Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. ** எனது அனுபவம் அல்ல. வாட்ஸ் அப்பில் வந்த செய்தி யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நான் பெற்றுக்கொண்ட மனம் வருந்தத்தக்க அனுபவம். கடந்த 12.09.2023 காலை 8.25 மணியளவில் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு சென்ற நான் ஒரு முதலுதவி பயிற்றுவிப்பாளர் என்றவகையில் சுய விருப்பின் பெயரில் சிறுநீரகத்தின் செயற்பாட்டை அறிய உதவும் Serum Creatinine எனப்படும் பரிசோதனையை செய்வதற்காக குருதி மாதிரியினை வழங்கியிருந்தேன். அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் பரிசோதனையின் முடிவினை பெறச்சென்றிருந்தபோது அங்கு சில நிமிடநேரத்தின் பின் ஒரு பெண் கையில் எனது பரிசோதனை முடிவினை வழங்கிவிட்டு அது தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்துவிட்டுச் செல்லும்படி அறிவுறுத்தினார். அத்…

  2. சிதிலமுற்ற கூட்டில் ஒரே ஒரு முட்டை இருப்பதைக் கண்டார் உழவர். சுற்றுமுற்றிலும் பார்த்தார். கண்ணுக்கெட்டிய மட்டிலும் பறவைகளைக் காணோம். குஞ்சுகுளுவான்களைக் காணோம். முட்டையைத் தொட்டுப் பார்த்தார். வெதுவெதுப்பாய் இருந்தது. ஆக நாட்பட்ட முட்டையும் அன்று. கையிலெடுத்துக் கொண்டு போய், பண்ணையில் இருக்கும் அடைக்கோழியின் முட்டைகளுள் முட்டையாய் வைத்து விட்டார். அடைக்கோழியும் அடை காத்துவர, குஞ்சுகள் பொரிந்தன. இந்தக் குஞ்சுவும் அவற்றுள் ஒன்றாய் தாய்க்கோழியின் பின்னால் திரிந்து, கொத்தித் தின்னப்பழகியது. நடைபோடப் பழகியது. ஓடிச்செல்லப் பழகியது. ஒருபோதும் வானத்தைப் பார்க்கவில்லை. நினைத்தால் வானத்தை அதனால் தொட்டவிடக் கூடிய கழுகுக்குஞ்சுதான் அது. ஆனால் சக கோழிகளைப் போன்றே வாழ்ந்து கொண்டிருந்…

  3. கதறும் மாடுகள், இரத்த வெள்ளத்தில் ஆடுகள். யேர்மனியில் செல்ம் (Selm) நகரத்தில் உள்ள இறைச்சிக் கூடத்தில் சட்ட விரோதமான முறையில் மிருகங்களுக்கு வேதனைகள் தந்து கொல்லப்படுவதாக விலங்கு உரிமை ஆர்வல நிறுவனமான Soko Tierschutz தொடர்ந்த வழக்கு 15.09.2023 விசாரணைக்கு வந்தது. டோர்ட்மூண்டிற்கு அருகிலுள்ள செல்ம் நகரத்தில் உள்ள இறைச்சிக் கூடத்தில் மூன்று ஆண்கள் தங்கள் இஸ்லாமிய முறையில் குறைந்தது 188 விலங்குகளை படுகொலை செய்துள்ளனர். இந்த முறையில் விலங்குகள் கொல்லப்படும் போது அவை மிகுந்த வேதனைகளை அனுபவிக்கின்றன என்பதே வழக்கின் விபரம். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறைச்சிக் கூடத்தின் உரிமையாளரும்(54) அவரது இரண்டு மகன்களும் ஆவர். மயக்க மருந்து இல்லாமல் விலங்குகளின் கழுத்தை …

