கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
"போனால் போகட்டும் போடா" "போனால் போகட்டும் போடா மனிதா போதை போனதும் தெரியுது உலகமடா ஆசை கொண்டு துள்ளித் திரிந்தேனே ஆரவாரம் செய்யாமல் அடங்கிப் போனேனே!" "ஈன இரக்கமின்றி அகந்தை கொண்டேனே ஈரக்கண் பலருக்கு என்னால் நனைந்ததே ஈன்ற பிள்ளைகளையும் மறந்து வாழ்ந்தேனே இன்று பாடை தூக்கவும் யாருமில்லையே!" "ஊடல் கொண்டு சென்ற மனைவியை கூடல் கொண்டு அள்ளி அணைக்காமல் தேடி ஒருவளுடன் துய்த்து மகிழ்ந்தேனே ஊமையாய் இன்று உறங்கிக் கிடக்கிறேனே!" "உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உணர்ச்சி மட்டும் வாழ்வென நம்பி உள்ளதையும் இழந்து நோயையும் பிடித்து ஒதுங்கி தனித்து சுடுகாட்டில் படுக்கிறேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்திய…
-
- 0 replies
- 314 views
-
-
"எங்கு சென்றாய்?" [கசல் கவிதை] "காதல் தந்தாய் காத்திருந்தேன் நாள் முழுவதும்! வேதனை படுத்தி சோதனை செய்யவா எங்கு சென்றாய்?" "அழகிய உடல் ஆனந்தம் தந்தது! அருகில் இல்லாமல் தூர விலகினாயே எங்கு சென்றாய்?" "கொஞ்சும் பேச்சில் நெஞ்சைப் பறித்தவளே! வஞ்சக மனத்துடன் கஞ்சத்தனம் வேண்டாம் எங்கு சென்றாய்?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 2 replies
- 361 views
-
-
கண்ணிற்குள் நின்றவள் கருத்தினில் திரிந்தவள் தூக்கத்திலும் துணையவள் வார்த்தைகளின் வரமவள் கற்பனையின் தாயவள் இன்னொரு பெண்ணினை அணைக்கையிலும் அகலாது நின்றவள்... காமத்திலே பேசாது சிரிப்பாள் சோகத்திலே நான் ஊறங்க மடி தருவாள்! சொற்கள் இல்லை என்னிடம் திருடிச் சென்றவளே நீ எவ்விடம்? பொருள் தேடி நான் போகையிலே இருள் எல்லாம் எனக்குள் கொட்டி அருள் இன்றிப் போனாயடி... இறைக்காத கிணறு போல் பிறக்காத பிள்ளையை எண்ணிக் கலங்கும் தாயைப் போல் வார்த்தைகள் இன்றி தவிக்கிறேனடி... தாயே தமிழே என் தளர்வெல்லாம் போக்கும் கவிதாயினியே இனி என்று வருவாய் என்னிடம்...?
-
- 0 replies
- 1.6k views
-
-
யாரென்றால்! --------------- நேற்றும் வாழ்ந்தார்கள் இன்றும் வாழ்கிறார்கள் நாளையும் வாழ்வார்கள் யாரென்றால் இனத்துக்காக ஈகம் புரிந்த மாவீரர்கள்!
