கள், அவர் படம்கள் அந்த காலங்களில் எப்படி எமது மக்களால் கவரப்பட்டது. எப்படியான் ஒரு சுவை அவரின்படங்களில் இருந்தது என்று சொல்வதே இம் மடலினூடாக நான் சொல்லவிருக்கும் விடையம். இதிலே எவராவது எனக்குத்தெரியாத தகவல்களினை தர உதவி செய்து இதை சிறப்பிக்க விளைந்தால் நான் நன்றி உடையவனாக இருப்பேன்.
-
- 11 replies
- 5.7k views
-
-
-
-
தமிழரின் அறம் சார்ந்த ஆட்சியை நிறுவிய பெருந்தமிழர் ஐயா காமராஜரின் பிறந்த நாளில் இந்த காணொளியை பதிவிடுவதை முக்கியத்துவம் வாய்ந்ததாக உணர்கிறோம்... நன்றி திரு.வேலுச்சாமி அவர்கள்.. காமராஜரைப் பற்றி அவதூறு பரப்பும் அனைத்து திராவிட புரட்டு கும்பல்களுக்கும் ஈவேரா பக்தர்களுக்கும் சமர்ப்பணம்.
-
- 0 replies
- 348 views
-
-
தமிழரின் திறமையை உலகுக்கு தெரிவிக்கும் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில்.! கி.பி. 1036 ம் வருடம்.! கங்கையில் இருந்து சுமந்து வரப்பட்ட புனித நீரை, இராஜேந்திரன் பெற்று அந்தணர்கள் கையில் தர, பக்திப்பெருக்கோடு குடமுழுக்கும் நடந்தேற, அதன்பிறகு, கங்கைகொண்ட சோழபுரத்தின் பெரிதனினும் பெரிதான கங்கை கொண்ட சோழீச்சுவரரின் நிழலில் இருந்தே தெற்காசியாவின் அடுத்த 400 ஆண்டுகால வரலாறு எழுதப்பட்டது. தஞ்சை பெரிய கோயில் ஆண்மையின் மிடுக்கென்றால், கங்கைகொண்ட சோழீச்சுவரம் பெண்மையின் நளினம். தஞ்சை பெரிய கோயில் பிரமாண்டம் என்றால், கங்கைகொண்ட சோழீச்சுவரம் பேரழகு. கற்களால் வரையப் பட்ட அழகோவியமாக பார்த்துப் பார்த்து வார்க்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் சோழீஸ்வரர் பிரகதீஸ்வரர் பெ…
-
- 5 replies
- 1.5k views
-
-
-முனைவர் இராம. இராமமூர்த்தி முகப்புரை: உலகில் தோன்றிய பல்வேறு இனக்குழுக்களுள் முதன்முதலாக நாகரிகம் பெற்ற இனக் குழுக்கள் மிகச் சிலவே. அவ்வினக் குழுவினரை வரலாற்றாய்வாளர்கள் அவர்தம் மொழிப்பெயரான் சுட்டுவர். ஓரினத்தைக் குறிக்க மற்றெல்லாவற்றினும் மேம்பாடுடைய மொழியே முதன்மையானது. அத்தகைய மூத்த மொழிகளாக மட்டுமல்லாமல் செம்மொழிகளாகவும் விளங்கிய, சிறப்புடைய மொழிகளாகக் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், பாரசீகம், சமற்கிருதம், தமிழ், சீனம் என்பவனவற்றை மொழியியற் பேரறிஞர் ச. அகத்தியலிங்கம் சுட்டுவார். இதனை எண்ணுங்கால் தமிழர்கள் உலகின் மூத்த குடிகள் மட்டுமல்லர்; நாகரிகத்தால் மேம்பட்டவருமாவர். இதனைக், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி. (புறப். வெண்பா மாலை. கரந்: …
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழரின் மறைந்த இசைக்கருவி – ஆர். பிருந்தாவதி இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழினை ம…
-
- 2 replies
- 2.9k views
-
-
தமிழருக்கான தனித்துவநாள் தமிழர்களின் ஆண்டின் முதல் மாதம் சித்திரை மாதம் என்றே பலர் கூறுகின்றோம். ஆனால் உழவர்கள் தை மாதத்தையே ஆண்டின் தொடக்க மாதம் என்று போற்றுகின்றனர். தை மாதப் பிறப்பை ஒரு புத்தாண்டைப் போல தெய்வ வழிபாட்டுடன் உண்டு உடுத்து கொண்டாடி மகிழ்கிறார்கள். தை மாதத்திற்கு சிறப்புகளும், பெருமைகளும் நிறையவே உண்டு. அந்தவைகையில் பொங்கல் விழாவானது தமிழர்களின் தனிப்பெரும் விழாவாகும். தமிழர்கள் எத்தனையோ விழாக்களைக் கொண்டாடினாலும் வேறெந்த விழாவுக்கும் இல்லாத தனிச் சிறப்பு பொங்கலுக்கு மட்டுமே உண்டு. மற்ற விழாக்கள் போலன்றி, பொங்கல் எல்லா மதத்தினருக்கும் பொதுவானதாகவும், சமயம் அற்றதாகவும் உள்ளது. உழைக்கும் மக்கள் உழவர்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றியை தெரிவிப…
