நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
கேன்சர் நோயினால் (புற்று நோய்) பாதித்தவர்களுக்கு வலியை போக்குவதற்காக “மார்பின்” மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மாத்திரை புற்று நோயை மேலும் பரவ செய்யும் தன்மை உடையது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ரத்தநாளங்களை பலப்படுத்துவதற்கு பதிலாக மற்ற செல்களிலும் புற்று நோயை பரவ செய்வது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. பாஸ்டனில் உள்ள அமெரிக்க புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தில் முன்னணி ஆராய்ச்சியாளர் பேட்ரிக் சிங்கிள்டன் தெரிவித்தார். மார்பினுக்கு பதிலாக மெத்தில் நால்ட்ரோசன் அல்லது எம்.என்.டி.எக்ஸ். மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். http://www.newsonews.com
-
- 1 reply
- 1.4k views
-
-
கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகள் உடல்நலத்துக்கு நல்லதா? உடல் எடை குறைக்க உதவுமா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இணையத்தில் அதிகம் தேடப்படும் உணவுமுறைகளாக, ஆட்கின்ஸ் முதல் கீட்டோ வரையிலான கார்போஹைட்ரேட் குறைவான உணவுமுறைகள் உள்ளன. இந்த உணவுமுறைகள் உடல் எடை குறைப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைப்பு, அவ்வளவு ஏன் டைப் 2 வகை நீரிழிவு நோயைக்கூட குணமாக்கிவிடும் என கூறப்படுகிறது. ஆனால், கார்போஹைட்ரேட்டுகளை முழுவதும் நம் உணவிலிருந்து நீக்கிவிடுவது, நாம் பின்பற்றுவதற்கான ஆரோக்கியமான உணவுமுறைதானா? கார்போஹைட்ரேட்டுகள் என்றால் என்ன? கார்போஹைட்ரேட்டுகள் உணவு மற்றும் பானங்களில் காணப்படும் மூன்று மேக்ரோ-நியூட்ரியண…
-
- 0 replies
- 544 views
- 1 follower
-
-
குடிநீர் போத்தல்களில் ”மெல்லக் கொல்லும் விஷம்” முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்கழன அறிவீர்களா? [sunday, 2014-04-06 20:21:02] குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், போத்தலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை. குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த போத்தல் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும். எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (…
-
- 2 replies
- 668 views
- 1 follower
-
-
காலையில் சாப்பிடாமல் இருக்கும் இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. சாம்சங் டயாபடிக் ரிசர்ச் இன்°ட்யூட் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இவர்கள் 1624 டீனேஜ் பள்ளி மாணவர்களின் உணவுப் பழக்கத்தை ஆராய்ந்ததில் அதிக எடையுள்ள பலரும் காலை உணவு சாப்பிடாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு இம்மாணவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறினாலும் முக்கியமாக இரண்டு காரணங்களால் தான் குண்டாக அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். காரணம் 1: காலையில் சாப்பிடாத காரணத்தால் பகலிலும் இரவிலும் அதிக பசி எடுப்பதால் மதிய உணவும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது. காரணம் 2: முதல் நாள் இரவு சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் பகல் 12 மணி வரை கிட்டத்தட்ட 15 முதல் 18 மணி நேரம் வரை சாப்பிடாமல்…
-
- 9 replies
- 2k views
-
-
பொதுவாக காலை உணவு சாப்பிடுவதை தற்போதைய காலக்கட்டத்தில் பலர் தவிர்த்துவிடுகின்றனர். அலுவலம் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் காலை உணவை சாப்பிடாமல் செல்கின்றனர். சிலர் ஆரோக்கியமற்ற உணவை வெளியிலும் சாப்பிடுகின்றனர். ஆனால் காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே காலை உணவை தினந்தோறும் சாப்பிட வேண்டும். மேலும் சில காலை உணவுகள் நம் அரோக்கியத்தை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இட்லி இட்லியை காலையில் சாப்பிடுவதால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், அத்தியாவசிய கலோரிகள் உடலுக்கு கிடைக்கும். இதனால் அன்றைய பொழுது நன்கு ஆரோக்கியமாக செல்லும். தோசை இதில் புரோட்டீன், கார்போஹைட்ரேட் அதிகமாகவும், க…
