கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
திலீபன் அழைத்தது சாவையா இந்த சதத்திற்கும் உதவாத தமிழ் சனத்துக்காகவா..?! மேலிருந்து பார்க்க என்னப்பா இருக்கு திலீபா.. கேடுகெட்டு குட்டிச்சுவராகிக் கொண்டிருக்குது பார் நீ கடந்து போன .. நீ விடுதலை வேண்டி நின்ற சனக் கூட்டம்.. சந்ததிகள் சில தாண்டி.!!
-
- 1 reply
- 894 views
-
-
தீபாவளித் துளிகள்! ************************ தீப ஒளியில் இருளகன்றது குடிசை எங்கும் வெளிச்சம் அடுப்புக்குள் பூனை கிடப்பது தெரிந்தது. தீபாவளி எப்போது வருமென காத்துக் கிடந்தார்கள் குழந்தைகள் அடுத்த புது உடுப்புக்காக. விற்கும் விலையை இருமடங்காக்கி பாதிவிலைக்கு தருவதாக கொடுக்கிறார்கள் கடைக்காரர்கள். நரகாசூரனை அழித்த நாளென கொண்டாடுகிறார்கள் உயிரோடே இருக்கிறான் போதைப்பொருள் அசுரனாக. தீபாவளி கொண்டாட்டத்துக்காக பழய உடுப்புகளை களட்டி வீசுகிறார்கள் பாவம் ஆடு மாடுகள். கோயில்களை விடவும் நிரம்பி வழிகிறது மக்கள் கூட்டம் மதுக்கடை வாசல்களில். ஆலயங்களுக்கு எல்லா பூக்களும் எடுத்து செல்கிறார்கள் ஆனால் செவ்வந்தியை தவிர்த்து. பெற்றோலுக்கு பதிலாக மது ஊற்றி ஓடும் வாகனங்கள் பயணிகள் எச்சரி…
-
- 0 replies
- 547 views
-
-
தீராவிடம் தெள்ளுதமிழினுக்கு திராவிடமென்றொரு தீக் கொள்ளியை வைத்தாரடி கிளியே கொடுமை புரிந்தாரடி உள்ளத்தில் நாம் தமிழர் உண்மை அதை உணர்ந்தும் பள்ளத்தில் வீழ்ந்தோமடி கிளியே பற்றை இழந்தோமடி ஆரியச் சங்கரரும் ஆங்கிலக் கால்டுவெல்லும் பேரிதை வைத்ததனால் கிளியே பெருமையிழந்தோமடி ஆரிவர் எங்குளரென் றனைவரும் விழித்திடத் தா கூரும் அழைத்தாரடி கிளியே கூற்றிடம் வீழ்ந்தோமடி நாம்தமி ழர்கள் என்று நம்மினத் தார்க்கும் சொல்ல நாத்தடுமாறுதடி கிளியே நகைப்புக்குள்ளானோமடி ஏன் தமிழர்க்கு இந்த இழிநிலை என்றுலுகம் எம்மை இகழுதடி கிளியே இதுவென்ன மாயமடி சாதிகள் தன்னைக்கொண்டு சமத்துவம் என்னும் பேரில் மோதிட வைத்த…
-
- 2 replies
- 1.9k views
-
-
கடைசி ஆயுதத்தையும் ஐயா கையில எடுத்துப் பார்த்தார் சமரச அரசியலோடு சமாதானம் வரும் என்று சிங்கக் கோ(கொ)டியை உயர்த்திப் பிடித்தார் ஐயா பாவம் இப்போ வெறும் கையோடு நிற்கிறார் அடுத்த தேர்தலைப் பார்த்தபடி அது சரி அவன் கொடுத்தா தானே ஐயாவும் வேண்டித் தருவார் சும்மா சொல்லுங்கோ ஐயா தீபாவழிக்குள் தீர்வு கிடைக்கும் என்று பாவம் சனம் நம்பி வந்து வாக்குப் போடும் ஏமாந்தே பழகப்பட்ட சனம் நாங்க ஐயா இந்தியா வரும் என்றே இருந்த சனங்க நாங்க ஐயா ஆன அவனும் இவனும் முழுசா தின்று முடிச்சான் முள்ளிவாய்க்காலை ஐயா இன்னும் ஒரு முறை ஏமாறுவதில் என்ன குறை ஐயா புலிகள் போனால் சமாதானம் வரும் என்ற சனத்தையும் சந்திச்சுப் ப…
