சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
995 topics in this forum
-
நாங்கள் சிங்களப்புலிகளாக மாறுவோம். தியாகி திலீபனின் நினைவுநிகழ்வை தடுத்த கமால் குணரத்தினவுக்கு சிங்கள மாணவி எச்சரிக்கை..! சிங்களப்புலி !!! https://www.facebook.com/100053472219030/videos/146270510498689
-
- 2 replies
- 1.6k views
-
-
இது கதையல்ல : அதிபரும் வெளிநாட்டுப்பணமும் ************************************************* இன்று ஒரு நண்பருடன் உரையாடும்போது அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. யாழ்ப்பாணத்திலும் இவ்விதம் ஒரு அதிபரா? என்று எண்ணத் தோன்றியது. ஒரு சமூகம் அக, புற காரணிகளால் தன்னளவில் பல மாற்றங்களைப் பெறுகிறது. அதன் பக்க விளைவு பல தனிமனிதர்களிலும் தாக்கங்களைச் செலுத்தவே செய்கிறது. மனிதர்கள்மீது திரும்பத் திரும்ப தவறுகளைச் சுட்டுவதை விட சரியான முன்னுதாரணங்களை முன்னிலைப்படுத்துவதே சிறந்தமுறையாக அமையும். குடாநாட்டிலுள்ள ஒரு பாடசாலைக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு பழையமாணவர் சென்றார். அவரின் நண்பர் அந்தப் பாடசாலையில் ஓர் ஆசிரியர். அவர் தனது நண்பரை பாடசாலை முழுவதும் …
-
- 6 replies
- 1.6k views
-
-
கற்க கசடற – மக்களும் கட்சிகளும்: பகுதி 1 ==================================== கொரோனாவுக்குக் கொஞ்சமும் பயப்படாமல் இலங்கை மக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்வதற்காக தமது உயிரையும் பணயம் வைத்து அரசியல்வாதிகள் பலர் பல லட்சங்கள், கோடிகளை செலவு செய்து ஒரு வழியாகத் தமது பாராளுமன்ற ஆசனத்தை உறுதி செய்து விட்டார்கள. சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் சிலர் இனி மாகாணசபை தேர்தலை இலக்கு வைக்கலாம் அல்லது காத்திருக்கும் கொக்காக 2025 பாராளுமன்றத் தேர்தலுக்குக் காத்திருக்கக்கூடும். இந்த முறை நடைபெற்ற தேர்தல் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 2010 க்குப் பின்னர் மகிந்தவிற்கு மீண்டும் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. அதுவும் அவர் புதிய கட்சியை உருவாக்கிய பின்னர் கிடைத்த ஐந்தே வெற்றி அவர…
-
- 8 replies
- 1.3k views
-
-
Nadarajah Kuruparan டீ.எஸ் சேனநாயக்க ஆரம்பித்த அஞ்சல் ஓட்டத்தின் அஞ்சல். கோலை, ருவான் விஜேவர்தனவிடம், ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்தார்.... #ஞாபகங்கள் - சுதந்திர இலங்கையினதும், ஐக்கியதேசியக் கட்சியினதும் பிதாமகர், டீ.எஸ் சேனநாயக்க ஆரம்பித்த அஞ்சல் ஓட்டத்தின் அஞ்சல். கோலை , இலாவகமாகப் பற்றிக்கொண்டு ஓடிய, முன்னாள் பிரதமரும், ஐக்கியதேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, தினேந்திர ருவான் விஜேவர்தனவிடம் (Dinendra Ruwan Wijewardene) கையளித்துள்ளார். டி.எஸ்.சேனநாயக்கா, டட்லிசேனநாயக்கா, ஜே.ஆர் ஜெயவர்த்தன, ரணில் விக்கிரமசிங…
-
- 0 replies
- 972 views
-
-
வடமாகாண சபைக்கு அனுப்பிய நிதி எவ்வகையிலும் திருப்பி அனுப்பப்படவில்லை ஆதாரத்துடன் விளக்குகின்றார் முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் 2018 ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையின் 32 நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் விருதுகளைப் (பதக்கங்கள்) பெற்றுக் கொண்டது. ஏனைய மத்திய மாகாண அமைச்சுக்கள் திணைக்களங்களை ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபையின் நிதி முகாமைத்துவம் சிறப்பாக நடைபெற்றது என முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன் ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய ஆட்சி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறையே இல்லாதொழிக்க வேண்டுமென அரசின் பல்வேறு அமை…