-
- 0 replies
- 2.3k views
-
-
தலைவலி, முதுகுவலி மாதிரி பரவலாக பலரையும் தாக்கக்கூடிய ஒரு பிரச்னையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது கிட்னி ஸ்டோன் எனப்படுகிற சிறுநீரகக்கல். யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய சிறுநீரகக் கல் பாதிப்பின் பின்னணி, அறிகுறிகள், சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தன். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே சிறுநீர் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆ…
-
- 0 replies
- 490 views
-
-
அளவுக்கு அதிகமாக திரவ உணவு உயிருக்கு ஆபத்தானதா? உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவர்கள் பெரும்பாலும் நோயாளிகளை திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுமாறு ஆலோசனை வழங்குவார்கள். ஆனால், அதிக தண்ணீரை விரைவாக அருந்தினால் அது ஆபத்தில் முடிவடையும் என்பது 59 வயது பெண் ஒருவரைப் பொருத்தவரை உண்மையாகியிருக்கிறது. சிறுநீர் தொற்று ஒன்றை தவிர்க்க எடுத்த முயற்சிகளை தொடர்ந்து, அந்த பெண்மணி ஹைபோனேடேரேமியா அல்லது நீர் போதை என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் நோய்கள் குறித்த கட்டுரைகளை எழுதும் மருத்துவர்கள், ஆரோக்கியமான மனிதர்களிடையே ஏற்படும் ஓர் அரிதான நிகழ்வு என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், நோயாளிகள் திரவ உணவு…
-
- 0 replies
- 304 views
-
-
அகத்திக் கீரை "அகர முதல எழுத்தெல்லாம்" என்று வள்ளுவர் குறளைத் துவங்குகிறார். கீரைகளைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது அகரத்தில் தொடங்கும் முதல் கீரை "அகத்திக் கீரையாகும்." அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். ஆகவே கீரைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்குவதற்கு முதல்கீரையாக விளங்குவது அகத்திக் கீரையே ஆகும். அகத்திக் கீரை இந்தியாவில் எங்கும் ஏராளமாக வளரக் கூடியது. ஏறக்குறைய இந்தியா முழுவதும் பயி¡¢டப் படுகிறது. இருப்பினும் இதன் இருப்பிடம் மலேசியா எனக் குறிப்பிடுகிறார்கள். இக் கீரையை அழகுக்காகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் வளர்க்கின்றனர். அகத்திக்கு, அகத்தியம், அச்சம், நுனி, கா£ரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத…
-
- 4 replies
- 7k views
-
-
நிலவேம்பு குறித்த தவறான தகவல் - சித்த மருத்துவ அமைப்பினர் விளக்கம். நிலவேம்பு குடிநீர் அனைத்து வித காய்ச்சலையும் குணப்படுத்தும் என சித்த மருத்துவ அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். நெல்லையில் சித்த மருத்துவ நண்பர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் ஜோசப் தாஸ் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது, நிலவேம்பு குடிநீர் பற்றிய விவாதங்களால் தமிழக மக்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது. நிலவேம்பு என்ற மூலிகை சித்த மருத்துவம் மட்டுமல்லாது எல்லா வித மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.100 ஆண்டுகளுக்கு முன்பே இந்த எளிய மூலிகை பற்றி டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் வங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலவேம்பு, சீரகம், ஏலக்காய் கொண்டு தயாரித்த ஆலூயி என்ற மருந்து வீட்டுக…
-
- 0 replies
- 596 views
-
-
