தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10297 topics in this forum
-
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை தமிழக காங்கிரஸார் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மக்களவை எம்.பிக்கள் 8 பேர், மாநிலங்களை எம்.பி.க்கள் 4 பேர், அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், சிதம்பரம் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் சுமார் 30 நிமிடங்களுக்கு நீண்டது. தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து அவர்களிடம் ராகுல் கேட்டறிந்ததாகவும், அது தொடர்பாக விவாதம் நடைபெற்றதாகவும் தெரிகிறது. மேலும், இலங்கை விவகாரம், இலங்கை விவகாரத்தில் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை ஆகியவை குறித்து கேட்டறிந்தாராம். மேலும், இலங்கை விவகாரத்தில் திமுக நிலை குறித்து ராகுல் விசாரித்ததாகத் தெரிகிறது. காங்கிரஸ் துணைத்தலைவராக ராகுல் பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல் முறையாக அவர் தமிழ…
-
- 3 replies
- 790 views
-
-
விக்கிரமன் கடந்த 1-ம் தேதி பிரபல எழுத்தாளரும், ‘அமுதசுரபி’ இதழின் முன்னாள் ஆசிரியருமான விக்கிரமன் காலமானார். இவரது உடல், மழை வெள்ளம் காரணமாக உடலை பாதுக்காக்கும் பிரீசர் பாக்ஸ் கிடைக்காமல், எரியூட்ட மயானம் கிடைக்காமல் 4 நாட்கள் கடும்அவதிக்குப் பிறகு 4-ம் தேதி மதியம் எரியூட்டப்பட்டது. ‘நந்திபுரத்து நாயகி’, ‘வந்தியத் தேவன் வாள்’ ‘ராஜராஜன் சபதம்’ உள்ளிட்ட நாவல்களை எழுதியவர் பிரபல எழுத்தாளர் விக்கிரமன். ‘அமுதசுரபி’ மாத இதழின் முன் னாள் ஆசிரியரான இவர், கடந்த 1-ம்தேதி மதியம் தனது 88 வயதில் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னையில் காலமானார். கழுத் தளவு தண்ணீர் சூழ்ந்த சென்னை - மாம்பலத்தில் இருந்த இவரது வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்த முடியாமல் விக்கிரமனின் மீது அன்புகொ…
-
- 0 replies
- 790 views
-
-
பட்ஜெட்டைப் புறக்கணித்த மூன்று அமைச்சர்கள்... அதிர்ச்சியில் சசிகலா அணி எம்எல்ஏ-க்கள்! #VikatanExclusive நிதிஅமைச்சர் ஜெயக்குமாரின் பட்ஜெட்டை சசிகலா அணியிலிருக்கும் மூன்று அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர். இது, அந்தத் தரப்பு எம்எல்ஏ-க்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையின் முதல் பட்ஜெட், இன்று சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு பட்ஜெட் 2017 ஐ தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, சசிகலாவை ஜெயக்குமார் புகழ்ந்து பேசியதற்கு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து, சுமார் 3 மணி நேரம் பட்ஜெட்டை தாக்கல்செய்தார் …
-
- 0 replies
- 789 views
-
-
சென்னை விமான நிலையத்தில் மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு பாராலிம்பிக்கில் தங்கம் வென்று சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், பி.பெஞ்சமின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பத்தகம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக அரசு ரூ. 2 கோடி பரிசுத் தொகை அறிவித்தது. இந்நிலையில் நேற்றிரவு 9 மணிக்கு மாரியப்பன் …
-
- 1 reply
- 789 views
-
-
பட மூலாதாரம்,MALLAI C E SATHYA கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 'மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்' எனக் கூறி, அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்த தீர்மானத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுடன் மோதல் போக்கைத் தொடர்வதால் சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ம.தி.மு.க-வில் என்ன நடக்கிறது? கூட்டணி ஆட்சி என்ற கூற்றை மறுக்கும் அதிமுக - பாஜக உடனான உடன்படிக்கை என்ன? அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் என்ன? திடீரென இமயம…
