Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கருணாநிதியின் சிலை திறப்பும் தேசிய அளவிலான கூட்டணியும் எம். காசிநாதன் / 2018 டிசெம்பர் 03 திங்கட்கிழமை, மு.ப. 11:39 Comments - 0 திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் சிலையை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கச் சம்மதம் தெரிவித்திருப்பது, அரசியல் வியூகங்களுக்கு தமிழகத்தில் ஒரு தளத்தை உருவாக்கியிருக்கிறது. தி.மு.கவும் காங்கிரஸும் கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும் “ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை தி.மு.க” என்ற முணுமுணுப்பு காங்கிரஸ்காரர்களிடம் இருக்கிறது. ஆனால், டிசெம்பர் 16ஆம் திகதியன்று, கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைக்கிறார். காங்கிரஸ்- தி.மு.க உறவை, முன்னெடுத்துச் செல்லும் முக்கிய…

  2. ஐஐடி சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, ஐஐடி பேராசிரியர்கள் பலரும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாக சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மானுடவியல் முதுகலை படிப்பில் முதலாமாண்டு மாணவியான பாத்திமா லத்தீப் கடந்த சனிக்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலை அடுத்து, அவருக்கு பாடம் கற்பித்த பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லோரும் விசாரணை செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஊடகத்தினரிடம் பேசுகையில் தற்கொலைச் செய்து…

  3. குடம் முதல் பக்கெட் வரை... எல்லாம் ஜெயலலிதா ஸ்டிக்கர்தான்! (படங்கள்) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் தேனி மாவட்டம் அதிமுக சார்பாக 13 லாரிகளில் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திர நாத் குமார் கொடி அசைத்து அனுப்பிவைத்தார். வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேனி மாவட்ட அ.தி.மு.க சார்பாக வெள்ள நிவாரணப் பொருட்கள் முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டிய நிலையில் தயாரானது. தேனி மாவட்டம் பி.சி.பட்டியிலுள்ள சந்திர பாண்டியன் கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்களை அமைச்சர் ஓ.…

  4. தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார்! தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார். சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திங்கள்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னதாக நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தம…

  5. கீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன்...! -மு.க.ஸ்டாலின் மடல் .! சென்னை: கீழடியை நேற்று நேரில் பார்வையிட்ட நிலையில் தனது அனுபவத்தை திமுக தொண்டர்களுக்கு மடலாக எழுதியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். கீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள மடலில் கீழடியின் பெருமைகளை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அவருக்கு அங்கிருந்த தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு குறித்து விவரமாக விளக்கியதாகவும், அதனை தொண்டர்களிடம் பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய மடலில், கீழடியில் தான் நின்றிருந்தேன். மனதோ வியப்பிலும் பெருமிதத்திலும் புவியீர்ப்பு விசை கடந்த சந்திரயான் விண்கலம் போலே வான் வரை பறந்து உயர்ந்த…

  6. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண்களிடம் அத்துமீற முயன்றதாகக் கூறப்படும் இருவர், காவலன் செயலி மூலம் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செயலி மூலம் நடைபெற்றுள்ள முதல் கைது நடவடிக்கை இது என்று கூறப்படும் நிலையில், செயலியின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து தற்போது காணலாம்.... சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சி.பி. ரோடு (CB road) பகுதியில் உள்ள “ஓஸ்வால் கார்டன்” (oswal garden) அடுக்குமாடி குடியிருப்பில் அனிதா சுரானா என்பவரும் அவரது மருமகள் பிரீத்தியும் வசித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இவர்களது வீட்டின் கதவு தட்டப்படவே,பிரீத்தி சென்று கதவை திறந்துள்ளார். அப்போது அவரை நெட்டித் தள்ளிவிட்டு 2…

  7. ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்குத் தயாராகும் சென்னை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவி செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக 23ஆம் தேதி மீண்டும் பதவி ஏற்பது உறுதியாகிவிட்ட நிலையில், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா, நாளை மறுதினம் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்கிறார். இதற்காக நாளை காலை 7 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. இதில், சட்டப்பேரவை கட்சித்தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்கிறார். இதுகுறித்த கடிதங்கள் ஆளுநர்…

    • 3 replies
    • 1.3k views
  8. தனிஈழம் அமைத்திட ஐ.நா மேற்பார்வையில் ஈழதமிழ் மக்கள் மற்றும் புலபெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு உட்பட, கடந்த 60 வருடங்களாக ஈழ தமிழ் மக்கள் மீதும்,மலையகத் தமிழர்கள் மீதும் சிங்களப் பேரினவாத அரசு நடத்திய மனிதஉரிமை மீறல்கள்,போர் விதிமுறை மீறல்கள் அனைத்தும் இனஒழிப்பு நடவடிக்கைகளே.மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை விசாரிக்க அனைத்துலக சுதந்திரமான விசாரணை ஒன்றை மேற்கொள்ளப்பட வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது ஐ.நா-வில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் கடந்த ஆண்டைப் போலவே! நீர்த்துப் போய்விட்டது. இதே சரத்துக்களுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஈழ தமிழ் மக…

