தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
' ஆவணங்களைக் கொடுங்கள்' -சசிகலாவை அதிர வைத்த தேர்தல் ஆணையம் ' தமிழக முதல்வர் நாற்காலியை நோக்கி சசிகலா நகர்ந்து கொண்டிருக்கிறார்' என வட இந்திய ஊடகங்கள் வரையில், விவாதங்களைத் தொடங்கியுள்ள சூழலில், ' அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் தேர்வு குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சசிகலாவுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கூடவே, ' இரட்டை இலை சின்னத்துக்கு யாராவது உரிமை கொண்டாடினால், ஏற்கக் கூடாது' எனவும் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள் சசிகலா எதிர்ப்பு அணியினர். சென்னை, வானகரத்தில் கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில், பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சியின் நிர்வாகிகளால் முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. தற்காலிக பொதுச் செயலாளராக பதவியேற்றவர், ' பொதுக்குழு…
-
- 1 reply
- 644 views
-
-
சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு காலை 10.35 மணிக்கு முடிவு தெரியும் | யாரும் நேரில் ஆஜராக தேவையில்லை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.66 கோடி சொத்துக் குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதா…
-
- 1 reply
- 330 views
-
-
தொகுதிப்பக்கம் செல்ல முடியுமா சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ? அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா ஆசி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒருவழியாக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். சசிகலா தலைமையை ஏற்காத அ.தி.மு.க-வினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா ஆதரவுடன் முதல்வராகியிருக்கும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்போர் ஒரு அணியாகவும் பிரிந்து நிற்கின்றனர். இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூடியது. எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், அரசை எதிர்த்து ஓ.பி.எஸ் உள்ப…
-
- 1 reply
- 408 views
-
-
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெருமாள் பேட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்த 5 பேர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். மேலும் நாகை மீனவர்களின் படகில் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இதில் மீன்பிடி வலைகள் எரிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து காயம் அடைந்த 5 மீனவர்களும் தற்போது நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது நாகை மற்றும் காரைக்கால் பகுதியிலிருந்து கடலுக்கு சென்று நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது மீனவர்கள் 34 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இலங்கை கடற்படைய…
-
- 1 reply
- 496 views
-
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து..! பொருள்கள் எரிந்து நாசம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சன்னதிக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதனால், பெருமளவிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. மதுரையிலுள்ள பிரசித்திப்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சன்னதியில் கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான கடைகள் இருக்கும். அம்மன் சந்நிதிக்கு செல்லும் வழியில் ஆயிரங்கால் மண்டம் உள்ளது. அப்பகுதியில் விளையாட்டு பொருட்கள், கைவினைப்பொருட்கள், வளையல்கள் விற்கும் கடைகள் ஐம்பதுக்கும் மேற்பட்டது உள்ளது. 10 மணி அளவில் கோயில் நிர்வாகம், நடையைச் சாத்திவிட்டு சென்றனர். அதன்பின்னர், கோயிலுக்குள் இருந்து புகை மூட்டமாக வந்துள்ளது. அதன…
-
- 1 reply
- 773 views
-
-
ஈரோடு இடைத் தேர்தல் மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஏன் முக்கியம்? கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MK STALIN ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இது பல்வேறு விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமையும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி ந…
-
- 1 reply
- 725 views
- 1 follower
-
-
இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான ‘ட்ரெய்ன் 18’யின் சோதனை ஓட்டம் நிறைவு சென்னையிலுள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான ‘ட்ரெய்ன் 18’ இன் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை- பெரம்பூரிலேயே ‘ட்ரெய்ன் 18’ அறிமுக விழா நடைபெற்று, சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது. குறித்த ‘ட்ரெய்ன் 18’, என்ஜின் இல்லாமல் இயங்கக் கூடியதாகவும் அதிவேக ரெயிலான சதாப்தியை விட 15 சதவிகிதம் பயண நேரத்தை குறைவாக்க கூடியதாகவும் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இந்த ‘ட்ரெய்ன் 18’, 100 கோடி ரூபாய் செலவில் சென்னை- பெரம்பூரிலுள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘ட்ரெய்ன் 18’ ரயில் தொடர்பாக பொறியாளர் உதயகுமார் கூற…
