Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'தைப்பொங்கல் தினமே, தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ~பண்டைய காலக் கணக்கு முறை| வழியாகவும் முன்வைத்துத் தர்;க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக்கால கட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக்கூடும்! 'பொங்கல்" என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன? பொங்குகை, …

    • 0 replies
    • 870 views
  2. புதுக்கோட்டையில் புதைந்துள்ள தமிழர் பண்பாட்டு அடையாளங்கள்...! மதுரையை அடுத்த கீழடியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்லியல் நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,500 ஆண்டு பழமையான பானைக் குறியீடுகளும், பல நூறு ஆண்டுகளாக இயங்கிவந்த இரும்பு உருக்காலை குறித்த தடயங்களும் கிடைத்துள்ளன. எழுத்துக்கு முந்தைய வடிவம் கண்டுபிடிப்பு! புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை அடுத்துள்ள வில்லுனி ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள ராமசாமிபுரம் மங்கலநாடு – அம்பலத்திடல் உள்ளிட்ட ஏரியாவில் சுமார் 173 ஏக்கரில் பண்டைக்கால பரப்பின் வாழ்விடம் அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் வன்னிமரம், தமிழ…

  3. பொங்கல் புதினம்! அனைவருக்கும் உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துகள்! படம்; நன்றி! பொன்னிவள வெளியீடு May this Pongal bring you peace, happiness, prosperity, and good health! தெரிந்ததையும் தெரியாததையும் அறிந்ததையும் அறியாததையும் பார்வையிட: சைவத்தையும் தமிழையும் காலங்காலமாக தமிழ் நாட்டில் தங்கியிருந்து ஆராய்வு செய்யும் டாக்டர் பிருந்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  4. வாழ்க்கைச் சுருக்கம் இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார். வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். திறமையான எழுத்தாளர், ஆற்றல் மிக்க பேச்சாளர், தன்னலமில்லா தொழிற்சங்கத் தலைவர், துணிவுடைய சுதந்திரப் போராட்ட வீரர். வ.உ.சி. யின் தியாக வாழ்க்கை ஒர் உன்னத வரலாறானது. அவரது வாழ்க்கை, இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காக தியாகங்கள், போராட்டங்கள், அனுபவித்த துயரங்கள் இவற்றால் நிறைந்தது. வ.உ.சி. யின் அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்த…

  5. ஓவியக்கண்காட்சி 1837 ஆண்டில் மதுரையில் காணப்பட்ட பல விதமான குடி மக்களின் தொழில், ஆடையணிகள், சமையம் போன்ற தகவல்களை சித்தரிக்கும், வில்லியம் துவிங் என அழைக்கப்படும் அமெரிக்ப்பாதிரியாரால் வரையப்பட்ட மிகவும் நுணுக்கமாக நிறமூட்டப்பட்ட ஓவியங்களைக் யெயில் பல்கலைகழகத்தின் Beinecke Rare Book & Manuscript Library ஆல் அமைக்கப்பட்ட Seventy two specimens of castes in India என்ற கண்காட்சியில் கணலாம். இங்கே பாருங்கள் சென்றகாலத்தை புரியாதவனுக்கு எதிர்காலம்மிலை

  6. பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும். அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு. இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (He…

  7. ஆதிச்சநல்லூரைப் போல முக்கூடலில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு. திருநெல்வேலி: தமிழர் நாகரீக அடையாளமாக விளங்கும் ஆதிச்சநல்லூர் போன்ற மற்றொரு புதைகாடு நெல்லை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் முக்கூடல் பாப்பான்குளம் அருகே உள்ள பொய்யிலான் பொற்றையை ஒட்டி பறம்பு ஓன்று உள்ளது. இதில் அக்காலத்தில் பெரிய இடுகாடு இருந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக பழங்கால தாழிகள் அதிகம் புதைந்துள்ளன. சுமார் 2 அடி விட்டமுள்ள தாழிகள் முதல் 4 அடி விட்டமுள்ள தாழிகள் வரை உள்ளன. ஒன்றினுள் ஒன்றாக 3 அடுக்குகளாக தாழிகள் உள்ளன. இவை கருப்பு மற்றும் சிவப்பு ஓடுகளை கொண்டவைகளாக உள்ளன. இந்த பாறையின் ஒரு பகுதி கருஞ்சிவப்பு நிறமுடையதாக உள்ளது. மாவட்டத்தில் வேறு எந்த இடத்திலும் இந்த வண…

