கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
கவிதையைப் பிரித்த ஐபிஎல் தூய வெள்ளை அரம்பையர் நின்றுமே துணங்கைக் கூத்திட வீரர் குழாத்தினர் ஆய தம்திறன் காட்ட, எறிந்த பந்(து) அண்டை வந்திட வீசி அடித்ததை பாயச் செய்து பவுண்டரி சிக்ஸராய் பலத்தைக் காட்டும் ஐபிஎல் களமதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அணிதிரண்டு குதிக்குமழகிலே நேயமுற்றனன் ஆதலினால் என்றன் நெஞ்சை நீங்கினளாம் கவிக்காதலி காலை மாலையிரவெனத் தேர்ந்திடாக் காதல் மேவ ஐபிஎல் லைப் பார்த்ததால் வேலையாவும் ஓர் மூலையிற் போனது வேறு நற்செயலில்லை யென்றானது. காலமோடியதாற் கவிக்காதலி காத்திருக்க விருப்பிலளாயினள் பாலையானது நெஞ்சப் பெருவெளி பாடயாதும் வராது தவிக்கிறேன் சீல மேவிய என் எழில் நங்கையை தேடி யெங்குமலைந்து திரிக…
-
- 0 replies
- 900 views
-
-
கவித்துளிகள்..! மனைவி..! ******** என்னை பெற்றெடுத்த தாய் தந்த முத்தமெல்லாம் உனக்கே தருகிறேன் ஏனென்றால்... நீயும் எனக்கு இரண்டாவது தாய் என்பதால். ஏழைத் தாய்..! **************** விடிதல் எல்லோருக்கும் இனிமை தருமாம் எனக்கோ விடிவு பயத்தையே தருகிறது. புதுயுகம்..! ************** எனக்கு எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பு வேண்டாம். பேராசிரியர்கள் ஆனாலும்-சிறு பேரனிடத்திலும் கற்கவேண்டியுள்ளது. நினைவுகள்..! ****************** சேமிப்பில் இருந்து சிறிது,சிறிதாக செலவு செய்யும் நேரங…
-
- 2 replies
- 1.3k views
-
-
கவிப்புயலின் கஸல்கள் ---------------------------- சில நேரங்களில்.... கனவுகள் பலித்தால்.... வலியென்ன என்பதை.... உன் காதலில் கற்றுக்கொண்டேன்.....! நீ..... நினைவில் வரும்போது..... தலைவலி தருகிறாய்.... கனவில் வரும் போது.... தலைவிதியாகிறாய்......! நீ போன ஜென்மத்தில்.... பட்டாம் பூசியாய்.... இருந்திருக்கிறாய்...........! @ கவிப்புயல் இனியவன் கவிப்புயலின் கஸல் 01
-
- 4 replies
- 1.3k views
-
-
இறந்த.... காலநினைவுகளுடன்.. வாழ்வதை காட்டிலும்.... இறப்பது மேல்...... !!!
-
- 3 replies
- 863 views
-
-
போன்சாய் என்பது ஜப்பான் மற்றும் சீனாவில் மரம் வளர்க்கும் முறையாகும். பெரிய மரங்களை சிறிய தொட்டிக்குள் வளர்க்கும் முறையாகும். ஆலமரம் கூட அப்படி வளர்க்கப்படுகிறது. அந்த எண்ணக்கருவை கொண்டு அமைக்கப்படும் ஒருவகை ஹைக்கூவே போன்சாய் கவிதை ஆகும். எனினும் ஹைக்கூவுக்கும் போன்சாய் ஹைக்கூவுக்கும் அடியேன் கூறும் வேறுபாடுகள். 1) ஹைக்கூவிற்கு ஒரு மரபு உண்டு. ஓரடி ஈரடி, ஈற்றடி, என்ற மரபு உண்டு. ஆனால் போன்சாய்க்கு அப்படி இல்லை. ஆனால் முடிவு திருப்பமாக அமையும். 2) ஹைக்கூவில் நகைச்சுவையாக அமைந்தால் அது சென்றியு ஆகிவிடும். இங்கு சமூக விழிப்புணர்வு, நகைச்சுவை எல்லாம். ஒன்றாகவே கருதப்படும். 3) ஹைக்கூவில் மொழிக்கலப்பு ஏற்பதில்லை. இங்கு அது தவறில்லை. இவை தவிர வே…
