நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
பெண்கள் தமது மார்பகங்களின் அளவுக்கும் அவற்றின் மேல் கீழ் மற்றும் பக்கப்புறமான அசைவுக்கும் தகுந்த அளவு இடமளிக்காது மார்புக் கச்சுக்களை அணிவதால் மார்பகங்களில் உள்ள இணையங்கள் (ligaments) இழுபட்டு சிதைவடைகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக உடற்பயிற்சிகளின் போது அல்லது விளையாட்டுக்களில் பங்கெடுக்கும் போது அதற்குத் தகுந்த சரியான தயாரிப்புள்ள மார்புக் கச்சுக்களை பெண்கள் அணியத் தவறின் இந்த விளைவு ஏற்படுவது தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சியின் போது மார்பகம் கிட்டத்தட்ட 21 சென்ரி மீற்றர்கள் மேல் - கீழ், உள் - வெளி மற்றும் பக்கப்புறம் என்று அசைய இடமளிக்கப்பட வேண்டும். ஆனால் பல வகை மார்புக் கச்சுகளும் நிலைக்குத்தான மார்பக அசைவுக்கு இடமளிப்பதில்லை. இதனால்…
-
- 43 replies
- 8k views
-
-
அதீத நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தும் மருந்துக்கு மன அழுத்தத்தை போக்கும் சக்தி மனித உடலில், அதீதமாக செயல்படும் நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தும் மருந்துகளுக்கு, மன அழுத்தத்தைக் குணப்படுத்தும் சக்தி உள்ளதாக மூத்த விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 350 மில்லியன் மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்; அதில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் அதீத நோய் எதிர்ப்பு செயல்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்மூளையின் செயல்பாடுஆகியவற்றின் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தியிருப்பது அந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான புரட்சியின் தொடக்கம் எனக் கூறுகிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் கார்மன் பாரிய…
-
- 0 replies
- 266 views
-
-
விரல்களாலும் வியாதிகளை விரட்டமுடியும்! [saturday, 2013-10-26 16:12:13] நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன. கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன. …
-
- 4 replies
- 1.7k views
-
-
உயர் ரத்த அழுத்தம்: புரிந்துகொள்ள எளிய வழிமுறைகள் உலகச் சுகாதார நிறுவனம் கவலை தரும் ஒரு தகவல் அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. 30-79 இடைப்பட்ட வயதுக்குள்ளானவர்களில் உலகெங்கும் 128 கோடிப் பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லும் அது, அடுத்து சொல்லும் விஷயம்தான் கூடுதல் கவலைக்கு உரியது. உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் (46%) தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதையே உணராத நிலையில் இருப்பவர்கள் என்கிறது. நாம் ஏன் இந்த விஷயம் தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியம்? ஏனென்றால், உயர் ரத்த அழுத்தமே அகால மரணங்களில் கணிசமான உயிர்களைக் கவ்விச் செல்வதாக இருக்கிறது. இது இதயம், மூளை, சிறுநீரகம் தொடர்பான பல …
-
- 0 replies
- 441 views
-
-
ரத்தம் உறையாமை நோய் நாள் - ஏப்ரல் 17: நெருங்கிய சொந்தத்தில் திருமணம் வேண்டாம் உடல் உள்ளே இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும்போதும் உறைதலும் ரத்தத்தின் இயல்பு. உயிர் காக்கும் இந்த நிலை இயற்கை தந்த பரிசு. சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிர் பறிக்கும் பிரச்சினை.அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய். உடலுக்குள் ரத்தக் குழாய்க்குள் ஓடிக்கொண்டி ருக்கும் ரத்தம், எப்போதும் உறையக்கூடாது. அது முழு திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான ஓட்டத்துடன் இருக்கும். ஆனால் இதே ரத்தம் உடலைவிட்டு வெளியேறும் போது, வெளிக்காற்று பட்டவுடன் உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். இதன் மூலம் ரத்தம் வீணாகாமல் உயிர் காக்கப்படும். அப்படி இல்லாமல், …
