Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. Started by putthan,

    . மாமா யாழ்ப்பாணம் வரும் பொழுதெல்லாம் சோமரின்ட சோமசெட் காரை வாடகைக்கு அமர்த்தி கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு போய்விடுவேன்.கடிதத்தில் எந்த புகையிரதத்தில் எத்தனை மணிக்கு வருவார் என்று விபரமாய் எழுதுவார் .ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுவார் .எனக்கு நேரமும் நாளும் தெரிந்தால் காணும் மிகுதி எல்லாத்தையும் அம்மா வாசிப்பார்am,pmஎன்று போடுவார் அது அந்த காலத்தில் விளங்குவது கொஞ்சம் கஸ்டமாயிருக்கும் அம்மாவும் ஓவ்வொரு முறையும் விளங்கப்படுத்துவா ஆனால் அடுத்த முறை மறந்துவிடுவேன், ஒருமாதிரி அம்மாவிடம் திட்டை வாங்கி அறிந்து கொள்வேன்' வருவதற்கு முதல் நாள் த‌ந்தியும் அடிப்பார்.அவர் வருகிறார் என்றால் எங்களுக்கு எல்லாம் பெரிய சந்தோசம் .எனக்கு மட்டுமல்ல சோமர் மற்றும் ச‌லவை தொழி…

    • 9 replies
    • 2.6k views
  2. கழுத்தில் மின்னும் தங்க சங்கிலி, கறுத்த கண்ணாடி, வார்த்தைக்கு வார்த்தை வெக்கை, ஊருக்கு போனா செலவு அடுத்தது அங்க இருக்கிற எல்லாருக்கும் ஏதாவது குடுத்திட்டு வரவேணும். போகாமலே இருக்கலாம், ஆனா போறம். „அண்ண விமான பற்றுச்சீட்டு கொழும்புக்கு என்ன விலையண்ண ஏழாம் மாசம் 9ம் திகதி போய் 22 23 வாற மாதிரி?“ „தம்பி இப்ப தை மாசம், ஆனா நிறைய சீட் இல்லை. எத்தின பேர் நீங்க?“ „நான் என்ற வைப் அடுத்தது என்ற இரண்டு சின்ன பிள்ளைகள், மகனுக்கு 7 வயசு மகளுக்கு 4 வயசு. அவாவ மடியில வச்சு இருக்க ஏலாதா?“ „இல்ல தம்பி அவாக்கு புள் டிக்கெட், தலா ஒருத்தருக்கு 850.- சுவிஸ் பிராங் வருது.“ „என்ன அண்ண இந்த விலை சொல்லுறீங்க? „நான் ஒண்டும் பண்ண ஏலாது, விடுமுறை நேரம், இது எமிரேட்ஸ் விமானம், கத்தார்…

  3. மீண்டும் சிறுகதை எழுத ஆர்வம் வந்துள்ளது. இக் கதை எனது 20வது வயதில் எழுதப்பட்டது. கருத்தியல்ரீதியில் பிழைகள் இருக்கலாம். சரி பிழைகளை சுட்டிக்காட்டடினால் புதிதாக மீண்டும் எழுத முயற்சிக்கும் எனக்கு உந்துசக்தியாக இருக்கும். நன்றி உறவுகளே. மறுபக்கம் காலை 5.00 மணி துயிலெழுப்பி தனது கடமையைச் சரிவரச் செய்தது. துடித்தெழுந்த காயத்திரி மேலும் 10 நிமிடங்களுக்குத் துயிலெழுப்பியின் நேரத்தை அதிகரித்து வைத்து விட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தாள். நாம் வேகமாக இயங்குகிறோமோ இல்லையோ சுவிஸ் நாட்டுக் கடிகாரங்கள் வேகமாகத்தான் தமது கடமையைச் செய்து கொண்டிருக்கின்றன. அடுத்து 10 நிமிடமும் 10 வினாடிகளாகக் கரைய, துயிலெழுப்பி மீண்டும் அலறியது. காயத்திரிக்கு இன்றைக்கு வேலைக்குப் போகாமல் …