-
- 2 replies
- 2.9k views
-
-
கவிதையோடு வாழ்பவனும் கவிதையாக வாழ்பவனுமே கவிஞன் & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்
-
- 233 replies
- 43.5k views
-
-
🌹🌹🌹 மரபுவழிக் கவிதை ப் போட்டி 02 🌹🌹🌹 மரபுவழிக்கவிதை பயிற்றுவிப்பாளர், அதில் சிறந்த தேர்ச்சி பெற்றவரும் நடுவராகபணியாற்றுகிறார் நீங்கள் அனைவரும் உங்களுடையசந்தேகங்களை தீர்த்து போட்டியில் கலந்து கொள்ளுங்கள். 🌹🌹🌹 முதலெழுத்தில் மோனை இரண்டாமெழுத்தில் எதுகை முதல் சீரில் சந்தம் இறுதி சீரில் இயைபு 🌹🌹🌹 வரிக்கு நான்கு சொற்கள் எட்டு வரிக்கு முப்பத்தியிரண்டு சொற்கள் 🌹🌹🌹 இவ்வளவே மரபு வழியில் எழுத வேண்டிய போட்டிக்கான குறுங்கவிதை ! 🌹🌹🌹 தலைப்பு : புரிதல் இல்லா நட்பு 🌹 என்றும் புரிதல் இல்லா நட்பு// துன்பமே தரும் தோழனே அதுதப்பு// இன்றும் மெளனமேன் இதயத்தால் நீசெப்பு // என்னில் தவறிருப்பின் என்னைநீ காறித்துப்பு// த…
-
- 1 reply
- 447 views
-
-
எங்கேயோ இருக்கிறீர்கள் எனக்குத்தெரியும் நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள் கடைசியாக நீங்கள் வேலையால் வந்து கழற்றிப்போட்ட ஆடைகள் உங்களில் நான் கிறங்கும் அதே வியர்வை மணத்துடன் கொழுக்கியில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.. அன்றிரவு அவர்கள் உங்களை அடித்து இழுத்துச்சென்ற போது நான்கதறிய கதறல் இப்போது ஒவ்வொரு வீடாய் கேட்கத்தொடங்கி இருக்கிறது காலையில் எழுந்து அப்பா எங்கே என மகன் கேட்டான் எப்படித்தான் காணாமல் போனமை பற்றி அவனுக்கு நான் விளக்க முடியும்..? வருடங்கள் உருண்டோடி விட்டன காலமும் மனிதர்களும் எதுவுமே நடந்து விடாதது போல் போய்க் கொண்டிருக்கிறார்கள்...! உங்கள் நெஞ்சில் இருந்து துள்ளுவது போலவே நேற்றைக்கு மாலையும் என் மா…
-
- 5 replies
- 942 views
-
-
காணாமல் போன உறவுகளும் அது தந்த வலிகளும்
-
- 8 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
காந்தியும் கனவுகளும் காந்தியை ஒரு நாள் கனவில் கண்டேன் எப்படி இருக்கிறது இந்தியா என்றார் நீங்கள் நேசித்த மூன்று குரங்குகள் போல் இல்லை என்றேன் சாதி மதம் என்று சண்டைகள் இல்லையா என்றார் நீங்கள் பொய் சொல்லி விட்டீர்கள் தாத்தா கர்ஜனங்கள் உங்கள் பிள்ளைகள் என்று கடைசி வரை ஒத்துக்க மாட்டானாம் காவிக்குள் புகுந்து இருக்கும் சாமிமார் பிறந்த இடம் போய் பார்த்தீர்களா தாத்தா பத்தி எரிந்தது தாத்தா ஒரு நாள் பாடுபட்டு நீங்கள் கட்டிய ஐக்கியம் செத்து விழுந்தது மானிடம் தாத்தா பாவர் மசூதியை போய் பாருங்கள் ராமர் பிள்ளைகள் உங்கள் சத்திய சோதனையை அந்த புனித மண்ணில் புதைத்து விட்டனர் நேரம் இருந்தால் …
-
- 0 replies
- 433 views
-
-
