கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
கோடை (காலம்) இங்கு -------------------- கோடை கால இரவுகள் அழகானவை பகலில் உருகிய வெயிலை இருட்டின் போது கசிய விடுபவை நிலவு எறிக்கும் கோடை இரவொன்றில் சாலை கடக்கும் ஒரு பூனையை போல கவனமாக மழையும் வந்து போகும் மழை வந்த சுவடுகளில் புல்கள் முழைக்கும் புல் வந்த வேர்களை பற்றி மண் புழுக்கள் மேலே வரும் பின் அதை உண்ண மைனாக்கள் அலைந்து திரியும் அதை பிடிக்க வரும் பிறாந்துகளால் வானம் அதிரும் குருவிகள் கூடு கட்டும் குலவும் மழைக் குளிரில் ஒன்றை ஒன்று கூடும் முத்தமிடும் முட்டையிடும் குஞ்சு பொரிக்கும் அவற்றின் கீச்சிடலில் என் காலை உதிக்கும் பின் வளவில் எப்பவோ நட்டு வைத்த …
-
- 14 replies
- 2.2k views
-
-
கோடை காலம் —————————————————————————————————— என் வீட்டு வாசலில் பூக்கள் விரியும் முற்ரத்து மரங்களில் மூச்சுகள் கேக்கும் காலையில் வந்து இனி காக்கையும் குருவியும் பாடும் என் கதவை திறந்து ஒரு சூரியன் பூக்கும் கானகம் போல் ஒரு சோலை விரியும் காலத்தின் பிறப்பு ஒன்றை சொல்லி சிரிக்கும் கள்ளமாய் வந்து இனி தேனீக்கள் காலை பூக்களில் காதல் கீதம் இசைக்கும் கண்ணை பறித்திடும் கன்னியின் கூந்தலில் காலை மலர்ந்திட்ட மல்லிகை வாசம் எண்ணக் கனவினை சொல்லி சிரித்திடும் எங்கள் மங்கையர் கோலங்கள் வாசலில் பூத்திடும் தென்னம் தோப்பினில் தொட்டிலை கட்டி சிட்டு குருவின் சிரிப்பு ஒலி கேக்கும் வானை திறந்து ஒரு வானவில் ப…
-
- 5 replies
- 1.8k views
-
-
ஆண் பெண்ணுக்கிடையில்ஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகைஎப்போதும் விரிகிறது. . சதுரங்கம்- வ.ஐ.ச.ஜெயபாலன்..சிருஸ்ட்டி வேட்கையில்ஆனைமலைக் காடுகள் பாடுகிறஅந்தி மாலை.அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில்உன்னையே சுற்றுதடி மனசு..இது தீராத காதலடிநீதான் கண்டு கொள்ளவில்லை.அதோ புல்லின்கீழ் கட்டெறும்பாய்தொலை கீழ் மூங்கிற் காடுகளுள் ஊரும்யானைபோலஉண்மையில் என் காதலும் பெரியதடி.,காமத்தில் சூரியன்பொன்சிந்த இறங்கி வர.நாணிப் புவிமகள்முந்தானையாக முகிலை இழுக்கின்றாள்..ஆகா அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்றஉனது நாடகம் அல்லவா இது.,ஆண் பெண்ணுக்கிடையிலஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகைஎப்போதும் விரிகிறது. .என்னோடு இன்னும் சிலரைபந்துகளாய் எறிந்து ஏந்தி ஆடும்வித்தைக்காரிய…
-
- 2 replies
- 800 views
-
-
https://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fresize.indiatvnews.com%2Fen%2Fresize%2Fnewbucket%2F1200_-%2F2023%2F08%2Fchandrayaan-3-5-1691547437.jpg&tbnid=cJLSHrbC4Cr1ZM&vet=12ahUKEwi-lLWblvaAAxXIrycCHQuxAj4QMygKegUIARCUAQ..i&imgrefurl=https%3A%2F%2Fwww.indiatvnews.com%2Fnews%2Findia%2Fchandrayaan-3-update-isro-spacecraft-performes-significant-manoeuvre-closer-to-moon-lunar-surface-2023-08-14-886607&docid=WRXkMNPWYsENMM&w=1200&h=696&q=chandrayaan-3&ved=2ahUKEwi-lLWblvaAAxXIrycCHQuxAj4QMygKegUIARCUAQ சந்திரயானின் வெற்றி மேலைத் திசையினன் அம்புலி சென்று விரைந்து திரும்புகையில் - இங்கு பாலைக்கறந்ததைக் கல்லினில் வார…