-
- 2 replies
- 891 views
-
-
விடிகின்ற விடியலிலே விரைவு வேண்டும் நமது வீதியிலே சுதந்திரமாய் தலை நிமிர்த்தித் திரிய வேண்டும் பறி போகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும் இப் பாரினிலே தமிழன் புகழ் ஓங்க வேண்டும் இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும் இகல்வெல்ல ஒன்றிணைந்தே முயல வேண்டும் விழுகின்ற தலைமுறையும் வாழ வேண்டும் விடியலிலே புதுதேசம் மலர வேண்டும் சொந்தத்தில் அறிவுடைமை வளர வேண்டும் சோம்பலுற்ற அடிமை நிலை மாற்ற வேண்டும் சொந்தங்கள் தமிழ்மக்கள் எனும் எண்ணம் வேண்டும் சோர்வின்றி இனங்காக்க துடிக்க வேண்டும் வந்தேறிக் கூட்டங்கள் ஓட வேண்டும் வக்கற்ற ஆட்சியினை மாற்ற வேண்டும் குத்தகங்கள் செய்வோரை களைதல் வேண்டும் கூத்தாடிக் கூட்டங்கள் மாய வேண்டும். அறிவிழந்த மனிதரென்றே …
-
- 8 replies
- 1.2k views
-
-
தென்றலாய் வந்தது வசந்தகாலம்! *************************************** பொதிகையிலே பூத்தவளே வசந்தத்தின் வடிவழகே இதமான மயிலிறகே இளம் காற்ரின் உடல் அழகே உலகெல்லாம் நடைபயிலும் உத்தமியே இனியவளே இயற்கையின்.. படைப்பில் நீதான் இளமொட்டுத் தேவதையே. கன்ணுக்குத் தெரியாத இளம் புன்னகை தாரகையே விண் தொட்டு மண் தொட்டு விளையாடும் பெண்ணழகே கடல் தொட்டு கரை தொட்டு காவியங்கள் படைத்தவளே அகிலத்தில் உனைத்தானே அனைத்துயிக்கும் பிடித்ததுவே பஞ்சு போன்ற உன் மேனி பட்டாலே உணர்வு பொங்கும் பிஞ்சான உன் கையை பிடித்திழுக்க எமைத்தூண்டும் வஞ்சமில்ல உன் நெஞ்சால் வருடிவிட்டு போகையிலே நெஞ்சமெல்லாம் இனிக்குமடி நின்மதியோ பெருகுமடி நீ வந்து தொடும் போது பழய நினைவெல்லாம் வருகிறது நிலவொளியில் கடல்கரையில் காதலித்த பொழு…
-
-
- 3 replies
- 442 views
-
-
தேங்காய்ச் சொட்டு!🌴 ******************🌴 பட்டினி கிடந்து நாங்கள் சாகிறோம் பார்க்க இங்கு யாருமில்லை. பாராளுமண்ற உணவுக்காக-பலகோடி ஒதுக்குதல் நியாயமில்லை. அடுப்பு எரித்து எத்தனை நாட்கள் அம்மா,அப்பா வேலையில்லை-நாங்கள் உடுப்பு வாங்கி எத்தனை நாட்கள் ஊருக்கு வெளியில் போனதில்லை. அப்புவும்,ஆச்சியும் நட்டு வைத்த அழகான தென்னைமரங்களிவை இப்புவிதன்னில் எம்மைக்காக்கும் இதயம் நிரம்பிய வரங்களிவை. அரசை நம்பி உணவுக்கு அலைந்தால் ஆயுள் எம்மிடம் மிஞ்சாது அனைவரும் 🌴🥦மரங்கள் நட்டு வளர்த்தால் அகிலத்தில் பஞ்சம் எமக்கேது. அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
