தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
திடீர் சுகவீனம் - மருத்துவமனையில் வைகோ! சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடல் நல பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே மருத்துவமனையில்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நெஞ்சு வலி காரணமாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த்துக்கு முன்பாகவே வைகோவுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு அவரை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நலப் பிரச்சினை குறித்த விவரம் தெரியவில்லை. - தற்ஸ் தமிழ் - வைகோ அவர்கள், பூரண சுகம் பெற்று, வீடு திரும்ப பிரார்த்திக்கின்றேன்.
-
- 7 replies
- 831 views
-
-
மதுரை: மதுரையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் திமுகவில் இருந்து வந்து தற்போது ஆளுங்கட்சியில் இருக்கும் பரிதி இளம்வழுதியை மேடையில் வைத்துக் கொண்டே அக்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் அசிங்கப்படுத்தினார். பதிலுக்கு பரிதி திமுகவினரை அசிங்கப்படுத்தி பேசினார். மதுரையில் அதிமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய பரிதி இளம்வழுதி மற்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பேசிய அதிமுகவினர் சிலருக்கு பரிதியின் பெயரை சரியாக உச்சரிக்க தெரியவில்லை. இந்நிலையில் கூட்டத்தில் பேசிய மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் கூறுகையில்…
-
- 7 replies
- 1.2k views
-
-
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க குடை! மின்னம்பலம் புதுக்கோட்டையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க குடை பயன்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பாஜக சார்பில் நடந்தது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுதல், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சிலர், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. இந்த நிலையில் புதுக்கோட்டையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க குடை பயன்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பாஜக சார்பில் நடந்தது.…
-
- 7 replies
- 1.2k views
-
-
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா: எடப்பாடி,அண்ணாமலைக்கு அழைப்பு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகினறது. இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரும் பங்கேற்க முதலமைச்சர் விரும்புகிறார். அதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர…
-
-
- 7 replies
- 670 views
- 2 followers
-
-
தமிழகத்தில், 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு தடை நீடித்ததால், பல திரையரங்குகள் செயல்படவில்லை. தற்போது தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொரோனா கால வழிமுறைகளை பின்பற்றி, திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படங்களை திரையிடுவதற்கு முன்னதாக, எல்லா திரையரங்குகளிலும் கொரோனா விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்படவேண்டும் என்றும் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்து செயல்படலாம் என…
-
- 7 replies
- 1.1k views
-
-
’என்னாது... 3 ஆயிரம் ரூபாய்தானா...!’ தினகரனுக்கு அதிர்ச்சியளித்த ஆர்.கே.நகர் ஆர்.கே.நகர்த் தொகுதி வாக்காளர்களுக்கு மூவாயிரம் ரூபாய் சசிகலா அணியினர் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. பணம் கொடுக்கச் சென்றவர்களிடம் இவ்வளவுதானா என்று சலிப்புடன் சிலர் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் படுபிஸியாக உள்ளனர். தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வேட்பாளர்களும், அவர்களுடைய ஆதரவாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துக்கு ஓட்டு கேட்டுவருகின்றனர். வாக்காளர்களுக்கு வாக்குறுதியோடு அன்பளிப்பும் சில வேட்பாளர்கள் தரப்பிலிருந்து அள்ளி வீசப்படுகின்றன. சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் கருணாம…
-
- 7 replies
- 1.4k views
-
-
மஹிந்த ராஜபக்ஷ முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்பட மாட்டார்: கமல்ஹாசன் இலங்கையில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை நான் வரவேற்கவில்லை. ஆனால் அவர் முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்படமாட்டாரென நம்புகின்றேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மஹிந்த பிரதமராக வந்துள்ளமையால் அவர் தமிழர்களுக்கு நன்மை செய்யமாட்டார் என்று யாரும் எண்ண வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏனைய நாடுகளின் அரசியல் விவகாரத்தில் தலையீடு செய்வது சிறந்ததில்லையெனவும் கமல் சுட்டிக்காட்டியு…
-
- 7 replies
- 1.1k views
-
-
தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..? தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தே…
-
-
- 7 replies
- 616 views
- 1 follower
-
-
சென்னை: ராஜபக்சே ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். சுதந்திரப் போரட்ட தியாகி தீரர் சத்தியமூர்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஞானதேசிகன், இலங்கையை நட்பு நாடாக பார்க்காவிட்டால் 13வது சட்ட திருத்தம் தொடர்பாக இந்தியா யாரிடம் பேசுவது? என்று கேள்வி எழுப்பினார். தமிழக அரசியல் கட்சிகள் கூறுவது போல இலங்கையை நட்பு நாடாக கருத வேண்டாம் என்றால், யாரிடம் பேச வேண்டும்…
-
- 7 replies
- 2.8k views
-
-