-
- 2 replies
- 687 views
-
-
மறைந்த ஈழத்துப் பெருங்கவிஞர் மகாகவியவர்கள் நானறிந்தவரை குறும்பாக்களை தமிழில் முதன்முதல் அறிமுகம் செய்தவர். அவரைப்பின்பற்றிப் பலரும் பின்னர் குறும்பாக்களையெழுதத் தொடங்கினார்கள். குறும்பா என்பது குறுகியா பாவாகவும் அதேவேளை குறும்பு கலந்ததாகவும் இருந்தாலேயே குறும்பா இலக்கணத்துக்கு உட்படும். எமது ஈழக்கவிஞர் மகாகவியைப் பின்பற்றி நானெழுதிய தற்போதைய யுகே காலநிலைக்கேற்ற குறும்பாவை இங்கு தருகிறேன். நண்பர்களும் இதை முயற்சித்துப்பார்க்கலாம். நாற்படையுங் கொண்டுயர்ந்த நாடு -யுகே நாணா நவமாதர் வீடு காற்தொடையின் கவடுவரை காரிகையர் கவுணுயரும் காலமிங்கு சம்மர் கடுஞ் சூடு
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
சரகலை என்பது மூச்சுக்கலை "சரம் " என்பது "மூச்சு"ஆகும். இந்த மூச்சு சூரியகலை, சந்திரகலை, சுழுமுனை, என்று நடைபெறும். இந்த ஓட்டத்தை எம் விருப்பம் போல் மற்றும் பயிற்சியே சரகலை ஆகும். இதை ஒரு குரு மூலம் கற்பதே சிறந்தது. அடியேன் தமிழ்நாடு சித்த வைத்திய வித்தர் S. காந்தி என்பவரிடம் கற்றேன். இதில் என்ன பயன்? என்று நீங்கள் கேட்டால். இன்றைய கொரோனா வுக்கு தற்பாதுகாப்பே இது தான்.. .... பேச்சை குறை மூச்சை பிடி.. எல்லாம் வெற்றி..... .... என்னால் முடிந்த அளவு சுருக்கமா இதை கவிதை வடிவில் முயற்சி செய்கிறேன். தொடர்ந்து பாருங்கள்..... கவிப்புயல் இனியவன்
-
- 15 replies
- 4.1k views
-
-
சரித்திரம் மீண்டும் சுழர்கிறது உலக வரை படத்தில் ஒரு சிறு துளி போல் இலங்கை என்று ஒரு தீவு ஓடிக்கொண்டே இருக்கிறது இரத்தம் சிங்கள பெரும் தேசியமும் மதவாதமும் இனவாதவும் வளர்ந்து விட்ட சிறு தீவில் சரித்திரம் மீண்டும் மீண்டும் சுழல்கிறது யாருக்குமே அமைதி இல்லாத தேசமாகிப்போனது விஷம் விதைத்தவர்கள் எல்லாம் வினையை அறுபடை செய்துகொண்டு இருக்கிறார்கள் அமைதியாகவே இருக்கிறார் புத்தர் மட்டும் அந்த ஆலமரத்தடியில் யாரும் அவர் வழியை பின்பற்ரவில்லை என்ற கவலையோடு . B.Uthayakumar
-
- 0 replies
- 803 views
-
-
வாழ்க்கை ஒருவழிச்சாலை பயணத்தின் இடையே நாம் பலரைக் கடந்து போகிறோம் சிலர் தொடர்ந்து வருபவர்கள் பலர் கடந்து செல்பவர்கள் மேலும் சிலர் எம்மை உளவு பார்ப்பவர்கள் மனித மனங்கள் விசித்திரமானவை நட்சத்திரங்கள் போல் வித்தியாசமானவை துரதிர்ஷ்டவசமாக யாரும் பார்க்க முடியாதவை எல்லோரும் எல்லோரையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்ற தத்துவம் நாமறிவோம் …
-
-
- 3 replies
- 794 views
-
-
கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........! கண்டதை எழுதுவதும்.... கண்டபடி எழுதுவதும்.... கவிதையில்லை....... கண்ணியமாய் எழுதுபவன்..... கவிஞன்........! காதலால் ............. கவிதை வரும் என்பதை.... காட்டிலும்........... காதலோடு கவிதை...... எழுதுபவன் உண்மை..... கவிஞன்..........! சமூக ...... சீர்திருத்தத்துக்காய்..... கவிதை எழுதுவதைவிட.... சமூகத்திலிருந்து...... சீர்திருந்தி வாழ கவிதை..... கவிதை எழுதுபவன்..... கவிஞன்...........! …
