கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
கருப்பு வர்ணங்கள் பலவுண்டு அதிலே எனக்கும் ஓர் இடமுண்டு என் பெயரோ கருப்பு என்பர் அதனால் என்னை விரும்புவோா் சிலருண்டு அபசகுனமாய் எண்ணி என்னை வெறுப்போரும் பலருண்டு இருந்தும் நான் கவலை கொண்டதில்லை ஏனென்றால் வர்ணங்களில் என்னை மட்டும் ஓர் கவிஞ்ஞன் கருப்புதான் எனக்கு பிடித்த கலரு என என்னை வர்ணித்து பாடியுள்ளான் ஓபாமா என்னும் கருப்பு மனிதன் வெள்ளை மாளிகையை அலங்கரித்த போது வெள்ளைமாளிகையில் கருப்பு நிலவாய் அண்றொரு நாள் நான் மிளிர்ந்தேனே அதனால் பேருவகை கொள்கின்றேன் என் பெயராய் இப்படிக்கு கருப்பாக ஈழநிலா
-
- 3 replies
- 1.2k views
-
-
தென்றலாய் வந்தது வசந்தகாலம்! *************************************** பொதிகையிலே பூத்தவளே வசந்தத்தின் வடிவழகே இதமான மயிலிறகே இளம் காற்ரின் உடல் அழகே உலகெல்லாம் நடைபயிலும் உத்தமியே இனியவளே இயற்கையின்.. படைப்பில் நீதான் இளமொட்டுத் தேவதையே. கன்ணுக்குத் தெரியாத இளம் புன்னகை தாரகையே விண் தொட்டு மண் தொட்டு விளையாடும் பெண்ணழகே கடல் தொட்டு கரை தொட்டு காவியங்கள் படைத்தவளே அகிலத்தில் உனைத்தானே அனைத்துயிக்கும் பிடித்ததுவே பஞ்சு போன்ற உன் மேனி பட்டாலே உணர்வு பொங்கும் பிஞ்சான உன் கையை பிடித்திழுக்க எமைத்தூண்டும் வஞ்சமில்ல உன் நெஞ்சால் வருடிவிட்டு போகையிலே நெஞ்சமெல்லாம் இனிக்குமடி நின்மதியோ பெருகுமடி நீ வந்து தொடும் போது பழய நினைவெல்லாம் வருகிறது நிலவொளியில் கடல்கரையில் காதலித்த பொழு…
-
-
- 3 replies
- 441 views
-
-
இறந்த.... காலநினைவுகளுடன்.. வாழ்வதை காட்டிலும்.... இறப்பது மேல்...... !!!
-
- 3 replies
- 861 views
-
-
கனவு பலிக்குமா? ********************** கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தி…
-
-
- 3 replies
- 1.3k views
-
-
எப்போது போலவே நான் இருந்த ஊர் இது இப்போ இல்லை நான் நடந்து திரிந்த பாதை இல்லை இது இப்போ இப்போ மனிதரையும் காணவில்லை சாலையில் இருந்த போதும் நகர்கிறது நம்பிக்கை மட்டும் நதி ஒன்று ஊர்ந்தது போல் இன்னும் ஓர் இயற்கையின் சங்கீத மொழிக்காய் காத்திருக்கிறது மனிதம் உயிர்த்து எழும் காலம் ஒன்றிற்காய் உன் மொழியோடு பேச நினைக்கிறது என் ஆன்மா.