    • 9 replies
    • 2.4k views
  4. சீமைக் கிழுவை மரம் இலை தெரியாது நாவல் நிறப்பூக்கள் நிறைந்து குலுங்கியது, காட்டுப் பெண்ணைப் பிடித்து வந்து 'ஆஸ்கார் டி ல றென்ற்றா' ஆடை அணிவித்து நியூயோர்க்கின் தெருவில் விட்டதுபோல் அவ்வீட்டின் வேலி போகன் விலாவுடன் சேர்த்துச் சீமைக் கிழுவையினை நகர்ப்புறப்படுத்திவிட முயன்று தோற்றிருந்தது. காட்டுமரத்தின் பூவின் நறுமணத்தில் கள்ளிருந்தது. கண்கள் சொருகிச் சிருங்காரம் நிறைந்து கள்ளுண்ட மந்தியாய் காட்டுச் சிறுக்கியின் நறுமணத்தில் திழைத்து நின்றிருந்தேன். கோடன் சேட்டும், சாரமும் கட்டி, ஏசியா துவிச்சக்கர வண்டியில் ஒருவர் மிதிக்க மற்றவர் உரப்பையிற்குள் உலோகத்தை மறைத்து வைத்து அமர்ந்திருக்க அந்த இருவர் சென்றனர். இயக்கம் நிறுவனமயப்பட்டு வரிக்குள் சிக்குவதற்கு முந்தைய காலங்கள் சீம…

  5. Started by putthan,

    வருடம் பிறந்தவுடன் உறவுகளுக்கு தொலைபேசி மூலமும், இணைய நண்பர்களுக்கு இணைய‌த்தின் மூலமும்,மின்னஞ்சல் மூலம் பாடசாலை நண்பர்களுக்கும்,முகப்புத்தகத்தின் ஊடாக முகபுத்தக நண்பர்களுக்கும் புது வருட வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன்.பதிலுக்கு அவர்களும் நன்றிகள் உங்களுக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றனர்.சிலர் இது எங்கன்ட புத்தாண்டு இல்லை ஆரியரின்ட புத்தாண்டு என்றனர்.அப்படி சொன்னவரில் கந்தரும் ஒருத்தர்.இவர் உப்படிதான் சொல்லுவார் என்று தெரிந்து அவரை கண்டவுடன் அண்ணே ஆரிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றேன்..நன்றி ஆனால் நான் தமிழர் புத்தாண்டைதான் கொண்டாடுவேன் இவங்கன்ட புத்தாண்டை கொண்டாமாட்டேன் என்றார். நானும் ஒவ்வொரு முறையும் சித்திரை புத்தாண்டு,தமிழ் புத்தாண்டு,சிங்கள புத்தாண…

    • 17 replies
    • 6.2k views
  6. விடியக்காலமையும் அதுவுமாய்...காகமொன்று மாறி மாறிக் கத்திக்கொண்டிருந்தது! சனிக்கிழமையாவது கொஞ்சம் கண்ணயருவம் எண்டால் இந்தச் சனியன் பிடிச்ச காகம் விடுகுதில்லை என்று அலுத்துக் கொண்டார் அம்பலவாணர்! சனிக்கிழமை ஓய்வெடுக்கிற அளவுக்கு அம்பலத்தார் ஒண்டும் பெரிசா வெட்டிப் புடுங்கிறதில்லை எண்டாலும் மகளின்ர மூண்டு பேரப்பெடியளும் அவரைப் போட்டுப் படுத்திற பாடு கொஞ்ச நஞ்சமில்லை! இண்டைக்கு மகள் லீவில நிப்பாள்! அதால அவருக்குக் கொஞ்சம்ஓய்வு கிடைக்கிற நாள் தான் இந்தச் சனிக்கிழமை! அம்பலத்தாரின்ர மனுசியும் மற்ற மகளின்ர பிள்ளைப்பெறு பாக்கவெண்டு அவுஸ்திரேலியாவுக்குப் போனது… போனது தான்! மருமகன் வலு கெட்டிக்காரன்! என்னவோ பூந்து விளையாடி மனுசியை டெம்பறரி விசாவில அங்க நிக்க வைச்சிட்டான்! அம்…

