கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
பசி பட்டினி பொருளாதாரத் தடை பெரும் போர் இழப்பு இதுவெல்லாம் புதிதல்ல ஈழத் தமிழருக்கு அதுவெல்லாம் கடந்து தான் நடந்து வந்தான் ஆனால் இவை எல்லாம் உங்களுக்கு புதிது தான் அன்று ஒரு நாள் அருகில் ஒரு தமிழ்க் குழந்தை பசி எடுத்து அழுத குரலும் கேட்கவில்லை பிள்ளைகளை தொலைத்து விட்டு பெரும் குரலாய் காடதிரக் கத்திய தாயின் கண்ணீரில் எழுதிய கதை ஒன்றும் உங்கள் காதுகளில் கேட்கவில்லை எதுகுமே கேட்கவில்லை ஈரமனம் எவருக்குமாய் இருந்ததாய் தெரியவில்லை அன்பும் அறமும் தர்மமும் கொண்ட அந்த தம்மபத புத்தனின் சிந்தனையும் உங்களுக்கு புரிந்ததாய் தெரியவில்லை கோபமும் கொலையுமாய் நல்லறிவை தொலைத்து விட்டு ஏதேதோ…
-
- 5 replies
- 1.4k views
-
-
இனிய தீபாவளி ------------------------ ஒரு ஆட்டை எப்படிக் கொல்வதென்று நாங்கள் கதைத்தோம் அதன் மூக்கையும் வாயையும் இறுக்கி மூடி பிடித்தல் ஒரு வழி தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு கழுத்தில் கீறுதல் இன்னொரு வழி தலையில் ஒரேயடியாக போடுதலும் ஒரு வழியே இப்படி சில வழிகள் இருக்கின்றன என்றனர் எப்படிக் கொன்றாலும் எட்டியும் பார்க்க மாட்டோம் என்றனர் பலரும் நானும் ஒழித்திருந்து மிளகாயும் வெங்காயமும் அரிந்தோம் ஒரு ஊர்ச் சந்தையில் இந்த வாரம் விற்ற ஆடுகளின் தொகை ஆறு கோடி ரூபா ஒரே மழை என்று அங்கே வியாபாரம் மந்தம் என்றார்கள் இப்படி இன்னும் நூறு சந்தைகளாவது இருக்கும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் இறந்த உயிர்கள் எப்படி இறந்தாலும் நேரே வைகுண்டம் போகுமாம் நரகாசுரன் கூட அப்ப…
-
-
- 14 replies
- 531 views
- 2 followers
-
-
இன்றும் அன்றும்..! ************** இன்டர் நெட்டை திறந்தாலே ஏதோ ஒரு விளம்பரம் இடை குறைப்பா எழில் அழகா.. தொந்தியா, வயிற்றில் தொல்லையா தூக்கமா-அது இல்லையா சுகரா,கொழுப்பா, சூம்பலா,வீங்கலா இதுபோன்று எத்தனை எத்தனை.. அத்தனைக்கும் மருந்து அவரவர் சொல்லி அதைசெய்,இதைசெய் அப்படிச் செய் இப்படிச்செய்-என ஆயிரம் அறிவுரை இந்தபழத்தை இதுக்கு சாப்பிடு என்றொருவர் இதைசாப்பிடதே இந்த நோய்க்கு என்றொருவர்.. படுக்கும் முறை நடக்கும் முறை பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டும் முறை சொல்லிச் சொல்லியே சுகநலம் உள்ளவரும் ச…
-
- 2 replies
- 1.1k views
-
-
இறந்த காலத்தில் வாழ்பவன் நிகழ்கால பிணம் ஆவான்.... எதிர்காலத்தில் வாழ்பவன் நிகழ்கால ஏமாளி ஆவான்.... நிகழ்காலத்தில் நிகழ் காலமாக வாழ்பவனே மனிதனாவான் @ கவிப்புயல் இனியவன் இறந்த காலத்தில்வாழ்பவன் நிகழ்கால பிணம் ஆவான்.... எதிர்காலத்தில் வாழ்பவன் நிகழ்கால ஏமாளி ஆவான்.... நிகழ்காலத்தில் நிகழ் காலமாக வாழ்பவனே மனிதனாவான் @ கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 702 views
-
-
அப்படியே நினைத்து பார்க்கவே .... பயமாக இருக்கிறது நம் காதலை .....!!! ஓடாமல் இருக்கும் மணிக்கூட்டில் நான் ... நிமிட முள்ளாய் ... இருந்தென்ன பயன் ....? அணைத்தேன் துன்பம் ... அழைத்தேன் இன்பம் நீ அருகில் இருப்பதை ... விட தூர இரு .....!!! ^ கவிப்புயல் இனியவன் முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை
-
- 14 replies
- 1.7k views
-
-
