சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
மாமூலன் வாடி ராணுவ புலனாய்வு துறையுடனான தொடர்பாடலில் ....மகிந்த நண்பரான சிங்கள வர்த்தகர் பிள்ளையான் கும்பல் கடத்தி காசு பறித்துக் கொலை செய்தனர். கடத்தலுக்குத் தலைமை தாங்கியது இனிய பாரதி . மகிந்த ராஜபக்சே தனது நண்பர் கடத்தப்பட்டது பற்றி அதிகாரிகளிடத்துக் கேட்டுள்ளார். யாருக்கும் தெரியாது என்று கூறினர். ராஜபக்சே பிள்ளையானிடத்து விசாரிக்கும்படி கேட்டுள்ளார். அவர் மறுத்ததும் அந்தக் கடத்தல் புலிகளின் தலையில் போடப்பட்டது. ...உளவுப் பிரிவைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ மற்றும் தாகீர் என்ற பொலிஸார் மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்துவிட்டனர். ... இனமொன்றின் குரல் …
-
- 0 replies
- 1.1k views
-
-
🌾இயற்கையிலிருந்து ஒரு வேதனையான உண்மை. 🦂 பிரசவத்திற்குப் பிறகு, ஒரு தாய் தேள் தனது குழந்தைகளைப் பாதுகாக்க முதுகில் சுமந்து செல்கிறது. இந்த நேரத்தில், அது சாப்பிடுவதில்லை, ஆனால் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது. நாட்கள் செல்லச் செல்ல, அது பலவீனமாகி, தனது குட்டிகள் உயிர்வாழ்வதை உறுதி செய்வதற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் அர்ப்பணிக்கிறது. குழந்தை தேள்கள் போதுமான அளவு வலிமையாக இருக்கும்போது, அவை தங்கள் தாயை விட்டு வெளியேறி தங்கள் சொந்த வாழ்க்கையைத் தொடங்குகின்றன. அதற்குள், அவள் பெரும்பாலும் சோர்வடைந்து பாதிக்கப்படக்கூடியவள் - அவர்களுக்காக தன்னை முழுமையாக தியாகம் செய்துவிட்டாள். அமைதியான தியாகத்தின் இந்த உருவம் பல பெற்றோர்கள் தங்கள் குழந்…
-
- 0 replies
- 303 views
-
-
Nishanthan Suvekaran பொய்சொல்லி சிக்கி கொண்ட கூட்டமைப்பினர்- ஆப்பிழுத்த குரங்காய் நிலை! சிறிலங்கா பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டமைப்பின் பேச்சாளரும் சிங்கள அரசின் அதிதீவிர நண்பருமான சுமந்திரின் சிபாரிசின் பெயரில் களமிறங்க இருந்த இலங்கையின் மனிதஉரிமையாளராக இருந்து தற்போது பதவிவிலகியிருக்கும் அம்பிகா சற்குணநாதன். இலங்கை ஐநா ஒப்பத்தில் இருந்து விலகுவதன்காரணத்தினாலேயே பதவிவிலகுவதாக சுமந்திரனும் அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த நிலை…
-
- 1 reply
- 1.2k views
-
-
கன்னியா வெந்நீரூற்றும் அழிந்து போகும் நாமும்..! கன்னியா வெந்நீரூறுப் பகுதியில் புதிதாக பெரிய புத்தர் சிலை ஒன்று திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. எனது தாய் தந்தை அவர்களின் தாய் தந்தை அதற்கு முன் இருந்தவர்கள் என இந்த இடம் முழுமையாக சைவர்களின் வழிப்பாட்டுத் தலங்களால் நிறைந்து இருந்தது. நாம் சிறுவயதில் சென்று நீராடி அருகில் உள்ள சிவன் கோவில் பூசைகளில் கலந்துகொள்வோம். இறந்தவர்களுக்கான பிதிர்கடன் செய்யும் இடமாகவும் இருந்தது. 180 வருடங்கள் பழமையான பிள்ளையார் கோவிலும் அங்குள்ளது. அந்த கோவில் இடம் முழுமையாக தனியாருக்கு சொந்தமானது. குறித்த உரிமையாளர் தனது ஏக்கர் கணக்கான காணியை பிள்ளையார் கோவில் கட்ட வழங்கியிருந்தார். யுத்தம் முடிந்த பின் படிப்படியாக இடங்களை கொள்ளையடிகும் நோக்குட…
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
