Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கப்டன் பிறந்தநாள் – 71 நிமிடங்களில் 71 டாட்டூ. விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்று நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளது. 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் முகத்தை டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது. கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேருக்கு 71 டாட்டூ கலைஞர்கள் ஒரே நேரத்தில் 71 நிமிடத்தில் டாட்டூ போடுகின்றனர். டாட்டூ போடும் நிகழ்ச்சியை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

    • 4 replies
    • 722 views
  2. “நீங்கள் காவி, நாங்கள் கருப்பு..உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு, உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி” உங்களுக்கு தஞ்சாவூர் என்றால் பெரிய கோயில் நினைவுக்கு வருவதைப் போல, தஞ்சை மக்களுக்கு விளார் என்றால் நினைவுக்கு வருவது நடராஜன்தான். அவரது சொந்த ஊர் என்பதைத் தவிர விளாருக்கு வேறு வரலாறும் கிடையாது. அந்த விளார் சாலைக்கு ஒரு அடையாளம் தரவும் நடராஜனுக்கு ஒரு நிரந்தர பட்டத்துக்கு ஏற்பாட்டை செய்யவும் நடந்த ஏற்பாட்டுக்கான ஒரு விழா நேற்று 8.11.2013 அன்று நடந்திருக்கிறது. ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜன் என்றொருவன் பிறக்காதிருந்தால் இன்றைக்கு தஞ்சையின் அடையாளமாக சசிகலாவும் நடராஜனும்தான் இருந்திருப்பார்கள். ராஜராஜன் கொஞ்சம் முந்திக்கொண்டு பிறந்து ஒரு பெரிய கோய…

  3. 13 FEB, 2024 | 02:58 PM ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான நிலையில் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரகாலத்தில் வெளியாகும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாயாரை கவனித்துக் கொள்வதற்காக தன்னை விடுதலை செய்யக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தவேளை மத்திய அரசின் சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது சாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது. இலங்கை அரசாங்கம் அனுப்பிய ஆவணங்கள் ம…

  4. ஒருபக்கம் பெண்களுக்குச் சாதகமான திட்டங்களை அறிவித்துவிட்டு, மற்றொருபுறம் பெண்களைப் பற்றிய தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகிப்பது... கேவலத்திலும் கேவலமே! `நாகரிக சமுதாயம்' என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால், இன்னமும் திரைப்படங்கள், அரசியல், மீடியா என்று அனைத்து மட்டத்திலும் பெண்களுக்கு எதிரான `ஆணாதிக்க சிந்தனை'களுக்கு முழுமையாக முடிவுரை எழுத முடியாத நிலையே நீடிக்கிறது. ஓர் ஆண் மீதான காழ்ப்பு உணர்ச்சியை, அவன் வீட்டுப் பெண்களின் மரியாதையைக் குறைப்பதன் மூலம்தான் தீர்த்துக்கொள்கிறோம். இதுபோன்ற பிரச்னைகளுக்கு முடிவுரை எழுதவேண்டிய அரசியலிலேயே, ஆணாதிக்கம் நிறைந்து ததும்பிக் கொண்டிருப்பதுதான் வேதனை. தற்போதைய தேர்தல் பிரசாரங்களிலும் பெண்களைக் கொச்சைப்படுத்தும் பேச்…

  5. இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணி தமிழகத்தில் தீவிரம் இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணிக்கு 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கக் கோரி கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொருட்கள் அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, ரூ.80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் தொன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 மருந்து பொருட்கள் ரூ.15 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்க 500 தொன் பால் மா ஆகியவற்றை இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில…

    • 4 replies
    • 552 views
  6. 36 படகுகள் தயார்: கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் என்ன செய்துள்ளன? பட மூலாதாரம்,RSMCNEWDELHI படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருப்பதை காட்டும் படம். கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 14 அக்டோபர் 2024, 09:15 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும…

  7. நெஞ்சுவலி… அப்பல்லோவில் அன்புமணி Jan 21, 2025 பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி இன்று ஜனவரி 21ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயம் தொடர்பான ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்களின் கண்காணிப்பில் டாக்டர் அன்புமணி இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன. https://minnambalam.com/uncategorized/anbumani-admitted-in-apollo-hospital-angio-surgery/

