கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
இன்பத்தில் மகிழ்ந்து துன்பத்தில் துவண்டு வாழ்க்கையே முடிந்ததென அலைபாயும் மானிடா, சோகங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல மகிழ்வான தருணங்களை எண்ணிப்பா பார் கட்டிளம் காளையாய் மண மேடையில் மகிழ்வை அமர்ந்திருந்த தருண ங்கள் உறவுகளின் வாழ்த்துமழையில் பூரித்த தருணங்கள். அன்பு மனையாள் உன் உயிர் சுமந்த சேதி வாய் மலர்ந்த இன்ப அதிர்வு வினாடிகள் கருவாகி உருவாகி ஜனித்து துணி பொதிந்து சிறு மலராக குறு வென்ற பார்வையில் பிஞ்சு விரல்களும் எட்டி உதைக்கும் கால்களையும் கொண்டு பொக்கிஷமாய் உன் கை சேர்ந்த தருணங்கள். "அப்பா "என பதவி கொடுத்த குழந்தைகளை கண்டு குடும்ப பொறுப்போடு மனைவி மக்களை …
-
- 5 replies
- 870 views
- 1 follower
-
-
பாதைகள் மாறினோம் ஆனால் ஒரு வழியாய் இணைக்கிறது வாழ்க்கை... பயனற்ற யாக்கையை பயன்படுத்தி வீடுபேறு அடைவது பேரறிவின் நிலை மூலம் அறிந்த பின் முக்தி கிடைப்பது முதிர்ச்சி நிலை... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 869 views
-
-
-
- 3 replies
- 867 views
-
-
என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. எனி வரும் காலம் பற்றி முளித்திருக்கவே வந்த கனவிது. இப்படியும் நடக்கலாம்..! ***************** வேலை ரோபோக்கள் வீடெங்கும் திரியலாம் விரும்பிய சமையலறை காணாமல் போகலாம் மூன்று வேளையுணவும் மாத்திரையாகலாம் முளித்திருக்க கதிர்வீச்சால் உறுப்பும் திருடலாம். சந்திரன் செவ்வாய்க்கு ரொக்கட் பறக்கலாம் சரித்திர தேடல்கள் குழி வெட்டிப்புதைக்கலாம் சுவாசிக்கும் காற்றும் காசுக்கு விற்கலாம்-எம் சுயசரிதை சொல்ல சிப்பொன்றும் வைக்கலாம். பிறப்பு வீதத்தை ஐம்பதால் குறைக்கலாம் பிறந்த பின் வீரத்தை கோழையாய்யாக்கலாம் வயோதிப மரங்களை ஊசியால் சாய்க்கலாம் வயது வரமுன்னே பெரியவர் போலாக…
-
- 3 replies
- 862 views
-
-
நயாகராவே என் நாயகியே..! ஈழத்து ஒரு மூலையில் இருந்த போதே ஒருதலைக் காதல் உன் மேலே என்றோ ஒரு நாள் சந்திப்போம் காதலை அன்று சொல்ல நினைத்திருந்தேன். கொலண்டிருந்து பறந்து வந்தேன் நான்கு பனை உயரத்தில்-நீ இருந்து பார்த்தாய் இருநாடுகளுக்கான இதயம் நீ என்றாலும்-என் கனவுக்கன்னியே கலங்காத தெளிந்த உன் வெள்ளை மனம் என்னை கொள்ளை கொண்டதடி வானவில்லாய் உன் புருவம் வற்றாத ஜீவனாய் உன் உயிரோட்டம் அமெரிக்காவில் தலை வைத்து கனடாவில் கால் பதித்து-நீ ஆடும் மயில் ஆட்டமோ என்றும் காணாத …
-
- 7 replies
- 861 views
-
-
இறந்த.... காலநினைவுகளுடன்.. வாழ்வதை காட்டிலும்.... இறப்பது மேல்...... !!!