-
- 8 replies
- 1.6k views
-
-
செந்தமிழ் நாடு செந்தமிழ் நாடென்னும் போதினிலே – கொடுந் தீவந்து பாயுது காதினிலே – அங்கு எம்தமிழ் பாடையில் ஏறியுலாவரல் எண்ண எரியுது நெஞ்சினிலே. ஆயிரம் கோடிக்கணக்கில் சுருட்டி அடைபட்டு மீண்டவர் வந்திடினும் தாவியவர்கள் தயவினுக்காகவே தாழ்பணிந்தேத்தும் தமிழ்நாடு வாழ்வினில் ஊழல் பலபுரிந்தார்க்கும் வணக்கங்கள் செய்து மதிப்பளித்தே காவிய நாயகராக்கி அவரைக் கதிரையில் வைக்கும் தமிழ்நாடு மக்கள் பணத்தினைக் கொள்ளையடித்துத் தம் மக்கள் மருமக்கள் வாழ்வு பெற திக்கெட்டும் சொத்துக்கு வித்தவர் காலினை நக்கிபிழைப்பவர் வாழ்நாடு அன்னை தமிழின் அருமை மறந்து பொய் ஆங்கில மோகம் தனி…
-
- 2 replies
- 1.2k views
-
-
மஹாகவி உருத்திரமூர்த்தியின் சாதியம் தொடர்பான கவிதை எனது குரலில் https://youtu.be/no-2WHQ7ti0
-
- 10 replies
- 3k views
-
-
மொழித்திறன் கவிதை ] / "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] & "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] "அன்பின் பரிசில் காதலியைப் பொறித்து அழகாக மலர்களால் வடிவு அமைத்து அருகில் அணுகி கட்டி அணைத்து அகவைத் தின வாழ்த்து கூறாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ...................................................................... "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "பொட்டு வெளிச்சம் இல்லாத இரவில் பொட்டு வழியாகப் புகுந்து வந்தான் மட்டு மரியாதை நன்கு தெரிந்தவன் பொட்டு இட்டு என்னை அணைத்தான் பட்டு மேனியைத் தொட்டுப் பார்த்தான் கட்டு உடல் கொண்ட அழகன்!"…
-
- 1 reply
- 454 views
-
-
'ஊன்றுகோல்' காத தூரத்தையும் நொடியில் கடந்து காற்றைக் கிழித்து ஓடிய கால்கள் காடு மேடு அளந்த பாதம் காலக் கொடுமையால் துணை தேடுது! பூண் சூட்டிய நுனியைப் பிடித்து கண்ணின் மங்கிய ஒளியில் பார்த்து மண்ணைத் தடவி மெல்ல நடக்கிறேன் வண்ணக் கொடியாளாக இன்று ஊன்றுகோல்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1933 ['ஊன்றுகோல்'] https://www.facebook.com/groups/978753388866632/posts/32731437279838163/?
-
- 0 replies
- 154 views
-
-
ஓடி விளையாடு பாப்பா ஓயாமல் படித்துவிடு பாப்பா கூடி விளையாடு பாப்பா குறைக்கூறலாகாது பாப்பா அகிலத்தில் உயர்ந்தது அன்பு அனைவருக்கும் வேண்டும் நற்பண்பு அன்னைக்கு இணையில்லை எதுவும் ஆசானுக்கு தெய்வமும் பணியும் பசிக்கு உணவிடல் தர்மம் பாவத்தால் தொடரும் கர்மம் பாதகத்தைக் களைத்திடு நீயும் பாருக்குள் செழித்திடும் நேயம் ஆதியில் இல்லையடி சாதி அறவாழ்விற்கு வேண்டுமடி நீதி மெய்க்கு துணையாகும் உயிரும் மெய்ஞானத்திற்கு துணயாகி உயரும் பஞ்சப்பூதத்தின் தனித்துவம் செந்தீ பாரதத்தின் அமரத்துவம் பாரதி பெண்ணுரிமைக்கு வித்திட்டான் மகாகவி பெண்கல்விக்கு அவனே இறைவி அறியாமை அகற்றிடு பாப்பா ஆக்கமாய் உழைத்திடு பாப்பா ஆணவம் நிலைக்காது பாப்பா …
