Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேடப்பட்டுவந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், மேற்கு வங்க காவல்துறையினரால் கோவையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். படத்தின் காப்புரிமைTWITTER Image captionமுன்னாள் நீதிபதி கர்ணன் கோயம்புத்தூரில் கைது கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில் மலுமிச்சம்பட்டி என்ற இடத்தில் ஒரு தனியார் கல்லூரிக்கு அருகில் தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது, செவ்வாய்க்கிழமை மாலை கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், பிபிசி தமிழிடம் இதை உறுதி செய்தார். தமிழக காவல்துறையின் உதவியுடன் மேற்குவங்க காவல் துறை அவரைக் கைது செய்துள்ளது.…

  2. தமிழக நகர் புற உள்ளூராட்சி தேர்தல் : பிரசார நடவடிக்கைகள் நிறைவு! தமிழக நகர் புற உள்ளூராட்சி தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசார நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) மாலையுடன் நிறைவுப்பெற்றன. இதனையடுத்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆயிரத்து 824 வாடர்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7 ஆயிரத்து 411 வார்டுகளிலும், நாளைய தினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு இலட்சம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தமிழக பொலிஸாருடன் தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் இராணுவத்தினரும், ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1267574

  3. உள்வாங்கிய கடல் - அச்சத்தில் மீனவர்கள்! ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதி வழக்கத்தை விட இன்று (15) காலை உள் வாங்கி உள்ளதால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி உள்ளதோடு, அடிக்கடி கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசால் அறிவித்துள்ள மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (14) மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன் பிடிக்க சென்ற ஒரு சில மீன்பிடி விசைப் படகுகள் மீன் பிடித்து விட்டு இன்று (15) காலை மீன் களை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்து வந்தனர். இந்நிலையில் மீன் பிடித்து வந்த மீ…

  4. தமிழகத்துடன் குமரி இணைந்த நாள்: 01 - 11 - 1956 கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத் துடன் இணைந்து 58 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இன்று 59-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம், தாய் தமிழகத்துடன் இணைப்புக்காக நடைபெற்ற திருத்தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்ற தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா (80), அந்த நாள் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். கன்னியாகுமரி, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த போது நிலவிய சூழ்நிலை என்ன? அப்போது உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது. குடியானவர்களுக்கு 2 இடங்குழி அரிசி (3 கிலோ) கன்ட்ரோல் துணி (மலிவான துணி) 2 ராத்தல் மரவள்ளி கிழங்கு (3 கிலோ) இவைதான் வாழ்க்கை. குறிப்பிட்ட நாள் இடைவெளியில் அரிசியும…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நளினி முருகன் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 18 மே 2023 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் விடுதலையான நளினி, தனி முகாமில் உள்ள தமது கணவரும் இலங்கையை சேர்ந்தவருமான முருகனுடன் அவரது தாய்நாட்டுக்கு செல்வாரா என்பது குறித்து பிபிசி தமிழுக்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நளினிக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பிறகு அது ஆயுள் தண்டனையாக குற…

  6. மதுரையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஆரம்பித்தவர் இந்தியாவிலேயே இல்லையாம்! ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழ்நாட்டிலும், இலங்கை உட்பட உலகில் தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் போராட்டங்கள் மும்முரமாக நடைபெற்றன. தமிழக அரசின் அறிவிப்பையடுத்து ஒரு வார காலமாக இடம்பெற்ற இந்தப் போராட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. இந்தப் போராட்டத்தை சமூக வலைதளங்கள் வாயிலாகவே இளைஞர்கள் ஒன்று திரட்டியதும் நீங்கள் அறிந்ததே! இந்த நிலையில், மதுரையில் தமுக்கம் - அழகர்கோவில் வீதியில் நடைபெற்ற ஒரு வார காலப் போராட்டத்துக்கான முதல் அழைப்பை விடுத்தவர் இந்தியாவிலேயே இல்லை என்ற ஆச்சரியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் போராட்டத்துக்கான முதல் …