  9. முருகன் - நளினி... சிறைப் பறவைகளின் காதல் கதை! டி.அருள் எழிலன், ஓவியங்கள்: ஸ்யாம் முருகன்-நளினி காதலுக்கு வயது 23 வருடங்கள். இதில் சிறையில் பிரிக்கப்பட்டு இருவரும் தனித்திருந்த காலம்... கிட்டத்தட்ட அதே 23 வருடங்கள்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன்-நளினி ஜோடி, தங்கள் காதலுக்குக் கொடுத்த விலை மிக மிக அதிகம்! 1991 பிப்ரவரி மாதம் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு. மே மாதம் ராஜீவ் காந்தி கொலை. ஜூன் மாதம் இருவரும் கைதாகிறார்கள். அன்று முதல் இன்று வரை சிறைச் சுவர்களுக்கு இடையில் கிளைத்துக் கிடக்கிறது இவர்களின் காதல்! ''முதல் சந்திப்பு முதல் உங்கள் காதல் கதையை விரிவாகச் சொல்லுங்கள்!'' என்று வழக்கறிஞர் மூலம…

    • 2 replies
    • 1.3k views
  10. மதுரை: மதுரையில் படுகொலை செய்யப்பட்ட பொட்டு சுரேஷ் கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள் கொடைக்கானல் நட்சத்திர ஓட்டலில் தங்கியதால் அங்கு சென்று தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொட்டு சுரேஷ் கடந்த மாதம் 31-ந் தேதி மதுரை டி.வி.எஸ் நகர் பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அட்டாக் பாண்டி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மதுரை கீரைத்துறையை சேர்ந்த சபா என்கிற சபாரத்தினம் (வயது 25), சந்தானம் (24), உள்ளிட்ட 7 பேர் சரணடைந்தவர்கள். அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடைக்கானல் சென்ற பொட்டு இதற்கிடையில் பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட தினத்திற…

    • 0 replies
    • 1.3k views
  11. மிஸ்டர் கழுகு: மதுசூதனன் தலை தப்பிய மர்மம்! கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘ ‘மதுசூதன மல்லுக்கட்டு’ என்று கடந்த இதழில் நீர் சொல்லியிருந்தீர். அது முடிவுக்கு வந்துவிட்டதே’’ என்றோம். ‘ஆமாம்’ என்பதுபோல தலையை ஆட்டிவிட்டு, செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார். ‘‘அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன், ஆர்.கே. நகர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ‘அ.தி.மு.க வேட்பாளர் யாராக இருக்கும்’ என்பதுதான் அதிகமான பதற்றத்துக்குக் காரணமாக இருந்தது. ‘கட்சியின் ஆட்சிமன்றக் குழுதான் வேட்பாளரை இறுதி செய்யும்’ என்று அறிவிப்பு வந்ததும், அது மதுசூதனனுக்கு கொஞ்சம் ‘கிலி’யை ஏற்படுத்தியது. ஆட்சிமன்றக் குழுவில் அவரும் உறுப்பினர் என்றாலும், எடப்பாடியின் ஆட்கள்தா…

  12. தமிழக அரசியல் களத்தில் வைகோ தவிர்க்க முடியாத நபராக இருந்தாலும் இதுவரை தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் பதவி என்பது கனவாகவே இருந்து வந்துள்ளது. வைகோ திமுகவில் இருந்த போது ஒரு முறைகூட சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதில்லை. கடந்த 1994 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து, மதிமுகவை தொடங்கியப் பிறகு கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் தொகுதியில் முதல் முறையாக களம் இறங்கினார். எனினும், திமுக வேட்பாளர் ரவிசங்கரிடம் 634 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அப்போது சட்டப்பேரவைத் தேர்தலோடு இணைந்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டார் வைகோ. அதிலும் அவர் வெற்றி பெறவில்லை. அப்போது ஆளும்கட்சியாக இ…

    • 4 replies
    • 1.3k views
  13. கோவை, நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதாகும் இளைஞர் நாகர்ஜூன் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக களமிறங்கியுள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்களில் இளம் வேட்பாளராக கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் கிராம ஊராட்சி மன்றத்தின் மூன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார் நாகர்ஜூன். …