-
- 3 replies
- 747 views
-
-
இலக்கில்லா சிறுகுருவி ------------------------------------- இந்த குருவியை எழுத எழுத என்று நினைத்து எழுதாமலேயே போய்க் கொண்டிருக்கின்றேன் இது ஒரு சின்ன சிட்டுக் குருவி தான் கொய்யா மரத்தின் கீழ் கொப்பில் நின்று அப்படியே பறந்து முருங்கையின் ஒரு கொப்பிற்கு அது போகின்றது அங்கிருந்து கண்ணாடி யன்னலில் பாய்ந்து அப்படியே அது சறுக்கி கீழே விழுகின்றது எழும்பி அது மீண்டும் பறந்து கொய்யா மரம் போகின்றது இப்படியே செய்து கொண்டு இடையிடையே நின்று செட்டைகளை விரித்து நீவி விடுகின்றது தன் வாலையும் அப்பப்ப ஆட்டிக் கொள…
-
-
- 3 replies
- 586 views
-
-
இந்த நடுநிசியில் ஒலமிடும் ஆந்தைகளின் சாபங்கள் செவி மடுத்தேன். உங்கள் கவியையுமா கோத்தா சிறையெடுத்தான்? நானும் சபிக்கின்றேன் எங்கள் கவியை சிறையிட்ட பாதகன்மேல் இடியாய் நரகம் இறங்க அறம்பாடுகிறேன். ஆசை மச்சான் புதுவை, . ”விமர்சிக்கிறாய் சகிக்கிறோம் எனெனில் நீ தேசபக்தன்” என்ற உன் தோழமையை எண்ணிக் கரைகின்றேன் தோழமையே உனது மொழி தோழமையே உனது வழி தோழமையே உன் கவிதை தோழமையே தத்துவமாய் எனக்கு தோழ்கொடுத்த பெருவாழ்வே வேடமில்ல நட்ப்பின் வேந்தனே ஊதுகிறேன் சங்கு உனைத் தின்ற கோழைக்கு.
-
- 3 replies
- 1.5k views
-
-
-
இவ்வுலகில் யாரும் பசியோடு இல்லை உலகில் அமைதி நிலவுகிறது எங்கும் சண்டை இல்லை ஈழத் தமிழரின் இனப்படுகொலையை ஐ நா விசாரிக்கிறது யூதர்களும் பலஸ்தீனர்களும் ஒருவரை மற்ரொருவர் மிகவும் நேசிக்கிறார்கள் சமாதானம் ஒரே தீர்வென்று இரேலியர்கள் விரும்புகிறார்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள் நேற்றைய விருந்தொன்றில் ஈஸ்டர் முட்டையை பரிமாறிக் கொண்டார்கள் ஆம் நம்புங்கள் முட்டாள்கள் நிறைந்த இவ்வுலகில் அறிவாளிகள் அனைவரும் கோமாளிகளே! தியா காண்டீபன்
-
-
- 3 replies
- 556 views
-
-
வாழ்க்கை ஒருவழிச்சாலை பயணத்தின் இடையே நாம் பலரைக் கடந்து போகிறோம் சிலர் தொடர்ந்து வருபவர்கள் பலர் கடந்து செல்பவர்கள் மேலும் சிலர் எம்மை உளவு பார்ப்பவர்கள் மனித மனங்கள் விசித்திரமானவை நட்சத்திரங்கள் போல் வித்தியாசமானவை துரதிர்ஷ்டவசமாக யாரும் பார்க்க முடியாதவை எல்லோரும் எல்லோரையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்ற தத்துவம் நாமறிவோம் …
-
-
- 3 replies
- 794 views
-
-
-
- 3 replies
- 1k views
-
-
இனிய பொங்கல் வாழ்த்துகள் ....... இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள் இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!! இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி..... இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து... இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க...... இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து...... இல்லறம் நல்லறமாக செழித்திட....... இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு...... இல்லத்தாரோடும் உறவுகலோடும்..... இன்முகத்தோடு பொங்கலை உண்டு..... இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்...... இனிய உறவுகளுக்கு இனியவனின்...... இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்…
-
- 3 replies
- 719 views
-
-
மீண்டெழுதல்-resilience-பா.உதயன் மனிதன் உலகத்தை தேடுகிறான் உலகம் மனிதனைத் தேடுகிறது தடைகளை உதைத்தபடி நம்பிக்கை இழக்காமலே மீண்டும் மீண்டெழ உலகமும் மனிதனும் காத்திருக்கிறது. பா.உதயன்
-
- 3 replies
- 1.2k views
-
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
நீங்கள் கெட்டவரா?நல்லவரா? ************************ அடுத்தவன் வாழ்வைக் கெடுத்தவன் அவனியில் அவனோ பெரியவன் எடுத்தவன் கொள்ளையடித்தவன் உலகினில் அவனோ உயர்ந்தவன். உழுதவன் உணவு படைத்தவன் ஊர்களில் உயிரே அற்றவன் உழைத்தவன் உணவு கொடுத்தவன் உறவுகளால் கால் மிதிபட்டவன். படித்தவன் பட்டங்கள் பெற்றவன் பட்டணியோடு வேலைக்கலைபவன் கால் பிடித்தவன் அரச வால் பிடித்தவன் கஸ்ரமில்லாமலே காசில் மிதப்பவன். கஞ்சா குவித்தவன் கற்பைக் கெடுத்தவன் மந்திரியோடவன் மதுக்கடைப் பெரியவன் லஞ்சம் பெற்றவன் ஊளல் புரிந்தவன் வஞ்சனைக் காரனே வாழ்வில் உயர்ந்தவன் நல்லவன் வாழ்வதேயில்லை-எனினும் நானிலம் போற்…
-
- 3 replies
- 1.7k views
-
-
இன்று தாய்மொழித்தினம். எமது உயிரினுமினிய தமிழன்னைக்காக நான் 21 பெப்ரவரி 2020 இல் எழுதிய கவிதையை இங்கு பதிவிடுகிறேன்.