  8. 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிந்து சமவெளி நாகரிகத்தில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட குளியல் குளம். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் மாடு, எருமை, ஆடு ஆகியவற்றின் மாமிசத்தை பெருமளவில் உணவாக உட்கொண்டிருக்கலாம் என சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. சிந்துச் சமவெளி பிரதேசங்களில் கிடைத்த பானைகளில் இருந்த உணவு எச்சங்களை ஆராய்ந்ததில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சித் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவரும் தற்போது ஃப்ரான்சில் உள்ள CEPAMல் டாக்டர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்…

  9. யாழ்பாணத்துக் கட்டடக்கலை தொடர்பாகத் தேடியபோது கிடைத்த தளம் ஒன்று. http://www.geocities.com/rmayooranathan/village_houses.html தலைப்பிற்குப் பொருத்தமில்லாவிடினும், ஒரு விடயம் அக்கால வீடமைப்பு சூழலில் உள்ள வெம்மையைத் தாங்கிப் பாதுகாக்கின்ற நிலையில் தான் அமைந்திருந்தன. ஓலை வீட்டில் உள்ள குளிர்மை, நவீனத்துவமான எந்த வீட்டிலும் கிடையாது. வெளிநாட்டவரின் வீடு கட்டும் முறையை உள்வாங்கி, அதனால் வெக்கையில் புழுங்கியபோது, எமக்குக் குளிரூட்டிகள் தேவைப்பட்டன. அதையும் வாங்கிச் செருகினால், பணச்செலவு, மேல் செலவு! பார்க்கப் போனால், எம் முன்னோர்களை விட நாங்கள் முழு முட்டாள்கள். ஆனால், முன்னோர்களை மூடநம்பிக்கையாளர் என்று திட்டி, எம்மளை நாமே மார்தட்டிப் பெருமிதமடைவோம். …

  10. ''தினகரன் வாரமஞ்சரி" ****************************** 06 - 06 - 2021 ------------------------------- ஆழ்ந்தடங்கிய தமிழ்ச் சான்றோன்.. வித்துவான் பொன். அ. கனகசபை..!! *********************************************** ஈழத்தில் எங்கெல்லாம் தமிழ் ஓசை முழங்கியதோ, அங்கெல்லாம் குறிப்பிடத்தக்க மூன்று தமிழறிஞர்களில் ஒருவரின் குரலாவது நிச்சயம் ஒலித்திருக்கும். ஐம்பதுகளின் ஆரம்பம் முதல் சுமார் அரை நூற்றாண்டு காலம் அவர்கள் குரல் யாழ் குடாநாட்டுத் தமிழ் விழா மேடைகளில் தவறாது ஒலித்தது எனலாம். அந்த மூவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஒருவகையில் உறவினர்கள் கூட.. புகழ்பெற்ற புலவர்களையும், அறிஞர்களையும், …

    • 4 replies
    • 860 views
  11. மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம்-2016 6-ஆம் பதிவு நாள்: 26-03-2016 ----------------------------------------------------------------------------------------------------------------------------- பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி இவ்வாண்டின் நான்காவது நிலவு வெற்றி பெற்றுள்ளது. 23.03.2016 அன்று 6.33-க்குத் தோன்றி நள்ளிரவை 12.33-க்கு கடந்தது. இது இழு பறியான நிலைதான் ஆயினும் முறை முற்றிய நிலவாகக் கணக்கில் கொள்ளலாம். இவ்வாண்டின் முதல் இரண்டு முழுநிலவுகளான தைப்பூசம், மாசிமகம் இரண்டும் ஒவ்வொரு நாள் குறைவுற்ற நிலையில் பங்குனி உத்தரமும், சித்திரைச் சித்தரையும் வெற்றி பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. சித்திரைமேழி:- தமிழ் மரபில் …