  7. அதிகாலை ஐந்துமணிக்கு ஆறு நிமிடங்கள் இருக்கையில், எங்கள் அணி தாக்குதலுக்கான நகர்வை தொடங்கி இருந்தது. எங்கள் அணியில் மொத்தம் ஐந்து பேர் தான். இருட்டுக்குள் உருமறைபுக்காக கறுப்பு ரிஷேர்டும் கறுப்பு களுசானும் அணிந்திருந்தோம். நாங்கள் அவ்வளவு வெள்ளை இல்லை என்றாலும் வழக்கமான தாக்குதல் பாணிக்காக முகத்துக்கு கொஞ்சம் கரியும் தடவி இருந்தோம். மார்கழி மாத அதிகாலை பனி ஆட்களை கொல்லுமளவுக்கு குளிரும். நான் வடக்கு பக்கத்தில் இருந்து பனித்துளியுடன் கூடிய புற்களுக்கு நடுவாக இலக்கை நோக்கி நகர்ந்து இல்லை ஊர்ந்து கொண்டிருந்தேன். எங்களுக்குள் எந்த விதமான தொடர்பாடல்களும் இல்லை அதற்கான வசதி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வயிற்றை நிலத்துடன் வைத்து முழங்கால்களினால் நகர்ந்து கொண்டிரு…

  8. பரவலா எல்லா இடமும் சீட்டு பற்றி தான் பேச்சு. வேற கடைக்காரர் காச சுத்தீற்றாங்கள், இவர் இவர் காச எடுத்துக்கொண்டு ஓடிட்டார், இவர் தரேல்ல எண்டு. கிட்டத்தட்ட எல்லா பெரிய சீட்டுக்களும் தொங்கீற்று. கடைக்காரர் போட்ட சீட்டுகள் யாரோ சுத்தீற்றினம் எண்டு தான் கதை, பார்த்தா கடையில புதிய புதிய சாமான்கள் கிடக்கு. உடுப்பு கடைகளில புதிய டிசைன் உடுப்பு. இது போதாத குறைக்கு வேற இடத்தில புதுக்கடை. பெரிய விசயம் இல்ல, சீட்ட எடுத்த ஆக்களுக்கு காசு போகேல்ல, 60,000 வரவேண்டிய இடத்தில 25,000 குடுத்தா, மிச்சத்த கேக்க, இவர் தந்தா தாறன் எண்டு பதில். உதாரணத்துக்கு, மிச்சம் தரேல்ல எண்டா 20 பேரில 8 பேரா தந்தவே, மிச்சம் 12 தரேல்லையா? சாத்தியம் இல்லாத நிலை, மிச்சம் எங்க? ஒரு நகை கடைகாரர் தனக்கு கடன், சீட்டு…

  9. அனுராதபுரப் புகையிரத நிலையத்தில் ஒரு பெருமூச்சோடு தனது பயணத்தின் பாதி தூரம் கடந்த நிம்மதிய்டன் தன்னைச் சற்று ஆசுவாசப் படுத்தியது அன்றைய யாழ்தேவி! தனது பயணத்தின் பாதித் தூரம் கடந்த நிம்மதியுடன் வாசுகியும் தனது பயணப் பொதியைத் தோளில் தொங்கவிட்ட படியே யாழ்தேவியை விட்டு இறங்கினாள்! ஏழு வருடங்களுக்கு முன்னர் அங்கு ரீச்சர் வாசுகியாக இறங்கும் போதிருந்த பயமும், தயக்கமும் அவளிடமிருந்து விடை பெற்று நீண்ட காலம் போய் விட்டது போல இருந்தது! வழக்கமாக அவளுடன் கூடவே பயணிக்கும் மாம்பழம், பலாப்பழம், நல்லெண்ணெய், பனங்கிழங்கு, முருங்கைக்காய் போன்றவையும் அவளுடன் இன்று பயணிக்கவில்லை! பாரதி கண்ட புதுமை பெண்ணைப் போன்ற மனநிலையில் அனுராதபுரம் பஸ் நிலையத்தை நோக்கி அவளது கால்கள் நடந்து …

  10. அன்றைய பொழுது வழமை போலவே விடிந்தது! பிள்ளைகள் இன்னும் நித்திரையால் எழும்பவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட வாசுகி மனுசன் இன்னும் கிடக்கிறாரா என்று விறாந்தையை எட்டிப்பார்த்தாள்! அவர் குப்புறப்படுத்தபடி ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்! அவரது சாரம் இடுப்பில் பத்திரமாக இருந்ததைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டாள்! பிள்ளைகள் நித்திரையால் எழும்ப முன்னம் அவள் செய்ய வேண்டிய தினசரிக் கடமைகளில் இதுவும் ஒன்றாகிப் போனது! மனுஷன் எழும்பிறதுக்கு முந்திக் கோயிலடிக்குப் போய்த் தண்ணி அள்ளிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்த படியே, வாசலில் நின்ற வேப்ப மரத்திலிருந்து ஒரு குச்சியை லாவகமாக ஒடித்து..வாய்க்குள் வைத்துக் கடித்தபடியே, குடத்தை எடுத்து இடுப்பில் அணைத்த படி கோயிலடியை நோக்…