  4. பல வெள்ளை ஆடுகள் மத்தியில் ஒரு ஒரு கறுப்பு ஆடு மட்டும் இருக்கும் சிவப்பு நிற ஸ்வெட்டர் அணிந்து, இளவரசி டயானா (1961-1997) பொது வெளியில் 1981 இல் வர, பல புகைப்பட நிபுணர்கள் அவரை தமது கமராக்களில் படம் பிடித்துக் கொண்டார்கள்.. அன்றில் இருந்து அந்தக் கம்பளி ஸ்வெட்டர் பிரபலமாகி விட்டது. அந்த ஸ்வெட்டர் பழுதாகி விட, இளவரசி டயானா உடனடியாகவே புதிதாக இன்னும் ஒன்றை வாங்கிக் கொண்டார். அதில் இருந்து அந்த ஸ்வெட்டரில் அவர் அதிகம் விருப்பம் கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. இப்பொழுதும் இந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்வெட்டரை 200 யூரோக்களுக்கு வாங்கிக் கொள்ளலாம். சிவப்பு நிறம் என்று மட்டும் இல்லை பச்சை, நீலம் என பல வர்ணங்களிலும் இந்த ஸ்வெட்டர் Warm and Wonderful நிறுவனத்திடம் வி…

    • 1 reply
    • 350 views
  5. ரேச்சல் பெய்லி Rachel Bailey (30) மூன்று பிள்ளைகளின் தாய். அவளது வாழ்க்கையில் அவளுடைய கவனத்தை மிகவும் கவர்ந்த குழந்தை அவளது கணவர் அலெக்சாண்டர் (30). அமெரிக்காவைச் சேர்ந்த ரேச்சல் பெய்லி தனது 30 வயதுக் குழந்தை(கணவனு)க்கு ஒரு நாளைக்கு நான்கு முறை வரை தாய்ப்பால் கொடுக்கிறாள். தம்பதியர் இருவரும் தங்களுக்குப் பிறந்த முதல் குழந்தை ராயுடன் 2016இல் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளார்கள். ரேச்சல் பெய்லிக்கு அவள் குழந்தைக்குத் தேவையான பாலைவிட அதிகமாகப் பால் சுரப்பதால் அதை வெளியில் எடுக்க மார்பக பம்ப் தேவைப்பட்டிருக்கிறது.. ரேச்சல் பெய்லியோ மார்பக பம்பை கொண்டு செல்ல மறந்து விட்டாள். மார்பகத்தில் பால் தங்கிக் கொண்டதால் அவளுக்கு வலிக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் தொற்று நோய் ஏற…

  6. இரத்தினபுரி மாவட்ட கஹவத்தை பெருந்தோட்ட வெள்ளந்துர பிரிவில் சற்று முன்; #மனோ_கணேசன் இது தொடர்பில் கஹவத்தை OIC கருணாரத்ன, நீதிமன்ற கட்டளையுடன் நடந்தது என்றார். தற்சமயம் அது அப்படியல்ல, என தகவல் கிடைத்துள்ளது. https://www.facebook.com/mano.ganesan.3/videos/859306238965397

  7. அதன் தலை றோஸ் வண்ண நிறம். பெயர் லோறி(Lori). லோறி என்று அழைக்கப்படுவது ஒரு கிளி. அந்தக் கிளி இப்பொழுது ஒரே இரவில் பிரபல்யமாகி இருக்கிறது. 09ந்திகதி சனிக்கிழமை, விடியலை நோக்கி பொழுது நகர்ந்து கொண்டிருந்தது. யேர்மனியில், பேர்லினில் உள்ள Gropiusstadt நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில்,சிரியன் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. தகவல் கிடைத்து தீயணைப்புப்படை விரைந்து வந்து தீயை அணைத்து விட்டாலும், கட்டிடம் முழுவதும் புகை பரவி இருந்தது. படிக்கட்டுகளில் புகை நிறைந்து இருந்ததால் 17 குடும்பங்கள் தீயணைப்புப் பணியாளர்களால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நடப்பது எதுவும் தெரியாமல் (Karin Radvan) காரின் ராட…

  8. ஒரு மாணவனின் வெற்றியில் தாக்கம் செலுத்தும் காரணிகள் தற்போது வெளியான உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில் குறிப்பிட்ட சில மாணவர்கள் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியை பெற்று அனுமதிக்கு எப்போது காலம் வரும் என்று காலத்தினையும், அதன் தொடர்புடைய பல்கலைக்கழகத்தினையும் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் அதேவேளை, கல்வியில் தாம் சாதித்து விட்டோம் என்று மிகுந்த சந்தோசத்தில் மூழ்கிருக்கின்ற ஒரு குறிப்பிட்ட பிரிவினர், தாம் கஷ்டப்பட்டு கடுமையாக முயற்சி செய்து தங்களுக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைத்தும் வெட்டுப்புள்ளிக்குள் உள்ளீர்க்கப்படாமல் தங்களது எதிர்காலம் எப்படிப் போகுமோ என்று மிகுந்த கவலைக்குள் உள்ளாக்கப்பட்டிருக்கும் அதிகமான இன்னொரு பிரிவினர், தாங்கள் எந்த விதமா…

