யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
40 topics in this forum
-
நேற்று, புதன்கிழமை. தமிழ்க்கடைக்கு புது மரக்கறியள் வந்திருக்கும். முருங்கைக்காய்க்கு, பிலாக்கொட்டை போட்டு சமைத்துச் சாப்பிட்டால் அந்தமாதிரி இருக்கும். நினைக்கவே வாயூறியது. நானே தனியப் போய் வேண்டியிருக்கலாம். மனுசியையும் கூட்டிக் கொண்டு போகலாம் என்ற நினைப்பில் 'தமிழ்க்கடைக்குப் போறனப்பா. வாவன்" என்றன். "உதிலை போறதுக்கு நானேப்பா" "நீயெண்டால் பாத்து நல்ல மரக்கறியளா எடுப்பாய்..." அவளுக்கு உச்சி குளிர... உடனையே வெளிக்கிட்டிட்டாள். தனிய போயிருப்பன். பிறகு "நீங்கள் அதை வேண்டேல்லையப்பா, இதை வேண்டேல்லையப்பா. வெண்டிக்காய் என்ன முத்தலாக் கிடக்கு. முறிச்சுப் பார்த்து வேண்டத் தெரியாதோ..…
-
- 23 replies
- 3k views
-
-
அழகிய பனிபடர் அல்ப் மலைத்தொடர் ஐக்கிய நாடுகள் சபை தலைமைக்காரியாலம்.. மற்றும் போர் வேண்டாம் என்பதை உணர்த்த வைப்பட்டுள்ள பீரங்கியும். பல்லாயிரம் சொந்தங்களைப் பறிகொடுத்த பின்னும்.. தமது உரிமைக்காக பாதுகாப்பான ஜெனிவாவில் கூடிக் கூட போராட மனநிலையற்ற தமிழர்கள் பலர். ஒரு சிலரின் சொந்த முயற்சியால்.. ஜெனிவா வாழ் பிற இன மக்களிடம் உள்ள ஈழத்தமிழர் துயர் பட்டறிவு அதிகம். ஐநா சபை. ஐநா வின் முன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கால் முறிந்த கதிரை. இதன் அர்த்தம்.. இன்னும் சரிவரப் புரியவில்லை.. தெரிந்தவர்கள் சொல்லலாம்..?! எனி ஐநாவில் இருந்து அறிவியல் நோக்கி.. இங்கு தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள.. கடவுளின் துகள…
-
- 18 replies
- 2.4k views
- 1 follower
-
-
எப்ப இளைப்பாரலாம் என்ற சிந்தனையுடன் கட்டிலை விட்டேழுந்தேன்.எனது வயதையும் இளைப்பாறுவதற்கு அரசாங்கம் வைத்திருக்கும் வயதெல்லையையும் எண்ணிபார்த்தேன் இன்னும் 10 வருடங்கள் வேலை செய்தால் தான் ஓய்வுதியம் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன் .சிறிலங்காவிலிருந்தால் நான் இப்ப பென்சனியர் ஆனால் இங்க பொல்லுபிடிச்சு கொண்டு வேலைக்கு போகவேண்டி இருக்கு என சலித்தபடியே காலைக்கடன்களை முடிக்க தொடங்கினேன். "டேய் நீ சிறிலங்காவிலிருந்தால் உனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்திருக்குமா?அரச உத்தியோகம் இல்லாவிடின் பென்சனே இல்லை".. மனச்சாட்சியின் அதட்டலினால் காலைகடன்களை விரைவாக முடித்து கொண்டு வேலைக்கு புறப்பட தயாரானேன். "இஞ்சயப்பா வரும் பொழுது வூலியில் டொய்லெட் டிசுவும்,தமிழ் கடைகளில் போய் அரிசி…
-
- 10 replies
- 3.3k views
-
-