-
- 0 replies
- 545 views
-
-
மரணத்தினை கணநேரத்தில் வென்ற பன்றி இதனை அதிஷ்டம் என்பதா அல்லது, மரணத்தருவாயில், கிடைத்த கண நேர கடைசி சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திய செயலா? பதுங்கிக் காத்திருந்த சிறுத்தை, தனது வளையில் இருந்து வெளியே வந்த கொழுத்த பன்றி ஒன்றை போராடி, குரல் வலையினை பிடித்துக் கொள்கிறது. மெதுவாக ஆடி அடங்கப்போகிறது பன்றி. நல்ல தீனி, சிறுத்தை மகிழ்வுடன், இரை இறக்கும் வரை பொறுமையாக காத்திருக்கிறந்து. அப்போது, அங்கே ஒரு காட்டுநாய் வருகிறது. வந்த நாய், பன்றியின் திறந்திருந்த வாயினுள், நாக்கை கடிக்கும் நோக்கத்தில் போலும், தனது வாயை வைக்க லபேக்கெண்டு அதனை கவ்வி, தனது பலத்தினை பிரயோகித்து, பிரட்டிவிட, கழுத்தை பிடித்த சிறுத்தை, தடுமாற, கண நேரத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தில், பன்…
-
- 1 reply
- 1k views
-
-
அமெரிக்காவின் “கென்ராக்கி” மாநிலத்தின் லூயிவில் பகுதியில் ஆயுதங்கள் தரித்து நிற ரீதியாக வேறுப்பட்ட நிலையில் குழுக்களாக குழுமியும், அணிவகுத்தும் தத்தமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்திய மக்கள் திரள்! கறுப்பின மக்களை ஒடுக்குவதற்காக ஆயுதம் தரிக்கும் வெள்ளையர்கள்! அதைத் தடுத்து நிறுத்த ஆயுதம் தாங்கும் கறுப்பின மக்கள்!
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
Jaffna thevai · இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பணியாற்றியவரும் பிரித்தானியா விமானப் படையில் பணியாற்றிய வருமான ஒரே தமிழரான தமிழ் ஈழம் - உடுவிலை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் செல்லையா இரத்தின சபாபதி அவர்கள் தனது நூறாவது பிறந்த தினத்தை திருகோணமலையில் உள்ள அவரது தங்கு விடுதியில் கொண்டாடினார். ஆனந்தாக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி களில் கல்வி பயின்ற போதும் அவரது விளையாட்டுப் போக்கினால் பெற்றோருக்கும் இவருக்கும் ஒத்து வராத காரணமாக வீட்டை விட்டுப் புறப்பட்டு பதினெட்டுப் பேர்களில் ஒருவராக பிரித்தானியா விமானப் படைக்கு…
-
- 1 reply
- 959 views
-
-
Va Gowthaman 6h · நீண்டநேர - பலத்த யோசனைக்குப் பிறகே இப்பதிவினை இடுகிறேன். குற்றவாளி என்றுமே குற்றவாளிதான். முதலில் எங்கள் தமிழ் மரபுப்படி உயிரிழந்த ஒருவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 2008-9 காலக்கட்டங்களில் தாய்த் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருந்த தமிழினம் ஓலமிட்டு ஒப்பாரி வைத்து கதறி துடித்துக்கொண்டிருந்தது முள்ளி…
-
- 0 replies
- 674 views
-
-
Relationship: The state of being connected, by blood or marriage. 'Synonym. 'எனக்கு இரண்டு கோடி ரூபாய் சொத்து இருக்கு, எனக்கு யாருமே தேவை இல்லை' - இப்படித்தான் அந்த 65 வயது பெரியவர் ஆரம்பித்தார். கொஞ்சமா ஆல்கஹால் எடுத்திருந்தார் போல. நிலையில்லாமல் இருந்தார். ஒரு 15 நிமிடம் அவரோட 65 ஆண்டு கால வாழ்க்கையை பெருமிதத்தோட சொல்லி முடித்தார். சின்னவன் ஆஸ்திரேலியால இருக்கான். பொண்ணுங்க 2 பேர், ஒருத்தர் சென்னைல குடுத்திருக்கேன். இன்னொருத்தி பூனேல இருக்கா. மாப்பிள்ளை மிலிட்டரில இருக்கார். பெரியவன் என் கூட இருக்கான். நிறைவான வாழ்க்கை, என்றார். இவர் என் மருத்துவமனைக்குள் நுழைந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. மனைவியுடன் வந்தார், ஏதோ விசேஷ வீட்டுக்கு போய்விட்டு வந்திருப்பா…
