Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. நமது மூளையைப் பாதிக்க நாமே செய்யும் 10 கெடுதல்கல்! [Friday 2016-01-08 00:00] 1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2.மிக அதிகமாகச் சாப்பிடுவதுஇது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல் மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல் நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு …

  2. முகப்பரு வராதவர்களே இல்லையென்று சொல்லலாம், முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் தடயங்கள் சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும், இந்த தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும். இதற்கு சிறந்த தீர்வாக வெந்தயம் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனலாம். வெந்தயம் முகப்பரு தழும்பை நீக்குவதில் மிகச்சிறந்த மருந்தாகும். முகப்பரு தழும்புகளை நீக்க இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம். * வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்கு போல் பயன்படுத்தலாம், தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும் * ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் மேலும் உருவாவதையும் தடுக்கும…

  3. நம் உடலின் புரதத் தேவையை பூர்த்தி செய்ய இறைச்சி அவசியம் என்பது உண்மையா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சோஃபி மாக்ஃபி பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர் 19 ஜனவரி 2026, 01:52 GMT ஒரு உடற்பயிற்சி நிபுணர் மற்றும் தாவர அடிப்படையிலான உணவு வகைகளை உருவாக்குபவர் என்ற முறையில், அதிக புரதம் கொண்ட தாவர அடிப்படையிலான சமையலின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதே எனது நோக்கம். இது குறித்து 'சோஃப்ஸ் பிளான்ட் கிச்சன்' (Soph's Plant Kitchen) என்ற புத்தகத்தையும் நான் எழுதியுள்ளேன். நீங்கள் அதை வலிமைப் பயிற்சியுடன் (வலிமையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள்) இணைக்கும்போது, புரதம் நமது உடலை உருவாக்கவும், பராமரிக்கவும் மற்றும் சரிசெய்யவும் உதவுகிறது. இது மிகவும் நிறைவான ஊட்டச்சத்தும் கூ…

  4. நம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வோம்..! கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான். * இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும். * இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும். * இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாட…

  5. நம் உடல் உறுப்புக்களின் காலங்கள்.... உடற்கடிகாரம்!!! இந்த அண்டவெளியில் எல்லாமே கால ஒழுங்கிலேயே இயங்குகின்றன. அவ்வாறே நம் உடலும் இயங்குகின்று. காலம் தவறினால் காலன் நெருங்கிடுவான் என்பார் நம் முன்னோர் (இயற்கையே கடவுள்). நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தைப் போன்று உடற்கடிகாரம் முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது. விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்…

    • 0 replies
    • 736 views
  6. குடல் பகுதி. | பிரதிநிதித்துவ நோக்கத்திற்காக... நாம் உடல் பருமன் குறித்து அதிகம் கவலைப்படுகிறோம். இதனால் சதைபோடும் உணவுகளை எடுக்கக் கூடாது என்று நாம் உறுதியாக இருந்தாலும் தவிர்க்க முடியாமல் அவற்றை சாப்பிடுகிறோம் இது ஏன் என்று பலருக்கு வியப்பாகவே இருக்கும். இதற்கான காரணம் என்னவென்று அமெரிக்க ஆய்வு ஒன்று ஆராய்ந்துள்ளது. குடல் பாக்டீரியாக்களைக் கொண்டு உடல் பருமன் நோயைக் குணப்படுத்தலாம் என்’று சில ஆய்வுகள் தெரிவிக்கையில், இந்த ஆய்வு அதற்கு மாறான ஒரு முடிவைக் கண்டடைந்துள்ளது. அதாவது நம் குடலில் வாழும் பாக்டீரியா மூளையின் செயல்பாட்டை தனக்குச் சாதகமாகத் தூண்டி விடுகிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இது குறித்து …

  7. நம் நாட்டுச் செடிக் கிழங்கு வெள்ளைக்காரன் விழுந்து விழுந்து சாப்பிடுகிறான் .தானே பயிரிடுகிறான் மரமண்டைகளா நீங்கள் .? கொஞ்சம் எமது கிராமிய இயற்க்கை மருத்துவத்தை காப்பாற்றுங்கள் எனது முக நூலின் நண்பர்கள் யாராவது ஒருவர் முயலுங்களேன் மலட்டுத்தன்மை போக்கும் தண்ணீர்முட்டான் கிழங்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் உயிர்வாழத்தேவையான உணவுகளை இயற்கை வழங்கியிருக்கிறது. நம் கண்ணெதிரே காணப்படும் செடி கொடிகள் கூட மூலிகைத் தன்மை உடையதாகவும், மருந்துப்பொருளாகும் பயன்படுகிறது.அந்த வகையில் தண்ணீர்முட்டான் கிழங்கு எனப்படும் மருத்துவ குணம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தாவரம் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மித வெப்ப மண்டல பகுதிகளைச் சார்ந்தது. இது இந்தியாவ…