-
- 0 replies
- 548 views
-
-
"பாட்டி வாரார் பாட்டி வாரார்" [இரண்டு பாட்டிகளின் கதை] "பாட்டி வாரார் பாட்டி வாரார் பார்த்து படியில் கால் வைத்து பாதியில் நின்று கை காட்டி பாட்டி வாரார் பாட்டி வாரார்" "பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் பாலகனுக்கு கலந்து அன்புடன் ஊட்ட பாவம் பாட்டி இந்த வயதிலும் பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்" "பாடி ஆடி விளையாட்டு காட்ட பால் கொடுத்து கதை சொல்ல பாயில் அணைத்து சேர்ந்து படுக்க பாக்கியம் பெற்றேனென மகிழ்ந்து வாரார்" "பாத்திரம் கழுவி வீடு துடைக்க பானை நிரம்ப சோறு காச்ச பாதை காட்ட நல்ல கதைசொல்ல பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்" ****************** "பாட்டி வாரார் பாட்டி வாரார் பாட…
-
- 0 replies
- 174 views
-
-
"பேதையே போதையேன்" "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே சிற்றிடையாள் ஒளவை அன்று கூறினாள் சினம் ஏன் இன்று உனக்கு ?" "பேதையே போதையேன் நானும் கேட்கிறேன் பேரறிவு கொண்ட தலைவனே சொல்லாயோ? பேச்சில் எதற்குத் தையல் மட்டும் பேரொலி உடன் விடலையைச் சேர்க்கையோ?" "தெண்கள் தேறல் மாந்தி மகளிரென தென்னாட்டு மூதை பாட்டுப் பாடினாள் தெளிவாகத் தெரியுது இருவரும் அருந்தினரென" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 607 views
-
-
மனக்குரங்கு கால் நீட்டி குந்தி இருந்தபடி கட்டளை இடுகிறது என் மனக்குரங்கு அதை கட்டிப்போட்டு சும்மா இரு என்று சொல்ல நான் என்ன புத்தனா புனிதனா ஆசையும் பாசமும் கொண்ட அந்த மனக்குரங்கு தானே அது ஆடி அடங்கும் வரையிலிம் எந்தக்கிளை வேண்டுமானாலும் தாவித் திரியட்டும் ஆசையும் பாசமும் அகன்று அந்த ஞானம் அடைந்தவனை அறியும் வரையிலும் இப்போதைக்கு இது இப்படியே இருந்து தொலையட்டும் .
-
- 3 replies
- 1.7k views
-
-
கடவுள் ஒரு கைப்பிள்ள! முன்பொரு நாளில்... கடவுளை மனிதன் படைத்தான்... அன்றிலிருந்து கடவுள் மனிதனைப் படைக்கத் தொடங்கினார்... தாயுமானார், தந்தையுமானார்... பின்னொரு நாளில்... "மகனே நந்தனா, உள்ளே வா" சொல்லத் தயங்கினார்... பதிலுக்கு "சற்றே தள்ளி இரும் பிள்ளாய்" திருவாய் மலர்ந்தார்... நிற்க... "எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்" "பஞ்ச்" அடிப்பதில் வல்லவர்... தன் பெயராலே ஓர் அதர்மம் தடுப்பதற்கோ அஞ்சினார்... இன்றொரு நாளில்... கடவுளுக்கு மனிதன் தேவையோ இல்லையோ தப்ப முடியாது... மனிதனுக்கு "கடவுள்த்தேவை" மிக அதிகம்... ஏனென்றால் கடவுள் ஒரு கைப்பிள்ள... - பராபரன்
-
- 4 replies
- 1.5k views
-
-
திலீபன் அழைத்தது சாவையா இந்த சதத்திற்கும் உதவாத தமிழ் சனத்துக்காகவா..?! மேலிருந்து பார்க்க என்னப்பா இருக்கு திலீபா.. கேடுகெட்டு குட்டிச்சுவராகிக் கொண்டிருக்குது பார் நீ கடந்து போன .. நீ விடுதலை வேண்டி நின்ற சனக் கூட்டம்.. சந்ததிகள் சில தாண்டி.!!