‘உணவுக்கும் மருந்துக்கும் அதிக வேற்றுமை இல்லை’ என்கிறது ஒரு சீனப் பழமொழி. உணவு கட்டுப்பாடு குறையும்போது மருந்தை நாட வேண்டி உள்ளது. மருந்தைக் குறைப்பதற்கு, உணவைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அதுவும் நீரிழிவு நோயைப் பொறுத்தவரை உணவுதான் அதற்கான சிகிச்சையில் பெரும்பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோய் மருத்துவத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 1.உணவும் உடற்பயிற்சியும் மனஉறுதியும் 2.உணவும் உடற்பயிற்சியும் மாத்திரையும் மனஉறுதியும் 3.உணவும் உடற்பயிற்சியும் ஊசியும் மனஉறுதியும் எப்படிச் சமாளிப்பது? இந்த மூன்றிலுமே உணவுக்குத்தான் முதலிடம். மற்றவை எப்படி அமைய வேண்டும் என்பதை உணவே தீர்மானிக்கிறது என்று சொன்னால், அதில் தவறில்லை. உணவுக் கட்டுப்பாடு, மருத்துவம், உடற்பயிற்சி ஆகிய மூன்று…
-
- 1 reply
- 737 views
-
-
உலகம் முழுவதுமே இன்று 'ஒபிசிட்டி' (Obesity ) எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா... என்று தேடிப்போக வேண்டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது உணவில், நாளொன்றுக்கு ஒரு சுவை என்ற விகிதத்திலாவது சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறது ஆயுர்வேதம். உங்களது எடையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவு வகைகள் கீழே: மஞ்சள்: மஞ்சளை நாம்…
-
- 10 replies
- 2.3k views
-
-
இந்தப் பதிவிற்கு இந்தப் பகுதி பொருத்தமானதென்று நினைக்கிறன்... (நீங்கள் புள்ளிகளை பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் பறவாய்யில்லை, கீழே உள்ள விடைகளை முதலில் பார்க்காமல் நேர்மையாக பதிலளியுங்கள்) நீங்கள் சோம்பேறியா? உற்சாகமானவரா? - பலப்பரீட்சை உற்சாகம் இருந்தால்தான் வாழ்வில் உன்னதங்களை நிகழ்த்த முடியும். வெற்றிபெற முடியும். நீங்கள் உற்சாகமானவர்தான் என்பதை உங்களுக்கு நீங்களே ஒரு பரீட்சை வைத்துக் கண்டுபிடித்துக் கொள்ளலாம். அதற்காக இங்கே சில வினாக்கள்... 1. காலையில் எழுந்ததும் எப்படி உணர்கிறீர்கள்? அ. உற்சாகமாக ஆ. சோம்பலாக இ. வெறுமையாக 2. லட்சியத்தை அடைய முடியவில்லை என்றால்.... அ. கடும் வருத்தம் மற்றும் ஏமாற்றத்துடன் காணப்படுவேன். …
-
- 18 replies
- 4.9k views
-
-
முழங்கால் மூட்டு சார்ந்து காலப்போக்கில் ஏற்படும் பிரச்சனைகளில் முழங்கால் மூட்டு பிரதியீட்டு நிலை என்பது உச்ச விளைவு எனலாம்.. இது தொடர்பாக... கேள்வி - பதில் வடிவ குறிப்பொன்றை நோக்குவோம். முழங்கால் மூட்டு எங்குள்ளது.. அது எதனால் ஆக்கப்பட்டுள்ளது..??! முழங்கால் மூட்டு காலின் தொடை எலும்புகளுக்கும் கணுக்கால் எலும்புகளுக்கும் இடையில் உள்ள பிரதான மூட்டு ஆகும். இந்த மூட்டுச் சார்ந்து காலை ஒரு வழியில் (பின்பிறமாக) மடிக்க முடிகிறது. இது மனிதனின் நிமிர்ந்த உடற்கோலத்துடன் கூடிய நடத்தலுக்கு.. உடை எடையை தாக்குவதற்கு முக்கியமான ஒன்றாகும். உதாரணமாக வீட்டின் கதவை திறந்து மூடுவதற்கு பாவிக்கும் பிணைச்சல் போல.. இங்க மூட்டு செயற்படுகிறது. இந்த முழங்கால் மூட்டை ஆக்குவதில்.... தொட…
-
- 3 replies
- 4.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுப்ரியா ராஜசேகர் பதவி,பிபிசி தமிழ் 19 ஏப்ரல் 2023, 02:39 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 19ஆம் தேதி கல்லீரல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும். இந்த வருடத்திற்கான கருப்பொருள், “விழிப்புடன் இருக்க வேண்டும், தகுந்த இடைவெளிகளில் கல்லீரல் சோதனையை மேற்கொள்ள வேண்டும், 'ஃபேட்டி லிவர் பிரச்னை யாருக்கு வேண்டுமென்றாலும் ஏற்படலாம்” என்பதுதான். எனவே நமது உடல் இயக்கத்திற்கு கல்லீரல் எவ்வளவு முக்கியம், அதை…
-
- 0 replies
- 811 views
- 1 follower
-
-
பயத்தால் ஏதும் பயன் இல்லை "மேன்மைப்படுவாய் மனமே கேள் பயத்தால் ஏதும் பயன் இல்லை" என்கிறார் பாரதி. ஆம், பயம் நம்மை அழிக்க நினைக்கும் வலிமையான ஆயுதம். பயம், பயந்த சுபாவம் என்பது பிறக்கும் போதே கூடப் பிறந்த பல சுபாவங்களில் ஒன்று. வாழ்க்கை வழிமுறைகள் மாற்றியோ அல்லது திருத்தியோ அமைக்கப்பட்டால் பயம் விலகி விடுவது உறுதி. இரத்த சோகை பயம், படபடப்பு, கையில் வியர்ப்பது, நடுக்கம் இவைகள் ஒருவருக்கு இரத்த சோகை இருந்தால் நிச்சயம் இருக்கும். இதற்கு ரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவை பரிசோதிக்க வேண்டும். 13க்கும் குறைவானால் இரும்புச்சத்து மிகுந்த முருங்கைக் கீரை, காரட், பேரிச்சம்பழம் போன்றவற்றை உடனே சாப்பிட்டு தேற்றிக் கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் …
