தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
சங்கர மடத்துக்கு ரகசியமாக வந்த டி.டி.வி.தினகரன் டி.டி.வி.தினகரன் அதிமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் நேற்று சங்கரமடம் வந்தார். கட்சியினர் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக திடீரென வந்த அவர் 5 நிமிடம் மட்டுமே அங்கிருந்துவிட்டு திரும்பிச் சென்றார். சங்கரமடம் வந்த டி.டி.வி.தின கரனின் பயணம் மிகவும் ரகசிய மாக வைக்கப்பட்டிருந்தது. கட்சியினருக்கோ, செய்தியாளர் களுக்கோ தகவல் தெரிவிக்கப் படவில்லை. இதுகுறித்து அறிந்த செய்தி யாளர்கள், போலீஸார் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: தினகரன் சங்கர மடம் வருவது எங்களுக்கே கடைசி நேரத்தில்தான் தெரிந்தது. அவர் மடத்துக்குச் சென்று ஜெயேந்திரரை சந்தித்தார். …
-
- 1 reply
- 861 views
-
-
கோடநாட்டில் பதற்றம் தணிக்க ஜெ.,க்கு 'ஆத்ம சாந்தி' பூஜை ஊட்டி:முன்னாள் முதல்வர் ஜெ., இறந்த பின், அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவங்களை அடுத்து, கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 'ஆத்ம சாந்தி' பூஜை நடத்த, நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த, 1991 - 96ல் ஜெ., முதல்வராக இருந்த போது, கோடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டது. 2001ம் ஆண்டுக்கு பின், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், அரசியலில், 'பிசி'யான ஜெ., சில முறை மட்டுமே வந்து சென்றாலும், அங்கு தங்கியதில்லை. 2006ல், அங்கு நடந்த பிரம்மாண்ட பூஜைகளுக்கு பின், எஸ்டேட் பழைய பங்களாவில் அடிக்கடி தங்கி வந்தார். அங்குள்ள இயற்கை சூழல் அவரை கவர்ந்த …
-
- 1 reply
- 861 views
-
-
காலம் கனிய காத்திருக்கிறாரா? காலாவை ஓட்டகாய் நகர்த்துகிறாரா?: ரஜினியைச் சுழற்றும் சர்ச்சைகள்! ரஜினி | கோப்புப் படம்: ஆர்.ரகு. தன்னுடைய ‘தனிக்காட்டு’ ராஜா படத்தில் ரஜினிக்கு அப்பாவாக வரும் மேஜர் சுந்தர்ராஜன், “நீ தேர்ந்தெடுத்திருக்கிறது காந்தி வழியா... சுபாஷ் சந்திரபோஸ் வழியா?” என்று மகன் ரஜினியைப் பார்த்துக் கேட்பார். அதற்கு, “நான் யார் வழியிலும் போக விரும்பல... நான் போறதே ஒரு வழியா இருக்கணும்னு நினைக்கிறேன்...” என்பார் ரஜினி. அநேகமாக, முதன்முதலில் ரஜினி பேசிய அரசியல் கலப்பு வசனம் இதுவாகத்தான் இருக்கும…
-
- 2 replies
- 861 views
-
-
தென் சென்னையில் எனக்கே வெற்றி... சீரியஸாகப் பேசும் பவர் ஸ்ரார் சீனிவாசன்..! தென் சென்னை தொகுதியில் இந்தியக் குடியரசு கட்சி (அ) பிரிவு சார்பில் களமிறங்கியிருக்கிறார் நடிகர் பவர் ஸ்ரார் சீனிவாசன். அவருக்கு அயர்ன் பாக்ஸ் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தென் சென்னைக்கு உட்பட்ட தொகுதியில் தீவிரமாகப் பிரசாரம் செய்துவருகிறார். இந்நிலையில் தன்னுடைய வெற்றி வாய்ப்பு குறித்து பவர் ஸ்ரார் சீனிவாசன் பேட்டி அளித்திருக்கிறார். “நடிகர் கமல் கட்சியில் நான் ஏன் சேரவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். கமல் கட்சி இப்போதுதான் தொடங்கப்பட்டது. நான் சேர்ந்துள்ள இந்திய குடியரசுக் கட்சி 40 ஆண்டுகளாக உள்ள கட்சி. அந்தக் கட்சியின் மாநில துணை தலைவராக இருக்கிறேன். தேர்தலில் தென் சென்னை …
-
- 0 replies
- 860 views
-
-
சென்னையில் 17 வயது கால்பந்து வீராங்கனை தவறான சிகிச்சையால் மரணம்: 2 மருத்துவர்கள் இடைநீக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் மரணமடைந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள நிலையில், தமது மகளின் மரணத்துக்கான மருத்துவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று அவரது தந்தை ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், மாணவிக்கு சிகிச்சையளித்த இரண்டு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்த கால்பந்து வீராங்கனையின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், அவரது குடும…