இன்றைய மது - ஜெயபாலன் * உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரை பொங்குவது புதிய மது. . அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது வேறு ஒருவன் காத்திருப்பான். நிச்சயம…
-
- 2 replies
- 462 views
-
-
திடீரென்று ஒரு நாள்மம்மல் பொழுதொன்றில்எல்லைப் பிரதேசத்தில் உள்ளஎன் வீட்டு வேப்ப மரத்தில்பறவை ஒன்று வந்துகுந்தி இருக்கத் தொடங்கியதுஅதன் ஈனஸ்வரமானபசிக்குரலைக் கேட்டுஎன் உணவில் சிறிதளவைஅதற்கு நான் வழங்கியும்இருந்தேன்,மறுநாள் கூடு கட்டவும்குடும்பமாயும் குழுமமாயும்வந்திருக்கவும் தொடங்கியது,என் நாளாந்தச் சமையலுக்காகவைத்திருந்த விறகுகளைகுச்சிகளாய்ப் பிரித்தெடுத்துகூடு கட்டுவதை நான்கவனித்தேன்,சில நாட்களில் முட்டை இட்டுக்குஞ்சும் பொரித்தது,அதன் பின்னர் ஒரு போதும் அதுஉணவு கேட்டுக் கத்தியதில்லைஎனக்குத் தெரியாமலும்தெரியவும் கூடஎன் சமையற் கட்டுக்குள்புகுந்து உணவுகளைஎடுக்கத் தொடங்கியதுஅதில் பலவந்தம் இருந்ததைநான் அவதானித்தேன்சொந்தம் கொண்டாடுவதையும், குஞ்சு பொரித்த காலங்களில்மரத்தின…
-
- 4 replies
- 1.6k views
-
-
என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. எனி வரும் காலம் பற்றி முளித்திருக்கவே வந்த கனவிது. இப்படியும் நடக்கலாம்..! ***************** வேலை ரோபோக்கள் வீடெங்கும் திரியலாம் விரும்பிய சமையலறை காணாமல் போகலாம் மூன்று வேளையுணவும் மாத்திரையாகலாம் முளித்திருக்க கதிர்வீச்சால் உறுப்பும் திருடலாம். சந்திரன் செவ்வாய்க்கு ரொக்கட் பறக்கலாம் சரித்திர தேடல்கள் குழி வெட்டிப்புதைக்கலாம் சுவாசிக்கும் காற்றும் காசுக்கு விற்கலாம்-எம் சுயசரிதை சொல்ல சிப்பொன்றும் வைக்கலாம். பிறப்பு வீதத்தை ஐம்பதால் குறைக்கலாம் பிறந்த பின் வீரத்தை கோழையாய்யாக்கலாம் வயோதிப மரங்களை ஊசியால் சாய்க்கலாம் வயது வரமுன்னே பெரியவர் போலாக…
-
- 3 replies
- 862 views
-
-
-
- 5 replies
- 922 views
-
-
இயற்கையே ஏன் இந்தக்கோபம்! *************************************** உழுதவன் விதைக்கும் காலம் உணர்விலே மகிழ்ச்சி பொங்கும் அழுதவன் வறுமையெல்லாம் அடங்குமே என நினைத்தான். வரம்பு நீர் உயற்ச்சி கண்டு வளர்கின்ற நெற்பயிரின் அருகிலே.. அதிகாலை தொட்டு ஆதவன் மறையும் மட்டும் உடலது உயிராயெண்ணி ஒன்றியே வாழ்ந்தான் வயலில். கடலலை அடித்தாற் போல காற்றிலே பயிர்கள் ஆட உளமது நிறைந்துழவன் உச்சத்தில் மகிழ்ச்சி கண்டான். நிறைமாத கெற்பனி போல் நெற்பயிர் குடலை தள்ள வறுமையும் கடனும் நீங்கி-நல் வாழ்கையை கனவில் கண்டான். மனைவிக்கு சாறியோடு மகளுக்கு வரனும்தேடி மகனுக்கு கல்வியூட்ட மனதினில் எண்ணம் கொண்டான். அடை மழை கட்டி வானம்-"டித்வா" அடித்தது புயலாய் நாட்டில் பெரு வெள்ளம் உட்புகுந்து பிரளையம் ஆச்சே வீட…
-
-
- 1 reply
- 127 views
-
-
பொருள் விசையும் போலத்தான் மனிதரும் காதலும்❤❤❤ இரு பொருட்களாகிய ஆணும் பெண்ணும் ஒரு நேர்கோட்டில் சீரான வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது விசையாகிய காதல் பொருட்களாகிய ஆணையும் பெண்ணையும் அவர்களது சீரான வாழ்க்கை முறையிலிருந்து மாற்ற முயற்சிக்கும் தள்ளும்,இழுக்கும்,வீழ்த்தும் அதுவே காதல்🤣 எந்த ஒரு விசையாகிய காதலுக்கும் சமமான எதிர் விசையாகிய காதல் உண்டானாலே அது வெற்றியளிக்கும் ஆணாகிய பொருளுக்கும் பெண்ணாகிய பொருளுக்கும் சமமான எதிர் விசையாகிய காதல் உருவாகினாலே அது நிலைக்கும் இல்லையெனின் ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு பொருளை விசை எனும் காதல் ஒருதலைக் காதல் எனும் கவலைக் கிடங்கில் இழுத்து வீழ்த்தும்,தள்ளும்🙄 நிறைகளை மட்டுமே கண்டு…
