Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. இன்றைய நாள்(31.05.2020) 39 ஆண்டுகளுக்கு முன் கல்வி ஒளி தந்த யாழ் நூலகத்தின் கடசிநாள். எரியூட்டி எரித்த எதிரிகளும் வெட்கப்படும் நாள். உயிரோடு எரிந்த யாழ் நூலகம்..! 1959இல் ஆலமரமாய் யாழ்நகர் நடுவில் ஆயிரக்கணக்கில் ஓலைச்சுவடிகள் கோப்புக்களோடு.. தொண்நூற்றி ஏழாயிரம். தமிழ்,ஆங்கில.. தொன்மைநிறைந்த புத்தகக் குவியல்கள் எங்களின்.. கல்விக்கண்ணை திறந்த கோயிலாய் காலம் முழுதும்-அந்த ஒளியில் வாழ்ந்தோம். ஏசியாவின் முதல்தரப் படிப்பகம் என்ற பெருமையும் எமக்குக் கிடைத்தது. தமிழனின் உயிரோ கல்விதான் என்று கண்டான் அன்றைய ஆட்சியின் கொடிய…

  2. தனிமை கூட இனிமையே… உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் என் தனிமை கூட இனிமையே நான் தனிமையாய் இருப்பதாய் பிறர் நினைக்கலாம் என் இல்லம் முழுவதும் நீ நிறைந்திருக்க என் உள்ளம் முழுவதும் நீ குடியிருக்க என் நிழலாக நீயும் உன் நினைவாக நானும் வாழும் இவ் வாழ்வில் என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை. நூன் அழகாக உடுத்துகையில் நீ அருகிருந்து ரசிப்பதாய் நான் மகிழ்வாகச் சிரிக்கையில் நீ மன நிறைவாய்ப் பார்ப்பதாய் நான் தனிமையில் இருக்கையில் என் தலை வருடி நெகிழ்வதாய் நான் மனம் சோரும் வேளையில் நீ கனிவாக அணைப்பதாய் என் அழுகையில் என் சிரிப்பில் என் உணர்வினில் என் உயிரில் அத்தனையிலும் நீ துணையிருக்க என் தனிமைக்கேது கொடுமை உன் ந…

    • 4 replies
    • 906 views
  3. மீண்டெழுதல்-resilience-பா.உதயன் மனிதன் உலகத்தை தேடுகிறான் உலகம் மனிதனைத் தேடுகிறது தடைகளை உதைத்தபடி நம்பிக்கை இழக்காமலே மீண்டும் மீண்டெழ உலகமும் மனிதனும் காத்திருக்கிறது. பா.உதயன்

    • 3 replies
    • 1.3k views
  4. அடுத்த வீட்டு அம்பிகா மாமி ஆருக்கும் ஒன்றும் குடா கசவார மாமி இவோ கையை விட்டு காசை எடா வட்டி போட்ட குட்டிகளை பாங்கில போட்டு பிட்டு கடைசி மட்டும் கடைக்கு போக காய் பிஞ்சு வேண்ட மாட்டா கையில ஒட்டின சோத்தை கூட காக்கைக்கும் போட மாட்டா அறம் செய்ய விரும்பு என்று அந்த ஔவையார் போல் நடிப்பு வேற பக்தி என்றும் முக்தி என்றும் பல கதைகள் விடுவா மாமி படிப்பது தேவாரம் இடிப்பது கோவில் கதை மட்டும் அளக்க கந்தசாமியார் கோவிலில் காலையும் மாலையும் காணலாம் மாமியை உறுட்டிப் பிரட்டி கதை விடுவா உண்மையை மட்டும் ஒளித்திடுவா அடுத்தவரை அப்ரிஸியேட் பண்ணுகிற பழக்கமில்லை ஆனா உதவு மட்டும் கேட்டுப் பிட்டு மறந்…