  9. வரலாறு தெரியாது விளாசுகிறார் அமைச்சர் விதுரர் தெற்கிலங்கையில் சைவக் கோயில்கள் இருக்கின்றன. எனவே வடக்குக் கிழக்கு இலங்கையில் புத்த விகாரைகளை அமைத்தால் என்ன? அறிவை அடகு வைத்த பின்பு வினவுகிறார் மாண்புமிகு அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கர். புத்தர் இலங்கைக்கு வந்த நாளில் முருகனுக்குத் தைப்பூச விழா. இலங்கை மக்கள் அனைவரும் கூடி எடுத்த விழா. மாணிக்கக் கங்கையில் விழா. இலங்கையின் ஆதிகுடிகள் சைவர்களே புத்தரை வரவேற்றார்கள். தைப்பூச நாளில் வரவேற்றார்கள். கதிர்காமத்தில் இருந்து காங்கேயன்துறை வரை நீண்ட, சிலாவத்தில் இருந்து மட்டக்களப்பு வரை அகன்ற, 66,000 சதுர கிலோ…

  10. “சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு” என்ற சினிமாப் பாடலில், “இடையின் பின்னழகில் இரண்டு குடத்தை கொண்ட புதிய தம்புராவை மீட்டிச் சென்றாய் கலைநிலா மேனியிலே சுளை பலா சுவையைக் கண்டேன் அந்தக் கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி மதிதன்னில் கவி சேர்க்குது” என்ற ரி.ராஜேந்தரின் அழகிய கற்பனை இருக்கும். சமீபத்தில் நான் வாசித்த செய்தி ஒன்று இந்தப் பாடல் வரிகளை நினைவுக்கு கொண்டு வந்ததோடு என்னை இசையோடு அசை போடவும் வைத்தது. ஆர்ஜென்டீனா மொடல் அழகி (Silvina Luna) சில்வின லூன(43)வுக்கு பெரிய பின்னழகுக்கு ஆசை வந்தது. அந்த ஆசைக்கு விலையாக இந்த வருடம் ஆவணி 31ந் திகதி அவர் தனது உயிரைத் தர வேண்டி இருந்தது. Brazilian Butt Luft என்று அழைக்கப்படும…

    • 2 replies
    • 703 views
  11. https://www.facebook.com/reel/1032831737896894?s=yWDuG2&fs=e

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியர்களின் வீடுகளில் மொத்தம் 206 மில்லியன் (20.60 கோடி) மின்னணு சாதனங்கள் பயனற்று கிடக்கின்றன. இவற்றில் மொபைல்ஃபோன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை அடங்கும் கட்டுரை தகவல் எழுதியவர், தீபக் மண்டல் பதவி, பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட்ஃபோன்கள் உள்ளனவா? லேப்டாப் அல்லது பிற மின்னணு சாதனங்களும் உன் வசம் இருக்கிறதா? அனேகமாக இவற்றில் ஒன்று அல்லது இரண்டு மின்னணு சாதனங்கள் மட்டும் நீங்கள் பயன்படுத்தும் விதத்திலும், மற்றவை உங்களின் வரவேற்பறையை அலங்கரிப்பவையாகவும் மட்டுமே இர…

  13. முறுக்குள்ள (Proud) செய்தியாளர் சசி- -- ------------- ----------- கிழக்கு மாகாணச் சுயாதீனச் செய்தியாளர் சசி புண்ணியமூர்த்திக்கு, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டமை ஊடக சுதந்திரத்துக்கும் ஊடக ஜனநாயகத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய எச்சரிக்கை. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை சசி புண்ணியமூர்த்தியிடம் இல்லை என்ற ஒரு காரணத்தினால், அவர் ஊடகவியலாளர் அல்ல என்ற முடிவுக்கு வருவது மிகவும் அபத்தமானது. அப்படியானால் அரசாங்கத் தகவல் திணைக்கள ஊடக அடையாள அட்டை இல்லாத ஏனைய செய்தியாளர்கள் சிலரை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கொள்ள அனுமதித்திருக்கக் கூடாது. …