-
- 4 replies
- 860 views
- 1 follower
-
-
ஜெ. வைத்த துளசி மாடம்... சுற்றிவந்த சசிகலா... டி.வி பார்க்கும் இளவரசி... மிரட்டும் சுதாகரன்! பரப்பன அக்ரஹாரா ஜெயில் வாழ்க்கை தமிழகத்தைத் தாண்டி பெங்களூருவிலும் ஆயிரம் வாட்ஸ் கேள்வியாக இருப்பது, ‘சிறைக்குள் சசிகலா என்ன செய்துகொண்டிருக்கிறார்’ என்பதுதான். ‘‘ஆடைகளும் இடமும் மட்டுமே சக கைதிகளுக்கு வழங்கப்பட்டிருப்பவை போல இருக்கின்றன. இவை தவிர, ‘சிறப்பு ஏற்பாட்டில்’ எல்லா வசதிகளும் இவர்களுக்குக் குறைவில்லாமல் கிடைக்கின்றன’’ என்கிறார்கள், இந்தச் சிறையை நன்றாக அறிந்தவர்கள். சசிகலா சிறைக்குள் சென்ற முதல் நாளில், கடுமையாக நடந்துகொள்வதைப் போல சிறைத்துறை காட்டிக்கொண்டது. ஒரே நாளில், சிறையின் நெளிவு சுளிவுகளை சசிகலா தரப்பு கண்டுகொண்டது. அதன்பின், அவர்களுக்கான …
-
- 0 replies
- 860 views
-
-
ஈரோடு மகளிர் பொறியியல் கல்லூரி பேராசிரியரின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் நடிகர் வாகை சந்திரசேகர், அவரது மனைவி ஜெகதீஸ்வரி உள்பட 11 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில், பத்திர எழுத்தர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், அம்மைநாயக்கனூர் அருகே மாலையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் குமரவேல். இவர் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு அப்பகுதியில் 2 ஏக்கர் 97 சென்ட் நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை 2012-ம் ஆண்டு குமரவேல், தனது மகள்கள் ஈரோடு லட்சுமிநகர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் கவுசல்யா, வித்யா, ரம்யா ஆகியோருக்கு தானசெட்டில்மென்ட் பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார். இந்த நிலத்தில், 38 சென்ட் நிலத்தை 2…
-
- 0 replies
- 860 views
-
-
இரண்டு வருடங்களுக்கு பின் கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ தி.மு.க. தலைவர் கருணாநிதியை இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை சந்திக்க உள்ளார். சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி சமீபத்தில் உணவு குழாய் மாற்று சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில மணி நேர சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது பிறந்த நாளையொட்டி கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அவரது உடல் நலமும் விசாரித்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை தி.மு.க. தலை…
-
- 2 replies
- 860 views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் பாஜகவுடன் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியாக இருப்பதால், …
-
- 0 replies
- 860 views
-
-
பட மூலாதாரம்,RAVIKUMAR படக்குறிப்பு, கடந்த 13 நாட்களாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணியின்போது தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றியதில் நாமக்கல் நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது. கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 38 நிமிடங்களுக்கு முன்னர் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சில்க்யாரா - தண்டல்கான் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் உள்ளே சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது. கடந்த 13 நாட்களுக்கும் மேலாக அங்கு சிக்கியுள்ள தொழிலாளர்களுக்க…
-
- 9 replies
- 860 views
- 1 follower
-
-