பிப்.17-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் கோப்புப் படம்.| க.ஸ்ரீபரத். தமிழக முதல்வராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடத்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து பிற 30 அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஆளுநர் அவர்களுக்கு ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளனர். இந்த நிலையில் பல்வேறு திருப்பங்கள் இன்றும் (வெள்ளிக்க…
-
- 7 replies
- 910 views
-
-
தனிக்கட்சி தொடங்குகிறார் தீபாவின் கணவர் மாதவன்! தீபாவின் கணவர் மாதவன் புதியதாக கட்சி தொடங்க இருப்பதாக பேட்டி அளித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார் மாதவன். அப்போது அவர், 'புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வந்துள்ளேன். தீபா பேரவை நடத்துகிறார். நான் கட்சி நடத்த இருக்கிறேன். அது பற்றி விரைவில் அறிவிப்பேன். நான் கட்சி தொடங்க இருப்பது பற்றி தீபா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தீபா பேரவையில் தீய சக்திகள் புகுந்துள்ளன. எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையில் உள்ள தீய சக்திகள் யார் என்பதை தகுந்த நேரம் வரும்போது மக்களிடம் அறிவிப்பேன். தீபா தன்னிச்சையாக செயல்படவில்லை. …
-
- 7 replies
- 1.3k views
-
-
தன்னை உயிருக்குயிராக காதலிப்பதாக கூறிய காதலி, திடீரென பெற்றோர் சொல்படி திருமணம் செய்துகொண்டதால், ஆத்திரமடைந்த காதலன், காதலிக்கும் போது தான் செய்த செலவை திருப்பித் தரவேண்டும் என போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ஹைதராபாத் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அந்த இருவரும் முதலில் நண்பர்களாக பழகினர். பின்னர் நட்பு காதலாக மாறியது. இருவரும் சுமார் 2 ஆண்டுகளாக பூங்கா, திரையரங்கம், ஷாப்பிங் மால்கள், கோயில், குளங்கள் என சந்தோஷமாக சுற்றினர். காதலன் தன் அன்பின் அடையாளமாக காதலிக்கு பல்வேறு பரிசுப் பொருட்களையும் வழங்கினாராம். இந்நிலையில் அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை…
-
- 7 replies
- 859 views
-
-
கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் 15 Oct 2025, 11:35 AM தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடத்திய கரூர் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 15) அளித்த விளக்கம்: கரூர் வேலுசாமிபுரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம் கட்டுக்கோப்பாக நடைபெற்றது; சுமார் 17,000 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர் கரூர் விஜய் பிரசார கூட்டத்துக்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது; ஆனால் பகல் 12 …
-
-
- 7 replies
- 444 views
- 2 followers
-
-
ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (16) காலை நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். காலை 7:30 மணியளவில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டடதாகவும், அங்கு வைத்தியர்கள் ECG மற்றும் எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படலாம் என்று வைத்தியசாலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavanne…
-
-
- 7 replies
- 530 views
-
-
3 தொகுதிகளில் முன்னிலை..! அப்போலோவில் அதிமுகவினர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க முன்னிலை வகித்து வருவதால் அதிமுகவினர் ஆட்டம், பாட்டத்துடன், இனிப்புகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்திலும், கட்சி தலைமை அலுவலகத்திலும் இந்த கொண்டாடம் நடந்து வருகிறது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. முதல் சுற்றில் இருந்தே அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர். இரண்டாவது இடத்துக்கு திமுகவும், 3வது இடத்துக்கு பாஜ…
-
- 7 replies
- 1.5k views
-
-
சென்னைக்கான வீசா தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள் காரணமாக இவ்வாறு சென்னைக்கு வீசா வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. யாத்திரைகளை மேற்கொள்வதற்காக சென்னைக்கு வீசாக்களை வழங்கி வந்த பௌத்த சாசன அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது, தற்போதைய நிலைமைகளில் மாற்றம் ஏற்படும் வரையில் வீசா வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. சென்னை ஊடாக இலங்கையர்கள் பயணம் செய்வது ஆபத்தானது எனவும், இதனால் இவ்வாறான யாத்திரைகளுக்கு வேறும் வழிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. http://www.newsalai.com/details/a-temporary-suspension-of-the-visa.html
-
- 7 replies
- 1.2k views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் டிடிபி டிப்ளோமாவில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று தங்க பத்தகம் வாங்கியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் பேரறிவாளன். அவர் சிறையில் இருந்து கொண்டே மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் ஆதரவுடன் சிறை துறை நடத்தி வரும் டிடிபி டிப்ளமோ படிப்பு படித்து வந்தார். அவர் டிடிபி டிப்ளோமாவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்று சிறை துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு எழுதிய 185 கைதிகளில் 175 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அறிவி…
-
- 7 replies
- 753 views
-
-