- 0 replies
- 1.2k views
-
-
தேசம் சுமந்தவர்கள்-பா.உதயன்- I am building this bridge for him!” உலகத்தின் இருள் இன்னும் மறையவில்லை மானிடத்தின் அழகிய வாழ்வை எல்லாம் ஏதோ ஒன்று பறித்து செல்கிறது .தங்கள் இறுதிக் கால வாழ்வை அமைதியாக களிக்க வேண்டிய காலத்தில் எதிர்பாராதவகையில் முதியவர்களை பறித்து எடுத்துப் போகிறது இருள் சூழ்ந்த காலம் ஒன்று.இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக இந்த நகரங்களை தங்கள் தோள்களால் சுமந்து எழுப்பியவர்கள்.இதை நினைக்கும் பொழுது எல்லாம் அமெரிக்க கவிஞர் Will Allen Dromgoole எழுதிய (The Bridge Builder )பாலம் கட்டும் முதியவர் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது .ஒரு முதியவர் எந்த வலிகளையும் பார்க்காமல் பாலத்தை கட்டிக்கொண்டு இருக்க அதன் வழியால் சென்றவர் அவரை பார்த்து ஏ முதியவரே நீ இந்த உல…
-
- 0 replies
- 858 views
-
-
தேசிய தலைவர் பற்றி சிங்கள சகோதரனின் கவிதை. දශක තුනක් පුරා දිවයිනේ සියලු ආක්රමණ කල්දැමුවේ ඔබයි. ඔබ නිහඬව දශකයක්වත් ඔබට මුහුණ දීමට නොහැකි වී ඇත. එබැවින් ඔබ දිවයින මුදාගත් ආරක්ෂක නිලධාරියා ය. දිවයිනේ අනෙක් පැත්ත ආරක්ෂා කරන මුහුදු කොල්ලකරු ඔබම වේ. සියලු සීමා මායිම් රකින මායිම් இத்தீவுக்கு நிகழவிருந்த அத்தனை ஆக்கிரமிப்புக்களையும் மூன்று தசாப்தகாலம் தள்ளிப்போட்டவர் நீங்கள். நீங்கள் மெளனித்து ஒரு தசாப்தத்தைக்கூட சுயமாக எதிர்கொள்ளமுடியவில்லை இத்தீவாரால். எனவேநீங்களே இத்தீவிற்கு சுதந்திரமளித்த காவலன். நீங்களே தீவின் எக்கரையும் காத்துநின்ற கடற்தேவன். நீங்களே எல்லா எல்லைகளும் காத்துநின்ற எல்லைத்தெய்வம். உங்கள் இருப்பு தமிழ் தேசியத்தை மட்டுமல்ல சிங்கள…
-
- 4 replies
- 843 views
- 1 follower
-
-
நான் உன்னைத் தொலைத்து நீ தேட நீ என்னைத் தொலைத்து நான் தேட இருவரும் தேடினோம் எங்கெங்கோ இதுவரை கிடைக்கவில்லை நாமெங்கோ உணர்வுக்குள் சென்று உயிருக்குள் நனைந்து உறவாடி மகிழ்ந்த நாமெங்கே என்னை அழைத்து அளாவிப் பேசிய ஆருயிர் அன்பே நீயெங்கே உன்னை அணைத்து உள்ளம் நனைத்த உன்னுயிர் அன்பே நானெங்கே நம்மை இணைத்த நல்மனம் எங்கே நன்றி சொல்வோம் தினம் இங்கே அல்லும் பகலும் உன் நினைவு அழுது துடிக்குதே என் உணர்வு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 638 views
-
-