(யாயும் ஞாயும் யாராகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?யானும் நீயும் எவ்வழி அறிதும்?- சங்கப் பாடல்) * கானல் வரி. - ஜெயபாலன் . கருகும் முது மாலை. பூம்புகாரின் தொல்கரைகள் சிவக்க நுரைக்கும் திராட்சை மதுவாய் நெழிகிறது எழுவான் கடல். இது படுவான் கரையென்றால் மாலை செம்பொன்னாய்ச் சொரியுமே. எனினும் காதலில் சிறகுகள் உரச கூடு ஏகும் பறவைகளின் பாட்டில் கானல் வரி தொனிக்கிறது. . இந்த மதுவார்க்கும் மாலையில் தனித்த முது கவிஞன். நினைவு இடறி நான்கு தசாப்தங்கள் காலச்சரிவில் உருள்கின்றேன். எங்கோ ஒரு யப்பானியப் பாடல் தாபம் வளர்கிறது. . அது ஈழத்தின்கொடும் பகையை எதிர்த்து ஒவ்வொருவராய் நாங்கள் ப…
-
- 0 replies
- 260 views
-
-
நீ மௌனமாய் இருப்பதில்.... புரிகிறது என் காதலுக்கு.... மலரஞ்சலி வைத்தது.... நீ..........!!! காதலுக்கு உரமே...... கனிவான பேச்சு...... காயப்படுத்திய உனக்கு..... அதெல்லாம் எப்படி...... புரியும்........? நீ பார்த்தநாள்...! மரணம் தாண்டி வாழ்ந்த நாள்..... இனி............... இறந்தாலும்....... உயிர்ப்பேன் .......... உன் கண்ணை விட கொடிய விஷம் எதுவும் இல்லை ....! @ இப்படிக்கு உன்..... கவிப்புயல் இனியவன்
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
சினிமாவுடன் வளர்ந்தோம். ஊர் தியேட்டர்களில் எந்தப் படம் வந்தாலும் பார்த்தோம். சில படங்களை, முக்கியமாக பல எம்ஜிஆர் படங்கள், பல தடவைகள் பார்த்தும் இருக்கின்றோம். இதில் சிலருக்கு தியேட்டர் மாடியில் உள்ள புரொஜெக்டர் அறைக்கு போகும் வாய்ப்பு கிடைத்தும் இருக்கும். ******* கார்பன் வெளிச்சம் ------------------------------- வெளிப்பாட்டு முடிந்து உள்பாட்டு ஓடி இரண்டு மணிகள் அடித்த பின் மின் வெளிச்சம் கலைந்து கும்மிருட்டு சூழ பளிச்சென்று வரும் கண்ணைக் கூசும் …
-
-
- 4 replies
- 536 views
-
-
காலங்கள்..! *************** ஆசிரியர்கள் வீடுதேடி போனார்கள்-அது ஆதிகாலம். மாணவர்கள் பாடசாலை சென்றார்கள்-அது கொரோனாவுக்கு முன் காலம். பாடமே வீடு தேடி வருகிறது இது “சூம்” காலம். எத்தனை காலங்கள் வந்தாலும் எதனையும் பயன் படுத்த முடியாத ஏழைகள் காலந்தான் நாட்டின் நிரந்தரமாகி வருகிறதே! பட்டணியாகப் போகும் குழந்தைக்கு-இலவச பாடப் புத்தகம் கொடுத்தும் என்னபயன். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
- 5 replies
- 1k views
-
-
காலச்சக்கரம் சித்திரையில் கொட்டித் தீர்த்த பெருமழையில் சிந்திய விதைகள் வளர்ந்து பெருவிருட்ஷமாகி கோடையில் நல் நிழல் தந்து பச்சை பசேலென்ற வண்ணங்க்காட்டி மலர்தல் காய்த்து கனி தரும் என மக்கள் மனம் குளிர்ந்த வேளை "சட்டென மாறுது வானிலை "என அயலூரில் சுழன்று அடித்த சூறாவளியுடன் எங்கள் மண்ணிலும் மெல்ல குளிர் எட்டிப்பார்க்கிறது ."நேற்று போல் இன்று இல்லை என்றுமே மாற்றம்" தான் இனி மரம் கிளைகள் அனைத்து தாவரங்களும் அணையப் போகும் விளக்கு சுடர் விட்டு ஒளிர்வது போல பல வண்ணம் காட்டி நிற்கும்,மெல்லிய …
-
- 0 replies
- 702 views
- 1 follower
-
-
