நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
Cardiac Arrest, Heart Attack இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நேற்றைய தினம் கார்டியாக் அர்ரெஸ்ட் (Cardiac Arrest) ஏற்பட்டது அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஊடங்கள் மற்றும் சமூக ஊடங்களில் மாரடைப்பு என சிலர் குறிப்பிட்டார்கள். நிஜத்தில் கார்டியாக் அரெஸ்ட்டுக்கும், மாரடைப்புக்கும் என்ன வித்தியாசம்? மாரடைப்பு : - இதயத்துக்கு செல்லும் பிரத்யேக கரோனரி (Caronary) இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்கு இரத்தம் செல்வதில் தடை ஏற்படுவதைத் தான் மாரடைப்பு (Heart Attack) எனச் சொல்வார்கள். மாரடைப்பு ஏற்படும் போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒரு விதமான பாரம் ஏற்படுவது போல தோன்றும். பெரும்பாலும் மாரடைப்பு ஏ…
-
- 1 reply
- 1.2k views
-
-
இயற்கையாக ரத்த அழுத்தத்தைக் குறைக்க 10 வழிகள் #HealthTips இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கண்டிப்பு, குடும்ப நிர்வாகம், குழந்தைகள் படிப்பு, நேர நிர்வாகம், பண நிர்வாகம், வயதான பெற்றோரை கவனித்தல் என பல பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன. பெரும்பாலான இந்திய நடுத்தர வர்க்கம், தங்களது அன்றாட வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்தபடிதான் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகின்றனர். இதனால் மனஅழுத்தத்தோடு, உயர் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. இது இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க நமது அன்றாட வாழ்க்கையில் சில சின்னச்சின்ன ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றி வந்தாலே போதும், மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே ரத்தஅழுத்தத்தைக் கட்டு…
-
- 0 replies
- 830 views
-
-
இரத்தத்தில் உள்ள.. சீனியின் அளவைக் குறைக்கும், புதிய மருந்து... "கோவக்காய் செடி"யில் இருந்து கண்டுபிடிப்பு! இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. கோவக்காய் செடியில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுக் குழுவின் தலைவரும், மருத்துவ பீடத்தின் உயிரியல் துறை பேராசிரியருமான அனோஜா அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கோவக்காய் இலையில் உள்ள இரசாயன பதார்த்தங்கள் தொடர்பில் நீண்ட கால ஆய்வுக்கு பின்னரே இந்த மருந்தை தயாரிக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆய்வின் முடிவுகளின்படி, கோவக்காய் செடியின் இலைகளில் …
-
- 0 replies
- 181 views
-
-
பழங்களும் மருத்துவ குணங்களும் பப்பாளிப் பழம் மூல வியாதிக்காரர்களுக்கு நல்லது. மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக்கும். ஆப்பிள் மலச்சிக்கலைப் போக்கும். திராட்சை இரத்த அழுத்தத்திற்கு நல்லது. ஈரல் சம்பந்தமான நோய் குணமாகும். எலுமிச்சைப் பழம் உடல் சோர்வையும், மலச்சிக்கலையும் போக்கும். செர்ரி (Cherry) பழம் கருப்பை வியாதிகளுக்கு நல்லது. மாதுளம் பழச்சாற்றில் பால் சேர்த்து சாப்பிட இரும்புச் சத்து கிடைக்கும். குடல் புழுக்கள் அழியும். அன்னாசிப் பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும். நாவல் பழம் நீரிழிவைக் கட்டுப்படுத்தும். சாத்துக்குடி இரத்த அழுத்தத்திற்கு நல்லது. கமலாப்பழம் உடல் உஷ்ணத்…
-
- 3 replies
- 2.3k views
-
-
Dr. பி. விஸ்வநாதன் நீரிழிவு நோய் பிரச்சினை உள்ளவர்களின் கண்களின் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புதான் நீரிழிவு விழித்திரை நோய் (டயபடிக் ரெட்டினோபதி). இது, நீரிழிவு உள்ள யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீரிழிவு பாதிப்புடைய ரத்தம் கண்ணின் விழித்திரையில் செல்லும்போது விழித்திரையில் சில மாற்றங்களை ஏற்படுத்து கிறது. இந்த மாற்றங்கள் விழித்திரையின் சிறிய ரத்தக்குழாய்களில் ‘மைக்ரோ ஆஞ்சியோபதி’ எனப்படும் மாற்றத்தை விளைவிக்கிறது. இதனால் ரத்தமும் நீர்க்கசிவும் ஏற்பட்டு விழித்திரை வீக்கம் அடைகிறது. இந்தக் கசிவுகள் ‘ரெட்டினல் இடிமா’ மற்றும் கடின கசிவு எனப்படும் ‘லைப்போ புரோட்டீன்’ வஸ்துகளையும் சேமித்து வைக்கிறது. இந்த கசிவு விழித் திரையின் முக்கிய பகுதியான …