-
- 5 replies
- 2.5k views
-
-
இன ஆண்டுகள்: ---------------------------- மலையாளிகள் கொல்லம் ஆண்டு : 1196 வங்கர், ஒடியர் ஆண்டு : 1428 தெலுங்கர்,கன்னடர்,மராட்டியர் சகா ஆண்டு: 1943 ஆரியர் விக்ரம ஆண்டு: 2078 மத யாண்டுகள்: ---------------------------- புத்தர் ஆண்டு: 2565 மகாவீரர் ஆண்டு: 2547 கிருஸ்த்து ஆண்டு: 2021 இஸ்லாம் ஹிஜ்ரி ஆண்டு: 1442 பழம்பெரும் இன யாண்டுகள்: -------------------------------------------------- யூத ஆண்டு: 5781 சீன ஆண்டு: 4719 தமிழர் கலியாண்டு: 5123 அனைவருக்கும் இனிய 5123வது சூரிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் !!!! …
-
- 1 reply
- 2.1k views
-
-
தமிழில் ஏறக்குறைய இரண்டு லட்சத்து எண்ணாயிரத்துப் பத்துக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் 2,08,810 தமிழ்ச்சொற்கள் இருக்கக் காணலாம். அரி என்னும் ஒரு சொல்லுக்கு மட்டும் அகராதியில் 109 பொருள்களைக் காண்கிறோம். அந்த 109 பொருள்களுள் 50 பொருள்கள் வடமொழிச் சொற்களைத் தழுவியவை; மற்ற 59 பொருள்கள் அரி என்னும் தமிழ்ச்சொல்லுக்கே உண்டு. இப்படிப் பொருள்வளம் பெற்றுள்ள சிறப்பும் தமிழுக்குண்டு. 59 பொருள் தமிழ்மொழிக்கு வரவேண்டுமென்றால் அது நீண்ட காலமாய் மக்கள் புழக்கத்தில் இருந்திருத்தல் வேண்டும். இது தமிழ்மொழியின் தொன்மையையும் காட்டும். ஒன்றன் வெவ்வேறு நிலையை நன்கு காட்டுதற்கும், ஒன்றற்கும் மற்றொன்றற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துவதற்கும் தமிழ்மொழியில் …
-
- 2 replies
- 800 views
-
-
தமிழரை இகழ்ந்தவரை பழிதீர்த்த சேரன் | வீரத்தமிழர்கள்
-
- 1 reply
- 654 views
-
-
தமிழர் இசைக்கருவிகள் ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி ஈகரை தமி மிகப் பெரிய பானை வடிவில் உள்ள ஐந்து முகங்கள் கொண்ட இசைக்கருவி ஐமுகமுழவு அல்லது குடமுழா. அடிப்பக்கம் செம்பு (தாமிரம்) அல்லது வெண்கலத்தால் உருவாக்கப்பட்டிருக்கும். மேற்பாகம் தோல் பயன்படுத்தி இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். மான் தோலே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஐமுகமுழவு சக்கரம் இணைக்கப்பட்டு இரும்புச் சட்டங்களினுள் அமைக்கப்பட்டிருக்கும். இடம் விட்டு இடம் நகர்த்திச் செல்ல ஏதுவாக இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (கேரளாவில் மி…
-
- 0 replies
- 415 views
-
-
‘பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம்’ என்ற நூல் வெளியீட்டு விழா 13.4.2012 அன்று சென்னையில் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய இந்நூலை வெளியிட்டு, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து. வானம் துளங்கினும், மீனம் படினும், அலைகள் பொங்கினும், மலைகள் வீழினும், நெஞ்சுறுதி மாறாத மாவீரர் திலகம் பிரபாகரன், தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற வரலாற்றுப் பெட்டகத்தை, தரணிக்கும் தமிழ் இனத்துக்கும் உயிரோவியமாகத் தீட்டித் தந்து இருக்கின்ற, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஆருயிர் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களே, விழுமிய தலைமை ஏற்று இருக்கின்ற உணர்ச்சிக் கவிஞர் ஆருயிர்ச் சகோதரர் காசி. ஆனந்தன் அவர்களே, தியாகத் தழும்புகளைப் பெற்ற, பொது உ…
-
- 0 replies
- 748 views
-
-
-
ஒரு பூசணிக்காயை வெட்டாமல் அதுக்குள்ளே எத்தனை விதைகள் இருக்கு என்பதை உங்களால் சொல்லமுடியுமா?