  11. மூண்டாவது சீட்டுக்கு கூடியாச்சு. கழிவு இன்னும் பெரிசா தான் இருக்கு, கட்டாய கழிவு 13‘600. இந்த முறை 22‘500 மொத்த கழிவு. ஆறுமுகம் வாங்கீற்றார். கழிவு எப்புடியும் பெரிசா இருந்தாலும் இவருக்கு தேவையா இருக்கு. கழுத்தில கத்திய வச்சமாதிரி நிலமை. 130‘000ல நிண்ட கடன் சீட்ட கழிச்சு இப்ப 77‘000 கிட்ட நிக்குது. சீட்டு எடுத்ததால அந்த மாசத்தில கட்டுப்பணம் இல்ல. சொந்தக்காரர் யாரோ 15‘000 ஆயிரம் வட்டிக்கு தாறினம் எண்டதால இன்னும் 52‘000 எங்க போறது எண்ட யோசினை. வேற சீட்டுகள் நடக்குறதால அங்க தெரிஞ்ச ஆளுக்கு சீட்டு விழுந்திருக்கு. 65‘000 சீட்டுக்கு 11‘000 கழிவில 54‘000 வந்து இருக்கு. அத தர சொல்லி கெஞ்சி கூத்தாடி வாங்கீற்றார். யாரோ பாவம் வாங்குற சம்பளத்துக்கு ஏத்த சீட்டு போட்டிருக்கிறார். அந்த …

    • 4 replies
    • 2.5k views
  12. இளையராஜாவின் தரை தப்பட்டை இசை போல கூவி செல்லும் மல்ரி பெரல் செல்லின் ஒலி,ரகுமானின் இசைபோல காதுகளை கிழித்து போகும் சன்னங்களின் சத்தம்,திரும்பும் இடம் எல்லாம் பழைய தும்பு தடிகள் போல தும்பு எழும்பி இருக்கும் மரங்களும் கிளைகளும் ஐன்பது கலிபரின் துப்பல்கள் செய்த மாய வேலை இவ்வாறு ஒரு பெரும் சமர் ஜெயசுக்குறு களமுனையில் பப்பா லையினில் அரங்கேறிய படி இருந்தது .... நாலு நிலைகளு உடைத்து எதிரி மூர்க்கமாக ஒரு நகர்வை முன்னேடுக்கிறான் கடல்புலிகளின் மகளிர் படையணி லெப்டினன் கேணல் காதம்பரி தலைமையில் அதை எதிர்கொண்டு இருந்தது,நிலைகள் உடைத்து கட்டுக்குள் போகமுன்னம் உதவிகள் அழைப்புக்கள் என ,வோக்கிடோக்கி சங்கேத மொழிகளை பேசிக்கொண்டு இருந்தது ... பப்பா லையினில் அடிவிளுகுதாம் எக்கோ பக்கம்…

  13. முதல் மாசம் சம்பளம் வந்ததும் 10ம் திகதிக்கு முதல் காசை எடுத்து அண்ணாச்சி கடையில எல்லாரும் குடுத்திச்சினம். தாய் சீட்டு அவருக்கு, அதாவது முதல் சீட்டு அவருக்கு. அதால 20 பேருக்கும் தலா 4‘000. தன்ர கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி போட்டார். வியாபாரம் ஓரளவு ஓடிச்சு. வேற மலிகைசாமான் கடைகளும் பக்கத்தில இருக்கிறதால அவருக்கு கஷ்டம் தான். அண்ணாச்சி ஒரு பிழை விட்டிட்டார், அதின்ர விழைவு இன்னும் தெரியேல்ல. சில பேருக்கு வீட்டில இறுகீற்று. 4‘000.- பெரிய காசு. வாங்கிற சாமான்கள விலைய பார்த்து வாங்குற நிலை. சீட்டெண்டா சும்மாவா, அதுவும் 80‘000 பிராங் சீட்டு. வாயை கட்டி வைத்தை கட்டி வாழ வேண்டும். சரி பெரிசா வரும் எண்ட எண்ணம் மனசுக்க இருந்தது. வீடு வாங்கலாம் அது இது வாங்கலாம் என்கிற கற்ப…