-
- 0 replies
- 1.1k views
-
-
குண்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பை தாங்கும் சக்தி அதிகமென்கிறது மருத்துவ ஆய்வு மாரடைப்பு வந்தபின்னர், ஒல்லியாக இருக்கும் நபர்களைவிட, குண்டாக இருப்பவர்களால் எளிதாகத் தாங்க முடிகிறது. அவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பும் அதிகம் என்று கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவில் உள்ள டேவிட் ஷெபன் மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள். ஒரு மனிதனின் பி.எம்.ஐ. என்று சொல்லப்படும், எடை, உயர கூட்டு அளவைக்கும், அவர் மாரடைப்பால் பாதிக்கும் போது அளிக்கப்படும் சிகிச்சைக்கும் தொடர்பு உள்ளது என்று இப்போது தான் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டாக இருந்தால், அவர்களுக்கு இருதயக் கோளாறு நிச்சயம் என்றுதான் இதுவரை சொல்லப்பட்டு வருகிறது. அதேசமயம், மருத்துவமனையில் மாரடைப்புக்காக சேர்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, எம்ஆர்ஐ பரிசோதனையை ஆய்வு செய்யும் ஒரு மருத்துவர் (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் சந்தன் குமார் ஜஜ்வாரே பிபிசி செய்தியாளர் 3 செப்டெம்பர் 2025, 05:39 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முழு உடலையும் கட்டுப்படுத்துவதால் மூளை, மனித உடலின் மிக முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. உடலின் ஒவ்வோர் உறுப்பில் இருந்தும் மூளைக்கு சமிக்ஞைகள் செல்கின்றன. பின்னர் மூளை தேவைக்கேற்ப செயல்பட அந்த உறுப்புக்குக் கட்டளையிடுகிறது. ஆனால், உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது, அதை மருத்துவர்கள் மூளை பக்கவாதம் என்று அழைக்கின்றனர். மூளை பக்கவாதம் உடலின் ஒரு பகுதியுடன் அல்லது பல பக…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 736 views
-
-
சிஸேரியன் சிகிச்சையும் சில சர்ச்சைகளும் http://healthwings.blogspot.com/2011/01/blog-post.html சீசர் என்பது மக்கள் அறிந்த ஒரு சொல் மட்டுமல்ல மக்கள் மனங்களை உறுத்தும் சொல் என்றாலும் அது தவறில்லை சீசர் என்பது சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு வழங்கப்படும் யாவரும் அறிந்த சொல் என்றே கூறவேண்டும் இது பெரும் சத்திர சிகிச்சை வகைக்குரியது அதாவது அயதழச ளரசபநசல என்னும் வகைக்குரியது இது ஆபத்து மிக்கது இதைவிட காயப்பட்ட பகுதி மீள சீரமைக்கப்பட சாதாரண மகப்பேற்றை விட கூடுதல் காலம் தேவை இருப்பினும் இன்னும் பல எதிரான காரணங்கள் இருப்பினும் கனேடியர்களுள் பலர் 2008 ஆம் ஆண்டில் தேவையற்ற சத்திர சிகிச்சைகளுக்கு பெருமளவு பணத்தை செலவிட்டுள்ளனர் என்று தேசியரிதியான ஆய்வொன்றின் முலம் தெரியவந்…
-
- 1 reply
- 1.5k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,அலமுர் சௌமியா பதவி,பிபிசி தெலுங்கு 5 மணி நேரங்களுக்கு முன்னர் 30 வயதிற்குப் பிறகு, பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. சமச்சீரற்ற ஹார்மோன்கள், பலவீனமாகும் எலும்புகள், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்பட்ட குளோபோகான் 2020 (Globocon 2020) தரவுகளின்படி, இந்தியாவில் ஏற்படும் புற்றுநோய்களில் 13.5% பேருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக குறிப்பிடுகிறது. அதே நேரத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு 9.4% பேருக்கு …