  7. 'அ.தி.மு.க.வை மற்றவர்கள் அழிக்க விட மாட்டேன்!’ - ஆவேச வைகோ சுவாரஸ்யமான திருப்பங்கள், சம்பவங்களை நிகழ்த்துவதன்மூலம் தமிழக அரசியலை பரபரப்பாக வைத்திருப்பவர்களில் ஒருவர், வைகோ. மத்திய அரசின் பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்து கூட்டணிக் கட்சியினர் போராடிக்கொண்டிருந்தபோது, அந்தத் திட்டத்தை ஆதரித்து கூட்டணியைவிட்டு வெளியேறியவர். இப்போது, மிகப்பெரும்பாலான கட்சிகள் அ.தி.மு.க.வை எதிர்த்துப் பேசிவரும் நிலையில், அதற்கு மாறான பேச்சு, அறிக்கையின்மூலம் கவனிக்கப்பட்டு வருகிறார் வைகோ. சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளரானது, சட்டமன்றக்குழுத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டது, ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக இயங்கியது, கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் அடைப்பு என கடந்த சில தின…

  8. ’சசிகலா மக்களை மொட்டையடித்தார்... தினகரன் தொப்பி போடுகிறார்...!’ - சாடும் தீபா அணியினர் 'தமிழக மக்களை மொட்டையடித்து விட்டு சிறைக்குச் சென்றுள்ளார் சசிகலா. அடுத்து, மக்களுக்கு தொப்பி போட ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக நிற்கிறார்' என்று எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவைத் தலைமைச் செய்தி தொடர்பாளர் செல்லராஜாமணி தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். தீபாவின் பிரசார வியூகம் குறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் செல்லராஜாமணி கூறுகையில், "தேர்தலில் தீபா, போட்டியிடக்கூடாது என்று சசிகலா அணியினர் செயல்பட்டுவருகின்றனர்.…

  9. எல்லா ஊழல்களையும் கூறாதது தவறு தான்: நடிகர் கமல் காட்டம் சென்னை: 'அனைத்து விதமான ஊழல்களை பற்றி கூறாதது என் தவறுதான்' என, நடிகர் கமல், 'டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 'தமிழகத்தில், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது' என, நடிகர் கமல் விமர்சித்தார். அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலை யில், 'டெங்கு பாதிப்பை கவனியுங்கள்; உங்களை நாங்கள் கவனிக்கிறோம்' என, டுவிட்டரில் பதிவு செய்தார். அடுத்தடுத்து, அவர் வெளியிட்டு வரும் கருத்து, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், 'அனைத்து விதமான ஊழல்களை யும் கூறாதது தவறுதான்' என, நேற்று, கமல் தெரி வித்து…

  10. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் - அண்ணாமலை உள்ளிட்டோர் எஸ்.ஜெய்சங்கரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தல் By VISHNU 03 FEB, 2023 | 04:39 PM (நா.தனுஜா) இலங்கையில் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் எவ்வித மாற்றமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு அவசியமான தலையீட்டை இந்திய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்கிளை தலைவர் கே. அண்ணாமலை உள்ளிட்ட சிலர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும், மாகாணசபைத்தேர்தல்கள…

  11. 'மீனவர்களை சிறை பிடித்த இலங்கை' - கண்டித்து சாலைமறியல்; ஆவேச போராட்டம் 10 AUG, 2025 | 11:38 AM இராமேஸ்வரம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை காலை 356 விசைப்படகுகளில் மீன் துறை அனுமதியுடன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பகல் பொழுதில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகுகளை சுற்றி வளைத்து சிறை பிடிக்க முயன்றனர். இதனை கண்ட ஒரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். இந்நிலையில் தங்கச்சிமடத்த…

  12. பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது…

  13. மோடியின் பாராமுகம் முதல் முதல்வருக்கான சதுரங்கம் வரை...! -பன்னீர்செல்வத்தின் தைரியமும் சசிகலாவின் கொந்தளிப்பும் #VikatanExclusive #OPSVsSasikala அரசியல் மேகங்கள் போர்க்கோலம் பூண்டுள்ளன. முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் பேட்டியும் சசிகலாவின் குற்றச்சாட்டுகளும் தேசிய அளவில் அனைத்து செய்திகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டன. 'ஆளுநர் வருகையை எதிர்பார்த்திருக்கிறோம்' என தம்பிதுரை நம்பிக்கை தெரிவிக்க, 'இன்னும் ஒரு வாரத்திற்கு ஆளுநர் தமிழகம் பக்கமே வர மாட்டார்' என்கின்றனர் ராஜ்பவன் வட்டாரத்தில். கலங்க வைத்த கடைசி ஃபிளைட்! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்திலேயே, ' அடுத்த முதல்வர் யார…