-
- 3 replies
- 789 views
- 1 follower
-
-
அதிமுக-வில் என்ன நடக்கிறது? இபிஎஸ் - ஓபிஎஸ் சர்ச்சையில் இன்று ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் கூட்டாக நிர்வகிக்கப்படும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்று எடப்பாடி ஆதரவாளர்கள் குரல் கொடுத்த நிலையில், அந்த யோசனைக்கு எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், கட்சிக்குள் உரசல் சூழ்நிலை தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு அதிக எண்ணிக்கையிலான மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப் போக்கு நிலவுவதா…
-
- 13 replies
- 789 views
- 1 follower
-
-
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு! ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் தீவிரம் காட்டிவருகின்றனர். அதே நேரத்தில் அணியில் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை வைத்தனர். இதனிடையே, துணைப் பொதுச்செயலாளர் தினகரனை நியமித்தது செல்லாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில…
-
- 3 replies
- 789 views
-
-
செங்கொடி- மூன்று சேய்களைக் காத்த அன்னை- கவிஞர் வாலியின் தீர்க்கதரிசனம்! பெற்ற மகனின் உயிர்காக்க ஒரு தாய் போராடுவதில் எந்த ஆச்சர்யமில்லைதான். ஆனால் யாரென்றே தெரியாத ஒரு இருபது வயதுப் பெண், மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தன் உயிரை தீக்கு திண்ணக் கொடுத்த அதிசயம் இந்தத் தமிழ் மண்ணில் நிகழ்ந்தது. அவள்தான் காஞ்சிபுரம் செங்கொடி. இருபத்து ஏழு வயது நிரம்பிய தமிழ் உணர்வாளர். கூடப் பிறந்தால்தான் தொப்புள் கொடி உறவா... இல்லையில்லை... தமிழர் என்ற அடையாளத்துக்குள் வரும் அத்தனை பேரையும் தன் தொப்புள் கொடி உறவாக மதித்த இளம் பெண். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் உயிரைக் காக்க தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில…
-
- 1 reply
- 789 views
-
-
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது நேற்று ஒரே நாளில் மூன்று இடங்களில் இலங்கை கடற்படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில், அதே பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 1ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 5 நாட்களாக கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டு நேற்று முன்தினம் காரைக்காலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.10க்கு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே வந்தபோது, இலங்கை கடற்படையினர் 10 பேர் ஒரு படகில் வந்தனர்.அவர்கள் துப்பாக்கியை காட்டி, படகில் இருக்கும் மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் கடலில் போடுமாறு மிரட்டினர். மீனவ…
-
- 0 replies
- 789 views
-
-
ரஜினி Vs கமல் -ஜெயிக்கப்போவது யார் ? | Socio Talk | சில நாட்களாக கமல் அரசியலுக்கு வரப்போகிறார், ரஜினி கமலுக்கு வரப்போகிறார் என பேச்சுக்கள் நாம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம் ஆனால் இருவரும் அரசியலில் குதித்தால் வெற்றி யாருக்கு? பி.ஜே.பியுடன் சேர மறுக்கும் கமல், அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கும் ரஜினி. இருவரில் யார் வந்தால் நன்றாக இருக்கும்? மக்கள் யாரை விரும்புகிறார்கள்? மேலும் பல கேள்விகளும். விடைகளும்.
-
- 0 replies
- 789 views
-
-
திமுக கூட்டணியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் தனிச்சின்னம்?