    • 2 replies
    • 1.3k views
  14. கமல்ஹாசன்: கோப்புப்படம் நான் பேசியது சரித்திர உண்மை. உண்மை கசக்கும். கசப்பே மருந்தாகும். அந்த மருந்தால் வியாதி குணமாகும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசினார். முன்னதாக, அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து" என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். கமல்ஹாசன் கருத்துக்கு பிரதமர் மோடியும் பதிலளித்தார். இந்நிலையில், 2 நாட்களுக்குப் பின்னர் இன்று(புதன்கிழமை) மாலை மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் பேசிய கமல்ஹாசன் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பேசிய…

  15. சென்னையின் மைய பகுதியான ராயப்பேட்டையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ, மணிக்கூண்டுக்கு அருகில், பரபரப்பான பாரதி சாலையில், காலை 6:00 முதல் 8:30 மணிவரையும், மாலை 5:30 முதல் 6:30 மணி வரையும், ஆயிரக்கணக்கான கிளிகள், 30 கி.மீ., தூரம் பயணித்து வந்து ஒரு வீட்டில், பசியார வருகின்றன. பசியாற்றுபவர், கேமரா சேகர். அவரிடம் பேசியதில் இருந்து... *உங்களை பற்றி? நான், கேமராக்களின் காதலன்; பறவைகளின் காவலன். தர்மபுரி, என்னைப் பெற்றெடுத்தது; சென்னை, என்னை வளர்த்தெடுத்தது.பழைய, தனித்துவமான கேமராக்களை தேடி சென்று வாங்கி, சேகரிக்க துவங்கினேன். இப்போது, மகாத்மா காந்தியை படமெடுத்த, ஜெர்மனி கேமரா, இந்தியசீன போரை படமெடுத்த வீடியோ, ஸ்டில் கேமரா, தண்ணீருக்குள் இருந்து படம் எடுக்கும் தனித்துவமான கேமரா, 160 வ…

    • 0 replies
    • 1.3k views
  16. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் மனு! டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். அதில், 'மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டி.டி.வி. தினகரனுக்கு நேற்றுவரை 18 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்திருந்த நிலையில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ உமாமகேஸ்வரி இன்று காலை தினகரனைச் சந்தித்து ஆதரவளித்தார். எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று இணைந்ததைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இன்று காலை ஆலோசனை நடத்தினர். அதன் …

  17. நதி நீர் இணைப்பு சாத்தியமா? நதிகள் இணைப்பு சரியா ? தப்பா?

    • 0 replies
    • 1.3k views
  18. இப்பவே இந்தக் கொடுமையா...? செந்தில் பாலாஜி - ஜோதிமணி முன் தனியாய் சிக்கியவர் மீது வெறியாட்டம்.. ! திமுக கூட்டணியில் கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரிக்க சென்றபோது கேள்வி கேட்ட ஒருவரை அவரது ஆதரவாளர்கள் தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த தேர்தலில் தம்பிதுரைக்கு ஆதரவாக தேர்தல் களத்திம் வாக்கு சேகரித்த செந்தில் பாலாஜி டி.டி.வி.அணிக்கு தாவி கடந்த சில மாதங்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். தற்போது ஜோதிமணியை வெற்றி பெறவைத்து கரூர் தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றுவேன் என ஸ்டாலினிடம் சபதம் செய்…

  19. மிஸ்டர் கழுகு: “தேர்தலுக்குத் தயாராகுங்கள்!” - முடுக்கிவிடப்படும் தி.மு.க. சிறகுகளை விரித்து நம்முன் குதித்த கழுகார், தனது செல்போனில் இருந்த படங்களை வரிசையாகக் காட்டினார். முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்து பார்வையிட்டப் படங்கள் அவை. ‘‘ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு ‘முரசொலி’ அலுவலகத்துக்கு கருணாநிதி வந்ததால், தி.மு.க-வினர் உற்சாகமாக உள்ளார்களே’’ என்றோம். ‘‘ஆமாம்! தீபாவளிக்கு மறுநாள் தி.மு.க தொண்டர்களின் வீடுகளில் திடீரென பட்டாசுகள் வெடிக்க, கருணாநிதியின் வருகை காரணமாகிவிட்டது. ‘முரசொலி’ நாளிதழின் பவளவிழாவிற்காக, கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ‘முரசொலி’ அலுவலகத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் ‘இந்து’ என்.ர…

  20. கத்தி படம் தொடர்பாக பொய்களைப் பரப்புவது யார்? -புகழேந்தி தங்கராஜ் 'இளைய தளபதி' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தம்பி விஜயின் கத்தி திரைப்பட விவகாரத்தில் நான் வெளிப்படையாகப் பேச நேர்ந்தது, விரும்பி எதிர்கொண்ட ஒரு சூழலில் அல்ல! உண்மையைப் பேச மற்றவர்கள் தயங்கிய நிலையில், நானாவது அதைப் பேசியாக வேண்டுமே என்கிற கட்டாயத்தில், ஒரு தர்மசங்கடத்துடன்தான் அதைப் பேசினேன். என் நண்பர்கள் அனைவருக்கும் இது தெரியும். ராஜபக்சேவின் குடும்பத்தினருடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் லைக்கா மொபைல் நிறுவனம் கத்தி திரைப்படத்தை எடுத்திருக்கிறது என்பதுதான் பிரச்சினையின் அடிப்படை. இனப்படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் - என்று தமிழக அரசு வெளிப்படையாக…