தனித்திருந்து பார்…… ஏகாந்தம் என்பது இனிமையா? கொடுமையா? என்பது தெரிய வேண்டுமா? எவருமில்லாத உலகில் நீ மட்டும் வலம் வர வேண்டுமா? பூமியின் எல்லைகளுக்கப்பால் பூகோள விதிகளைத் தாண்டி வானவீதியில் இறக்கை விரித்துப் பறக்க வேண்டுமா? தனித்திருந்து பார். கொட்ட முடியாத சோகங்களை கண்ணீரில் கொட்டி கவலைகளை மறக்க வேண்டுமா? எட்ட முடியாத சிகரங்களை கற்பனையில் ஏறி கலகலப்பாய் கரமசைக்க வேண்டுமா? தழுவவும் தலை தடவவும் ஆளில்லாமல் உனக்குள் நீயே உடைய வேண்டுமா? தனித்திருந்து பார் கடந்து போன காலங்களின் களிப்பான நிகழ்வுகளை அசைபோட்டு மனம் ஆர்ப்பரிக்க வேண்டுமா? உறவுகளின் உரசலும் பிரிவுகளின் விரிசலும் தொலைந்து விட்ட காலமும் தோளில் பாரமாகிட வி…
-
- 19 replies
- 5.2k views
-
-
தலைமுறைகள் விடைகாண்பர்! ---------------------------------------------------------------------- விடுதலைக்கு உரமான வீரத் தளபதிகாள் கலையாது நினைவுகளில் வாழும் வீரர்களே விழிநீரால் நினைந்துருகும் நிலையாகப் போனவரே கலையாத கனவொருநாள் மெய்ப்படும் வேளைவரும் உறங்காத உணர்வுடனே உயிர்பெறும் பொழுதினிலே விடிவுபெறும் தேசத்தில் விழிதிறப்பீர் வீரர்களே! விழிதிறக்கும் வழிகாணும் தலைமுறைகள் எழும்போது விலங்குடைத்து நிமிர்கின்ற வழிதேடி விடைகாண்பர் புலமெங்கும் வளம்பெற்று நிமிர்கின்ற இளையோரும் தாய் நிலமெங்கும் தமிழோடு வாழ்கின்ற இளையோரும் அறிவோடு இணைந்தே அறப்போரைத் தொடுத்தாலே நிலத்துயரை நீக்கிவிடும் நிலைகாண வழிபிறக்கும்! சாவுகளை எதிர்கொண்டு சரித்திரமாய் வாழ்பவரே…
-
- 14 replies
- 2.5k views
- 1 follower
-
-
நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை Facebook இல் போட்டுவிட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில் எழுந்து பார்த்த போது அந்தப் படத்துக்கு முந்நூறுக்கு மேல் லைக்ஸ். நூறுக்கு மேல் கொமென்ற்ஸ். உள் பெட்டியில் ஊருப்பட்ட செய்திகள். 'வடிவு, நீங்கள் நல்ல வடிவு' 'உங்களோடை கதைக்கோணும். போன் நம்பரைத் தாங்கோ' 'உங்களுக்கு ஒண்டு சொன்னால் கோவிப்பிங்களோ? நீங்கள் நல்ல வடிவு' 'உங்கடை வடிவாம்பிகை என்ற பெயரைப் போலயே நீங்கள் வடிவா இருக்கிறிங்கள்' 'மடம், பிளீஸ் போன் நம்பர் தாங்கோ' 'அக்கா, ஐ லவ் யூ" இப்படித்தான் அந்தச் செய்திகள் என்னை மயக்கும் எண்ணத்தில் எழுதப் பட்டிருந்தன. நான் Teenage இல் இருந்தி…
-
- 39 replies
- 5.5k views
-
-
உ. நிலம் தழுவாத நிழல்கள். நிலம் ..... 1. அழகிய பாரிஸ் நகருக்கு அணிகலனாய் விளங்கும் ஷேன்நதி கடல் காதலனின் கரங்களில் தவழ இரு கரைகளின் தழுவலில் அடங்கி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள். ஆங்காங்கே ஓரிரு சுற்றுலாப் படகுகளும் சுமைதாங்கிப் படகுகளும் நதியன்னைக்கு வலிக்காமல் நீரை விலக்கி நகர்ந்து செல்கின்றன. படகின் மேல் தளத்தில் சில சிறுவர்கள் நின்று வீதியில் போய் வருகிறவர்களையும், கரையோர பூங்காக்களின் கதிரைகளில் இருப்பவர்களையும் பார்த்து குதூகலத்துடன் கையசைத்துக் கொண்டு செல்கின்றனர். …