-
- 3 replies
- 1.2k views
-
-
A/L தொழினுட்பவியல் மாணவர்கள் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியை உடையவர்களா? பிறரும் பயன்பெற பகிர்ந்து விடுங்கள். ஆசிரியர்களாக இருப்பின் இத்தகவல்களை மாணவர்களுக்கு கொண்டு போய் சேருங்கள். க.பொ.த உயர்தர தொழினுட்ப பிரிவு மாணவர்கள் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதி உடையவர்களா? என்று கேட்டால் பதில் ஆம் என்பதாக இருந்தாலும் அதனை முழுமைப்படுத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகள் காணப்படுகின்றன. அந்த நிபந்தனைகளை முற்கூட்டியே நிவர்த்தி செய்வதன் மூலம் விண்ணப்பிக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். விண்ணப்பிப்பதற்கும் தெரிவு செய்யப்படுவதற்குமான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் பற்றிய பூரண விளக்கம் மற்றும் வழி…
-
- 1 reply
- 826 views
-
-
எலு மொழி (Eḷu / Helu) —————————— எலு மொழி என்பது சிங்களத்தின் மூல மொழியாகக் கொள்ளப்படுகின்றது. கி.மு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மொழியாகும். சிலர் இது பிராகிரத மொழியின் ஒரு வடிவமாகும் என்கின்றனர். வேறு சிலர் இது ஒரு தமிழினை மூலமாக்கொண்ட ஒரு மொழி என்கின்றார்கள். கி.பி 6ம் நூற்றாண்டிற்கு முன்னர் சிங்களம் என்றொரு மொழி இருந்ததற்கான சான்றுகளே எதுவுமில்லை. அவ்வாறாயின் அவர்கள் முன்னர் எந்த மொழியினைப் பேசினார்கள்? என்றொரு கேள்வி எழும். ஒரு வகையான தமிழ்மொழியினையே (semi Tamil) பேசினார்கள். பின்னர் பௌத்த மத வருகையுடன் பாளி மொழியும், பின்னர் மகாஞான பௌத்தத்தினூடாக சமறயஸ்கிரதமும் அவர்களது மொழியில் செல்வாக…
-
- 0 replies
- 1.2k views
-
-
Mohan Sivarajah 19 ஆம் திருத்தத்தின் விசேடம் என்ன? ஜனாதிபதியாக ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் மக்களால் தெரிவு செய்யப்பட முடியாது. (முன்னர் இக்கட்டுப்பாடு இல்லை) ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும். (முன்னர் முடியாது) ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வைத்திருக்க ஏற்பாடுகள் இல்லை. (முன்னர் விரும்பி…
-
- 0 replies
- 652 views
-
-
Amirthanayagam Nixon நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? மரபுகள் தெரியாத செய்தியாளர்கள்- ------ - ---------------- --- ----------- ------- ------ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதம் இடம்பெற்றது. இந்த விவாத்தை எதிர்த்தரப்பே கோருவது வழமை. நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் (Parliamentary Standing Ordinance) பிரகாரம் எதிர்த்தரப்பு விவாதத்தைக் கோரும்போது எதிர்த்தரப்பில் இருந்தே விவாதமும் ஆரம்பிக்கப்படும். ஆனால் ஜனாதிபதியின் உரை மீதான விவாதத்தை அரசதரப்பு உறுப்பினரான நிபுண ரணவக்கவே கோரியிருந்தார். இவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் சகோதரியின் மகனாவார். நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு மாறாக இம்முறை ஜனாதிபதிய…
-
- 4 replies
- 857 views
-
-
ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக டிக்-டொக் நிறுவனம் வழக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்துக்கு எதிராக டிக்-டொக் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டொக் உட்பட பல்வேறு செயலிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி இந்தியா அவற்றுக்கு தடைவிதித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்-டொக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். அதன் பின்னர் கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதி ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவில், ‘அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு டிக்-டொக் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அரசு ஊழியர்களின் இருப்பிடங்களை கண்காணிக்கவும், தகவ…
-
- 0 replies
- 477 views
-
-
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், திருவல்லிக்கேணி மேன்சஷனில் எனக்கு பக்கத்து அறையில் தென்னக ரயில்வேயில் சிவில் எஞ்சினியராக பணிபுரியும் அன்பர் ஒருவர் தங்கியிருந்தார். ஆரம்ப தயக்கங்கள் மறைந்து அவருடன் சகஜமாக பேசத் தொடங்கியிருந்தபோது ஒரு நாள் அவரிடம் கேட்டேன். “ ஏன் சார், இப்போ தமிழ்நாட்டுல அடிக்கடி பாலங்கள் பழுதடைந்தது. உடைந்ததுன்னு நியூஸ் வருது. ஆனா ரயில்வே பாலம் உடைந்ததுன்னு நியூஸ் வரமேட்டேங்குது. ஆனா, ட்ரைன் நேருக்கு நேர் மோதல், சிக்னல் பெயிலியர் என்றெல்லாம் செய்திகள் வருது” எப்படி ரயில்வே பாலம் மட்டும் ட்ரைன் ஓடுற அதிர்ச்சிய தாங்கிக்கிட்டு நல்லா இருக்கு? அதற்கு அவர் சொன்னார், நாங்க பாலம் டிசைன் செய்யும்போதே, பாக்டர் ஆப் சேப்டி ஐந்தில் இருந்து பத்து வர…
-
- 6 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 580 views
-
-
பிரபாகரன் அவர்கள் தன் கையால் சமைத்துக் கொடுத்த கோழிக்கறி விருந்து. பிரபாகரன் அவர்கள் தன் கையால் சமைத்துக் கொடுத்த கோழிக்கறி விருந்து. அவரின் திருமணம், அவரோடு ஒரே அறையில் வாழ்ந்த அனுபவங்கள், அவர் பெயர் எழுதிய தோட்டா, மகன் பாலச்சந்திரனின் மரணம் போன்ற விடயங்களை பகிர்ந்து கொள்கிறார் ஆய்வறிஞர் மு. நித்தியானந்தம் அவர்கள்.
-
- 0 replies
- 1k views
-
-
பண்ணைக் கடற்கரையை நேசிப்போம் யாழ்ப்பாணம் கடல் எரிகளால் சூழப்பட்ட அழகான ஒரு சிறு நகரம். இது இயற்கை எமக்கு அளித்த வரம். பண்ணை கடற்கரையும் அதனை சூழவுள்ள பகுதிகளும் மிக அழகானவை. அநேகமான மக்கள் இப்போதெல்லாம் மாலை வேளைகளிலும், காலை வேளைகளிலும் உடற்பயிற்சிக்காக நடந்து செல்கிறார்கள். இதைவிட பொழுதுபோக்குக்காகவும் அமைதியை நாடியும் இக் கடற்கரையை இளையவர்களும், முதியவர்களும் பயன்படுத்துகிறார்கள். இது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய செயற்பாடுகள், இந்த பண்ணை வீதியை நடை ப்பயிற்சிக்காக பயன்படுத்துபவர்களில் நானும் ஒருவன். சூரியோதத்தையோ அல்லது சூரிய அஸ்தமனத்தையோ ரசித்தபடி நடந்து செல்லும் பொழுது நம்மையே அறியாமல் நாம் இயற்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் ஒரு குறை உண்டு. இந்த…
-
- 0 replies
- 939 views
-
-