    • 1 reply
    • 2.2k views
  8. நம்பர் ஒன் விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்! வே.கிருஷ்ணவேணி ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்... என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. 'பாத்ரூம் சரியில்லை...', 'நேரமே இல்லை...', 'பாத்ரூமே இல்லை... ரோட்டுலயா போகமுடியும்?' என்பது போன்ற கேள்விகளைத் தங்கள் தரப்பு நியாயங்களாக எழுப்பி, தங்களை சமாதானப்படுத்திக்கொள்ளவும் இவர்கள் தவறுவதில்லை. இவர்களில் நீங்களும் ஒருவரா? "இத்தகைய போக்கு, மிகப்பெரிய ஆபத்தை நோக்கி உங்களை இழுத்துச் சென்றுவிடும்'' என்று உங்களை நோக்கி எச்சரிக்கை மணி அடிக்கிறார்... சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைமை மருத்துவப் பேராசிரியர் டாக்டர…

  9. நம்மால் முடியும்! என்னால் முடியும்! பிப்ரவரி-4, உலக புற்றுநோய் தினம் உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்திவரும் நோய்களில் முக்கியமானது புற்றுநோய். புற்றுநோய் பற்றிய விழிப்புஉணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி ‘உலக புற்றுநோய் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ‘நம்மால் முடியும்’, ‘என்னால் முடியும்’ என்ற அடிப்படையில் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. புற்றுநோய் என்பது என்ன? நமது உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் இருக்கின்றன. ஏதேனும் ஒரு செல்லில் இருந்துதான் புற்றுநோய் செல் வளர ஆரம்பிக்கிறது. நாம் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காமல், அலட்சியப்படுத்தும்போதுதான் புற்றுசெல்கள் பல்கிப் பெருகி, உடலில் கட்டிகள் உருவாகின்றன. புற்றுநோயை…

  10. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” இருளும் ஒளியும் சந்திக்கும் அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம், கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75 வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வாரிடம் ஃபிட்னெஸ் ரகசியம் பேசலாமா… ”எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ்க்கைமுறை. இது கிராமத்து வாழ்க்கை கொடுத்த பரிசு. தோட்டத்தில், பண்ணையில், மேடையில் என்று எங்காவது ஓரிடத்தில் உழைத்துக்கொண்டே இருப்பேன். உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று……

  11. நரம்பு முடிச்சு நோய் (Varicose Veins) வெரிகோஸ் நரம்பு முடிச்சி நோய் என்றால் என்ன? பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். முட்டிக்கால் களுக்கு கீழேயும் இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அட இதுதான்…

  12. நரம்புகள் புடைக்கும் நோயை குணப்படுத்தும் ஒரு அற்புத மருத்துவம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்த வெரிகோஸ் நோய் ஏற்படலாம். நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், மைக்ரோபியல் போன்ற நோய்கள் நம்மை எளிதாக தாக்குகிறது. வெரிகோஸ் வெயின் நோய் ஏற்பட காரணம் என்ன? நமது உடலில் உள்ள ரத்தம் வேறொரு பகுதிக்கு செல்ல முடியாமல் ரத்த நரம்புகளிலே தங்குவதால் நரம்புகள் புடைத்து மற்றும் விரிவடையும் இதை தான் வெரிகோஸ் வெயின் நோய் என்கிறோம். இந்நோயை குணப்படுத்துவதற்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும். இந்த வெரிகோஸ் வெயின் வருவதற்கு முக்கிய காரணம் அதிகமான உடல் எடை மற்றும் ர…

  13. “ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க” இன்றும் கூட சில திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும். அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள். ஆன்மீகத்துடன் மருத்துவத்தைக் கலந்தே நம் முன்னோர்கள்…

  14. பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது. அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர். ஆகவே இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். பொதுவாக நரைமுடியை போக்குவது சற்று கடினமானதாக இருந்தாலும், முறையாக நம்பி…