-
- 7 replies
- 1.2k views
-
-
உணவும் உடல்நலமும்: உணவு வேட்கைக்கும் மன அழுத்தத்திற்கும் என்ன தொடர்பு? எப்படி தடுக்கலாம்? 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு உணவின் மீதான வேட்கை (கிரேவிங்) (உடனே சாப்பிடத்தோன்றும் எண்ணம்) எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். ஒரு பிஸ்கெட் சாப்பிட காலை 11 மணிக்குக்கூட ஆசை தோன்றும்? மாலை 6 மணிக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்படும்? எப்போது உணவு வேட்கை தோன்றும் என சொல்ல முடியாது. உங்களுக்கு ஏற்படும் உணவு வேட்கை உங்களின் உணவுப்பழக்கம் குறித்தோ அல்லது உடல்நலம் குறித்தோ ஏதேனும் சொல்ல வருகிறதா? அவற்றை அறிந்துகொள்ள உணவியல் நிபுணர் செஜல் ஜேக்கப் உடன் பேசினோம். …
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
அதிகம் சாப்பிடாமலேயே முழுமையாக நிரம்பிய உணர்வுடன் பலூன் போல வயிறு இருப்பது மிகவும் பொதுவான ஒன்று. அடிவயிற்றின் அளவு அதிகரிப்பது, வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த மாற்றத்துடன் கூடுதலாக, வயிற்று வலி போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில காரணங்களை நம்முடைய உணவுப்பழக்கத்தில் மாற்றம் செய்தே நிவர்த்தி செய்யலாம். சில காரணங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் காணப்படும் பிரச்னை மற்றும் புற்றுநோய் போன்றவற்றின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். இதை எதிர்கொள்ள எந்தப் பழக்கத்தை நாம் மாற்ற வேண்டும் மற்றும் எந்த அறிகுறி இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம். …
-
- 0 replies
- 372 views
-
-
பெரும்பாலான நாடுகளின் புள்ளி விவரங்களைப் பார்த்தால், ஆண்களைவிட பெண்களே நீண்ட நாள் வாழ்கிறார்கள் என்பது புரியும். இத்தகைய ஆயுட்கால வித்தியாசம் மனிதர்கள் மட்டுமல்லாது பிற விலங்குகளிலும் காணப்படுகிறது என்கிறது அறிவியல். இதற்கான காரணம் இன்னதென்று கண்டறிந்து திட்டவட்டமான ஒரு கருத்தை இதுவரை யாரும் முன்வைக்கவில்லை. இந்த அறிவியல் மர்மத்துக்கு பரிணாம வளர்ச்சியில் இருக்கும் ஒரு ஓட்டைதான் காரணம் என்கிறது ஒரு ஆய்வு. மனிதன் உள்ளிட்ட பல உயிரினங்களில் காணப்படும் ஆண்,பெண் ஆயுட்கால வித்தியாசத்துக்கு காரணமாக இருக்கும் அந்த பரிணாம வளர்ச்சி ஓட்டை உயிரணுக்களில் உள்ள மைட்டோ காண்ட்ரியா பகுதியில் இருக்கிறதாம். உயிரணுக்களின் செயல்பாட்டுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் பகுத…
-
- 5 replies
- 722 views
-
-
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு குடிக்காதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 7 மார்ச் 2023, 03:44 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கொழுப்புக் கல்லீரல் எனப்படும் ஃபேட்டி லிவர் (Fatty Liver) நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள் மற்றும் மதுப் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பதின்ம வயதினர் தொடங்கி குழந்தைகள்கூட பாதிக்கப்படுகின்றனர். …
-
- 0 replies
- 481 views
- 1 follower
-
-
பலருக்கும் தெரியாத, "இஞ்சியில்" நிறைந்துள்ள நன்மைகள்!!! உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க எப்படி ஏலக்காய், பட்டை, கிராம்பு, பூண்டு போன்ற பொருட்கள் பயன்படுகிறதோ, இதேப்போல தான் இஞ்சியும் பயன்படுகிறது. பலருக்கும் இஞ்சியைக் கடித்தால், அதன் காரத்தன்மையால் முகம் பலவாறு செல்லும். ஆனால் அந்த இஞ்சியில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இதில் நிறைந்துள்ள மருத்துவ குணத்தால், எண்ணற்ற நோய்களை குணப்படுத்த முடியும். மேலும் ஆயுர்வேதத்தில் இஞ்சியும் நோய்களை குணமாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய இஞ்சியின் சில ஆரோக்கிய நன்மைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பசியைத் தூண்டும். உங்களுக்கு பசி எடுக்காவிட்டால், உணவை சாப்பிடும் முன் சிறு துண்டு…