  14. யார் யாருக்கு சீட்டு தெரியும் என்று கேட்டால், பெரியவர்களே கைகளை உயர்த்துவார்கள். இதில் உழைப்பாளிகளே தங்களது பணத்தினை ஈடுபடுத்துகிறார்கள். வாகனம், வீடு, கடை என அவர்களின் பெரிய செலவுக்கு பயன்படுகிறது, அத்தோடு அரசாங்க கணக்கில் வராத கறுப்பு பணம். சீட்டு பலவிதப்படும். கழிவுச் சீட்டு, குலுக்கல் சீட்டு என்று இருக்கிறது. கழிவுச்சீட்டின் பொருள். ஒரு தொகை மக்கள் இணைந்து மாதம் மாதம் பணம் போடுவார்கள். முதல் சீட்டு தாய் சீட்டு, அது நடத்துபவருக்கு, ஏனையவை எடுப்பவருக்கு கழிவுகளுடன். 12 பேர் இணைந்து 12‘000 ரூபாய் சீட்டு போட்டால் தலா 1000 ரூபாய் கட்டவேண்டும். அவசரமாக கேட்பவருக்கு கழித்து கொடுக்கப்படும். கழித்த பணத்தின் மீதியை 12ஆக பிரித்து கட்ட வேண்டும். கடைசி சீட்டை எடுப்பவர்களுக்கு…

    • 4 replies
    • 1.9k views
  15. செழியனிற்கு ஒரு மாமா இருந்தார். அந்த மாமா தலைநகரில் வாழ்ந்தார். அப்பாவைப் பிடிக்காத செழியனின் முதலாவது ஹீரோ அவர் தான். அவர் அப்பப்போ தான் செழியன் வாழும் ஊரிற்கு வந்துபோவதனால் செழியனின் நண்பர்கள் அவரைப் பார்த்ததில்லை. தனது ஹீரோவைத் தனது நண்பர்களிற்கு விபரிப்பதில் செழியன் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருந்தான். காரணம், செழியனின் மாமா அவனது நண்பர்கள் எவரும் கண்டிராத, அதனால் கற்பனையில் அவர்களால் காணமுடியாத, ஒரு பாத்திரமாக இருந்தார். ஒப்பிடுவதற்கு ஒருவரும் இல்லாத மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். தமிழ் பட வராலாற்றில் சிவாஜியோடு ஒப்பிடுவதற்கு நடிகர்கள் இருக்கிறார்கள். சிவாஜியின் ஒரு படம் தன்னும் பார்த்திராத ஒருவரிற்கு சிவாஜி எப்பிடி இருப்பார் என்று ஓரளவிற்கு விளக்கிவிடலாம…

  16. என்னடா தம்பி வேலை எப்படி போகுது , பருவாயில்லை அண்ணே சும்மா போகுது.என்ன நீங்க ஒரு மாதிரி இருக்கிறீங்க ராஜா அண்ணே வழமையான முகம் இல்லை ஏதாவது பிரச்சினையா அல்லது முதலாளி பேசிகிசி போட்டானே சொல்லுங்க , ஒன்று இல்லை வேலை வீடு பிள்ளைகள் படிப்பு என நாங்கள் வாழ்க்கையை ஒரு வட்டத்தில் வாழ்த்து தொலைக்கிறது ,ஆனால் இப்ப உள்ள பொடியள் தாங்கள் நினைச்சதை செய்து கொண்டு குடும்பம் உறவு பாசம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழுதுகள் ,எல்லாம் காலம் மாறி போனதால அல்லது உறவுகள் இடத்தில நெருக்கம் குறைச்சு போனதால என்று தான் எனக்கு விளங்கவில்லை ...... என்னத்த அண்ணே சொல்லுறது நாங்களா வந்து ஒரு பெட்டியில் விழுந்து போனம் ஏறவும் முடியாது வெளிய குதிக்கவும் முடியாது நாலு பக்கமும் மாறி மாறி நடக்கவேண்ட…