    • 5 replies
    • 1.8k views
  5. என்னால் சுவாசிக்க முடியவில்ல-பா.உதயன் உலகுக்கு ஜனநாயகம் கற்பிக்கும் உலகப் போலீஸ்காரனின் உண்மை முகத்தை உலகம் கண்டுகொண்டது காறி துப்புகிறது மனிதம் இவன் முகத்தில் இனி யாருக்கு தேவை உன் உபதேசம் என்றே இனவாதம் மீண்டும் வெள்ளைத் திமிரோடு தான் இன்னும் இருக்கிறது நான் வேறு நீ வேறு என்று கழுத்தை நெரிக்கிறது கறுப்புச் சிறுவனும் வெள்ளைச் சிறுமியும் கை கோர்த்துப் போகும் கனவுகள் எல்லாம் இறந்து கிடக்கிறது மார்ட்டின் லூதரின் இறுதி மூச்சோடு. பா.உதயன் ✍️ one day right there in Alabama little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. I …

    • 2 replies
    • 807 views
  6. தாய்மடி நோக்கி..! கிராமத்தில் வாழ்ந்தேன் நகரம் பிடித்தது நகரத்தில் வந்தபின் நரகமாய் ஆனது. கட்டிடக் காடும் இயந்திரக் கடலும் நெத்திரை குன்றிய நேரத்தின் வேகமும். புல் தரை பொசுக்கும் சூரிய எரிச்சலும் புளுங்கிக் குளிக்கும் வாகன நெருச்சலும். வந்த எனக்கு வாட்டுது நகரம்-இங்கு நெருப்புக்கும் காசு நீருக்கும் காசு அனைத்துப் பொருளோடு அன்புக்கும் காசு மூச்சுக்காற்றும் காசுக்கு வருமுன்.. முடிவாய் இருக்கிறேன்-என் கிராமத்தை நோக்கியே.. -பசுவூர்க்கோபி-

    • 2 replies
    • 659 views
  7. கிருமியும்,கிராமத்தின் கவலையும்..! வண்டில் மாடும்,ஏரால் தீட்டும் வர்ணமும் பனையும்,தென்னையும் வாய்க்கால்,வரம்பும் கோயில்,குளமும் ஆடும்,மாடும் மூலிகைச்செடிகளும் தோட்டமும்,துரவும். முன்னோர் வாழ்வின் முதுசங்கள் இவைகள் என்மேல் அவர்களின் இருப்பும்,பாசமும் உங்களுக்கேனோ இல்லாமல் போனது. பட்டணம்,நகரமென படையெடுத்து போயிருந்து பழயவள் எனச்சொல்லி பழித்தீர்கள் என்னையும். கிராமத்தான் என்று கேலிபண்ணுவார்களென நகரத்து பெயர்களையே “நா” கூசாமல் சொன்னீர்கள் பக்கத்து வீட்டானின் பகட்டு வாழ்வைநம்பி காரும்,வீடும் கடன் பட்டே …

  8. புலம் பெயர் தேசங்களில் வாழும் பெற்றோர்களே…ஆங்கிலம்,பிரான்ஞ்,டொச்,டச்,டெனிஸ்,என பலமொழிகளில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு கட்டாயம் தமிழ் மொழியின் அவசியம் பற்றி நெதர்லாந்து மேடையொன்றில் படித்த சிறு கவிதை இது. தமிழே பொது மொழி அதுவே உயிர் மொழி..! சின்னம் சிறார்கட்கு சிறந்த நம் தமிழ் மொழியை சிந்திக்க வைக்க-பெற்றோரே சிந்தியுங்கள் சிறப்பாகும். பிற மொழிகள் படிப்பித்து பெரியோர்களாகினாலும்-எம் பிறப்பு மொழியில்லை என்றால் பெற்றோர்களும் இல்லை பேரனுடன்,பேத்தியுடன் பேசவேண்டும் என்றெண்ணி பாசமுடன் பெற்றோர்கள் பல மைல்கள் அங்கிருந்து நேசமுடன் தொடர்பெடுத்தால் ஓப்பா,ஓமா என ஒரு கு…