நீதிக்கும் சமாதானத்துக்குமான, கேள்விகளின் காலம் - 1 – நடராஜா குருபரன்! #justice #peace #memories #peace_talk கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்குப் பின்பற்றப்படும் வழி முறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். ஒரு எண்ணம் சற்று சந்தேகத்துடன் முன்வைக்கப்படும்போது அது கருத்து எனப்படுகிறது. உறுதியாக முன்வைக்கப்பட்டால் அது கொள்கையாகிறது. சொன்னவருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்த பின்பும் பிறருக்கு அதன்மேல் உறுதிப்பாடு ஏற்படும் போது அது கோட்பாடாகிவிடுகிறது. முன் கூட்டியே தீர்மானிக்கப்படும் நம் கொள்கைகளில், மூலோபாயம் தந்திரோபாயங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவைப்படின் அவை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய உள்ளீடுகள…
-
- 0 replies
- 755 views
-
-
118 பக்கங்கள் அடங்கிய குடும்ப வன்முறைகள் பற்றிய அறிக்கை இன்று யேர்மனில் வெளியாகி இருக்கிறது. கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு குடும்ப வன்முறைகள் அதிகரித்திருப்பதை யேர்மனியின் 16 மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தெரிகிறது. யேர்மனி முழுவதிலும் மொத்தமாக 179179 குடும்ப வன்முறைகள் பொலீஸாரினால் பதியப் பட்டிருக்கின்றன. 2021ம் ஆண்டு கொரோனா தொற்று நோய் இருந்த காலகட்டத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு குடும்ப வன்முறை 9.3 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. Nordrhein-Westfalen மாநிலத்தில் 37141 வன்முறைகளும், Baden-Württemberg மாநிலத்தில் 14969 வன்முறைகளும் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் வன்முறைகள் குறைந்த மாநிலமாக Bremen(2615) மாநிலம் காணப்படுகிறது. …
-
- 3 replies
- 990 views
-
-
அரசியல் கட்சிகள் இரண்டு வகை. ஒன்று ஆட்சியை பிடிப்பது மட்டுமே குறிக்கோள் என்ற நோக்கத்தோடு எப்போதுமே அசுரத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவை. இரண்டாவது வகை, கொஞ்சம் செல்வாக்கோடு செயல்பட்டுக் கொண்டு கூட்டணி மூலம் ஏதாவது கிடைத்தாலே போதும் என்று காலம் தள்ளுபவை. இந்த இரண்டாவது வகை கட்சிகளிலேயே (A), (B) என உட்பிரிவு கொண்டவையும் உண்டு.. (2A) எப்படியாவது,ஏதாவது சில வகைகளில் சொந்தமாக நிதியைத் திரட்டி அதில் செயல்படும் கட்சி (2B) பெரிய கட்சிகளால் முதலீடு செய்யப்பட்டு நேரத்திற்கு ஏற்ப பயன்படுத்துவதற்காக உருவாக்கப்படும் ஸ்லீப்பர் கட்சி. சொந்தமாக நிதி திரட்டி செயல்படும் 2A கட்சிகளில் 2A(1) என ஒன்று உண்டு. 2A(1 "கூட்டணியில் கடைசி வரை உங்களோடு இருப்போம். நீங்களாக பார்த்து ஏதாவது செய்ய…
-
- 1 reply
- 322 views
-
-
முற்றத்து மல்லிகை "அக்குட்டியும் - பிச்சுமணியும்"--- தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள் *பேச்சு வழக்கில் வெளிப்படும் சிலேடைச் சொற்கள். --- ----- ----- ------ நகைச்சுவை தமிழுக்கே உரிய சிறப்பு. அக்குட்டி - பிச்சுமணி என்று அழைக்கப்படும் “Valvai Sulax” -“கஜன் தாஸ்” என்ற இருவரும் தொடர்ச்சியாக, தமது நகைச்சுவை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி வரும் கதாபாத்திரங்கள் யதார்த்தத்தை உணர்த்தி நிற்கிறது. “இடுக்கண் வருங்கால் நகுக" என்பது திருவள்ளுவர் வாக்கு. இதன் பொருள், "துன்பம் வரும்போது மனம் தளராமல் சிரிக்க வேண்டும் என்பதாகும். ஆகவே, துன்பத்தை வெல்ல மகிழ்ச்சியைவிட சிறந்த வழி வேறில்லை என்ற பொருளில் நகைச்சுவையின் மேன்மை அமைந்துள்ளது. மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தா…
-
-
- 3 replies
- 389 views
- 1 follower
-
-