-
- 1 reply
- 620 views
-
-
உதயமாகிறது அம்மா திராவிட முன்னேற்ற கழகம் அதிமுகவை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருவர் நம்மிடம் "அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை,அதற்குள் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பதவி ஏற்கச்சொல்லி எம்.எல்.ஏ க்கள் ,அமைச்சர்கள் என்று பல்வேறு நபர்கள் போயஸ்கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பொதுச்செயலாளர் பதவி ஏற்கச்சொல்லி வற்புறுத்தி வருவதாக செய்திகள் வருகிறது.இந்த வேலையை சசிகலாவின் கணவர் நடராஜன் திட்டமிட்டுபரப்பி வருகிறார். இதில் மேல்மட்ட நபர்களுக்கு பதவியை தக்க வைக்க இப்படி சசிகலாவிடம் சரணடைந்து விடுகிறார்கள்.ஆனால் தொண்டர்கள் சசிகலாவை விரும்பவில்லை.இதனால் பல்வேறு மா…
-
- 1 reply
- 757 views
-
-
உணர்ச்சிகரமாகச் செய்தார்கள் வளர்ச்சிகரமாகச் செய்யவில்லை சசிகலா சிறைக்குச் செல்வார் என்றார், சென்றார். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும் என்றார். முடக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளிப்போகும் என்றார் நிறுத்தப்பட்டது. தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே சொல்லும் தீர்க்கதரிசியான பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசையைச் சந்தித்தபோது… நீங்கள் சொல்வது எல்லாம் நடந்து வருகிறது என்கிறார்கள். தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும்? தமிழக சட்டசபைக்கு 2021 க்கு முன்னரே தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. தமிழக ஆட்சியாளர்கள் மீது பல ஊழல் வழக்குகள் இருக்கின்றன. முதல்வர் மேலேயே விசாரணை வருகிறது! இரண்டு திராவிட…
-
- 1 reply
- 431 views
-
-
எப்படியாவது பிரதமர் பதவியை அடைந்து விடலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கனவு காண்பதாக நடிகை குஷ்பு குற்றஞ்சாட்டினார். திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி அந்தக் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சேலம் தாதகாப்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியது: ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வாக்குகளே உண்மையான வாக்குகள். அந்தத் தேர்தலில் மனசாட்சிப்படி திமுகதான் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் மட்டும் திமுகவைப் பயன்படுத்தி வந்தனர். அவர்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எனவேதான் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம். ஆனால், நாங்கள் காங்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தேவயானி கோபர்கடே -- இந்திய அமெரிக்க உறவுகளில் நெருக்கடி விலகியது ? இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டதற்குப் பதிலடியாக, இந்தியா , டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து ஒரு அதிகாரியை வெளியேற உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்த மேலும் தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை. தொடர்புடைய பக்கங்கள் தேவயானி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதியக் காலக்கெடுவை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு முன்னதாக , விசா மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, இந்திய அமெரிக்க உறவுகளில் பெரும் சர்ச்சை ஏற்படக் காரணமாக இருந்த, இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியா திரும்பிக்கொண்டிருக்கிறா…
-
- 1 reply
- 717 views
-
-
சென்னை: நான் கணித்தது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக பா.ஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவி்ல்லை. இது நான் எதிர்பார்த்தது தான். காலையில் எனது ட்விட்டர் வலைதளத்திலும் கூட இதனைத்தான் பதிவு செய்திருந்தேன். நான் கணித்தது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசு வழக்கறிஞருக்கு மட்டும்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அவர்தான் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதனை அவ…
-
- 1 reply
- 406 views
-
-
தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் காயத்ரி ரகுராம் தமிழ்நாடு பாஜகவில் கனத்த இதயத்துடன் இருந்து விலகுகிறேன் என காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நடிகையாகவும், நடன இயக்குநராகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி ரகுராம். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். சமீபகாலமாக எதிர்க்கட்சினரை விமர்சித்தும், சொந்த கட்சியில் தனக்கு எதிராக செயல்படுபவர்கள் குறித்தும் ட்விட்டரில் காயத்ரி ரகுராம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மிரட்டல்விடுத்து அக்கட்சியின் ஓபிசி அணி மாநிலபொதுச் செயலாளர் சூர்யா சிவா பேசியதாக வெளியான ஓடிய…
-
- 1 reply
- 340 views
- 1 follower
-
-
தூத்துக்குடியில் குண்டடிபட்ட 90 பேருக்கு வீட்டிலேயே சிகிச்சை..! அதிர்ச்சி அறிக்கை Chennai: 'இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்கநேர்ந்தாலும் தீமையானதற்கு அஞ்சேன்!' - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு காவு வாங்கிய ஸ்னோலின் உடலின் முன் படிக்கப்பட்ட சங்கீத வசனங்கள் இவை. நேற்று அவர் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன்தினம் தமிழரசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழக மக்கள் தங்கள் வாழ்நாளில் மறந்திடாத பெருந்துயரச் சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. உயிர் நீத்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டும் புதைக்கப்பட்டும் வருகின்றன. உறவினர்களின் கண்ணீர் இன்னும் ஓய்ந்தபாடில்லை. மக்கள் இன்னும் அந்த…
-
- 1 reply
- 668 views
-
-
சென்னையில் இன்று போராட்டம் – 70 அமைப்புகள் பங்கேற்பு! தமிழக ஆளுநரைக் கண்டித்து சென்னையில் இன்று (திங்கள்கிழமை0 நடைபெறவுள்ள முற்றுகைப் போராட்டத்தில் 70 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள் என ம.தி.முக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். நேற்று (ஞாயற்றுக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் ஒவ்வொரு பகுதியாகச் சென்று மாவட்ட ஆட்சியர், பொலிஸ் கண்காணிப்பாளரை சந்திப்பது முறையல்ல. தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியா நடக்கிறது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தாமதம் செய்யும் ஆளுநரைக் கண்டித்து ஆளுநர் மாளி…
-
- 1 reply
- 1.1k views
-
-
'தை பிறந்ததும் தேர்தலில் போட்டியிடாமலேயே தமிழக முதல்வராகிறார் வி.கே.சசிகலா' சசிகலா | கோப்பு படம் மதுவிலக்கை அமல்படுத்தும் கோப்பில் முதல் கையெழுத்து எனவும் தகவல் தேர்தலில் போட்டியிடாமலேயே ஜனவரி 15-லிருந்து 31-ம் தேதிக்குள் வி.கே.சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாக அதிமுக-வின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெருத்த எதிர்பார்ப்புக்கு இடை யில் அதிமுக பொதுக்குழு டிசம்பர் 29-ல் சென்னையில் கூடுகிறது. இந்தப் பொதுக்குழுவில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது. இதனால், பொதுக் குழுவை சிறு சலசலப்புகூட இல் லாமல் வெற்றிகரமாக நடத்திமுடிப் பதற…
-
- 1 reply
- 813 views
-
-
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடிகர் விஜய்யின் உறவினருக்கு சொந்தமான தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தூத்துக்குடி சேவியர் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமான இன்டேவ் லாஜிஸ்டிக்ஸ் என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் தூத்துக்குடி கெரக்கோ தெருவில் உள்ளது. இந்த நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்நிறுவனத்திற்கு சொந்தமான கன்டெய்னட்டல் கன்டெய்னர் பிரிக்ட் ஸ்டேஷன் மற்றும் சரக்குபெட்டக தளங்களிலும் ஒரேநேரத்தில் 25க்கும் மேற்ப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான சேவியர்பிரிட்டோ நடிகர் விஜய்க்கு நெருங…
-
- 1 reply
- 554 views
-
-
பாடலாசிரியர், புலமைப்பித்தன் காலமானார். சென்னை: சினிமா பாடலாசிரியரும், தமிழக சட்ட மேலவையின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்த புலமைப்பித்தன் வயது மூப்பின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 86. சினிமா பாடலாசிரான கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த வாரம் சென்னை, அடையாறில் உள்ள போர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக உறுப்புகள் செயல்பாடு குறைவு ஏற்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டா் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர், இன்று (செப்.,8) காலை 9.33 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். மருத்துவமனையிலிருந்து, அவரது உடல் நீலாங்கரையில் உள்ள இல்லத்துக்கு கொண்…
-
- 1 reply
- 484 views
-
-
சசிகலா மறுசீராய்வு மனுமீது இன்று விசாரணை! சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உள்ளிட்டோர் தாக்கல்செய்த மறுசீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருந்தது. ஆனால், விசாரணை நடத்தும் நீதிபதிகள் குழுவில், ரோஹிண்டன் நாரிமன் இடம்பெறுவதற்கு சசிகலா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினத்துக்கா…