-
- 0 replies
- 462 views
-
-
உரக்கச் சொல்கிறோம் நாங்கள் அமெரிக்கர்கள்! இரண்டு கொடிய வைரஸ்கள் இப்போது அமெரிக்கர்களைக் கொல்கின்றன. ஒன்று கோவிட் 19, மற்றையது இனவாதம். இங்கே அனைத்துத் துப்பாக்கிகளும் சொர்க்கத்தை நோக்கி மட்டுமே சுடுகின்றன. எச்சரிக்கைக் காட்சிகளால் சிறகுகள் வெட்டப்படும் கறுப்பு பறவைகள் நசுக்கப்படும் மனிதத் தலைகள்... இங்கே, சட்ட உலகம் இருளில் ஆழ்த்தியத்தைத் தவிர வேறெதுவும் பேசாது இங்கே - யாரும் வரவேற்கப்படுவதில்லை. ஆட்சியாளர்களால் “வீட்டிற்கு செல்” என்ற சொல் தவிர “நீதி” என்ற சொல் உச்சரிக்கப்படுவதில்லை. மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் குற்றமேதுமின்றிப் பலர் சொர்க்கவாசலை நிறை…
-
- 10 replies
- 2.1k views
-
-
இருபது இருபது இளையவரே வருக வருக.. இன்பம் தந்து துன்பம் தொலைத்து இனிதாய் வருக வருக. இனி ஒரு காலை இவ்வவனியில் புதிதாய் உதிக்க வருக வருக இவ்வையகம் வெப்பம் தாழ்ந்து இனி குளிர் கண்டு இன்புற்றே நிற்க வருக வருக. இனிப் பல்லினமும் இன்பமாய்ப் பெருகி இச்சை கொள் பச்சை தந்து இவள் பூமகள் இனிதே வாழ வருக வருக. இழிசெயலாய் நெகிழிகள் பெருகி இனி இந்த தேசம் இருக்காது எனும் நிலை தொலைத்து இவ்வையகம் வாழ்வாங்கு வாழ இலைகுழை தான் போல் உக்கும் வகைகள் இனி பல்கிப் பெருகிப் புழங்க வருக வருக. இல்லை எனி நல்லார் இந்த நிலை இன்றி இங்கு இல்லை எங்கும் இருப்போர் நல்லோர…
-
- 4 replies
- 1.6k views
-
-
”காற்றரனாய்தீபத்தில் கூப்பிய கரம்போல்,அலைப்புறும் என்மீதுநம்பிக்கைகளும் விஞ்ஞானங்களூம்.” . இருமை.- வ.ஐ.ச.ஜெயபாலன்..நான் சிறுசாய் இருக்கையில்உலகம் தட்டையாய் இருந்தது.எங்க பாட்டிக்குத் தெரிந்த ஓர் அரக்கன்ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டிஒளித்து விட்டானாம்.அப்போதெல்லாம்பகல்தொறும் பகல்தொறும்ஏழு வண்ணக் குதிரைத் தேரில்சூரியன் வருகிற வழி பார்த்திருந்துபாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன்..ஒரு நாள் வகுப்பறையில்என் அழகான ஆசிரியைஉலகை உருண்டையாய் வனைந்துபிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள்.சூரியனை தேரினால் இறக்கிபிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள்.பின்னர் கல்லூரியிலோஆசிரியர்கள் பிரபஞ்சத்துள்கோடிகோடி சூரியன் வைத்தார்..இப்படியாக என்பாட்டியின் மானச உலகில்வாழ்வு மனசிலாகியது.கற்ற உலகி…
-
- 2 replies
- 1.2k views
-
-
இருள் மூடிய இலங்கை! ***************** இந்துமா கடலின் முத்து இயற்கையின் அழகின் சொத்து ஆட்சியர் உன்னை வித்து-இப்போ அனைவற்கும் பிடித்தது பித்து. கடல் மீது அழகாய் மிதந்தாய்-இப்போ கடன் மீது மிதக்குகின்றாய். உடல்க்கூறு வெட்டி வித்தார்-உன் உயிருக்கே கொள்ளிவைத்தார். பட்டிணியை சொத்தாய் வாங்கி பாரெல்லாம் நீ கையை ஏந்த நிற்கதியாய் விட்டபின்னும் நிற்கல்லையா? அவர்க்கு கதிரையாசை. -பசுவூர்க்கோபி.