-
- 3 replies
- 1k views
-
-
நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி ஓடுகிறது காலம் கொடிய கொரோனா எனும் உயிர் பறிக்கும் அவலத்தால் முன்னேற் பாடாய் பரவாது , தனித்திருக்க வைக்க படட மனிதரை ஏக்கம் வாட்டுகிறது துள்ளித்திட்ட திரிந்த பள்ளிப்பிள்ளை அடக்கி வைக்க படுகிறது சற்று விளையாட விடடால் கணினியும் கை பேசியுமாய் அலைகின்றனர் தூக்க நேரம் குழம்புகிறது சோம்பலும் சோர்வும் கூடவே கொறிக்கும் தீனிகளும் உடலைக் கெடுக்கிறது கண்டதையும் வாயில் போட்டு மெல்ல வைக்கிறது அம்மாவுக்கு வீட்டிலிருந்து வேலை, அப்பாவுக்கு குழந்தையை பராமரிக்கும் வேலை பொறுமையீனம் எட்டிப் பார்க்க எப்போதடா வெளியில்போவோம் என மனம் ஏங்குகிறது கொண்டாட்டங்களி…
-
- 3 replies
- 1.4k views
-
-
எப்படிச் சொல்வோம் எம் இழப்பை ஏதிலியாகி நாம் ஊரூராய் அலைகையில் எப்படிச் சொல்வோம் எம் இழப்பை பத்து ஆண்டுகள் பறந்தே போனது நடந்தவை அனைத்தும் மறந்தும் போனது நமக்கேன் நாடு என்றும் கேட்கிறார் நாடு காட்டிப் பிழைக்கும் எம்மவர் நன்றாய் இருக்குது நாடும் ஊரும் என்று சொல்லி எங்கும் திரிகிறார் எந்த இழப்பும் அற்ற எம்மவர் நாவாந்துறையில் பிடித்த மீனும் நண்டு கணவாயும் நல்லாய் தின்று நாடு நல்லாய் இருக்கென்று நாம் கூறலாமோ??? கோழைகள் போல் ஓடிவந்தவர் கோடிகளாய்க் கொட்டிக் கொடுத்து கொலிடே போக மட்டும் நாடாம் வெட்கம் கெட்ட தமிழர் நாங்கள் வேருடன் அழித்தவர் ஊர்கள் பார்க்க வெளிநாட்டில் இருந்து விருப்பாய் போகிறோம் வெடிகள் பட்டவர் முடமாய் இரு…
-
- 3 replies
- 929 views
-
-
சட்டமும் ஒழுங்கும் சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள் பின்பு ஏன் பிக்குமாரை பின் கதவால் திறந்து விடுகிறார்கள் . நீதியும் அரசியலும் என்ன தீர்ப்பை இலங்கை நீதியரசர்கள் எழுத வேண்டும் என்று ஏற்கனவே எழுதி இருப்பர் இலங்கை அரசியல் வாதிகள் . நீதி எ .வி .டைசியின் சட்ட புத்தகம் இலங்கையில் செல்லுபடியாகாது இங்கு நீதி என்று எங்கும் இல்லை . அரசியல் கைதிகள் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை அவர்கள் தமிழர்கள் என்பதால் அப்படித்தான் அந்த அரசியல் அமைப்பு எழுதி இருக்கிறது . பா .உதயகுமார் .