  17. தாயை எண்ணிஎண்ணி நந்தாவுக்குத் தலைவலி வந்தது தான் மிச்சம். எதுவித முடிவையும் எடுக்க முடியவில்லை. இத்தனை நாள் எத்தனை துன்பத்தை அனுபவித்தாகிவிட்டது. இருந்தும் மனதில் முடிவெடுக்க முடியாத பயம் சூழ்ந்து தூக்கம் இழக்க வைத்ததுதான் மிச்சம். நான் ஏன் மற்றவர்களுக்குப் பயப்படுகிறேன்? அவர்கள் என்ன கூறினால் என்ன. எனக்கு ஒன்று என்றால் அவர்களா ஓடி வரப் போகிறார்கள். எனக்கோ என் குடும்பத்துக்கோ அதனால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று தெரிந்த பின்னாலும் என்ன தயக்கம் என தன்னைத்தானே கேட்டும் பயனில்லை. இத்தனை நாள் மற்றவர்கள் மனதில் என்னைப் பற்றி இருந்த பிம்பம் அழிந்துவிடுமே என்னும் எண்ணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது மனதை அங்குமிங்கும் அலைக்கழித்தும் விடை தான் கிடைக்கவில்லை. ஏற்கனவே அ…

  18. ஊரடங்கிய நடுநிசி. புளிய மரம் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டிருக்கிறது. அது பிரசவித்த அனைத்துப் பேய்களதும் தடங்கள் காற்றில் பதிந்திருக்கிறது. முடக்கு வருகிறது. உரப்பையில் துவக்கை மறைத்து, ஏசியா துவிச்சக்கர வண்டியில் கோடன் சேட்டும் சாரமும் கட்டிப் பயணித்த பதின்வயது முகங்களின் சிரிப்பு அப்படியே அந்த முடக்கில் கண்ணிற்குப் புலப்படாத உணர்வாய் உறைந்திருக்கிறது. ஐபோன் ஆறு எஸ்சின் மூன்று பரிமாணத் தொழில்நுட்பம் போன்று, உறைந்த படத்தை அழுத்திப் பிடித்தால் உள்ளுர அது காணொளியாகி மறைகிறது. கடந்து நடக்கிறேன். சந்திக் கடையில் நின்று கதைபேசியவர் தடங்கள். காதிற்குள் ஒலி ஏறாத போதும் அவர்கள் உதட்டசைவை வாசிக்க முடிகிறது. கடந்து போகக் கோவில் வருகிறது. குஞ்சம்மா மூதாட்டி வழமை போல் ஜன்னலூடு கு…

    • 14 replies
    • 2.2k views
  19. Started by putthan,

    "நெக்ஸ்ட் பிளிஸ்" என்ற அழ‌கிய குரலுக்கு சொந்தகாரியான அழகி என்னை அழைக்க நானும் "‍‍‍ஹாய்" என்று சொல்லியபடியே இருக்கிற பல் எல்லாத்தையும் காட்டிகொண்டு பயணப்பொதிகளை இழுத்து கொண்டு அவள் இருக்கும் கவுன்டர் அருகே சென்று கையில் ஆய‌த்தமாக வைத்திருந்த பாஸ்போர்டையும் விமான டிக்கட்டையும் கொடுத்தேன் .புன்முறுவலுடன் வாங்கியவள் சகலதும் ச‌ரியாக இருக்கின்றதா என பார்த்தபடியே பொதிகளை நிலுவையில் வைக்கும்படி சொன்னாள் . த‌ராசு 35 கில்லோ காட்டியது.முப்பது கில்லோ தான் கொண்டு போகமுடியும் மிகுதியை நீங்கள் எடுக்க வேணும் என்றாள்.கை பொதியில் எவ்வள‌வு இருக்கு என்று பார்ர்ப்போம் அதையும் தராசில் வையுங்கோ என்றாள் . மெதுவாக தூக்கி வைத்தேன் அது ஒன்பது கில்லோ என்பதை காட்டியது.கை பொதி ஏழு கில்லோ தான் அ…

  20. Started by arjun,

    புனிதமலர் "தம்பி அவசரம் ஒருக்கா இந்த வார விடுமுறை வீட்டிற்கு வா " கடிதத்தை வாசித்த பின் அதை மேசை மீது போட்ட மணிவண்ணன் அம்மா ஏன் அவசரமாக வரசொல்லி எழுதியிருகின்றார் என்ற அந்த வரி மட்டும் மனதை குடைந்துகொண்டிருந்தது . என்னவாக இருக்கும் ? "பெண் பார்த்திருகின்றேன் வந்து பார் என்பாரோ ,இவன் வரகுணன் படிக்கின்றான் இல்லை, உன்னை பார்க்கவேண்டும் போலிருந்தது" அம்மா அடிக்கடி கடிதம் எழுதுவதில்லை அப்படி எழுதினாலும் சுகம் கேட்பதும் இப்படியான விடயங்களும் தான் அதில் இருக்கும் . இரண்டு வருடங்களுக்கு முதலும் இப்படி ஒரு கடிதம் வந்தது, அடித்து பிடித்து மணிவண்ணன் வீட்டிற்கு ஓடினால் …