-
- 3 replies
- 861 views
-
-
தேசம் சுமந்தவர்கள்-பா.உதயன்- I am building this bridge for him!” உலகத்தின் இருள் இன்னும் மறையவில்லை மானிடத்தின் அழகிய வாழ்வை எல்லாம் ஏதோ ஒன்று பறித்து செல்கிறது .தங்கள் இறுதிக் கால வாழ்வை அமைதியாக களிக்க வேண்டிய காலத்தில் எதிர்பாராதவகையில் முதியவர்களை பறித்து எடுத்துப் போகிறது இருள் சூழ்ந்த காலம் ஒன்று.இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக இந்த நகரங்களை தங்கள் தோள்களால் சுமந்து எழுப்பியவர்கள்.இதை நினைக்கும் பொழுது எல்லாம் அமெரிக்க கவிஞர் Will Allen Dromgoole எழுதிய (The Bridge Builder )பாலம் கட்டும் முதியவர் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது .ஒரு முதியவர் எந்த வலிகளையும் பார்க்காமல் பாலத்தை கட்டிக்கொண்டு இருக்க அதன் வழியால் சென்றவர் அவரை பார்த்து ஏ முதியவரே நீ இந்த உல…
-
- 0 replies
- 858 views
-
-
அம்மா- ஜெயபாலன் போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையவாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா? தும்மினேன் அம்மா. அன்றி என்னை வடதுருவத்தில் மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ? * அம்மா அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் நம் முற்றத்து மரங்களில் மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? தம்பி எழுதினான். வலியது அம்மா நம்மண். கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள் வானில் ஒலித்த போதெலாம் உயிர் நடுங்கினையாம். நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம். * …
-
- 3 replies
- 858 views
-
-
தமிழீழ மூச்சே எதுக்கம்மா போனாய் முள்ளி வாய்க்கால். ஊரின் பெயரே உன்னை எச்சரிக்கவில்லையோ... இல்லை.. முள்முடி தரித்த தூதரின் நிலை போல் முள்ளி மேல் நடக்கப் பிரியப்பட்டனையோ..?! சத்திய சோதனைக்கு சுய பரிசோதனைக்கு அதுவா வேளை..??! நாலாம் இராணுவ வல்லரசையே வன்னிக் காட்டுக்குள் கட்டிப் போட்டு கால் பறித்து கதறி ஓட வைத்த அனுபவம் இருந்தும்.. ஆழ ஊடுருவல் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்ததுக்காய் எதுக்கம்மா காலி செய்தாய் காட்டை..! இன்று வன்னிக்காடுகள் கண்ணீர் விடுகின்றன காவல் தெய்வங்கள் இல்லா நிலையில் தம் கால் தறிபடும் தறிகெட்ட தனம் தலைவிரித்தாடுவதால்.…
-
- 0 replies
- 855 views
-
-
"ஓங்கார நாதமாய் நெஞ்சை நிறைத்தாய்" "ஒவ் வொரு வளைவு நெளிவும் ஒளிவு மறைவற்ற உன் பேச்சும் ஒழுங்கான உடையும் அதன் பளபளப்பும் ஒய்யாரமான நடையும் அழகின் அழகே" "தூங்கையிலே உன் சிந்தனை கொண்டு தூய்மையான காதலை உனக்கு சொல்ல தூரிகை கொண்டு உன்னை வரைந்து தூது அனுப்புகிறேன் கனவில் தினம்" "உச்சங் கொண்டையும் கரும் விழிகளும் உகவைதரும் உன் உடல் வனப்பும் உள்ளம் கவரும் உன் புன்னகையும் உரிமை கொண்டு என்னை அழைக்கிறது" "புயலாய் மோகம் மழையாய் காதல் புரண்டு ஓடும் வெள்ளமாய் ஆசை புரியாத உணர்வு கண்களில் ஏக்கம் புதுமை பெண்ணின் புன்னகை காண" …
-
- 0 replies
- 854 views
-
-
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?" "உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே!" "சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று சொக்கி போகும் பேரழகு பெற்று சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?" "ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?" "அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு அலங்காரம் செய்து க…
-
-
- 7 replies
- 851 views
-
-
-
தடுப்பூசி வரும் வரை..... தனிமைப்படுத்தலே மருந்து..... ! கட்டிப்பிடிக்காதே..... கால் கை கழுவி உள்ளே வா...... ! குடும்பத்தோடும் தனித்திரு.... கூட்டம் கூடி பேசாதே... ! கிடைப்பதெல்லாம் உண்ணாதே.... கீரை வகைகளை உண்...! இதை விட கொடியநோய்க்கு... கொரோனா ஒரு பயிற்சியாகும்...... !!! +++ கவிப்புயல் இனியவன் மணிபல்லவம் யாழ்ப்பாணம் " கவிதைகள் தொடரும் "
-
- 1 reply
- 843 views
-
-