அதென்ன குதிரை திறன்? ஏன் கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா? எனது பள்ளி நாட்களில் நான் இப்படித்தான் சிந்தித்தேன்! மிக அருமையான வினா! குதிரையை விட வேகமாக ஓடி, அடித்துத் தின்னும் வலிமை படைத்த, புலி, சிங்கம் ஆகிய வலிமையான விலங்குகள் பெயரில் திறன்-அலகு தீர்மானிப்பதுதானே இயல்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும்! இன்னும் சொல்லப்போனால், சிறுத்தைகள், ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும்! ஏன் இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு, குதிரைத்திறன் - HorsePower என்று சொன்னார்களோ? ஒருவேளை, திறன்-அலகு தீர்மானித்தவர்கள், சைவர்களாக இருப்பார்களோ? அப்போதும் உதைக்கிறதே! குதிரையைவிட வேகமாக ஓடும் மான்கள் இருக்க, குதிரைக்கு ஏன் ஓட்டு விழ வேண்டும்? ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும் சி…
-
-
- 4 replies
- 469 views
- 2 followers
-
-
செம்மணியில் புதையுண்டிருப்பது யார்.. நேரடி சாட்சியத்தின் திடுக்கிடும் உண்மைகள்! யாழ்ப்பாணம் - சிந்துபாத்தி செம்மணி மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு வரும் மனித எச்சங்கள் தமிழ் மக்களிடையே பேரதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையில், ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கங்களும் இராணுவமும் மேற்கொண்ட படுகொலைகளின் சாட்சியமே செம்மணி என குற்றஞ்சாட்டப்படுகின்றது. மறுபக்கம், செம்மணியிலிருந்து தோண்டப்படும் பச்சிளங்குழந்தை உள்ளிட்ட மனித உடலங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பினாால் கொன்று புதைக்கப்பட்டவை என கூறப்படுகின்றது. உண்மையில் யார் தான் இதன் பின்னணியில் இருப்பது, இத்தனை காலமும் மனதில் அவலங்களை சுமந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு இவ்வ…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
இனவழிப்பு, நினைவேந்தல், உரிமை மறுப்பு ================================== சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெற்றிகரமான செயல்பாடுகளில் ஒன்று பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்திசையும் வகையில் சிறுபான்மை இனத்தவர்களில் இருந்து பலரை ஈர்த்து வைத்திருப்பதாகும். அந்த அடிப்படையில் தான் நாம் பல விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும். அதுவே நாங்கள் சரியான முறையில் எதிர்வினையாற்ற வழி சமைக்கும். சம்பவம் ஒன்று: பேராசிரியர் சுரேன் ராகவன் இந்த வாரம் இலங்கைப் பாராளுமன்றில், கனடிய ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றில் உறுப்பினர் விஜய் தணிகாசலம் மே மாதம் தமிழர் இனவழிப்பு வாரம் அனுஷ்டிக்கும் பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பது தவறு, இலங்கையில் நடைபெறும் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்கிறார…
-
- 2 replies
- 1k views
-
-
யார்... எழுத்தாளர்? எழுத்தாளன் என்பவன் தான் எழுதுவதைவிட சிறந்தவனாக இருக்க வேண்டும் என்றார் ரஸ்சிய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி. ஆம். அவர் அப்படி இருந்தமையினால்தான் இன்று உலகம் போற்றும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கிறார். இன்று மார்க்சிம் கார்க்கியின் நினைவு தினமாகும்(18.06.1936). இவர்தான் உலகில் அதிக மொழிகளில் வெளியிடப்பட்ட புரட்சிகர “தாய்” நாவலை எழுதியவர். அன்றைய ரஸ்சிய ஜார் மன்னரின் மாளிகையை நோக்கி சுமார் இரண்டாயிரம் மக்கள் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் …