ஒரு தேன்கூடு வீட்டில் கட்டப்பட்டுவிட்டது. தேனீக்களை குறை சொல்வது நியாயம் இல்லாத ஒரு செயல். இங்கு என்றும் எங்கும் பூக்கள். தேனீக்கள் பூக்களை காய்களாக்கின்றன. அவை பழங்கள் ஆகின்றன. அதிலிருந்து பறவைகள் காடுகளை உருவாக்குகின்றன, பூமி வாழத் தகுந்த இடமாக தொடர்ந்தும் இருக்க தேனீக்களும் பறவைகளும் விடாமல் பாடுபடுகின்றன. கூட்டைக் கட்டிய தேனீக்கள் பக்கத்து வீட்டில் கட்டியிருந்தால் நல்லாயிருக்குமே என்றும் தோன்றுகின்றது. வீட்டில் இருவருக்கும் தேனீக்கள் கொட்டிவிட்டன. புளியா அல்லது சுண்ணாம்பா என்ற விஞ்ஞான விளக்கம் அவ்வளவாக வேலை செய்யவில்லை. வீக்கமும், நோவும் நின்று, பின்னர் மூன்று நாளில் போனது. கொல்லப்படக்கூடாத பிறவிகள் இவை. மெதுவாக தண்ணீர் அடித்தால் ஓடி விடும் என்றனர். தண்…
-
- 0 replies
- 509 views
-
-
மஹாகவி உருத்திரமூர்த்தியின் சாதியம் தொடர்பான கவிதை எனது குரலில் https://youtu.be/no-2WHQ7ti0
-
- 10 replies
- 3k views
-
-
-
உறவுகளின் உயிர்ப்பை நுட்பமாய் தீர்மானிக்கிறது தேவை சரவிபி ரோசிசந்திரா
-
- 3 replies
- 1.3k views
-
-
தேவைகளுக்கு என்றும் இல்லை முற்றுப்புள்ளி தேடல்கள் அதிகமாகும் போது தேவைகள் அதிகமாகுகின்றன தேவைக்கதிகமாக தேடியதெல்லாம் தேவையில்லையெனத் தூக்கி எறியப்பட்ட பின்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது இந்தத் தேவைகள்...! நேற்று பணத்தின் தேவைக்காக அலைந்தவன் இன்று பிணமாகக் கிடக்கின்றான் நேற்று சுகத்தின் தேவைக்காக அலைந்தவன் இன்று சுமையாகக் கிடக்கின்றான் நிம்மதிக்கான தேவையே இங்கு தேவைப்படுகின்றது ஆனால் நிம்மதி மட்டும் நிற்காமல் செல்கின்றது...! எதற்காக இந்தத் தேவை...? எவருக்காக இந்தத் தேவை...? புரியாத இந்தத் தேவை முடியாதோ இந்தத் தேவை...? முடிந்து விடும் ஒரு நாளில்... மனிதனைத் தேடும் அந்த மண்ணறையின் தேவை ஒரு நாள் தீர்ந்து விடும…
-
- 8 replies
- 1.1k views
-
-
தேவையானவை --------------------------- அலைபேசியில் அபாயச்சங்கு முழங்கியது நெருப்பு உங்கள் அருகில் உடனடியாக கிளம்பவும் அவசியமாக தேவையானவற்றை அளவாக எடுக்கவும் என்று அலைபேசி மின்னியது எவை தேவை என்று முகட்டைப் பார்த்தேன் முதலில் தேவை ஒரு காற்சட்டை' வீட்டிலிருந்து வேலை என்பதால் இடுப்பில் இருந்தது வெறும் சாரம் மட்டுமே அடுத்தது தேவை மட்டைகள் காசு மட்டை கடன் மட்டை அடையாள மட்டை என்று ஒரு கொத்து மட்டைகள் இருக்கின்றன் இங்கு எல்லோரிடமும் எதற்கும் கடவுச்சீட்டையும் எடுப்போம் ஓடிப் போக மெக்சிக்கோ வந்து நான் உள்ளே போய் விட்டால் திரும்பி வர அது வேண்டுமே அலைபேசியும் அ…
-
-
- 13 replies
- 905 views
-
-
எல்லாவற்றிலும் முழுமை காண விரும்பும் நாம் தான் பாதி வாழ்க்கையை தொலைத்துவிடுகிறோம் முழுமையாய்... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 986 views