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மே 2024, 04:07 GMT முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் சுவை மட்டுமின்றி சத்துகளும் நிரம்பியுள்ளது. மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை அளவு அதிகம். எனவே மாம்பழத்தை உண்ணும்போது, அது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்றும் பலர் கருதுகின்றனர். உண்மையிலேயே மாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்குமா? நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா இதுகுறித்து மருத்துவர்களிடம் பேசினோம்... பட மூலாதாரம்,GETTY IMAGES மாம்பழத்தில் உள்ள சத்துக்கள் மாம்பழத்தில் பேரூட்டச் சத்துகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் நிறைய உள்ளன. …
-
-
- 8 replies
- 1.2k views
- 2 followers
-
-
அடுத்தவர் டூத் பிரஷ், ஷேவிங் ரேஸரைப் பயன்படுத்துகிறீர்களா? ஹெபடைட்டிஸ் அலர்ட்! உள்ளுறுப்புகளில் மிகப்பெரியதான கல்லீரல் நோய்த்தொற்றுக்கெதிராகச் செயல்படுவது, உடலுக்குத் தேவையான புரதச்சத்தையும் ஹார்மோன்களையும் சுரப்பது, ரத்தம் உறைய உதவுவது எனப் பல்வேறு முக்கியப் பணிகளைச் செய்கிறது. உடலின் முக்கிய உறுப்பான கல்லீரலில் மிகப்பொதுவாக ஏற்படும் பிரச்னை ஹெபடைட்டிஸ் (கல்லீரல் அழற்சி) வைரஸ் தொற்றுதான். உலகின் பல்வேறு நாடுகளில் இந்தத் தொற்று காணப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஹெபடைட்டிஸ் நோய் அதிகரித்துவருவதால், அது ஒரு பொதுசுகாதாரப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஜூலை 28-ம் தேதி ஹெபடைட்டிஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வைரஸைக் கண்டுபிடித்…
-
- 0 replies
- 984 views
-
-
தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை பாதுகாக்கும். 1. சிறுக்கீரையில் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது. பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. 2. பிரசிவித்த பெண்களுக்கு சிறுக்கீரை மிகச்சிறந்தது. சிறுக்கீரையை பொரியல் செய்து, அதிலேயே பிசைந்து சாப்பிட சொல்வார்கள். 3. சிறுக்கீரை மலச்சிக்கல் ஏற்படாமல் சிறந்த மலமிலக்கியாக செயல்படுகிறது. 4. சிறுக்கீரையில் புரதம், நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. 5. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது. 6. கீரையை மிளகுடன் சேர்த்து சூப் போ…
-
- 1 reply
- 905 views
-
-
[size=4]பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.[/size] [size=4]* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.[/size] [size=4]ஏனைய பயன்கள்[/size] [size=4]* விற்றமின் . பி மற்றும் விற்றமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில்…
-
- 12 replies
- 1.4k views
-
-
வேகமான நடைப்பயிற்சி மற்றும் விரைவான சைக்கிள் ஓட்டம் போன்ற தொடர் பயிற்சிகளின் மூலம் 13 வகையான தீவிர புற்றுநோய்களைத் தடுக்கலாம் என ஆய்வு ஒன்றின் மூலம் அறியப்பட்டுள்ளது. லண்டன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த ஆய்வுக்குழுவினர், பல்வகையான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 14 லட்சம் மக்களிடம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திய ஆராய்ச்சிகளின் விளைவாக வேகமான நடைபயிற்சி மற்றும் விரைவான சைக்கிள் ஓட்டத்தொடர் பயிற்சி போன்றவற்றின் மூலம் ஈரல் புற்றுநோயை 27 சதவீதம் அளவுக்கு கட்டுப்படுத்தலாம் என்பது தெரியவந்துள்ளது. exercise மேலும், சிறுநீரகம், நுரையீரல், தலை, கழுத்து, மார்பகம், சிறுநீரகப்பை மற்றும் ஆசனவாய் சார்ந்த சிலவகை புற்றுநோய் தாக்கும் ஆபத்தையும் சுமார் 25 சதவீதம…
-
- 0 replies
- 257 views
-
-
குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – சுற்று-1. ---- இக்கட்டுரை 10-09-2008 ல் நண்பர் ஒருவரின் குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றிற்காக எழுதப்பட்டது. அந்நூல் இதவரை வெளிவந்ததற்கான குறிப்புகள் எதுவும் தெரியவில்லை. ஒருவேளை கட்டுரையின் அலுப்பூட்டும் ஆய்வுமுறை ஏற்படுத்திய சுவராஸ்யமின்மை இதனை வெளியிடுவதற்கு அவருக்கு தயக்கத்தை ஏற்படுத்தியருக்கலாம். அதனால் அதை சொல்லத்தயங்கி, நூல் வெளிவந்த குறிப்பு தெரிவிக்கப்படாமல்கூட இருந்திருக்கலாம். எப்படியோ, இதனை இங்கு வெளியிடுவதன் வழியாக 2 மாதங்கள் உழைப்பையும் நேரத்தையும் தின்ற இக்கட்டுரையினை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே. கட்டுரையின் நீளம் கருதி, பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது, படிப்பதற்கு வசதியாக. --…
-
- 1 reply
- 7.4k views
-
-
வணக்கம் எல்லோருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். எதிர்பாராத சிகிச்சை. 1997 கார்த்திகை 27இல் 41 வயதாக இருக்கும் போது மெலிதாக நெஞ்சுவலி என்று போய் அன்ஜியோபிளாஸ்ரி செய்து இரண்டு ஸ்ரென்த் வைத்தார்கள். அதிலிருந்து சாப்பாடு உடற்பயிற்சி எல்லாவற்றிலுமே மிகவும் கவனமாக இருந்தேன்.நான் இருந்தேன் என்பதைவிட துணைவியார் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார். இந்த நெஞ்சுவலிக்கு காரணம் புகைத்தல் தான் என்று டாக்ரர் சொன்னதும் பதின்ம வயதிலேயே பழகிக் கொண்ட புகைத்தலை அன்றிலிருந்தே இன்றுவரை தொட்டதில்லை.என்ன மனைவி மிகவும் அன்பாகவும் பக்குவமாகவும் கேட்டும் நிறுத்த முடியாததை டாக்ரர் சொல்லி நிறுத்தியதை எண்ண இப்போதும் மிகவும் கஸ்டமாகவே உள்ளது. கடந்த மாசி கடைசியில் இருந்து சன்பிரா…
-
- 40 replies
- 4.2k views
- 3 followers
-
-
பெரும்பான்மையானோருக்கு அடுத்தடுத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் போதும், ஒரே நாளில் பல்வேறு சூழ்நிலைகளைக் கையாள வேண்டிய நிலையில் இருக்கும்போதும், மனதை அமைதிப்படுத்த, தனக்கென செலவழிக்க சில நிமிட நேரங்கள் கூட கிடைக்காத நிலையில்தான் மன இறுக்கம் ஏற்படுகிறது.மன இறுக்கத்திற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், பிரச்சினையை, மன அழுத்தத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாததும் ஆகும். இந்நிலையில் கல்வித் தகுதி அதிகம் உடைய நபர்கள், மனதளவிலும், உடலளவிலும்அதிகம் பாதிக்கப்படுவதாக,ஆய்வாளர்கள் தெரிவித்துஉள்ளனர். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவை என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.எண்ணற்ற நோய்களின் பிறப்பிட…
-
- 0 replies
- 378 views
-
-
பாஸ்டன்: அமெரிக்காவில் ஹெச்ஐவி பாதித்த குழந்தை ஒன்று மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைந்து வரும் நிலையில், எய்ட்ஸ் நோய்க்கு மருத்துவ தீர்வு நெருங்குவதாக மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது குணமடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள குழந்தை ஹெச்ஐவி பாதித்து குணமடைந்த உலகின் இரண்டாவது குழந்தையாகும். இந்த குழந்தைக்கு பல்வேறு கடுமையான தொடர் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர், அக்குழந்தை எய்ட்ஸ் நோயிலிருந்து குணமடைந்து வருவதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த எய்ட்ஸ் நோய் தொடர்பான மாநாடு ஒன்றி மருத்துவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். கடந்த ஆண்டு மிஸ்ஸிஸிபி நகரில் பிறந்த குழந்தைக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருந்ததை கண்டறிந்த மருத்துவர…
-
- 6 replies
- 844 views
-
-
ஆன்டி பயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவது நம்மில் பலருக்கும் தெரியாது. ஒரு செயற்கையான நிகழ்வினால், உடலில் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குன்றுகிறது. மேலும், ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் உடலின் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்' குறையும். வாய் துர்நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுகிறது. சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை சாப்பிட்டதும…
