தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
சென்னை: தமிழக சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழி பற்றிய பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சட்டசபையில் இன்று ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடந்தது. அதன் விவரம், ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி): இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதில் ஏற்படும் இழப்புகளுக்கு இலங்கை அரசிடம் நஷ்டஈடு பெறும் வகையில் தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஜெனீவா மனித உரிமை ஆணையத்தில் கடந்த முறை தீர்மானம் கொண்டு வந்தபோது, மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி அந்த தீர்மானத்தின் கருத்துக்களை வலுவிழக்கச் செய்து ஆதரித்தது. இலங்கை தமிழர்களுக்கு எந்த அதிகார பகிர்வும…
-
- 2 replies
- 1.4k views
-
-
எம்.ஏ. பரணி தரன் பிபிசி தமிழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவசங்கர் பாபா என்று அழைக்கப்படும் சிவசங்கருக்கு எதிராக அவர் நடத்தி வரும் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவிகள் அளித்துள்ள பாலியல் தொந்தரவு புகார்கள், நாளுக்கு நாள் புதிய சர்ச்சைகளை தோற்றுவித்து வருகின்றன. யார் இந்த சிவசங்கர் பாபா? இவருக்கு எதிராக வலுத்து வரும் சர்ச்சைகள் என்ன? திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 1949ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்தவர் சிவசங்கர். இவரது தந்தை நாராயண சர்மா, தாய் விஜயலட்சுமி. இவரது தந்தை பள்ளி ஆசிரியர். பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே முடித்த இவர், வேதியியல் துறையில் பட்டப்படிப்பும், சரக்குகள், போக்குவரத்து கையாளல் பிரிவில் முதுகலை படிப்பும் படித்தார். கல்லூரி …
-
- 7 replies
- 1.4k views
-
-
மிஸ்டர் கழுகு: சசிகலா ரெவியூ! ரிலீஸ்? ‘‘தமிழகத்தில் தொழில் மற்றும் உற்பத்தி வளர்ச்சியே இல்லை என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரக் கையேடு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘ஆமாம்! ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் என்று பலரும் சூடாக அறிக்கை விட்டிருக்கிறார்களே!’’ ‘‘தொழில் வளர்ச்சி மட்டுமில்லை... எதுவுமே தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஆதங்கம். மத்திய அரசோடு போராட வேண்டியிருக்கும் நீட் தேர்வு போன்ற விவகாரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். சாதாரணமாக நடக்க வேண்டிய விஷயங்கள்கூட நடப்பதில்லை. எய்ம்ஸ் இடத் தேர்வு, ஸ்மார்ட் சிட்டிக்கான நடைமுறைகள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் எனப் பல விஷயங்களை அவர்கள் சுட்டிக் க…
-
- 0 replies
- 1.4k views
-
-
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து நேற்று இரவு தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு தர்மபுரி நோக்கி புறப்பட்டது. பஸ்சை டிரைவர் வேலுசாமி என்பவர் ஓட்டி வந்தார். சுப்பிரமணி என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். நள்ளிரவு 11 மணியளவில் பஸ் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்தை தாண்டி மொட்டூர் என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். இரவு நேரம் என்பதால் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வேகத்தடை இருந்ததால் டிரைவர் பஸ்சை மெதுவாக ஓட்டினார். அப்போது சாலை ஓரத்தில் இருட்டில் மறைந்திருந்த 20 பேர் கொண்ட கும்பல் திடீரென பஸ்சின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் அதிர்ச்சி அடைந்த டிரைவர் திடீரென பஸ்சை நிறுத்…
-
- 0 replies
- 1.4k views
-
-
நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி! - பின்னணி என்ன? சென்னை: அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்படுவதாக முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையியில், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார். பதவி பறிப்பு ஏன்? நாஞ்சில் சம்பத் பதவி பறிப்புக்கு, அவர் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அளித்த சில பதில்களே காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இன்று காலை புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது…
-
- 2 replies
- 1.3k views
-
-
லேப்டாப் எங்கே? தாக்கியது யார்? ‘‘கமிஷனர் ஆபீஸ் வட்டாரத்தில் இருக்கிறேன்” என்று கழுகாரிடம் இருந்து வாட்ஸ் அப் தகவல் வந்தது. எதற்காக இருக்கும் என்ற குழப்பம் தீருவதற்கு முன்பே கழுகார் வந்து சேர்ந்தார். ‘‘சுவாதி கொலை வழக்கில் உண்மையான விசாரணையே இப்போதுதான் தொடங்கி உள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். அதனால்தான் கமிஷனர் ஆபீஸ் வட்டாரத்துக்குப் போனேன். சுவாதி கொலை வழக்கை முதலில் ரயில்வே போலீஸ் விசாரித்தது. அதன்பிறகு, அது சென்னை மாநகர போலீஸ் வசம் வந்தது. இப்போது அது என்.ஐ.ஏ என்று சொல்லப்படும் தேசியப் புலனாய்வு ஏஜென்சியின் வசம் ஒப்படைக்கப்படலாமோ என்ற நிலைமை எழுந்துள்ளது. அந்த ஏஜென்சியைச் சேர்ந்த அதிகாரிகள் சத்தமில்லாமல் இங்கு வந்து விசாரணையை ஆரம…
-
- 1 reply
- 1.3k views
-
-
சென்னையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் சுட்டுக்கொலை: மருமகள் உறவினர் கூலிப்படையை ஏவி சுட்டுக்கொலை செய்தார்களா? சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் தலில்சந்த் (வயது 74). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் வால்டாக்ஸ் ரோடு விநாயகம் மேஸ்திரி தெரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மனைவி புஷ்பா பாய்(70). இந்த தம்பதியருக்கு ஷீத்தல்(40)என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உண்டு. மகன் ஷீத்தல் தந்தை தலில்சந்துடன் சேர்ந்து நிதி நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். தலில்சந்தின் மகள் பிங்கி திருமணமாகி சென்னையில் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் ஷீத்தலுக்கு திருமணமாகி ஜெபமாலா என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலை…
-
- 3 replies
- 1.3k views
-
-
‘ஸ்டாலின் vs கனிமொழி!’ - ஜெயிக்கப்போவது யாரு? தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வருகிற ஜூன் 3-ம் தேதி 94-வது பிறந்தநாள்! உடன்பிறப்புகளுக்குக் கடிதம், அரசியல் அறிக்கை, போராட்டம், பொதுக்கூட்டம்... என இந்திய அரசியலில் ஓய்வின்றி சுழன்றுவந்த கருணாநிதி கடந்த சில மாதங்களாகவே உடல்நலமின்றி முடங்கிப் போயுள்ளார். தொடர்ச்சியான சிகிச்சையின் பலனாக உடல்நலம் தேறிவரும் கருணாநிதியின் இந்த வருடப் பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாடும் உற்சாகத்தோடு செயலாற்றி வருகிறார்கள் ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள். ஜூன் 3-ம் தேதி ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே....’ என கரகர காந்தக் குரலில் தன் தலைவன் பேச்சைக் கேட்பதற்காக இப்போதிருந்தே ஏக்கத்தோடு காத்துக்கிடக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐந்தாண்டுகளுக்கு முன் சசிகலாவுக்கு ஜெயலலிதா ‘குட் பை’ சொன்ன நாள் இன்று! அன்று என்ன நடந்தது? தமிழக அரசியலில் 'அம்மா' என்ற வார்த்தை மெல்ல மெல்ல மறைந்து 'சின்னம்மா' என்ற வார்த்தை அதிகளவில் உச்சரிக்கப்பட்டு வரும் காலகட்டம் இது. 'அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும். தமிழக முதல்வராகவும் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்' என சசிகலாவிடம் அ.தி.மு.க. நிர்வாகிகள் கெஞ்சி வரும் காட்சிகளால் தமிழக அரசியல் பரபரத்துக்கிடக்கிறது. சசிகலா எப்படி இந்த உயரத்துக்கு வந்தார் என்பது புரியாமல் பலரும் திகைத்து நிற்கிறார்கள். 'தாய் தந்த வரம்' என்றும் ஜெயலலிதா தந்து விட்டு சென்ற வாரிசு என்றும் அடையாளம் காட்டப்பட்டு வருகிறார் சசிகலா. இன்று கட்சியையும், ஆட்சியையும…
-
- 2 replies
- 1.3k views