-
- 2 replies
- 482 views
-
-
காதல்.......ஆனந்த கண்ணீரில்...ஆரம்பித்து.......ஆறுதல் கண்ணீரில்.....முடிகிறது..........!!!முகில்களுக்கிடையே....காதல் விரிசல்.......வானத்தின் கண்ணீர்......மழை..........................!!!நான்வெங்காயம் இல்லை....என்றாலும் உன்னை.....பார்த்தவுடன் கண்ணீர்....வருகிறது................!!!&கவிப்புயல் இனியவன்இறந்தும் துடிக்கும் இதயம்காதல் கஸல் (பதிவு 01)
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு சோடி அணுக்கவிதை 💙💙💙 உன் சிரிப்பில் கருகாமல்..... நெருப்பில் கருகியிருக்கலாம்.... காயம் தான் இருந்திருக்கும்.... வலி காலத்தால் இறந்திருக்கும்.... 💚💚💚 நீ பிரிந்து விட்டாய்... என்று பலமுறை.... சொல்லிவிட்டேன்.... சொறனை.... கெட்ட என் இதயம்... நீ வருவாய்யென..... கதவை திறந்துவைத்து... காத்துக்கொண்டு இருக்கிறது......! 💙💙💙 இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இலங்கை யாழ்ப்பணம்
-
- 15 replies
- 2.2k views
-
-
சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தகவிழாவின் ஒரு நாளில் எழுத்தாளர் சாருநிவேதிதாவை அங்கு போயிருந்த ஒரு வாசகர் ' என்ன சார், இப்படிச் சோர்ந்து போய் இருக்கிறீர்களே. மெலிந்தும் இருக்கிறீர்கள். உடம்புக்கு ஏதாவது ஆயிட்டுதா...........' என்று அக்கறையுடன் விசாரித்து இருக்கின்றார். அந்த வாசகரின் அக்கறைக்கு சாரு கொடுத்த பதில் நெத்தியடியையும் மிஞ்சியது. அந்தக் கேள்வியால் சாருவிற்கு எக்கச்சக்கமான கோபம் வந்துவிட்டது. இதற்கு ஏன் சாரு இவ்வளவு பதட்டப்பட வேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை. ஆனால் விளங்கவில்லை என்றவர்கள் மீதும் பாய்ந்திருக்கின்றார் சாரு.................🤣. ******************************************* இலக்கியச் சிக்கல் -----------------------------…
-
- 2 replies
- 351 views
-
-
இலக்கில்லா சிறுகுருவி ------------------------------------- இந்த குருவியை எழுத எழுத என்று நினைத்து எழுதாமலேயே போய்க் கொண்டிருக்கின்றேன் இது ஒரு சின்ன சிட்டுக் குருவி தான் கொய்யா மரத்தின் கீழ் கொப்பில் நின்று அப்படியே பறந்து முருங்கையின் ஒரு கொப்பிற்கு அது போகின்றது அங்கிருந்து கண்ணாடி யன்னலில் பாய்ந்து அப்படியே அது சறுக்கி கீழே விழுகின்றது எழும்பி அது மீண்டும் பறந்து கொய்யா மரம் போகின்றது இப்படியே செய்து கொண்டு இடையிடையே நின்று செட்டைகளை விரித்து நீவி விடுகின்றது தன் வாலையும் அப்பப்ப ஆட்டிக் கொள…
-
-
- 3 replies
- 585 views
-
-