  14. நான் மிகவும் விரும்பும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: கமல்ஹாசன் ட்விட் பதிவு கமல் விஜய் கோப்புப் படம் ட்விட்டரில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தான் மிகவும் விரும்பும் தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் #AskKamalHaasan @ikamalhaasan கமல்ஹாசனிடம் கேளுங்கள் என்ற தலைப்பில் ட்விட்டரில் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கிறார். அதிக கேள்விகள் உள்ளதால் இன்று பிக்பாஸ் ஷூட்டிங்கின் இடையிடையே பதிலளிப்பதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சில கேள்விகள் அவர் பதிலளித்ததில் சுவாரஸ்யமாக…

    • 1 reply
    • 536 views
  15. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைபட்டிருக்கும் முருகன், சாந்தனை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி. இவர்களின் விடுதலைக்காக முதல்வரை சந்திக்க மனு கொடுக்க இருக்கிறேன் என்கிறார் திருச்சி வேலுச்சாமி. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர். பொதுவாக, வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோர் மட்டுமே, இவர்களைச் சந்தித்துப் பேசி வருவது வழக்கம். இவர்களின் விடுதலைக்காக மாபெரும் பேரணி ஒன்றும் கடந்த 11-ம் தேதியன்று நடந்தது. இந்நிலையில், இன்று காலை வேலூர் சிறையில் முருகனையும் சாந்தனையும் சந்தித்துப் பேசியிரு…

  16. ஜெ., சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கை விசாரிக்க ஜாமின் உத்தரவும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு ! புதுடில்லி : தமிழக முன்னாள் முதல்வர் ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் பெற்றுள்ள ஜாமின் வரும் 4 மாதங்களுக்கு நீட்டித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே சொன்னது போல் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் வழக்கை நாள் தவறாமல் நடத்தி குறிப்பிட்ட 3 மாத காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என தலைமை நீதிபதி தத்து தலைமையிலான நீதிபதிகள் பெஞ்ச் இன்று ஆணை பிறப்பித்தது. கடந்த, 1991-96ல் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துகள் சேர்த்ததாக பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி ஜெ., …

  17. ஈழப்போரில் சரணடைந்த போர் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர் – சீமான் ஈழப்போரில் சரணடைந்த போர் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இதற்கு சர்வதேச விசாரணைகள் தேவை எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். உலக காணாமல்போனோர் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி இலங்கையில் ஈழப்போரின் போது காணாமல்போனவர்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “2009ஆம் ஆண்டு ஈழப்போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இலங்கையில் தற்போது போராடி வருகிறார்கள். போரில் சரணடைந்தவர்கள் யார்? அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை இலங்கை அரசு இன்னும் வெளியிடவில்…

    • 1 reply
    • 717 views
  18. 'ஆளும் கட்சியை விமர்சிக்காமல்' ஆட்சியை பிடிப்போம் என கூறும் விஜய் - புதுச்சேரி திட்டம் என்ன? பட மூலாதாரம்,X கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய், புதுச்சேரி அரசை பெரிதாக விமர்சனம் செய்யாமல், பொதுவான பிரச்னைகளைப் பேசிச் சென்றிருக்கிறார். புதுச்சேரியில் விஜய்யின் திட்டம் என்ன? தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டம் புதுச்சேரியில் இன்று (டிச. 09) நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து கடுமையான திமுக எதிர்ப்பு நிலையை மேற்கொண்டுவரும் நிலையில், அக்கட்சியின் கூட்டங்களில் விஜய்யும் இரண்டாம் கட்டத் தலைவர்களும் திமுகவைக் கடுமையான விமர்சித்து வந்தனர்…

  19. போலீஸார் விரட்டியடித்த பின்னரும் மெரினாவில் உறுதியுடன் இருக்கும் இளைஞர்கள் சொல்வது என்ன? மெரினா கடற்கரை விவேகானந்தர் நினைவு இல்லம் அருகில் 7 நாட்களாக, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வந்த இளைஞர்களை 23 -ம் தேதியான நேற்று, காலை 7.30 மணிக்கு போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதில் வெளியேற்றும்போது, போலீஸாரின் சமரசத்தை ஏற்க மறுத்த இளைஞர்கள் சுமார் ஆயிரம் பேர் கடற்கரையில் தங்கியிருந்து போராடி வருகின்றனர். அவர்களை இரவு நேரத்தில் சந்தித்தோம். கடற்கரையில் போராடிக்கொண்டிருக்கும் வேலூர் கணேஷ் பேசும்போது, ‘அமைதியாக சென்று கொண்டிருந்த மெரினா போராட்டத்தைப் போலீஸார் திசைதிருப்பி விட்டு விட்டனர். கலைந்துபோக...சிறிது நேரம் கேட்டோம். அதற்குள் இளைஞர்களை…