-
-
75 நாள்கள் எப்படி இருந்தார் ஜெயலலிதா? - மூன்று ரிப்போர்ட் முழு விவரம் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காகச் சொல்லப்படும் விளக்கம், இன்னும் பல புதிய சந்தேகங்களை உருவாக்குமா? ஜெயலலிதா மரண விஷயத்தில் தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் விளக்கங்கள் அப்படியான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. ‘மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்’, ‘நர்ஸ்களோடு விளையாடினார்’, ‘காவிரிப் பிரச்னை குறித்து விவாதித்தார்’ என்றெல்லாம் சொன்னார்கள். ‘ஜெயலலிதா எப்போது வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்’ என அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி சொன்னார். ஆனால், ‘இவற்றில் எதுவுமே உண்மையில்லை’ என்பதை இப்போது அவர்கள் தந்திருக்கும் அறிக்கைகளே அம்பலப்படுத்தி இருக்கின்றன. ஜெயலலிதாவுக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜெயலலிதாவின் 100 கோடி ரூபாய் அபராதம் கட்டப் போவது யார்? “என் அத்தைக்குச் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் விதித்த 100 கோடி ரூபாய் அபராதத்தை நான் கட்டுவேன்” என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சொல்லிக் கொண்டிருக்கிறார். “ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் தண்டனையில் இருந்து விலக்குப் பெறுகிறார் என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது! அதனால், அந்த அபராதத் தொகையை அவர் செலுத்தத் தேவையில்லை” என்கின்றனர் சிலர். இதில் எது உண்மை? 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமா, அதை யார் செலுத்த வேண்டும், யாரிடம் செலுத்த வேண்டும், எவ்வளவு நாள்களுக்குள் செலுத்த வேண்டும், அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டனவா? சொத்துகளை எப்போது பறிமுதல் செய்வார்கள்? இவை தொடர்பாக, சட்ட நிபுணர்…
-
- 1 reply
- 1.3k views
-
-
மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வை கைப்பற்றும் திவாகரன்! - ‘திடுக்’ தினகரன் ‘‘அ.தி.மு.க-வைக் கைப்பற்றுகிறார் திவாகரன். அவரது படத்தை எடுத்து வையும்” என்று வாட்ஸ்அப் தகவல் அனுப்பிய வேகத்தில், கழுகார் நம் முன் ஆஜரானார். ‘‘இது என்ன விவகாரம்? அவர்கள் குடும்பத்துக்குள் ஏதோ சமாதானப் படலம் நடந்ததாகவும் தகவல் பரவியதே?” என்ற கேள்வியைப் போட்டு தொடங்கி வைத்தோம்! ‘‘அப்படி ஒரு பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்று தினகரன் ஒரு பேட்டியில் அதிரடியாக மறுத்திருக்கிறாரே! ‘என்னிடம் இப்படி கேள்வி கேட்டிருந்தால், ‘நீர் அடித்து நீர் விலகுமா?’ என்று மட்டுமே பதில் சொல்லியிருப்பேன். முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார் தினகரன். யார் என்ன செய்தாலும், இந்த ஆட்சி இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
புதிய கட்சி தொடர்பாக ரஜினி இன்று முக்கிய அறிவிப்பு அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளா்கள் கூட்டம் சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், புதிய அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து மாவட்டச் செயலாளா்களுடன் நடிகா் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் அரசியலுக்கு வருவது உறுதி என ஏற்கனவே நடிகா் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்திருந்தாா். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில்,…
-
- 12 replies
- 1.3k views
-
-
சென்னை, அக்.31 இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் இன்று காலை முற்றுகையிட்டனர். போதை பொருள் கடத்தியதாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 5 பேரையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள இலங்கை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மீது தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக நுங்கம்பாக்கம்…
-
- 1 reply