  9. Started by theeya,

    We say aloud, “we are Americans” Two deadly viruses Killing Americans now! One is COVID 19, the other is RACISM. All the guns are here, only to shot towards heaven. Wings cut off the blackbirds Crushing the human heads... Here, in the legal world! There is nothing to speak in the depths of darkness Here - no one says "welcome" They only say "Go home" Never pronounced the word "justice" …

    • 1 reply
    • 914 views
  10. நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி ஓடுகிறது காலம் கொடிய கொரோனா எனும் உயிர் பறிக்கும் அவலத்தால் முன்னேற் பாடாய் பரவாது , தனித்திருக்க வைக்க படட மனிதரை ஏக்கம் வாட்டுகிறது துள்ளித்திட்ட திரிந்த பள்ளிப்பிள்ளை அடக்கி வைக்க படுகிறது சற்று விளையாட விடடால் கணினியும் கை பேசியுமாய் அலைகின்றனர் தூக்க நேரம் குழம்புகிறது சோம்பலும் சோர்வும் கூடவே கொறிக்கும் தீனிகளும் உடலைக் கெடுக்கிறது கண்டதையும் வாயில் போட்டு மெல்ல வைக்கிறது அம்மாவுக்கு வீட்டிலிருந்து வேலை, அப்பாவுக்கு குழந்தையை பராமரிக்கும் வேலை பொறுமையீனம் எட்டிப் பார்க்க எப்போதடா வெளியில்போவோம் என மனம் ஏங்குகிறது கொண்டாட்டங்களி…

    • 3 replies
    • 1.5k views
  11. அரசியல் ஆட்சி பிழைத்திடும்வேளையில் அறம் கூற்றாகும் என்றார் ---ஆன்றோர் அறம் கூற்றாகும் என்றார். கூற்றனும் வரவில்லை, கொள்தலும் நிகழலை,அரசியல் பிழைக்கலியோ ? இல்லை, அறனும் கொலையானானோ ? பள்ளிக்குச் செல்லும்பாலகர்,முதியவர் பால் குடி மழலை எல்லாம்,அன்று பால்குடி மழலை எல்லாம் முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்தழித்தானே முழுப்பெரும் சேனையுடன்,பாவி முழுப்பெரும் சேனையுடன். அண்ணனும் தம்பியும் ஆனஅவர் சேனையும் ஆட்சியில் கோலோச்சிறார் இன்றும் ஆட்சியில் கோலோச்சிறார் அனைத்தையும் இழந்திட்ட அப்பாவி மனிதர்கள்அழுதுதான்வடிக்கின்றாரே உறவை நினைத்திங்கு மாய்கின்றாரே அநீதிக்கு ஆட்சியும் நீதிக்குப் பாடையும் ஆண்டவா நீதி எங்கே உந்தன் அருள் ஆட்சி செத்ததிங்கே …

    • 2 replies
    • 1.2k views
  12. அணையா நெருப்பாய் ஆண்டுகள் முப்பத்தாறு உரிமைக்காய் சுழன்றடித்த ஊழித்தீ தன் உயிர் நெய்யூற்றி தான் வாழவன்றி செந்தமிழ் வாழ சொந்தங்கள் செழிக்க செருக்காய் ஒரு தேசம் அமைக்க சோர்வின்றி எரிந்தது.! தேசங்கள் பல பொறாமை கொள்ள முள்முடி தரித்து முள்ளிவாய்க்காலில் ஊதியணைக்கப்பட்டது அந்த உரிமைத் தீ. காலக் கடிகாரத்தின் கரம் ஒன்று ஒடிந்து தசாப்தம் ஒன்று ஆனது தமிழுக்கு. கரிகாலன் படையது கரிந்தே போனது பொஸ்பரஸோடு மல்ரிபரல்கள் தூவிய கந்தகப் புயலுக்குள். கருவிற் சுமந்த சிசுக்களாய் புலிகள் சுமந்த - மக்கள் சிதைந்தே போயினர் சிங்களத்தான் …