-
- 6 replies
- 1.8k views
-
-
நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுப்போன்று நெய்யில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. அதே சமயம் இதில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள். செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். …
-
- 0 replies
- 2.2k views
-
-
கிட்டப் பார்வை குறைபாடு: 2050ம் ஆண்டில் உலக மக்களில் பாதி பேர் பாதிக்கப்படுவார்களா? ஜெசிகா முட்டிட் . 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைகள் மத்தியில் கிட்டப்பார்வை குறைபாடு விகிதம் அதிகரித்து வருவது உலகம் முழுவதும் பெற்றோரையும், மருத்துவர்களையும் எச்சரிக்கும் வகையில் உள்ளது. இந்த நிலைமையை நாம் மாற்றமுடியுமா? 1980களின் பிற்பகுதியிலும், 1990களிலும் சிங்கப்பூர் மக்கள் தங்கள் குழந்தைகளிடம் கவலைப்படத்தக்க ஒரு மாற்றம் தென்படுவதை கவனிக்கத் தொடங்கினர். பொதுவாக, சிறிய, வெப்பமண்டல தேசமான அங்கு வசித்து வந்த மக்கள், அந்த சமயத்தில் பெரும் அளவில் முன்னே…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
எடை குறைப்பது எப்படி என்று ஒரு உடற்பயிற்சியாளர் அல்லது டயட்டீஷியனிடம் கேட்டுக்கொண்டு போனால் அவர்களில் மரபாளர்கள் பொதுவாக நாம் உடலுக்கு ஒருநாளைக்குரிய எரிசக்தி வழங்குவதற்கான கலோரிகளுக்கு குறைவான கலோரிகளை உட்கொண்டு உடற்பயிற்சி மூலமாக அந்த கலோரிகளிலும் சிறிது குறைத்தால் எடை தானாக குறையும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த அறிவுரை வேலை செய்யுமா? ஓரளவுக்கு மட்டுமே. முதல் ஆறு மாதங்களுக்குள் மூச்சைப் பிடித்து குறைக்கும் சிறிய எடையும் ஒரு கட்டத்தில் நின்றுபோய் டாய்லட் அடைப்பு போல ஆகும். “ஏங்க நாங்க குறைவாக சாப்பிட்டு நிறைய பயிற்சி செய்துகொண்டும் தானே இருக்கிறோம்?” என்று கேட்டால் அவர்கள் “நீங்க சரியான கட்டுப்பாட்டுடன் இல்லை” என்று நம் மீதே பழியைப் போடுவார்கள். ஆனால் பிரச்சினை அவர்களுட…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
இரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ வெட்ட வெட்ட மீண்டும் துளிர்விடும் வாழை மரத்தின் பயன்பாடுகள் எண்ணிலடங்காதவை. இதில் வாழைப்பூவும் முக்கிய அங்கம் வகிக்கின்றது. வாழைப்பூவை உணவாக இருவாரம் உட்கொண்டால் இரத்தத்தில் கொழுப்புத்தன்மை, பசைத்தன்மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீரடையும். இரத்த ஓட்டம் சீரடையும் பட்சத்தில் ஆக்ஸிஜன், இரும்புச்சத்து அதிகப்படியாக உட்கிரகிக்கப்படுவதால் இரத்தச் சோகை என்பது தலை தூக்காது. துவர்ப்பு தன்மையை தன்னகத்தே அடக்கியுள்ள வாழைப்பூ இரத்தத்தில் கலக்கும் அதிக அளவு சர்க்கரையை கூட மட்டுப்படுத்தும் இன்றைய மாறுபாடான உணவு முறை பழக்கம், மன உளைச்சலால் ஏற்படும் செரியாமை இவைகளால் வாயு சீற்றம் அதிகமாக…
-
- 0 replies
- 526 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டிஃப்பனி டர்ன்புல் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோய்க்கு (Glioblastoma) கடந்த ஆண்டு தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சிகிச்சை முறையின் மூலம் சிகிச்சை பெற்ற உலகின் முதல் நபர், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர், மருத்துவர் ரிச்சர்ட் ஸ்கோலியர். ஓராண்டுக்குப் பிறகு இப்போது புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளார் ரிச்சர்ட். புகழ்பெற்ற மருத்துவரான ரிச்சர்ட் ஸ்கோலியரின் பரிசோதனை முறையிலான சிகிச்சை என்பது மெலனோமா (Melanoma) குறித்த அவரது சொந்த ஆராய்ச்சி அடிப்படையில் செய்யப்பட்டது. ரிச்சர்ட் ஸ்கோலியரின் மூளைநரம்ப…
-
- 0 replies