- 1.3k views
-
-
"பிரபாகரனுடன் சீமான் புகைப்படமே எடுத்ததில்லை": வைகோ பாய்ச்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் தன்னைத் தெலுங்கன் என முத்திரை குத்த சீமானும் அவரது நாம் தமிழர் கட்சியினரும் முயற்சித்துவருவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் வைகோவுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையில் இது தொடர்பாக மோதலும் ஏற்பட்டது. நியூட்…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஏழு பேர் விடுதலையில் தாமதம் ஏன்? பேரவையில் முதல்-அமைச்சர் பழனிசாமி விளக்கம் சென்னை, சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:- ஏழு பேர் விடுதலை விஷயத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை திமுக பரப்பி வருகிறது. 2018 ஆம் ஆண்டு 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் கருணை மனுவை கருணாநிதி அமைச்சரவை நிராகரித்தது. மூவரின் தண்டனையை குறைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக தீர்மானத்தினை எதிர்த்து அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தி…
-
- 12 replies
- 1.3k views
-
-
தமிழகத்தில் பள்ளிகளை விட, டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை அதிகம்! படிக்கிறதா?, குடிக்கிறதா? அரசு உயர் நிலைப் பள்ளிகளையும், மேல் நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கையையும் சேர்த்து கூட்டினால் கூட தமிழகத்திலுள்ள டாஸ்மாக் மது பான கடைகளின் எண்ணிக்கையை தாண்ட முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கைகளையும், டாஸ்மாக் மதுபான கடை எண்ணிக்கையையும் ஒப்பிட்டு ஒரு தகவல் சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ்-அப் குரூப்புகளிலும் பரவி வருகிறது. அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதா இல்லையா என்பதைவிட அது சொல்ல வரும் கருத்து ஆணித்தரமாக உள்ளது. அந்த செய்தி இதுதான்: தமிழ்நாட்டில் மொத்தம் 2739 உயர் நிலைப்பள்ளிகள் உள்ளன. 2851 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான…
-
- 1 reply
- 1.3k views
-
-
நல்லகண்ணு என்றொரு நல் மானுடன்! சாவித்திரி கண்ணன் முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பார்த்துப், பேசி, பழகி வருகிறேன்! அப்பவெல்லாம் கட்டுமஸ்தானாக இருப்பார் நல்லகண்ணு! பேச்சுல கிண்டல்,கேலி, எள்ளல் தெரித்து விழும்! அச்சு அசல் கிராமத்து வெள்ளந்தி குணம் நிறைந்திருக்கும்! அப்ப இவரைவிட ,பெரிய தியாகிகள்,வயது முதிர்ந்த போராளிகள் கட்சியில் இருந்த காலம்! கே.டி.கே.தங்கமணி, முருகேசன், எம்.வி.சுந்தரம், எம்.கல்யாணசுந்தரம் ஆகியோர் உயிருடன் இருந்தனர். அப்ப கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் தான் இவரை அதிகமாக பார்க்க முடியும்! அந்த காலத்தில் ஜனசக்தி பத்திரிகையின், …
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜெயலலிதாவுக்கு கோவையில் கோயில்..! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவையில் 5 லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் அமைத்து தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவை மாநகராட்சி 100வது வார்டுக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில், அ.தி.மு.க-வின் முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் தலைமையிலான தொண்டர்கள் ‘அருள்மிகு ஈசப்பன், கால பைரவர் ஆஞ்சநேயர் திருக்கோயில்’ என்ற பெயரில் ஒரு கோயிலை அமைத்துள்ளனர். அந்தக் கோயிலில், சுமார் 8 டன் எடைகொண்ட ஒரே கல்லின் ஒருபுறம் கால பைரவர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளின் உருவங்களும், மறுபுறம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில், அதிமுக தொண்டர்கள் இங்கு வந்து ஜெயலலிதா மற்…
-
- 6 replies
- 1.3k views
-
-
கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படுமென சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 'முத்தமிழறிஞர்' கலைஞர் அவர்களுக்கு 39 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது... 'சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் இந்த அரசின் முதல் அறிவிப்பினை உங்கள் அனுமதியுடன் இந்த அவைக்கு அறிவிக்க விரும்புகிறேன். விதி எண் 110 கீழ் அறிவிக்கும் முதல் அறிவிப்பே 'தமிழினத் தலைவர்', 'முத்தமிழறிஞர்', 'எண்பது ஆண்டுகாலம் இந்த தமிழ் சமுதாயத்திற்கு உழைத்த போராளி' கலைஞர் அவர…
-
- 24 replies
- 1.3k views
- 1 follower
-
-
திருப்பூர்: மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் கைது பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் மனமுதிர்ச்சியற்ற 17 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், குழந்தைகளின் உடல்நலனைப் போல் மனநலனிலும் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. காவல்துறை கூறுவது என்ன? மன முதிர்ச்சியற்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, பிபிசி தமிழி…
-
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
குண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற 1000 ஆண்டுகள் ஆகும்: நீதிபதிகள் கோபம் சென்னை குண்டுங்குழியுமான சாலைகள் குறித்து விமர்சித்துள்ள உயர் நீதிமன்றம், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதுடன், சேதமடைந்த சாலைகள் செப்பனிட்டது குறித்த தகவல்களையும் சேர்த்து நவம்பர் 18-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சென்னையில் மழைக்காலங்களில் சாலையில் தேங்கும் தண்ணீர் மழை நீர் வடிகால் வழியே செல்ல சாலையோரங்களில் மழை நீர் வடிகால் அமைக்கப்படுகிறது. ஆனால் இவை தூர்வாரப்படாமல், வருடம் முழுதும் மழை நீர் வடிகால் அமைக்கப்படுகிறது என பல கோடி செலவழிக்கப்படுகிறது. மழை நீர் வடிகால் சரிவர இல்லாததால் மழை நீர் சாலையில் தேங்குவது …
-
- 5 replies
- 1.3k views
-
-
"ஆம்புலன்ஸில்" வந்து லீவு கேட்டு, அதிர வைத்த ஊழியர்! உடம்பு சரியில்லைன்னு எத்தனையோ முறை சொல்லியும் கேட்காததால், ஊழியர் ஒருவர் ஆம்புலன்சில் வந்து லீவு லட்டர் தந்த அவலம் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் காஸ்பாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பாபு அரசு போக்குவரத்து கழகத்தில் 5 வருடமாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், பாபுவுக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் அவரை குடும்பத்தார், முள்ளாம்பரப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஒரு பக்கம் சிகிச்சை நடந்து கொண்டிருந்த நேரத்தில், மலர்கொடி சென்னிமலை ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
Published By: VISHNU 10 JAN, 2024 | 07:36 PM ஆர்.ராம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் 11,12 ஆம் திகதிகளில் நடைபெறும் அயலக தமிழர் விழாவில், பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் பயணமாகியுள்ளனர். அதனடிப்படையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் சென்னை நோக்கி பயணமாகியுள்ளனர். இதேவேளை, கனடாவின் ஒன்றாரியோ மாக…
-
- 15 replies
- 1.3k views
- 1 follower
-
-
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்! 19 Jul 2025, 9:51 AM கலைஞரின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சசோகதரருமான மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் – பத்மாவதி தம்பதியரின் மூத்த மகன் மு.க.முத்து. இவர் பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் என பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார். இவரின் ’நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’, ’சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ ஆகிய பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை. இந்த நிலையில் 77 வயதான மு.க. முத்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.…
-
-
- 20 replies
- 1.3k views
-