1983 ஜூலை! இன்றைய பரம்பரை அறிந்துகொள்ளவும், இதற்கு முந்திய பரம்பரை எண்ணிப்பார்க்கவும், சிறுகதைபோல ஒரு நினைவுப் பகிர்வு! 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி! கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் இறுதியாண்டுப் பரீட்சை ( LL.B, Final) நடந்துகொண்டிருக்கிறது. பரீட்சை மண்டபத்தில், நான்காவது பாடத்தின் இரண்டாவது வினாத்தாளுக்கு விடை எழுதிக்கொண்டிருக்கிறேன். காலை ஒன்பது மணிக்குப் பரீட்சை ஆரம்பமானது. நண்பகல் பன்னிரண்டு மணிக்கு முடிவடையும். குனிந்ததலை நிமிரமுடியாமலும், கண்ணிமைக்கக் கணப்பொழுதும் கிடைக்காமலும் மூளையின் வேகத்துக்கு இயன்றவரை ஈடுகொடுத்தபடி கரம் பேனையை நகர்த்திக் கொண்டிருந்தது. பதினொரு…
-
- 3 replies
- 1k views
-
-
இந்த பதிவை எழுதும் போது என்னுள் இருக்கும் வலியும் அழுகையும் எனக்கு மட்டுமே தெரியும் !-Dr Karthik Bala: மூன்று நாட்களுக்கு முன் ராஜபாளையத்தில் என் சொந்த தாய் மாமாவிற்கு காய்ச்சல், இருமல் மற்றும் உடல் அசதி ஏற்பட்டது. காய்ச்சலுக்கு மருத்துவம் பார்த்தும் குணமாகாதலால், மதுரை மருத்துவக் கல்லூரியில் பணி புரியும் என்னிடம் வினவினார்கள். ராஜபாளையத்தில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் செக் அப் செல்ல சொன்னேன். அங்கே சென்று பார்த்த போது, OXYGEN LEVEL, கம்மியாக இருந்தது என்று கூறியவுடன், கொரோனா வாக இருக்கும் என்று ஊகித்தேன். அடுத்து சிறிது நேரத்திலேயே என் மாமாவின் நிலை இன்னும் மோசமாக அங்கேயே oxygen கருவி பொருத்தப்பட்டது. ராஜபாளையத்தில் தனியார் மருத்துவமனைகள் அவ்வளவு பிரமாதம் என…
-
- 0 replies
- 877 views
-
-
அன்புள்ள கமலா அக்காவிற்கு, உங்களுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது. நீங்க பச்சைத் தமிழச்சியா இல்லையா என்று கூட எனக்குத் கொஞ்சமும் தெரியாது. ஆனாலும் உங்கட பெயர் தமிழ் பெயரைப் போல இருப்பதால், நீங்க தமிழ் என்று நினைத்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஏனென்றா அக்கா, நாங்க சின்னனில் இந்திரா காந்தி கூட தமிழ் என்று யோசிச்சாக்கள் தானே. நேற்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் Joe Bidenன் துணை ஜனாதிபதி வேட்பாளராக நீங்கள் அறிவிக்கப்பட்டதும், ஏனோ எங்களுக்கு எங்கிருந்தோ வந்த ஒரு புளூகம் புக…
-
- 4 replies
- 1.4k views
-
-
என்னால் நம்ப முடியவில்லை, என் அன்பு நண்பனும், சகோதரனுமான தீபக் சதே இப்போது உயிரோடில்லை என்பதை, அவன் ஒரு விமானி, கடைசியாக கோழிக்கோடு வானூர்தி நிலையத்துக்கு துபாயிலிருந்து பெருந்தொற்றுக் காலத்தில் சிக்குண்டிருந்த இந்தியர்களை ஏற்றிக்கொண்டு பறந்து வந்தான். தரையிறங்கு சக்கரங்களை இயக்கும் கியர்கள் வேலை செய்யவில்லை, கோழிக்கோடு வானூர்தி நிலையத்தை மூன்று முறை சுற்றி எரிபொருளைக் காலி செய்தான், விபத்து நிகழ்ந்தால் விமானம் தீப்பிடித்து விடக் கூடாதல்லவா...அதற்காக... ஊர்தி நிலத்தில் அதிர்ந்து வீழ்ந்த போது, அவன் இஞ்சினை அணைத்து விட்டிருந்தான். மூன்றாவது முயற்சியின் போது அவனுக்குத் தெரிந்து விட்டது, இது கடைசிப் பறத்தல் என்று, ஆனாலும் ஏறத்தாழ பத்து குழந்தைகள் உட்பட 180 ச…
-
- 8 replies
- 1.3k views
-
-
2009 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையில் கூட்டமைப்பின் வகிபாகம்! - அம்பலப்படுத்துகிறார் சிவாஜிலிங்கம்
-
- 0 replies
- 737 views
-
-
மாமனிதர் இரவிராஜ் அண்ணர் அவர்களின் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் திருமதி. சசிகலா இரவிராஜ் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்து அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்குமானால் நியாயம் கிடைக்கும் வரையில் அவருடன் கட்சிபேதமின்றி குரல் கொடுத்து முன்னிற்பேன் என உறுதி கூறினேன்..
-
- 0 replies
- 663 views
-