    • 0 replies
    • 857 views
  12. ஈழத்தில் ஈழத்தமிழரின் முக்கிய பொக்கிசங்கள் கண்டுபிடிப்பு! ஆதிக்குடிகளான நாகர்களின் புராதன குடியிருப்புக்கள் புதூர் காட்டுப்பகுதியில் இனங்கானப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாலியாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள புதூர் கிராமத்தின் மேற்குப்பகுதியில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த நாகர்களின் புராதன குடியிருப்பு எச்சங்கள் அங்காங்கே பரவலாக கானப்படுகின்றது. இத்தொல்லியல் தளங்களை இணங்கண்டு, ஆவணப்படுத்தும் நோக்கில் 21-06-2018 அன்று பாலியாற்றின் இருபுறமும் உள்ள புதூர் நவ்விக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதிக்கு தொல்லியல் தடயத்தை வரலாற்று ஆய்வியல் மாணவர் ஒருவர் சென்றுள்ளார். இரண்டு இடங்களில் சராசரி ஏழு அடி உயரமான 9”12” கன…

  13. பெருமை மிக்க நமது ஆத்திசூடியை உலகறியச் செய்வோம். அதிகமாகப் பகிருங்கள். மற்ற இனத்தவர்களிடமும் கொண்டு சேருங்கள். CLICK "LIKE" and "SHARE" 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and lea…

    • 3 replies
    • 845 views
  14. எழுத்துப் பெருக்கமும் மொழிக் காப்பும் – மகுடேசுவரன் July 20, 2020 இன்றைய காலத்தின் பாய்ச்சலை யாரும் எதிர்பார்க்கவில்லை. இணையம் வந்த பிறகு இருபதாம் நூற்றாண்டில் திரையிட்டுக் கட்டிக் காக்கப்பட்ட பலவும் பொலபொலவென உதிர்ந்துகொண்டிருக்கின்றன. செய்தி முதற்கொண்டு கலை இலக்கியங்கள் ஈறாக யாவற்றின் பெருக்கமும் அளவிட முடியாததாகிறது. இவ்விரைவு மேலும் மேலும் கூடுகிறது. புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து குவிகின்றன. புதுக்கருத்தியல்கள், புதுப்பொருளில் அமைந்த உரையாடல்கள், புதுக்கலை வெளிப்பாடுகள், ஊடகப் பெருவெளி என்று பற்பல அடிப்படை மாற்றங்களைக் காண்கின்றோம். இன்று மொழியானது பேச்சாகவும் எழுத்தாகவும் அடைந்திருக்கின்ற அன்றாடப் பயன்பாட்டு உயரம் இதுவரை இல்லாத ஒன்று. இதுநாள்வர…

  15. தமிழகத்தின் கி.பி.250 முதல் கி.பி.600 வரையிலான நூற்றாண்டுகளை களப்பிரர்களின் காலம் என்றும், இருண்ட காலம் என்றும் பெருவாரியான 'செல்வாக்கு மிகுந்த' வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவ பண்டாரத்தார், ஔவை துரைசாமிப்பிள்ளை என பலரும் அவர்களை கொடியவர்கள் என்றும் சூறையாடியவர்கள் என்றும் சாடி உள்ளனர். கே.கே. பிள்ளை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்ட தனது 'தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்' எனும் நூலில் "தமிழகத்தில் இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள், கலியரசர்கள்" என கொட்டித் தீர்க்கிறார். போதுமான, நம்பகமான தரவுகள் ஏதுமற்ற பின்சங்க காலத்தில், இலக்கியங்களைத் தவிர்த்துப் பா்த்தால் பற்றிக்கொள்ள எந்த …