-
- 0 replies
- 1.4k views
-
-
கூடு விட்டு கூடு பூந்து… கிளீல பறந்து வந்த அருணகிரிநாதர் அதை நல்லூருக்கு மேல முகிலில center stand ஐப் போட்டு நிப்பாட்டீட்டு நேரத்தைப் பாத்தார் , மணிக்கூடு வேலை செய்யேல்லை. திடீரெண்டு நல்லூர் மணி கேக்க , “ ஐஞ்சு மணி ஆச்சிது, இப்ப சாமி உள் வீதி சுத்நும் “ எண்டு நெச்சபடி சுருதிப் பெட்டியோட கொஞ்சம் மெல்ல மெல்ல இறங்கி வந்தார். “ என்னப்பா நேரம் போட்டுது யாகம் பாக்க வேளைக்குப் போனாத்தான் இடம் கிடைக்கும்” எண்டு மனிசி அந்தரப் படுத்தேக்க நாலரை இருக்கும் . மற்றும் படி கேட்டாலும் கவனிக்காம இருக்கிற மனிசி கேக்க முதலே சிவப்புச் சால்வையை நீட்ட வெளிக்கிட்டுப் போனன். செட்டித் தெரு தடையில வாகனத்தை நிப்பாட்டீட்டு ஶ்ரீ முருகன் தண்ணீர்ப பந்தலால உள்ள ஓடிப் போக கையில சப்பாத்தோட நிண்ட…
-
- 0 replies
- 841 views
-
-
Covid-19: கொரோனா வைரஸ் உருவாக்கிய புதிய சொல்லாடல்கள்: சுய தனிமைப்படுத்தல், சமூக விலகல் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையில் விற்கப்பட்ட வெளவால் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. சீனாவில் ஆரம்பித்து வெகுவேகமாக உலகம் முழுவதும் பரவி தற்போது ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில், மையம்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பல ஆயிரக் கணக்கானவர்களைப் பலியெடுத்தும் இன்னும் பல்லாயிரக் கணக்கானவர்களை வதைத்தும் வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க முன்னரே அது மாறும் அளவுக்கு Pandemic ஆக உருவாகியுள்ள கொரோனா தொற்றுப்பரவரலைத் தடுக்கமுடியாமல் உலகநாடுகள் அனைத்தும்…
-
- 0 replies
- 764 views
-
-
மதுரை_வடை_ஃபேக்டரிகள்* *மதுரையில்* நிறைய வடைக் கடைகளை கடை என்பதை விட வடை ஃபேக்டரின்னே கூறலாம். சர்வ சாதாரணமாக 2000 வடைகள் தினமும் விற்கும் கடைகளே நூற்றுக்கும் அதிகமாக இருக்கும்.! அதில் தலையானது மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் இருக்கும் பாம்பே ஸ்வீட்ஸ்! சூரியன் உதிப்பதற்கு முன்பே அந்த சூரியன் போன்ற வெப்பத்துடன் தயாராகும் அப்பம் மதுரையின் அடையாளம் ஆகும் அதிகாலை 4 மணிக்கே இனிப்பு அப்பத்துடன் தனது நாளை துவக்குபவர்கள் சூரிய உதயத்திற்கு பின்பு அசால்ட்டாக.. உளுந்தவடை, மசால்வடை, காரவடை, வெங்காயவடை, சமோசா என வெரைட்டிக்கு மாறுவார்கள்.. ஒவ்வொன்றிலும் தலா 200 வடைகள் போடுவார்கள். அதிகாலை அப்பம் தன் வெப்பம் இழந்து ஆறியிர…
-
- 0 replies
- 841 views
-
-
Nadarajah Kuruparan "இழக்கும் சந்தர்ப்பங்கள் மீண்டும் கிடைப்பதில்லை" "தவறுகள் தொடர்ந்தால் வரலாறு மன்னிக்காது" மாகாணசபைத் தேர்தல் இடம்பெறுமா? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. அதிகாரப் பரவலாக்கம் குறித்து NPP யிடமோ அதன் மூலக் கட்சியான JVPயிடமோ தெளிவான நிலைப்பாட்டை காணமுடியவில்லை மாகாண சபை முறைமை என்பது ஒரு வெள்ளையானை என்பது அவர்களின் கருத்து. எனினும் அரசியல் அமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் இருப்பதனையும், தமிழ் மக்கள் அதனை போராடிப் பெற்றனர் எனவும் தோழர் அநுரமார திஸ்ஸநாயக்கா கூறியிருந்தார். இப்போ ஜனாதிபதியானதன் பின் அவர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவாரா என்பது தெளிவாகவில்லை. முன்னைய மாகாண சபைத் தேர்தலில் JVP போட்டியிட்டாலும் கொள்கை ரீதியாக மாகாண சபையை எதிர்த்தது. இதே …