  14. நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக பௌத்த குருமார் சிலர் போராட்டம் நடத்தியமை குறித்துப் பிரதான சிங்கள - அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டதாகத் தெரியவில்லை. கொழும்பில் உள்ள பிரதான சிங்கள - ஆங்கில நாளிதழ்கள், செய்தி இணையங்கள் பிரதான சிங்கள இலத்திரனியல் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை. மாறாகப் பௌத்த சமயத்துக்கு வடக்குக் கிழக்கில் தமிழ்ப் பயங்கரவாதிகளும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் தடை விதிப்பதாக பௌத்த குருமார் கூறுகின்ற திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில சிங்கள - ஆங்கில மாற்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டாலும், அதன் சிங்கள வாசகர்களின் எண்ணிக்கை மிகக் …

    • 4 replies
    • 380 views
  15. யாழ்ப்பாணத்தில் கோயில் திருவிழாக்காலம் ஆரம்பித்துவிட்டது. இனி மார்கழி வரைக்கும் யாழ்ப்பாணம் முழுவதுமே தெய்வீகமயம்தான். கோயில்கள் ஒளிவெள்ளத்திலும், பக்த வெள்ளத்திலும், பண வெள்ளத்திலும் மிதக்கும். ஆனால் சமநேரத்தில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தின் எல்லைக்கிராமங்களில் இருக்கின்ற பல நூற்றாண்டுகள் தொன்மையுடைய சைவ கோயில்கள் இருளில் கிடக்கின்றன. வெள்ளி, செவ்வாயில் தொடர்ச்சியான பூசைக்கோ, நிரந்தரமான கட்டடங்களுக்கோ வசதியற்ற நிலையிலேயே பல கோயில்கள் உள்ளன. இந்நிலை யாருக்கு வாய்ப்பாகிறதெனில், தெற்கிலிருந்து பண்பாட்டுப் படையெடுத்து வந்துகொண்டிருக்கும் தொல்லியல் திணைக்களத்திற்கும் பெளத்த பிக்குகளுக்கும்தான…

  16. கண்களில் கண்ணீர். குரலில் ஒரு ஏக்கம். “ஹலோ அம்மா” ஜிம்மி தைடனின் வார்த்தைகள் நடுங்கியபடியே வெளி வந்தன. “நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்” என்று சொன்னபடி ஜிம்மி தைடன் தனது தாயை இறுக அணைத்துக் கொண்டார். தனது 42 வருட வாழ்க்கையில் தனது தாயை முதன் முதலாகக் காண்கிறார் ஜிம்மி தைடன். ஜிம்மி தைடன் வளர்ந்தது, படித்தது, சட்டத்தரணியாக வேலை பார்ப்பது எல்லாமே விர்ஜினியா(அமெரிக்கா) நகரத்தில்தான். சிலி நாட்டில் சன்ரியாகோ நகரத்தில் பிறந்த தன்னை மருத்துவமனையில் திருடி ஒரு அமெரிக்க குடும்பத்திடம் விற்று விட்டார்கள் என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அதே நேரத்தில் தனது மகன் திருடப்பட்டுவிட்டான் என்பது அவரின் தாய் மரியா அங்கலீகாவுக்கும் தெரிந்திருக்கவில்லை. குறைப் பிரசவத்தில் …

    • 1 reply
    • 313 views
  17. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02j1o8UUwUrhWuPHuZiuNdaT3d6qCj7NWAUF5xS5u6JALE4zmogDeyKKz1mtJpZuArl&id=100083780391980&mibextid=Nif5oz