  20. ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்களை வெளியிடத் தயார் – பிரதாப் ரெட்டி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனைக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார். முக்கியமாக, ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும், ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சையில் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை என்றும் அவர் கூறினார். http://www.vikatan.com/news/tamilnadu/79644-ready-to-release-treatment-details-of-jayalalithaa-says-prathap-reddy.art

  21. மநீம நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா... கமல்ஹாசனின் சர்வாதிகாரம்தான் காரணமா? அழகுசுப்பையா ச கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்திலிருந்து நிர்வாகிகள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், கமலின் சர்வாதிகாரப் போக்குத்தான் காரணம் எனப் பலரும் விமர்சனம் செய்கின்றனர். உண்மையான காரணம் என்ன என விசாரித்தோம்... தமிழக சட்டப்பேரவை முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் எதிர்பாராத வகையில் பல்வேறு காட்சிகள் அரங்கேறிவருகின்றன. அவற்றில் சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கியப் பொறுப்பிலிருந்து எட்டுப் பேர் வெளியேறியிருப்பது மிக முக்கியமான விவாதப் பொருளாகியிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டது முதல் பல்வேறு சர…

  22. ஊழல் வழக்கில் இருந்து காத்துக்கொள்ள மிரண்டு ஓடிய எம்.ஜி.ஆர். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் பொற்காலம், ஏழைகளுக்காக ஆட்சி நடத்தியவர் என புலங்காகிதம் அடைபவர்கள் பலர். ஆனால், எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆர்க்கு தெரிந்தும், அவரே முன்னின்று நடத்திய ஊழல்கள் பல. அவைகளை திட்டமிட்டே மறைத்து வருகிறார்கள். ஆதாரபூர்வமாக பல ஊழல்கள் வெளிவந்தாலும் அவை அப்படிறே மறக்கடிக்கப்பட்டன. புத்த பிரானின் வாரிசாக அவரை கட்டமைக்கிறார்கள். 32 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஒரு ஊழல் வழக்கின் தீர்ப்பு எம்.ஜி.ஆர் முகமுடியை கிழிக்கிறது. இன்றைய இளைய சமூகம் அறிந்துக்கொள்ள...... 1982 ஆம் ஆண்டு தமிழகத்தில் எம்.ஜி.ஆ…

  23. திமுக முன்னாள் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி, சென்னை போயஸ் கார்டனில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்தாக தகவல் வெளியாகியுள்ளது.திமுக ஆட்சியின் போது செய்தி விளம்பரதுறை அமைச்சராக பரிதி இளம்வழுதி இருந்தார். www.dinaithal.com/tamilnadu/16526-he-joined-aiadmk-former-minister-arc-ilamvaluti.html

  24. போலீஸ் காவலில் இளைஞர் விக்னேஷ் மரணம்: மேலும் 4 பேர் கைது 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் போலீஸ் காவலில் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு போலீஸ் காவலிலேயே சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துபோன சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு பேரை சிபிசிஐடி கைதுசெய்துள்ளது. ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், தலைமைக் காவலர் குமார், ஆயுதக் காவல்படையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் என நான்கு பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளன…

  25. மனு ஸ்மிருதி: ஆ. ராசா இந்துக்கள் பற்றி தவறாக பேசியதாக புதிய சர்ச்சை - பின்னணி என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி, இந்து மதம் போன்றவை தமிழ்நாட்டில் அவ்வப்போது விவாதப் பொருள் ஆவது வழக்கம். தற்போது, முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம். பியுமான ஆ. ராசா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்து மதம் குறித்து பேசிய காணொளி சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "நீ பார்சியாக இல்லையெனில், கிறிஸ்தவனாக இல்லையெனில், இஸ்லாமியராக இல்லையெனில், நீ ஒரு இந்துவாகத்தான் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.