கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
784 topics in this forum
-
-
இனி இறைவன் தான் காப்பாத்த வேண்டும் ஈழத்தமிழனை-பா.உதயன் தேர்தல் வருகிறது தினம் ஒரு பொய் சொல்வர் கையில் பூக்களோடு காலையில் புத்தனுக்கு பூசை செய்வர் அறமோ கருணையோ இல்லாத மனிதர்கள் எல்லாம் அந்த புத்தனிடத்திலும் போய் பொய் உரைப்பர் இனவாதம் பேசுவர் இது சிங்கள தேசம் என்பர் தமிழர் அதில் படரும் கொடி என்பர் இனவாதம் என்றொரு பெரும் பூதம் இராணுவத்துணையோடு இலங்கையை ஆள்கிறது எப்பவும் இது சொல்வதே சட்டம் ஐக்கியத்துக்கு குந்தகம் அந்த தமிழரே காரணம் என்று அந்த தமிழரோடு சேர்ந்து ஒப்பந்தம் செய்வோர் ஒருமித்த எம் தேசத்தின் இறைமைக்கு எதிரி என்பர் குடும்ப அரசியல் வாதிகள் பதவிக்கும் பணத்துக்குமாய் பாலு…
-
- 5 replies
- 1.4k views
-
-
உரக்கச் சொல்கிறோம் நாங்கள் அமெரிக்கர்கள்! இரண்டு கொடிய வைரஸ்கள் இப்போது அமெரிக்கர்களைக் கொல்கின்றன. ஒன்று கோவிட் 19, மற்றையது இனவாதம். இங்கே அனைத்துத் துப்பாக்கிகளும் சொர்க்கத்தை நோக்கி மட்டுமே சுடுகின்றன. எச்சரிக்கைக் காட்சிகளால் சிறகுகள் வெட்டப்படும் கறுப்பு பறவைகள் நசுக்கப்படும் மனிதத் தலைகள்... இங்கே, சட்ட உலகம் இருளில் ஆழ்த்தியத்தைத் தவிர வேறெதுவும் பேசாது இங்கே - யாரும் வரவேற்கப்படுவதில்லை. ஆட்சியாளர்களால் “வீட்டிற்கு செல்” என்ற சொல் தவிர “நீதி” என்ற சொல் உச்சரிக்கப்படுவதில்லை. மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் குற்றமேதுமின்றிப் பலர் சொர்க்கவாசலை நிறை…
-
- 10 replies
- 2.1k views
-
-
மஹாகவி உருத்திரமூர்த்தியின் சாதியம் தொடர்பான கவிதை எனது குரலில் https://youtu.be/no-2WHQ7ti0
-
- 10 replies
- 3.1k views
-
-
-
இக்கவிதை “நெதர்லாந்து இளமுதிர்சோலை” மண்றத்தின் தைப்பொங்கல் விழாவில் படித்திருந்தேன். என் இனிய யாழ் கள உறவுகளுக்காக.. பகிர்ந்து கொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.நன்றி இழப்புகள்..! அப்பாவின் அறிவை இழந்தோம் அம்மாவின்அறுசுவை உணவை இழந்தோம் அவர்களுடன் கொஞ்சி குலாவும் அன்பை இழந்தோம்-ஏன் அவர்களை கூடவே இழந்தோம். கோழி கூவலை இழந்தோம். கோவில் மணிச் சத்தம் இழந்தோம். வாய்க்கால் வயல்கள் இழந்தோம். வழமான வாழ்வையே இழந்தோம். காலை விடியலை இழந்தோம், கடல் தொட்டுவரும் தென்றலை இழந்தோம் பட்டியில் நின்ற பசுக்களை இழந்தோம், பங்குனி மாத வெய்யிலை இழந்தோம்-மண் சட்டியில் கு…
-
- 1 reply
- 978 views
-
-
-
உலகை ஆளும் மன்னன் கோவிட் 19 மர்மக் கொலையாளி கொரோனா மறுபடியும் வருவானாம் ஏதோ சொல்லி வெருட்டுகினம் எங்களுக்கும் பயம் தானே உலகத்தை ஆளும் ஒரே ராஜா 19ம் மன்னன் கோவிட் தான் தானம் தன்னை மடக்கவும் முடியாதாம் மறுபடி வந்து மனிதனை முடிப்பாராம் மனிதனால் மடக்க முடியல்லையே மருந்து இன்னும் கிடைக்கலையே என்ன இவன் இருப்பதே தெரியலையே கண்ணால் கூடக் காணலையே எத்தனையே வைரசு வந்தது எல்லாத்தையும் விரட்டி விட்டோம் கொரோனாவைத் காணலையே கொலைகாரன் இருக்கும் இடம் தெரியலையே இத்தனை காலம் யுத்தம் செய்கிறான் இவனும் அழிவதாய் தெரியவும் இல்லை இரண்டாம் கட்டப் போருக்கு ரெடியாம் இவன் வருவானோ என்று பயமும் வேற இவன் போகாத நாடும் இல்லை ப…
-
- 4 replies
- 1.1k views
-
-
காணாமல் போன உறவுகளும் அது தந்த வலிகளும்
-
- 8 replies
- 1.2k views
-
-
கறுப்பான கல்லில் சாமியை காண வெறுப்பு கறுப்பான தோழனுக்கு - கறுப்புச் சட்டை. கொரோனாவை விடக் கொடுமை இது.