  18. சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாக ஏதாவது புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கும். இப்பொழுது TikTokஇல் கடும் உறைப்பான மிளகாயில் செய்யப்பட்ட ‘சிப்ஸ்’ஐச் சாப்பிடும் போட்டி ஒன்று வந்திருக்கிறது. இப்படியான வில்லங்கமான விடயங்கள் எந்தளவுக்கு பள்ளி மாணவர்களைச் சென்றடைகின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். யேர்மனி நோர்ட்ரைன் வெஸ்ற்பாலன் மாநிலத்தில் உள்ள Euskirchener பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் TikTokஇல் நடந்து கொண்டிருக்கும் Hot Chip Challengeஐ தாங்களும் செய்து பார்க்க எத்தனித்திருக்கிறார்கள். விளைவு, பாடசாலை வளாகமே கடந்த வெள்ளிக்கிழமை அம்புலன்ஸ் வாகனங்கள், வைத்தியர்கள், தாதியர்கள் என பரபரப்பாக இருந்திருக்கிறது. உறைப்பான சிப்ஸை சாப்பிட…

  19. இன்றைய டிஜிட்டல் உலகில் ஆண்ட்ராய்ட் செல்போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. அதே நேரம் நாளும், பொழுதும் செல்போன்களில் மூழ்கி விடுவதால் பேராபத்துகளும் எதிர்கால சந்ததியினருக்கு சூழ்ந்துள்ளன. அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் இலாப நோக்கம் இல்லாத சாப்பியன் எனும் தனியார் ஆய்வகம் ஆண்ட்ராய்டு செல்போன்கள் அதிகம் பயன்படுத்தும் இளம் வயதினரிடையே ஒரு ஆய்வினை மேற்கொண்டது. உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து 969 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 4000 பேரும் இடம் பெற்றிருந்தனர். இதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆய்வு முடிவுகள் தொடர்பாக அவர்கள் கூறும் போது, தற்போது குழந்தைகளிடம் ஸ்மார்…

  20. Started by nunavilan,

    #யாழ்ப்பாண_மொக்கங்கடையைத்தேடி யாழ் பட்டினம் திட்டமிடப்படாத நகரம். அதுவாய் அமைந்த Organic city. திட்டமிட்ட நகரங்களிலில்லாத ஒரு ஐந்து சந்தி யாழில் உண்டு. அதுதான் யாழ்ப்பாண முஸ்லீம்களின் ஏரியா. 1யாழ்ப்பாணத்தில், அஞ்சு லாம்படிச் சந்திக்குக் கிட்ட ' ஹமீதியா கபே' எண்டு ஒண்டு இருந்தது! ஹமீதியா கபே எண்டு கேட்டால் ஒருத்தருக்கும் தெரியாது! மொக்கன் கடை எண்டால், தெரியாத இளம் தலைமுறையே இருக்காது! அங்க சில பேர் ' ஆட்டு மூளை' ஓடர் பண்ணுவினம்! அபப, முதலாளி 'மொக்கன்' ஒரு கத்துக் கத்துவார்! தம்பி... ஐயாவுக்கு ஒரு ' மூளை' கொடு! அதே போல தம்பி.. இரண்டு ' பிஸ்டேக்' கொண்டோடி வா எண்டும் சொல்லுவார்! பிஸ்டேக்' எண்டால் என்ன எண்டு எல்…

  21. இத்தாலியில் இருந்த முதியோர் இல்லம் ஒன்று 29 யூலையில் பரபரப்பாக இருந்தது. இத்தாலியில் மோரி என்ற நகரத்தில் இருந்த முதியோர் இல்லத்துக்கு வைகாசியில்,புதிதாக வந்த முதியவர் பெப்பின் Bepìn(92) அமைதி இல்லாமல் இருந்தார். அவரது பார்வையிலேயே அவர் அந்த இல்லத்தில் இருக்க விரும்பவில்லை என்பது தெரிந்தது. ஆனாலும், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்த்துப் பேசவோ தனது எண்ணத்தைச் சொல்லவோ அவர் விரும்பவில்லை. அவருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் இருந்த கட்டிலில் போய் அமர்ந்து கொண்டார். முதியோர் இல்லத்தில் அவர் யாருடனும் பேசிக் கொள்வதில்லை. தனியாக இருந்து பழையதை அசை போட்டுக் கொண்டிருந்தார். அவரது நடையைப் போலவே நாட்களும் மெதுவாக போய்க் கொண்டிருந்தன. ஆடி 29ந் திகதி முதியோர் இல்லம…