-
- 73 replies
- 8.4k views
-
-
தைரொய்ட் குறைபாடும் அதற்கான நிவர்த்திகளும் தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும் தேவையானது.மூளையில் உள்ள கபச்சுரப்பியின் TSH (ஹோர்மோன் ) உத்தரவுப்படி செயல்படும். சிலவேளைகளில் TSH போதிய அளவு இருந்தாலும் தைரொய்ட் சுரப்பி தேவையான அளவு தைரொக்ஸினை சுரக்காது. இதற்கு முக்கிய காரணம் மரபு அணு சம்பந்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடாகும். Autoimmune என்று சொல்லப்படும், எமது வெண்குருதி கலங்கள் தமக்கு கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு வேலையை செய்யாமல் எமது உடலின் பல பாகங்களையும் தாக்கும். அந்த வழியில் தைரொய்ட் சுரப்பியையும் தாக்கும். அதனால் தைரொக்சின் அளவு குறைந…
-
- 391 replies
- 60.3k views
- 4 followers
-
-
மகளின் 21 வது பிறந்த தினத்துக்குத் தன்னை தான் விரும்பும் மூன்று நாடுகளுக்குக் கூட்டிக்கொண்டு போவீர்களா அம்மா?? செலவும் அதிகம் இல்லை என்றாள். சரி நாம் மற்றவர்கள் போல் ஆடம்பரமாக எதையும் கொண்டாடுவதில்லை. மகளின் சாட்டில் நானும் போய்வரலாம் என்று எண்ணி சரி என்று கூறி இரு மாதங்களுக்கு முன்னர் விமானச்சீட்டுக்களை வாங்கியாகிவிட்டது. மூன்று நாட்கள் ஒரு நாட்டிலும் இரண்டு நாட்கள் இன்னொரு நாட்டிலும் மூன்றாவதாக சுவிசுக்கும் போவதாக ஏற்பாடு. நான் பலதடவை சுவிஸ் போயுள்ளேன். என் கடைக்குட்டி போகாதபடியால் கட்டாயம் அங்கும் தான் போகவேண்டும் என்றதனால் சரி மீண்டும் அந்நாட்டின் அழகை இரசிப்போம் என்று காத்துக்கொண்டிருக்க உந்தக் கொரோனா வந்து தடையாய் நிக்குது. டிக்கற் தங்குமிடம் இரண்டும் சேர்த்து…
-
- 72 replies
- 9k views
- 1 follower
-
-
கார் முகில்கள் கலந்துரையாடி அடை மழை தூவுதே எழில் மயில்கள் நடனம் புரியவே சாரல்களும் பாராட்டி கைதட்டுதே சோலைக்கு பசுமை சேலை கட்டிவிடும் உரிமை நீருக்கு கிடைத்ததே எண்ணிலடங்கா முத்தங்கள் வைக்கவே மண்ணில் விதை வித்துக்கள் பிறக்குதே மாரி நீ மகர்ந்தசேர்க்கை செய்யவே ஏரியும் தூறு வாரி தவம் கிடக்குதே திரை சென்று உவர்ப்பாகும் முன்பே இதழ்களில் இனிப்பானதே
-
- 2 replies
- 1k views
-
-
மங்கை அவளது அகமது புதிராகிடும் விழிகளிரண்டில் கணை தொடுப்பாள் கார்மேகக் கூந்தலின் பூவும் கமழும் இடையின் வளைவுகள் கண்டு கம்பனும் மயங்கிக்கிடக்க சாரை போல் நடந்து வருகையில் ஊரும் திகைக்க.....கவர்ந்திடும் புருவங்கள் புருசர்களையும் ஈர்க்க நாணமும் நாணித்திட .... தவம் கிடக்கிறாள் மனம் கவர்ந்தவனை அடைந்திட......