-
- 2 replies
- 789 views
-
-
Out of media player. Press enter to return or tab to continue. கருத்துச் சுதந்திரத்திற்கு வரையரை வேண்டும் – மனுஷ்யபுத்திரன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாரிஸ் நகரில் நையாண்டி இதழான, " ஷார்லி எப்தோ" அலுவலகத்தில் இருந்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தாம் கண்டிப்பதாகத் தெரிவித்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், அதே நேரம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் நுண்ணுணர்வுகளை புண்படுத்துவதும் தவறு என்றார். இஸ்லாமிய நம்பிக்கைகள் குறித்து இஸ்லாத்துக்குள்ளும், வெளியிலிருந்தும் பல விமர்சனங்கள் வருகிறது என்று கூறும் மனுஷ்யபுத்திரன், ஆனால் முகமது நபியை உருவகப்படுத்துவது மிகவும் உணர்வுப்பூர்வமான விடயம் என்கிறார். முகமது நபியை மிகப் புனிதமாக முஸ்லீம்கள் கருதுவதால் அது குறித்து …
-
- 6 replies
- 789 views
-
-
சசிகலா குடும்பத்தினரின், தமிழக சொத்து களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வரும்,வருமான வரித்துறை,அவர்கள் நடத்திய போலி நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு கள் குறித்தும், விசாரணையை துவக்கியுள்ளது. இது தொடர்பாக, அமலாக்கத் துறையும், விரைவில் களத்தில் இறங்குகிறது. அதனால், சசி உறவுகளுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் நிழலாக, 25 ஆண்டுகளாக வாழ்ந்த சசிகலா மற்றும் அவர்களது உறவினர்கள், தமிழகத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து களை வாங்கி குவித்துள்ளனர். இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள், சசிகலா, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, சென்னையில், 117 இடங்…
-
- 0 replies
- 788 views
-
-
கடலூரில் தடையை மீறி கருத்தரங்கம் நடத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடலூரில் இன எழுச்சிக் கருத்தரங்கம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த போவதாக நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பேரணி நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. பொதுக் கூட்டம் நடத்த சில நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகளை மீறி தடை செய்யப்பட்ட இயக்க தலைவர் பிரபாகரன் படம் போட்டு டிஜிட்டல் பேனர்களை நாம் தமிழர் கட்சியினர் வைத்ததால் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து கருத்தரங்கம் மட்டும் கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் காலையில் நடந்தது. ஆனால…
-
- 1 reply
- 788 views
-
-
சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க! By Mathivanan Maran Published: October 12 2021, 9:50 [IST] நீட் தேர்வுக்கு எதிரான மசோதா வனப்பாதுக்காப்பு சட்டம் என்கிற பெயரில் வனங்களையும் அதே போல கடல் வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது அதை செய்யக் கூடாது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் எதிர்ப்பு மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது ஏற்புடையதல்ல. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏழு பேர்களில் ஒருவரான ரவிச்சந்திரனின் தாயார் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் ரவிச்சந்திர…
-
- 10 replies
- 788 views
-
-
பட மூலாதாரம்,TAMIL NADU TOURISM DEVELOPMENT CORPORATION) கட்டுரை தகவல் எழுதியவர்,சிராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 2 ஜூலை 2023, 07:32 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயரைக் கேட்டாலே நம்மை அறியாமல் எட்டப்பன் என்ற பெயரும் நினைவுக்கு வந்துவிடுகிறது. எட்டப்பன் என்றாலே துரோகம் என்ற ஒரு பிம்பம் நிலை பெற்று விட்டது. யூதாஸ், புரூட்டஸ், வரிசையில் எட்டப்பன் என்ற சொல்லும் காட்டிக் கொடுப்பவர்களுக்கான பட்டமாக மாறிவிட்டது. எட்டப்பன் என்றால் யார்? அந்த பெயர் எப்படி வந்தது? கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தது எட்டப்பன்…
-
- 1 reply
- 788 views
- 1 follower
-
-
6வது முறையாக ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார் ..! (படங்கள்) 6வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். மேலும் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. சென்னையில் கடந்த 20ம் தேதி நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து புதிய அரசு அ…
-
- 1 reply
- 788 views
-
-
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியபோது, ‘’கர்நாடக அரசு காவிரி ஆற்றில் அணைகளை கட்டி மின்சாரம் தயாரிக்க போவதாக கூறுவது அப்பட்டமான பொய். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகத்தில் இருந்து வரும் காவிரி நீர் கர்நாடகத்துக்கு சொந்தம் என்றால், தமிழகத்தின் நெய்வேலியில் எடுக்கப்படும் பழுப்பு நிலக்கிரி, அதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும் தமிழனுக்கே சொந்தம். வருகிற 2016–ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில…
-
- 0 replies
- 788 views
-
-