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழர் கலாசாரத்தின் தேவதாசி சதிர் நடனம், பரதநாட்டியமாக மாறியது எப்படி? #தமிழர் பெருமை 6 செப்டெம்பர் 2020 அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ் adoc-photos / Getty சோழ சேர பாண்டிய காலத்தில் இருந்தே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் எந்தளவிற்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டது என்பதை பல வரலாற்று நூல்கள் நமக்கு கூறுகின்றன. தேவதாசிகள். இந்த சொல்லின் அர்த்தம் இன்று வேறாக இருக்கலாம். ஆனால், இன்று தமிழகத்தின் பாரம்பரிய நடனமாக விளங்கும் பரதக் கலைக்கு அவர்கள்தான் முன்னோடிகள். தமிழ்நாட்டின் பெருமைமிக்க கலாசாரமாக அறியப்படும் பரதநாட்டியத்தை, இந்தியாவில் மட்டுமல்லாது, பல்வே…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழர் கலை இலக்கிய வாழ்வு நலிந்துள்ளதா,வளர்ந்துள்ளதா? http://www.youtube.com/watch?v=o3-eTFTkmkk
-
- 0 replies
- 417 views
-
-
ஒவ்வொரு இனமும், குமுகமும் (சமூகமும்) தங்களுக்குள், தங்களுடையதாகக் கருதப்படும் சில வாழ்க்கை, பண்பாட்டு அடையாளக் கூறுகள் இருக்கும். அப்படித் தமிழர்கள் தங்களுடைய அடையளக்கூறுகளாகக் கருதப்படுவவை இங்கே தமிழர் குறியீடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இவை பொருள்களாவோ, கருத்தாகாவோ, கருத்தோவியங்களாகவோ இருக்கலாம். இவற்றுள் சிலவோ பலவோ தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று கருத இயலாது, எனினும் தமிழர்கள் அவற்றை தம் பண்பாட்டோடு ஆழமான நெருக்கம் உடையனவாகக் கருதுகிறார்கள். நிறங்கள்: பச்சை, நீலம், வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள் உயிரினங்கள்: மீன், புலி, யானை, பசு, மாடு, ஆடு, மான், காகம், மயில், கோழி, பூக்கள்: செவ்வரத்தம் பூ, தாமரைப் பூ, மல்லிகை, அந்திப் பூ கருவி…
-
- 0 replies
- 899 views
-
-
தமிழர் சமயம் எது? தமிழர் சமயம் எது? இது என்ன கேள்வி? சைவ சமயம்தான் தமிழருடைய சமயம். அது 14,000 ஆண்டு பழமை வாய்ந்த சமயம். சிந்துவெளி நாகரிக காலத்திலும் சைவ சமயம் தழைத்து இருந்திருக்கிறது என்பதற்கு சான்றுகள் ஏராளம் உண்டு என்று சைவர்கள் வாதிடுகிறார்கள். கடவுள், மதம், மொழி இவற்றுக்குத் தொன்மையான வரலாறு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவை மேலானவை, உயர்வானவை என்ற ஒரு தவறான எண்ணம் தமிழர்களிடம் இருப்பதால்தான் இப்படி அறிவுக்கு ஒத்துவராத, வரலாற்றுக்கு முரணான புராணக் கதைகளை சொல்ல வேண்டிய கட்டாயம் எழுகிறது. மனிதனது வரலாற்றுக் காலத்தில் 14,000 ஆண்டுகள் நீண்ட காலம் அல்ல. ஆனால் மனிதன் தன்னைப்பற்றி கல்லிலும், களிமண்ணிலும், தோலிலும் குறிப்புக்கள் எழுதிய காலத்தோடு ஒப்…
-
- 5 replies
- 9.4k views
-
-
தமிழகத்தின் கி.பி.250 முதல் கி.பி.600 வரையிலான நூற்றாண்டுகளை களப்பிரர்களின் காலம் என்றும், இருண்ட காலம் என்றும் பெருவாரியான 'செல்வாக்கு மிகுந்த' வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவ பண்டாரத்தார், ஔவை துரைசாமிப்பிள்ளை என பலரும் அவர்களை கொடியவர்கள் என்றும் சூறையாடியவர்கள் என்றும் சாடி உள்ளனர். கே.கே. பிள்ளை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்ட தனது 'தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்' எனும் நூலில் "தமிழகத்தில் இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள், கலியரசர்கள்" என கொட்டித் தீர்க்கிறார். போதுமான, நம்பகமான தரவுகள் ஏதுமற்ற பின்சங்க காலத்தில், இலக்கியங்களைத் தவிர்த்துப் பா்த்தால் பற்றிக்கொள்ள எந்த …
-
- 0 replies
- 841 views
-