    • 0 replies
    • 841 views
  16. https://app.box.com/s/x7n5xs5t2ra6lf311k140gqb9d8ol47i பறை எழுத்து இசைப்பப் பல்லவர் ஆர்ப்பக் குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த நறை வலம் செய விடா நிறுத்தன ஏறு அவ் ஏற்றின் மேல் நிலை மிகல் இகலின் மிடை கழிபு இழிபு மேல் சென்று வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான் பால் நிற வெள்ளை எருத்தத்தப் பாய்ந்தானை கோணாது குத்தும் இளம் காரித் தோற்றம் காண் பால் மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும் நீல்நிற வண்ணனும் போன்ம் ( முல்லைக்கலி 104: 28-30) பொருள்:- வீரர்கள் சூழ்ந்து தம்மை முற்றுகை இட விடாமல் வளையத்தை உடைத்து 'நின்று விளையாடுகின்றன' காளைகள் ஒருவன் அருகில் உள்ள பார்வையாளர் மேடை மீது ஏறி அதன் உச்சிக்கு சென்று வெள்ளை காளையின் மீது குதிக்கிறான…

    • 0 replies
    • 839 views
  17. உலகத் தமிழரின் பண்பாட்டுக் காப்பாளர் இராசாராம் -மறவன்புலவு க. சச்சிதானந்தன் **மறவன்புலவு க. சச்சிதானந்தன் (ஐ.நா. முன்னாள் ஆலோசகர்; சென்னை, யாழ்ப்பாணம் காந்தளகம் பதிப்பாளர்) கிழக்கு ஆபிரிக்கக் கரையோர நாடு சீசெல்சு. அந்நாட்டு ஆவணக் காப்பகத்தில் கடந்த 200 ஆண்டுகளாகத் தமிழர் அங்கு வாழ்ந்து வருவதற்கான பதிவுகள் உள. வருகை, பிறப்பு, இறப்பு, திருமணம், வாக்காளர் பட்டியல் என அங்கிங்கெனாதபடி எங்கும் தமிழர் பற்றிய பதிவுகள். ஒவ்வொன்றாகப் பிரித்துக் காட்டுகிறேன். பார்த்துப் பார்த்துப் பரவசமடைகிறார் இராசாராம். காரை நான் ஓட்ட, என் பக்கத்தில் அவர் அமர்ந்து அந்தக் காப்பகத்துக்கு வரும் பொழுதே அவருக்கு வியப்பு. எப்படி இந்தச் சந்து பொந்துகளையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாய்? எ…

  18. மியான்மாரின் [பர்மா] 55 மில்லியன் மொத்த சனத்தொகையில் இரண்டு சதவீதத்தினர் இந்திய வம்சாவளி மக்களாவர். இவர்களில் பெரும்பான்மையினராக விளங்கும், கடந்த 200 ஆண்டுகளாக மியான்மாரில் வாழும் தமிழ் மக்கள் தமது அடையாளங்களை இழந்து வருகின்றனர். 1948ல் மியான்மார் சுதந்திரமடைந்ததன் பின்னர், இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட காணிச் சீர்திருத்தங்கள், பர்மிய மொழி கட்டாயமாக்கப்பட்டமை, பெரும்பான்மை பர்மிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டமை போன்றன சமூகக் கட்டமைப்பில் தமிழ் மக்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்படக் காரணமாகின. மியான்மாரில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீண்டும் தமது மொழி மற்றும் கலாசாரத்தை புத்துயிர் பெறவைப்பதற்காக புதிய பாடசாலைகளைத் திறந்துள்ளனர். தென்னிந்திய தமிழர்கள் 19ம் நூற்றாண்…

  19. ஒண்டு ரெண்டு மூண்டு நாலு ஒண்டு ரெண்டு மூண்டு நாலு எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா ஒட்டுமொத்த தமிழும் ஒரு நாள் உலகை ஆழும் தமிழா வெற்றி மட்டும் எமது மண்ணில் வீரம் நிறைந்தால் கிடைக்கும் எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா நேற்று இன்று இல்லை இன்று நேற்று இல்லை நாளை மட்டும் எம் கையில் வாழும் நாளில் உண்டு விட்டு விட்டு வாடா தமிழா வேற்றுமை வேண்டாமேடா சுட்டுத் திசையும் அவனே உன் முன் தொடர்ந்து செல்வாயாடா? எதிரி கொட்டியது போதும் பொறுமை தமிழா எழுந்து நீயும் வாடா எதிரில் உன்ன…