  15. தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு, அவர் தலைக்குப் பயன்படுத்திய சாயமும் ஒரு முக்கியக் காரணம் என்கின்றன மீடியாக்கள். 'தலைக்கு அடித்த சாயமே தலைவரை சாச்சிடுச்சே!’ என்று தொண்டர்களும் சோகத்தில் உறைந்து போயிருக்கின்றனர். தலைக்கு அடிக்கும் 'டை’ அந்த அளவுக்கு ஆபத்தானதா? தோல் சிகிச்சை நிபுணரும், காஸ்மெட்டாலஜிஸ்ட்டுமான டாக்டர் மாயா வேதமூர்த்தியும், ஹோமியோபதி மருத்துவர் பி.வி.வெங்கட்ராமனும் இதுகுறித்து விரிவாக விளக்கினார்கள். ''அழகு நிலையங்களுக்கு சரும அழகுக்காக செல்பவர்களைவிட, தலைக்குச் சாயம் பூசச் செல்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். தலைக்குப் பூசும் சாயத்தில் தற்காலிகம், ஓரளவு நிரந்தரம், நிரந்தரம் என மூன்று வகைகள் உண்டு. தற்காலிகம்…

  16. நலமுடன் நாம் வாழ இவர் சொல்வதையும் சும்மா கேட்டு வைப்போம் ....... ! 🙏

    • 0 replies
    • 232 views
  17. மிளகின் சுயசரிதம் முனைவர் சேக்கிழார் அவர்களால் வலைப்பூவில் எழுதப்பட்ட இடுகையை தமிழும் நயமும் பகுதியில் இணைத்திருந்தேன். இங்கும் அதனை இணைத்தலி பொருத்தமாக இருக்கும் என்பதனால் இணைக்கின்றேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=65304

  18. உலகத்தில் மனிதன் தோன்றிய காலகட்டத்திலேயே எலுமிச்சம் பழத்தின் சிறப்பும் பயனும் மனிதனால் உணரப்பட்டிருக்கிறது. தோன்றிய கால கட்டத்தில் மனிதன் தன் முன் செழித்து வளர்ந்து காட்சி தந்த செடி கொடி இலை தழைகளையே தனக்குத் தெரிந்த அளவுக்குப் பக்குவம் செய்து உணவாக உட்கொண்டு பசியகற்றி வாழத் தொடங்கினான். அந்த சந்தர்ப்பங்களில் உணவுக்குச் சுவை சேர்க்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான். எலுமிச்சையை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் …

  19. இந்த வாரக் கேள்விக்குப் பதில் அளிப்பவர் செங்கல்பட்டைச் சேர்ந்த சித்த மருத்துவர் க. சங்கர்: எனக்குத் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. எனக்குக் குழந்தை இல்லை. ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில் கரு முட்டை வளர்ச்சி நன்றாக இருக்கிறது. ஆனால், எண்டோமெட்ரிகல் லைன் (கருப்பையின் உட்சுவர்) 6-7 மி.மீ. தான் இருக்கிறது. அதுதான் பிரச்சினை என்கிறார்கள். என்னுடைய கருப்பையின் உட்சுவர் அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? - துர்கா, ஊர் குறிப்பிடவில்லை தாய்மை புனிதமானது. அதை இயற்கை முறையில் அடைய வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் ஆசை. உங்களுடைய மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் இயல்பான முடிவுகளையே தருகிற நிலையில், நீங்கள் சந்தித்துவரும் பிரச்சினை விரைவில் குணமடைய…

  20. காய்ச்சல்... சில குறிப்புகள்! - நலம் நல்லது! - 1 #DailyHealthDose மருத்துவர் கு.சிவராமன் ஆனந்த விகடனில் வெளியான ‘ஆறாம் திணை’, ‘ஏழாம் சுவை’, ’உயிர் பிழை’ தொடர்கள் மூலம் பரவலான வாசகர்களின் கவனத்தைப் பெற்றவர் மருத்துவர் கு.சிவராமன். இவருடைய `நலம் 360’ மற்றும் `நாட்டு மருந்துக்கடை’ ஆகியவையும் மிக முக்கியமான மருத்துவ நூல்கள். உணவு எப்படி மருந்தாகிறது; இயற்கை, நோய் வராமல் காக்க நமக்கு என்னவெல்லாம் வழங்கியிருக்கிறது என்பதையெல்லாம் ஆதாரபூர்வமாக, அழுத்தமாக எடுத்துச் சொல்பவர். நம் ஆரோக்கியத்துக்கு வழிகாட்ட, இனி விகடன் டாட்.காமில் திங்கள் முதல் வெள்ளி வரை சின்னச்சின்ன டிப்ஸுகளையும் வழங்க இருக்கிறார். பின்பற்றுவோம்... பயன்பெறுவோம்! மருத்துவர் கு.ச…

    • 475 replies
    • 143.3k views
  21. Started by nunavilan,

    நல்ல vaccine எது?