நிகழ்வுகளானது சுழலும் போது நினைவுகளானது நீளும் காட்சிகளானது அலை மோதும் அவை உளமதில் ஆட்சி புரியும்! உணர்ந்ததும் உணராததுமாய் உள்ளங்கள் நடிப்பதும் உரைத்திட மறுப்பதும் உண்மைக்குப் புறம்பாகும்! தன்னைத் தானே வென்றவன் தனக்குத் தானே நண்பன் ஆவான் தன்னைத் தானே வெல்லாதவன் தனக்குத் தானே பகைவன் ஆவான்! அறிந்தும் புரிந்தே அநீதிகள் புரிபவரும் துரோகங்கள் புரிபவரும் பாரிற்கு பாரமானவரே! இறந்தவர் பிறப்பதும் பிறந்தவர் இறப்பதும் வாழ்வியலின் நியதியும் உண்மையியலின் நியதியும் ஆகுமே! காலமதின் குரலாய் வையமதில் கேட்டிடும் துன்பமதன் ஓலங்கள் வாழ்வியலின் துயரங்கள்! வஞ்சமதை புதைத்து விட்டு விரோதமதை விரட்டி விட்டு மனிதமதை வளர்த்து விட்டால் மானிடமது செ…
-
- 8 replies
- 1.2k views
-
-
விசித்திரமான நிகழ்வுகள் நிறைந்த வாழ்க்கையில் வரலாறு முக்கியமானது. அது என்னை விட என்னை அதிகம் அறிந்தது. துயரங்களைக் கடக்க, கடினமான நாட்களில் காலத்தைக் கழிக்க, வலி நிறைந்த அத்தருணங்களை எதிர்கொள்ள, இன்னும் என்னென்னமோ கற்றுத் தந்தது. காலப் பெருவெளியில் சிக்கி நான், சுழலில் சிதைந்த பந்துபோல் பேரழிவுகளுக்கிடையில் அலைந்தேன். பெருங்கடலின் ஆழத்தில், தொலைந்து போன, ஒரு பேய்க் கப்பலானேன். சில சமயங்களில் நான், மென்மையான நித்திய ஒளியில், என் உயரிய நேரத்தை இழந்தேன். இன்னும் சில நேரம், கனவுகள் பிடிப்பவர்களின் …
-
- 2 replies
- 736 views
-
-
தாலாட்டுப் பாடிய தாயும் எங்கே? தானாக வந்த உறவுகள் எங்கே? தயவு படைத்த நெஞ்சமும் எங்கே? தாண்டி வந்த இளமை,செழுமை,இன்பம் போனது எங்கே? திரும்பி பார்த்தேன் எல்லாம் எங்கே? எங்கே? சென்றது என்றே!!!! மார்பில் சுமந்த செல்வங்கள் எங்கே? மாய்ந்து தேடிய செல்வங்கள் எங்கே? மாட்டைப் போல ஓடியோடி உழைத்தவையெல்லாம் எங்கே? எங்கே? காணவே இல்லை தேடியும் பார்த்தேன் எல்லாம் எங்கே?எங்கே? சென்றது என்றே!!!!! ஆடியடங்கிடும் வாழ்க்கையினிலே ஆழ்ந்த அன்பு,பாசம் அனைத்தும் போனது எங்கே? அருகே இருந்த சுற்றமும் நட்பும் அழிகை இடத்துக்கு முற்றும் துறந்து போனதை அதிர்ந்து பார்த்தேன் எல்லாம் எங்கே? எங்கே? சென்றது என்றே!!!!! நாட்பட நாட்பட மனம் நல்லவை நாடும் மெய்ப் பொருள…
-
- 6 replies
- 1.1k views
-
-
வானத்தில் வண்ணமாக பூக்கள் பூக்குது வாசலை திறந்து வந்து காலை புலருது காலை புலர்ந்ததென்று யார் சொன்னது காற்றினில் கீதம் ஒன்று கனவில் சொன்னது மீட்டிடும் கைகளினால் வீணை பாடுது விடியதோர் காலம் என்று கீதம் கேக்குது ஆலய மணி ஓசை காதில் கேக்குது அன்பே சிவம் என்று சொல்லி கேக்குது ஆனந்த யாழினிலே ராகம் கேக்குது ஆயிரம் மழை துளியாய் வானம் சிந்துது எந்தன் மன அறைக்குள் இருந்து ஒரு ஓசை கேக்குது மௌனமாக கனவு வந்து கவிதை பாடுது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் உதயன்
-
- 8 replies
- 1.1k views
-
-