    • 7 replies
    • 1.4k views
  13. 35வருடங்கள் சென்றாலும் மறக்கமுடியாத இந்தநாள்.. 15.05.1985 அன்று நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்நோக்கி வந்த குமுதினிப் படகின் அன்றைய அரசின் கோரத்தாண்டவத்தினால் நீரினிலே நினைவிழந்த 36 உடன் பிறப்புகளுக்காக நினைவு சுமந்த எனது குரல் வடிவக் கவிதை தந்துள்ளேன். இந்தக்கவிதையை கேட்க click here <--

    • 4 replies
    • 1.4k views
  14. “கடிதங்களின்” கவலை..! எங்களை இப்போது எவருக்கும் தெரிவதில்லை தொழில் நுட்பமென்னும் தூரதேசம் பேச, எழுத.. பல நுட்பம் வந்ததனால் எங்களை இப்போது எவருக்கும் தெரிவதில்லை. அந்தக்காலத்தின்-நாம் அன்பின் பாலங்கள்.. பிரிந்து வாழ்ந்தாலும் பிரியமுடன் வாழ்ந்தாலும் எங்களைத்தான் எதிர் பார்த்தே ஏக்கமுடன் இருப்பார்கள். ஊர் விட்டுத் தள்ளிப்போன உறவுகளின் உணர்வுகளை வேர் இருக்குமிடம்பார்த்து விருப்போடு நாம் வருவோம். அந்தகிராமத்தின் அதிகாரிகளை தெரியாது ஆனால்.. குஞ்சு குருமான்கள்,இளம் குடலை, பெரியோர்கள் எல்லோர்க்கும் தெரிந்த முகம் எமை காவும் தபால் காரர் …

  15. நீயும் நானும் சமத்துவமாய் வாழும் காலம் பிறக்கலையே நீதி இல்லா பூமியிலே நின்மதியை காணலையே இரவும் பகலும் இயந்திரமாய் இன்னும் துயர் முடியலையே அடிமை வாழ்வு தொலையலையே எங்கள் பசி தீரலையே பா.உதயன்

    • 0 replies
    • 479 views
  16. உன் நினைவே..! எனது கிராமத்தில்.. கள்ளிச்செடிகூட முள்ளுக்குத்தாது காகிதப்பூக்கூட வாசனைதந்தது கடல்கற்கள் கூட காலில் குத்தாது காய்ந்த நிலம் கூட காவியம் தந்தது. உப்பு நீர்கூட இனிமை தந்தது உவர்க்காற்றுக்கூட தென்றலாய்த் தொட்டதது வளரும் மரம் செடி மூலிகையானதது வயதெல்லை முதியோற்க்கு நூறைக்கடந்தது சாமை வரகு நெல் சக்தி கொடுத்தது சத்துணவானதை பனை தென்னை தந்தது சரித்திரம் படைத்த- பல பெரியோர்கள் வாழ்ந்தனர். இப்போ… வெளிநாடு வந்து விறைத்துப்போகிறேன் வேலையும் குளிரும் வேசம் இழந்திட்டேன் பசுமைநாடே பாலைவனமானது படுக்கை மெத்தைக்குள் பல ஊசி குத்துது ஊரை நினைத்தே உறங்கிக் கொள்ளுறேன் ஒருநாள் வருவேன் உன்மடி தூங்க. -பசுவூர்க்கோபி-

    • 1 reply
    • 1.3k views
  17. என் அம்மா சமைச்சு போட்டா எங்க ஊர் முழுக்க வாசம் வரும் கருவாட்டு குழம்புக்கு கத்தரிக்காய் போட்டு வைப்பாள் எட்டு திக்கும் ஓடி வந்து எனக்கு ஒரு கை தா என்பர். காலையிலே தோசை சுட்டால் காக்கைக்கும் மணம் தெரியும் முருங்கை இலை முசுட்டை இலை அகத்தி இலை சுண்டி வைப்பாள் அடுத்த வீட்டு ஆன்டி வந்து அகத்தி இலை சுண்டல் கேப்பாள். ஐயோ இவள் அரைச்சு வைச்ச குழம்பு தின்ன அருகில் பூனை போல அடுப்படியில் பார்த்திருபோம் அப்பா கூட மூச்சு காட்டார் அம்மாவோட சமையலோட அருகில் ஒரு திண்ணயில அப்புவும் ஆச்சியும் குடிருப்பு ஆளுக்கு ஒரு கிண்ணத்தில அம்மா போட்டு குடுத்திடுவா பொக்கு வாயும் சிரித்து கேக்கும் அப்பு போடும் சத்தத்தில அம்மா அ…