-
- 0 replies
- 301 views
-
-
அண்மையில் ஒரு 17 வயதுப்பெண் கர்ப்பமாக வந்திருந்தார். கணவனுக்கு இருபது வயது என்றார். கணவன் என்ன செய்கிறார் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலைக்கேட்டு அதிர்ந்து விட்டேன். அவர் சொன்ன பதில், ` லண்டன் போக ட்ரை பண்ணிக்கொண்டிருக்கார்` லண்டன் மாப்பிள்ளை என்ற காலம் போய், லண்டனுக்குப்போக ட்ரை பண்ணுகிறார் என்பதே ஒரு வேலையாக உருவெடுத்துவிட்டது. இப்போதைக்கு செலவுக்கு என்ன செய்கிறீர்கள் என்றேன், ` அவருக்கு வெளிநாட்டில நிறையப்பேர் இருக்காங்க, அவங்க அனுப்புவாங்க` அவர் வெளிநாட்டுக்குப்போகத் தேவையான பல மில்லியன்களையும் அவர்களே கொடுக்க இருக்கிறார்களாம் என்றும் சொன்னார். கிட்டத்தட்ட இதை ஒத்த பல சம்பவங்களைக் அடிக்கடி காணக்கிடைக்கிறது. ஒரு இருபது வயது ஆ…
-
- 16 replies
- 2.8k views
-
-
இன்று வெள்ளிக்கிழமை (22/10/21), தனது “காலைக்கதிர்” மின்-ஏட்டில், நண்பர் வித்யாதரன், “இனி இது ரகசியம் அல்ல”, என்ற வழமையான அங்கத்தில் கொஞ்சம் நீட்டி நீளமாக ஒரு சம்பவத்தை எழுதியுள்ளார். அதை என் கவனத்துக்கு நியுசிலாந்து நண்பர் “வரதா” கொண்டு வந்துள்ளார். (செய்தி யாழ்ப்பாணத்திலிருந்து, நியுசிலாந்து ஓக்லன்ட் சென்று கொழும்புக்கு வந்துள்ளது.!) எனது கட்சி/கூட்டணியில் இன்று இல்லாத, “திரு. பிரபா கணேசனை சந்தித்து நான் அரசியல் பேசியுள்ளேன்” என்பதே செய்தி சுருக்கம். 1970 களிலிருந்து கொழும்பில் வாழும், யாழ் நல்லூரை சேர்ந்த எமது குடும்ப நண்பர் ஸ்ரீகாந்தாவின் தனிப்பட்ட விவகாரம் ஒன்றின் தொடர்பாக, பிரபாவை நீண்ட காலத்தின் பின், நண்பர் ஸ்ரீகாந்தின் அழைப்பின் பேரில் ச…
-
- 0 replies
- 706 views
-
-
கறுப்பு ஜூலை தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல் : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : கொல்லப்பட்ட தமிழர்களின் பல உடல்களை பார்த்தேன் என்கிறார் சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 12:44 PM சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா தமிழ் மக்களிற்கான நீதி அவர்களின் அரசியல் அபிலாஷைகளிற்காக தென்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் ஒருவர். வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காக போராடும் இடங்களில் எல்லாம் பார்க்ககூடிய தென்பகுதி முகம் அவர். கறுப்புஜூலை குறித்த அவரின் மனப்பதிவுகள். அவ்வேளை நான் சட்டபீட மாணவனாகயிருந்தேன், 24ம் திகதி நாங்கள் சட்டபீடத்தில் இருந்தவேளை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெரும் புகைமண்டலம் …
-
- 1 reply
- 246 views
- 1 follower
-
-
மதிப்புக்குரிய கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு! நாடு பூராவும் தாங்கள் செயலாற்றிவரும் கடற்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையின் வரலாற்றில் எக்காலமும் இல்லாத மிகப் பாரிய திட்டங்களாகும். இலங்கைத் தீவின் கடல்சார் பொருளாதார வருவாய்கள் மிகப்பாரியளவு இருந்தபோதும் கடந்தகாலங்களில் இவற்றை நாம் சரியாக அறுவடை செய்யவில்லை. இப்போ தாங்கள் அதிகாரத்துக்கு வந்தபின் புதிய பண்ணைமுறைத் திட்டங்களை அறிமுகப் படுத்தியும், உருவாக்கியும் வருகிறீர்கள். இயற்கைவள கடற்தொழில் முறைகள் இருந்தாலும், பண்ணைமுறைகளையும் உலக நாடுகள் நடைமுறைப் படுத்தித்தான் வருகின்றன. நாங்கள் இப்போதுதான் பண்ணைமுறை அபிவிருத்தியைக் கையில் எடுத்திருக்கின்றோம். நாட்டின் பொருளாதார அபிவ…