-
-
-
- 6 replies
- 897 views
-
-
நீயும் நானும் சமத்துவமாய் வாழும் காலம் பிறக்கலையே நீதி இல்லா பூமியிலே நின்மதியை காணலையே இரவும் பகலும் இயந்திரமாய் இன்னும் துயர் முடியலையே அடிமை வாழ்வு தொலையலையே எங்கள் பசி தீரலையே பா.உதயன்
-
- 0 replies
- 466 views
-
-
புஸ்பராசாவுடன் 1970ல் இருந்து 1980 வரை எனக்கு பழக்கம் இருந்தது. அப்ப அவர் தமிழரசு வாலிபர் முன்னணியிலும் பின்னர் தமிழ் மாணவர் பேரவையிலும் செயல்ப்பாட்டாளராக இருந்த காலத்தில் நான் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான வன்முறையாளனாக செயல்பட்டுக்கொண்டிருந்தேன். பின்னர் தொடர்பு அற்றுப் போய்விட்டது. பின்னர் 20 வருடங்களின் பின்னர் 2000 ஆயிரங்களின் ஆரம்பத்தில் பிரான்சில் சந்தித்து பேசினேன். அதன்பிறகு மீண்டும் தொடர்பு அறுந்துபோனது. . தோழன் புஸ்ப்பராஜாவுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன். . 2006 ஆரம்பத்தில் நான் நோர்வேயில் இருந்தேன், திடீரென ஒருநாள் தொலைபேசியில் வந்த புஸ்பராசா தான் மரணித்துக்கொண்டிருக்கும் சேதியை சொல்லக் கேட்டு அதிர்ந்துப…
-
- 1 reply
- 799 views
-
-
நத்தார் கவிதை -2021 வாருங்கள் தோழர்களே! இந்த மானிலம் மீதினில் அன்பு செழித்து நம் மானுட வர்க்கம் மகிழ்ந்த நன்னாளிது வாருங்கள் தோழர்களே! மாட்டுத் தொழுவத்திலே எங்கள் மன்னன் பிறந்தனன் அந்த நற்செய்தியைக் கேட்டுக் கிழக்கிருந்தே - வந்து கிறிஸ்துவென்றே குறித்தேற்றினர் ஞானிகள் வாருங்கள் தோழர்களே! – நாமும் வாழ்த்திக் கொண்டாடுவம் யேசு பிறப்பினை வாருங்கள் தோழர்களே. பாவிகளாகாதீர் - உங்கள் பாவங்கள் தன்னை நான்ஏற்றுப் பரிசுத்த ஆவிக்குள் சேர்த்திடுவேன் உயர் அன்பில் முகிழ்த்து நற்பண்பில் மலர்ந்திட தேவையென் ரத்தமெனில் எந்தன் தேகத் தசையும் அதற்குரித்தே நோவைப் பொருட்படுத்தேன் நான…
-
- 2 replies
- 570 views
-
-
”முரட்டு மேதை என்பர் மேலோர்'இங்கிதம் அறியான் அறியான்' என்பர்கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்.” . . இது என் சுய தரிசனக் கவிதை. யாழ் பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவனாக செயல்பட்ட நாட்க்களில் எழுதியது. ஒரு போராட்டத்தின்போது பல்கலைக்கழக தலைவராக இருந்த பேராசிரியர் கைலாசபதி என்னை intellectual and Thug என திட்டினார். அவருக்கு பதிலாக எழுதி பல்கலைகழக மாணவர் மன்ற அறிவுப்பு பலகையில் ஒட்டிய கவிதை. தற்செயலாக யாழ் இணையத்தில் தேடியபோது கிருபன் என்னைபற்றிய குறிப்புகளோடு பதிவிட்டிருந்தார். யாழ் இணையத்துக்கும் கிருபனுக்கும் நன்றிகள். என் இளமைக் காலம்பற்றி கிருபன் எழுதிய குறிப்பின் இணைப்பு கீழே இணைக்கபட்டுள்ளது. .கள்ளிப் பலகையும் கண்ணீர்த் துளிகளும்- வ.ஐ.ச.ஜெயபாலன் -.முரட்டு…