  22. Started by Volcano,

    நல்ல கொலச்டோல்...HDL (இப்ப) சொல்லுகினம், கூடாத கொலச்டோல் LDL (100 குறைவாக) கட்டுபாட்டில இருக்கிறவர்களுக்கு, நல்ல கொலச்டோல் HDL குறைவாக (40 க்கு குறைவாக) இருந்தால் அது(தான்) கூடாது எண்டு. என்ன மாதிரி HDL நல்ல கொலஸ் கூட்டலாம் எண்டால். 3 வழிதான் (எனக்கு தெரியும்) 1 . உடற் பயிற்சி. 2 . ஒமேகா 3 fatty அசிட். நல்லா மீன் சாப்பிடட்டாம்..குறைந்தது ஒரு கிழமையில் 3 வேளை ( 1 துண்டு மீன் இல்லை, மீன்தான் சாப்பாடு) 3 . மருந்துகள். கடைசியில். மற்றது கடைகளில் விற்கும் ஒமேகா 3 (USA ) தரக்கட்டுப்பாட்டில் வருவதில்லையாம். பலவும் செயற்கை முறையாலும், தாவரங்களில் இருந்து தயாரிப்பதாலும் அவற்றினால் எதிர்பார்த்த விளைவுகள் இல்லையாம். ஒரே வழி மீனை மூக்கு முட்ட சாப்பிட்டு, வாயை…

    • 3 replies
    • 1.5k views
  23. நல்ல கொழுப்பு என்றால் என்ன?...கெட்ட கொழுப்பு என்றால் என்ன?...கெட்ட கொழுப்பை மிக எளிதாக குறைப்பது எப்படி?....பாருங்கள்...பயனடையுங்கள்.

    • 0 replies
    • 677 views
  24. மிகவும் களைப்பாகி சலித்துவிட்டதா? நம் அனைவருக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்: படுக்கைக்குப் போய் ஓய்வெடுத்தே ஆக வேண்டும் என்று தோன்றும். ஆனாலும் உங்களால் ஆழ்ந்து தூங்க முடியாது. ஆனால் கவலைப்பட வேண்டாம். படுக்கைக்குச் செல்லுமுன் வழக்கமாக என்ன செய்யலாம் என்பதை எல்லோரும் கற்றுக் கொள்ளலாம். 1. உண்மையிலேயே களைப்பாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்யவும் இது வெளிப்படையானதாகத் தோன்றும். ஆனால் படுக்கச் செல்வதற்கு நீங்கள் தயாராக இருந்தால், இரவில் தூங்கிவிடுவது மிகவும் எளிமையானது. இருந்தபோதிலும், இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பவர்கள், மற்றவர்கள் `சாதாரணமாக' தூங்கும் நேரமாகக் கருதும் நேரத்தில் தூங்க முடியாமல் சிரமப்படுவார்கள். படத்தின் காப்புரிமை Getty I…

  25. ஐம்புலன்களின் செயற்பாடுகளில் ஒலி, ஒளி சம்பந்தமான ஆராய்ச்சிகள் உலகில் அதிகம் நடைபெற்று வருகிறது. ஆனால், மனிதர்களின் நாசியையும், அதன் நுகரும் தன்மை குறித்தும் குறைவான அளவிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இர்வின் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வில் 20 பேர் பங்கேற்றனர். முதலில் இவர்களின் ஞாபக சக்தி, வாய்மொழி, கற்றல் திறன், திட்டமிடல், மற்றும் கவனம் மாற்றும் திறன் உடபட பல நரம்பியல்-உளவியல் செயற்பாடுகள் கவனிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஆராய்ச்சியாளர்கள் இவர்களை இரு குழுக்களாக பிரித்தனர். அவர்களில் ஒரு குழுவினரிடம் ரோஜா, ஆரஞ்சு, யூகலிப்டஸ், எலுமிச்சை, மிளகுக்கீரை, ரோஸ்ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.