-
- 5 replies
- 3.8k views
-
-
கொரோனாவுக்கு முன் 🤍🤍🤍 வீடுவரை உறவு.... வீதி வரை மனைவி... காடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ...? ( கவியரசு கண்ணதாசன் ஐயா) கொரோனாவுக்கு பின் 🤍🤍🤍 வீடுவரை உறவு.... வீடு வரை மனைவி..... வீடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ...? ( சிரிப்போம் சிந்திப்போம்) இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இன்று ஒருவர் இறந்தால் அது கொரோனா எனப்படுகிறது யாருமே அவரை பார்க்க முடியாது எல்லோரும் வீட்டுக்குள்ளே அழுகை அரசு உடல் கூட கொடுக்காது
-
- 2 replies
- 713 views
-
-
சிறகு --------- ஒட்டி உலர்ந்த தேகம் ஒன்று எப்பவும் அங்கே பாதையில் கழிவுநீர் ஆறு என்று ஓடும் அந்தக் கரையில் சுருண்டு கிடந்தது அது கையை நீட்டவும் இல்லை கண்களை பார்க்கவும் இல்லை புதிதாக வெளியில் வந்தது போல வெட்கம் அதன் உயிரைக் கொன்று அதன் பசியை மூடி வைத்திருந்தது இது செத்து விடுமோ என்று பழிபாவம் அஞ்சும் யாரோ ஒருவர் அதுக்கு தெரியாமல் அங்கே ஒரு தட்டும் அதில் உண்ணும் பொருளும் வைத்தார் வேறு சிலரும் வைக்க வைக்க எழும்பி இருந்து வானம் பார்க்கத் தொடங்கி பின்னர் நடக்கத் தொடங்கி இப்பொழுது அது உலாத்துகின்றது இன்று காலை அது ஒரு பாட்டும் பாடியது …
-
- 0 replies
- 958 views
-
-
சிறு ஓட்டையால் கப்பலும் கவிழும்! ************************* போன் அடித்தது.. என்னைக்கேட்டால் இல்லையென்று சொல்லென்றார் அப்பா.. அம்மாவையும் அப்பாவையும் படித்துக்கொண்டிருந்த ஆறு வயது மகன் பார்த்து முளித்தான். மறுநாள்.. அம்மாவின் கைபேசி அலறியது.. நாங்கள் வீட்டில் இல்லை வெளியில் நிற்கிறோம் என்றாள் அம்மா வீட்டில் விளையாடி கொண்டிருந்த பிள்ளை பார்த்து வெருண்டான். பிள்ளையின் வெள்ளை உள்ளத்தில்.. கறுப்பு புள்ளிகள். காலங்கள் உருண்டன அவனின் கைபேசியும் இப்போது பொய்பேசியாகவே மாறிவிட்டது. …
-
- 4 replies
- 1.3k views
-
-
சிறுபான்மை..! *********** எஜமான்.. சொல்லுகிறார் இன்று 73வது சுதந்திர தினமாம் எல்லோரையும் செட்டையை அடித்து வானில் பறக்கட்டாம். ............... ஆனால் கூட்டில் இருந்த படியே. -பசுவூர்க்கோபி- 04.02.2021
-
- 7 replies
- 2k views
-
-
சில நேரங்களில் சில மனிதர்கள் இருக்கும் போது போற்றுவதும் இல்லாதபோது தூற்றுவதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். இருக்கும் போது வருவதும் இல்லாதபோது மறப்பதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். நல்லவர் போல் நடித்து நம்மை கீழே போட கதைப்பதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். பழைய கோத்திரம் பாடி பகிடியாய் ஏதோ சொல்லி எமை மிதிப்பர் சில நேரங்களில் சில மனிதர்கள். அவர்களை தெரியும் எமக்கு அவர்கள் அந்த இடத்து ஆட்கள் என்பர் சில நேரங்களில் சில மனிதர்கள் வாழும் போது தூற்றி விட்டு வாழ்வு போன பின் வந்து வையத்தில் வாழ் வாங்கு வாழ்ந்தார் என்று பொய் உரைத்து போற்றுவார்கள் சில நேரங்களில் சில மனிதர்கள் எல்லோருக்கும் உபதேசம் …