-
- 7 replies
- 1.9k views
-
-
எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே எம்மவர்கள் பலருழைத்து ஏற்றுவித்த வல்லாண்மை மங்குதிங்கே மதியற்றோர் கொண்ட மடத்தாலே! நம் நாடென்ன நாடிதென நாவுரைக்க கூசுதிங்கே நாடி வரும் நல்லோர் நன்கறிந்து கூடினாலும் நாடிங்கு எழுவதெந்நாள் நாணுதிங்கே நாணமற்றோர் கொண்ட நடப்பாலே! நாம் நாடுகின்ற நாடாள்வார் நாட்டிலெங்கே நாடிய மக்கள் நலமெங்கே நாம் நாடுகின்ற நாடொன்று நாளாகத் தேய்வதிங்கே நாடற்றோர் நாம் கொண்ட சாபத்தாலே! தனித்த தமிழின் பெருமையறிந்த தமிழரங்கே தடையை உடைத்தாலே மனித்த பிறவி பயனறிந்த மனிதநேய தமிழரங்கே மடையை உடைத்தாலே தனித்த நாடொன்று தனியாயங்கே அமைந்திடுமே தன்மானத் தமிழர் கொண்ட தரணியிலே! நாட்டிற்காய் தமையீய்ந்த நாயகர்களின் அறத்தையிங்கே சீரான உணர்வுகளை சீர்மிகுந்த நற்…
-
- 2 replies
- 521 views
-
-
நம்பி வாங்கிய நாய்..! ******************* பஞ்சாயத்து தலைவர் பதிவிலிருந்து.. சாந்தமில்லாத சப்பை முகம் கொண்ட வெளிநாட்டு நாயொன்றை விரும்பி வாங்கினேன். கடனாக.. அயல் வீட்டுத் தொந்தரவை அடக்கலாமென்று.. வாசலில் காவலுக்கு வைத்தால் வரும் எதிரி அனைத்தையும் வரவிடாமல் தடுக்குமென்று.. ஆனால் நாயிப்போ எனது நடு வீட்டுக்குள் கிடந்து.. நான் வளர்க்கும் பிராணிகளை நடு நடுங்க வைக்கிறது. நாளைக்கு என் வீட்டில் நான் இல்லை என்றாலும் நான் பட்ட கடன் சொல்லி நாய் மட்டும் …
-
- 8 replies
- 1.2k views
-
-
காலச்சுவடு -2 KALACHUVDU - 2 * நம்பிக்கை கவிதையை 1968ம் ஆண்டில் எழுதி வெளியிட்டேன். இக்கவிதையும் பொதுவுடமை புரட்சிவரபோகிறது என நம்பிய என் இளமையில் எழுதியதாகும். நம்பிக்கை புரட்சிக்காக இராணுவப் புவியியலை அறிந்துகொள்ள வன்னிக் காடுகளில் திரிந்த காலத்தில் உருவானதாகும். . இக்கவிதையிலும் தமிழ் பாட்டாளிகளின் எழுச்சியின் முதல் குரல் வன்னியில் எழும் என்கிற நம்பிகையையே பாடினேன். * நம்பிக்கை.. வ.ஐ.ச.ஜெயபாலன். . காலச்சுவடு -2 KALACHUVDU - 2 * நம்பிக்கை கவிதையை 1968ம் ஆண்டில் எழுதி வெளியிட்டேன். இக்கவிதையும் பொதுவுடமை புரட்சிவரபோகிறது என நம்பிய என் இளமையில் எழுதியதாகும். நம்பிக்கை புரட்சிக்காக இராணுவப் புவியியலை அறிந்துகொள்ள வன்னிக்…
-
- 5 replies
- 625 views
-