-
- 0 replies
- 555 views
-
-
மீன் எண்ணெய் என்பது சால்மன், டுனா, கானாங்கெளுத்தி அல்லது ஹெர்ரிங் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களின் திசுக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு துணைப் பொருளாகும். மீன் எண்ணெயில் இரண்டு குறிப்பிடத்தக்க ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த மீன் எண்ணெயின் பயன்கள் என்னவென்று தற்போது பார்க்கலாம். * கொழுப்பு மீன்களில் ஒமேகா-3 உடலிலுள்ள வீக்கத்தின் பல கூறுகளை ஓரளவு தடுக்கும். * மூளை மற்ற அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. * மீன் எண்ணெய் கூடுதல் மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். * ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் பயன்பாடு அபாயகரமான மாரடைப்பு அபாயத்தை 9% குறைக்க உதவும். * எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. * அ…
-
- 0 replies
- 418 views
-
-
பாரம்பரிய உணவு, இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை கொடிய நோய்களுக்கு உலகில் பெரிய வேலையில்லாமல் இருந்தது. துரித உணவு, ரெடிமேட் உணவு, சத்தற்ற சக்கை உணவு உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு நோய்கள் கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பித்தன. இன்று எந்த வித்தியாசமும் இன்றி யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் மாறிவிட்ட உணவுப் பழக்கம்தான். உலகச் சுகாதார நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டுவரும் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி முகமையும் (ஐ.ஏ.ஆர்.சி.) இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருட்களின் பட்டியலை அந்த அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறது. அந்த உணவு வகைகள் என்னென…
-
- 1 reply
- 540 views
-
-
ஒரு கொடியை தூக்கத் தூக்க ஓராயிரம் பாவக்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி கொத்தாகக் காய்க்கக் கூடியது பாகற்காய். 'இலைமறைவு காய்மறைவு' என்ற பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும்வரை அதன் நிறத்திலேயே கொடியின் நிறமும் (பச்சையாக) இருந்து காயைக் காப்பாற்றும். சட்டென்று பார்த்தால் காய் இருப்பதே தெரியாது. கொடியைத் தூக்கிப் பார்த்தால் அடியில் காய்கள் தொங்கும். சரித்திரம்: - வெப்பப்பிரதேச காய். தென்கிழக்கு ஆசியா இதன் பிறப்பிடம் என்கிறார்கள். அமேசான் காடுகள், கிழக்கு ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளும் பாகற்காய் வளர சிறந்த இடங்களாகும். ஆசியர்கள் மிக அதிகமாக சாப்பிடும் உணவு இது. சீனர்கள் பழங்காலத்திலிருந்தே பாகற்காய் சா…
-
- 0 replies
- 1.1k views
-
-
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். 5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும். 6. சின்ன அம்மை,…
-
- 0 replies
- 2.2k views
-
-
அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி அரிசி. கவுனி அரிசி - கறுப்பில் இருக்கும் சிறப்பு. நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசியைவிட அதிகச் சத்துகளைக் கொண்டது கறுப்பு அரிசி எனப்படும் கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது. பண்டைய காலங்களில் தென்னிந்தியாவில் செட்டிநாடு சமுதாயம் மட்டுமே இந்தக் கவுனி அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தியது. இன்றும்கூட, செட்டிநாடு திருமணங்களில் கவுனி அரிசியில் செய்யப்பட்ட ஓர் இனிப்பு வகை இடம்பெறுகிறது. இதன் சிறப்பைப் புரிந்துகொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகள் அண்மைக்காலமா…
-
- 156 replies
- 14.5k views
- 2 followers
-