இலங்கைக்கு சுதந்திரம் எனியாவது கிடைக்கட்டும்! *************************************************** கத்தும் கடல் நாற்திசையும் கரையமைத்து வேலிதந்து முத்தும்,மாணிக்கமும்,இரத்தினமும் மண்ணில் உள்ளடக்கி முல்லையும்,மருதமும்,நெய்தலும்,குறிஞ்சி பாலையென இயற்கையவள் எமக்களித்த எங்கள் தேசத்தை போத்துக்கேயன்,ஒல்லாந்தன்,பிரிட்டிஸ் ஆண்டுவிட்டு போகையிலே உம்மிடத்தில் எம் பொக்கிஷத்தை மலைகுடைந்து பாதை தந்து வருமான பயிர் நட்டு வீதி பல அமைத்து வீடுகட்டி கோட்டை தந்தான். நீங்களோ… முட்செடியும்,புதரும்,புற்றும்,கஞ்சாவும்,களவும்,போதையும் கொலையும்,கொள்ளையும்,இனத் துவேஷமும்-விஷமும் சுயநலமும்,மதமும்,மதச் சண்டையும்,இனக்…
-
- 0 replies
- 830 views
-
-
https://www.facebook.com/photo/?fbid=10160014474376950&set=a.10151018148611950&__cft__[0]=AZWx_ghLUGUfdOGsEGqD0O1RrbmZSPkuwd00JPoBavte-iCSNhoJyTSCQXr1UYWhV-IfMvhGBBK_meknfAjNWTrbLXB-T-Q0GYuAVKZeZ0sps0QZ0BAQIgjnY16eW-KRdPc&__tn__=EH-R இலங்கைத் தலைமையின் இரங்கற் கூக்குரல் ஐயாமாரே ஐயாமாரே மொய்யாய் ஏதும் போட்டுப் போங்கோ பணச்சடங்கு நடத்திறம் பார்த்து ஏதும் செய்யுங்கோ பெரிய இடமென்று பிச்சைக்குப் போனால் கரியை வழிச்சுக் கையில கொடுக்கினம் தானத்தைப் பெற்றுக்கொண்டு இனவாதம் பேசியவை …
-
- 2 replies
- 943 views
-
-
சட்டமும் ஒழுங்கும் சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள் பின்பு ஏன் பிக்குமாரை பின் கதவால் திறந்து விடுகிறார்கள் . நீதியும் அரசியலும் என்ன தீர்ப்பை இலங்கை நீதியரசர்கள் எழுத வேண்டும் என்று ஏற்கனவே எழுதி இருப்பர் இலங்கை அரசியல் வாதிகள் . நீதி எ .வி .டைசியின் சட்ட புத்தகம் இலங்கையில் செல்லுபடியாகாது இங்கு நீதி என்று எங்கும் இல்லை . அரசியல் கைதிகள் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை அவர்கள் தமிழர்கள் என்பதால் அப்படித்தான் அந்த அரசியல் அமைப்பு எழுதி இருக்கிறது . பா .உதயகுமார் .
-
- 3 replies
- 1.8k views
-
-
-
- 3 replies
- 867 views
-
-
-
- 2 replies
- 688 views
- 1 follower
-
-
https://www.facebook.com/photo/?fbid=10159991441351950&set=a.10151018148611950 இலங்கையை ஆள யார்வேண்டும்? அற்பனாய், குடும்பத்துள்ள அனைவரும்சேர நாட்டை விற்பனை செய்திடாத வீரனாயொருவன் வேண்டும் இனமுரண்பாடு தன்னை என்றுமே அணுகவொட்டா குணமுடையோனாய் கொள்கைக் குன்றென ஒருவன்வேண்டும் புத்தனின் மார்க்கம்தன்னைப் புனிதமாய்யேற்று அந்தச் சத்திய வழியிலேகும் தருமனாயொருவன் வேண்டும். இத்தனை தகுதியோடும் இலங்கையில் யாருமுண்டா? அத்தனைபேரும் சொத்தை, ஆளவே தகுதியில்லார். நல்லியல்பிழந்தோர் கெட்ட நடத்தையர் போலிவேசப் புல்லியர், பொய்யர்நாட்டின் புகழினைக் கெடுத்த தீயோர் இல்லையே ஒளியெமக்கென் றிருண்டதோர் காலம்கண்டு சொல்லிட மக்கள்தங்கள் சொகுசுக்காய் வாழ்ந்தகீழோர் …
-
- 6 replies
- 804 views
-