-
- 6 replies
- 1.2k views
-
-
மேலும் தனித்துவமான சிந்தனைகளை அறிந்திட தொடருங்கள் தொடர்பு வேண்டாம் ஈழத்தமிழன் இன்ஸ்டாகிராம் இணைப்பு
-
- 1 reply
- 1k views
-
-
வன்னி மக்களும் முள்ளிவாய்க்காலும் அது தந்த வலிகளும்
-
- 2 replies
- 942 views
-
-
மரம் சொன்ன கதை..! அழகான மரங்கள் அழகான பூக்கள் அத்தோடு.. நாங்கள் தரும் பழங்களும் காய்களும் மட்டுமே உங்கள் கண்களுக்கும் வாய்க்கும் ருசிக்கிறது நீர் தேடி உணவு தேடி அலைகின்ற எங்கள் வேர்களை எவருக்குமே தெரிவதில்லை. அதுபோலத்தான் உங்கள்.. தாய் தந்தையரும் வேர்களே! மறந்திடாதீர்கள். -பசுவூர்க்கோபி-
-
- 4 replies
- 998 views
-
-
கடைசி ஆயுதத்தையும் ஐயா கையில எடுத்துப் பார்த்தார் சமரச அரசியலோடு சமாதானம் வரும் என்று சிங்கக் கோ(கொ)டியை உயர்த்திப் பிடித்தார் ஐயா பாவம் இப்போ வெறும் கையோடு நிற்கிறார் அடுத்த தேர்தலைப் பார்த்தபடி அது சரி அவன் கொடுத்தா தானே ஐயாவும் வேண்டித் தருவார் சும்மா சொல்லுங்கோ ஐயா தீபாவழிக்குள் தீர்வு கிடைக்கும் என்று பாவம் சனம் நம்பி வந்து வாக்குப் போடும் ஏமாந்தே பழகப்பட்ட சனம் நாங்க ஐயா இந்தியா வரும் என்றே இருந்த சனங்க நாங்க ஐயா ஆன அவனும் இவனும் முழுசா தின்று முடிச்சான் முள்ளிவாய்க்காலை ஐயா இன்னும் ஒரு முறை ஏமாறுவதில் என்ன குறை ஐயா புலிகள் போனால் சமாதானம் வரும் என்ற சனத்தையும் சந்திச்சுப் ப…
-
- 2 replies
- 899 views
-
-
நேற்று(25.06.20) எங்கள் வீட்டில் இருந்து (நெதர்லாந்து) 20 கிலோமீற்றர் தூரத்தில்அமைந்துள்ள கெர்சன்பழமரத்தோட்டம் (நெதர்லாந்து மொழியில் Kers ஆங்கிலத்தில்Cherry) போய் நாங்களே புடுங்கி பழத்துக்கான பணம் கொடுத்து வந்தோம். வரும்போது ஊரின் பழய நினைவுகள் வந்து என்னை வாட்டியது… கெர்சன்பழமே?எனிக்கிடைக்குமா எங்கள் பழம்..! கைப்பான வேம்பதிலும் கனி மஞ்சல் பழம் இனிக்கும் வெய்யில் எரிகையிலும் வேம்பேறிப் பழம் தின்ற.. அக்கால நினைவு வந்து அழுகிறேன் இவ்வேளை. கரும்பனையின் பனம் பழத்தை “காடி”யினில் குளைத் தெடுத்து விரல் இடுக்கில் தேன் வடிய விரும்பி உண்ட.. அக்கால நினைவு வந்து …
-
- 18 replies
- 2.8k views
-
-
இன்றைய நாள்(31.05.2020) 39 ஆண்டுகளுக்கு முன் கல்வி ஒளி தந்த யாழ் நூலகத்தின் கடசிநாள். எரியூட்டி எரித்த எதிரிகளும் வெட்கப்படும் நாள். உயிரோடு எரிந்த யாழ் நூலகம்..! 1959இல் ஆலமரமாய் யாழ்நகர் நடுவில் ஆயிரக்கணக்கில் ஓலைச்சுவடிகள் கோப்புக்களோடு.. தொண்நூற்றி ஏழாயிரம். தமிழ்,ஆங்கில.. தொன்மைநிறைந்த புத்தகக் குவியல்கள் எங்களின்.. கல்விக்கண்ணை திறந்த கோயிலாய் காலம் முழுதும்-அந்த ஒளியில் வாழ்ந்தோம். ஏசியாவின் முதல்தரப் படிப்பகம் என்ற பெருமையும் எமக்குக் கிடைத்தது. தமிழனின் உயிரோ கல்விதான் என்று கண்டான் அன்றைய ஆட்சியின் கொடிய…
-
- 2 replies
- 1.1k views
-
-