    • 0 replies
    • 1.3k views
  21. இந்திய மாசிக்கருவாடுக்கு இலங்கையில் தடை: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு பிரபுராவ் ஆனந்தன், ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் மாசிக் கருவாடு இறக்குமதிக்கு இலங்கை தடை விதித்துள்ளதால், இந்தியாவில் ரூ.100 கோடி மதிப்பிலான மாசிக் கருவாடு தேக்கம் அடைந்துள்ளது. இதனால் மாசிக் கருவாடு தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல். மீன் பிடி சார்பு தொழில்களான மீன் உணவு உற்பத்தி, கருவாடு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அசைவ உணவு பிரியர்களின் தேவையை பூர்த்தி செய…

  22. ``அன்று பெரியார், மகாத்மா காந்தி... இன்று திருமுருகன் காந்தி" தடுப்புக்காவல் சட்டத்தில் அடுத்து யார்? "என்றென்றும் மக்கள் புரட்சிக்காக மே 17 இயக்கம் காலத்தில் நிற்கும். நாங்கள் உழைத்து சிறுகச்சிறுக வங்கியில் சேர்த்த மொத்த நிதியும் சென்ற வாரம் முடக்கப்பட்டிருக்கிறது. எங்கள் நண்பரின் நகையை வைத்து இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம். ஆனால், என்றுமே உங்கள் அடக்குமுறைகளுக்கு அடிபணிய மாட்டோம்." மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யக்கோரியும், ''உபா' எனும் கறுப்புச்சட்டத்தினை நீக்கிடு' என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி மே 17 இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் செப்டம்பர் 8, 2018 அன்று சென்னை…

  23. சிவாஜி மணி மண்டபம்: அரசின் 'அலட்சியம்' ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தைத் திறந்துவைக்க தமிழக முதல்வரோ, துணை முதல்வரோ செல்லத் திட்டமிடாமல் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்துவைப்பார் என்ற அரசின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக சிவாஜி குடும்பத்தினரும…

  24. மிஸ்டர் கழுகு: முந்தும் ‘தம்பி சார்’... பிந்தும் ‘மாப்பிள்ளை சார்’ ‘முந்தும் தம்பி சார்... பிந்தும் மாப்பிள்ளை சார்’ என்று காகிதத்தில் எழுதி எடுத்துவந்து காண்பித்தார் கழுகார். முதலில் நமக்குப் புரியவில்லை. அதன்பிறகு, ‘தி.மு.க’ என்று எழுதி அதைக் காண்பித்தார். ‘புரிந்துவிட்டது’ என்று தலையசைத்தோம். சிரித்தபடியே செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார். “தி.மு.க-வில், ‘தலைவர்’ என்றால் கலைஞர்; ‘தளபதி’ என்றால் ஸ்டாலின். இது அனைவருக்கும் தெரியும். நெருங்கியவர்களுக்கு மட்டும்தான், ‘தம்பி சார்’ என்றால் உதயநிதி, ‘மாப்பிள்ளை சார்’ என்றால் சபரீசன் என்று தெரியும்.” ‘‘ஓஹோ!” ‘‘அதனால்தான், ‘தம்பி சார் முந்துகிறார்’ என்று சொன்னேன். உதயநிதி ஸ்டாலினின் அரசி…

  25. சிறப்புக் கட்டுரை: ரஜினிகாந்த்தின் அரசியல் என்னும் அபத்தம்! மின்னம்பலம் ராஜன் குறை கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளாகவே ரஜினிகாந்த்தின் அரசியல் நுழைவு, சாத்தியங்கள் குறித்து எழுதியும் பேசியும் வருவோருக்கு இந்தத் தலைப்பு சற்றே அலுப்பாகக்கூட இருக்கும். நானும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவருக்கு அரசியல் சரிபட்டு வராது எனப் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். கருத்துக் கேட்கும் தமிழ், ஆங்கில ஊடக நண்பர்களிடம் கருத்துகளைப் பகிர்ந்துள்ளேன். ஆனால், இந்த நேரத்தில் மீண்டும் ரஜினிகாந்த் அரசியல் குறித்து எழுத முக்கியக் காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் சாதாரணமாக அரசியலில் ஈடுபாடு காட்டாத மக்கள் தொகுதிகளும் மாணவர்களும், மத்திய தர வர்க்கத்தினரும் அரசியலில் ஈடுபடும் நேரம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.