ஆணவ படுகொலை: பெற்ற தாயையும், மகனையும் கொடூரமாக கொன்ற தந்தை! monishaApr 15, 2023 18:55PM கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தந்தையே மகனை கொடூரமாக வெட்டி ஆணவக் கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (45). இவர் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் இவருடைய மகன் சுபாஷ் (25) திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபோது, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுஷா என்பவரை காதலித்துள்ளார். ஆனால், சுபாஷ் மற்றும் அனுஷா இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்…
-
- 3 replies
- 787 views
-
-
சிவப்புக் கம்பளத்தில் ராஜீவ் காந்தியை நிற்க வைத்தது யார்? -குற்றவாளியைக் கைகாட்டும் 'பைபாஸ்' (வீடியோ இணைப்பு) முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்த்தப்பட்டு, கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், சிறையில் நீண்ட ஆயுளைத் தொலைத்துவிட்டார்கள். இந்நிலையில், 'படுகொலையின் சந்தேகங்கள் இன்னமும் தீரவில்லை. தமிழக காவல்துறையை நோக்கியே எங்களது சந்தேகங்கள் நீள்கின்றன' என அதிர வைக்கிறது 'பைபாஸ்' திரைப்படம். இது தொடர்பாக முன்னரே விகடன்.காமில் செய்தி வெளியாகியிருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில், 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, இரவு 10.20 மணிக்கு மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார் ராஜீவ்காந்தி. இந்தப் …
-
- 1 reply
- 787 views
- 1 follower
-
-
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடித்துத் தரக் கோரி சென்னையில் போராட்டம் June 2, 2019 சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடித்துத் தரக் கோரி, நேற்றையதினம் ; கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிரேஸ்ட தலைவர் நல்லகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணம் என்னவென்பதைத் தெரிவிக்கும் வகையில் சில ஆதாரங்களை வெளியிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கடந்த பெப்ரவரி 15 ம்திகதி முதல் காணாமல் போயுள்ளார் முகிலன் காணாமல் போனது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ள நிலையில் 17 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வ…
-
- 0 replies
- 787 views
-
-
“தமிழீழம் விடுதலையடைய நூறு காரணங்கள் இருக்கின்றன! தமிழ்நாடு விடுதலையடைய நூற்றிரண்டு காரணங்கள் இருக்கின்றன!” – தோழர் பெ.மணியரசன் உரை! “தமிழீழம் விடுதலையடைய நூறு காரணங்கள் இருக்கின்றன! தமிழ்நாடு விடுதலையடைய நூற்றிரண்டு காரணங்கள் இருக்கின்றன!” நா.ப.இராமசாமி நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன் உரை! தமிழின உணர்வாளர்களுக்கு நாமக்கல் பகுதியில் துணை நின்ற திரு. நா.ப.இராமசாமி அவர்கள் கடந்த 23.09.2013 அன்று நாமக்கலில் காலமானார். அவரது நினைவேந்தல் நிகழ்வு 10.10.2013 அன்று நாமக்கல் – திருச்செங்கோடு சாலை – சுப்புலட்சுமி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சிலம்பொழி சு.செல்லப்பன் அவர்கள் தலைமையேற்றார். திராவிடர் விடுதலைக் க…
-
- 0 replies
- 787 views
-
-
எழுவர் விடுதலை `அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஏழு பேரையும் விடுதலை செய்தே ஆகவேண்டும். உச்சநீதிமன்றமும் அதனால்தான் அழுத்தம் கொடுக்கிறது' என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் தரப்பில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2018, செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆளுநர் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் …
-
- 3 replies
- 786 views
-
-
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை, பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (07-12-15) பார்வையிட்டு, அவர்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார். அரிசி, ரொட்டி, போர்வை உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களை நாம் தமிழர் கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கினர். அங்குச் செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, அரைநூற்றாண்டு காலமாகத் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆண்டிருக்கிறது. அந்த ஆட்சியின் இலட்சணத்தை மழை இப்போது வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. செ…
-
- 2 replies
- 786 views
-
-
தர்மபுரி வன்முறை: மாறும் அரசியல் முகங்கள் ஸ்டாலின் ராஜாங்கம் நவம்பர் 7ஆம் தேதி தர்மபுரியில் மூன்று தலித் கிராமங்கள்மீது வன்னியர்களால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் சாதி முக்கியமான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கும் குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் அரசை வலியுறுத்துவதைவிட நடைபெற்ற வன்முறையை முன்வைத்து சமூக அரங்கில் உருவாகிவரும் புதிய அணிசேர்க்கைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கின்றன. தர்மபுரி வன்முறைக்குப் பாமகவின் சாதி அரசியலும் அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் கலப்புமணத்திற்கு எதிரான கருத்துகளும்தாம் காரணம் என்பதை முதன்…
-
- 0 replies
- 786 views
-