Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. YG மகேந்திரனையும் கைது செய்யனும்

    • 0 replies
    • 626 views
  2. இலங்கையின் அலுவல் பணிகளிலும், கடவுச்சீட்டிலும் தமிழைப் புறக்கணித்து, சீன மொழியை உட்புகுத்துவதா? – சீமான் கண்டனம் 86 Views இலங்கையின் அலுவல் பணிகளிலும், கடவுச் சீட்டிலும் தமிழைப் புறக்கணித்து விட்டு சீன மொழியை உட்புகுத்துவதா? என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு அமைந்துள்ளது. “இலங்கையின் அலுவல் பணிகளிலும், அரசின் செயல்பாடுகளிலும், நாட்டின் கடவுச் சீட்டிலும் தமிழை முற்றாகப் புறக்கணித்து விட்டு சீன மொழியை உட்புகுத்தி வரும் சிங்களப் பேரினவாத அரசின் செயல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இலங்கையின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளாக சிங்களத்தோடு தமிழும் இருக்கும் ந…

  3. கொரோனா சிகிச்சைக்காக 50 மணி நேரமாக வேனில் காத்திருந்த வயதான தம்பதியர் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையளிக்க படுக்கை வசதி தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக வந்தவண்ணம் உள்ளனர். இதற்காக ஆஸ்பத்திரியின் அனைத்து வார்டுகளும் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தீவிரசிகிச்சை பிரிவு, சிறப்பு சிகிச்சை பிரிவு ஆகியனவும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே, கடந்த 22-ந்தேதி வயதான தம்பதியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வேனில் வந்தனர். ஆனால், அவர்களுக்கு படுக்கை வசதி கிட…

  4. தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தும் தி பேமிலி மேன்-2 வெப்சீரியல்! களஞ்சியம் கண்டனம் தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி வரவுள்ள "தி பேமிலி மேன்-2" வெப் சீரியலுக்குதமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் சோழன் மு.களஞ்சியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி வரவுள்ள தி பேமிலி மேன்-2 வெப்சீரியல் தயாரித்து வெளியிடும் அமேஷான் பிரேம் நிறுவனத்தை தமிழர் நலப் பேரியக்கத்தின் சார்ப்பில் எச்சரிக்கை செய்கிறோம். தமிழீழ மண்ணின் விடுதலைக்குப் போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பை இழிவு செய்து xதி பேமிலி மேன் 2" என்கிற வெப் சீரியல் ஜூன் நான்கில் அமேசான் பிரேமில் வெளியாக உள்ளது. இந்த…

  5. நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு- கடை வீதிகளில் அலை மோதும் மக்கள் கூட்டம் நாளை முதல் தமிழகத்தில் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பதிவு: மே 23, 2021 08:17 AM சென்னை, கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகபரவிவரும் நிலையில், நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் இயங்கலாம். பால் வினியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை வினியோகம் இதை தவிர்த்து பிற கடைகள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத்துறை மூலமாக …

  6. ஒரே ஒரு வாட்ஸ்அப் வீடியோ மூலம் 12 டன் முலாம் பழம் விற்ற பெண்மணி... எப்படி? `சமூக வலைதளங்களை சரியாகவும் சாமர்த்தியமாகவும் பயன்படுத்தினால் இப்படியும் பலன் அடையலாம்’ என நிரூபித்துக் காட்டி அசத்தியிருக்கின்றனர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதியினர். ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா ஊராட்சிக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் கமலக்கண்ணன் - நித்யா தம்பதியினர். பி.எஸ்ஸி அக்ரி படித்த கமலக்கண்ணன் சொந்தமாக பிசினஸ் செய்துவர, நித்யாவோ குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். குழந்தைகள், குடும்பம் என்றிருந்தாலும் நித்யாவுக்கு விவசாயத்தின் மீது பெரும் ஆர்வம் இருந்திருக்கிறது. `சொந்தமாக இருக்கும் 2 ஏக்கர் நிலத்தில் ஏதாவது விவசா…

  7. கொரோனா காலத்திலாவது குடும்பத்தோடு வாழ விடுங்க: ஈழ அகதிகள் தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை 26 Views கொரோனா காலத்திலாவது தங்களை குடும்பத்தோடு வாழ வைக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 78 பேர் மற்றும் வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்த 104 பேர் தற்போது உள்ளனர். சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் சட்டவிரோதமாக வெளி நாடு செல்ல முயன்றதாக கைது செய்யப்ப…

  8. சர்வதேச உலகம் இந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது – பழ. நெடுமாறன் 26 Views முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் கேள்வி – போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவுகூரப்படும் இனப் படுகொலை நாளில் தமிழ் மக்கள் மற்றும் உலகத்தவர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்? பதில் – ஈழத்தமிழ் மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட நாளான இன்று, நமது தமிழீழத்தில் சிங்கள இனவெறியர்களால் திட்டமிட்டு இனப் படுகொலை செய்யப்பட்ட நமது சகோதரத் தமிழ் மக்கள், அவர்களை நினைந்து இன்று நாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். இனப்…