    • 5 replies
    • 991 views
  22. யேர்மனியில் முன்னாள் நாசிகள் வதை முகாமில் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்தும் புனித வேலையில் இறங்கி இருக்கிறார் ஒரு இந்துமதக் குரு. அதற்காக அவர் தேர்ந்தெடுத்திருந்த இடம், 500 பேர்கள் வசிக்கும் Springen என்னும் கிராமம். மொரீஸியஸ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட மஹாடேயோசிங் கோமல்ராம் (45) (Mahadeosingh Komalram)தான் அந்தக் குரு. ‘ஓம் சாந்தி’ பணிகளுக்காக தன் பெயரை சுவாமி விஸ்வானந்தா என மாற்றிக் கொண்டிருக்கிறார். 1998இல் ஐரோப்பா எங்கும் வலம் வந்த சுவாமி 2005இல் யேர்மனிதான் தனக்கு உகந்த இடம் எனத் தீர்மானித்து அங்கேயே தனது ஆச்சிரமத்தை அமைத்துக் கொண்டு ‘பக்தி மார்க்கம்’ என்ற பெயரில் தனது சேவைகளைச் செய்து கொண்டிருக்கிறார். போதைப் பொருள் பாவனை, பாலியல் தொல்லைகள், சுவிஸ் நாட்டு…

  23. இறினா பிலோற்சேர்கோவெற்ஸ் (Iryna Bilotserkovets) உக்ரைனில் பெரிதும் அறியப்பட்டவள். சத்திரச்சிகிச்சை நிபுணர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், மொடல் அழகி எனப் பல பின்ணணிகள் உள்ள மூன்று பிள்ளைகளின் தாய். ரஸியா, உக்ரைன் போர் தொடங்கி மூன்றாவது நாள் தனது மூன்று பிள்ளைகளுடன் Kiew வீதியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது நடந்த தாக்குதலில் படுகாயம் அடைந்திருந்தாள். அதிர்ஷ்டவசமாக அவளது பிள்ளைகள் எதுவித காயங்களும் இன்றி தப்பித்துக் கொண்டார்கள். தாக்குதலில் இறினா தனது ஒரு கண்ணை இழந்திருந்தாள். அவளுக்கு நாலு தடவைகள் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவள் இனி உயிர்வாழ்வது கேள்விக்குறிதான் என வைத்தியர்கள் சொன்ன போதும், வாழவேண்டும் என்று அவள் உறுதியாக இருந்தாள். யேர்மனிக்கு அழைத…

  24. முகநூலில் வந்த ஒளிப்படம் என்னுள் கடத்திய காட்சி. ஒரு வருடத்திற்கு முன்னர் பதிந்தது. முகநூலார் கேட்டதிற்கிணங்க மீள்பதிவு செய்தது. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0vqjpNu6Twx1sk4HFN7nh4fZfGcffZYYDVSsTZrEby8XLFA9nqm9Na537V2BNjQHTl&id=100083780391980&mibextid=Nif5oz

  25. கட்டுப்பாடற்ற வாழ்க்கைக்குள் இருந்தவள், முற்றிலுமாக மாறி வெற்றிகரமான ஒரு பெண்ணாக இப்பொழுது இருக்கிறாள். காரணம் அவளுடய மகன். சொனி டெய்லர்(39) அவுஸ்திரேலியா சிட்னியைச் சேர்ந்தவள் . ஒரு ஒன்லைன் நிறுவனத்தின் சொந்தக்காரி. மில்லியன் கணக்கில் இன்று சம்பாதிக்கும் அவளது இளமைக் காலம் நன்றாக இருக்கவில்லை. நியூ சவுத் வேல்ஸ்தான் அவளது இருப்பிடம். பெற்றோருடன் அங்கிருந்துதான் அவள் வளர்ந்தாள், படித்தாள். அவளிடம் எப்போதும் ஒரு பயம் கூடவே இருந்தது. அந்தப் பயம் வெளியிடங்களில் மட்டுமல்ல அவளது வீட்டுக்குள்ளேயும் அவளுடன் இணைந்திருந்தது. இந்த உலகம் தனக்குப் பாதுகாப்பானதுதானா? என்ற ஒரு அச்சத்துடன்தான் அவளது பள்ளிப் பருவம் போய்க் கொண்டிருந்தது. பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.