-
- 3 replies
- 1.8k views
-
-
அம்மா- ஜெயபாலன் போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையவாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா? தும்மினேன் அம்மா. அன்றி என்னை வடதுருவத்தில் மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ? * அம்மா அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் நம் முற்றத்து மரங்களில் மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? தம்பி எழுதினான். வலியது அம்மா நம்மண். கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள் வானில் ஒலித்த போதெலாம் உயிர் நடுங்கினையாம். நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம். * …
-
- 3 replies
- 858 views
-
-
-
- 3 replies
- 979 views
-
-
பெண்கள் கூடுதல் கருத்துக்களுடன் பாவிக்கும் ஐந்து சொற்கள் [FIVE WORDS WOMEN USE WITH MORE MEANING] "நல்லது [Fine] என்று 'என்னவள்' நயமாக உரைத்தால் நாகரிகமாக அவள் தானே சரி என்று சொல்வதை விளங்கி 'நானும்' விவாதத்தை நிறுத்தி நா அடக்கி மெல்ல நழுவினேன் அங்கிருந்து !" "ஐந்தே நிமிடத்தில் [5 mins] கட்டாயம் வருவேன் என்று கதவை மூடி 'என்னவள்' அலங்காரம் செய்தால் சந்தடி இல்லாமல் 'நானும்' ஒரமாய் இருந்து காப்பி குடித்து டிவியும் பார்த்து ரசித்தேன்!" "ஒன்றும் இல்லை [Nothing] என்று 'என்னவள்' மழுப்பினால், புயலுக்கு முன் …
-
-
- 3 replies
- 487 views
-
-
"◆என்◆இதயம்◆எரிகிறது◆" [நவீன கவிதை] "உன்னை நினைத்து என் இதயம் எரிகிறது! உன் இன்றைய காதலன் பொறாமை வாசனையை எனக்கு வீசுகிறான்!" "எதற்காக இப்படி செய்தாய்? கேட்டிருந்தால் எல்லாமே தந்திருப்பேனே 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'! " "எனக்கு நீ மட்டுமே வேண்டும் எடுத்திடு என் பணம் எல்லாவற்றையும் என் இதயம் எரிகிறது!" "உனக்கு 'நான் விரும்புகிறேன்' சொல்ல, நீயோ மறுபக்கம் திரும்பி என்னை விட்டுவிடு என்கிறாய் என் இதயம் எரிகிறது!" "என்னை பார்த்து அன்று சொன்னாய் விரும்புகிறேன், மணம் முடிப்பேன் என்று கனவ…
-
-
- 3 replies
- 1.8k views
- 1 follower
-
-
புலராத பொழுதென்று எதுகும் இல்லை கடக்காத துயர் என்று யாதும் இல்லை முடியாத பகை என்று ஒன்றும் இல்லை கூவாத குயில் என்று எங்கும் இங்கில்லை ஒரு நாளும் மறையாத ஒளி வேண்டினேன் ஒரு கோடி தவம் இங்கு நான் செய்கிறேன் ஆனந்த யாழோடு சுரம் தேடுறேன் அதனோடு தனியாக இசை மீட்கிறேன் அறமே தான் வாழ்வாக அதைத் தேடினேன் ஒரு போதும் குனியாத நிலை வேண்டினேன் அறிவோடு ஞானங்கள் தினம் தேடினேன் என்றும் யார் என்று எனைத் தேடினேன் கனவு காணாத மனிதரென்று எவருமில்லை காதல் பேசாத மொழி என்று எதுகுமில்லை காலம் சொல்லாத கதை என்று எதுகும் இல்லை கவிதை இல்லாத உலகு என்று இருப்பதில்லை சிற்பி செருக்காத சிலை என்று ஒன்றும் இல்லை சலங்கை ஒலிக்காத சுரம் என்று யாதும் இல்லை …
-
- 3 replies
- 524 views
-