-
- 4 replies
- 2.7k views
-
-
-
- 0 replies
- 836 views
-
-
சிவனா.. தமிழ் பேசும் சிவ பூமியில் சீறிய ஒரு வரலாற்று வாசலில் ஹிந்தியத்தின் கொடுக்கதில் கந்தகம் தடவச் சென்ற கதியதில் காற்றோடு கலந்திட்ட உத்தர தாண்டவத்தின் குறியீடோ..?! படம்: பிரபா சிதம்பரநாதன் அக்கா.(யாழில் இருந்து)
-
- 1 reply
- 1.5k views
-
-
சுதந்திரதினம் நாளையாம்…. தம்பி எத்தனைபேர் நாளைக்கு கொழும்பு போறியள்.. போனும் புதிசாய் வாங்கியிருப்பியள் போதாக்குறைக்கு பேசிலும் காசு நிரம்பி வழியும்.. கால்பேசுத் திடலில் கையில் போன் தக தகவென்று படம் பிடிக்க வாய் என்னவோ வர்ணஜாலம் செய்யும்.. இதுக்கென்ன உங்கடை காசா போகுது.. வருந்தி உழைக்க அண்ணன் வெளிநாட்டில்… வட்டியா குட்டியா.. வாயிலை வந்ததை சொல்லி சுதந்திர தினத்தை வாழ்த்து.. வசனங்கள்.. போட்டு வருகைதரும் பார்வையாளர் தொகை கூட்ட வார்த்தையை கவனமாகப் பாவி… வல்வெட்டித்துறைக்கு அனுரவந்ததை அடித்துத் துரத்திய இடத்தில் அனுரவந்து வெற்றி முழக்கம்…. தலைப்பு அரும…
-
-
- 1 reply
- 981 views
-
-
ஒரு கல்லுக்கும் உண்டு சுதந்திரம் ஒரு மரத்துக்கும் உண்டு ஒரு வார்த்தையிலும் உண்டு சுதந்திரம் பறவையின் இறக்கையிலும் உண்டு சட்டம் சொல்கிறது விதி என்று... அழிந்து போகும் வரை உடல் இருக்கும் போவதும் வருவதும் என நுரைத்து வரும் குமிழிகள் நொடியில் மறைவது போல இருக்கும் சுதந்திரம் அர்த்தமற்றது... மனம் அது மிகை கொள்ளாது ஓர்நாள் நிலைபெற்ற வழியில் வெடித்து வெளியே நடமாடும் கை விலங்கை உடைத்த பின் அது மாறும்... ஒன்று உள்ளே போகும் அல்லது வெளியே வரும் உலகம் புதிதென நம்பும் எல்லாவற்றையும் அறியத் துடிக்கும் மனம் வீசியதில் சிக்கியதில் தொடங்கும் கவனம்... கடந்த காலத்தின் அனுபவம் மனதோடு கலந்து விட்டதால் அது தான் முன்னால் வருகிறது இருப்பதோடு கலக்கிறது தடுமாறுகிறது மனம் ஆனால் …
-
- 2 replies
- 781 views
-
-
எங்கள் அன்புக்குரிய குழந்தைகளை இப்போர் சிதைத்துள்ளது கேள்விகள் ஏதுமின்றி பிசாசுகள் அப்பாவிக் குழந்தைகளை இப் போரில் சுட்டுக் கொன்றனர் நேசிப்புக்குரிய குழந்தை தன் தாயின் கண்ணெதிரே புதைக்கப்பட்டது இதயங்கள் உடைந்து நொறுங்கி ஊமைக் காயங்கள் நிலைபெற்றன மாணவர்கள் எங்கும் இல்லை பறவைகள் அற்ற வனாந்தரமாய் தாயில்லாப் பிள்ளைகள் போல் தனிமையில் கிடந்தன பாடசாலைகள் காகிதப் பறவைகள் காற்றில் சிறகு விரித்துப் பறந்தன தூசி படிந்த பள்ளி மணி அடிப்பாரற்று அநாதையாயிருந்தது பள்ளிகளைப் போர் சூழ்ந்த பின்னொரு நாளில் வகுப்பறை நாற…
-
- 1 reply
- 2k views
-
-
செஞ்சோலைத் தளிர்களே! ------------------------------ வெள்ளையுடைபூண்டு வென்மனம் சூடிய மாணவர்காள் உங்கள் நினைவுகள் என்றும் எம்மோடு உயிர் உள்ளவரை உள்ளத்துள் உலவிடும் உங்களை அகமேந்துகின்றோம்! தர்மம் வெல்லுமொரு நாளில் உங்கள் முகங்களை எம் தேசம் தரிசிக்கும் உலகெங்கும் அலைகின்ற தமிழினம் ஒருநாள் தலைநிமிரும் வேளைவரும் உங்கள் படுகொலைக்கு பதில்காணும் காலம்வரும்!