தனிமை கூட இனிமையே… உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் என் தனிமை கூட இனிமையே நான் தனிமையாய் இருப்பதாய் பிறர் நினைக்கலாம் என் இல்லம் முழுவதும் நீ நிறைந்திருக்க என் உள்ளம் முழுவதும் நீ குடியிருக்க என் நிழலாக நீயும் உன் நினைவாக நானும் வாழும் இவ் வாழ்வில் என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை. நூன் அழகாக உடுத்துகையில் நீ அருகிருந்து ரசிப்பதாய் நான் மகிழ்வாகச் சிரிக்கையில் நீ மன நிறைவாய்ப் பார்ப்பதாய் நான் தனிமையில் இருக்கையில் என் தலை வருடி நெகிழ்வதாய் நான் மனம் சோரும் வேளையில் நீ கனிவாக அணைப்பதாய் என் அழுகையில் என் சிரிப்பில் என் உணர்வினில் என் உயிரில் அத்தனையிலும் நீ துணையிருக்க என் தனிமைக்கேது கொடுமை உன் ந…
-
- 4 replies
- 899 views
-
-
மீண்டெழுதல்-resilience-பா.உதயன் மனிதன் உலகத்தை தேடுகிறான் உலகம் மனிதனைத் தேடுகிறது தடைகளை உதைத்தபடி நம்பிக்கை இழக்காமலே மீண்டும் மீண்டெழ உலகமும் மனிதனும் காத்திருக்கிறது. பா.உதயன்
-
- 3 replies
- 1.2k views
-
-
அடுத்த வீட்டு அம்பிகா மாமி ஆருக்கும் ஒன்றும் குடா கசவார மாமி இவோ கையை விட்டு காசை எடா வட்டி போட்ட குட்டிகளை பாங்கில போட்டு பிட்டு கடைசி மட்டும் கடைக்கு போக காய் பிஞ்சு வேண்ட மாட்டா கையில ஒட்டின சோத்தை கூட காக்கைக்கும் போட மாட்டா அறம் செய்ய விரும்பு என்று அந்த ஔவையார் போல் நடிப்பு வேற பக்தி என்றும் முக்தி என்றும் பல கதைகள் விடுவா மாமி படிப்பது தேவாரம் இடிப்பது கோவில் கதை மட்டும் அளக்க கந்தசாமியார் கோவிலில் காலையும் மாலையும் காணலாம் மாமியை உறுட்டிப் பிரட்டி கதை விடுவா உண்மையை மட்டும் ஒளித்திடுவா அடுத்தவரை அப்ரிஸியேட் பண்ணுகிற பழக்கமில்லை ஆனா உதவு மட்டும் கேட்டுப் பிட்டு மறந்…
-
- 5 replies
- 1.8k views
-
-
என்னால் சுவாசிக்க முடியவில்ல-பா.உதயன் உலகுக்கு ஜனநாயகம் கற்பிக்கும் உலகப் போலீஸ்காரனின் உண்மை முகத்தை உலகம் கண்டுகொண்டது காறி துப்புகிறது மனிதம் இவன் முகத்தில் இனி யாருக்கு தேவை உன் உபதேசம் என்றே இனவாதம் மீண்டும் வெள்ளைத் திமிரோடு தான் இன்னும் இருக்கிறது நான் வேறு நீ வேறு என்று கழுத்தை நெரிக்கிறது கறுப்புச் சிறுவனும் வெள்ளைச் சிறுமியும் கை கோர்த்துப் போகும் கனவுகள் எல்லாம் இறந்து கிடக்கிறது மார்ட்டின் லூதரின் இறுதி மூச்சோடு. பா.உதயன் ✍️ one day right there in Alabama little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. I …
-
- 2 replies
- 804 views
-
-
தாய்மடி நோக்கி..! கிராமத்தில் வாழ்ந்தேன் நகரம் பிடித்தது நகரத்தில் வந்தபின் நரகமாய் ஆனது. கட்டிடக் காடும் இயந்திரக் கடலும் நெத்திரை குன்றிய நேரத்தின் வேகமும். புல் தரை பொசுக்கும் சூரிய எரிச்சலும் புளுங்கிக் குளிக்கும் வாகன நெருச்சலும். வந்த எனக்கு வாட்டுது நகரம்-இங்கு நெருப்புக்கும் காசு நீருக்கும் காசு அனைத்துப் பொருளோடு அன்புக்கும் காசு மூச்சுக்காற்றும் காசுக்கு வருமுன்.. முடிவாய் இருக்கிறேன்-என் கிராமத்தை நோக்கியே.. -பசுவூர்க்கோபி-