  8. "அடிடா அவளை.. வெட்ரா அவளை".. இதெல்லாம் என்ன பாட்டு??.. சூடு போட்ட ஹைகோர்ட்! சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று படு சூடான விவாதம் நடந்தது. விவாதத்தை நடத்தியவர்கள் வக்கீல்கள் அல்ல.. மாறாக நீதிபதிகள். சுவாதி படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் அது தொடர்பான படு சூடாக, கோபமாக தங்களது கருத்துக்களை இன்று வைத்தனர். வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்கை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நிராகரித்தது. அப்போது நீதிபதிகள் இருவரும் சரமாரியாக அரசுத் தரப்புக்கு கேள்விகளை விடுத்தனர். அதில் ஒரு கேள்விதான்…

  9. முகப்புப் பகுதி இடிந்த நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் | படம்: எல்.சீனிவாசன். சென்னை சில்க்ஸ் நான்கு மாடி கட்டிடத்துக்கு அனுமதி வாங்கிவிட்டு 8 மாடி கட்டியது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் நேற்று (புதன்கிழமை) காலை 4 மணியளவில் கடையின் தரை தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படைவீரர்கள் ஈடுபட்டனர். ஆனால்இரண்டாம் நாளான இன்றும் (வியாழக்கிழமை) தீயை முழுவதுமாக அணைக்கமுடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். அரசு சார்பில் கட்டிடத்தை இடிக்க ஐவர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஆர்.ப…

  10. தமிழகத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி கோரும் முதல்வர் கொரோனா தடுப்புக்காகவும், பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும் சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலவர் எடப்பாடி பழநிசாமி கோரியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்தியப் பொது நிதிமுறையின் கீழ் மத்திய அரசு மட்டுமே ரிசேர்வ் வங்கியிடமிருந்து தங்கு தடையின்றி கடன்பெற முடியும் எனவும் மாநில அரசுகள் வேறு பல கடன் ஆதாரங்களைச் சார்ந்திருந்தாலும் தங்கு தடையின்றி நிதி திரட்டுவது சாத்தியம் அல்ல என்றும் முதல்வர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஊரடங்கின் மூலம் நாடு முடக்கப்பட…

  11. படக்குறிப்பு, ''தி.மு.கவின் அழுத்தத்தால்தான் நான் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போகவில்லை என்ற கருத்து ஏற்புடையதல்ல.'' கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் சில வாரங்களுக்கு முன்பாக நடந்த, 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் கலந்துகொள்வதாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதில் கலந்துகொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விழாவில் விஜயும் அப்போது வி.சி.கவில் இருந்த ஆதவ் அர்ஜுனாவும் பேசிய பல விஷயங்களும் அரசியல் களத்தை பரபரக்க வைத்தன. ஆனால், தொல். திருமாவளவன் பிபிசியுடனான நேர்காணலில் இத…

  12. உலகத் தமிழர்கள் ஒருபோதும் ஒப்பமாட்டார்கள்! - கலைஞர் கடிதம் எழுத்துரு அளவு உடன்பிறப்பே, அய்.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள வரைவுத் தீர்மானம் நான்கு முறை திருத்தப்பட்டு, பெருமளவுக்கு நீர்த்துப் போகவிட்டதாலும்; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனை செய்யாததாலும்; மத்திய அமைச்சரவையிலிருந்தும் அய்க்கிய முற்போக் குக் கூட்டணியிலிருந்தும் தி.மு.கழகம் உடனடி யாக விலகிக் கொள்வதென முடிவு செய்து அறிவிக்கப் பட்டுள்ளது. தி.மு.கழகம் உரிய நேரத்தில் தக்க முடிவை மேற்கொண்டுள்ள தென உன்போன்ற பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புக்களும், பல்வேறு தரப்பினரும் பெருமளவுக்கு வரவேற்றுள்ளனர். 1956ஆம் ஆண்டு சிதம்பரத்தில் அற…

    • 4 replies
    • 861 views
  13. ``துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்?’’ - கேள்வியைக் காதில் வாங்காமல் நழுவிச்சென்ற ஓ.பன்னீர்செல்வம் ``ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆலையை நிரந்தமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும். சட்ட ரீதியான பணிகளையும் அரசு செய்யும்" எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில், கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில், 13 பேர் உயிரிழந்தனர். 105 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருபவர்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம…