-
- 1 reply
- 892 views
-
-
Sri Lanka has withdrawn from a UN resolution that would allow war crimes allegedly committed during the country's civil war to be investigated. கண்ணை மூடி பால் குடித்த பூனை அத்தனை பொய்களையும் ஐ நா மனித உரிமை மன்றில் பேசிய அமைச்சரின் உரை பூனை கண்ணை மூடியபடி பால் குடிப்பது போல் இருந்தது அழகான ராஜதந்திர வார்த்தைகளும் அபிவிருத்தி என்றும் அரசியல் சாணக்கியத்தில் ஒளித்து இருந்தபடி இனவாதி பேராசிரியர் பீரிஸ் எழுதிக் கொடுத்ததை பெருமையாக வந்து வாசித்துப்போனார் அமைச்சர் அறம் அன்பு அடுத்தவர் துன்பம் எதையுமே அறியாதவர் இறுதியில் அந்த புத்தனின் தத்துவத்தை சாட்சிக்கு அழைத்து அந்த புத்தரையும் ஐ நா சபையையும் அவமதித்தது போல்…
-
- 4 replies
- 1.1k views
-
-
அறம் சிறக்க-நெஞ்சில் மறம் பிறக்க மானத் திறம் இருக்க இரும்புத் தோள்கள் கொண்டு தமிழர் துயர் துடைக்க ஈழ மண் விடுதலையடைய வியர்வை சிந்தி-தங்கள் அயர்வை மறந்து இளமைக் காலக் கனவைத் துறந்து கரிகாலன் படையில் இணைந்து நிலை தளராது-ஈழக் கனவினை மறவாது நெஞ்சில் உரம் இழக்காது நம்மை நம் நாட்டை நலம் பல பேணி நாளும் காத்து-மாற்றானுடன் வெஞ்சமர் புரிந்து-எதிரியை வீழ்த்தி தனித் தமிழீழம் பெற வழிகாட்டியே சந்தனப் பேழைகளில் உறங்கும் மாவீரர்களே!!!! சாகலின் நன்றோ அடிமையாய் வாழ்வது என உணர்ந்து வீறு கொண்டெழுந்து ஆண்டுகொண்டிருக்கும் சிங்கள பேரினவாதத்தின் பிடியினுள் மாண்டு கொண்டிருந்த எம் இனத்தினை மீண்டு கொண்டெழ உரிமை உணர்வினை தூண்டினீர்! உம்முடல் தன்னும் அதனுள் ஓடும் செங்குருதியும் உணர்வும் நரம்பும் எம் …
-
- 2 replies
- 1.1k views
-
-
நாட்களைக் கணக்கிடும்... --------------------------------- பிணங்களின் மேல் நின்று ரணங்களின் ஊற்றுகளில் நாட்களைக் கணக்கிடும் அதிகார அரசுகள்! அதிகாரப் பசிக்கு இரையாகும் மக்கள் சாவுகளைக் கணக்கிட சக்தியற்று நடைபிணங்களாய் தினறும் அவலம்! உலகப் போட்டியிலே உயிர்கள் கரைந்தழிய ஆயுத உற்பத்தி ஆலைகள் ஓய்வற்று இயங்கி புதிய ஆயுதங்களை விற்றுப் பெருத்தல் ஒருபுறமும் சோதித்துப் பார்த்தல் மறுபுறமாய் மனித உயிர்கள் மடிகின்றன! மனித வளமழிந்த இயற்கை வளச்சுரண்டலில் தமது நலன் தேடும் தேசங்களே கூச்சமென்பதே இல்லையா(?) இக் கொடுமைகளை நிறுத்தும் எண்ணம் உங்கள் மனங்களில் வராதா மனித வாழ்வை மண் மேடாக்கிவிட்டு மனித உரிமையென்று மேசையில் வி…
-
- 5 replies
- 648 views
-
-
வெள்ளிக்கிழமை வேலை ---------------------------------------- இன்று வெள்ளிகிழமை, ஏன் வேலை செய்ய வேண்டும் என்று மனம் கேட்கின்றது. உண்மையைச் சொன்னால் அது ஒவ்வொரு திங்கட்கிழமையிலிருந்தும் இதே கேள்வியையே கேட்கின்றது. முன்னர் ஒரு காலத்தில், வேலை செய்ய ஆரம்பித்து இருந்த நாட்களில், நாங்கள் இவ்வளவு வயது பிந்தி வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றோம், வேறு பல நாட்டவர்கள் 21 வயதுகளிலேயே ஆரம்பித்து விடுகின்றார்கள் என்று கவலை கூட பட்டும் இருக்கின்றோம். படித்து முடிப்போம் என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு படித்து முடிக்கவே எங்களுக்கு 26 அல்லது 27 அல்லது அதற்கு மேலும் வயதாகி விடுகின்றது. ஆனால், அந்த கூடுதலான ஐந்தாறு வருடங்களாவது நினை…
-
- 0 replies
- 405 views
-
-