  21. சுஜாதா எப்பவோ இரண்டு வார்த்தைகளில் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.நன்றி ;சுஜாதா -------------சுஜாதா கொடுத்த உதாரணக் கதை கீழே ;-------------தலைப்பு: ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?கதை: முதலிரவில் கேள்வி-------------- என் கதைகள் தொடருது -------------- தலைப்பு ; பத்துமணி நேரத்துக்கு மேல் புடவைக்கடைக்குள் மனைவி .வரவேற்பாளர் மண்டபத்தில் குழந்தையுடன் கணவன் . ஒரு ஒட்டு துணிகூட மனைவி வாங்கவில்லை . கடுப்படைந்தார் கணவன் . கதை ; செலக்சன் சரியில்லை

  22. தலைப்பு : முக பவுடர் முக பூச்சு சாயங்களுடன் தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்தவள் திடீரெனகத்தினாள்கதை ; கண்ணாடி ^^^ஒரு வார்த்தை கதைகள் எழுத்துருவாக்கம் கே இனியவன் மேலும் தொடரும்

  23. முதலாளித்துவம் ------ பணப்பலம் உள்ளவனும் பணம் படைத்தவனும் பணத்தாசை பிடித்தவனும் ஒன்று சேர்ந்தார்கள் "பிறந்தது பொருளாதாரம்" ^ எழுத்துருவாக்கம் கே இனியவன்

  24. Started by arjun,

    திரு திருமதி செல்வன் அடுத்த வீடு பார்க்க தொடங்கிவிட்டார்கள். கையில் ஒரு சூட்கேசுடன் கனடா வந்து இறங்கிய செல்வனுக்கும் மனைவிக்கும் முதல் இருப்பிடம் நண்பனின் நிலக்கீழ் அறைதான் .சில மாதங்களில் செல்வனுக்கு ஒரு மரத்தொழிற்சாலையில் வேலை கிடைத்துவிட்டது . மனைவி நித்தியா கணக்கியல் படிக்க பாடசாலை செல்ல தொடங்கியிருந்தார் . கையில் கொஞ்சம் காசு சேர சூரியஒளி படாத அந்த இடத்தை விட்டு ஒரு அப்பார்மென்ட் எடுத்தது போய்விட்டார்கள் . நித்தியாவிற்கு வங்கியில் வேலை கிடைத்துவிட்டது ,செல்வனுக்கு வருமானமும் சற்று அதிகரிக்க சொந்தமாக வீடு வாங்கும் ஆசை வந்து நித்தியா வேலை செய்யும் வங்கிக்கு அருகில் மூன்று அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டை வாங்கிவிட்டார்கள் . இருவருக்கும் நிரந்தர வேலை ,நல்ல ச…

    • 20 replies
    • 2.2k views
  25. அவனை எல்லாருக்கும் பிடிக்கும். ஏனென்றால் எப்போதும் அவன் மற்றவர் முன் முகம் சுளித்ததே இல்லை. எப்போது பார்த்தாலும் முகத்தில் ஒரு புன்சிரிப்பு. உதவி என்று கேட்கத் தேவையே இல்லை. அதை எந்தக் கஷ்டம் வந்தாலும் செய்து முடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பான். யாருமே அவனை வெறுத்ததேல்லை. சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டும் இப்ப கொஞ்சக்காலம்தான் காசு கையில் தங்குகிறது. சொந்தமாகக் கடை வைத்திருக்கிறான் தான். ஆனாலும் கடன் கேட்பவர்களுக்குக் குடுத்து, பிள்ளைகள் ஆசைப்பட்டது எல்லாம் வங்கிக் கொடுத்து, பிள்ளைகளுக்கு டியூசன் காசும் கட்டவே காசு கரைந்துவிடுகிறது. இத்தனை நாளும் இருந்தது வாடகை வீட்டில் தான். இவனுக்கேற்ற மனைவி பிள்ளைகள். சொந்த வீடு வேண்டும் என்று மனைவி என்றும் கேட்டதே இல்லை. ஆச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.