-
- 7 replies
- 963 views
-
-
பல வெள்ளை ஆடுகள் மத்தியில் ஒரு ஒரு கறுப்பு ஆடு மட்டும் இருக்கும் சிவப்பு நிற ஸ்வெட்டர் அணிந்து, இளவரசி டயானா (1961-1997) பொது வெளியில் 1981 இல் வர, பல புகைப்பட நிபுணர்கள் அவரை தமது கமராக்களில் படம் பிடித்துக் கொண்டார்கள்.. அன்றில் இருந்து அந்தக் கம்பளி ஸ்வெட்டர் பிரபலமாகி விட்டது. அந்த ஸ்வெட்டர் பழுதாகி விட, இளவரசி டயானா உடனடியாகவே புதிதாக இன்னும் ஒன்றை வாங்கிக் கொண்டார். அதில் இருந்து அந்த ஸ்வெட்டரில் அவர் அதிகம் விருப்பம் கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. இப்பொழுதும் இந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்வெட்டரை 200 யூரோக்களுக்கு வாங்கிக் கொள்ளலாம். சிவப்பு நிறம் என்று மட்டும் இல்லை பச்சை, நீலம் என பல வர்ணங்களிலும் இந்த ஸ்வெட்டர் Warm and Wonderful நிறுவனத்திடம் வி…
-
- 1 reply
- 352 views
-
-
இராமச்சந்திர மூர்த்தி.பா #உலகிலேயே_அதிக_அறிவுத்திறன்_கொண்ட_தமிழகச்_சிறுமி….!! உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…!! தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்.அதுவும் 24 மணி நேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர். இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்க…
-
- 0 replies
- 596 views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர்... இந்திரா பிரியதர்சினி, இந்திரா காந்தியானது எப்படி?? மறைந்த இந்திய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகள் 'இந்திரா பிரியதர்சினி நேரு' என்றில்லாமல் "இந்திரா காந்தி" ஆனதை படியுங்கள். நேருவின் குடும்பத்தில் "காந்தி" என்ற பெயர் எப்படி எப்போது எவ்விதமாக ஒட்டிக்கொண்டது? பாமரர்கள் பலரும் மகாத்மா காந்தியின் குடும்பத்தினர்தான் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சஞ்சய்காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி என்று நினைக்கின்றனர் இது முற்றிலும் தவறு. காரணம்... 1. மகாத்மா காந்திக்கும் இவர்களுக்கும் எந்த விதமான ரத்தசம்மந்த உறவும் இல்லை. காரணம்... 2. இந்திரா பிரியதர்சினி நேரு என்ற பெயர் …
-
- 0 replies
- 476 views
-
-
இஸ்ரேல் நாடு மிகப் பெரும் ராணுவ பலம் கொண்ட நாடு மட்டுமல்ல. அது உயர் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. அது விவசாயத்தில் பெரும் தொழில் நுட்ப புரட்சி செய்கிறது.
-
- 0 replies
- 905 views
-
-
மருத்துவப் பழம் வாழை இறக்க வந்தவன் ஆக்களே இல்லாத வீட்டை மாறி வந்திட்டனோ எண்டு யோசிக்க , “ஓம் தம்பியவை இங்க தான் இறக்குங்கோ”எண்டு வந்த பெரியவரை , “ அப்பா நீங்க சும்மா இருங்கோ வந்தவனுக்கு கொஞ்சம் கூடத் தாறம் எண்டா இறக்கி கட்டி விடுவாங்கள்” எண்ட மகளின்டை குரல் அவரை அடக்கிச்சுது. வாழை கட்டிக் கொண்டிருக்கேக்க வந்த வானில இருந்து பத்துப் பெடியள் இறங்க வீடே பரபரப்பானது. வந்தவங்கள் கமராவைத்தூக்கிக் கொண்டு போய் லைட்டைப் போட பொம்பிளை ஒரு மார்க்கமா வெளிக்கிட்டு வர , கலியாணம் தொடங்கப் போகுது நாங்கள் பிந்தீட்டம் எண்ட படி வாழைக்காரன் அந்தரப்பட்டான். “ஏன் இப்பிடி அரக்கப் பறக்க நிக்கிறீங்கள் கலியாணம் நாளைக்குத்தானே “ எண்ட படி ஐயா milo packet ஓட வந்து , “ஒண்டும் இல்லை இத…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-