-
- 3 replies
- 10k views
-
-
உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும் போது இரத்த சோகை ஏற்படுகிறது. உணவில் சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களால் இந்நோய் ஏற்படுகிறது. எனவே சரியான உணவுகளை எடுத்துக் கொண்டு இரத்த சோகையிலிருந்து விடுபடுவது அவசியம். கைக்குத்தல் அரிசி கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த சாதத்தை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம். ஓட்ஸ் ஓட்ஸில் எண்ணற்ற சத்துக்களுடன், இரும்புச்சத்து உள்ளதால் காலை உணவாக ஓட்ஸை எடுத்து வருவதால் இரத்த சோகையை கட்டுப்படுத்தலாம். உருளைக்கிழங்கு உருளைக…
-
- 0 replies
- 611 views
-
-
கண்ணுக்கு எதிரே கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கும் மூலிகை வேம்பு. காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம். வேப்பமரத்தின் இலைகளும், பூக்களும், கனிகளும் மருத்துவகுணம் மிக்கவையே. வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும். அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும். கிருமியும் அண்டாது. தென்னிந்திய சமையலில் வேப்பம்பூக்களுக்கு முக்கிய பங்குண்டு. தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம்பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட…
-
- 0 replies
- 951 views
-
-
புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் பெரும்பாலும் நுரையீரல் தான் பாதிக்கப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். மற்றும் நிகோடின் எனும் மூலப்பொருள் தான் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தும் முதல் கருவியாக இருக்கிறது. நீங்கள் மனம் திருந்தி புகைப்பிடிப்பதை நிறுத்தினாலும் கூட, அதன் பிறகு நுரையீரலில் புகையின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அந்த பாதிப்புகளை நீக்கும் பணிகளில் ஈடுபடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே, நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் சிறந்த உணவுகளை, நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்திய உடனே தினந்தோறும் உட்கொள்ள பழக்கிக் கொள்வது உங்கள் உடல் நலம் மேலோங்க வெகுவாக உதவும்…. வைட்டமின் சி சத்துள்ள உணவுகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க …
-
- 0 replies
- 870 views
-
-
ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல முகம் பளிச் என்று இருக்க வேண்டுமா? திராட்சை சாப்பிடுங்கள் என்கின்றனர் என்று அறிவுறுத்துகின்றனர் அழகியல் நிபுணர்கள். திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் சிறந்த அழகு பொருளாக சருமத்திற்கு இளமை தரும் பொருளாக கருதப்படுகிறது. திராட்சை விதையில் உயர்தர பாலிஃபினால் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் காணப்படுகிறது. இது சருமத்தில் பாதிக்கப்பட்ட செல்களை உயிர்ப்பிக்கிறது. இதில் வைட்டமின் சி, இ, ஏ ( பீட்டா கரோட்டீன்) போன்றவை காணப்படுகின்றன. இது மூளையை சுறுசுறுப்பு ஆக்குவதோடு அனிச்சை செயலை உற்சாகப்படுத்துகிறது. கண், சருமம், மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்தை தக்கவைக்கிறது. சருமம் விரைவில் முதுமை அடைவதை தடுக்கிறது. பளிச் முகத்திற்கு தின…
-
- 7 replies