    • 1 reply
    • 413 views
  9. இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில், 37 பேருக்கு கொரோனா! இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்குள் வேறு நபர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் உள்ள முகாமிலே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த முகாமில் 145 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் 528 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அதில் 5 பேர் மாத்திரமே ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர்கள் அகதிகள் முகாமிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே வ…

  10. தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய குற்றப் பிரிவு விசாரிக்கும் வழக்குகள், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்குகள் தவிர பிற வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதியன்று மிகப் பெரிய ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் நடைபெற்றன. அது கலவரமாக மாறியதையடுத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தக் கலவரங்கள், துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அ…

  11. உலகத் தமிழர் ஒற்றுமையை வலிமைப்படுத்துவோம்- திருமாவளவன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளில் உலகத் தமிழர்களுக்கு இடையிலான ஒற்றுமைக் கூறுகளை வலிமைப்படுத்த உறுதியேற்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் சிங்கள இனவெறிப் படையினர் நடத்திய அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையில் இலட்சக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள இனவெறிக் கும்பலாட்சியினர் நடத்திய இறுதிப்போர், முள்ளிவாய்க்கால் என்னுமிடத்தில் பொதுமக்களின் மரண ஓலங்களுக்கிடையில் குருதிச் சேற்றில் ஓய்ந்தது. புலிகளுக்க…

  12. போராட்டத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்பதை உலகத்திற்கு நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் – அய்ய நாதன் 28 Views முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் அய்ய நாதன் அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் கேள்வி – போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவு கூரப்படும் இனப் படுகொலை நாளில் தமிழ் மக்கள் மற்றும் உலகத்தவர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்? பதில் – அங்கே ஈழத்திலே 2009ஆம் ஆண்டு, மே மாதம் 18ஆம் திகதியுடன் முடிவுற்ற, திட்டமிட்ட இன அழித்தல் போரில் மிகப் பெரிய அளவிற்கு, கணக்கில் சொல்லப் போனால், ஒன்றே முக்கால் இலட்சம் மக்களை ஒர…

  13. பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி 85 Views முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உயர் நீதிமன்றம் பல முறை பரோல் தந்துள்ளது. உச்ச நீதிமன்றமும் பரோல் வழங்கியுள்ளது. அவரின் தாயாரின் வேண்டுகோளிற்கு இணங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். தற்போது பேரறிவாளன் விடுதலை கோரும் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், நாடெங்கும் கொரோனா இரண்டாவது பரவல் அலை அதிகரித்துள்…

  14. “இலங்கையில் பொது வாக்கெடுப்பு வேண்டும் என்ற நிலை வர வேண்டும்“ சீமான் 66 Views “இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். அதை ஏற்க சர்வதேச சமூகம், இந்திய நாடு ஏற்க மறுக்கிறது. போர்க்குற்றம் என்ற அளவிலேயே அவை நின்கின்றன. படுகொலை செய்த இனத்துடன் படுகொலை செய்யப்பட்ட இனம் இணைந்து வாழ வாய்ப்பில்லை என்ற கருத்துருவாக்கம் வர வேண்டும், பொது வாக்கெடுப்பு வேண்டும் என்ற நிலை வர வேண்டும்“. என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் 12ஆம் ஆண்டு நிகழ்வு மே 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி இலங்கை தமிழர்க…

  15. தோல்விக்கு இதுதான் காரணம்: மநீம பொதுச்செயலாளர் விலகல்! மின்னம்பலம் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர். முதலில், மக்கள் நீதி மய்யத்திலிருந்து துணைத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகினர். அவர்களைத் தொடர்ந்து வேளச்சேரி மநீம வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட மநீம வேட்பாளர் பத்ம பிரியா ஆகியோர் விலகினர். இவர்களைத் தொடர்ந்து தற்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த முருகானந்தம் பதவி விலகியிருக்கிறார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் …

  16. தமிழகத்தில்... அடுத்த இரண்டு வாரங்களில், கொரோனா தொற்று உச்சத்தை தொடும் என எச்சரிக்கை! தமிழகம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா அலை உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் குறித்து கணிப்பதற்காக சூத்ரா மாதிரி எனப்படும் கணித மாதிரியை விஞ்ஞானிகள் குழுவைக் கொண்டு மத்திய அறிவியல் மற்றும் தொழிநுட்ப துறை கடந்த ஆண்டு உருவாக்கியது. இதனை அடிப்படையாகக் கொண்டே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மே மாதம்29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலும், புதுச்சேரியில் மே மாதம் 19 – 21 ஆம் திகதிகளிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தை எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாசல…

  17. தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கிய நளினி 55 Views ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, 30 வருடங்களாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளிக்க விருப்ப மனு அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படும் பணிக்காக, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை ஏற்றுப் பெரு நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், மாதாந்த சம்பளதாரர்கள், தன்னார்வலர்கள், மாணவ மாணவிகள், பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பில் இருந்து தாராளமாக நிதியுதவி …