-
- 3 replies
- 762 views
-
-
செந்தமிழ் நாடு செந்தமிழ் நாடென்னும் போதினிலே – கொடுந் தீவந்து பாயுது காதினிலே – அங்கு எம்தமிழ் பாடையில் ஏறியுலாவரல் எண்ண எரியுது நெஞ்சினிலே. ஆயிரம் கோடிக்கணக்கில் சுருட்டி அடைபட்டு மீண்டவர் வந்திடினும் தாவியவர்கள் தயவினுக்காகவே தாழ்பணிந்தேத்தும் தமிழ்நாடு வாழ்வினில் ஊழல் பலபுரிந்தார்க்கும் வணக்கங்கள் செய்து மதிப்பளித்தே காவிய நாயகராக்கி அவரைக் கதிரையில் வைக்கும் தமிழ்நாடு மக்கள் பணத்தினைக் கொள்ளையடித்துத் தம் மக்கள் மருமக்கள் வாழ்வு பெற திக்கெட்டும் சொத்துக்கு வித்தவர் காலினை நக்கிபிழைப்பவர் வாழ்நாடு அன்னை தமிழின் அருமை மறந்து பொய் ஆங்கில மோகம் தனி…
-
- 2 replies
- 1.2k views
-
-
செந்தமிழ்த்தாயி நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன் நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில் அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி. மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர் வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி அம்பா நீ அருள்புரிவாய் செந்தமிழ்தாயி- அந்த அற்பர்களை ஒளித்திடம்மா செந்தமிழ்த்தாயி. சாதி மதமொளித்துச் செந்தமிழ்த்தாயி – எங்கும் சமநீதி காணவைப்போம் செந்தமிழ்த்தாயி ஆதியிலே இருக்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
அந்திப்பொழுதில் ஓர் அவசர தொலைபேசி அவசர சிகிச்சைப்பிரிவில் நீங்களும் அனுமதியாம் தொலைபேசியும் அனுமதியில்லை தொடர்புகொள்ளவும் முடியவில்லை மீள்வீர்கள் என நினைத்திருந்தேன் மீளாத்துயில் கொண்டதேனோ! சின்னஞ்சிறு வயதில் சேர்ந்து விளையாடியதும் இரவினில் பயத்திலே நான் கட்டிப்பிடித்து உறங்கியதும் பசுமை நினைவுகளாய் இன்றும் என் மனதினிலே! இடப்பெயர்வால் எந்தன் ஈராண்டுக் கல்வியது இல்லாமல் சென்றதனால் திகைத்து நிற்கையிலே! ஆறு மாதத்திற்குள் அனைத்தையும் கற்பித்து சாதாரண தரமதிலே சிறப்பு சித்தி பெற வைத்தீர் கணக்கு முதற்கொண்டு சங்கீதம் வரையிலே தெரியாத பாடம் என்று உமக்கில்லைக் கண்டீரோ தெரிந்ததால் தானோ இறைவன் விடவில்லை உமையிங்கு இருபத்தொரு அகவையில…
-
- 17 replies
- 1.7k views
- 1 follower
-
-
செக்கச் சிவந்த முகம் எப்பவுமே சிரித்த முகம் எங்க ஊரு சொந்தக்காறி தங்கமான உதட்டுக்காறி இவளை விட அழகுராணி எவள் இருப்பாள் அந்த அழகு ரோசா தோத்துப்போகும் இவள் ஆடிப்பாடி சிரிக்கும் போது .
-
- 0 replies
- 904 views
-
-
செவ்வாய்ப் பரப்பிருந்து தெரியும் எம் பூமி - View of our Earth from Mars மனிதா உன்னைத்தான்! வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி காணவும் கூடாக் கடுகு. - எதற்காக உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய். செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற பூமியை நோக்குகையில் புழுதிமணியாக, தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது. உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர் …
-
- 2 replies
- 890 views
-