தேசிய தலைவர் பற்றி சிங்கள சகோதரனின் கவிதை. දශක තුනක් පුරා දිවයිනේ සියලු ආක්රමණ කල්දැමුවේ ඔබයි. ඔබ නිහඬව දශකයක්වත් ඔබට මුහුණ දීමට නොහැකි වී ඇත. එබැවින් ඔබ දිවයින මුදාගත් ආරක්ෂක නිලධාරියා ය. දිවයිනේ අනෙක් පැත්ත ආරක්ෂා කරන මුහුදු කොල්ලකරු ඔබම වේ. සියලු සීමා මායිම් රකින මායිම් இத்தீவுக்கு நிகழவிருந்த அத்தனை ஆக்கிரமிப்புக்களையும் மூன்று தசாப்தகாலம் தள்ளிப்போட்டவர் நீங்கள். நீங்கள் மெளனித்து ஒரு தசாப்தத்தைக்கூட சுயமாக எதிர்கொள்ளமுடியவில்லை இத்தீவாரால். எனவேநீங்களே இத்தீவிற்கு சுதந்திரமளித்த காவலன். நீங்களே தீவின் எக்கரையும் காத்துநின்ற கடற்தேவன். நீங்களே எல்லா எல்லைகளும் காத்துநின்ற எல்லைத்தெய்வம். உங்கள் இருப்பு தமிழ் தேசியத்தை மட்டுமல்ல சிங்கள…
-
- 4 replies
- 842 views
- 1 follower
-
-
வெறுப்பினால் எதையும் வெல்ல முடியாது அன்பினால் மட்டுமே அது முடியும். Hatred does not cease through hatred at any time. Hatred ceases through love. This is an unalterable law.” – Buddha —————————————————————————————————————— மண்ணைத் தின்னும் ஆசையோடு-பா.உதயன் இலங்கையில் இப்போ வட கிழக்கில் பேரினவாதம் என்ற பெரும் பேய் மதம் என்ற பெயரில் மண்ணை தின்று கொண்டிருக்கிறது அமைதியாய் அரச மரத்தடியில் இருந்த புத்தரை அங்கும் இங்குமாய் அந்தப் பேய் அவர் அமைதியை குலைத்து இழுத்துத் திரிகிறது பாவம் புத்தர் என்ன செய்வதென்று தெரியமால் இன்னும் அமைதியாகவே இருக்கிறார் அரச மர நிழலோரமாய் அமைதியையும் அன்பையு…
-
- 1 reply
- 842 views
-
-
"பூவாசம் வீசுதே" "பூவாசம் வீசுதே நீலக் கருங்குயிலே பூத்து குலுங்குதே புன்னகை உன்னிலே! பூவையர் கண்களும் உன்னை நாடுதே பூரண சந்திரனும் வெட்கித் தலைகுனியுதே!" "மஞ்சள் ஆடையில் செக்கச் சிவந்தவளே மருண்ட விழியால் பூரிப்பு தாராயே! மகிழ்ச்சி பொங்குதே இடுப்புச் சிறுத்தவளே மடவரல் இடையை கூந்தலும் வருடுதே!" "மனம் மயக்கும் அழகு மலர்களே மணம் வீசி இதயத்தை தொடுகிறாயே! மங்கையின் கையில் ஏன்தான் போனாய் மந்திர மொழியால் உன்னை ஏமாத்துகிறாளே!" "பக்குவமாக இருந்து பூவை முகர்ந்து பல்வரிசைக் காட்டி சித்தம் கலக்குகிறாளே! பவளக் கொடியாளே உதட்டு அழகியே பல்லாயிரம் பூக்களும் உனக்கு நிகரில்லையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தி…
-
- 0 replies
- 841 views
-
-
மிலேனியதின் 21 வயது விடலையே வருக வருக ................... அழிவை ஏற்படுத்தாமல் அன்பை பெருக்கிடவருக வருக..! ஆக்ரோயத்தை காட்டாமல் ஆனந்தத்தை ஏற்படுத்த வருக வருக ....! இழப்புகளை ஏற்படுத்தாமல் இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் ஈகையை வளர்த்திட வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்உள்ளம் மகிழ்ந்திட வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் ஊர் செழிக்க வருக வருக ..!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் ஏற்றங்களை தந்திட வருக வருக .....!!! ஐயத்தை தோற்றுவிக்காமல் ஐக்கியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஒற்றர் வேலைகள் பார்க்காமல் ஒற்றுமையை ஏற்பட…
-
- 1 reply
- 838 views
-
-
-
- 0 replies
- 836 views
-
-
"சயனகோலம் அவளின் அழகு கோலம்" "சயனகோலம் அவளின் அழகு கோலம் சரிந்த படுக்கையில் தேவதை கோலம் சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து சங்கடம் தருகிறது அவளின் பார்வை" "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில் சற்று நானும் என்னை மறந்தேன்" "சக்கர தோடு கழுத்தை தொட சடை பின்னல் அவிழ்ந்து விழ சலங்கை கால் இசை எழுப்ப சங்காரம் செய்யுது இள நகை" "சகுனம் பார்த்தே வெளியே வருவாள் சஞ்சலம் தந்து பலரை வருத்துவாள் சகிதமாய் தோழிகள் சூழ உலாவுவாள் சந்தோசம் பொங்க நானும் ரசிப்பேன்" "ச…
-
- 0 replies
- 834 views
-
-
தையில் பிறப்பாய் மாசியில் குளிர்வாய் பங்குனியில் உலர்வாய் சித்திரையில் புலர்வாய் வைகாசியில் மிளிர்வாய் ஆனியில் அடிப்பாய் ஆடியில் கூழல்வாய் ஆவணியில் மங்குவாய் புரட்டாதியில் நனைவாய் ஐப்பசியில் பொழிவாய் கார்த்திகையில் சுடர்வாய் மார்கழியில் வீழ்வாய்..! ஆண்டே இது தான் ஆண்டவர் வரலாறு.