-
- 10 replies
- 2k views
-
-
டிஸ்கி : இந்தாண்டு நம்மளும் ஏதாவது கிறுக்குவோமே..! என்ற முயற்சிதான்..கீழே..! ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன்.. புகுமுக வகுப்பை (PUC) முடித்துவிட்டு, மதிப்பெண்கள் வெளிவரும் நேரம்.. 'திக் திக்' மனதோடு அடுத்த எதிர்கால படிப்பை 'எந்தப் பிரிவில் தொடரலாம்..?' என மனதில் ஆயிரம் கேள்விகள்..குழப்பங்கள்..! தோட்டத்திற்கு சென்றால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், அக்கம்பக்கம் உள்ளோர் எனது ஐயாவிடம் "மைனர் அடுத்து என்ன செய்யப்போறார்..?" எனக் கேள்விகள்.. மதிப்பெண்கள் வரும்வரை என்னிடம் பதிலில்லை.. ஒருமாத கால காத்திருப்பிற்கு பின் பெறுபேறுகள் வந்தாயிற்று.. எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்கள்..! நிச்சயம் எனது கனவான பொறியாளராக முடியும…
-
- 63 replies
- 10.1k views
- 1 follower
-
-
வறுமையின் நிறம் கதிரவன் கடல் குளித்து கிழக்குவானில் தலைதுவட்டத் தொடங்கியிருந்தான். வாடைக்காற்று புழுதியை வாரி இறைத்தபடி சுழன்றடித்துக்கொண்டிருந்தது. காலை ஜந்து மணிக்கே விழித்துவிடும் எமது ஊரான காவலூர். அதிகாலையானால் எமது ஊரில் குடிநீருக்கான போராட்டம் தொடங்கிவிடும். பட்டினசபையால் வழங்கப்படும் குடிநீரை குழாய்களில் எடுப்பதற்காக குழாயடியில் வரிசையாக குடங்களும் வாளிகளும் நிரையாக நிற்கத் தொடங்கிவிடும். (இது நடந்தது இன்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னைய காலம்.) இன்று வீடுகளுக்கு குழாய்நீர் வசதி வந்து விட்டதால் குழாயடியில் குழுமும் பெண்கள் கூட்டமும் வரிசையாக நிற்கும் குடங்களும் காணாமல் போய்விட்டன. அன்றைய நாட்களில் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை எல்லாமே அந்தக் குழாயடிச் செய்திக…
-
- 11 replies
- 2k views
-
-
விதியே கதை எழுது…….. ( 1 ) வானத்தில் வட்டநிலவு இரவல் ஒளியில் எறித்துக் கொண்டிருந்தது. கட்டிலில் விழி மூடாமல் விழித்திருந்தாள் கவிதா. வானில் ஓடி மேகத்திரையில் முகம் மறைத்து விளையாடிக்கொண்டிருக்கும் வெண்நிலவின் அழகை ரசிக்க மனமின்றி மேகக் கூட்டத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தன அவள் விழிகள். ஒரு காலத்தில் வெள்ளி நிலா பவனி வரும் அழகை ரசித்து ரசித்து கவிதை எழுதி அந்த மோகத்தைத் தூண்டுகின்ற முழுமதியின் அழகில் மனதைப் பறி கொடுத்து மனம் லயித்துக் கிடந்தவள் அவள். அதிலும் பனிக்காலம் முழுவதும் பார்க்க முடியாத அந்த நிலவு வசந்தகாலத்தில் பார்க்கக் கூடியதாக மூடிக்கிடந்த சாளரங்கள் திறக்கப்பட்டு திரைச் சீலைகள் விலக்கப்பட்டு வானத்திரையின் நீல வண்ணத்தை ரசிக்கும் யாருக்கும் மனம…
-
- 8 replies
- 2.2k views
-
-
செயற்கை சுவாசக்கருவி மூலம் மூச்சு உள்ளே சென்று வெளியே வருகின்றது. ஒவ்வொரு மூச்சுமே ஒரு போராட்டம். சுயநினைவு திரும்புமா? தெரியாது. ஆனால், திரும்பவேண்டும். பின்பு...? கண்கள் விழிக்கவேண்டும். சாதுவாக அல்ல, அவை நன்றாய் அகல விழிக்கவேண்டும். ஆட்கள், பொருட்கள் தெளிவாய், துல்லியமாக தெரியவேண்டும். மேலும்? காதுகள் கேட்கவேண்டும். இரண்டு காதுகளும் கேட்கவேண்டும். மனித குரல்கள், குருவியின் ஓசை, கோயில் மணியோசை, வாகன இரைச்சல் அனைத்துமே காதுகளில் ஒலிக்கவேண்டும். இவை மட்டும் போதுமா? இல்லையே. படுத்த படுக்கையாக சரிந்த ஆள் மீள எழவேண்டும். எழுந்து நடமாடவேண்டும். நாளாந்த வாழ்க்கை வழமைக்கு திரும்பவேண்டும். சிரித்து கதைத்து பேசவேண்டும். ஒன்…
-
- 11 replies
- 2.8k views
-