    • 3 replies
    • 836 views
  20. ஒரு குறள் சொன்னா ஒரு டாலர் பரிசு! மச்சீர் கல்வி பிரச்சனை, செம்மொழி ஆராய்ச்சி அலுவலகம் இடமாற்றம், செம்மொழி பூங்காவில் பெயர் மறைப்பு, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு மூடுவிழா என்று தொடர்ந்து தமிழ் மொழிக்கு எதிரான சூழல் தாய் தமிழகத்தில் நிலவும் சூழலில், தமிழ் நாட்டிலிருந்து குடிபெயர்ந்து சென்றவர்கள் தமிழையும், தமிழ் பண்பாட்டையும் மறக்கவில்லை எனும் அளவுக்கு சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வெளி நாடு வாழ் தமிழர்கள், தங்கள் வசிக்கும் நாடுகளில் தமிழ் பள்ளிகள் நிறுவி, அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழ்க் குடும்ப குழந்தைகளுக்கு, தமிழில் எழுத படிக்க கற்றுக்கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் டல்லாஸ் மாநகர ப்ள…

  21. படக்குறிப்பு, ஜம்பை கோவிலில் மன்னர்கள் குறித்த கல்வெட்டுகள் அல்லாமல், சாமானிய மக்கள் குறித்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் க பதவி, பிபிசி தமிழுக்காக 16 ஆகஸ்ட் 2023 தமிழ் மக்களின் வாழ்க்கை முறை பொருள் சார்ந்தும், தொழில் முறை சார்ந்தும் அமைந்திருந்தது. தமிழர்கள் வாழ்வில் கோவில்கள் முக்கியமான அம்சமாக இருந்துள்ளன. அக்கால மக்களின் வரலாற்றை நாம் அறிந்துக் கொள்ளும் ஆதாரமாக கோவில்களின் கல்வெட்டுகள் இருக்கின்றன. அந்த கல்வெட்டுகள் பெரும்பாலும், அந்த காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், முக்கிய பிரமுகர்கள் பற்றியே அமைந்திருக்கும். ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜம்பை…

  22. நிலையில்லாத உயிர்வாழ்க்கையை விரும்பாது நிலையான மறப்புகழை விரும்பும் வீரர்கள்தான் மாவீரர்கள். ஒருவன், ஒருவர் அல்லது இருவரோடு பொருதுவது (சண்டையிடுவது) இயற்கை. ஆனால் ஒருவன் சிறிதும் அஞ்சாது ஒரு பெரும்படை முன் தனியாகச் சென்று எதிர்த்துப் போரிட்டு, அப்பெரும் படையை தோற்றோடும்படிச் செய்வது இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட செயலாகும். அத்தகைய வீரர்கள் செய்யும் செயல் மறவென்றி எனப்படும். ஒரு மறவன் இன்ன நேரத்தில் இப்படையை வெல்வேன். அப்படிச் செய்யத் தவறினால் தீயில் வீழ்ந்திறப்பேன் என வஞ்சினக் கூறி பொருதச் செல்வான். அவன் அந்நேரத்திற்குள் அப்படையை வெல்ல முடியாது போனால், தான் கூறிய வெஞ்சினத் தப்பாது, பெரியோர் முன்னிலையில் தீ வளர்த்து அதில் வீழ்ந்து உயிர் துறப்பான்.இதை சொல்வென்றி என…

    • 2 replies
    • 832 views
  23. பின்வரும் இரண்டு வசனங்களுக்கும் கருத்தில் என்ன வித்தியாசம்? இரண்டு வசனத்திலும் ஒரே சொற்கள்தான் உள்ளன ஆனால் ஒழுங்கமைப்பு வேறு. வசனம் 1: இறுதியில் அவன் தான் வெல்வான் வசனம் 2: அவன் இறுதியில் தான் வெல்வான்

    • 6 replies
    • 832 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.