-
- 1 reply
- 403 views
-
-
46-வது ஆண்டில் அ.தி.மு.கவில் ஜனநாயகத்தின் நிலை என்ன?! எம்.ஜி.ஆர் என்ற தனிநபர் தன் மக்கள் செல்வாக்கினால் உருவாக்கிய கட்சியின் 46 -வது ஆண்டு தொடக்க தினம் இன்று...! தமிழக அரசியல் வரலாற்றில், எம்.ஜி.ஆர் என்ற பெயரும் அ.தி.மு.க என்ற கட்சியும் தவிர்க்கமுடியாதவை. தமிழகத்தில், அண்ணா தலைமையில் உருவான திராவிட இயக்கத்தின் ஆட்சியை அவருக்குப்பின் வலுவாகத் தொடரச்செய்த பெருமை அ.தி.மு.க-வுக்கு உண்டு. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கைக்கொண்ட திராவிட உத்திகளிலிருந்து சற்று விலகிப் பயணிப்பதாக அ.தி.மு.க மீது கடந்த காலக் குற்றச்சாட்டுகள் இருந்துவந்தன. ஆனால், தேசியக் கட்சிகளின் வேர் தமிழக மண்ணில் ஆழ ஊடுருவ முடியாதபடி அரண் அமைத்ததில், அ.தி.ம…
-
- 1 reply
- 883 views
-
-
பட மூலாதாரம்,DMK/WWW.DMK.IN கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 27 ஏப்ரல் 2025, 10:07 GMT 'அமைச்சராக இல்லை என்பதால் தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் வேண்டுமா... அமைச்சர் பதவி வேண்டுமா?' என, ஏப்ரல் 23 அன்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. செந்தில் பாலாஜியின் கருத்தை அறிவதற்கு ஏப்ரல் 28 வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்தது. இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜி தமது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இவருடன் சேர்த்து பொன்முடியும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. தி.மு.க அமைச்சர்களில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி போலவே, மேலும் 6 அமைச்சர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. …
-
- 1 reply
- 276 views
- 1 follower
-
-
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டுக்குப் பிறகு விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துவந்த சீமான், இனி விஜய் மீதான விமர்சனங்களை குறைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார்கள் உட்கட்சி விவரம் அறிந்த சிலர். இந்த முடிவின் பின்னணி என்ன? 2024 பிப்ரவரியில் த.வெ.க-வை தொடங்கினார் விஜய். அப்போது ஆரத்தழுவி வரவேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து விஜய்யின் நடவடிக்கைகளை வரவேற்று பேசிவந்தார். 2024 அக்டோபரில் நடந்த த.வெ.க-வின் முதல் மாநாட்டில் `நா.த.க-வை நட்பு சக்தியாக விஜய் முன்நிறுத்துவார்’ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீமானை மறைமுகமாக விமர்சித்து அதிர்ச்சி கொடுத்தார் விஜய். சீமான், விஜய் 2024 நவம்பர் மாதத்தில…
-
- 1 reply
- 296 views
-
-
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படவேண்டும் - பா.ம.க. தலைவர் இராமதாஸ் 22 Dec, 2025 | 04:01 PM இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதி (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு) நிராகரிக்கப்பட்டு, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக்கப்படவேண்டும் என தமிழ்நாட்டில் இயங்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ச.இராமதாஸ் தெரிவித்துள்ளார். இராமதாஸ் இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதி (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு) நிராகரிக்கப்பட்டு, தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முற…
-
-
- 1 reply
- 178 views
- 1 follower
-
-
வைகோவின் சொந்த கருத்து! மழுப்பும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்!! பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், செலவுக்கு பணமில்லாமலும் திண்டாடி வருகிறார்கள். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-மையங்களில் மக்கள் வரிசைகட்டி நிற்பதும் பணமில்லாமல் ஏமாற்றம் அடைவதுமான நிலை தொடர்ந்து கொண்டுள்ளது. மோடியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நலக் கூட்டணியில் நிலை என்ன? தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், பிரதமரின் ரூபாய் நோட்டு விவகாரத்தை கடுமையாக…
-
- 1 reply
- 661 views
-
-
திருச்சி விமான நிலைய கழிவறையில் 1 கிலோ தங்க கட்டி பறிமுதல். சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் விமான நிலைய இமிகிரேசன் பிரிவு அருகே உள்ள கழிவறையை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர் தாமரை சென்றார். அப்போது கழிவறையில் ஒரு தங்க கட்டி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து அவர் விமான நிலைய மேலாளர் கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்த போது அந்த தங்க கட்டி 1 கிலோ எடை இருக்கும் எனவும் தெரியவந்தது. 24 கேரட் கொண்ட அந்த தங்க கட்டியின் மதிப்பு ரூ.29 லட்சம் இருக்கும் என…
-
- 1 reply
- 605 views
-