கும்பகோணத்தில் காதல் தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர்கள் - திருமணமான ஐந்து நாளில் சோகம் 13 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதல் திருமணம் முடித்த ஐந்து நாட்களில் இளம் தம்பதி, கொடூரமாக ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் மற்றஉம் உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்வேலியை சேர்ந்தவர்கள் சேகர் மற்றும் தேன்மொழி தம்பதி (பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள்). இவர்களுக்கு சக்திவேல், சதீஷ் மற்றும் சரவணன் ஆகிய மூன்று மகன்களும், சரண்யா (23) என்ற மகளும் உள்ளார். தந்தை சேகர், மூத்த மகன் சக்திவேல் ஆகியோர் கொத்தனார் பணி ச…
-
- 10 replies
- 860 views
- 1 follower
-
-
'நம்பிக்கைதானே வாழ்க்கை... விஜயகாந்த் வருவார்!' - வைகோ திருப்பூர்: "மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த், வாசன் ஆகியோரை அழைத்திருக்கிறோம். அவர்கள் வருவார்கள் என நம்புகிறோம். அரசியலில் நம்பிக்கைதானே வாழ்க்கை" என திருப்பூரில் வைகோ தெரிவித்தார். கொங்கு மண்டல ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூரில் இன்று நடந்தது. கட்சியின் அவைத்தலைவர் சு.துரைசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தமிழகம் முழுவதும் இளம் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்துத்தரப்பு மக்களிடமும் பேரழுச்சி ஏற்பட்டு ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிற இயக்கமாய் மக்கள் நலக்கூட்டணி முன்னேறிக்கொண்டி…
-
- 0 replies
- 859 views
-
-
அப்பல்லோவில் ஜெயலலிதாவை ஓபிஎஸ், தம்பிதுரை நேரில் பார்த்தனர் - சசிகலா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஜெயலலிதாவை அவர் மரணமடைந்த டிசம்பர் 5-ம் தேதி வரை யாரும் சந்திக்க அனுமதிக்கவில்லை என்ற புகார் உள்ள நிலையில், அவரை சந்திதவர்கள் யார் யார்? என விவரத்தை நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தில், சசிகலாவின் வாக்குமூலத்தை அவரது சார்பில் வழக்கறிஞர் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளார். அதில் ஜெயலலிதாவை மருத்துவமனையில் யாரெல்லாம் சந்தித்தனர் என்ற விவரத்தையும் விரிவாக கூறியுள்ளார். …
-
- 3 replies
- 859 views
-
-
1000 வருடங்கள் பழமையான, தமிழகத்தை சேர்ந்த நடராஜர் சிலை.. ஆஸ்திரேலியாவிலிருந்து நாளை திரும்புகிறது ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் அந்த நாட்டின் தேசிய கேலரி இயங்கிவருகிறது. இங்கு உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த அரிய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த சுபாஷ்கபூர் என்ற பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்யு டீலரிடமிருந்து 5.6 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் பணம் கொடுத்து ஆஸ்திரேலிய கேலரி வெண்கலத்தால் செய்த நடராஜர் சிலையை வாங்கியுள்ளது. அதை தனது கேலரியில் காட்சிக்கும் வைத்துள்ளது.2012ம் ஆண்டு சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ்கபூரை போலீசார் கைது செய்தபோது, ஆஸ்திரேலிய கேலரிக்கு நடராஜர் சிலையை விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இவர் ம…
-
- 3 replies
- 859 views
-
-
எதற்காக தமிழகத்தில் ஐ.டி ரெய்டு நடத்தப்படுகிறது ? | Socio Talk கடந்த சில நாட்களாக ஜெயா டி.வி, சசிகலா மற்றும் குடும்பத்தரின் வீடு, மற்ற இடத்தில் இந்தியா முழுவதும் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டு பல ஆதாரங்களை கைப்பற்றினர். முடிவில் விவேக் ஜெயராமன், சிவகுமார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இத்தனை கோடிக்கணக்கில் சசிகலா குடும்பத்தினர் சொத்துக்களை சேர்த்தது ஜெயலலிதாவுக்கு தெரியாதா ? ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடத்தப்பட்ட அணைத்து ரெய்டுகளுக்கு பா.ஜ.க ஒரு காரணமா ? தமிழ்நாட்டில் தங்கள் கால்களை பதிப்பதற்காக அவர்கள் பலரை தங்கள் வசம் இழுத்துக்கொள்கின்றனர். மேலும் பல கேள்விகளும், விடைகளும் இந்த வீடியோவில்.