-
- 2 replies
- 655 views
-
-
கிருமியும்,கிராமத்தின் கவலையும்..! வண்டில் மாடும்,ஏரால் தீட்டும் வர்ணமும் பனையும்,தென்னையும் வாய்க்கால்,வரம்பும் கோயில்,குளமும் ஆடும்,மாடும் மூலிகைச்செடிகளும் தோட்டமும்,துரவும். முன்னோர் வாழ்வின் முதுசங்கள் இவைகள் என்மேல் அவர்களின் இருப்பும்,பாசமும் உங்களுக்கேனோ இல்லாமல் போனது. பட்டணம்,நகரமென படையெடுத்து போயிருந்து பழயவள் எனச்சொல்லி பழித்தீர்கள் என்னையும். கிராமத்தான் என்று கேலிபண்ணுவார்களென நகரத்து பெயர்களையே “நா” கூசாமல் சொன்னீர்கள் பக்கத்து வீட்டானின் பகட்டு வாழ்வைநம்பி காரும்,வீடும் கடன் பட்டே …
-
- 11 replies
- 2k views
-
-
புலம் பெயர் தேசங்களில் வாழும் பெற்றோர்களே…ஆங்கிலம்,பிரான்ஞ்,டொச்,டச்,டெனிஸ்,என பலமொழிகளில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு கட்டாயம் தமிழ் மொழியின் அவசியம் பற்றி நெதர்லாந்து மேடையொன்றில் படித்த சிறு கவிதை இது. தமிழே பொது மொழி அதுவே உயிர் மொழி..! சின்னம் சிறார்கட்கு சிறந்த நம் தமிழ் மொழியை சிந்திக்க வைக்க-பெற்றோரே சிந்தியுங்கள் சிறப்பாகும். பிற மொழிகள் படிப்பித்து பெரியோர்களாகினாலும்-எம் பிறப்பு மொழியில்லை என்றால் பெற்றோர்களும் இல்லை பேரனுடன்,பேத்தியுடன் பேசவேண்டும் என்றெண்ணி பாசமுடன் பெற்றோர்கள் பல மைல்கள் அங்கிருந்து நேசமுடன் தொடர்பெடுத்தால் ஓப்பா,ஓமா என ஒரு கு…
-
- 0 replies
- 1k views
-
-
We say aloud, “we are Americans” Two deadly viruses Killing Americans now! One is COVID 19, the other is RACISM. All the guns are here, only to shot towards heaven. Wings cut off the blackbirds Crushing the human heads... Here, in the legal world! There is nothing to speak in the depths of darkness Here - no one says "welcome" They only say "Go home" Never pronounced the word "justice" …
-
- 1 reply
- 910 views
-
-
நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி ஓடுகிறது காலம் கொடிய கொரோனா எனும் உயிர் பறிக்கும் அவலத்தால் முன்னேற் பாடாய் பரவாது , தனித்திருக்க வைக்க படட மனிதரை ஏக்கம் வாட்டுகிறது துள்ளித்திட்ட திரிந்த பள்ளிப்பிள்ளை அடக்கி வைக்க படுகிறது சற்று விளையாட விடடால் கணினியும் கை பேசியுமாய் அலைகின்றனர் தூக்க நேரம் குழம்புகிறது சோம்பலும் சோர்வும் கூடவே கொறிக்கும் தீனிகளும் உடலைக் கெடுக்கிறது கண்டதையும் வாயில் போட்டு மெல்ல வைக்கிறது அம்மாவுக்கு வீட்டிலிருந்து வேலை, அப்பாவுக்கு குழந்தையை பராமரிக்கும் வேலை பொறுமையீனம் எட்டிப் பார்க்க எப்போதடா வெளியில்போவோம் என மனம் ஏங்குகிறது கொண்டாட்டங்களி…
-
- 3 replies
- 1.4k views
-