"சிலுவையை மீண்டும் சுமப்போம்!" "உன்னை காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்! அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!" "உன்னை நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்! அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!" "உன்னை கண்டதால் தியாகம் அறிந்தோம் ச…
-
- 0 replies
- 368 views
-
-
தயவுடன் இந்த பரீட்சார்த்த கவிதைபற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள். கற்றுகொள்ள உதவும். . பாவைக் கூத்து - வ.ஐ.ச.ஜெயபாலன் * அம்ம வாழிய தோழி, பதிலுக்கு வாழ்த்தவும் மறந்து யார் அவன் யாரென மீண்டும் வினவுதி, உனக்கு வேறு வேலையே இலதோ? * அறிந்திலையோடி? மச்சு வீட்டின் காவல் மறந்து ஊரின் சந்து பொந்து மரத்தடி எல்லாம் காதல் குறுஞ்செய்தி பெய்து அலையுமே அந்த நாயின் சொந்தக்காரனடி. போயும் போயும் அவனையா கேட்டாய்? * அறம் இல்லாது ஒருத்தனுக் கெழுதிய காதல் சேதியை பிரதி பிரதியாய் பலருக்கு அனுப்ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
35வருடங்கள் சென்றாலும் மறக்கமுடியாத இந்தநாள்.. 15.05.1985 அன்று நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்நோக்கி வந்த குமுதினிப் படகின் அன்றைய அரசின் கோரத்தாண்டவத்தினால் நீரினிலே நினைவிழந்த 36 உடன் பிறப்புகளுக்காக நினைவு சுமந்த எனது குரல் வடிவக் கவிதை தந்துள்ளேன். இந்தக்கவிதையை கேட்க click here <--
-
- 4 replies
- 1.3k views
-
-
History Repeats Itself வரலாறுகள் சுழண்டு கொண்டு தான் இருகின்றன அன்று ஒரு நாள் ஈழத்து கிழவன் ஒருவன் சமஸ்டி கேட்டான் இதே காவி உடை கண்டியில் இருந்து வந்த ஊர்வலத்தால் கடைசி வரை துன்பம் தொடர்ந்தது இன்று ஒரு நாள் இன்னும் ஒரு கண்டி ஊர்வலம் இது முஸ்லிமுக்கு மட்டுமல்ல ஈழ தமிழனுக்கும் இது ஒரு எச்சரிக்கை இந்துவும் முஸ்லிமும் இனி இணைந்தால் ஒழிய இலங்கை பெரும் தேசியம் எப்பவும் அடங்காது இரண்டு மாநிலமும் இணைந்த தீர்வு ஒன்று தான் இந்துவுக்கு முஸ்லிமுக்கும் பாதுகாப்பாகும் .
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 1.3k views
-
-
யார் கடவுள்..! *************** நீ இருப்பாயென்று நானும் பிறக்கவில்லை யான் இருப்பேனென்று நீயும் பிறக்கவில்லை தாயிருந்தாள் பலருக்கு அவள் கூட இல்லை சிலருக்கு.. உலகில் பிறக்கும் உயிருக்குள் அவன் ஒழிந்திருப்பான் என்பதே உண்மை. அவன் மதத்துக்குள் அடங்காத மாபெரும் வெளி நீர்,காற்று,தீ,நிலம் ஆகாயம் அனைத்தும் அவன் மூச்சில்தான் ஆடுகிறது அண்டமே அவனெனும் போது முண்டமாய்-நாம் மதச்சண்டையிட்டு மடிகிறோம். நோய் வந்து அழிக்கும்போது அந்த நுன்னுயிரை ... அழிக்க யாரால் முடிகிறது அன்று படித்தது இன்று புதியது எனும…
-
- 13 replies
- 2k views
-
-
அழகிய நாடுகள் சில இலஞ்சம் ஊழலால் சேறாகி கிடக்கிறது. எம்மை அழித்து நீ வாழு..! *********************** ஊழல் ஊழல் ஊழல் இலஞ்சம் இலஞ்சம் என்று பொய்யும் களவும் சேர்ந்து பொறாமை செய்யும் நாடு எங்கள் நாட்டில் கஞ்சா-களவாய் இறக்குமதி செய்வோம் இளையோர் கையில் கொடுத்து இறக்க வைத்து சிரிப்போம் ஜாதி மதத்தை சொல்லி நாங்கள் பிரித்து வைப்போம் சண்டை போட்டு சாவார்-எங்கள் சதியை பார்த்து மகிழ்வோம் படித்து பட்டம் பெறினும் பாதி இலஞ்சம் கேட்போம் கொடுத்துவிட்டால் வேலை இல்லையென்றால் தெரு மூலை அனைத்து வேலை இடத்தில் …
-
- 4 replies
- 971 views
-