-
- 2 replies
- 859 views
-
-
109 வயது பாம்பன் ரயில் பாலத்துக்கு பிரியாவிடை: பாதுகாப்பு கருதி ரயில் சேவை நிறுத்தம் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 25 நிமிடங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் அருகே கடலின் குறுக்கே அமைந்துள்ள 109 வயதான பாம்பன் பழைய தூக்கு பாலத்தில் ரயில் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மீனவ மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவையை துவக்க வேண்டும் என வலுவான கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம்…
-
- 4 replies
- 859 views
- 1 follower
-
-
கடலில் வந்த மிதவை - விசாரணைகளில் கடலோர காவல் படை தமிழகத்தின் வேளாங்கண்ணி அருகே, கடலில் மிதந்து வந்த மிதவை கடத்தல்காரர்களுக்கு சொந்தமானதா என்று கடலோர காவல் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகம் உள்ள கடல் பகுதிகளில், துறைமுகம் உள்ளே கப்பல் சென்றுவர வழிகாட்டும் விதமாக ‘போயா’ எனும் மிதவையை கடலில் ஆங்காங்கே மிதக்க விடுவது வழக்கம். அத்துடன், தங்கம் மற்றும் போதை பொருட்களை கடல் வழியாக கடத்திச் செல்லும் கடத்தல்காரர்களும், திசையை அறிவதற்காக இதுபோன்ற மிதவைகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், தமிழக்திதின் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள புதுப்பள்ளி கடல் பகுதியில் நேற்று (24ம் திகதி) மிதவை ஒன்று மிதந்து வந்துகொண்டிரு…
-
- 1 reply
- 858 views
-
-
நீலகிரி: அரை மயக்கத்திலும் ஆக்ரோஷம் குறையாத `உடைந்த கொம்பன்’ - நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்! சதீஸ் ராமசாமிகே.அருண் ஆபரேஷன் `ரோக்கன் டஸ்கர்' நீலகிரி மாவட்டம், சேரம்பாடி வனப்பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ஆண் காட்டுயானையைப் பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நள்ளிரவில் க்ராலில் அடைத்தனர். `உடைந்த கொம்பன்’, `ஷங்கர்’ ஆகிய பெயர்களில் சேரம்பாடி பகுதி மக்களால் அழைக்கப்பட்டுவந்த ஆண் காட்டுயானை மனிதர்களைத் தாக்கும் சுபாவம்கொண்டதாக வனத்துறையினரால் அறிவிக்கப்பட்டது. ஆபரேஷன் `ரோக்கன் டஸ்கர்' தந்தை, மகன் உட்பட மூன்றுபேரின் உயிரிழப்புக்கு இந்த யானையே காரணம் என இந்த யானை…
-
- 1 reply
- 858 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,VIJAY TELEVISION/YOUTUBE கட்டுரை தகவல் எழுதியவர், அஷ்ஃபாக் பதவி, பிபிசி தமிழ் 4 பிப்ரவரி 2024 “அப்பா டீக்கடைல வேலை பாக்குறாங்க... அம்மா பீடி சுத்துவாங்க. எனக்கு பீடி சுத்த அந்தளவுக்கு தெரியாது. டாக்டர் ஆகணும்னு ஆசை. கட் ஆஃப் 196.25 இருக்கு. இப்போ 198 கிட்ட கேக்குறாங்க.” கடந்த 2016ஆம் ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் சங்கவி இதைச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே அவரது கண்கள் குளமாகிவிடும். சங்கவியை 2022இல் மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது நீயா நானா குழு. அப்போது அவர் பயிற்சி மருத்துவர். “இவ்வளவு சிரமத்திலும் ஏன் கட்டாயம் படிச்சிடணும்னு நினைச்சீங்க?” என வினவினார் நெறியாளர் கோபிநாத். …
-
-
- 3 replies
- 858 views
- 1 follower
-
-
மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன் ‘‘தீர்ப்பு வந்த தினத்தில் பெரிய வாக்குவாதம் ஆகிவிட்டது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். வெயிலில் களைப்புடன் வந்து அமர்ந்த அவருக்கு இளநீர் கொடுத்துவிட்டு, ‘‘யாருக்கும் யாருக்கும் வாக்குவாதம்?’’ என்று கேட்டோம். ‘‘தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும்தான். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கொடுத்ததும், ‘இந்த வழக்கிலிருந்தே நான் வாபஸ் பெறப்போகிறேன்’ என்று ஆண்டிபட்டி எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தொகுதி மக்களிடம் கருத்து கேட்கப் போனார். தினகரன் சம்மதத்துடன் இவை எல்லாவற்றையும் …