- 1.1k views
-
-
கத்தரிக்காயின் சுவையை கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது அங்கும் விளைவிக்கப்படுகின்றது.இது காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்க வல்லது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இதன் மருத்துவ குணங்களுக்கு அடி…
-
- 0 replies
- 1.1k views
-
-
தொண்டையில் மாத்திரை சிக்கியதால் உயிரிழந்த 4 வயது சிறுவன் - கவனமாக இருப்பது எப்படி? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 21 ஆகஸ்ட் 2025, 02:41 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாத்திரையை விழுங்கிய நான்கு வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே உள்ள பி.ஆர். பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் நான்கு வயது மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) காலை, காய்ச்சல் காரணமாக திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவர் சிறுவனுக…
-
-
- 4 replies
- 335 views
- 1 follower
-
-
மூளை எந்த வயதில் மிக இளமையாக இருக்கும்? அதிக மாற்றங்களை சந்திக்கும் 5 முக்கிய கட்டங்கள் படக்குறிப்பு, மனித மூளை முப்பது வயதின் தொடக்க காலம் வரை இளமைக் கட்டத்தில் (adolescent phase) நீடிக்கிறது. அந்த காலகட்டத்தில்தான் மூளை தனது "உச்ச நிலையை" அடைகிறது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கட்டுரை தகவல் ஜேம்ஸ் கல்லேகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் X,@JamesTGallagher 27 நவம்பர் 2025, 01:43 GMT மனித மூளை வாழ்க்கையில் ஐந்து தனித்துவமான கட்டங்களை கடக்கிறது. இதில் 9, 32, 66 மற்றும் 83 வயதில் முக்கியமான மாற்றங்கள் நடக்கின்றன எனக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். 90 வயது வரையிலான சுமார் 4,000 பேரின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டு, அவர்களின் மூளை…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
சிறுநீர் தொற்றிற்கு தீர்வு காண நம் வீட்டு சமையலறையிலேயே போதிய மருத்துவ குணங்கள் நிரம்பிய பொருட்கள் உள்ளன. சிறு நீர் கழிக்கும்போது, அசௌகரியம் ஏற்படுகிறதா? எரிச்சல், கடுப்பு, அல்லது சிறு நீர் வெளி வெளிவராமல் இருந்தால், சிறு நீர்ப்பதையிலோ, சிறு நீர்ப்பையிலோ பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கும். இதற்கு டிஸ்யூரியா என்று பெயர். வெஜைனாவில் தொற்று ஏற்பட்டிருந்தால், சுத்தமில்லாமல் பராமரிக்கப்பட்டால், அல்லது நீர் சத்து குறைந்து போனாலோ, இது போல் பிரச்சனைகள் ஏற்படும். இந்த சிறு நீர் தொற்றிற்கு வீட்டிலேயே தீர்வு காணலாம். மோர் : புரோபயாடிக் என்று சொல்லக் கூடிய உணவுகளெல்லாம் உடலுக்கு தேவையான …
-
- 3 replies
- 5.3k views
- 1 follower
-
-
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது. ஆண்மையை அழிக்கும் பிராய்லர் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி. “பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்”. …
-
- 2 replies
- 493 views
-
-
ஆரோக்கியம் காக்கும் 6 உணவுகள் ஃபேஷன், டிரெண்ட் எனக் கருதி, தெருவோரக் கடைகளிலும் ஃபாஸ்ட்ஃபுட் கடைகளிலும் கிடைப்பதை உண்டு, உடலை நோய்க்காடாக மாற்றி இருக்கிறோம். பாரம்பரிய உணவுகளில்தான் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. அவற்றை உண்டுதான் நம் முன்னோர் உடல் வளர்த்து; உயிர் வளர்த்து இன்புற்று வாழ்ந்தனர். அப்படி, ஆரோக்கியம் காக்கும் ஆறு உணவுகள் பற்றி இங்கே பார்ப்போம்... சோளம்: சோளத்தில் புரதம்,கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, தயமின், நியாசின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. வயிற்றுப்புண்ணுக்கு மிகவும் உகந்தது. சர்க்கரை நோய் , ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு சோ…