  18. யார் இந்த ஸ்ராலின்.? ரஷ்யா முழுவதும் ஒரே தேடலாம் .! சென்னை: தேசிய தலைவராக ஸ்டாலின் உருவெடுப்பார் என்று பார்த்தால் உலக தலைவராகவே உருவெடுத்துவிடுவார் போல தெரிகிறது.. யார் இந்த ஸ்டாலின் என்று ரஷ்ய தூதரக அதிகாரிகள் போனை போட்டு நம் பத்திரிகையாளர்களிடம் விசாரித்துள்ளனராம். "தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன்" என்று ஒரு முறை மறைந்த கருணாநிதி சொல்லி இருந்தார்.. அந்த அளவுக்கு கம்யூனிஸம் மீது பற்று வைத்திருந்தவர் கருணாநிதி.. ஸ்டாலின் பிறக்கும் முன், அவருக்கு அய்யாதுரை என்றுதான் பெயர் வைக்க ஆசைப்பட்டாராம் கருணாநிதி. காரணம், திராவிட இயக்கத்தின் தலைவர் தந்த பெரியாரை, பெரும்பாலானோர் அய்யா என்றுதான் அழைப்பார்கள்.. அதே…

  19. கரிசல் எழுத்தின் 'முன்னத்தி ஏர்' - ராயங்கால் ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜ பெருமாள் ராஜ நாராயணன் எனும் கிரா! சென்னை: தமிழில் கரிசல் இலக்கியத்தின் தந்தையாக போற்றப்படுகிற கி.ரா. எனும் ராயங்கால் ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜ பெருமாள் ராஜ நாராயணன் (வயது 99) வயது மூப்பு காரணமாக புதுச்சேரியில் திங்கள்கிழமையன்று காலமானர். கி.ராவின் உடல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் இடைச்செவலில் நாளை பகல் 12 மணியளவில் தகனம் செய்யப்படும். கரிசல் இலக்கியத்தின் தந்தையாக, போற்றுதலுக்குரிய கதை சொல்லியாக திகழ்ந்தவர் கி.ரா. 1923-ம் ஆண்டு அன்றைய நெல்லை மாவட்டம் இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் கி.ரா. …

    • 0 replies
    • 648 views
  20. கொரோனா தொற்று : மக்கள் நோயாளர் காவு வண்டிகளிலேயே... உயிரிழக்கும் சோகம்! தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்னபதாகவே உயிரிழக்க நேரிடுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் பெரும்பாளான மக்கள் கொரோனா தொற்றுகான சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக மிக நீண்ட வரிசையில் நோயாளர் காவு வண்டிகளிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு நோயாளர் காவு வண்டிகளில் காத்திருக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கு ஒக்சிஜன் தேவைப்படுவதாகவும், ஒக்சிஜன் கிடைக்கப்பெறாமல் பலர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சும…

  21. தமிழகம்: இன்று முதல் புது கட்டுப்பாடுகள்: முழு விவரம்! மின்னம்பலம் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் இன்று முதல் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது தமிழக அரசு. கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கைக் கடுமையாக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “15.05.2021 காலை 4 மணி முதல் 24.05.2021 காலை 4 மணி வரை ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் பின்வரும்…

  22. ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக தமிழக சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவிகித வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் இந்தமுறை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இது அக்கட்சியின் தொண்டர்களை உற்சாகப்பட வைத்துள்ளது. வரும் காலங்களில் நாம் தமிழர் கட்சியின் வியூகம் என்ன? சீமானிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். கேள்வி: சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவிகித வாக்குகளை நாம் தமிழர் பெற்றுள்ளது. வாக்குகளாகக் கணக்கிட்டால் 30,41,974 பேர் நாம் தமிழர் கட்சியை ஆதரித்துள்ளனர். இந்த வாக்கு சதவிகிதம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா?" பதில…

    • 6 replies
    • 1.3k views
  23. 7 தமிழர் விடுதலை தொடர்பாக விரைவில் முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் – அமைச்சர் ரகுபதி 5 Views ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 29 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை அறிவிப்பார் என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். இவர்கள் 7 பேரையும் தமிழக அரசே சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முந்தைய அ…

  24. தமிழகம்: இன்று முதல் கடுமையான முழு ஊரடங்கு! மின்னம்பலம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், மக்கள் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (மே 13) மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர், தொழில் மற்றும் வர்த்தகம் பாதிக்கக் கூடாது என்பதற்காக சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் ஊரடங்கு விதிகள…

  25. "ஸ்டெர்லைட்" ஆலை, ஒக்சிஜன் விநியோகம் ஆரம்பமாகியது! ஸ்டெர்லைட் ஆலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் இருந்து ஒக்சிஜன் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக டேங்கர் லொறிகளும், ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது விநியோகமும் ஆரம்பமாகியுள்ளது. 4.820 டன் ஒக்சிஜன் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக 3 முதல் 5 நாட்களுக்கு 10 மெட்ரிக் டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2021/1215553

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.