- 490 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TAWANA MUSVABURI கட்டுரை தகவல் எழுதியவர், போனி மெக்லாரன் பதவி, பிபிசி நியூஸ்பீட் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தனது 21 வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது, தவனாவின் திட்டத்தில் இல்லை. நண்பர்களுடன் மகிழ்ச்சியாக, விருந்துகள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு சென்று சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்ததாக கூறுகிறார் அவர். ஆனால், அதெல்லாம் அவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பு வரைதான். அவருக்கு என்ன ஆயிற்று என்று அவருக்கே தெரியவில்லை. ஆனால், இன்னும் நான்கு வாரங்களில் அவருக்கு குழந்தை பிறக்கப் போவதாக மருத்துவர்கள் அவரிடம் கூறினர். "எனக்கு பதற்றத்தில் உடல் உதற தொடங்கி…
-
- 0 replies
- 692 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் தீபக் மண்டல் பிபிசி செய்தியாளர் 18 ஆகஸ்ட் 2025, 02:39 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சிறுநீரகங்கள் நம் உடலில் ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளைச் செய்கின்றன. அவை உடலில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றுகின்றன. திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கின்றன. அவை ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, ரத்த சிவப்பணுக்களை உருவாக்கவும் உதவுகின்றன. ஆனால் மக்கள் பெரும்பாலும் சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளைப் புறக்கணிக்கிறார்கள். இந்த அறிகுறிகள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சையையும் சீக்கிரமாகவே தொடங்கலாம். நாம் பெரும்பாலும் கவனம் செலுத்தாத அந்த ஐந்து அறிகுறிகளைப் பற்ற…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
பள பளக்கும் பற்கள்!!! "ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" ஆலங்குச்சி, வேலங்குச்சி, பேப்பங்குச்சி என பற்பசையும், பல்துலக்கும் தூரிகையும் இணைந்த இயற்கை நமக்களித்த அன்பளிப்புகளை புறக்கணித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கு கிராமப்புறங்களில் கூட நவநாகரீக பாணியில் பற்பசைகளும் பல் துலக்கும் தூரிகைகளும் பரவலான பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மாநகரத்து மகாதேவன் பயன்படுத்துவதையே மாந்தோப்பு கிராமத்து மாடசாமியும் பயன்படுத்துகிறார் என்ற சமநிலை, சமத்துவத்தை பற்றி கொஞ்சம் மகிழ்ச்சியடையலாம். ஆனால், மகாதேவதுக்குத்தான் நவநாகரீக வாழ்க்கை மோகம், தகுநிலை நிர்ப்பந்தம், நம்ம மாடசாமிக்கு அதெல்லாம் இல்லையே, இயற்கை அளித்த அருங்கொடைகளை அவர் ஏன் ஒதுக்குகிறார் என்ற கரிச…
-
- 2 replies
- 3.5k views
-
-
சைக்கிள் ஓட்டுவதால் ஆண்களின் பாலுறவு ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைசைக்கிள் ஓட்டுவதால் ஆண்களில் பாலுறவு ஆரோக்கியத்திற சைக்கிள் ஓட்டுவது ஆண்களின் பாலுறவு ஆரோக்கியத்தையோ அல்லது சிறுநீர் பாதையின் செயல்பாடுகளில் பாதிப்பையோ ஏற்படுத்தாது என ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் சைக்கிள் ஓட்டுபவர்களை ஓடுபவர்களுடனு…
-
- 2 replies
- 610 views
-
-
உண்ணாவிரதம் இதய நோய்களை குறைக்கும் மாதத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் கடைபிடித்தால் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உண்ணாவிரதம் தொடர்பாக யுடா பகுதியைச் சேர்ந்த 200 நபர்களின் ஆரோக்கியம் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் போது நடத்தப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளாத நபர்களில் 75 சதவீதத்தினருக்கு ஆர்ட்ரிஸ் ரத்தக்குழாய்கள் குறுகி இருப்பது தெரியவந்தது. ஆர்ட்ரிஸ் ரத்தக்குழாய்கள் இதயத்தில் இருந்து உடலின் இதர உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய் ஆகும். ஆர்ட்ரிஸ் குழாய்கள் குறுகினால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் …
-
- 0 replies
- 475 views
-