கோவையில் வணிக வளாகம் ஒன்றில் அமைந்துள்ள தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கோவை நகரின் மையத்தில் அவினாசி சாலையில் லட்சுமி மில்ஸ் அருகே இந்த வணிக வளாகம் அமைந்துள்ளது. மூன்றாவது தளத்தில் உள்ள தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 10க்கும் மேற்பட்ட வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். இருப்பினும் கொழுந்து விட்டு எரிந்த தீயானது, அந்த வணிக வளாகம் முழுவதும் பற்றி கொண்டது. தீயில் சிக்கி இதுவரை நான்கு பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணிகளில் தீயணைப்புத்துறையினர் மற்றும…
-
- 7 replies
- 1k views
-
-
கவர்னர் சென்னை வருவது உறுதியாகவில்லை சென்னை : தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருவது உறுதியாகவில்லை என மும்பை கவர்னர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. கவர்னரின் தமிழக பயணம் பற்றி தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை எனவும், அவர் இப்போது வரை டில்லியில் தான் இருக்கிறார் எனவும் மும்பை கவர்னர் மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.dinamalar.com/news_detail.asp?id=1706941
-
- 7 replies
- 575 views
-
-
இலங்கை தமிழர்களின் நலனைப் புறக்கணிக்கும் வகையில் செயல்படும் காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியேற வேண்டும் என, பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில், மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., நீடிக்காது என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இந்நிலையில், டில்லியில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர், ஷாநவாஸ் உசேன்,நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க.,வைப் பொறுத்தவரை,காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியாகத் திகழ்கிறது. ஆனால், இலங்கையில், தமிழர் நலனை புறக்கணிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. எனவே, அந்த…
-
- 7 replies
- 941 views
-
-
December 13, 2013 டெல்லி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். இதன்மூலம் லோக்சபா தேர்தல் பாஜக-மதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயார் ஆகிவருகின்றன. கடந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகள் இந்த முறை அதே கூட்டணி அமைக்குமா? அல்லது கூட்டணிகள் இடம் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நான்கு தேர்தலில் பாரதீய ஜனதா பெற்றுள்ள இமாலய வெற்றியும் பல அரசியல் கட்சிகளை யோசிக்கச் செய்துள்ளது. தமிழ் நாட்டிலும் பாரதீய ஜனதா முக்கிய அரசியல் கட்சிகளை தனது கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங…
-
- 7 replies
- 2.3k views
-
-
எம்.ஏ. பரணி தரன் பிபிசி தமிழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவசங்கர் பாபா என்று அழைக்கப்படும் சிவசங்கருக்கு எதிராக அவர் நடத்தி வரும் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவிகள் அளித்துள்ள பாலியல் தொந்தரவு புகார்கள், நாளுக்கு நாள் புதிய சர்ச்சைகளை தோற்றுவித்து வருகின்றன. யார் இந்த சிவசங்கர் பாபா? இவருக்கு எதிராக வலுத்து வரும் சர்ச்சைகள் என்ன? திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 1949ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்தவர் சிவசங்கர். இவரது தந்தை நாராயண சர்மா, தாய் விஜயலட்சுமி. இவரது தந்தை பள்ளி ஆசிரியர். பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே முடித்த இவர், வேதியியல் துறையில் பட்டப்படிப்பும், சரக்குகள், போக்குவரத்து கையாளல் பிரிவில் முதுகலை படிப்பும் படித்தார். கல்லூரி …
-
- 7 replies
- 1.3k views
-
-
வைகோ உடன் ஸ்டாலின் சந்திப்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வாய்ப்பு உள்ளதாக நம்பிககை தெரிவித்தார். மு.க.ஸ்டாலினின் தம்பி மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதிக்கு ஜூன் 8-ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. தனது தம்பி மகனின் திருமணத்துக்காக தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து அழைப்பிதழ் வழங்கியிருந்தார். இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கினார். மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, திமுக வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் அண்ணா நகர் சாந்தி காலனியில் வைகோ வீட்ட…
-
- 7 replies
- 530 views
-
-
``கர்நாடக மக்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்`` - சத்யராஜ் தன்னுடைய வார்த்தைகள் கர்நாடக மக்களை புண்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தமிழ் நாட்டின் திரை நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமை facebook ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால், காவிரி நதிநீர் பிரச்சனையின்போது, நடிகர் சத்யராஜ் பேசியபோது சில வார்த்தைகள் கர்நாடக மக்களின் மனங்களை புண்படுத்தின என்பதால், அவர் மன்னிப்பு கேட்கும்வரை சத்யராஜூம் நடித்துள்ள பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று கர்நாடக …
-
- 7 replies
- 2.2k views
-
-
திமுகவின் உண்மையான உடன்பிறப்புகள் என்னுடன்தான் உள்ளனர்; காலம் பின்னால் பதில் சொல்லும்: கருணாநிதி நினைவிடத்தில் அழகிரி பேட்டி கருணாநிதி,அழகிரி, ஸ்டாலின் - கோப்புப் படம் திமுகவின் உண்மையான விசுவாசமான தொண்டர்கள் என்னிடம்தான் உள்ளனர். இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும் என்று அழகிரி கூறியுள்ளார். கருணாநிதியின் நினைவிடத்தில் மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழியுடன் அழகிரி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். தென் மாவட்ட திமுகவில் மு.க.அழகிரி மத்திய அமைச்சராகவும், தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்தபோது…
-
- 7 replies
- 902 views
-