  14. ரஜினி, அரசியலுக்கு வந்தால் மோதி பார்க்க தயார்: சீமான் பரபரப்பு பேச்சு பிரதி சென்னை, நவ. 27– திருவொற்றியூர் கங்கா காவிரி திருமண அரங்கில் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி, வரலாற்று தலைவனுக்கு வாழ்த்துப்பா என்ற நூல் வெளியீட்டு விழா, ‘தாய்புலிக்கு புகழ்பரணி, ‘தலைமகனுக்கு தாலாட்டு‘ ஆகிய 2 குறுந்தகடுகள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– ஈழத்தமிழர்களை அழித்து விட்டு சிங்கள இனவாதத்தை முன்நிறுத்தும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது ஏவி விடப்பட்ட சிங்கள பயங்கர வாதத்தை எதிர்த்து நின்று உயிர் தியாகம் செய்த மாவீரர்களை …

  15. இலங்கையின் அலுவல் பணிகளிலும், கடவுச்சீட்டிலும் தமிழைப் புறக்கணித்து, சீன மொழியை உட்புகுத்துவதா? – சீமான் கண்டனம் 86 Views இலங்கையின் அலுவல் பணிகளிலும், கடவுச் சீட்டிலும் தமிழைப் புறக்கணித்து விட்டு சீன மொழியை உட்புகுத்துவதா? என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு அமைந்துள்ளது. “இலங்கையின் அலுவல் பணிகளிலும், அரசின் செயல்பாடுகளிலும், நாட்டின் கடவுச் சீட்டிலும் தமிழை முற்றாகப் புறக்கணித்து விட்டு சீன மொழியை உட்புகுத்தி வரும் சிங்களப் பேரினவாத அரசின் செயல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இலங்கையின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளாக சிங்களத்தோடு தமிழும் இருக்கும் ந…

  16. காஞ்சிபுரம், மார்ச் 17 (டி.என்.எஸ்) பொறியியல் மாணவரை தாக்கிய வழக்கில், மேல்மருவத்தூர் அடிகளாரின் மகனும், கல்லூரி தாளாருமான செந்தில் குமார் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமார் கல்லூரி தாளாளராக உள்ளார். இவர் தன் கல்லூரியில் படிக்கும் மாணவன் விஜய் என்பவரை தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் சிகிச்சைகாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் செந்தில்குமார் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம…

  17. 06 MAR, 2024 | 02:24 PM இந்தியா ஒரு நாடல்ல என்ற திமுக எம்.பி. ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் கோவையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும்போது, “இந்தியா ஒரு நாடல்ல. ஒரே நாடு என்றால் ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும். எனவே இந்தியா நாடல்ல, இது துணைக் கண்டம். இங்கு தமிழ், மலையாளம், ஒரியா என பல மொழிகள் பேசும் தேசங்கள் உள்ளன. இத்தனை தேசிய இனங்களையும் சேர்த்தால் அது இந்தியா” என்று கூறியிருந்தார். இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவின் தலைவர் அமித் மாளவியா தனது ‘எக்ஸ்’ பதிவில், “திமுகவின் நிலைப்பாட்டில் இருந்து வெறுப்புப் பேச்சுகள்…

  18. மதுரை,: வீடுகளில் 'ஏசி' வெடித்தது, 'பிரிட்ஜ்' தீப்பிடித்தது என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவை வெடிக்குமா? தீப்பிடிக்குமா? வெடிக்கும் பொருளை வீட்டில் வைத்திருந்தால் எப்படி நிம்மதியாக தூங்க முடியும் என்ற சந்தேகக் கேள்விகள் நம் மனதில் எழுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டம் கீழப்பாக்கத்தில் 'ஏசி' வெடித்து தந்தை, மகள் என இருவர் பலி. கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் 'பிரிட்ஜ்' தீப்பிடித்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மூச்சு திணறி பலி என தொடர்ந்து நடந்த இந்த விபத்துகள் நமக்கும் எச்சரிக்கையை தருகின்றன. 'ஏசி', 'பிரிட்ஜ்' பராமரிப்பு குறித்து இத்துறை சார்ந்த நிபுணர்கள் சிலரிடம் கேள்வி எழுப்பினோம். மின்இணைப்பில் தவறு மதுரையை சேர்ந்த 'ஏசி'…

    • 4 replies
    • 2.1k views
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிக்க சாதி மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட 17 வயது பட்டியல் சாதி மாணவர் மற்றும் அவரது 14 வயது தங்கை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 11 ஆகஸ்ட் 2023, 12:05 GMT புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று பாடநூல்கள் கூறுகின்றன. ஆனால், கல்வி பயிலச் சென்ற பள்ளியில்தான் ஒரு பட்டியலின மாணவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதையும் மீறி பள்…