-
- 0 replies
- 723 views
-
-
பல ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனை முடிவுகளின் படி, ஒரு ஆரோக்கியமான மற்றும் வளர்ந்த மனித உடலுக்கு ஒரு நாளைக்கு ஒரு 1500 மி.கி அளவுக்கும் குறைவான உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிய வருகிறது. ஆனால், நம்மில் பலர் 3000 மி.கிராம் அளவுக்கும் மேல் உப்பை உட்கொள்வது தான் ஒரு அதிர்ச்சிகரமான தகவலாகும். இந்த பழக்கம் மாரடைப்பு, மூளைத்தாக்குதல் மற்றும் பலவிதமான இதய ரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களை வரவழைக்கின்றன. ஒரு டீஸ்பூன் உப்பில் ஏறக்குறைய 2000 மி.கி சோடியம் இருப்பதால், இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் ஏதாவது ஒரு உணவு வகையை சாப்பிட்டாலே போதும், அதில் இதைவிட அதிக அளவு உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதிலும் நீண்ட நாட்கள் உப்பு…
-
- 2 replies
- 734 views
-
-
நமது மார்புக்கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்கு பெருந் தமனி என்று பெயர். இந்த பெருந்தமனி, இதயத்தின் இடது கீழ் அறையிலிருந்து கிளம்பி, பிறகு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதேபோல், உடல் திசுக்களில் சேரும் அசுத்தங்களும், கரியமில வாயுவும் (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த ரத்தம், சிரைக் குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு வந்து சேரும். இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் நுரையீரல் ரத்தக் குழாய்கள், வலது இடது எனப்பிரிந்து முறையே வலது …
-
- 0 replies
- 1.4k views
-
-
நாம் ஒவ்வொருவருமே முதுமை என்ற ஒன்றை நோக்கி அன்றாடம் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம். முதுமை வந்துவிட்டால் அதில் கூன் விழுதல் நிகழ்வு இயல்பான ஒன்று. முதுமையில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று முதுகெலும்பு பாதிப்படைதல் (Degeneration of vertebrae) லாகும். மனித உடலின் பின்புறத்தில், கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து, அடிப்பகுதியிலுள்ள `பிருஷ்டம்’ வரை உள்ள தண்டுவடத்தில், அடுக்கடுக்காக, ஒன்றன் கீழ் ஒன்றாக, வரிசையாக, 33 முதுகெலும்புகள் அமைந்துள்ளன. இதற்கு `வெர்டிப்ரே’ என்று பெயர். மனிதன் முதற்கொண்டு, பாலூட்டி விலங்குகள் அனைத்திற்கும் இந்தமுதுகெலும்புகள் உள்ளன. ஒவ்வொரு முதுகெலும்புக்கும் இடையில், `இன்டர் வெர்டிப்ரல் டிஸ்க்’ என்று சொல்லக்கூடிய …
-
- 2 replies
- 1.8k views
-
-
அன்புக்கும் எல்லோரையும் ஆசீர்வதிக்கும் எமது நிலாமதியக்காவுக்கு சிறு சத்திரசிகிச்சை. அவர் நலமடைய பிரார்த்திப்போம் உறவுகளே..... நிலாமதிப்பாட்டி நலமாகி நீடூழி வாழ எனது குடும்பம் சார்பில் எல்லோருக்கும் பொதுவான ஆண்டவரை வேண்டுகின்றேன்...
-
- 45 replies
- 2.6k views
-
-
ஒரு நபர் 13 ஆயிரம் அடிகள் வரை நடந்தால் நல்லது என கூற முடியும், இவை ஒருவரை ஊக்கப்படுத்தப்படுத்த உதவலாம். ஆனால், அனைவருக்கும் இது பொருந்தாது. பொதுவாகவே உடற்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. உடற்பயிற்சியிலேயே குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகள் இதய நலத்தைப் பேணுபவை. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், ரன்னிங் போன்றவையே நல்ல உடற்பயிற்சிகள்தான். இன்றைக்கு நாம் வைக்கிற ஒவ்வோர் அடியையும் கணக்கிடும் செயலிகள் வந்துவிட்டன. இந்நிலையில், தினமும் 9 ஆயிரம் அடிகள் நடக்கும் இளைஞர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் 50 சதவிகிதம் குறைவதாக சில ஆய்வுகள் தெ…
-
- 0 replies
- 158 views
-