காலை புலர்ந்தது- காலை புலர்ந்தது காலை புலர்ந்தது காலைச் சேவல் கூவிச் சொன்னது கனவுகள் உயிர்த்தது கதிரவன் எழுந்தான் பொழுது புலர்ந்தது பூக்கள் மலர்ந்தது உழவனுக்கு என்றே உலகம் செய்து உன்னையும் என்னையும் உயிரோடாக்கி மண்ணையும் தந்து மகிழ்வித்த ஈசனை எண்ணுக மனமே எண்ணுக காலை புலர்ந்தது காலை புலர்ந்தது எழுக தமிழா எழுக தமிழா இன்றைய காலை உனக்காய் விடிந்தது பொங்குக மனமே பொங்குக வயல் வெளி எங்கும் தீபங்கள் எரிய வானத்து தேவனை விருந்துக்கு அழைத்து வாசல்கள் எங்கும் பூக்கட்டும் வாழ்வு வண்ணமாய் வசந்தம் வீசட்டும் எங்கும். ஆலய மணிகள் கோவிலில் ஒலிக்க அழகிய குயில்கள் கூவி பாடின காலையில் மல்லிகை கோலம் போட்டாள் கதிரவன் வாசலை த…
-
- 2 replies
- 1.4k views
-
-
மண்டும் இருள் கலைந்து செங்கொண்டைச் சேவல் சிலிர்த்தெழுந்து கொக்கரக்கோவென்று தொண்டை கிழியத் துயிலெழுப்பும்! தோட்டத்தே கறவை மாடும் மடி நிரம்பி அம்மா என்றழைக்கும்! காக்கை கரையும் கருவானம் வெளுக்கும் பறவையினங்கள் சிறகடிக்கும் வண்டினங்கள் ரீங்காரமடிக்கும் குயிலினங்கள் பாட்டிசைக்கும்! மேற்கில் மதி மறையும்... கீழ்க் கதிரும் மேலெழும்பும் விளக்குமாற்றோசை தெருவெல்லாம் இரையும் கேணிக் கரையில் வளைக் குடங்கள் கிண்கிணிக்கும் அதிகாலைத் துயிலெழுந்து தையலும் கெண்டைக்கால் தெரிய கண்டாங்கி சேலை கட்டி துளசிமாடம் வலம் வரும்! விண்ணும் மண்ணும் உறவென வாழ்ந்து மண்ணின் சுவாசமே உயிர் சுவாசமாய் நேசித்து கதிரெழு முன் இருளுடையில் நீர் குடைந்திட முத்து மணிகளைப் போல் நெல்மணிகளை விதைத்திட பல …
-
- 7 replies
- 2.4k views
-
-
கிருமியும்,கிராமத்தின் கவலையும்..! வண்டில் மாடும்,ஏரால் தீட்டும் வர்ணமும் பனையும்,தென்னையும் வாய்க்கால்,வரம்பும் கோயில்,குளமும் ஆடும்,மாடும் மூலிகைச்செடிகளும் தோட்டமும்,துரவும். முன்னோர் வாழ்வின் முதுசங்கள் இவைகள் என்மேல் அவர்களின் இருப்பும்,பாசமும் உங்களுக்கேனோ இல்லாமல் போனது. பட்டணம்,நகரமென படையெடுத்து போயிருந்து பழயவள் எனச்சொல்லி பழித்தீர்கள் என்னையும். கிராமத்தான் என்று கேலிபண்ணுவார்களென நகரத்து பெயர்களையே “நா” கூசாமல் சொன்னீர்கள் பக்கத்து வீட்டானின் பகட்டு வாழ்வைநம்பி காரும்,வீடும் கடன் பட்டே …
-
- 11 replies
- 2k views
-
-
துடிப்பில்லாத இதயமும் சில எலும்புத்துண்டுகளும் துடிப்பில்லாத இதயமும் சில எலும்புத்துண்டுகளும் போர்த்தியிருக்க ஒரு துண்டுத் தோலும் போதும் என்கிறதுமனம் உணர்வெல்லாம் விற்று வெறுமை வாங்கி சாம்பல் வெளியொன்றில்-அது புரண்டிடத் துடிக்கிறது விழி திறந்த வேளைகளில் வெறுமைகள் தேடி பிரபஞ்சம் எல்லாம் அலைந்து - அது சலித்துக் கொள்கிறது போதும்...போதும் என்று ஆர்ப்பரித்து புழுதி புரண்டழுகிறது வர்ணமெல்லாம் சேறுபூசி தூரவெறிந்த தூரிகைகளை தேடியெடுத்து கோபத்தோடு எரிக்கிறது குருடனனான உனக்கு வர்ணம் ஒரு கேடாவென்று- எள்ளி நகையாடி கெக்காளமிட்டுதச் சிரிக்கிறது இந்…
-
- 12 replies
- 3.6k views
-