-
- 0 replies
- 834 views
-
-
இலங்கைக்கு சுதந்திரம் எனியாவது கிடைக்கட்டும்! *************************************************** கத்தும் கடல் நாற்திசையும் கரையமைத்து வேலிதந்து முத்தும்,மாணிக்கமும்,இரத்தினமும் மண்ணில் உள்ளடக்கி முல்லையும்,மருதமும்,நெய்தலும்,குறிஞ்சி பாலையென இயற்கையவள் எமக்களித்த எங்கள் தேசத்தை போத்துக்கேயன்,ஒல்லாந்தன்,பிரிட்டிஸ் ஆண்டுவிட்டு போகையிலே உம்மிடத்தில் எம் பொக்கிஷத்தை மலைகுடைந்து பாதை தந்து வருமான பயிர் நட்டு வீதி பல அமைத்து வீடுகட்டி கோட்டை தந்தான். நீங்களோ… முட்செடியும்,புதரும்,புற்றும்,கஞ்சாவும்,களவும்,போதையும் கொலையும்,கொள்ளையும்,இனத் துவேஷமும்-விஷமும் சுயநலமும்,மதமும்,மதச் சண்டையும்,இனக்…
-
- 0 replies
- 831 views
-
-
-
- 1 reply
- 822 views
-
-
2004 ம் ஆண்டின் இயற்கையின் கோரத்தாண்டவம் சுணாமியாக அடித்து எம் உறவுகளை பறிகொடுத்த 16 ஆண்டுகளின் நினவாக..அன்று எனது மனத்துயரத்தை கவிதையாய் எழுதிப் படித்திருந்தேன் அன்றைய ஆறாக் கவலையை இன்றும் உங்களுடன் ..பசுவூர்க்கோபி https://www.youtube.com/user/PasuvoorkGobi
-
- 0 replies
- 821 views
-
-
"உடற்பயிற்சி..." / தன்முனைக் கவிதை "உடற்பயிற்சி மிகினும் குறையினும் உடம்பு பாதிக்குமே! உள்ளம் சீராகி தெளிவுபெறுவதும் உண்மை நன்மையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 818 views
-
-
நீ தந்த உணர்வுகளால் நான் என் நிஜம் தொலைத்தேன்.. மனசெல்லாம் ரணமாகி யாருமற்ற தனிமைப் பொழுதுகளில் வாழ்வது உறுதியானது.. நான் கொண்ட மனநிலைப் பிறழ்வுகளால் என்னை வேண்டாமென வெறுத்து பிடிவாதமாய் விலக்கி வைத்திருக்கும் உறவுகளை சந்திக்கும் நிலையில் என் மனநிலை இல்லை.. மன்னிப்பு கேட்கும் முன்பே நிராகரிப்பட்டேன் என் நிஜங்களின் முன்.. நிஜங்கள் இல்லாது வாழ்வென்பது எப்படி? மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று இன்னொரு பிறவியில் தெரிந்து கொள்கிறேன்.. நான் தவறானவன்.. செய்த தவறுகளுக்காக இந்தப் பிறவி வலிகளோடு போகட்டும்.
-
- 1 reply
- 816 views
-