    • 5 replies
    • 819 views
  18. வந்து போகின்ற ஆண்டும்,வரப்போகும் ஆண்டும்…! ******************** 2019..! ஆண்டொன்றை முடித்து அனைவருக்கும் அகவையெனும். விருதை வழங்கி வெளிக்கிடும் ஆண்டே வேதனையும் சோதனையும் வெற்றிகளும் தந்தவனே உன் வாழ்வில் போன உயிர் உன் மடியில் பிறந்த உயிர் என்றும் மறவோம் நாம்-எனி எமையாள யார் வருவார். 2020..! உன்னுக்குள் எமை வைத்து ஓராண்டு உன்வாழ்வின் எண்ணற்ற நிமிடமெல்லாம் எமைக்காக்க வருவாயே! புதிய உன் வரவால் பூமித்தாய் மலரட்டும் புதுமைகள் பிறக்கட்டும் இயற்கை செழிக்கட்டும் இன்னல்கள் அழியட்டும் பொய்,களவு பொறாமை போலியான வாழ்க்கை போதைக்கு அடிமை சாதி,மத சண்டை சரும நிற வெறித்தனம் அரசியல் சாக்கடை ஆதிக்…

  19. எத்தனையோ துன்பத்திலே உலகம் கிடக்குது எத்தனையோ துன்பத்திலே உலகம் கிடக்குது இரவு பகலாய் கொரோனா பிடிக்க மனிதன் அலைகிறான் ஆனா இம்பட்டுத்தான் வாழ்கை என்று ஒருத்தன் சொல்கிறான் இனி கடவுள் இருக்கா என்று வந்து குதர்க்கம் பேசுறான் முதலாளித்தும் முடியுது என்று சோசலிசம் சொல்லுது அந்த வல்லரசு நாட்டுக்கெல்லாம் வந்த வினை என்கிறான் கர்மம் வந்து தொலைக்குது என்று அந்த சாமி சொல்லுது அட அடுத்த நாள் உணவுக்காகா மனிதன் அழுகிறான் அவனுக்கு கடவுள் உண்டு இல்லை என்ற விவாதம் தேவையா இல்லை கர்மம் வந்து தொலைக்குது என்று சொல்லத் தேவையா இத்தனைக்கு நடுவினிலே மனிதம் துடிக்குது இனி என்ன செய்வேன் வாழ்வுக்கு என்று ஏங்கி துட…

    • 2 replies
    • 1.1k views
  20. எப்போது போலவே நான் இருந்த ஊர் இது இப்போ இல்லை நான் நடந்து திரிந்த பாதை இல்லை இது இப்போ இப்போ மனிதரையும் காணவில்லை சாலையில் இருந்த போதும் நகர்கிறது நம்பிக்கை மட்டும் நதி ஒன்று ஊர்ந்தது போல் இன்னும் ஓர் இயற்கையின் சங்கீத மொழிக்காய் காத்திருக்கிறது மனிதம் உயிர்த்து எழும் காலம் ஒன்றிற்காய் உன் மொழியோடு பேச நினைக்கிறது என் ஆன்மா.