  20. கருணாநிதி-மோடி சந்திப்பு.. சசிகலா ஆதரவாளர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு.. என்னமோ இடிக்குதே?திமுக தலைவர் கருணாநிதியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து சென்ற ஒரு சில நாட்களில் சசிகலா குடும்பத்தாரை ஐடி ரெய்டுகள் சுற்றி வளைத்துள்ளதை திமுகவினர் சிலர் பெருமையாக பேசுவதை கேட்க முடிகிறது. தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் பங்கேற்க, கடந்த திங்கள்கிழமை சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, திடீரென கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பு திமுகவினருக்கே ஆச்சரியம் ஏற்படுத்தியது.தொண்டர்கள் சந்தேகம்: இந்த நிலையில், இன்று சசிகலா குடும்பத்தாருக்கு தொடர்புள்ள மற்றும் அவரின் ஆதரவாளர்கள் என மொத்தம் 90 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றுக்கொண்டுள்ளது. இது திம…

  21. sonia gandhiபாராளுமன்றத்தில் இலங்கை பிரச்சனைபற்றி 07.03.2013 வியாழக்கிழமை சிறப்பு விவாதம் நடந்தது. சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசியதாவது:- இலங்கை தமிழர் பிரச்சனையில், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர செயல்களுக்கு எதிராக நீங்கள் (மத்திய அரசு) எதிர்ப்பு தெரிவித்தீர்களா? மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா பேசும் என்று ஜவகர்லால் நேரு கூறி இருக்கிறார். இந்த கொள்கையை மத்திய அரசு பின்பற்றத் தவறியதின் விளைவுதான் இலங்கையில் தமிழர்களுக்கு இந்த கதி நேர்ந்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் குழப்பம் இருக்கிறது. இதை தெளிவுபடுத்துங்கள். (காங்கிரஸ் தல…

  22. "டெசோ'வில் கலந்து கொள்ள காங்., மறுப்பு! ""வெத்தலை பாக்கு வைச்சு அழைச்சாலும், கலந்துக்கக் கூடாதுன்னு ரொம்ப தெளிவான முடிவை எடுத்திருக்காவ வே...'' என, முதல் தகவலுடன் நாயர் கடைக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ""யார் வீட்டு விசேஷத்தை சொல்ல வர்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி. ""டெசோ அமைப்பு சார்புல, 7ம் தேதி, டில்லில நடக்குற மாநாடு, கருத்தரங்கத்துக்கு, காங்கிரஸ், பா.ஜ.,ன்னு எல்லா கட்சித் தலைவர்களையும் அழைப்போமுன்னு, தி.மு.க., தரப்புல அறிவிச்சிருக்காவ... ஆனா, காங்கிரஸ் தரப்புல, டெசோ மாநாட்டுக்கு, தலைவர்கள் யாரும் கலந்துக்கக் கூடாதுன்னு முடிவு செய்திருக்காவ... ""போன வருசம், ஆகஸ்ட் மாசம், சென்னையில நடந்த டெசோ மாநாடுக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்களை…

  23. அரசியலில் என்னுடன் நட்புகொள், இல்லையென்றால் எதிர்கொள்: நினைவேந்தலில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கருணாநிதி உருவ படத்துக்கு, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி, நடிகை குஷ்பு, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், விக்கிரமன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றனர். பராசக்தி படம் மட்டும் வராமல் இருந்தால், …

  24. தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் காரில் சென்றபோது சென்னை கிண்டியில் கார் விபத்துக்குள்ளானது. வேகமாக வந்த கார் பழ.நெடுமாறன் சென்ற காரின் பின்புறம் மோதியதில் விபத்துக்குள்ளானது. கார் மோதியதில் லேசான காயங்களுடன் நெடுமாறன் தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=162638&category=IndianNews&language=tamil

    • 4 replies
    • 1.4k views
  25. மகாசிவராத்திரி: எம்.ஜி.ஆர். பாட்டுக்கு சத்குருவுடன் சேர்ந்து ஆடிய தமன்னா, காஜல். மகாசிவராத்திரியை முன்னிட்டு நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து எம்.ஜி.ஆர். பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர். மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள இஷா யோகா மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இஷா மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் நடிகைகள் கலந்து கொள்வது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் சிவராத்திரி நிகழ்ச்சியில் நடிகை தமன்னா கலந்து கொண்டார். நடிகை காஜல் அகர்வால் தன் தங்கை நிஷாவுடன் இஷா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நடிகர் ராணாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.