-
- 0 replies
- 858 views
-
-
IMAGINE a place run by film stars—vain, power-hungry, paranoid, adored. Imagine they had been in charge not for the duration of a reality television series but for decades in a territory containing 72m people and one of the world’s largest cities. It would be a disaster zone, wouldn’t it? Think again, and welcome to Tamil Nadu, one of India’s great success stories—and a state run by actors. It is the ultimate celebrity experiment. read more http://www.economist.com/news/asia/21579073-can-eccentric-politics-continue-deliver-prosperity-successful-show-begins-pall
-
- 1 reply
- 858 views
-
-
பாரிவேந்தரான பச்சமுத்துவும், ஆயிரம் கோடியும், அவர் கைதான கதையும் ஒரே பார்வையில்.... 26 ஆகஸ்ட் 2016 மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக கூறி 102 மாணவர்களிடம் ரூ72 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரை சென்னை பொலீசார் திடீரென இன்று கைது செய்தனர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரான மதன், சில மாதங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியதாக வெளியான கடிதத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாகவும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்ட…
-
- 1 reply
- 857 views
-
-
கண்ணீர்விட்ட பன்னீர்... பழைய அஞ்சாநெஞ்சன் மது! ஜெயலலிதா பிறந்த நாள் அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிடுவதாக முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் வாக்குறுதி கொடுத்திருந்தனர். சொன்னபடி அதே நாளில், ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’யைத் தொடங்கிவிட்டதாக அறிவித்தார் தீபா. ஆனால், ஓ.பன்னீர்செல்வம்? காலையிலேயே ஓ.பி.எஸ் வீட்டில் ஊடகங்கள் குவிந்துவிட்டன. காலை 7 மணிக்கெல்லாம் பளிச் வேட்டி - சட்டையுடன் சிரிப்பும் கும்பிடுமாய் ஆதரவாளர்களின் அரவணைப்பில் திணறிக் கொண்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். ‘‘அண்ணே, இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்திடணும்’’ என்று குரல் கொடுத்தவர்களை உதட்டில் கைவைத்து அமைதிகாக்கச் சொன்னார். ஆதரவாளர்கள…
-
- 0 replies
- 857 views
-
-
லோக் ஆயுக்தாவை வலிமையான அதிகார மையமாக உருவாக்க வேண்டும்: கமல்ஹாசன் அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றியுள்ளனர்.அதனை வலிமையான அதிகார மையமாக உருவாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்ததாவது, “தமிழக அரசியல் சூழலில் நானும் மக்களும் தாமாக விழித்துக் கொண்டுள்ளோம். மாற்றம் எம்மிடம் இருந்து தொடங்கி, நாடு முழுவதும் ஏற்பட வேண்டும். பணத்திற்காக வாக்களிக்காதீர்கள். ஒவ்வொரு தமிழன் தலை மீதும் ஒரு லட்ச ரூபாய் கடன் உள்ளது. இதை புரியாமல் ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் வாங்கி ஏமாந்து விடாதீர்கள். ஆட்சி பொறுப்பில் இருந்த கட்சிகள் திருடிய ப…
-
- 1 reply
- 857 views
-
-
அக்னிபத் திட்டம்: சென்னையில் வெடித்த போராட்டம்! மின்னம்பலம்2022-06-18 அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையிலும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள அக்னிபத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே வேலை, அதன்பிறகு தகுதியுடைய 25 சதவிகிதம் பேர் மட்டும் முப்படைகளில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவர், மீதமுள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள். குறிப்பாக 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தின் படி பணியில் சேர தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும், இளைஞர்களின் உயர் கல்வி பாதிக்கப்படும் என்றும் அரசியல் கட்…
-
- 0 replies
- 857 views
-