    • 3 replies
    • 765 views
  21. கொடிய கிருமி.!கொரோனாவா? என்னைவிட யாருமுண்டோ இங்கு மண்ணில் உயர்ந்த ஜாதி நானே மற்றவர் எல்லோரும் கீழ்ஜாதி தானே எண்ணத்திலூறிய வெறியர்கள் ஒருபால் கறுப்பு வெள்ளைத் தோலினை பிரித்து கசக்கி பூவினை எறிவதைப்போலே உலகநாடுகள் சிலவற்றில் அடிமையாய் உழைப்பை உறுஞ்சும் கூட்டமும் ஒருபால் ஏழை எளியோர் வாழ்வைச்சுறண்டியே ஏப்பம் விடுகின்ற முதளாளிக்கூட்டம் பணத்தை சேர்த்தே கோடீஸ்வரனாய் படைத்தவன்போலே நினைப்பவன் ஒருபால் மதங்கள் சொல்லும் அறிவுரை மறந்து மதம் பிடித்து மாக்களாய் அலைந்து-தன் மதம் ஒன்றே உலகில் பெரிதென… பிரபஞ்சம் மறந்து பிதற்றுவோர் ஒருபால் அணுவுலை நிறுவி ஆயுதம் குவித்து …

  22. தேசம் சுமந்தவர்கள்-பா.உதயன்- I am building this bridge for him!” உலகத்தின் இருள் இன்னும் மறையவில்லை மானிடத்தின் அழகிய வாழ்வை எல்லாம் ஏதோ ஒன்று பறித்து செல்கிறது .தங்கள் இறுதிக் கால வாழ்வை அமைதியாக களிக்க வேண்டிய காலத்தில் எதிர்பாராதவகையில் முதியவர்களை பறித்து எடுத்துப் போகிறது இருள் சூழ்ந்த காலம் ஒன்று.இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக இந்த நகரங்களை தங்கள் தோள்களால் சுமந்து எழுப்பியவர்கள்.இதை நினைக்கும் பொழுது எல்லாம் அமெரிக்க கவிஞர் Will Allen Dromgoole எழுதிய (The Bridge Builder )பாலம் கட்டும் முதியவர் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது .ஒரு முதியவர் எந்த வலிகளையும் பார்க்காமல் பாலத்தை கட்டிக்கொண்டு இருக்க அதன் வழியால் சென்றவர் அவரை பார்த்து ஏ முதியவரே நீ இந்த உல…

    • 0 replies
    • 869 views
  23. Started by karu,

    கொரணா விளைவு மரணாவஸ்தையில் தவிக்கும் உலக மனித குலத்தை மீட்டிடக் கொடிய கொரணா வைரஸை இல்லாதொழித்துக் கொண்டாடும் நாள் எந்த நாளோ. சுற்றம் கூடி அன்போடிருந்து சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டு சற்றும் பயமே இல்லாதிருந்து சந்தோஷிக்கும் நாள் எந்நாளோ செல்லும் விருந்தை வாழ்த்தியனுப்பி சேரும் விருந்தை அன்போடழைத்து பொல்லாக் கொரணா இல்லா மகிழ்வில் பொழுதைக் கழிக்கும் நாள் எந்நாளோ? அந்த நாளிவ் அவனிக்(கு) உதிக்குமா? அனைவருமொன்றாய்ச் சேர்ந்திட வருமா? சிந்தையிலெந்தச் சந்தேகங்களும் சேராதுறவுகள் சிரித்திட முடியுமா? உற்றவர் கூடி உகுத்துக் கண்ணீர் ஊரின் புறத்தே தூக்கிச்செ…

    • 4 replies
    • 1.2k views
  24. Poverty will kill them before the virus Developing countries face economic collapse in Coronavirus fight, therefore the international financial organizations and rich nations must Protect Developing Nations from Coronavirus Pandemic.india’s Coronavirus lockdown means there are billions of people living with hunger .SriLanka , Pakistan ,Bangladesh facing the same problems. சுமக்க முடியாத சுமைகளை சுமந்தபடியே பெரியவர் குழந்தைகள் என தாண்ட முடியாத ஒரு தூரத்தை தாண்ட முயற்சிக்கின்றனர் நிலவின் துணையோடு நீண்டதூரம் போகிறார்கள் அன்று ஒரு நாள் போர் தின்று முடித்த பூமியில் இருந்து போனவர் போலவே ஏதோ விதி என்றும் சிலர் தமக்குள் பேசிக்க…

    • 0 replies
    • 909 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.